வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
தமிழ் சினிமாவின் புதிய வில்லன்... ஃபேஸ்புக் லைவ்! தமிழ் சினிமாவுக்கும், திருட்டு விசிடிக்கும் நடக்கும் சண்டை பற்றி அனைவரும் அறிந்ததே. அதனை சற்றே ஓரங்கட்டி, புதிய பிரச்னையாக உருவெடுத்தது புதுப்படங்களை வெளியிடும் இணையதளங்கள். இதனை எதிர்த்து பல தயாரிப்பாளர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். கபாலி பட விவகாரத்தில் கூட, தயாரிப்பு தரப்பில் இருந்து வழக்குத் தொடுக்கப்பட்டு நிறைய இணையதளங்கள் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதையும் மீறி, நிறைய தளங்களில் அந்தப் படம் வெளியாகி அதிர்ச்சியளித்தது. இந்த சிக்கலே இன்னும் தீராத நிலையில் தற்போது புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது ஃபேஸ்புக் லைவ். கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக் லைவ் மூலம் தமிழ் திரைப்படங்கள் லைவ்வாக ஒளி…
-
- 0 replies
- 470 views
-
-
சிலருக்கு ‘அபிராமி' எனும் காரணத்தால், சிலருக்கு 'கமல்' எனும் காரணத்தால், சிலருக்கு ‘ரோஷினி' எனும் காரணத்தால், சிலருக்கு 'மனிதர்கள் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதலல்ல' எனும் காரணத்தால்... இப்படி, நம்மில் பலருக்கு வெவ்வேறு காரணங்களால், ‘குணா' திரைப்படம் நமக்குப் பிடித்தமான திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும்! 90-களின் ஆரம்பம் தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய உத்வேகத்தைத் தந்த காலம். கதைக்கு முக்கியத்துவம் கொண்ட திரைக்கதைகளுடன் பல இயக்குநர்கள் வந்தனர். அந்தக் கதைகளுக்காக நாயகர்களும் தங்களின் ‘ஸ்டார் வேல்யூ' பற்றியெல்லாம் கவலைப்படாமல் நடிக்க ஆரம்பித்தனர். அந்தக் கணக்கை கமல் ஆரம்பித்து வைத்தார் என்று சொன்னால் அதில் மிகையில்லை. மனநலம் பிறழ்ந்த நாயகன், …
-
- 0 replies
- 430 views
-
-
கமலுக்கு பதிலடி கொடுத்த வாணி கணபதி! கமல் ஹாசனின் திறமைகள், வெற்றிகள் என பல விஷயங்களை தவிர அந்தரங்க விஷயங்களை யாரும் தெரிந்துவைத்திருக்க மாட்டார்கள். அவருடைய முதல் திருமணம் 1978 இல் பிரபல நடன கலைஞர் வாணி கணபதியுடன் நடந்தது. பின் 1988 இல் விவாகரத்து. அதன் பின் இந்த விஷயம் காற்றோடு பறந்து போய்விட்டது. அந்த சமயத்தில் கமல் என்ன சொன்னார் தெரியுமா? ஸ்ருதி ஹாஸன் பிறந்தபோது நான் எல்லாபணத்தையும் இழந்த நிலையில் இருந்தேன். ஏனெனில் வாணியை விவாகரத்து செய்ததால் ஜீவனாம்சம் தர வேண்டி இருந்தது. மீண்டும் வாழ்க்கை ஜீரோவிலிருந்து துவங்கியது. அப்போது கூட வாடகை வீட்டில் தான் இருந்தேன் என்றார் கமல். வாணி கணபதியின் பதிலடி! இந்திய…
-
- 0 replies
- 268 views
-
-
கலைப்புலி தாணு கைது? கன்னியாகுமரி மாவட்டம், புதுக்குடியிருப்பில் உள்ள ‘நியூ தியேட்டர்’ உரிமையாளர் சி.டேவிட். இவர், சென்னை 10-வது உதவி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘வி.கிரியேஷன் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கலைப்புலி எஸ்.தாணு எனக்கு ரூ.2 லட்சம் தரவேண்டும். இதுகுறித்து நாகர்கோவில் முதன்மை சார்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரூ.2 லட்சத்தையும், அதற்குரிய வட்டி தொகையையும் சேர்த்து கலைப்புலி தாணு எனக்கு வழங்கவேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ந் திகதி தீர்ப்பளித்தார். ஆனால், தாணு பணத்தை வேண்டுமென்றே வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். அவரது பெயரில் சொத்துக்கள் சென்னையில…
-
- 0 replies
- 270 views
-
-
தமிழ் சினிமா எனக்கு கொடுத்திருக்கும் இடம் மிகவும் பொியது - ஸ்ரீதிவ்யா 2016-11-03 21:05:03 ‘தாவணிதான் காஸ்ட்யூமா, கிராமத்துப் பெண் வேடமா? கூப்பிடு ஸ்ரீதிவ்யாவை...’ என்கிற வில்லேஜ் இமேஜை முற்றிலுமாக உடைக்கிறார் ஸ்ரீதிவ்யா. ‘காஷ்மோரா’வில் ஜீன்ஸ், டீ-ஷர்ட் என்று அல்ட்ரா மொடர்னாக மிரட்டியிருக்கிறார். ‘மாவீரன் கிட்டு’, ‘சங்கிலி புங்குலி கதவ திற’ என்று வரிசை கட்டி வந்து கொண்டிருக்கிறது ஸ்ரீதிவ்யாவின் படங்கள். அண்மையில் அவர் அளித்த பேட்டி, கிராமத்து வேடம் போரடிச்சிடிச்சா? இல்லவே இல்லை. எனக்கு பாவாடை தாவணி ரொம்ப பிடிச்ச காஸ்ட்யூம். ஆனா, ‘திவ்யா இதுக்குதான் லாயக்குன்…
-
- 0 replies
- 294 views
-
-
SD சுப்புலட்சுமி நெல்லை மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தில் துரைசாமி என்ற நாடக நடிகருக்கு மகளாக பிறந்து, சிறு வயது முதலே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த இவர், கொஞ்ச காலம் மதுரையில் தங்கிஇருந்து ஸ்பெஷல் நாடகங்களில் நடித்திருந்தவர். வசனங்களை தெள்ள தெளிவாக உச்சரிப்பதில் வல்லவராக விளங்கினார். சமயயோசித புத்தி கூர்மை உள்ளவர் உள்ளவர். இந்த பண்பு இவருக்கு நார்ட்டன் சுப்புலட்சுமி என்ற சிறப்பு பெயரை வாங்கி தந்திருந்தது, அதாவது அந்த காலத்தில் நார்ட்டன் என்னும் இங்கிலீஷ் பாரிஸ்டர் , சென்னை உயர் நீதி மன்றத்தில் எதிரி வக்கீல்களை பேச்சு திறமையால் திணற அடிப்பாராம் . அத்தகைய பேச்சு திறமை உள்ள SD சுப்புலக்ஷ்மியிடம், நாடகத்தில் கதாநாயக நடிகர்கள் எதிர்பாராமல் கேட்கும் சில வினாக்களுக்கு, ஒரு வினாடி க…
-
- 0 replies
- 422 views
-
-
பிரியங்காவின் 'பேவாட்ச்' போஸ்டர் நடிகை பிரியங்கா சோப்ரா, ஹொலிவூட் நடிகர் டுவென் ஜோன்சன் உடன் ‛‛பேவாட்ச்'' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரியங்கா சோப்ரா, கறுப்பு நிற உடையில், பின்னணியில் இறக்கைகளுடன், உதட்டின் ஓரத்தில் சிறிது இரத்தம் வடிந்தபடியும், தொடையில் துப்பாக்கியுடனும் போஸ் கொடுத்திருக்கிறார். பிரியங்கா சோப்ராவின் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் திரைப்படம் எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/185310/ப-ர-யங-க-வ-ன-ப-வ-ட-ச-ப-ஸ-டர-#sthash.MWsXtAC9.dpuf
-
- 0 replies
- 331 views
-
-
மீண்டும் அரை நிர்வாண போட்டோ: ஷங்கருக்கு "பிரசர்" எகிற வைத்த ஏமி. சென்னை: நடிகை ஏமி ஜாக்சன் மீண்டும் அரை நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நடிகை ஏமி ஜாக்சன் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் அதுவும் ரஜினி படத்தில் நடிக்கும் பெரிய வாய்ப்பு கிடைக்காதா என நடிகைகள் ஏங்கும்போது ஏமிக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அம்மணியோ அவ்வப்போது ஷங்கரை டென்ஷனாக்கி வருகிறார். ஏமி ஜாக்சன் படுக்கையில் படுத்தபடி அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு 2.0 படக்குழுவை அதிர வைத்தார். இந்த பொண்ணு என்னடா இப்படி செய்கிறது என்று அவர்கள் கடுப்பாகினர். ஏற்கனவே வெளியிட்ட …
-
- 6 replies
- 1.5k views
- 1 follower
-
-
இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘ஒக்கடு மிகிலாடு’ இலங்கை இனப் பிரச்சினையை மையமாக வைத்து சில திரைப்படங்கள் தமிழில் தயாரிக்கப்பட்டு வெளிவந்தன. ஆனால், அவற்றிற்கு தணிக்கை கெடுபிடி மிகவும் அதிகமாக இருந்ததால் பல வெளிப்படையான காட்சிகள் அந்தப் திரைப்படங்களில் இடம்பெறவில்லை. முன்னணி நட்சத்திரங்களும் நடிக்காததால் அந்த திரைப்படங்களைப் பற்றிய அதிகமான கவனமும் ரசிகர்களிடம் ஏற்படவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படம் மட்டுமே ரசிகர்களைச் சென்று சேர்ந்தது. இப்போது தெலுங்கில் மஞ்சு மனோஜ் நடிக்க “ஒக்கடு மிகிலாடு” என்ற திரைப்படத்தைத் தயாரித்து வருகிறார்கள். அஜய் ஆன்ட்ரூ நுத்தகி என்பவர் இயக்கும் இந…
-
- 1 reply
- 393 views
-
-
ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகர் ரன்பீர் கபூர் விளக்கம் நடிகை ஐஸ்வர்யா ராய் தனக்கு குழந்தை பிறந்ததை தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த படம் “ஏ தில் ஹை முஷ்கில்”. பல்வேறு பிரச்சினைகளை கடந்து வெளிவந்துள்ள இந்த படத்தில், ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில், ரன்பீர் கபூருடன் ஐஸ்வர்யா ராய் நெருக்கமாக நடித்த காட்சிகள் படம் திரைக்கு வரும் முன்பே வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இருவரும் நெருக்கமாக இருக்கும் படுக்கையறை காட்சி படத்தின் கதைக்கு அவசியம் எனக்கூறி ஐஸ்வர்யாராயே பரிந்துரை செய்ததாக கூறப்பட்டது. இந்த நெருக்கமான காட்சிகள், அமிதாப் பச்சன் குடும்பத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ரன்…
-
- 0 replies
- 262 views
-
-
( நம் பழசுகலுக்காக ) சரோஜா தேவி: 1.யாதுமாகி நின்றார்...! சரோஜாதேவியை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தியவர் யார்... ? ’ என்று பட்டிமன்றம் நடத்தலாம். நாங்கள் தான் என்று தமிழ் சினிமாவைச் செழிப்புறச் செய்த, வணக்கத்துக்குரியவர்களின் வாரிசுகள் போட்டா போட்டி போடுவார்கள். ’ ஏவி.எம். கண்டெடுத்த நட்சத்திரங்களின் பட்டியலிலும் சரோஜாதேவிக்கு முக்கிய இடம் உண்டு! படம்- கன்னட சினிமாவின் முடிசூடா மன்னன். ’ ராஜ்குமார் கதாநாயகனாக அறிமுகமான ஏவி.எம்.மின் ‘பேடர் கண்ணப்பா’ 1954 வெளியீடு. நாயகியாக பண்டரிபாய், மற்றும் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, ராஜசுலோசனா ஆகியோர் நடித்திருந்தார்கள். மந்திரி குமாரி’ புகழ் வில்லன் நடிகர் எஸ். ஏ. நடராஜன். அவரது கன்னட தயாரிப்பு கோகிலவாணி. அத…
-
- 53 replies
- 24.2k views
-
-
’என் வாழ்க்கையில் சிவக்குமார் சொன்னது பலித்தது!' - நெகிழும் ரஜினி நடிகர் சிவகுமார் தனது 75வது பிறந்தநாளை 27 அக்டோபர் 2016 அன்று கொண்டாடினார். அனைத்து தரப்பு பிரபலங்களிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. ரஜினிகாந்த், கடந்த 12ம்தேதி அன்று சிவகுமாருக்கு எழுதிய கடிதம் ஒன்று வெளியிடப்பட்டது. மனம்திறந்து சிவகுமாரைப் பாராட்டிய ரஜினி, ‘சிவகுமார் சொல்வதைக் கேட்டால் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்கலாம்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ‘மதிப்பிற்குரிய சிவக்குமார் அவர்களுடன் நான் நடித்த படங்கள் இரண்டுதான். ஒன்று ‘புவனா ஒரு கேள்விக்குறி’, மற்றொன்று ‘கவிக்குயி…
-
- 0 replies
- 273 views
-
-
குற்றமே தண்டனையா? வெற்றி ‘குற்றமே தண்டனை’யின் மையமாக பூஜா தேவர்யாவின் பாத்திரத்தைச் சொல்லலாம். அப்பாத்திரத்தின் குற்றம் ரவிச்சந்திரன் பாத்திரத்தை ‘விதார்த்’ காதலிப்பதாகவும் தண்டனையாக அவனையே திருமணம் செய்துகொள்வதுமாக இருக்கிறது. இளம்பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை என ஃபேஸ்புக்கில் அவ்வப்போது பகிரப்படும் மீம்களில் கொஞ்சம் குற்றவுணர்ச்சியைச் சேர்த்து எடுக்கப்பட்டதுபோல் இருக்கிறது ‘குற்றமே தண்டனை’ திரைப்படம். ஒவ்வொரு முறையும் ஊடகங்களில் பெரிதாகப் பேசப் படுமளவு, பெண்கள் திராவகத் தாக்குதல்களுக்கும் கொலைகளுக்கும் ஆளாகும்போது இத்தகைய மனோபாவங்களை வளர்ப்பதில் தமிழ் சினிமாவின் பங்கு குறித்தும் லேசாகவோ பெரிதாகவோ விவாதிக்கப்படுகின்றது. பெரும்பாலும் செல்வராகவன் உள்ளிட்டோர…
-
- 0 replies
- 402 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க முன்வந்துள்ள இசையமைப்பாளர் இசையமைப்பாளர் வர்ஷன், இலங்கைத் தமிழர்களுக்கு தான் இசையமைக்கும் படங்களில் வாய்ப்பளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ”புறம்போக்கு” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான வர்ஷன், தனது புதிய படத்தில் ஈழத்தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க முன்வந்துள்ளார். அவர் அது பற்றி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ”கடந்த 2006 ஆம் ஆண்டு முதற்கொண்டு 10 வருடங்களாக கடல்கடந்து வாழும் தமிழர்கள், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் ஏற்பாடு செய்த பல இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். எனவே, அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாக, எனது திரைப்படங்களில் ஒரு பாடகர் மற்றும் பாடகிக்கு வாய்ப்பளிக்க …
-
- 0 replies
- 381 views
-
-
அஞ்சலி தேவி: 1. கிளி மார்க் பீடி! ‘ஆந்திர வட்டாரத்தில் ஓர் அழகுப் பெண்ணைப் பற்றியே அனைவரும் பேசினார்கள். நன்றாக நடனமாடுகிறாள். அவள் நாட்டியத்தைப் பார்க்காத கண்கள் இருந்து என்ன பயன்...?’ காக்கிநாடாவில் யுத்த நிதிக்காக அந்த ஆரணங்கு ஆடினாள். அந்த ஆட்டமும் அவள் அழகும் என்னை ஆகா...! என்று பாராட்ட வைத்தன. அந்தப் பெண்ணைப் பற்றிய பூர்வீகத்தை அறிந்து அவளின் தந்தையிடம் போய்ப் பேசினேன். ‘உங்களுடைய மகளை என்னுடன் நம்பி அனுப்புங்கள். அவளுடைய அழகும் ஆட்டமும் இந்தச் சிறு இடத்துக்குள் அடங்கிவிடக்கூடாது. என்னிடம் ஒரு நாடகக் குழு இருக்கிறது. அதில் தங்களுடைய குமாரி…
-
- 4 replies
- 3.5k views
-
-
சாவித்ரி- 1. அடடா... அறியாப் பருவமடா! 1964. குரோதி ஆண்டின் ஆவணி மாதத்துக் கடைசி முகூர்த்தம். கல்யாண வீடு. வி.ஐ.பி. இல்லத் திருமணம். மாபெரும் தலைவர்களும் உச்ச நட்சத்திரங்களும் ஒவ்வொருவராக உள்ளே வர வர, அவர்களை அருகிலிருந்து பார்க்கக்கூடிய பரவச வாய்ப்பு. எங்கும் பெண்களின் கலகலப்பு! இதனிடையே மனத்தைப் பிழியும் 'கலைக் கோயில்' சிட்டிபாபுவின் வீணை. ராஜாஜி, ஜெமினி கணேசனை நெருங்கி சாவித்ரியை சுட்டிக்காட்டி, 'கல்யாணப் பெண் யார்? அவரா...? என்றார். கூட்டம் பூகம்பமாகச் சிரித்தது. ஜெமினிக்கு வெட்கமாகிவிட்டது. இயல்பாகவே சிவந்த முகம். பெருமிதத்தின் பூரிப்பு சற்றே பெருகியது. மன்மத வதனம் செவ்வானம் ஆயிற்று. அதிரடியாக அவரும் சிரித்தார். கவலையில்லா…
-
- 24 replies
- 17.4k views
-
-
திரைவிமர்சனம்: கொடி இயக்குநர் துரை செந்தில்குமார் ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’ படங்களைத் தொடர்ந்து இயக்கி யிருக்கும் படம் ‘கொடி’. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் முதல் படம் என்பதால் இந்தப் படத்தை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்தனர். தனுஷ் த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதும், ‘ப்ரேமம்’ புகழ் அனுபமா பரமேஸ்வரன் தமிழில் அறிமுகமாகும் படம் என்பதும் கூடுதல் ஆவலை உருவாக்கியிருந்தன. கொடி (தனுஷ்) பிறக்கும்போதே அரசியல் அவனுடைய வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. அவனுடைய அப்பா (கருணாஸ்) தான் வாய் பேச முடியாததால் அரசியலில் சாதிக்க முடியாததை தன் மகன் சாதிக்க வேண் டும் என்று விரும்புகிறார். ஊரில் மெர்குரி கழிவுகளைக் கொட்டி …
-
- 1 reply
- 698 views
-
-
-
தமிழ் சினிமாவில் எப்போதும் பேண்டஸி படங்களுக்கு பஞ்சம் தான். எப்போதாவது ஒரு படம் வந்தால் அதையும் கிண்டல் செய்ய தான் ஒரு கூட்டமே இருக்கும், இந்நிலையில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் என பிரமாண்ட கூட்டணியுடன் களம் கண்டுள்ள படம் தான் காஷ்மோரா. மூன்று கதாபாத்திரத்தில் கார்த்தி, ப்ரீயட் கதை, ராணியாக நயன்தாரா என ட்ரைலர் பார்க்கும் போதே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய காஷ்மோரா எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை பார்ப்போம். கதைக்களம் கார்த்தி காஷ்மோரா கதாபாத்திரத்தில் பேய் ஓட்டுபவராக வருகிறார், 420 வேலைகள் பார்த்து பணம் சம்பாதிக்கும் இவர் ஒரு கட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ வீட்டிற்கு பேய் ஓட்ட வருகிறார். அவர் செய்யும் சில போர்ஜரி வேலை, யதார்த்தமாக அந…
-
- 1 reply
- 1.2k views
-
-
காந்தக் குரல் அழகி.. கணீர் பாட்டழகி. கல்பனா அக்காவின் தீபா"வலி" ஸ்பெஷல்! பேஸ்புக் புகழ் கல்பனா அக்கா, தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைப் பாடலாகப் பாடி அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தீபாவளி ஸ்பெஷலாக தனது பேஸ்புக் பக்கத்தில், 'நான் சிரித்தால் தீபாவளி' பாடலைப் பாடி ரசிகர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் பேஸ்புக் புகழ் கல்பனா அக்கா. தமிழ் சினிமாவின் பிரபல பாடல்களை தன் கான குரலில் பாடி பேஸ்புக் பக்கத்தில் அப்லோட் செய்வது தான் கல்பனா அக்காவின் தலையாய வேலை. கல்பனா பேல்ஸ் பிறந்தது யாழ்பாணத்தில். மேற்படிப்பை இந்தியாவில் பயின்ற இவர், தற்போது ஆஸ்திரேலியா சென்ற இவர் மெல்பேர்ன் பகுதியில் வசித்து வருகிறார…
-
- 0 replies
- 441 views
-
-
விஜய் அசத்தும் பைரவா டீசர் விஜயின் 60வது படமான பைரவா படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றே டீசரை வெளியிட்டு இருக்கிறார்கள். விஜய், கீர்த்தி சுரேஷ்,சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் படத்தை அழகிய தமிழ் மகன் பட இயக்குனர் பரதன் இயக்கி இருக்கிறார் http://www.vikatan.com/news/cinema/70753-bairava-teaser-out.art
-
- 1 reply
- 641 views
-
-
Fift E. L. James ஆல் எழுதப்பட்ட ரோமான்டிக் ஏரோட்டிக் பிரிட்டிஷ் நாவல்Fifty Shades of Grey . மிகபிரபல்யமான இந்த நாவல் நூறு மில்லியனுக்கு மேல் உலகமெங்கும் பரபரப்பாக விற்றுத்தள்ளியது. 52மொழிகளில் மொழிபெயர்கப்பட்டது. பிரிட்டிஷ் நாவல் வரலாற்றில்மிகப்பெரிய சாதனையாக இடம்பிடித்து. ஏரோட்டிக் நாவல் என்றாலே உங்களுக்கு புரிந்திருக்கும் அஜால் குஜால் வகையை சார்ந்ததென்று. ஆனால் ஆண்களைவிட அதிகமாக பெண்களினால் இவ் நாவல் மிகரகசியமாக விரும்பி வாசிக்கப்பட்டது. எழுத்து வடிவில் சில சில்மிஷங்களை வாசிப்பது சுவரசியமானதாம், அந்த சைகலோஜிக்கை மெய்பித்திருகின்றது நாவலின் விற்பனை. Fifty Shades of Grey இன் கண்மண் தெரியாத வெற்றியை தொடர்ந்து அதன் தொடர்ச்சியான சீரிஸ் Fifty Shades Darker, Fifty Sha…
-
- 0 replies
- 9.4k views
-
-
சினிமா... என்னைக் கைவிடாத அம்மா: பிறந்தநாளில் சிவகுமார் நெகிழ்ச்சி பிறந்த நாள் விழாவில் சிவகுமார் பேசும் போது... சினிமா என் அம்மா. அவள் என்னைக் கைவிடமாட்டாள் என பிறந்த நாள் விழாவில் சிவகுமார் பேசினார். நடிகர் சிவகுமாரின் 75வது பிறந்த நாள் விழா மற்றும் 'Golden Moments of Sivakumar in Tamil Cinema' புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, தனஞ்ஜெயன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். மேலும், சிவகுமாரைப் பற்றி 'தி இந்து' மாலதி ரங்கராஜன், தேவிமணி, சுதாங்கன், மோகன்ராமன், பயில்வான் ரங்கநாதன் மற்றும் ராம்ஜி உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் தங்களுடைய பார்வைகளைப் பகிர்ந்து க…
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழின் முதல் பின்னணிப்பாட்டு முதல் இரவல் குரல் என்று சொல்வது கூடுதல் பொருத்தமாயிருக்கும். தமிழ்த் திரைப்படத்தின் ஆரம்ப காலத்தில், சரீர அழகும் சாரீர அழகும் உடையவர்களே வெள்ளித்திரையில் முன்னணியில் மின்னினார்கள். அப்படியோர் புதிய வரவே கே.அஸ்வத்தம்மா ஒரு நடிகையின் தேவைக்கு மிஞ்சிய சரீர அழகும், பாட்டுத்திறனும், கீச்சுக் குரல் தமிழ்ப்பேச்சுத் திறனுமான சாரீர அழகும் இவருக்குமிருந்தன. ”கன்னடத்துப் பைங்குயில்” என்று தாரளமாக அழைத்திருந்திருக்கலாம்... பாகவதரின் மூன்றாவது படமான ‘சிந்தாமணியி’ல், அவருக்கு ஜோடியாக சிந்தாமணியாக நடித்து பலரைப் பைத்தியமாகியவர் இவர். ஒருவருடத்திற்கும் மேலாக வெற்றிவாகை சூடிக்கொண்டு ஓடிய சிந்தாமணியின் புகழ் வெளிச்சத்தோடு கே.அஸ்வத்தம்மா நடி…
-
- 1 reply
- 550 views
-
-
தனிநபர் ஆதிக்கத்தில் நடிகர் சங்கமா?... வில்லங்க புகார்கள்...விறுவிறு காட்சிகள்! நடிகர் சங்கத்தில் நடந்துவரும் களேபரங்கள் ஒரு நிஜ சினிமாவை விஞ்சி பல நுாறு நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு திரைப்படத்தை விடவும் சுவாரஸ்யமாக பல பாகங்களில் நடப்பதுதான் வேடிக்கை. முதல் பாகத்தில் முந்தைய நிர்வாகம் வெர்சஸ் பாண்டவர் அணி என அளப்பரையை தந்தன. இரண்டாம் பாகத்தில் முந்தைய நிர்வாகம் வெர்சஸ் புதிய நிர்வாகம் என ரவுண்ட் கட்டியது. மூன்றாவது பாகத்தில் புதிய நிர்வாகம் வெர்சஸ் வாராகி என்ற தனிநபர் என பட்டையை கிளப்பியது. இப்போது நான்காம் பாகத்தில் அதிரடி திருப்பம்...நிர்வாகிகள் மத்தியிலேயே புகைச்சல் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். கலைவாணர், இயக்குனர் கே.ச…
-
- 0 replies
- 454 views
-