வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
தமிழின் இன்றைய ஆளுமைகளில் மட்டுமின்றி சூர்யா, கார்த்தி போன்ற இன்றைய இளைய தலைமுறையின் தந்தையாக அறியப்படுவதோடு இன்றைக்கு மிக முக்கியமானவர் நடிகர் சிவகுமார். நடிகராக இருந்து நல்ல பெயர் ஈட்டியது மட்டுமின்றி அதிகமான மக்களால் ‘விரும்பிக்கேட்கப்படும்’ புகழ்பெற்ற பேச்சாளராக வலம்வந்து கொண்டிருக்கிறார் அவர். முக்கிய அரங்குகளில் அவர் நிகழ்த்தும் உரைகள் யாவும் ஏதாவது ஒரு பெரிய டிவி சேனலால் பண்டிகை தினங்களில் ஒளிபரப்புவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுவிடுகின்றன. கோடிக்கணக்கான மக்களால் பார்த்து ரசிக்கப்பட்ட அந்த உரைகள் மோசர்பியர் போன்ற நிறுவனங்களால் வாங்கப்பட்டு சிடிக்களாக வெளிவந்து லட்சக்கணக்கில் விற்பனை ஆகின்றன. இதுவரை எந்த ஒரு பிரபல பேச்சாளருக்கும் ;தலைவர்களுக்கும் கூடக் கிடைக்காத வாய்…
-
- 0 replies
- 5.5k views
-
-
எம் எஸ் விஸ்வநாதன் பற்றிய சுவாரஸ்யங்கள் இயற்பெயர் - மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன் சினிமா பெயர் - எம் எஸ் விஸ்வநாதன் பிறப்பு - 24-ஜுன்-1928 இறப்பு - 14-ஜுலை-2015 பிறந்த இடம் - பாலக்காடு - கேரளா சினிமா அனுபவம் - 1940 - 2015 துணைவி - ஜானகி (இறப்பு - 2012) பெற்றோர் - சுப்ரமணியன் - நாராயணி புனைப்பெயர் - மெல்லிசை மன்னர் ஆரம்ப காலங்களில் ராமமூர்த்தி விஸ்வநாதன் என்று பணிபுரிந்து கொண்டிருந்த இந்த இரட்டையர்களின் பெயர் விஸ்வநாதன் ராமமூர்த்தி என்று மாறியது கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனின் "பணம்" திரைப்படத்திலிருந்துதான். …
-
- 0 replies
- 1.5k views
-
-
இது சினிமாக்காரர்களின் வாரம்' என்று சொல்லும் அளவுக்கு செப்டம்பர் முதல்வாரம் அமையவிருக்கிறது. 3ஆம் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினி வீட்டுக் கல்யாணம்.மகள் சவுந்தர்யாவுக்கு 3நாள் கல்யாணம் நடத்தி அழகு பார்க்கிறார்.5ஆம் தேதி கவிப்பேரரசு வைரமுத்து வீட்டுக் கல்யாணம்.மகன் கபிலனுக்கும் டாக்டர் ரம்யாவுக்கும் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திருமணம் நடக்கிறது. 4ஆம் தேதி குஷ்புவின் தயாரிப்பான 'நகரம்' படத்தின் ஆடியோ லாஞ்ச். முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார்.கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். 1ஆம் தேதி 'குவார்ட்டர் கட்டிங்' பட ஆடியோவை சூர்யா வெளியிடுகிறார். (எப்பூடி!) * 'நெல்லு' படத்துக்கு நம்ம ஊரு சென்சார் தடைபோட்டிருக்கு. கீழ வெண்மணியில் நிகழ்ந்த தீகொளுத்தி நிகழ்வை அப்படியே கதை நினைவுபடுத…
-
- 0 replies
- 1.3k views
-
-
நொறுங்க இன்னொரு இதயம் வேண்டுமா? பிப்ரவரி 14: காதலர் தினம் செல்போன் சார்ஜரைத் தவிர வேறு எதனாலும் பிரித்துவிட முடியாதது நவீன காலத்தின் காதல். அதையும் நூற்றாண்டைத் தாண்டிய இந்திய சினிமாதான் மீண்டும் மீண்டும் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. ஆண்களும் பெண்களும் இயல்பாகச் சந்திக்கும் இடங்கள், சூழ்நிலைகள் ஆகியன, இந்தியாவின் பெருநகரங்களைத் தவிர சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் இன்னமும் சந்தேகத்துடன் பார்க்கப்படும் சூழ்நிலையே உள்ளது. சாதி தாண்டிய காதலைக் கண்டிக்கும் இந்திய வீடுகளில் விரகமும் தாபமும் தொனிக்கும் பாடல்கள் வழியாகக் காதலை 24 மணி நேரமும் கனவு காண்பது ஒரு முரண்பாடுதான். 90 சதவீதம் …
-
- 0 replies
- 440 views
-
-
நிஜவாழ்க்கை கற்பனையைவிட கிளர்வூட்டுவது என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதை முழுமையாக உணரவேண்டும் என்றால் உண்மைச் சம்பவங்களில் இருந்து திரையில் விரிந்த ரஷ் பார்க்கவேண்டும். இயக்குனர் ரான் ஹோவர்டின் ஆகச் சிறந்த படம் என்று யு.எஸ்.ஏ டுடே சொல்லியிருக்கிறது. பார்த்தல்தான் புரியும். இரண்டு பார்முலா ஒன் ஓட்டுனர்களுக்கிடையே நிகழும் ஆரோக்கியமான போட்டி விரைந்தோடும் கார்களில் சடுதியில் வரும் மரணம் என படம் தொய்வின்றி பறக்கிறது. இயக்குனர் ரான் ஹோவர்ட் நிக்கி லௌடா என்கிற ஆஸ்திரிய ஓட்டுனருக்கும், ஜேம்ஸ் ஹன்ட் என்கிற பிரிட்டன் ஓட்டுனருக்கும் நடக்கும் தொழில் போட்டியே படம். என்ன விசயம் ஒருவரியில் இப்படி சொல்லிவிட்டு போய்விடாத வண்ணம் செதுக்கப்பட்ட திரைப்படம். …
-
- 0 replies
- 918 views
-
-
கேரள சர்வதேச திரைப்பட விழாவில் பண்ணையாரும் பத்மினியும் பங்கேற்பு கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் வரும் டிசம்பர் 12-ம் தேதியில் இருந்து 19-ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. தொடர்ந்து 19-வது ஆண்டாக நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் உலக மொழிகளில் உருவாக்கப்பட்ட சிறந்த படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த வரிசையில் இடம்பெறும் இந்திய மொழிப் படங்களை தேர்வு செய்ய பிரபல சினிமா இயக்குனர்கள் லெனின் ராஜேந்திரன், கே.மதுபால், எம்.சி.நாராயணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட 55 படங்கள் இந்த தேர்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றில் இருந்து 7 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 3 இந்தி, 2 வங்காளம், ஒரு மர…
-
- 0 replies
- 491 views
-
-
பிப்ரவரி வரவுகள் : மாறும் தேதிகள் 2006க்கும் 2007க்கும் இடையே பல படங்கள் திரையிட திட்டமிடப்பட்டு, சில திரைக்கு வந்து, பல தாமதமாகி, தேதிகள் மாறி என கோலிவுட் வட்டாரம் வழக்கத்தைவிட சற்று அதிக பரபரப்புடன் இருக்கிறது. தீபாவளி முதலே பல படங்களின் படபிடிப்பு தாமதமாகியது. எடிட்டிங் போன்ற படபிடிப்புக்கு பிந்தைய வேலைகளும் பல படங்களுக்கு தாமதமாகி பொங்கல் சமயம் பல படங்கள் திரைக்கு வர நெருக்கடி ஏற்பட்டது. மேலும் விஜய், அஜித் படங்களோடு தங்கள் படங்களையும் வெளியிட பல தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை. எனவே தங்கள் படங்களுக்கு ஏற்ற ரிலீஸ் தேதிகள் அமைக்க படவுலகும் திரைப்பாளர்களும் பரபரக்கின்றனர். இவற்றின் விளைவாக 2007 பிப்ரவரியில் எக்கச்சக்கசக்கமான புதிய திரைப்படங்கள் திரைக்கு வ…
-
- 0 replies
- 875 views
-
-
ரஜினியை ராமாபுரத்தில் தாக்கினாரா MGR ? : நடிகை லதா மனம் திறந்த பேட்டி
-
- 0 replies
- 416 views
-
-
நகைச்சுவையின் தன்னிகரில்லா கலைஞரான கவுண்டமணி பற்றி விகடன் வெளியிட்டுள்ள சில சுவாரஸ்யமான குறிப்புகள்: கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்க *சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம் * கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். ‘பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன்! * பாரதிராஜாதான் ‘கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றினார். ‘16 வயதினிலே’தான் அறிமுகப் படம்! * அம்மாவை ‘ஆத்தா’ என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்ட…
-
- 0 replies
- 792 views
-
-
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கோச்சடையான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் தொடங்கும் என்று படத்தின் மேற்பார்வையாளர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். ராணா படம் பூஜை போடப்பட்டு உடல் நலம் குன்றியதால் அந்த படம் கைவிடப்பட்டது. பின்னர் சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சைக்கு பெற்று திரும்பிய பின்னர் கோச்சடையான் படத்தில் ரஜினி நடிக்க உள்ள அறிவிக்கப்பட்டது. எந்திரன் படத்திற்குப் பின்னர் ரஜினி நடிக்க உள்ள படம் கோச்சடையான். என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இத் திரைப்படத்தை இயக்க உள்ளார். அதற்கான பட வேலைகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கே எஸ் ரவிக்…
-
- 0 replies
- 656 views
-
-
30 படங்கள் வரை நடித்து முடித்து விட்ட பாலிவுட் ஸ்டார் தியா மிர்ஸா, இன்னும் தனக்குப் பிடித்த, தனது கனவு ரோல் வரவில்லை என்று ஏக்கம் தெரிவிக்கிறார். பாலிவுட்டின் கனவுக் கன்னிகளில் ஒருவரான தியா மிர்ஸா நடித்துள்ள கிரேஸி 4 பெரும் எதிர்பார்ப்பை பாலிவுட்டில் ஏற்படுத்தியுள்ளது. ராகேஷ் ரோஷனின் இயக்கத்தில் உருவாகியுள்ள கிரேஸி 4 படத்தில் ரித்திக் ரோஷன் கெட்ட ஆட்டம் போட்டுள்ளார். படத்தில் தியாவுக்கும் சூப்பர் ரோல். கிரேஸி 4 படத்தில் தியா இருப்பது பற்றி முதலில் படு ரகசியமாக வைத்திருந்தாராம் ராகேஷ் ரோஷன். இதுகுறித்து தியா கூறுகையில், நான் படத்தில் நடித்திருக்கிறேன் என்பதை சர்ப்ரைஸ் ஆக வைத்திருந்தார் ராகேஷ் ரோஷன். படம் பார்க்க வருபவர்கள் திடீரென என்னைப் பார்த்து ஆச்சரியமடைய வேண…
-
- 0 replies
- 782 views
-
-
சரத் சாருக்கு ஜோடியாக நடிப்பதில் எனக்குப் பிரச்சினையில்லை, ஆனால் என் வயதுப் பொண்ணுக்கு என்னை அம்மாவாக நடிக்கக் கேட்பது சரியா... என்று கோபத்துடன் நியாயம் கேட்கிறார் புன்னகை இளவரசி ஸ்னேகா. சரத் தற்போது நடித்து வரும் 1977-க்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் சரத்துக்கு இரு வேடங்கள். வயதான சரத்துக்கு ஜோடி ஸ்னேகா, இளமையான இன்னொரு சரத்துக்கு ஜோடி ஷ்ரேயா என்று பேசப்பட்டது. ஆனால் திடீரென்று சரத்-ஸ்னேகாவின் மகளாக ஷ்ரேயா நடிக்கிறார் என செய்தி வெளியானது. அடுத்த இரு தினங்களிலேயே அந்தப் படத்திலிருந்து ஸ்னேகா விலகிவிட்டார் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. என்னதான் நடந்தது இந்தப் பட விவகாரத்தில்? இது குறித்து ஸ்னேகா கூறுகையில…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஷாருக்கானுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட நயன்தாரா மறுத்ததால் அவருக்கு பதில் பிரியாமணி ஆடினார். ஷாருக்கான் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மும்பையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு வரும் ரெயிலில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தை எடுக்கின்றனர். இதில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இப்படத்தில் சத்யராஜ், மனோரமா உட்பட அதிகமான தமிழ் நடிகர், நடிகைகளும் நடிக்கின்றனர். இப்படத்தில் ஷாருக்கானுடன் தமிழ் படங்களில் நடித்த பிரபல நடிகை ஒருவரை ஆட வைத்து குத்தாட்ட பாடல் காட்சியொன்றை படமாக்க திட்டமிட்டனர். இதற்காக நயன்தாராவை அணுகி கேட்டனர். ஆனால் அவர் ஒரு பாடலுக்கு ஆட முடியாது என மறுத்து விட்டார். அதே நேரம் தனுஷ் அழைப்பை ஏற்று அவர் தயாரித்த எதிர…
-
- 0 replies
- 474 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: விஜய் சேதுபதி, டாப்சி பன்னு, ஜார்ஜ் மரியன், மதுமிதா, சுப்பு பஞ்சு அருணாசலம், யோகி பாபு, சேத்தன், ராதிகா, தேவதர்ஷினி, சுரேகா வாணி, ஜெகபதிபாபு, ராஜந்திரபிரசாத்; இசை: கிருஷ்ண கிஷோர்; ஒளிப்பதிவு: ஜார்ஜ் கௌதம்; இயக்கம்: தீபக் சுந்தர்ராஜன். பேயையும் நகைச்சுவையையும் கலந்து Horror - Comedy என்ற பாணியில் வெளிவந்த பல திரைப்படங்கள் தமிழில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. அந்த பாணியில் வெளிவந்திருக்கும் ஒரு படம்தான் 'அனபெல் சேதுபதி'. இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பாகக் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை. அந்த அரண்மனையில் ஏகப்பட்ட பேய்கள் வசிக்கின்றன. அங்கு பௌர்ணமி தினத்தன்று யார் தங்கினாலும் இறந்து, அவர்களும்…
-
- 0 replies
- 505 views
-
-
-
வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி 'தமிழீழம்' இயக்குநர் மகேந்திரன் பேட்டி -------------------------------------------------------------------------------- சமீபத்தில் சினிமாவை சொல்லித்தர தமிழீழம் சென்று வந்திருக்கிறார் டைரக்டர் மகேந்திரன்.. தமிழ் சினிமாவின் பல விதங்களை விமர்சித்து நம்மிடம் பேசியனார் அனலும் சாந்தமும் சூடும் பறந்த பேட்டியிலிருந்து விரைவில் 'சாசனம்' வெளிவரப்போகிறதா சந்தோஷமாக இருக்கு... அப்படியரு சூழ்நிலை வந்திருக்கு. எதுவும் சுமூகமான நிலைக்கு சம்பந்தமில்லாத நிலையில் இல்லை. தமிழ்நாட்டிலேயே முழுக்க முழுக்க ராஜ அம்சம் கொண்ட பகுதி செட்டிநாடு நகரத்தார்களின் வாழ்க்கை தான் கதை. அவர்களின் பழக்கவழக்கங்கள் பளீரென்று எதையும் பெரிதாகச் செய்கிற…
-
- 0 replies
- 1.1k views
-
-
உறவு மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தே ஒரு பாலமமைத்து கனடிய தமிழ் திரைப்படவரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறார் திரைப்படக் கலைஞர்; திவ்வியராஜன் என்றால் அது மிகையாகாது. அல்பியன் சினிமாவில் பிற்பகல் 3:00 மணி காட்சியைப் பார்த்துவிட்டு ஈழத்து மூத்த நாடக, சினிமாக் கலைஞர் நண்பர் கே.எஸ். பாலச்சந்திரனுடன் காரிலே திரும்பி வரும்போது எங்கள் உரையாடல் உறவு படம் பற்றியதாகவே இருந்தது. அடிக்கடி செல்பேசியில் அவருக்கு அழைப்பு வருவதும் அவர் அற்புதம், அபாரம், எங்கடை கனடிய தமிழ்ப்படத்திற்கு இது ஒரு திருப்புமுனை, நல்ல எதிர்காலம் இருக்கு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வரும்போது எனது கவனம் நெடுஞ்சாலையில் இருந்தாலும் அவரது வார்த்தைகளைக் கிரகித்துக் கொண்டேயிருந்தது. அகஸ்தியர் கை…
-
- 0 replies
- 928 views
-
-
மாஸ்டர் டைரக்டர்! எஸ்.கலீல்ராஜா ஒரு சினிமா எப்போது தொடங்கும்? உண்மையில் ஒரு படம் முடிந்த பின்தான், அது ஆரம்பிக்கும்! ஜாக்கி சானின் பக்கா ஆக்ஷன் படத்தைப் பார்த்து முடித்தவுடன் பைக் திராட்டிலை வேகமாக முறுக்கினால்... 'தாரே ஜமீன் பர்’ பார்த்துவிட்டு கண் கலங்க வெளியே வந்தால்... 'சதுரங்க வேட்டை’ பார்த்துவிட்டு, 'ஊர்ல எம்புட்டு ஃப்ராடு இருக்காய்ங்க... சூதானமா இருக்கணும்’ என மனதுக்குள் நினைத்தால்... அது நல்ல சினிமா. இதெல்லாம் நமக்குத் தெரிந்த கமர்ஷியல் உதாரணங்கள். படம் முடிந்து வெளியே வந்ததும், 'மனுஷன் பின்னிருக்கான்யா... ஆனா, கிளைமாக்ஸில் என்ன சொல்ல வர்றாரு?’ எனப் பிரமிப்பு விலகாமல் பார்த்தால், 'அந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும்’ என முடிவுசெய்தால்... அது 'கிறிஸ…
-
- 0 replies
- 1.7k views
-
-
கமல் - ஸ்ரீதேவி நடித்த 'மூன்றாம் பிறை'யில் மனதை கனக்கவைத்த முடிவையே 'தீபாவளி'யின் முன்னுரையாக்கி காதல் கமகமக்கும் அத்தியாயங்களை அடிகாக சொல்லியிருக்கிறார் எழில். சென்னை ராயபுரத்தில் அரசியல்வாதிகளே சலாம் போடுமளவிற்கு செல்வாக்கு மிக்கவர் விஜயகுமார். இவரது மகன் ஜெயம்ரவி. பெங்களுரில் கட்டபஞ்சாயத்தும் கன்ஸ்ட்ரக்ஸ்ன் என பண பலம், ஆள் பலத்துடன் இருக்கும் லாலின் மகள் பாவனா. வந்த இடத்தில் ரவியின் துறுதுறுப்பும் துடுக்குதனமும் பாவானாவின் மனசில் தூண்டில் போட அவ்வப்போது டூயட் ஆட ஆரம்பிக்கிறது காதல். இந்நிலையில் நடந்த சம்பங்களை அடிக்கடி மாந்துவிடும் மூளை குறைபாடு இருப்பது தெரியவருகிறது. ஒரு இடத்தில் தலையில் அடிப்பட்டதன் விளைவுதான் இந்த நோய்க்கு காரணம் என்பதை ரவியிடம் ச…
-
- 0 replies
- 2.2k views
-
-
500 படங்கள் மேல் நடித்த ரங்கம்மா பாட்டி மெரினா பீச்சில் கர்ச்சீப் விற்கும் நிலை :நடிகர்சங்கம் வெட்கித் தலைகுனிய வேண்டும்… அஜீத்,விஜய் உட்பட 500 படங்களில் நடித்தும் மெரினா பீச்சில் கர்ச்சீப் விற்கும் நடிகை… சமீப காலங்களில் ரங்கம்மா பாட்டி அதிகம் காணப்பட்டது வடிவேலுவுடன் காமெடிக்காட்சிகளில்.சென்னை வடபழனி குமரன்காலனியில் வசித்து வருகிறார். மூதாட்டியான இவரது காமெடி ரசிக்கும்படி இருக்கும். குறிப்பாக ஒரு திரைப் படத்தில் வடிவேலுவை, ‘போற வழியிலேயே அப்படியே இந்த நாயை ‘சூ’ வென விரட்டிட்டு போ’, என்று இவர் பேசிய வசனம் பிரபலமானது. அன்று முதல் ‘சூ பாட்டி’ என்ற அடையாளம் இவருக்கு…
-
- 0 replies
- 650 views
-
-
எந்த விஷயத்திலும் அதீத ஆர்வமும் தேடலும் கொண்ட இளைஞன் சந்திக்கும் எதிர்பாராத விளைவுகளே 'ஜீவி'. ஊரில் வெட்டியாக ஊர் சுற்றித் திரியும் வெற்றி பெற்றோரின் வற்புறுத்தலால் வேலை தேடி சென்னை வருகிறார். செக்யூரிட்டி வேலை உள்ளிட்ட சில பல வேலைகளைச் செய்த பிறகு ஜூஸ் போட்டுக் கொடுக்கும் வேலையில் தன்னை தக்கவைத்துக் கொள்கிறார். அதே கடையில் டீ போடும் கருணாகரனும் வெற்றியும் நண்பர்கள். இருவரும் ஒரே அறையில் தங்குகிறார்கள். எதிர்க்கடையில் வேலை செய்யும் பெண் வெற்றியின் காதலை நிராகரித்துவிட்டு இன்னொரு ஆணுடன் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார். இதனால் விரக்தியின் விளிம்புக்குச் செல்கிறார் வெற்றி. குடும்ப பாரம் அழுத்த, பொருளாதாரப் பிரச்சினையில் தவிக்கும…
-
- 0 replies
- 460 views
-
-
சென்னை: சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கம்முன்னு கெட என்று மனோரமா பேசிய வசனம் அப்போது மிகவும் பிரபலம் ஆனது. விசு இயக்கி நடித்த சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நன்றியுள்ள பணிப்பெண்ணாக நடித்திருந்தார் மனோரமா. கண்ணம்மா என்ற கதாபாத்திரமாகவே வாழ்த்திருந்தார் ஆச்சி. அந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் கம்முன்னு கெட என்று அவர் பேசிய வசனம் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற வசனம் போன்று மிகவும் பிரபலமானது.வீட்டு முதலாளியின் மகளை அவரது கணவருடன் சேர்த்து வைக்கும் நல்ல எண்ணத்தில் தான் மனோரமா நடித்திருப்பார். முதலாளியின் சம்பந்தியை பார்த்து மனோரமா நறுக் நறுக்கென்று பேசுவார். அதை கேட்ட முதலாளியின் மனைவியும், மகளும் பதறிப் போய் கண்ணம்மா, கண்ணம்மா என்பார்கள். அதற்கு மனோரமாவோ அவர்களின் …
-
- 0 replies
- 670 views
-
-
திரை விமர்சனம்: கோடை மழை பாரம்பரியமான திருட்டுத் தொழில் மிச்சமிருக்கும் கிராமம் ஒன்றின் முகத் தைக் குறைவான ஒப்பனையுடன் நமக்குக் காட்ட முயற்சிக்கிறார் அறிமுக இயக்குநர் கதிரவன் பல தலைமுறைகளைப் பின் தொடர்ந்த திருட்டுத் தொழிலில் ஒரு சிலர் மட்டும் ஆர்வம் காட்டிவரும் கிராமம் அது. அங்கே நேர்மையாகவும் கவுரவமாகவும் வாழ்கின்றன பல குடும்பங்கள். அந்த ஊரின் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றுகிறார் உள்ளூர்வாசியான களஞ்சியம். அவரது தங்கையான ஸ்ரீப்ரியங் காவைக் கண்டதும் காதலிக்கிறார் ராணுவ வீரரான கண்ணன். விடுமுறையில் ஊருக்கு வந் தால் நண்பன் பொடுங்குதான் அவரது உலகம். பொடுங்குவோ கண்ணனுக்குத் தெரியாமல் திருட்டுத் தொழிலைச் செய்து வருகிறான…
-
- 0 replies
- 288 views
-
-
படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்ற அவதார் 2 படக்குழு தனிமைப்படுத்தப்பட்டது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வசூலித்து உலக அளவில் அதிகம் வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியது. இந்த சாதனையை கடந்த வருடம் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. அவதார் படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. அடுத்து இந்த படத்தின் 4 பாகங்கள் ரூ.7, 500 கோடி செலவில் தயாராக உள்ளன. 2 மற்றும் 3ம் பாகங்களுக்கான படப்பிடிப்புகள் நியூசிலாந்தில் தொடர்ந்து நடந்து வந்தன. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க நியூ…
-
- 0 replies
- 269 views
-
-
என்னை பார் யோகம் வரும்’ ஜமீன்ராஜ் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் படம் ‘பேட்டை முதல் கோட்டைவரை’. இதில் சத்யராஜ் ஜோடியாக லட்சுமி நடிக்கிறார். இவர் பழைய ஹீரோயின் லட்சுமி அல்ல. புதுமுகம். இவர் மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் ஜோடியாக ‘தமிழ்தேசம்’ படத்தில் நடித்து வருகிறார். தன் நண்பருடைய மகனுக்கு ஜோடியாக நடிக்கும் லட்சுமி, இப்போது தனக்கே ஜோடியாக நடிப்பது பற்றி சந்தோஷப்படும் சத்யராஜ், உடனே ரகுவுக்கு போன் செய்து, “நான் இன்னும் யூத் ஹீரோதாம்பா. பாரேன், உன் ஜோடி இப்ப என் ஜோடியா நடிச்சுகிட்டிருக்கு” என்று குசும்பு செய்திருக்கிறார். http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=411
-
- 0 replies
- 1.2k views
-