வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
Published : 08 Feb 2019 17:40 IST Updated : 08 Feb 2019 17:40 IST செளந்தர்யாவின் திருமண அன்பளிப்பாக விதைப்பந்து கொடுத்து விருந்தினர்களை அசத்தியுள்ளார் ரஜினிகாந்த். கிராபிக் டிசைனர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல திறமைகள் கொண்டவர் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா. இவருக்கு வருகிற 10-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. நடிகரும் தொழிலதிபருமான விசாகனைத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் செளந்தர்யா. இதற்காக திருநாவுக்கரசர், கமல்ஹாசன், இளையராஜா என நெருங்கிய நண்பர்களுக்கு கடந்த சில நாட்களாக நேரில் சென்று…
-
- 12 replies
- 1.7k views
-
-
‘தென்றல் வந்து தீண்டும் போது’ பாடலுக்கு இசைஞானி இசையமைக்க வில்லையா? திரைப்படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் நாசர் இயக்குநராக அறிமுகமான முதல் படம் ‘அவதாரம்’. நாடக கலைஞனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதையம்சத்தில் அமைந்திருந்த இந்தப் படம் விமர்சக ரீதியாக பேசப்பட்டது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரேவதி, பார்வை தெரியாதவராக நடித்திருந்தார். இசைஞானி இளையராஜா இசை மற்றும் குரலில், படத்தில் இடம்பெற்ற ‘தென்றல் வந்து தீண்டும் போது’ பாடல் இன்றளவும் எவர்கிரீன் மெலடி பாடலாக பல இடங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடல் குறித்து இளையராஜாவின் இளைய மகன் யுவன் ஷங்கர் …
-
- 0 replies
- 1.1k views
-
-
என்னைப் புரிந்துகொள்ள முடியாது!- நேர்காணல்: இளையராஜா சந்திப்பு: ஜெயந்தன் ‘பாடல்கள் ஒரு கோடி.. எதுவும் புதிதில்லை… ராகங்கள் கோடி… கோடி… அதுவும் புதிதில்லை. எனது ஜீவன் நீதான்.. என்றும் புதிது’ எனத் தனது ரசிகர்களைப் பார்த்து உருகும் ஒப்பற்ற கலைஞர் இசைஞானி இளையராஜா. 75 வயதுக்குரிய முதுமை, தன்னைத் தொட்டுப் பார்க்க அனுமதிக்காத இந்த இளமை ராஜா, இசையுலகின் எட்டாவது சுரம். தலைமுறைகள் கடந்து கணினியில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறையின் ஸ்மார்ட் போனிலும் லேப் டாப்பிலும் குடியிருக்கும் ராகதேவன். அவரது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முன்னெடுக்கும் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியைக் காண உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் காத்திருக…
-
- 0 replies
- 788 views
-
-
திரைப்பார்வை: போதையைத் துரத்தும் காதல்! (சிம்பா - தமிழ்) ரசிகா அவ்வப்போது புதிய முயற்சிகள் தமிழ் சினிமாவில் நடப்பதுண்டு. எதிர்மறை விமர்சனங்கள் வரும் என்று தெரிந்தும் அதற்காக ஓடி ஒளிந்துவிடாமல் ‘சிம்பா’வை துணிந்து முயற்சித்துப் பார்த்திருக்கிறார் அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர். அவர் தந்திருப்பது தமிழ் சினிமாவுக்கான முதல் ‘ஸ்டோனர்’ வகைத் திரைப்படம். கஞ்சா போன்ற புகைக்கும் போதைப்பொருளின் பிடியில் சிக்கி அல்லாடும் மனிதர்களின் மாயத் தோற்றங்கள் நிறைந்த உலகையும் போதை களைந்ததும் விரியும் நிஜவாழ்வில் ஊடாடும் அவர்களது ஏக்கங்கள், துக்கங்கள், இயலாமைகள், கனவுகள், குற்றங்களைச் சித்தரிக்கும் படங்கள் அவை. போதைப் புகையின் மடியில் தன் தனிமையைப் போக்கிக்கொள்ளும் ஒரு பணக்…
-
- 0 replies
- 409 views
-
-
பாலாவின் ‘வர்மா’ கைவிடப்பட்டது! பாலா இயக்கத்தில் உருவான ‘வர்மா’ படத்தைக் கைவிடுவதாக E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கை பாலா ‘வர்மா’ என்ற பெயரில் இயக்கியுள்ளார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா நடித்துள்ளார். படத்தின் பணிகள் நிறைவடைந்து காதலர் தினத்துக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால் விலங்குகள் நல வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெறுவதில் தாமதமானதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது தயாரிப்பு நிறுவனம் படத்தை கைவிடுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கை ‘ஃபர்ஸ்ட் காப்பி’ அடிப்படையில் தயாரித்து கொடுப்பதாகப் ப…
-
- 2 replies
- 930 views
-
-
30 ஆண்டுகளுக்கு பின்னர் தொகுப்பாளர் இன்றி ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா February 7, 2019 30 ஆண்டுகளுக்கு பின்னர் 91-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஹொலிவூட் திரையுலகின் கௌரவம் மிக்க விருதாக கருதப்படும் ஒஸ்கார் விருதானது கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 91-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் 24ம் திகதி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள நிலையில் இம்முறை விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை ஒளிபரப்பும் ‘ஏபிசி’ நிறுவனம் இதனை உறுதிப்படுத்தி…
-
- 1 reply
- 570 views
-
-
தொடர்ந்து கடும் நஷ்டத்தை சந்திக்கும் ரஜினி படங்கள், என்ன தான் தீர்வு? Tony ரஜினிகாந்த் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் சூப்பர் ஸ்டார். இவர் நடிப்பில் ஒரு படம் வருகின்றது என்றால் இந்தியாவே எதிர்ப்பார்க்கும். ரஜினிக்கு சிவாஜி படத்தின் மூலம் வட இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது, ஆனால், கேரளா, ஆந்திராவில் ரஜினிக்கு தமிழகத்தில் எப்படி ஒரு ரசிகர்கள் பலம் உள்ளதோ அதே அளவிற்கு உள்ளது. ஆனால், ரஜினியின் லிங்கா, கோச்சடையான், கபாலி, காலா, 2.0 தற்போது வந்த பேட்ட வரை ஆந்திரா மற்றும் கேரளாவில் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதில் ஒரு சில படங்கள் ட்ரைக்ட் ரிலிஸ் என்றாலும், ரஜினியின் மார்க்கெட் கேரளா மற்று…
-
- 9 replies
- 1.1k views
-
-
சிறப்புப் பார்வை: ‘இளையராஜா 75’ல் ரிலீஸாகாத பின்னணி! -இராமானுஜம் தமிழ் திரையுலகம் சாதனையாளர்களை கௌரவிக்க, தங்கள் துறைக்கு நன்மை செய்தவர்களை பாராட்ட, விழாக்கள் பலவற்றை நடத்தியிருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பாராட்டு விழாக்களை பலமுறை நடத்தியிருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இவர்கள் இருவரும் சம்பளமாக பணம் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இளையராஜாவின் பாராட்டு விழா அப்படிப்பட்டதாக இருக்கவில்லை. 1976 மே 14 அன்று வெளியான அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் மறைந்த தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா, இந்திய சினிமாவில் 42 ஆண்டு காலம் பல மொழ…
-
- 9 replies
- 2.3k views
-
-
Published : 03 Feb 2019 20:32 IST Updated : 03 Feb 2019 20:33 IST இளையராஜா சாரிடம் இருக்கிற கெட்டபழக்கம் என்ன தெரியுமா? என்று இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான் இளையராஜா 75 விழாவில் தெரிவித்தார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், இளையராஜா 75 எனும் பிரமாண்டமான நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான திரையுலகினர், ரசிகர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தவறவிடாதீர் நேற்று 2ம் தேதியும் இன்று 3ம் தேதியும் என இரண்டு நாள் விழா இது. …
-
- 4 replies
- 2.3k views
-
-
பேரன்பு - சினிமா விமர்சனம் 'கற்றது தமிழ்' ராம் இயக்கத்தில், மம்முட்டி கதாநாயகனாக நடித்து வெளிவரும் பேரன்பு திரைப்படம், இயற்கையின் பல குணங்களை விவரிக்கும் தனித்தனி அத்தியாயங்களின் வழியாக கதை சொல்லும் பாணியைக் கடைபிடிக்கிறது. நாம் வாழும் வாழ்க்கையின் உன்னதத்தைப் பற்றிப் பேசுகிற படம். 'நீங்க எவ்வளவு நல்ல ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கீங்கனு நீங்க புரிஞ்சுக்கறதுக்காக என் வாழ்க்கையில நடந்த சில சம்பவங்களத் தேர்ந்தெடுத்து இந்தக் கதைய நான் எழுதறேன்..' என்கிற அமுதவனின் (மம்மூட்டி) குரலுடன் தொடங்கும் படம், இயற்கையை பல அத்தியாயங்களாக பிரித்து பேரன்புமிக்க ஒரு வாழ்வின் தரிசனத்தை பார்வையாளர்களுக்கு தருகிறது. உலகமயமாக்கல் எப்படி தனி மனிதர்களின் வாழ…
-
- 1 reply
- 1.7k views
-
-
விமர்சனம் ; ‘ வந்தா ராஜாவாத்தான் வருவன் ’... அண்டாவுல பால் யாருக்குன்னு தெரியுமா..? பவண் கல்யாண் நடிப்பில் த்ரி விக்ரம் இயக்கியிருந்த தெலுங்குப் படமான ‘அத்தரினிகி டேரடி’ யின் ரிமேக் தான் இந்த ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’. இதெல்லாம் ஒரு கதை. இதை ரீமேக்க பணம் கொடுத்தெல்லாம் வாங்க வேண்டுமா? என்ற கேள்வி படத்தின் முதல் காட்சியில் தொடங்கி இறுதிக்காட்சி வரை உங்கள் மனசாட்சியை உலுக்கிக்கொண்டே இருக்கக்கூடிய ஒரு சப்பைக் கதை. ஒரு சுந்தர்.சி. படத்தில் வழக்கமாக என்னவெல்லாம் இருக்கும் என்று சின்னதாக ஒரு பட்டியல் போட்டுப் பாருங்கள்.. முதலில் கதையில் ஒரு பெருங்கூட்டம் இருக்கும். ஆளாளுக்குக் கூத்தடிப்பார்கள். கதாநாயகிகள் படு செக்ஸியாய் உடை அணிந்திருப்பார்கள்.…
-
- 0 replies
- 728 views
-
-
இளையராஜா 75' நிகழ்ச்சியை தொடக்கி வைக்கிறார் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்.. தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற இருக்கும் இளையராஜா 75 நிகழ்ச்சியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார். இந்த தகவலை விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்த நாள் மற்றும் அவரது வெற்றிகரமான இசை பயணத்தை கொண்டாடும் விதமாக வரும் பிப்ரவரி மாதம் 2ம் மற்றும் 3ம் தேதிகளில் பிரம்மாண்ட திரைக் கொண்டாட்டம் நிறைந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சி இரு தினங்களிலும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் முதல் நாளன்று இசைஞானியின் பாடலுக்கு முன்னணி திரை நட்சத்திர…
-
- 2 replies
- 771 views
-
-
அடுத்த படத்திற்கும் தயாராகுங்க...’ கார்த்திக் சுப்புராஜுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி..! பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜை அழைத்த ரஜினி மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பேட்ட படத்தில் ரஜினையை பார்த்த அத்தனை பேரும் ஆஹா அற்புதம்... ரஜினியின் பழைய துள்ளலை அப்படியே கொண்டு வந்து விட்டார் கார்த்திக் சுப்புராஜ் என்று ரசிகர்கள் கொண்டாடிவிட்டார்கள். அந்த அளவிற்கு 90களில் பார்த்த ரஜினியின், துள்ளலையும் தோற்றத்தையும் மீட்டுக் கொண்டு வந்து இருந்தார் கார்த்திக் சுப்புராஜ். காலா, கபாலியோடு இப்படத்தை இணைத்துப் பேச ஆரம்பித்த ரசிகர்கள், ‘எங்க தலைவரை அசிங்கப்படுத்தின பா.ரஞ்சித் இந்த படத்தை பார்த்தாவது தன்னை திருத்திக்க…
-
- 0 replies
- 587 views
-
-
முதல் பார்வை: அடங்க மறு உதிரன்சென்னை சட்டப்படி தன் கடமையைச் செய்ய முடியாத போலீஸ் அதிகாரி அந்த வேலையைத் தூக்கியெறிந்துவிட்டு குற்றவாளிகளைத் தண்டித்தால் அதுவே 'அடங்க மறு'. சென்னை அண்ணா நகரில் காவல் உதவி ஆய்வாளராக வேலைக்குச் சேர்கிறார் சுபாஷ் (ஜெயம் ரவி). உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில் ஒரு மதுக்கடையை மூடக் கோரி நடைபெறும் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தச் செல்கிறார். ஆனால், எஸ்.ஐ. சுபாஷின் நூதன ஆலோசனையால் மாணவர்கள் மதுக்கடையைச் சூறையாடுகின்றனர். ஓர் இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடக்க, அதை தற்கொலை என்று சொல்லி வழக்கை முடித்து வைக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கருப்பன் (மைம் கோபி) முடிவெடுக்கிறார். சுபாஷ் அதையும் முறியடிக்கிறார். அந்தக் கொலை வழக்கு சம்பந…
-
- 4 replies
- 926 views
-
-
1 மில்லியன்( +) பார்வைகளை கடந்த ‘வாட்ச்மேன்’ படத்தின் ப்ரோமோ பாடல்..! இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் வாட்ச்மேன் படத்தின் ‘டோட்டோ’ பாடல் மிகக் குறுகிய காலத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பாடல் துவங்கிய சில நொடிகளிலேயே நகைச்சுவையும், தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் மற்றும் சாயீஷாவின் துள்ளலான நடனமும் ஈர்க்கிறது. கூடுதலாக, யோகிபாபுவின் வசீகரிக்கும் இருப்பும் பாடலின் வெற்றிக்கு ஒரு காரணியாகியுள்ளது. பெரும்பாலும் எந்த ஒரு பாடலும் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது, ஆனால் இந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும் காரணிகளை கொண்டிருக்கிறது. இது வெறுமனே ய…
-
- 1 reply
- 873 views
-
-
நல்லா பார்த்துக்குங்கோ மக்களே, மேக்கப் இல்லாத கனவுக் கன்னிகளை...
-
- 25 replies
- 4.9k views
-
-
Published : 25 Jan 2019 20:16 IST Updated : 25 Jan 2019 20:16 IST பிரபுதேவாவின் வாழ்வில் சாரா என்ற பெயரில் இருவர் குறுக்கிடுகிறார்கள். சந்தர்ப்ப சூழலால் இருவரையும் காதலிப்பதாகவே பிரபுதேவா கூறுகிறார். இறுதியில் யாரைக் கரம் பிடிக்கிறார் என்பதே 'சார்லி சாப்ளின் - 2'. மேட்ரிமோனியல் இணையதளம் நடத்துகிறார் பிரபுதேவா. 99 திருமணங்களை நடத்திய தன் மகன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற ஏக்கமும் கவலையும் பிரபுதேவாவின் பெற்றோருக்கு ஏற்படுகிறது. இந்த சூழலில் சாராவை (நிக்கி கல்ராணி) பார்க்கிறார். அவரது உதவும் உள்ளத்தால் காதலில் விழுகிறார். ஒரு கட்டத்தில் திருமணத்துக்க…
-
- 0 replies
- 430 views
-
-
நான் அரசியலுக்கு வர மாட்டேன்.. அஜீத் அதிரடி! சென்னை: நான் மிகத் தெளிவாக இருக்கிறேன். சினிமாதான் எனது தொழில் என்பதைப் புரிந்து வைத்துள்ளேன். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று நடிகர் அஜீத் குமார் கூறியுள்ளார். பாஜகவினர் அஜீத்தை வைத்து அரசியல் செய்ய முற்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் அஜீத். மேலும் தனது பெயரையோ அல்லது படத்தையோ எந்த ரசிகரும் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்றும் அதிரடியாக கூறியுள்ளார் அஜீத். நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருப்பவன். என்னுடைய தொழில் நடிப்பு என்பதை நான் தெளிவாக ப…
-
- 2 replies
- 697 views
-
-
ரஜினி அஜித்தின் அதிகாரவர்க்கம்: சிதைக்கப்பட்ட "சிகை" நடிகர் கதிர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது சிகை. இந்த படம் இன்று வெளிவந்துள்ளது என்பதே பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் பேட்ட , விஸ்வாசம் என தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைக்கும் இரு பெரும் ஜாம்பவான்கள் மோதிக்கொண்டுள்ள இந்த பொங்கலில் தெரிந்தே தேவையில்லாமல் வந்து மாட்டிக்கொண்டது சிகை. சினிமாவில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் மக்களிடம் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறுவது உறுதி. அப்படி நல்ல வித்தியாசமான கதையம்சம் கொண்டிருந்தும் அதிகாரவர்க்கத்தால் ஏழை நீதிக்காக வாதாடுவது போன்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது கதிரின் சிகை படத்திற்கு. தியேட்டர் சிக்கல்கள், பட வியாபாரம் என பல விசயங்களை கடந்து படத்தை வாங்கக்கூட…
-
- 4 replies
- 1k views
-
-
மதுரையில் மையம் கொண்ட 'வைகைப்புயல்'... சென்னை திரும்ப தயக்கம். ? மதுரை: படவாய்ப்புகள் இல்லாததால் மதுரையிலேயே தங்கி விட்டாராம் நடிகர் வடிவேலு.இன்றளவும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மிகப்பெரிய ஆயுதமாக இருப்பது வடிவேலுவின் புகைப்படங்கள் மற்றும் டயலாக்குகள்தான். அந்தளவிற்கு அவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம்.தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஆளுமைகளில் அவரும் ஒருவர். ஒரு காலத்தில் இரவு பகல் பாராமல் அவர் நடிக்கும் அளவிற்கு பட வாய்ப்புகள் இருந்தது.இதனால் காமெடி நடிகராக இருந்தவர் இம்சை அரசன் 23ம் புலிகேசி, தெனாலிராமன் உள்ளிட்ட படங்களில் கதையின் நாயகனாக நடித்தார். அப்படங்களும் அவருக்கு வெற்றியையே தந்தது.ஆனால், அதே நிலைமை நீடிக்கவில்லை. அரசியல் காரணம், புதிய …
-
- 2 replies
- 1.5k views
-
-
ரஜினியின் ‘பேட்ட’யில் தெறிக்கும் சாதியம்! - ஜெ.வி.பிரவீன்குமார் இந்திய மனங்களில் இன்று புரையோடிப் போயிருக்கும் சாதிய, மதவாத, பெண்ணடிமைத்தனப் போக்குகளை ஊக்குவித்ததிலும் அந்தக் கொடிய கட்டமைப்பு உடைபடாது காத்ததிலும் வழிவழி வந்த பல புராணங்களுக்கும் இதிகாசங்களுக்கும் பெரும்பங்கு உண்டு. அவற்றின் நீட்சியாகப் பல புராண நாடகங்களும் அதையே வலியுறுத்தின. அவற்றை அடியொற்றி உருவான சினிமா மட்டும் சும்மா இருந்துவிடுமா? சாதி ஆதிக்கத்தை எதிர்க்கும் படங்கள் அரிதினும் அரிதாக மட்டுமே வெளியாகும் சூழலில், சுய சாதியைப் போற்றும், பிற சாதிகளைக் கீழ்மைப்படுத்தும் படங்களைக் கணக்கில்லாமல் வெளியிட்டுத்தள்ளும் வேலையை ஒருபுறம் செவ்வனே செய்துதான் வருகிறது தமிழ் சினிமா. ரஜினிகாந்த் நடிப்பில் அண்…
-
- 10 replies
- 2.6k views
-
-
அழகியல் மீதான வன்முறை – டராண்டினோவின் திரைப்படங்கள் குறித்து ஒரு பார்வை – கோ. கமலக்கண்ணன் January 13, 2019 1 படைப்புதிறனை உளவியல் துறையில் ‘விரிசிந்தனையின் வழியே புதியதாகவும் பயனுள்ளதாகவும் எதையேனும் உருவாக்கும் இயல்பு’ என்று கில்ஃபோர்ட் வரையறுக்கிறார். சினிமாவில் புதியது எப்படி உருவாக்கப்பட முடியும், புதியது என்பது கதைகளின் வழியே, கதை மாந்தர்களின் வழியே, இயக்கத்தைக் கொண்டு உணர்வுகளைக் கடத்துவதன் வழியே, தொழில்நுட்பங்களின் நிரல் நிரை மாற்றங்களைக் கொண்டு உருவாகும் எண்ணிலா பார்வையின் வழியே, நிலங்களின் வழியே என ஈறேயில்லாத வாய்ப்புகளைக் கொண்டு புதுமை செய்ய முடியும். சிறந்த திரைப்படங்களாகக் கருதப்படும் எவற்றிலும் உள்ள அழகியலும் யதார்த்தக் கூறுகளும் கூட ஒரு வித…
-
- 1 reply
- 1.5k views
-
-
இளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள் செ.கார்கி சமூகப் பிரச்சினைகளை நோக்கி இளைஞர்களின் கவனத்தை திருப்ப வேண்டும் என பல முற்போக்கு இயக்கங்கள் பெரும் பிரயத்தனம் செய்துகொண்டு இருக்கின்றன. முழு நேர ஊழியர்களையும், பகுதி நேர ஊழியர்களையும் நியமித்து தொடர்ச்சியாக மாணவர்களை சந்திப்பது அவர்கள் மத்தியில் அரசியல் உரையாடலுக்கான களம் அமைத்துக் கொடுப்பது என தன்னலமற்ற பணியை செய்து வருகின்றனர். ஆனால் எவ்வளவுதான் முற்போக்கு இயக்கங்கள் முயன்றாலும…
-
- 3 replies
- 1.3k views
-
-
வழக்கம் போல நல்ல கதை / திரைக்கதை, சிறந்த நடிப்பு இவற்றை மட்டுமே எதிர்பார்த்து ரஜினி, விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா உள்ளடங்கலான நட்சத்திரங்களின் அணிவகுப்பிலும், பீட்ஸா (Pizza), இறைவி போன்ற வித்தியாசமான திரைப்படங்களை அளித்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் உருவான 'பேட்ட' திரைப்படத்தைக் காணச்சென்றேன். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ரஜினியின் பரபரப்பான, மின்னல் வெட்டினால் போன்ற அறிமுகக் காட்சியுடன் ஆரம்பித்த திரைப்படம், ரஜினியின் வழமையான heroism, style, நகைச்சுவை நிறைந்த கலகலப்பான காட்சிகள், ஆடல் பாடல்களுடன் தொடர்ந்தது. இடைவேளைக்குச் சற்று முன்னான சண்டைக்காட்சி வரை இது தான் கதை என நாம் ஒன்றை ஊகிக்கும்போது, அக்காட்சியில் கதையின் போக்கு இன்னொரு கோணத்தில் பயணிக்க ஆரம்பி…
-
- 0 replies
- 816 views
-
-
நடிகர் ரஜினிகாந்த் நடிகை சிம்ரன் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இசை அனிருத் ரவிச்சந்தர் ஓளிப்பதிவு திரு ஊட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார் பாபி சிம்ஹா. கல்லூரியையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அராத்து பண்ணுகிறார். இந்த கல்லூரியில் தான் சனத் ரெட்டியும், மேகா ஆகாஷும் படிக்கிறார்கள். இந்த நிலையில், அந்த கல்லூரிக்கு வார்டனாக வரும் ரஜினிகாந்த், பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அடக்கி, கல்லூ…
-
- 2 replies
- 1.8k views
-