வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
எலிசபெத் ரெய்லர் Elizabeth Taylor with Richard Burton in Cleopatra மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பெண்ணிடம் அழகும் இளமையும் இருக்கும் போது அவள் காலடியில் கூட விழத் தயாராக இருப்பார்கள் ஆண்கள். திரையுலக தேவதை எலிசபெத் ரெய்லர் இன்று தனிமையில் வாடுகிறார். அன்புக்காக ஏங்குகிறார். அவரது தோலில் சுருக்கங்கள் விழ ஆண்களும் அவரை விட்டுப் போய் விட்டார்கள். தற்போது 72வயதுகளைத் தொட்டிருக்கும் எலிசபெத் ரெய்லர், சமையற்கலைஞர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர், அரசியல்வாதி, கட்டிடத் தொழிலாளர் என சமூகத்தின் பல மட்டங்களிலும் இருந்தும் எட்டுத் தடவைகள், ஏழு ஆண்களைத் திருமணம் செய்து கொண்டார். எட்டுத் தடவைகள் விவாகரத்தும் செய்து …
-
- 1 reply
- 986 views
-
-
மலையாள சினிமாவில் தமிழர் சித்தரிப்புகள்! செவ்வாய், 1 ஏப்ரல் 2008( 14:17 IST ) தமிழ் சினிமாவில் மாறாதவை என்று சில உண்டு. சேட்டுகள் சரளமாக தமிழ் பேசக் கற்று பல காலம் ஆகிறது. ஆனால் இந்த சேதி இன்னும் தமிழ் சினிமாவைப் போய்ச் சேரவில்லை. தலையில் குல்லா மாட்டி, கையில் கோலுடன் நம்பள், நிம்பள் என்று தமிழை மென்று துப்பினால் மட்டுமே தமிழ் சினிமாவில் அவர் சேட். மலையாளிகள் குறித்த சித்திரம் இன்னும் விசேஷம். ஒரு டீக்கடை, அதில் வத்தலாக ஒரு நாயர், சாயா எடுத்துக் கொடுக்க ஷகிலா சைஸில் நாயரின் மனைவி! திருமதி நாயர் உதட்டை அழுத்தி, புட்டு வேணுமா என்று கேட்க…
-
- 4 replies
- 1.7k views
-
-
தொலைக்காட்சி நாடகம் ஏற்படுத்திய விபரீதம் வீரகேசரி நாளேடு 3/30/2008 7:12:42 PM - தொலைக்காட்சி நாடகத்தில் இடம்பெற்ற தற்கொலைக்காட்சியை பார்த்துவிட்டு அதேபோன்று கழுத்தில் துப்பாட்டாவைக்கட்டி சுருக்கிட முயற்சித்ததாகக் கூறப்படும் 12 வயது சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கொழும்பு பாலத்துறை பகுதியிலுள்ள 12 ஆம் இலக்கத் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. ரிகாசா (வயது 12) என்ற முஸ்லிம் சிறுமியே இச்சம்பவத்தில் இறந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது சம்பவ தினமான சனிக்கிழமை மேற்படி சிறுமியின் பெற்றோர் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளனர். தனது பாட்டியுடன் வீட்டிலிருந்த சிறுமி வீட்டின் மேல்மாடியி…
-
- 2 replies
- 1.8k views
-
-
மேலும் புதிய படங்கள்ஸ்ரீகாந்த்துடன் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த இந்திரவிழா படத்திலிருந்து மாளவிகா விலகி விட்டாராம். அவர் கர்ப்பமாகியுள்ளதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார் மாளவிகா. திரைப்படங்கள் தவிர சன் டிவியில் சூப்பர் டான்ஸர் நிகழ்ச்சியில் நடுவராகவும் அசத்தி வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீகாந்த்துடன் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த இந்திர விழா படத்திலிருந்து மாளவிகா திடீரென விலகியுள்ளார். ராஜேஷ்வர் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்திர விழாவில் நமீதா நாயகியாக நடிக்கிறார். முழு நீள கவர்ச்சியில் நமீதா நடித்தபோதிலும், மாளவிகாவுக்கும் படத்தில் ஒரு ரோல் கொடுத்து அவரையும் புக் செய்திருந்தனர். மாளவி…
-
- 8 replies
- 2.6k views
-
-
நடிகர் சத்தியராஜிற்கு வாழ்த்துக்கள் சென்னை திரைப்படப் பத்திரிகையாளர் சங்கம் வருடந்தோறும் வழங்கி வரும் திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 2007ம் ஆண்டிற்கான சிறந்த நடிகராக திரு. சத்யராஜ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஒன்பது ரூபாய் நோட்டு பெரியார் ஆகிய படங்களில் அவரது நடிப்புக்காகவே இந்த விருது அவரக்கு வழங்கப்படுகிறது. ஈழத் தமிழர்களைப் பணம் பண்ணுவதற்கு மட்டுமே பாவிக்கும் பெரும்பாலான நடிகர்கள் போலன்றி ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திரு சத்யராஜ் இந்த விருது பெற்றதில் ஈழத்தமிழர்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறார்கள். தொடரட்டும் உங்கள் பணி
-
- 3 replies
- 1.9k views
-
-
20.09.2008 இன்று கனடா மண்ணில் காதல் கடிதம் திரைப்படம் காண்பிக்கப்படுகின்றது சிறிபாலஜி, அனிசா நடராஜசிவம் மற்றும் பலர் நடிப்பில் காதல் கடிதம் வசீகரன் - வி.எஸ்.உதயா திரை அரங்கம்: Woodside Cinema Showtime: 13.30 மேலதிக தொடர்புகட்கு: தொலைபேசி இலக்கம்: 416 286 9448
-
- 0 replies
- 873 views
-
-
குசேலன் படத்தில் இடம் பெறும் ரஜினியின் கனவுப் பாடலில், இப்போது ஐந்து நாயகிகள் இணைந்து ரஜினியுடன் ஆடுகின்றனராம். குசேலன் படத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் கேரக்டரில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இப்படத்தில் ரஜினியின் காட்சிகளை படு பிரமாண்டமாக எடுக்கும் இயக்குநர் பி.வாசு, ரஜினிக்கு ஒரு கனவுப் பாடலையும் தொடர்ந்து படிக்க........ http://isoorya.blogspot.com/2008/03/5.html
-
- 2 replies
- 1.4k views
-
-
சண்டையை சலாம் போட்டு வாங்குவதற்காகவே லண்டனிலிருந்து இந்தியாவுக்கு வருகிறார் நதியா. (காதுகளை மியூட் பண்ணி படம் பார்த்தால், 80-களில் மனக்கதவை தட்டிய அதே நதியா தெரிவார்! இளமை ரகசியத்தை சொன்னால், ஏகப்பட்ட ரிட்டையர்டு நடிகைகள் மார்க்கெட்டை புதுப்பித்து கொள்ள வசதியாக இருக்குமே நதி?) தன் மகள் ராகிணிக்கு சொந்த கிராமத்தில் வைத்து திருமணம் செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பம். மாப்பிள்ளையும் லண்டன். வந்த இடத்தில் மகளை அடிக்கடி கடத்திப்போக முயல்கிறது ஒரு கும்பல். அவர்கள் வேறு யாருமல்ல, நதியாவின் அண்ணன் ஃபேமிலிதான். அவர்களிடமிருந்து மகளை காப்பாற்ற அடியாள், தெருப் பொறுக்கி சுந்தர் சியை நியமிக்கிறார் நதியா. ஆனால் காவல் பூனையே மொத்த பாலையும் குடித்துவிட, விக்கித்து நிற்கும் நதியா, அ…
-
- 0 replies
- 932 views
-
-
அஜித் அவ்வளவுதான் என்று சொன்னவர்களுக்கு பில்லா சரியான பதிலடி கொடுத்திருக்கிறது. பில்லாவுக்கு முன் அஜித் கொடுத்த கடைசி ஹிட் 'வரலாறு'. அதன்பிறகு வந்த 'ஆழ்வார்', 'கிரீடம்' இரண்டும் பாக்ஸ் ஆபிஸில் சொல்லும்படியான வெற்றியை பெறவில்லை. அதிலும் 'ஆழ்வார்' எதிர்பாராத படுதோல்வியை சந்தித்தது. அஜித் அவ்வளவுதான் என்று ஆளாளுக்குப் பேசத் தொடங்கியதுபோது பில்லா புராஜெக்ட் டேக் ஆஃப் ஆனது. ரீ- மேக் படம், அதுவும் ரஜினி நடித்தது. அஜித் அதில் என்னச் செய்யப் போகிறார் என ஏளனமும், எதிர்பார்ப்பும் சரிவிகிதத்தில் இருந்தது. ஏளனத்தை முறியடித்து எதிர்பார்ப்பை நிறைவு செய்தது அஜித்தின் பில்லா. சில நடிகர்களைப் போல காசு கொடுத்து ஓட்டாமலே நூறு நாளை பில்லா கடந்திருக்கிறது. 'சிவாஜி'க்குப் பிற…
-
- 0 replies
- 1k views
-
-
பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் தமிழை சரிவர கற்றுக் கொள்ளாமல் கடித்துத் துப்பும் செயலை இசையமைப்பாளர்கள் இனியும் அனுமதிக்கக் கூடாது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். திமிங்கலத்தின் வாயில் சிக்கியதைப் போன்ற நிலையில் இன்று இருக்கிறது சினிமாவில் தமிழ் படும் பாடு. பெரும்பாலான நடிகைகள், தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் சற்றும் சம்பந்தம் இல்லாதவர்கள். அதேபோல பின்னணி பாடும் பெரும்பாலான பாடகர், பாடகிகளும் கூட தமிழுக்கு முற்றிலும் அந்நியர்கள். அந்தக் காலத்தில் பி.சுசீலா, எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் தங்களது தாய் மொழி தமிழ் இல்லாவிட்டாலும் கூட மிக அருமையாக வார்த்தைகளை உச்சரித்து, அழகாக பாடினார்கள். அதிலும் ல, ள, ழ வித்தியாசத்தை மிகத் துல்லியமாக அவர்கள…
-
- 24 replies
- 4.4k views
-
-
என்னை ஏன் கறுப்பாய் பெற்றாய்? வைரமுத்துவின் கேள்விக்கு தாயின் பதில் 3/23/2008 5:38:59 PM வீரகேசரி நாளேடு - சென்னை, என்னை ஏன் கறுப்பாய் பெற்றாய் என்று என் தாயிடம் கேட்டதற்கு, கரியில் பிறந்த வைரம் போல் வளர, வளர வைரமாவாய் என்றார் என் தாய் என கவிஞர் வைரமுத்து பதிலளித்தார். ஸ்ரீ கிருஷ்ணா சுவீட்ஸ் சார்பில் புகழ்பெற்ற புத்திரர்களைப் பெற்ற அன்னையர்களை கௌரவிக்கும் வகையில் ""தாய்மைக்கு வணக்கம்'' என்ற விழா சென்னையில் உள்ள நாரதகான சபாவில் நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள், பேச்சாளர் சுகிசிவத்தின் தாயார் கோமதி சுப்பிரமணியம், கெவின் கேர் தலைவர் சி.கே.ரங்கநாதனின் தாயார் ஹேமா சின்னி கிருஷ்ணன், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் தாயார் இந்திர…
-
- 1 reply
- 1.3k views
-
-
வணக்கம், 2002 ம் ஆண்டு பிரித்தானியாவில் வெளிவிடப்பட்ட Bend It Like Beckham என்ற ஓர் அழகிய படத்தை நான் அண்மையில் கண்டுகளித்தேன். பலர் ஏற்கனவே இந்தப் படத்தை பார்த்து இருப்பீங்கள் என்று நினைக்கின்றேன். லண்டனில் உள்ள சீக்கிய இனத்தை சேர்ந்த ஓர் இளம் இந்தியப் பெண் soccer (உதைபந்தாட்டம்) மீது மிகவும் தீவிர ஆர்வம் கொள்ளும்போது இந்திய கலாச்சாரத்தை கொண்ட அவளது சீக்கிய குடும்பம் மூலம் அவளுக்கு எவ்வாறான பிரச்சனைகள் வருகின்றது என்பது பற்றி படத்தில் விபரமாக காட்டப்படுகின்றது. அழகிய பல பாடல்கள், நகைச்சுவைகள், கண்ணுக்கினிய காட்சிகள் (சீக்கிய முறையில் நடைபெறும் திருமண வைபவம் படத்தில் வருகின்றது) மற்றும் காதல் என பலவித அம்சங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. சீக்கிய முறையுடன…
-
- 3 replies
- 1.4k views
-
-
சென்னை : பிரபல கோலிவுட் சினிமா வில்லன் நடிகர் ரகுவரன் காலமானார். ஏழாவது மனிதன் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ரகுவரன் பல படங்களில் வில்லன் நடிகராக நடித்துள்ளார். நடிகை ரோகினியை இவர் திருமணம் செய்துள்ளார். சமீப காலமாக உடல்நல குறைவால் அவதி பட்டு வந்த இவர் சென்னை மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலையில் மிகவும் உடல்நலம் மோசமானதை அடுத்து அவர் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். ஆதாரம் தினமலர்
-
- 31 replies
- 9.1k views
-
-
எழுநூறு பேர் பங்குபெற்ற பாடல் காட்சி! நானூறு துணை நடிகர்கள், முன்னூறு கிராமியக் கலைஞர்கள், மொத்தமாக இவர்களை ஒன்று சேர்ப்பதே இமாலய சாதனை. ஒன்று சேர்த்ததுடன் ஒரு பாடலையும் எடுத்திருக்கிறார் இளவேனில், உளியின் ஓசை படத்தின் இயக்குனர். கோயில் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைக்க ராஜராஜசோழன் வருவது போலவும், அவரை சோழ குடிகள் பாடல் இசைத்து வரவேற்பது போலவும் காட்சி. நானூறு துணை நடிகர்களுடன் மதுரை பக்கமிருந்து முன்னூறு கிராமியக் கலைஞர்களையும் சென்னை ஃபிலிம் சிட்டியில் இதற்காக ஒன்றிணைத்திருக்கிறார்கள். கலா மாஸ்டர் நடனம் அமைக்க, பாரதிராஜாவின் ஆஸ்தான கேமராமேன் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய பாடலை படமாக்கினார் இளவேனில். பாடலின் தொகையறாவை முதல்வர் கருணாநிதி எழுதியிருக்கிறார்…
-
- 2 replies
- 1.5k views
-
-
இயக்குநர் ராஜகுமாரனின் தாய், தேவயானி யின் மாமியார் கடிதம் மகனே ராஜகுமாரா! நீ நல்லா இருக்கியாப்பா? எத்தனை வருஷமாச்சு உன்னைப் பார்த்து! அம்மா, அம்மான்னு பாசமா இருப்பியே, இப்ப உன் குரலைக்கூட கேக்க முடியலையே! உனக்கு இரண்டாவதா பெண் குழந்தை பொறந்திருக்குதாமே! அந்த விவரம் கூட இப்பதான் தெரிந்தது! விவரம் தெரிஞ்சதும் பாசத்தோடு போன் பண்ணினேன். ஆனால் யாரோ மலையாளத்தில் இது மருந்துக் கடை, ராஜகுமாரன் வீடில்லைன்னுட்டாங்க. ஏம்ப்பா என்கூட பேசமாட்டியா? உனக்குப் பொறந்த இரண்டு பெண் குழந்தைகளையும் என் கண்ணுலயாவது காட்டக் கூடாதா? பேத்திகளைப் பாக்கணும்னு எனக்கும் ஆசை இருக்காதா? இன்னைக்கு யார் யாரோ புதுசு புதுசா சொந்தம் கொண்டாடிக்கிட்டு உன்னத் தேடி வரலாம். ஆனா வடை, போண்டா, முறுக…
-
- 1 reply
- 1.1k views
-
-
வெள்ளித்திரை திரைப்படத்தை பார்த்தவர்களின் விமர்சனத்தை எதிர்பர்கின்றேன் நன்றி ராஜன் (நந்து)
-
- 0 replies
- 1k views
-
-
எதிர்பாராத திசையிலிருந்து பாய்ந்திருக்கும் ஏவுகணையால் கோலிவுட், டாலிவுட் என்று தென்னிந்திய சினிமா உலகம் விக்கித்து நிற்கிறது. தென்னிந்திய நடிக, நடிகைகள் 200 பேருக்கு அமெரிக்காவுக்கு வர நிரந்தரத் தடை விதித்திருக்கிறது அமெரிக்க அரசு. இதற்குக் காரணம் கவர்ச்சி நடிகை ஃப்ளோரா..! மும்பைப் பெண்ணான ஃப்ளோரா மாடல் அழகியாக இருந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 'கஜேந்திரா', 'குஸ்தி' ஆகிய படங்களில் நடித்திருப்பவர். தெலுங்கு சூப்பர் டூப்பர் ஹிட் ஆன 'நரசிம்ம நாயுடு' படத்தில் சுப்ரீம் ஸ்டார் பாலகிருஷ்ணாவுக்கு இவர்தான் ஜோடி. நாயகி வாய்ப்புகள் குறைந்து சிங்கிள் பாட்டுக்கும் கலை நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சிக் காட்டி ஆட ஆரம்பித்தார்.…
-
- 4 replies
- 2k views
-
-
இசையுடன் ஸ்காலர்ஷிப்பும் தருகிறார் ரஹ்மான் -சென்னையில் ஒரு (இசை)மழைக்காலம்! இசை உலகத்திற்கு இயற்கை தந்த பரிசாகவே கருதப்படுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். உலகம் முழுக்க கிளை பரப்பியிருந்தாலும், தனது வேர்களை தமிழ்நாட்டில் பரவ விடுவதில் சந்தோஷம் காண்பவர் அவர். அதன் இன்னொரு வடிவமாக ஒரு மாபெரும் இசைப்பள்ளியை சென்னையில் நிறுவியிருக்கிறார் ரஹ்மான். இதுபற்றி பகிர்ந்து கொள்ள பத்திரிகையாளர்களை சந்தித்தார். கே.எம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த பள்ளி துவங்கும் முன்பாகவே 150 மாணவர்கள் சேர்ந்துவிட்டார்களாம். அதென்ன கே.எம்? இதற்கு அர்த்தம் இல்லை. ஸ்பிரிச்சுவலா இப்படி ஒரு பெயரை வைத்திருக்கிறேன் என்கிறார் புன்முறுவலோடு. முழுக்க முழுக்க இசையின் மேலுள்ள காதலாலும், அன்பினாலும்தான் இந…
-
- 0 replies
- 719 views
-
-
சினி மினி கிசு கிசு * குற்றாலத்தில் குளிக்க மினரல் வாட்டர் கேட்ட நடிகையின் கையில் தற்போது எந்த படமும் இல்லை. இதனால் இளம் நடிகர்களுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பி வாய்ப்பு கேட்டு வருகிறார். இதற்கு ஆர்ய நடிகரிடம் இருந்து மட்டும் ரிப்ளை வந்ததாம். * வம்பு நடிகருடன் காதல் வயப்பட்ட நயனம் இப்போதெல்லாம் நேரம் கிடைக்கும்போது கோவிலுக்கு சென்று வருகிறார். தற்போது அவர் நடித்து வரும் மோகினி பட சூட்டிங் அல்வா பேமஸ் ஊர்ல நடந்தது. படப்பிடிப்பு இடைவேளையில் அம்மணி அந்த ஊர் பிரபல கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுள்ளார். அந்த படத்தோட படப்பிடிப்பு நிறைவு நாளில் படத்தில் வேலை செய்த எல்லோருக்கும் தலா ஐயாயிரம் ரூபாய் பணம் வழங்கி விருந்து படைத்திருக்கிறார் புன்னியத்தை தேடியிருக்கிற…
-
- 2 replies
- 2.2k views
-
-
தனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் எழுத்தாளரை, அடியாட்களுடன் வந்து மிரட்டியதாக நடிகர் விவேக் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சினிமாவில் தான் நான் காமெடியன் நிஜத்தில் வில்லன் என்று மிரட்டல் வசனம் பேசி, வீட்டை காலி செய்யச் சொல்லி, ரகளையில் ஈடுபடுகிறார். எனவே, விவேக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நடிகர் விவேக்குக்கு சொந்தமான அப்பார்ட்மென்ட் வீடு சென்னை கே.கே., நகரில் உள்ளது. அந்த வீட்டில் சுப்ரஜா என்ற எழுத்தாளர் வாடகைக்கு இருக்கிறார். 2005ம் ஆண்டு மே மாதம் முதல் ஏழாயிரம் ரூபாய் வாடகை செலுத்தி வருகிறார். இவர் கே.கே., நகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:என் வீட்டின் உரிமையாளர் காமெடி…
-
- 0 replies
- 997 views
-
-
ஒருதலை ராகம் என்ற படத்தின் மூலம் புதிய மாற்றத்தையே தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியவர் சகலகலா வல்லவரான டி.ராஜேந்தர். பருத்தி வீரன் படத்தைப் பார்த்த பிறகு, இனி நல்ல படங்களை மட்டுமே தரவேண்டும் என்ற உணர்வு தனக்கு ஏற்பட்டதாக வெளிப்படையாகத் தெரிவித்தார் ராஜேந்தர். இதன் விளைவு, பிரமாண்ட செட், அடுக்குமொழி வசனங்கள், ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் எம்பிக் குதிக்கும் சண்டைகள் எதுவும் இல்லாத இயல்பான சினிமா ஒன்றை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். அந்தப் படத்துக்கு ஒருதலைக் காதல் என்று தலைப்பும் வைத்துள்ளாராரம். இதுகுறித்து சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ராஜேந்தர் கூறியதாவது: லட்சுமி மூவி மேக்கர்ஸ், சிம்பு சினி ஆர்ட்ஸுடன் இணைந்து புதிய படம் தயாரிக்கவுள்ளது. `ஒ…
-
- 0 replies
- 784 views
-
-
மேலும் புதிய படங்கள்நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. அவர் கொலைதான் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று சில்க் ஸ்மிதாவின் முதல் படத்தையும், கடைசிப் படத்தையும் இயக்கியவரான திருப்பதி ராஜா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதா என்ற மந்திரப் பெயர் ஏற்படுத்திய மாயாஜாலம் இன்றளவும் கூட சிலாகித்துப் பேசப்படுகிறது. அவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப இன்னும் யாரும் வரவிலலை என்பது திரையுலகின் தீர்ப்பு. மறக்க முடியாத பல படங்களிலும், கிளாமர் வேடங்களிலும், பாடல் காட்சிகளிலும், நடனங்களிலும் கலக்கியவர் சில்க். பத்து ஆண்டுகளுக்கு முன்பு திடீரென ஒரு நாள் தூக்கில் தொங்கினார் சில்க். ரசிகர்களின் மனதில் சோகம் தங்கியது, திரையுலகம் இனி இப்படி ஒரு நடிகையை …
-
- 3 replies
- 5.6k views
-
-
நடிகை புளோராவைப் போல விசா மோசடியில் ஈடுபட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த 200 நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலகினர் நிரந்தரமாக அமெரிக்கா செல்ல அந்த நாட்டுத் தூதரகம் தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பணம் பெற்றுக் கொண்டு பெண் ஒருவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக நடிகை புளோரா நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதேபோல ஏகப்பட்ட நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலகினர் பலரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அமெரிக்காவுக்கு அனுப்பிய விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த இப்படிப்பட்ட 200 பேர் நிரந்தரமாக அமெரிக்கா செல்ல அந்த நாட்டு அரசு அதிரடித் தடை வித…
-
- 1 reply
- 950 views
-
-
படங்களில் வில்லன் எவ்வளவு கெட்டவனாக நடித்தாலும் நமக்கு சில வில்லன்களை அவர்களின் நடிப்புக்காக பிடிக்கும். அவ்வாறு உங்களுக்கு பிடித்த வில்லன் நடிகர்களை இங்கு பகிர்ந்துக்கொள்ளுங்கள் எனக்கு நம்பியார் ஐ வில்லனாக பிடிக்கும். நிஜவாழ்க்கையிலும் அவர் மிக நல்லவர் என்று கேள்வி பட்டிருக்கிறேன்.அத்தோடு பிரகாஸ்ராஜையும் பிடிக்கும். இதோ சில வில்லன்கள். என் நினைவுக்கு எட்டியவரையில்: பி.எஸ்.வீரப்பா எம்.என்.நம்பியார் எம்.ஆர்.ராதா அசோகன் ஆர்.எஸ்.மனோகர் பாலாஜி ஜஸ்டின் கே.கண்ணன் (பழைய) சிறிகாந் எம்.ஆர்.ஆர்.வாசு ராதாரவி செந்தாமரை ரகுவரன் ஆனந்தராஜ் நாசர் பொன்னம்பலம் 'மகாநதி'சங்கர் பிரகாஸ்ராஜ்
-
- 23 replies
- 3.5k views
-
-
தமிழ் திரையுலகின் பழம்பெரும் வில்லன் நடிகரான எம்.என்.நம்பியார் 91 வயதைத் தொட்டுள்ளார். வில்லன் நடிப்பு என்றால் சட்டென்று நினைவுக்கு வருபவர் நம்பியார். வில்லத்தனமான சிரிப்பு, கனல் பறக்கும் வசனங்கள், இடி முழக்கமிடும் அவரது குரல், கட்டுமஸ்தான உடல் கட்டு, மின்னலென போடும் சண்டைகள், நிஜமாகவே மோசமான ஆளாக இருப்பாரோ என்று எண்ண வைக்கும் தத்ரூபமான நடிப்பு ஆகியவற்றால் தமிழ்த் திரையுலக ஹீரோக்கள் பலரையும் பல காலத்திற்கு 'நடுங்க' வைத்தவர் நம்பியார். எத்தனையோ ஹீரோக்களுக்கு வில்லனாக நம்பியார் நடித்திருந்தாலும், அவரும், எம்.ஜி.ஆரும் சேர்ந்தால் அதன் ஸ்டைலே தனி. இருவரும் பேசும் வசனங்களிலும், சண்டைக் காட்சிகளிலும் பொறி பறக்கும். இருவரும் இணைந்து நடித்த அத்தனை படங்களுமே சூப்பர…
-
- 7 replies
- 2.6k views
-