Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. நடிகரும் கராத்தே நிபுணருமான ஷிஹான் ஹுசைனி காலமானார்! தென்னிந்திய நடிகரும், கராத்தே மற்றும் வில்வித்தை நிபுணருமான ஷிஹான் ஹுசைனி (Shihan Hussaini) இன்று அதிகாலையில் இரத்தப் புற்றுநோயுடன் போராடி காலமானார். அவரது மறைவுச் செய்தியை அவரது குடும்பத்தினர் பேஸ்புக்கில் உறுதிப்படுத்தினர். அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும். பின்னர், அவரது உடல் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹுசைனி தனது சமூக ஊடகப் பக்கங்களில் தொடர்ந்து புதுப்பிப்புகளை வழங்கி தனது புற்றுநோய் பயணத்தை ஆவணப்படுத்தி வந்தார். அவரது பதிவுகளைப் பார்த்த தமிழக அரசு…

  2. Started by nunavilan,

    ஒரு தலை ராகம் .......................... ஒரு மன மாற்றத்திற்காக அறையை இருட்டாக்கி, முறுக்கு டப்பாவை கையில் வைத்துக்கொண்டு, வசதியாக சாய்ந்தபடி, மனதிற்கு பிடித்த படம் யூ ட்யூபில் பார்க்கத் தொடங்கினேன்... 1980 ல் வெளி வந்த டி.ராஜேந்தரின் படம்... கதாநாயகி ரூபா அற்புதமான தேர்வு...மிகக் குறைந்த வசனம்தான் அவருக்கு படம் நெடுகிலும்... பேசமுடியாத வசனங்களை பேசும் கண்களால் அப்படியே நம்முன் கொட்டுகிறார்... அந்த அகன்ற கரிய விழிகள்தான் எத்தனை உணர்வுகளை படம் முழுதும் பேசிக் கொண்டே போகிறது...படம் முழுவதிற்கும் இரு முறை தான் சிரித்திரிப்பார்... அவர் கட்டியிருந்த அத்தனை காட்டன் சேலைகளும் அவ்வளவு அழகு... கதாநாயகன் சங்கர் அந்த காலத்தில் எங்களுக்கெல்லாம் ஹீரோ. இந்தத் திரைப்படம் வெளி வந்த உ…

  3. நடிகை மாலினி பொன்சேகா வைத்தியசாலையில் அனுமதி! பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாலினி பொன்சேகா சில காலமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் நோய் நிலைமை அதிகரித்தமையைத் தொடர்ந்து அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலினி பொன்சேகா இந்திய திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424657

      • Like
      • Haha
    • 17 replies
    • 846 views
  4. இளையராஜாவின் சிம்ஃபொனி வெளியீடு எப்போது? நேரில் கண்டு பரவசமடைந்த ரசிகர்கள் எதிர்பார்ப்பு பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், கார்த்திக் கிருஷ்ணா பதவி, பிபிசி தமிழுக்காக 12 மார்ச் 2025, 04:41 GMT புதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர் தான் உருவாக்கிய சிம்ஃபொனி இசைக் கோர்வையை லண்டனில் அரங்கேற்றிவிட்டு இந்தியா திரும்பியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்கள், பின்னணி இசைக் கோர்வை, 7000க்கும் அதிகமான பாடல்கள் என்று பல சாதனைகளைப் படைத்திருக்கும் இளையராஜா தமிழ் சினிமா மட்டுமல்லாது உலகளவில் மிகப்பெரிய திரை இசை ஆளுமையாகப் பார்க்கப்படுகிறார். வேலியன்ட் (VALIANT) என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த சிம்ஃபொனி, அவரது இசைப் பயணத்தில் மற்றும…

  5. பட மூலாதாரம்,AGS ENTERTAINMENT கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த வாரம் வெளியான 'டிராகன்' திரைப்படத்தின் டிரெய்லர் சமூக ஊடகங்களில் சில விவாதங்களை எழுப்பியுள்ளது. "கல்லூரி செல்லும் நாயகன் என்றாலே அவர் பல அரியர்கள் வைத்திருக்க வேண்டும், குடிக்க வேண்டும், பேராசிரியர்களை மதிக்கக் கூடாது எனக் காட்டிவிட்டு, பிறகு படத்தின் இறுதியில் அந்த நாயகன் வெற்றி பெறுவது போலக் காட்டுவது என்ன நியாயம்?" என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேபோல், "நிஜத்தில் 5 அரியர்களை ஒரே செமஸ்டரில் கிளியர் செய்வதே கடினம், அப்படியிருக்க 40 அரியர்களுக்கும் மேல் வைத்திருக்கும் ஒரு நாயகன், அதை பெருமையாகச் சொல்வது தவறான முன்னுதாரணம்" என்பது போன்ற பதிவுகளையும் காண மு…

  6. அட்வெஞ்சர் வீடியோக்கள் வெளியிட்டு ‘வியூஸ்’ அள்ளும் ரிஷி (ரிச்சி), மெல்வின் (தேவராஜ்), அங்கிதா (சுகன்யா), ஜெனிபர் (அரியா) ஆகிய யூடியூபர்கள், முழுநிலா நாளில் குழுவாக ஜவ்வாது மலை காட்டுப் பகுதிக்குச் செல்கிறார்கள். காந்தா (யுவிகா) என்ற மலைக்கிராமத்துப் பெண் வழிகாட்டிபோல் செல்கிறாள். காட்டின் நடுவில் இருக்கும் குளத்தில் குளிக்க வரும் சிறுதெய்வங்களான ‘சப்த கன்னியர்’களையும் அவர்களைத் தடுக்கும் மங்கை என்கிற ஆவியையும் கேமராவில் பதிவு செய்து வெளியிட வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். அதை அவர்களால் சாதிக்க முடிந்ததா, அவர்கள் உயிரோடு வீடு திரும்பினார்களா என்பது கதை. சக்தி வழிபாட்டின் அங்கமாக இருக்கும் ‘சப்த கன்னியர்’ வழிப்பாட்டை பேய்க் கதையுடன் இணைக்க முயல்கிறது திரைக்கதை. மங்கை என்…

  7. இலங்கைக்கு வருகை தந்த சிவகார்த்திகேயன்! ‘அமரன்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் ‘பராசக்தி’. இயக்குனர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகிவரும் இத் திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி மற்றும் மதுரையில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா உள்ளிட்ட படக்குழு இலங்கை வருகைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsஇலங்கைக்கு வருகை தந்த சிவகார்த்திகேயன்!'அமரன்' படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப…

  8. பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 3 மார்ச் 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய சிம்ஃபொனி வரும் மார்ச் 8-ஆம் தேதி லண்டன் நகரில் வெளியிடப்படவிருக்கிறது. சிம்ஃபொனி என்றால் என்ன? 'சிம்ஃபொனி' இசைப்பது இசையுலகில் கௌரவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுவது ஏன்? கேள்வி: சிம்ஃபொனி என்றால் என்ன? பதில்: சிம்ஃபொனி (symphony) என்பது மேற்கத்திய செவ்வியல் இசை (Classical music) மரபில், பல்வேறு இசைக் கருவிகள் ஒன்றாக இசைக்கப்படும் ஒரு ஒத்திசைத் தொகுப்பு. இந்த இசைத் தொகுப்பு, பல பகுதிகளை, பெரும்பாலும் நான்கு பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். இந்தப் பகுதிகள் movements என்று குறிப்பிடப்படுகின்றன. அத…

  9. தன் உயிரை மாய்க்க முயன்ற பிரபல பாடகி கல்பனா! கணவரை கைது செய்த பொலிஸார் பிரபல பின்னணிப் பாடகியான கல்பனா தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 44 வயதான கல்பனா, ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் வசித்து வந்துள்ள நிலையில், அதிகளவான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு, சுயநினைவற்ற நிலையில் இருந்துள்ளார் எனவும், இதனையடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்பனாவின் வீடு சில நாட்களாக திறக்கப்படாமல் இருந்துள்ளதால் சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள் வீட்டின் கதவை திறக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த விடயம் தெரிய வந்துள்ளது. இந்ந…

  10. பட மூலாதாரம்,Ranyarao/X படக்குறிப்பு,ரன்யா ராவ் கட்டுரை தகவல் எழுதியவர், இம்ரான் குரேஷி பதவி, பிபிசி செய்தியாளர், பெங்களூரு 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழில் வாகா திரைப்படத்திலும், கன்னட மொழியில் இரு படங்களிலும் நடித்துள்ள நடிகை ரன்யா ராவ், துபையில் இருந்து திரும்பியபோது 14.8 கிலோ தங்கத்துடன் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இந்தத் தங்கத்தின் மதிப்பு சுமார் 12 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ரன்யா ராவ், கர்நாடக காவல்துறை இயக்குநர் ஜெனரலாக பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் மகள். பெங்களூருவில் உள்ள கெம்பகௌடா சர்வதேச விமான நிலையத்திற்கு, செவ்வாய்க்கிழமை (மார்ச் 04) தங்கத்துடன் ரன்யா ராவ் வந்து இறங்கியதாகக் கூறப்படுகிறது. ரூ.53 கோடி மதிப்பு, 98 கி…

  11. ஆஸ்கர் விருதுகள் பலவற்றை வென்ற ‘அனோரா’ 2024ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இது 97ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்றவர்களின் முழு பட்டியல்: சிறந்த இயக்குநர்: ஷான் பேகர் (அனோரா) சிறந்த திரைப்படம்: அனோரா சிறந்த நடிகை: மிக்கி மேடிசன் (அனோரா) சிறந்த நடிகர்: ஏட்ரியன் ப்ராடி ( தி ப்ரூட்டலிஸ்ட்) சிறந்த உறுதுணை நடிகை: ஸோயி சல்டானா (எமிலியா பெரேஸ்) சிறந்த அனிமேஷன் திரைப்படம்: ஃப்ளோ சிறந்த தழுவல் திரைக்கதை: கான்கிளேவ் சிறந்த அசல் திரைக்கதை: அனோரா சிறந்த ஆடை வடிவமைப்பு: விக்கெட் சிறந்த ஆவணப்படம்: நோ அதர் லேண்ட் சிறந்த ஒளிப்பதிவு: தி ப்ரூட்டலிஸ்ட் சிறந்த ஆவணக் குறும்படம்…

  12. நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு! மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோரின் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்கிற படத்தைத் தயாரிப்பதற்காக கடன் வழங்கக் கோரி தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்கிற நிறுவனத்தை அணுகி இருந்தனர். குறித்த பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த கடனை ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக உ…

  13. இஷா கோபிகரை நினைவூட்டும் ‘என் சுவாசக் காற்றே’! 26 Feb 2025, 8:10 PM சில திரைப்படங்கள் சில நினைவுகளின் எச்சங்களாகத் திகழும். அப்படத்தோடு சம்பந்தப்பட்டவர்களே அதனை மறந்திருந்தாலும், அதனைப் பார்த்து ரசித்தவர் மனதில் கோடானுகோடி எண்ணங்கள் வட்டமிட்டுக் கொண்டிருக்கும். எந்தவொரு கலைப்படைப்புக்கும் அது பொருந்தும். அந்த வகையில், ‘என் சுவாசக் காற்றே’ திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் மீதமிருக்கிறது. அந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் தந்த பாடல்களைக் கேட்டுவிட்டு, ‘மிஷன் இம்பாஸிபிள்’ டாம் க்ரூஸ் போன்று அரவிந்த் சாமி சாகசம் செய்யும் ஸ்டில்களை பார்த்துவிட்டு ஆவலோடு அப்படத்தைக் காண தியேட்டருக்குச் சென்றுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவிருக்கிறது. வீணான ‘காஸ்ட்டிங்’! ஒரு அழகான…

  14. தன் பாலினம்… காதலோடு அங்கீகாரமும் பொது உடைமையாகட்டும்! 26 Feb 2025, 5:41 PM அ. குமரேசன் சில திரைப்படங்கள் எடுத்துக்கொண்ட உள்ளடக்கத்தாலும் அதை வெளிப்படுத்தும் கலையாக்கத்தாலும் பேசப்பட வேண்டிய படைப்புகளாக இருக்கும். வேறு சில படங்கள் அவற்றில் பேசப்பட்ட கருத்துகளைப் பற்றிச் சமுதாயத்தையே பேச வைப்பவையாக இருக்கும். பேச வைக்கிற ஒரு படம்தான் ‘காதல் என்பது பொது உடைமை’. காதல் மதம் பார்த்து, சாதி பார்த்து, இனம் பார்த்து, வயது பார்த்து, நாடு பார்த்து – ஏன் பாலினம் பார்த்துக்கூட – வருவதல்ல. எதிர்ப் பாலினத்தவர்களிடையே மட்டும்தான், பெண்ணுக்கும் ஆணுக்கும்தான், காதல் பூக்கும் என்றில்லை. சமுதாயத்தில் அப்படித்தான் நம்பப்படுகிறது, அதுதான் இயற்கை என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. (எதிர்ப் பாலி…

  15. சென்னை: ‘எந்திரன்’ திரைப்பட கதை விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி அசையா சொத்துக்ளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆரூர் தமிழ்நாடன் என்பவர் எழுதிய ‘ஜுகிபா’ கதை, ‘திக்திக் தீபிகா’ என்ற பெயரில் கடந்த 2007-ம் ஆண்டு நாவலாக வெளியானது. இந்நிலையில் 2010-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படம் வெளியானது. அதைப் பார்த்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதை தன்னுடைய ‘ஜுகிபா’ கதை எனக்கூறி, ‘எந்திரன்’ படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார். தொடர்ந்து, தனது கதையைத் திருடி ‘எந்திரன்’ படத்தை எடுத்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும், இது காப்புரிமை சட்டத்…

  16. நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.. ஆனால் இமான் ஏமாற்றிவிட்டார்.. பாடகி விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு V VasanthiUpdated: Wednesday, February 19, 2025, 17:01 [IST] ஒரு சில பாடல்கள் கேட்கும் போது நம்முடைய மனதிற்குள் இருக்கும் சந்தோஷங்கள், கவலைகள், பாசம் உட்பட எல்லா உணர்வுகளும் நம்மை மீறி வெளிப்படும் அதுபோல பாடல்களை பாடும் பாடகர்கள் மக்கள் மனதில் தனக்கென்று ஒரு இடம் பிடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் வைக்கம் விஜயலட்சுமியும் ஒருவர். இவர் தமிழில் வெளியான குக்கூ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற "கோடை மழை போல" என்ற பாடல் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு கேட்பவர்களை ஆட வைக்கும் "சொப்பன சுந்தரி நான்தானே", "காக்...கா முட்டை... காக்கா முட்டை கண்ணால" என்ற பாடல்களை இவ…

  17. The Mehta Boys- அப்பா - மகன் உறவு பற்றி நான் பார்த்த படங்களில் மிகச் சிறந்த, அருமையான படம்! எந்த போலித்தனமான, சினிமாத்தனமான template களும் இல்லாத, நல்லதொரு படம். அநேகமான அப்பாக்களும் மகன்களும் ஒரு குறிப்பிட்ட வயதின் பின் கட்டி இணைப்பதில்லை.. கொஞ்சுவதில்லை.. சேர்ந்து ஒரு வேளை சாப்பிடுவது கூட இல்லை. அப்படி அணைக்கும், hug பண்ண மனசு விரும்பும், சேர்ந்து உண்ணும் தருணங்களை போலி ego நிராகரித்து விடும். ஆனால் அப்படி செய்யாமல் விட்டு, அப்பாவை புரிந்து கொள்ளும் முயற்சிகளை வேண்டும் என்றே ego காரணங்களால் மறுத்தமையால் உருவாகும் காயங்கள் வலி மிகுந்தவை. ஆயுள் வரைக்கும் ஆறாதவை. நான் அந்த வலியை அனுபவிக்கின்றவன். …

  18. இரண்டு ஆண்டுகளாக ரசிகர்களின் தீவிர காத்திருப்புக்குப் பிறகு ஒருவழியாக வெளியாகியுள்ளது ‘விடாமுயற்சி’ திரைப்படம். ட்ரெய்லர், பாடல்கள் பெரிதாக ஹைப் எதுவும் ஏற்றவில்லை என்றாலும், அஜித் என்ற நடிகருக்காக பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் அதற்கு நியாயம் செய்ததா என்று பார்க்கலாம். அஜர்பைஜான் நாட்டில் காதல் திருமணம் கொண்ட அர்ஜுன் (அஜித்) - கயல் (த்ரிஷா) தம்பதியின் வாழ்க்கையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு விரிசல் ஏற்படுகிறது. இருவரும் பிரிந்துவிடுவதாக முடிவெடுத்த தனது மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் கொண்டு போய் விடுவதற்காக காரில் அழைத்துச் செல்கிறார் அர்ஜுன். செல்லும் வழியில் ஓரிடத்தில் கார் பிரேக்டவுன் ஆகிறது. அந்த வழியாக ஒரு டெலிவரி டிரக்கில் வரும் ரக்‌ஷித் (அர்ஜுன்)…

  19. பட மூலாதாரம்,GRASS ROOT FILM CO கட்டுரை தகவல் எழுதியவர், கார்த்திக் கிருஷ்ணா பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்தில் வெளியான 'பேட் கேர்ள்' திரைப்படத்தின் டீசர் பற்றி சமூக ஊடகங்களில் பெரிய விவாதம் எழுந்துள்ளது. ஒரு பக்கம், ஆண்களின் உலகையே காட்டி வந்த தமிழ் சினிமாவில் ஒரு பெண் இயக்குநரின் தனித்துவமான குரலாக இந்த டீசர் பாராட்டப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாகக் கதையின் நாயகியைக் காட்டியதற்கும், நாயகி குடிப்பது, புகைப் பிடிப்பது போன்ற காட்சிகளுக்கும் எதிர்மறை கருத்துகளும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில், …

  20. விஜய்யின் கடைசி பட டைட்டில் இதுதான்! Jan 26, 2025 நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் 69-ஆவது படத்திற்கு ‘ஜனநாயகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்த விஜய், இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க உள்ளதாகவும், பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்தார். அதன்படி விஜய்யின் 69-ஆவது படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒருபுறம் படத்தின் ஷூட்டிங் மறுபுறம் பாலிடிக்ஸ் என விஜய் மிகவும் பிஸியாக இருக்கிறார். நேற்று முன்தினம் (ஜனவரி 24) பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாள…

  21. பாட்டல் ராதா: விமர்சனம்! Jan 26, 2025 மதுப்பிரியர்களின் மனதை அசைத்தால் நன்று! ’இருபது வருஷத்துக்கு முன்னால இவ்வளவு பேர் குடிச்சாங்களான்னு தெரியலை’, ‘முப்பது வருஷத்துக்கு முன்னால இவ்ளோ கடைகள் கிடையாது தெரியுமா’, ‘நாப்பது வருஷத்துக்கு முன்னால எல்லாம் குடிக்கறவனை கேவலமாதான் நினைப்பாங்க’, ‘பொடி போடுறது, போயிலை போடுறதையே மோசமான பழக்கங்களா நினைச்ச காலம் ஒண்ணு உண்டு’. கடந்த நூற்றாண்டின் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் இப்படிப் போதை குறித்த கருத்துகள் மாறி வந்திருப்பதைக் காண முடியும். Bottle Radha Movie Review ‘மது குடிக்காதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம்’ என்கிற நிலையை இன்று அது அடைந்திருக்கிறது. இந்தச் சூழலில், குடியின் தீமைகளை விளக்…

  22. நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது! நடிகராக மட்டுமின்றி துப்பாக்கிச் சுடும் வீரர், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர், ட்ரோன் வடிவமைப்பாளர் உட்பட பன்முகம் கொண்டவராக திகழ்ந்து வரும் அஜித் குமாருக்கு, இந்திய அரசின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது அறிக்கப்பட்டுள்ளமை அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுகின்றன. பொது சேவைத்துறையின் அனைத்து நடவடிக்கைகளிலும் அல்லது துறைகளிலும் சாதனைகள் செய்தவர்களை அங்கீகரிப்பதற்காக பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்…

  23. பட மூலாதாரம்,@AKRACINGOFFL படக்குறிப்பு, வெகு நாட்களாகவே ஊடகங்களிடம் பேசுவதைத் தவிர்த்துவந்தார் நடிகர் அஜித் குமார் 14 ஜனவரி 2025, 08:32 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் துபையில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தொடரில் (24H series) 911 போர்ஷே கார் பிரிவில் நடிகர் அஜித் குமாரின் அணி 3-வது இடத்தைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து, நடிகர் அஜித்துக்கும் அவரது அணியினருக்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. வெகு நாட்களாகவே ஊடகங்களிடம் பேசுவதைத் தவிர்த்துவந்த நடிகர் அஜித் குமார், இந்த கார் பந்தய நிகழ்வின் போது ஊடகங்களின் சில கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். துபையில் அவர் அளித்த ஒரு சமீபத…

  24. விமர்சனம்: புஷ்பா 2 ! KaviDec 05, 2024 21:00PM உதயசங்கரன் பாடகலிங்கம் குடும்பத்தோடு ரசித்து மகிழலாமா?! ‘இது பான் இந்தியா படமல்ல, ஒரு தெலுங்கு படம்’ என்றே ‘புஷ்பா’ பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூறி வந்தார் இயக்குனர் சுகுமார். ஆனால், அதன் தெலுங்கு, மலையாள ‘டப்’ பதிப்புகளை விட இந்திப் பதிப்பு மாபெரும் வெற்றியை ஈட்டியது. பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் நாயகன் அல்லு அர்ஜுனுக்குத் தனி ரசிகர் கூட்டம் உருவாகக் காரணமானது. இதன்பிறகு பான் இந்தியா நட்சத்திரமாக உருவெடுத்தார் நாயகி ராஷ்மிகா மந்தனா. மூன்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வு அது. அதன் தாக்கத்தின் காரணமாக ‘புஷ்பா 2’ திரைப்படம் தெலுங்கில் தயாராகி தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மட…

  25. பொங்கல் ரிலீஸ்… ஜெயிக்கப் போவது யாரு? SelvamJan 09, 2025 17:34PM பண்டிகைக் காலம் என்றாலே உணவு, உடை, இதர ஆடம்பரத் தேவைகள் நினைவுக்கு வருவதைப் போலவே பொழுதுபோக்கு அம்சங்களும் அவற்றின் பின்னே தொடர்வது காலம்காலமாக இருந்து வருகிறது. எந்தக் கொண்டாட்டம் என்றாலும், அதன் அடிப்படை பொழுதுபோக்கு அம்சம் தானே. அந்த வகையில், கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாக நம்மவர்களின் விருப்பங்களில் ஒன்றாக இருந்து வருபவை ‘புதிய திரைப்பட வெளியீடுகள்’. வரவிருக்கும் தைப்பொங்கல் திருநாளை ஒட்டித் தமிழில் சுமார் 5 படங்கள் வரவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அது போகச் சில படங்கள் ‘க்யூ’வில் நிற்கின்றன. அவற்றில் ரசிகர்களின் மனம் கவரப் போவது எந்தப் படம்? பார்க்கலாம்..! வணங்கான் …

      • Like
    • 1 reply
    • 264 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.