வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
நடிகர்-நடிகைகளின் முகப்பு படங்களை வைத்து அவதூறு பரப்புவதா?: சுருதிஹாசன் கண்டனம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் தங்கள் படங்களுக்கு பதிலாக நடிகர்-நடிகைகளை முகப்பு படங்களாக வைத்து அவதூறு பரப்பும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று நடிகை சுருதிஹாசன் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:- “நடிகர்-நடிகைகளின் பின்புலங்கள், அவர்கள் நடித்துள்ள படங்கள், அவர்களின் திறமைகள் போன்ற எதுவும் தெரியாமலேயே சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். அவதூற…
-
- 0 replies
- 226 views
-
-
ஆஸ்கர் விருதுகள் பலவற்றை வென்ற ‘அனோரா’ 2024ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இது 97ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்றவர்களின் முழு பட்டியல்: சிறந்த இயக்குநர்: ஷான் பேகர் (அனோரா) சிறந்த திரைப்படம்: அனோரா சிறந்த நடிகை: மிக்கி மேடிசன் (அனோரா) சிறந்த நடிகர்: ஏட்ரியன் ப்ராடி ( தி ப்ரூட்டலிஸ்ட்) சிறந்த உறுதுணை நடிகை: ஸோயி சல்டானா (எமிலியா பெரேஸ்) சிறந்த அனிமேஷன் திரைப்படம்: ஃப்ளோ சிறந்த தழுவல் திரைக்கதை: கான்கிளேவ் சிறந்த அசல் திரைக்கதை: அனோரா சிறந்த ஆடை வடிவமைப்பு: விக்கெட் சிறந்த ஆவணப்படம்: நோ அதர் லேண்ட் சிறந்த ஒளிப்பதிவு: தி ப்ரூட்டலிஸ்ட் சிறந்த ஆவணக் குறும்படம்…
-
- 2 replies
- 226 views
- 1 follower
-
-
மான நஷ்ட ஈடு கோரி மன்சூர் அலிகான் வழக்கு நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு மூவரும் தலா ஒரு கோடி ரூபாய் வீதம் ரூ.3 கோடி வழங்க உத்தரவிட மனுவில் கோரிக்கை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்து சர்ச்சையை எழுப்பிய நிலையில் குஷ்பு, சிரஞ்சீவி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தன மன்சூர் அலிகான் தாக்கல் செய்த வழக்கு வரும் திங்கள்கிழமை நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணை… thanthi tv https://m.facebook.com/story.php?story_fbid=pfbid035jiByv1c7NswuBpDn9Jb2zwdgz3SgqHHLsLDNzrAkUi3Zc9hMHfEudhMPC5knWVSl&id=100080946342364T
-
- 0 replies
- 225 views
-
-
110 கோடிக்கு விலை போனது '2.0' தொலைக்காட்சி உரிமை கோப்பு படம் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் '2.0' தொலைக்காட்சி உரிமம் 110 கோடிக்கு விலை பெற்றுத் தந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் ரூ.400 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது பிரதான காட்சிகள் அனைத்துமே படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டது. இன்னும் ஒரே ஒரு பாடலும், …
-
- 0 replies
- 224 views
-
-
ஆஸ்கர் விருதுகள் இறுதிப் பரிந்துரைப் பட்டியல் இதோ! - முழு விவரம் ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப் பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. Photo: Twitter/TheAcademy கிறிஸ்டோபர் நோலனின் 'டன்கிர்க்', கில்லெர்மோ டெல் டோரோவின் 'ஷேப் ஆஃப் வாட்டர்', டென்னிஸின் 'பிளேட் ரன்னர் 2049' ஆகிய படங்கள் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதில், 'ஷேப் ஆஃப் வாட்டர்' திரைப்படம் அதிகபட்சமாக 13 பிரிவுகளின் கீழ் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. லா லா லாண்டு (2016), டைட்டானிக் (1997), ஆல் அபவுட் ஈவ் (1950) 14 முறை நாமினேட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. `Mudbound’ என்னும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் படத்துக்காக முதல் ம…
-
- 0 replies
- 224 views
-
-
முதல் பார்வை | பன்னிக்குட்டி - ஒரு ‘டீசன்ட்’டான நகைச்சுவைப் படைப்பு! பன்னிக்குட்டியை மையமாக வைத்து நிகழும் சம்பவங்களை நகைச்சுவையாக சொல்ல முயன்றிருக்கும் படைப்பு இந்தப் படம். உத்ராவதிக்கு (கருணாகரன்) வாழ்க்கையில் எல்லாமே பிரச்சினைதான். தனது தங்கை நிலாவதி (ஷாதிகா) கணவருடன் சண்டையிட்டு தாய்வீட்டிலேயே தங்கிவிடுகிறார். அந்த சோகத்தில் அப்பா பெரிய கருப்பு (டிபி கஜேந்திரன்) எப்போதும் குடித்துக் குடித்து மதுவுக்கு அடிமையாகவிடுகிறார். தவிர, கருணாகரனுக்கு காதல் கைகூடவில்லை என்ற விரக்தி ஒருபுறம். பிரச்சினைகள் சூழ்ந்த இந்த வாழ்க்கையில் நம்பிக்கையிழந்து தற்கொலைக்கு முயல்கிறார். அதனைப் பார்த்த சிலர் அவரைக் காப்பாற்றி, பிரச்சினைகளுக்கு …
-
- 0 replies
- 223 views
-
-
அற்புதமான நடிப்பால் மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் – ரஜினியின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! அற்புதமான நடிப்பால் மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் என நடிகர் ரஜினி காந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டும் வழக்கம் போல ரஜினி தனது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதற்கமைய பிரதமர் நரேந்திர மோடியும் ரஜினிக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ருவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து…
-
- 0 replies
- 223 views
-
-
மூளையில் ரத்தக்கசிவு: லண்டன் மருத்துவமனையில் பாம்பே ஜெயஸ்ரீ JegadeeshMar 24, 2023 18:26PM பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் இன்று (மார்ச் 24 ) அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார் பாம்பே ஜெயஸ்ரீ. தமிழில் இவர் பாடிய ‘வசீகரா’, ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’, ‘யாரோ மனதிலே’ உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் ரசிகர்களின் பேவரைட் ப்ளே லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்திற்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அங்கு எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம்ஏற்பட்டு ச…
-
- 0 replies
- 221 views
-
-
Published:Today at 9 AMUpdated:Today at 9 AM சாவின் விளிம்பிலிருந்து உயிர்பிழைத்த இருவரின் பயணமே இந்த 'மின்மினி'. 2016-ம் ஆண்டு, நிகழ்காலம் என இரண்டு அத்தியாயங்களாகப் பிரிகிறது கதை. முதல் அத்தியாயம் பாரி (கௌரவ் காளை), சபரி (பிரவீன் கிஷோர்), பிரவீனா (எஸ்தர் அனில்) ஆகியோரின் பள்ளிப் பருவத்தைப் பேசுகிறது. ஒன்றாகப் படிக்கும் பாரி, சபரி இருவருக்கும் இருக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டு, அது நட்பாகத் துளிர்க்கும் சமயத்தில் எதிர்பாராத விபத்து ஒன்று நடந்துவிடுகிறது. இது சபரியின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது. சபரியை மீட்டெடுக்கப் புதிதாக உள்ளே நுழையும் நட்பான பிரவீனா என்ன செய்தார், லடாக்கில் நிகழும் இரண்டாவது அத…
-
- 0 replies
- 221 views
-
-
நான் ஒரு போக்கை கவனிக்கிறேன் - ஒரு படம் திரையரங்கில் வெளியாகும்போது ஐயோ அம்மா என்று பாராட்டித் தள்ளுகிறார்கள். அதுவே ஓடிடியில் வந்ததும் பார்த்துவிட்டு அமைதியாக நிறைகுறைகளை கவனித்து அந்தளவுக்கு ஒண்ணும் நல்லா இல்ல என்று எழுதுகிறார்கள். காதலிக்கும்போது ஒருவிதமாகவும் கல்யாணத்திற்குப் பிறகு இன்னொருவிதமாகவும் ஒரு பெண் தெரிவதைப்போல இது இருக்கிறது. பக்கத்தில் வந்ததும் அடச்சே என்றாகிறது. எனக்குத் தெரிந்து விதிவிலக்காக இது நடக்காதது "சார்ப்பட்டா பரம்பரைக்கு' மட்டும்தான். இந்த திரையரங்க வெளியீட்டின்போது ரத்தக்கண்ணீர் வடிப்பவர்கள், வைரல் ஆகிறவர்கள், விழுந்துவிழுந்து பேட்டியெடுக்கும் விகடன், கலாட்டா குழுவினர் ஓடிடியை பொருட்படுத்தாதது காரணமா? பெருங்கூட்டத்தின் பகுதிய…
-
- 1 reply
- 220 views
- 1 follower
-
-
பேட்மேன் தொடரில் பிரபலமான ஆடம் வெஸ்ட் உயிரிழந்தார் 1960களில் பேட்மேன் தொலைகாட்சி தொடரில் நடித்து பிரபலமான ஆடம் வெஸ்ட் உயிரிழந்தார். 88 வயதான ஆடம் வெஸ்ட் இரத்த புற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ்: ஏழு தலைமுறை நடிகரும் பேட்மேன் தொலைகாட்சி தொடரில் பிரபலமானவருமான ஆடம் வெஸ்ட் இரத்த புற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்டு தனது 88 வயதில் உயிரிழந்தார். இத்தகவலை ஆடம் வெஸ்ட் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவரது உறவினர்கள் பதிவிட்டுள்ளனர். 1966-இல் படமாக்கப்பட்ட தொலைகாட்சி தொடரில் பேட்மே…
-
- 0 replies
- 219 views
-
-
செயற்கை நுண்ணறிவு: பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உயிர் கொடுத்ததன் ரகசியம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இனிமேல் உங்கள் விருப்பமான பாடகர்களை, அவர்கள் மறைந்த பின்னரும் உயிர்ப்பிக்க முடியும் என்றால் அதை நம்ப முடிகிறதா? புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதைத் தனது சிறப்புகளில் ஒன்றாகக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்போது இறந்த பாடகர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் உயிர் கொடுப்பதைச் செய்து காட்டியுள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர் உருவாக்கியுள்ள பாடல், …
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
படுக்கைக்கு வராவிட்டால் படத்தில் இருந்து நீக்குகிறார்கள்: ராய் லட்சுமி பகீர் தகவல். வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் உள்ளது என்று நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார். ராய் லட்சுமிக்கு கோலிவுட்டில் மார்க்கெட் டல்லடித்துள்ளது. இந்நிலையில் அவர் நடித்துள்ள ஜூலி 2 பாலிவுட் படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளார். திரையுலகம் பற்றியும், வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றியும் அவர் பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,அனைத்து துறைகளிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமானால் எனக்கு அந்த பிரச்சனை ஏற்படவே இல்லை.சினிமாவுக்கு வரும் புதுமுகங்கள், முன்னேறத் துடிக்கும் நடிகைகளை தயாரிப்பாளர்க…
-
- 0 replies
- 219 views
-
-
பூட்டப்பட்ட கழுத்துச் சங்கிலியோடு ஒரு பூர்வகுடியின மனிதன் நடத்திச் செல்லப்படும் The Tracker எனும் ஆஸ்திரேலிய நாட்டுத் திரைப்படத்தின் ஆரம்பமே நம்மை அச்சுறுத்துகிறது. இந்த முதல் காட்சி இது ஒரு மாறுபட்ட சினிமா என்பதை நமக்குக் காட்டிவிடுகிறது. ஆஸ்திரேலிய பாலைவன பொட்டல்காடுதான் படத்தின் களம். ஏகாதிபத்திய காகசிய (whites) இனத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் மூவர் ஆளுக்கொரு குதிரையில் வருகின்றனர். முதல் குதிரையில் வரும் போலீஸ் உயரதிகாரியின் கையில் பூர்வகுடி வழிகாட்டியின் கழுத்தில் கட்டப்பட்ட சங்கிலியின் மறுமுனை. உயர் போலீஸ் அதிகாரி அடிக்கடி துப்பாக்கியெடுத்து அவனை உருட்டி மிரட்டுகிறார். அவருக்குப் பின்னால் இரண்டு குதிரைகளிலும் இரண்டு இளம் போலீஸ்காரர்கள். வழிகாட்டிச் செல்லும் பூ…
-
- 0 replies
- 218 views
-
-
லோகேஷ் கனகராஜ்: திரையரங்க அனுபவத்தை மீட்டெடுத்தவர் பட மூலாதாரம்,LOKESHKANAGARAJ கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மிகப் பெரிய வசூல் வேட்டையை நடத்திய விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு, தற்போது லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். மிகக் குறைவான திரைப்படங்களையே இயக்கியிருந்தாலும் அவர் லோகேஷ் கனகராஜ் தமிழ்த் திரையுலகில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப் பெரியது. 2017ஆம் ஆண்டில் சந்தீப் கிஷனும் ஸ்ரீயும் நடித்து மாநகரம் என்ற படம் வெளியானபோது, முதல் சில நாட்களுக்கு அந்தப் படத்தை யாரும் பெரிதாக…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
இதற்கு மேலும் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்க மறுத்தால், இன்னும் பல பில்லியன் இழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதால் “மோஷன் பிக்சர் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின் கூட்டமைப்பு” தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கியுள்ளது. உலகின் பழமையான திரைத்துறைகளில் ஒன்றான ஹாலிவுட் திரைத்துறைக்கு அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இன்றளவும் ஆண்டுக்கு 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புமிக்க, உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு சந்தையாக ஹாலிவுட் திரைத்துறை திகழ்கிறது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு “ரைட்டர்ஸ் கில்ட் ஆப் அமெரிக்கா” (Writers Guild of America) என்ற அமெரிக்க எழுத்தாளர்கள் சங்கம் முன்னெடுத்த போராட்டத்தினால் …
-
- 1 reply
- 217 views
- 1 follower
-
-
காவல்துறை பயிற்சிக்கூடத்தில் நடக்கும் அடக்குமுறைகளையும் அதைத் தொடர்ந்து நாயகனுக்கு நடக்கும் சிக்கல்களையும் பேசுகிறது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் 'டாணாக்காரன்'. 90களின் இறுதியில் காவல்துறை பயிற்சிக்குச் செல்லும் இளைஞர்களுடன் 80களில் இருந்து ஒரு குழுவும் பயிற்சிக்கு வருகிறது. வெவ்வேறு ஸ்குவாட்களாகப் பயிற்சிக்கு வந்தவர்கள் பிரிக்கப்பட, அறிவு இருக்கும் ஸ்குவாட் எப்போதும் கடுமையாக நடந்துகொள்ளும் காவல்துறை அதிகாரி ஈஸ்வரமூர்த்தியின் கீழ் வருகிறது. மிகவும் கண்டிப்பான அவருக்கு தன் குழுவில் இருக்கும் வயதானவர்களையும் பிடிக்கவில்லை, அவர்களுக்கு ஆதரவாக அறத்தின் பக்கம் நிற்கும் அறிவையும் பிடிக்கவில்லை. சின்ன சின்ன பிரச்னைகளும் ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன. மரணங்கள் …
-
- 0 replies
- 216 views
-
-
கோலாகலமாக துவங்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழா! Dec 15, 2022 08:06AM IST ஷேர் செய்ய : சென்னை சர்வதேச திரைப்பட திருவிழா இன்று (டிசம்பர் 15) முதல் துவங்குகிறது. 2003-ஆம் ஆண்டு முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 20-வது சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திரைப்பட விழாவில் 51 நாடுகளிலிருந்து 102 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. தமிழில் 12 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆதார், கார்கி, பபூன், , இரவின் நிழல், கசட தபற, மாமனிதன், நட்சத்திரம் நகர்கிறது, ஓ2, யுத்த காண்டம், கடைசி விவசாயி, கோட், பிகினிங் உள்ளிட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதிலிர…
-
- 0 replies
- 216 views
-
-
பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் (63). இவர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலக அளவில் சூப்பர் ஹிட்டான டைட்டானிக் படத்தைத் தயாரித்தார். இந்தப் படத்துக்காக ஆஸ்கர் விருதை வென்றுள்ள இவர், அடுத்து அவதார் (2009), அவதார்: தி வே ஆஃப் வாட்டர் (2022) படங்களைத் தயாரித்தார். இதுவும் உலக அளவில்வெற்றி பெற்றது. இந்தப் படங்களைத் தவிர, கேம்பஸ் மேன், சோலாரிஸ், அலிடா: பேட்டல் ஏஞ்சல் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக மகன் ஜேமி தெரிவித்துள்ளார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த ஜான் …
-
- 0 replies
- 214 views
-
-
மார்வெல், டிசி என ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களை பார்த்து, 'நம்முடைய ஊரில் இதுபோன்ற சூப்பர் ஹீரோ படங்கள் எப்போது வரும்?' என ஏங்கிய சினிமா ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்க வந்துள்ளார் ‘மின்னல் முரளி’. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி களத்தில் ரிலீஸாகியுள்ள இந்த மலையாள சூப்பர் ஹீரோ படம் குறித்த அலசல் இது. பொதுவாக ஹாலிவுட்டில் வெளியாகும் சூப்பர் ஹீரோ படங்கள் உலகமெங்கும் பிரபலமாகி சக்கை போடு போடுவதற்கும், அதே இந்தியாவில் வெளியாகும் சூப்பர் ஹீரோ படங்கள் சொல்லிக் கொள்ளுமளவுக்கு எடுபடாமல் போவதற்கும் காரணங்கள் உண்டு. அமெரிக்காவில் சூப்பர் ஹீரோ காமிக்ஸ் என்பது அந்நாட்டு மக்களின் ரத்தத்தில் ஊறிய ஒரு விஷயம். ஆண்டாண்டு காலமாக அவர்கள் காமிக்ஸ் வடிவில் பார்த்து, படித்து ரசித்த கதாபாத்திரங்கள் அவை. அது…
-
- 0 replies
- 213 views
-
-
“ஆரம்ப நாட்களில் இசைக் கச்சேரிகள் என்றாலே நடுங்குவேன்!” மனம் திறக்கும் ரஹ்மான் #OneHeart #ARRahman ``ஆரம்ப நாட்களில் இசை மேடைகள், இசைக்கச்சேரிகள் என்றாலே நடுங்குவேன். காரணம் என்ன தெரியுமா? பாடல்களுக்காக பல மாதங்களாக கஷ்டப்பட்டு நான் உருவாக்கிய நுட்பமான சத்தங்கள் ஆடியோவில் கேட்ட தரத்தில் மேடைகளில் இருக்காமல் வேறுமாதிரி ஒலித்து மொத்தப் பாடலையும் கெடுத்துவிடும். இதனாலேயே பல நாட்கள் தூக்கமிழந்து தவித்திருக்கிறேன்'' - ஏ.ஆர்.ரஹ்மான் `பளிச்' புன்னகையில் தியேட்டரின் ஸ்கிரீனில் தோன்றி கண்கள் விரிய இப்படி ஓப்பனாகப் பேசும்போது நம்மால் ரசிக்காமல் இருக்க முடியுமா? One Heart-ஐ பார்க்கையில் நமக்கு சிலிர்ப்பாக இருக்கிறது. திரை இ…
-
- 0 replies
- 211 views
-
-
2022 தமிழ் சினிமா படங்களின் வசூலும் சாதனையும்! KaviDec 31, 2022 19:31PM ஒவ்வொரு ஆண்டின் கடைசி நாளில் திரையுலகினர் புதிய வருடம் வெற்றிக்கான ஆண்டாக இருக்க வேண்டும் என ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும், சபதங்களையும் மேற்கொள்வது வழக்கம். ஆனால் அதுபோன்ற வெற்றிகளும், சபதங்களை நிறைவேற்றியதாகவோ கடந்தகால வரலாறுகள் இல்லை என்பதுதான் உண்மை. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தமிழ்திரைப்படங்களின் வியாபார எல்லை விரிவடைந்திருக்கிறது. அதனால் படங்களின் மூலம் வருவாய் அதிகரித்திருக்கிறது. அப்படி கிடைக்கும் அதிகப்படியான வருமானம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு இவர்களுக்கு கிடைப்பதற்கு பதிலாக கதாநாயகன், கதாநாயகிகள், இயக்குநர்களுக்கு அதிகரிக்கப்பட்டு வரும் …
-
- 0 replies
- 210 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 6 ஜனவரி 2024, 07:21 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் "என் வாழ்வில் எனக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று வெறுப்பு மற்றொன்று அன்பு. நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன். அதனால்தான் நான் இங்கு நிற்கிறேன்," என்று தனது இசைப் பயணம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய வார்த்தைகள் இவை. கடந்த 1992ஆம் ஆண்டு, தனது முதல் திரைப்படமான 'ரோஜா' மூலம் இந்திய சினிமாவின் இசைத் துறையையே புரட்டிப் போட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான் எனச் சொன்னால் அது மிகையாகாது. இன்றுவரை தான் இசையமைக்கும் திரைப்படங்களில் ஏதேனும் ஒரு வகையான புதுமையைச் செய்து வரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று 56ஆவது பிறந்த நாள். இரவு நேரங்களில் இசையமைக்கும் வ…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
கண்ணீரும் இசையும் கலந்த சினிமா காவியங்கள்: ஏ. பீம்சிங்கும் தமிழ்சினிமாவின் மெலொடிராமாவின் ஆன்மாவும் சொர்ணவேல் ஜூன் 22, 2025 மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலையன்னமே நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம்தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே யானைப் படை கொண்டு சேனை பல வென்று ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா தங்கக் கடிகாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார் சிறகில் எனை மூடி …
-
-
- 1 reply
- 210 views
-
-
விமர்சனம் : காந்தி கண்ணாடி 6 Sep 2025, 12:51 PM ஹீரோவாக ஜெயித்தாரா கேபிஒய் பாலா? டைட்டிலை பார்த்தவுடனேயே ‘இதென்ன இப்படியிருக்கு’ என்றே பெரும்பாலும் எண்ணத் தோன்றும். கூடவே, இந்த டைட்டிலை வைத்துக்கொண்டு கதையில் என்ன சொல்லிவிட முடியும் என்ற எண்ணமும் எழும். ஆனால், அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதையே தங்களது பலமாக எண்ணிக் களமிறங்கியிருக்கிறது ‘காந்தி கண்ணாடி’ படக்குழு. ரணம் பட இயக்குனர் ஷெரீஃப் இயக்கியுள்ள இப்படத்தில் ‘கலக்கப் போவது யாரு’ பாலா நாயகனாக நடித்திருக்கிறார். ‘ஃபால்’, ‘நவம்பர் ஸ்டோரி’ ‘ட்ரிபிள்ஸ்’ வெப்சீரிஸ்களில் நடித்த நமீதா கிருஷ்ணமூர்த்தி இதில் நாயகி. இவர்களோடு பாலாஜி சக்திவேல் – அர்ச்சனா இருவரும் ஜோடியாக இதில் தோன்றியிருக்கின்றனர். விவேக் – மெர்வின் இணை இப்படத்தி…
-
-
- 1 reply
- 209 views
-