வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
முதல் பார்வை: சூரரைப் போற்று ஏர் ஓட்டும் விவசாயியாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவர்களை ஏரோப்ளேனில் பயணிக்க வைக்க வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்ட விமான சேவை நிறுவன அதிபரின் கதையே 'சூரரைப் போற்று'. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள ஒரு பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவர் நெடுமாறன் ராஜாங்கம் (சூர்யா). அப்பா ஆறுவிரல் வாத்தியார் (பூ ராமு) மனு எழுதிப் போட்டு மின்சார வசதி உள்ளிட்ட கிராமத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உதவுபவர். அவரின் அஹிம்சா வழி மனுவால் சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்த முடியவில்லை. ஆனால், போராட்டத்தால் அதிர்வலையை ஏற்படுத்துகிறார் அவரின் மகன் சூர்யா. இது அப்பாவுக்குப் பிடிக்காமல் போகிறது. இதனால் மோதல் வலுக்க, சூர்யா தேச…
-
- 38 replies
- 5.4k views
-
-
முதல் பார்வை: ஜானி உதிரன்சென்னை ரெண்டரை கோடிக்கான பண வேட்டையில் சாகசம் செய்யும் எதிர் நாயகனின் கதையே 'ஜானி'. பிரபு, ஆனந்த்ராஜ், அஷுதோஷ் ராணா, பிரசாந்த், ஆத்மா பேட்ரிக் ஆகிய ஐவரும் பிசினஸ் பார்ட்னர்கள். சீட்டு ஆடும் கிளப், மதுபானக்கூடம் என பல தொழில்களைச் செய்து வரும் இவர்கள் பணத்துக்காக சில சட்டவிரோதச் செயல்களையும் செய்கின்றனர். ரெண்டரை கோடி ரூபாய் பணம் தயார் செய்தால் கையில் விலை உயர்ந்த போதைப்பொருள் கிடைக்கும் என்று பிரபுவின் நண்பர் சாயாஜி ஷிண்டே கூறுகிறார். இதற்காக ஐவரும் இணைந்து ஆளுக்கு ரூ.50 லட்சம் ஏற்பாடு செய்கிறார்கள். பணத்தை சாயாஜி ஷிண்டேவிடம் யார் கொடுப்பது, பொருள் வாங்குவது எப்படி? பயணமுறை, பிக் அப் செய்வது என எல்லாம் பக்காவாக திட்டமிடப்ப…
-
- 0 replies
- 594 views
-
-
எந்த விஷயத்திலும் அதீத ஆர்வமும் தேடலும் கொண்ட இளைஞன் சந்திக்கும் எதிர்பாராத விளைவுகளே 'ஜீவி'. ஊரில் வெட்டியாக ஊர் சுற்றித் திரியும் வெற்றி பெற்றோரின் வற்புறுத்தலால் வேலை தேடி சென்னை வருகிறார். செக்யூரிட்டி வேலை உள்ளிட்ட சில பல வேலைகளைச் செய்த பிறகு ஜூஸ் போட்டுக் கொடுக்கும் வேலையில் தன்னை தக்கவைத்துக் கொள்கிறார். அதே கடையில் டீ போடும் கருணாகரனும் வெற்றியும் நண்பர்கள். இருவரும் ஒரே அறையில் தங்குகிறார்கள். எதிர்க்கடையில் வேலை செய்யும் பெண் வெற்றியின் காதலை நிராகரித்துவிட்டு இன்னொரு ஆணுடன் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார். இதனால் விரக்தியின் விளிம்புக்குச் செல்கிறார் வெற்றி. குடும்ப பாரம் அழுத்த, பொருளாதாரப் பிரச்சினையில் தவிக்கும…
-
- 0 replies
- 454 views
-
-
முதல் பார்வை: டுலெட் உதிரன்சென்னை வாடகைக்கு வீடு தேடும் படலத்தில் அவதிப்படும் ஒரு குடும்பத்தின் கதையே 'டுலெட்'. சினிமா துறையில் உதவி இயக்குநராக இருப்பவர் சந்தோஷ். அவரது மனைவி ஷீலா. இவர்களின் 5 வயது மகன் தருண் யு.கே.ஜி. படிக்கிறார். வீட்டின் உரிமையாளர் ஆதிரா அடுத்த மாதத்துக்குள் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று கறாராகச் சொல்கிறார். சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் சந்தோஷ்- ஷீலா தம்பதியினர் சென்னை முழுக்க வாடகை வீடு தேடி அலைகிறார்கள். சாதி, மதம், உணவுப் பழக்கம், வேலையின் நிமித்தம் என்று பல்வேறு காரணங்களால் வீடு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் நண்பரின் ஆலோசனைப்படி சினிமாவில் வேலை செய்வதை மறைத்து வீடு தேடுகிறார் சந்தோஷ். ஆனால், அப்போதும் ஒரு…
-
- 2 replies
- 1.6k views
-
-
முதல் பார்வை: தடம் உதிரன்சென்னை ஓர் உரு இரட்டையர்களில் யார் கொலையாளி என்பதை போலீஸ் கண்டுபிடித்ததா இல்லையா என்பதே 'தடம்' படத்தின் கதை. எழில் (அருண் விஜய்) ஐஐடியில் இன்ஜினீயரிங் படித்துவிட்டு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். கவின் (அருண் விஜய்) நண்பன் யோகி பாபுவுடன் இணைந்து சின்னச் சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார். எழில் தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு அருகில் திரைப்பட விமர்சகராக வேலை பார்க்கும் தீபிகாவை (தான்யா ஹோப்) காதலிக்கிறார். கவின் நிறைய பெண்களுடன் பழகி அவர்களை வலையில் விழ வைக்கிறார். ஒரு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஆகாஷ் என்பவர் தன் சொகுசு வீட்டில் படுகொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். போலீஸ் கொலை செய்தது யார் என்று ஆதாரங்களைத் தேடுகிற…
-
- 7 replies
- 1.3k views
-
-
முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்! பாலா இயக்கத்தில் வெளியாகும் ஏழாவது படம், குரு இயக்கத்தில் சிஷ்யர் சசிகுமார் நடிக்கும் முதல் படம், இளையராஜா இசையில் வெளியாகும் 1000-வது படம் என்ற இந்த காரணங்களே 'தாரை தப்பட்டை' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. பொதுவாக பாலா படமென்றால் வன்மம், குரோதம், கொடூரமாகப் பழிவாங்கும் படலம், குரல்வளையைக் கடித்து துப்புவது, ரத்தம் தெறிப்பது என்ற டெம்ப்ளேட் நிச்சயமாக இருக்கும். 'தாரை தப்பட்டை' படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்திருப்பதால், அதீத வன்முறை பீதியுடன் தயங்கியே தியேட்டருக்குள் நுழைந்தோம். 'தாரை தப்பட்டை' படம் எப்படி? சசிகுமார் சன்னாசி தாரை தப்பட்டை மற்றும் கரகாட்டக் குழுவை நடத்தி வருகிறார…
-
- 0 replies
- 716 views
-
-
Published : 14 Dec 2018 11:33 IST Updated : 14 Dec 2018 12:14 IST ஒரு குற்றவாளியை என்கவுன்ட்டர் செய்வதற்காக மும்பையிலிருந்து ராமேஸ்வரம் வரும் போலீஸ் அதிகாரி, அதே நபரைக் காப்பாற்றப் போராடினால் அதுவே 'துப்பாக்கி முனை'. ராமேஸ்வரம் தீவில் 15 வயது சிறுமியை ஆசாத் ('மிர்ச்சி' ஷா) என்கிற மாவோயிஸ்ட் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டதாக காவல்துறை வழக்குப் பதிவு செய்கிறது. ஆசாத்தை என்கவுன்ட்டர் செய்வதற்காக போலீஸ் அதிகாரி போஸ் (விக்ரம் பிரபு) மும்பையிலிருந்து ராமேஸ்வரம் விரைகிறார். கொலையான சிறுமியின் தந்தை உய்யா (எம்.எஸ்.பாஸ்கர்) விக்ரம் பிரபுவிடம் நடந்தது என்ன? என்பதைச் …
-
- 1 reply
- 932 views
-
-
முதல் பார்வை: தும்பா உதிரன்சென்னை கேரள வனத்தில் இருந்த புலி ஒன்று எல்லை தாண்டி தமிழக வனத்துறைக்குள் நுழைந்தால், அப்புலிக்கு மனிதர்களால் ஆபத்து நேர்ந்தால் அதுவே 'தும்பா'. பெயின்டிங் கலையில் உச்சம் தொட நினைக்கும் தீனாவுக்கு டாப் ஸ்லிப்பில் ஓர் ஒப்பந்தப் பணி கிடைக்கிறது. தன் நண்பன் தர்ஷனுடன் இணைந்து சென்னையில் இருந்து டாப் ஸ்லிப் புறப்படுகிறார். ஐஏஎஸ் அதிகாரியின் மகளான கீர்த்தி பாண்டியனுக்கு வைல்ட் லைஃப் புகைப்படங்களில் ஆர்வம். காட்டில் உலவும் புலியைப் படமெடுக்க டாப் ஸ்லிப் செல்கிறார். தமிழக வனத்துறைக்குள் நுழைந்த புலியை சட்டவிரோதமாக விற்பனை செய்ய டாப் ஸ்லில் வனத்துறை அதிகாரி சதித்திட்டம் தீட்டுகிறார். இந்த நால்வரைச் சுற்றியும் நகரும் கதையின் அடுத்தடுத்த நகர…
-
- 0 replies
- 665 views
-
-
முதல் பார்வை: பசங்க 2 - கவனத்துக்குரிய 'ஹைக்கூ' உலகம்! 'பசங்க', 'மெரினா' படங்களை இயக்கிய பாண்டிராஜ் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்துக்குப் பிறகு யு டர்ன் அடித்து மீண்டும் குழந்தைகளை மையமாக வைத்து ஒரு படம் இயக்கியுள்ளார் என்றால் எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இருக்குமா? படத்தைத் தயாரித்ததோடு, நடிப்பிலும் தன் பங்களிப்பு செய்த சூர்யா, சின்ன இடைவெளிக்குப் பிறகு அமலாபாலின் நல்வரவு என்ற இந்த காரணங்களே கதாபாத்திரம் படம் பார்க்கத் தூண்டியது. 'பசங்க 2' எப்படி? நிஷேஷ், தேஜஸ்வினி என்ற இரு சுட்டிகளும் துறுதுறு சுறுசுறுவென்று ஜாலியாக பிடித்ததை மட்டும் செய்கிறார்கள். இவர்களை சமாளிக்க முடியாமல் பள்ளிக்கூடங்கள் திண்டாடுகின்றன…
-
- 1 reply
- 1.2k views
-
-
மகளிர் கால்பந்து அணியின் மூலம் தன் கனவை நிறைவேற்றப் போராடும் கோச்சின் கதையே 'பிகில்'. சென்னையில் குப்பத்து மக்களின் நண்பனாக வலம் வருகிறார் மைக்கேல் (விஜய்). அவரின் நண்பர் கதிர் கால்பந்தாட்டப் பயிற்சியாளர். விஜய்யைத் தாக்க வரும் டேனியல் பாலாஜி தலைமையிலான ரவுடி கும்பல் கதிரைத் தாக்குகிறது. இதில் கதிர் படுகாயம் அடைகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரால் தொடர்ந்து கோச்சாக செயல்பட முடியாத சூழல். இந்நிலையில் தமிழக மகளிர் கால்பந்து அணிக்கு ஒரு கோச் தேவைப்படுகிறார். அப்போது மைக்கேல் கோச் அவதாரம் எடுக்கிறார். இத்தனை நாள் ரவுடியாக இருந்தவரை ஒரு கோச்சாக எப்படி ஏற்றுக்கொள்வது என்று வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கோச்சாக நடந்துகொள்ளும் அவர் தலைமையி…
-
- 0 replies
- 515 views
-
-
முதல் பார்வை: பொன்மகள் வந்தாள் ஒரு பெண்ணின் மரணத்தில் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடித்து, நீதிக்காகப் போராடும் இன்னொரு பெண்ணின் கதையே 'பொன்மகள் வந்தாள்'. ஊட்டியில் 10 வயதுக் குழந்தையை ஜோதி என்கிற ஒரு பெண் துப்பாக்கி முனையில் கடத்திவிட்டதாகவும் காப்பாற்றப் போன இரு இளைஞர்களையும் அவர் சுட்டுக்கொன்றதாகவும் அந்த சைக்கோ கொலைக் குற்றவாளியைத் தேடி வருவதாகவும் போலீஸார் கூறுகின்றனர். திருப்பூரில் இருந்து ஜெய்ப்பூர் தப்பித்துச் செல்ல இருந்த சைக்கோ ஜோதியைப் பிடித்துவிட்டதாகவும் பிறகு சொல்கின்றனர். குழந்தையை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டச் சொல்லும்போது, பெண் குற்றவாளி எங்களைச் சுட்டதால் நாங்களும் பதிலுக்குச் சுட்டதில் குற்றவாளி இறந்துபோனார். அவர் வடநாட்டைச் …
-
- 1 reply
- 625 views
-
-
கொலை உள்ளிட்ட கொடூரக் குற்றங்களுக்கு ஸ்கெட்ச் போட்டுத் தரும் மகா, கிராமத்துக் குழந்தைகளை வளர்ச்சியை நோக்கி நகர்த்தும் முனி ஆகிய இருவரின் கதையே 'மகாமுனி'. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் மகாதேவன் (ஆர்யா) கால் டாக்ஸி டிரைவராக வேலை செய்கிறார். உள்ளூர் அரசியல்வாதி முத்துராஜ் (இளவரசு) சொல்லும் சின்னச் சின்ன வேலைகளை பிசிறே இல்லாமல் செய்து முடிக்கிறார். இதனால் குரு நாராயணன் (அருள்தாஸ்), ஆதி நாராயணன் (மதன்குமார்) என்ற இரு சகோதரர்களின் பகைக்கு ஆளாகிறார். பகை பழிவாங்கும் படலமாக உருவெடுக்க, முதுகில் கத்திக்குத்துடன் உயிருக்குப் போராடும் ஆர்யா மருத்துவரை சிகிச்சைகாகச் சந்திக்கிறார். ஈரோடு மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் அம்மா ரோகிணியுடன் …
-
- 0 replies
- 733 views
-
-
Published : 21 Dec 2018 15:50 IST Updated : 21 Dec 2018 15:51 IST சாகடிக்கவே முடியாத ஒருவனும் சாவுக்கே கடவுளான ஒருவனும் மோதினால் அதுவே 'மாரி 2'. சென்னைக்கு அருகில் உள்ள ஓர் ஊரில் ரவுடி ராஜ்ஜியம் நடத்துகிறார் மாரி (தனுஷ்). அவரின் நண்பன் கலையை (கிருஷ்ணா) போதைப் பழக்கத்திலிருந்து மீட்டெடுக்கிறார். எவ்வளவு பணம் கிடைத்தாலும் போதைப்பொருள் கடத்துவதில்லை என்பதில் மாரி தீர்மானமாக இருக்கிறார். இடையில் வளவன் தன் அண்ணன் கலையிடம் மாரி போதைப்பொருள் கடத்துவதாகவும், அதற்கு ஆட்டோ டிரைவரான அராத்து ஆனந்தி (சாய் பல்லவி) உதவுவதாகவும் கூறுகிறார். இதை கலை நம்ப, இருவரின் நட்புக்குள்ளும் பிரச்சினை வெடிக்கிறது. …
-
- 0 replies
- 524 views
-
-
முதல் பார்வை: வாட்ச்மேன் கார்த்திக் கிருஷ்ணாசென்னை 30 ஆயிரம் ரூபாய் கடன் கிடைக்காமல் தவிக்கும் இளைஞன் திருட நினைத்தால், அதனால் அவன் சில ஆபத்துகளில் சிக்கினால் அதுவே 'வாட்ச்மேன்'. ஜி.வி.பிரகாஷ் படத்தின் ஆரம்பத்திலிருந்து பார்க்கவே ரொம்ப பரபரப்பாக இருக்கிறார். 30 ஆயிரம் ரூபாய் கடன் கிடைக்குமா என்று அலையும் அவருக்கு எந்த வழியும் பலன் தரவில்லை. இதனால் திருடியாவது பணத்தை எடுப்போம் என்று முடிவெடுத்து ஒரு வீட்டுக்குள் நுழைகிறார். ஆனால், அந்த வீட்டில் ஏற்கெனவே இருக்கும் சில ஆபத்துகளால் ஜி.வி.பிரகாஷ் என்ன ஆகிறார், அவருக்கான பணச் சிக்கல் ஏன் வந்தது, அந்த வீட்டில் உள்ள ஆபத்து என்ன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை. ஜி.வி.பிரகாஷ் ஹீரோயிஸம் செய்யவ…
-
- 0 replies
- 812 views
-
-
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக உரக்கப் பேசும் படமே 'வெள்ளைப்பூக்கள்'. ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான விவேக் அமெரிக்காவில் இருக்கும் மகனுடன் ஓய்வுக்காலத்தைக் கழிக்க அங்கு செல்கிறார். மக்கள் நடமாட்டமே இல்லாத அமைதி சூழ் உலகு அவருக்குப் புதிதாக இருக்கிறது. மகன் தேவ் உடன் பேசும் விவேக் மருமகள் பெய்ஜி ஹெண்டர்சனுடன் பேசாமல் தன் வேலையை மட்டும் பார்க்கிறார். அமெரிக்காவில் இருக்கும் மற்றொரு தமிழரான சார்லியின் அறிமுகப் படலத்துக்குப் பிறகு அவரும் விவேக்கும் சகஜமாகப் பழகி அமெரிக்காவில் இஷ்டம் போல் உலா வருகிறார்கள். இந்நிலையில் திடீரென்று விவேக்கின் பக்கத்து வீட்டுப் பெண் மோனா கடத்தப்படுகிறாள். அதற்கடுத்த சில நாட்களில் கார்லோஸ் என்ற பள்…
-
- 1 reply
- 976 views
-
-
நயன்தாரா, பிரபுதேவா திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கின்றன. முதல் மனைவி ரம்லத் திருமணத்துக்கு இன்னும் சம்மதிக்கவில்லை. அவர் அனுமதி இல்லாமல் நடந்தால் சட்ட சிக்கலில் மாட்ட வேண்டியதிருக்கும். எனவே ரம்லத்தை சம்மதிக்க வைக்க மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்கின்றனர். வில்லு படப்பிடிப்பு முடிந்ததுமே நயன்தாராவுடனான காதலை ரம்லத்திடம் தெரிவித்து திருமணத்துக்கு சம்மதம் கேட்டார் பிரபுதேவா. அப்போது நயன்தாராவை மணந்தாலும் ரம்லத்தை பிரியமாட்டேன் என்று அவரிடம் உறுதியளித்தாராம். எனவே இரு மனைவிகளுடன் குடும்பம் நடத்துவதே அவரது விருப்பமாக இருக்கிறது. ரம்லத்தை விவாகரத்து செய்யும் திட்டம் இல்லையாம். விரைவில் அவரிடம் இருந்து சம்மதம் கிடைக்கும் என நம்புகிறார். …
-
- 15 replies
- 1.7k views
-
-
துபாயில் தனியார் நிறுவனம் சார்பில், முதல் முறையாக ‘பாலிவுட் பார்க்ஸ் துபாய்’ என்ற பெயரில் ஒரு மிகப்பெரிய தீம் பார்க் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. தனியார் நிறுவனம் ஒன்றின் சார்பில் துபாயில் மிகப் பெரிய அளவில், ‘பாலிவுட் பார்க்ஸ் துபாய்’ உருவாக்கப்பட்டு வருகிறது. இது 2016ம் ஆண்டில் தயாராகிவிடும். இந்த தீம் பார்க்கில் இந்திய பாலிவுட் சினிமா தொடர்பான பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை அம்சங்கள் நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படுகிறது. துபாயில் உள்ள ஜெபெல் அலி பகுதியில் இந்த தீம் பார்க் சுமார் 30 லட்சம் சதுர அடியில் உருவாகிறது. இதற்காக துபாயிலுள்ள தனியார் நிறுவனம் மும்பையிலுள்ள 5 சினிமா நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த தீம் பார்க்கில் 16 வகையான…
-
- 0 replies
- 463 views
-
-
முதல்முறையாக விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார்!? #Vijay61 எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் என எல்லோரும் இரட்டை வேடங்களில் நடித்த நிறைய படங்கள் சூப்பர், டூப்பர் ஹிட். விஜய்க்கும் இரட்டை வேடங்களில் நடிப்பதற்கு ஆசைதான். முதன்முதலாக ஹீரோ ப்ளஸ் வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்து வெளிவந்த `அழகிய தமிழ்மகன்' திரைப்படம் சரியாகப் போகவில்லை. 'என் மகன் வில்லனாக நடிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை' என விஜய்யின் அம்மா ஷோபா கூறியிருந்தார். அதன் பிறகு `இனிமேல் இரட்டை வேடங்களில் நடிப்பதில்லை. குறிப்பாக, வில்லன் போன்ற நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதில்லை' என முடிவெடுத்தார். தாணு தயாரிப்பில் 'துப்பாக்கி' என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்து, விஜய்ய…
-
- 0 replies
- 424 views
-
-
விஜய் நடிக்கும் 'காவலன்' பொங்கலுக்கு ரிலீஸ். படாடோப விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ரோமேஷ் பாபுஎன்பவர்தான் தயாரிப்பாளர். சுமார் 380 தியேட்டர்களில் 'காவலன்’ ரிலீஸ் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், புதிய தலைவலி வந்து சேர்ந்தது. இந்தப் படத்துக்கான வெளிநாட்டு உரிமையை சிங்கப்பூர் சரவணன் என்பவர் வாங்குவதாகக் கையெழுத்துப் போட்டார். ஆனால், 'இதோ வர்றேன்’ என்று போனவர்... போனவர்தான். ஆளையே காணோம். 'படத்தை நீங்கள் வாங்க வேண்டாம்’ என்று அவரை யாரோ மிரட்டியதாக விஜய் தரப்பு சந்தேகப்பட்ட நிலையில்... படத்தை வெளியிடுவதற்கான தடைகள் நாலா பக்கமும் எழுந்து வர ஆரம்பித்தன.'' விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், போயஸ் கார்டனுக்குச் சென்று ஜெயலலிதாவைச் சந்தித்து பொக்கே கொடுத்து வந்த…
-
- 1 reply
- 706 views
-
-
முதுகில் மத சின்னம்: நடிகை மந்திரா பேடிக்கு சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு அமிர்தசரஸ், ஏப். 12- `மன்மதன்' படத்தில் சிம்புவுடன் ஒருபாடலுக்கு ஆடி இருப்பவர் நடிகை மந்திரா பேடி, ஏராளமான டி.வி. நிகழ்ச்சிகளிலும், நடன நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று வருகிறார். மும்பையில் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் இவர் தன் வழக்க மான கவர்ச்சி உடையில் ஆடினார். அப்போது அவர் உடல் முழுக்க மருதாணி அலங்காரம் செய்திருந்தார். முதுகில் சீக்கியர்களின் மதசின்னம் போல வரைந்திருந்தார். இது ஒட்டு மொத்த சீக்கியர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.` இது குறித்து சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி செயலாளர் ஹர்பீந்த் சிங் கூறுகையில், "மந்திரா பேடி சீக்கியர்கள் மனதை புண்படுத்தும் வகையில் ஏற்கனவே சில நி…
-
- 0 replies
- 881 views
-
-
முதுகுவலியால் படப்பிடிப்பு ரத்து: அஜீத்குமார் இன்று சென்னை திரும்புகிறார்- ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை சென்னை, பிப். 6- நடிகர் அஜீத்குமார் "கிரீடம்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் கடந்த சில தினங்களாக நடந்தது. நேற்று சண்டைக்காட்சி படமாக்கினார்கள். அப்போது அஜீத்குமார் டூப் போடாமல் நடித்தார். காரின் மேல் இருந்து குதித்தபோது முதுகு பகுதியில் வலி ஏற்பட்டது. அவரால் அசைய முடியவில்லை. வலி தாஙக முடியாமல் அலறினார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் பதட்டமடைந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் வலி தீரவில்லை. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அஜீத்குமாரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வருகிறா…
-
- 2 replies
- 1.1k views
-
-
முதுபெரும் இந்தி நடிகர் திலீப்குமார் மறைவு பிரதமர் மோதி இரங்கல் முதுபெரும் இந்தி நடிகர் திலீப்குமார் தமது 98வது வயதில் காலமானார். அவர் சிகிச்சை பெற்றுவந்த மும்பை இந்துஜா மருத்துவமனை பிபிசி இந்தி சேவையிடம் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது. புதன்கிழமை காலை 7.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக இந்துஜா மருத்துவமனை மருத்துவர் ஜலில் பால்கர் தெரிவித்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோதி டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் திரைத்துறை நாயகனாக எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரிடம் ஒப்பற்ற திறமை இருந்தது. அதனால்தான் பல தலைமுறையைச் சேர்ந்த ரசிகர்களை அவர் மகிழ்வித்தார் என்று தமது பதிவில் அவர் தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 706 views
-
-
முத்த காட்சி தேவையெனில் அதற்கும் தயார் என்கிறார் பிரியாமணி
-
- 2 replies
- 2.6k views
-
-
முத்த காட்சிகளுக்கு முற்று புள்ளி வைத்த கொரோனா..! கொரோனா உயிர்ப்பலிகளில் இருந்து மீள முடியாமல் உலகம் திக்குமுக்காடி வருகிறது. இதை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் ஊரடங்கை பிறப்பித்துள்ளன. இந்த வைரஸ் தும்மல் மற்றும் மூச்சுகாற்றால் பரவும் என்றும், இதில் இருந்து தப்பிக்க ஒரு மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும் என்றும், முக கவசம் அணிய வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் வற்புறுத்துகின்றனர். இதனால் ஊரடங்கு முடிந்ததும் திரைப்படங்களில் நெருக்கமான காதல் காட்சிகளையும், முத்த காட்சிகளையும் படமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த காட்சிகளை படமாக்குவதற்கு தடை விதிக்கப்படலாம் என்ற பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது. தற்போதையை படங்களில் காதல் காட்சிகளில் எல்லை மீறி…
-
- 0 replies
- 456 views
-
-
கேரள அரசின் சிறந்த நடிகை விருது பெற்றுள்ள மீரா ஜாஸ்மின், தமிழில் பரத்துடன் நடித்துள்ள நேபாளியிலும், மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்துள்ள ஒரு படத்திலும் நெருக்கமான முத்தக் காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளாராம். இந்தக் கோடை காலம் நிச்சயம் மீராவுக்கு எப்படி இருக்குமோ, ஆனால் அவரது ரசிகர்களுக்கு ஜில் ஜில் கோடையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழில் பரத்துடன் இணைந்து நடித்த நேபாளி படமும், மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள இனதே சிந்தாவிஷ்யாயம் என்ற படமும் ஒரே நேரத்தில் திரைக்கு வருகின்றன. இதில் விசேஷம், இரு ஹீரோக்களுடன் மீரா படு நெருக்கமாக நடித்துள்ளதுதான். குறிப்பாக முத்தக் காட்சிகளில் படு நெருக்கம் காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார…
-
- 1 reply
- 988 views
-