வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
OSCAR awards : பதினோரு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது Martin Scorsese - இயக்கத்தில் வந்துள்ள மற்றொரு சிறந்த படமான Hugo ! Martin Scorsese - நமது "இன்னொருவனின் கனவு" தொடரின் முக்கிய நாயகன். Michel Hazanavicius-யின் "The Artist " திரைப்படம் பத்து ஆஸ்கார் விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதினை 'THE ARTIST' படத்தினை இயக்கிய Michel Hazanavicius வென்றுள்ளார். சிறந்த நடிகருக்கான் ஆஸ்கார் விருதை தட்டி சென்றார் "Jean Dujardin" for "The Artist". சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை தட்டி சென்றார் "Meryl Streep" for "Iron Lady"... சிறந்த மூல திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை தட்டி சென்றது Midnight In Paris B…
-
- 2 replies
- 1k views
-
-
செல்வராகவனுக்கும் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமனின் மகள் கீதாஞ்சலிக்கும் இன்று சென்னையில் நிச்சயதார்த்தம் நடந்தது. மணமகளின் இல்லத்தில் நடந்த இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இயக்குநர் செல்வராகவனும் நடிகை சோனியா அகர்வாலும் சில வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று, இப்போது 'நண்பர்களாக' உள்ளனர். இந்த நிலையில் செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்ற வந்தார் கீதாஞ்சலி. தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமனின் மகள் இவர். செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் நாளடையில் காதல் மலர்ந்தது. பெற்றோர் துணையுடன் இருவரும…
-
- 0 replies
- 1k views
-
-
தியேட்டரில் படம் பார்த்து... விழுந்து, விழுந்து சிரித்த... வாலிபர் மரணம். மும்பை: மும்பையில் கிராண்ட் மஸ்தி இந்தி படம் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த வாலிபர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். மும்பை வசாய் பகுதியைச் சேர்ந்தவர் மங்கேஷ் போகல்(22). அவர் தனது காதலியுடன் கிராண்ட் மஸ்தி இந்தி படம் பார்க்க தியேட்டருக்கு சென்றார். படத்தில் ஏராளமான காமெடி காட்சிகள் உள்ளன. அவற்றை பார்த்த மங்கேஷ் விழுந்து விழுந்து சிரித்துள்ளார். சிரித்துக் கொண்டிருக்கையிலேயே அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை வசாயில் உள்ள கார்டினல் கிராசியாஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மங்கேஷ் படத்தை…
-
- 14 replies
- 1k views
-
-
46வயதுடைய ஊர்வசி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. இதுவரை அவர் மலையாளம், தமிழ் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். ஊர்வசிக்கும் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தேஜா லட்சுமி என்ற மகள் இருக்கிறார். 2008இல் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர். இந்நிலையில் ஊர்வசி கடந்தாண்டு நவம்பர் மாதம் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சிவபிரசாத்தை 2வது திருமணம் செய்துகொண்டார். சிவபிரசாத்தை திருமணம் செய்த பிறகு எந்த கவலையும் இல்லாமல் மிகவும் சந்தோஷமாக வாழ்கிறேன் என்று கூறினார் ஊர்வசி. ஆனால் தற்போது 46 வயதான…
-
- 0 replies
- 1k views
-
-
உரு பட்டேல் என்ற பெயரை இதுவரை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இவர் வெளிநாட்டு வாழ் இந்தியர். டாலர்களில் புரளும் மில்லினர். குஜராத்தில் பிறந்த உரு பட்டேலுக்கு ஓர் ஆசை. ராமாயணம் கதையை படமாக்க வேண்டும்! இதே ஆசையுடன் திரிந்த இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி 'ராமாயணம்' என்ற பெயரில் ஸ்கிரிப்ட் தயார் செய்து, அஜய்தேவ்கானை ராமனாகவும் அவரது மனைவி கஜோலை சீதையாகவும ஆக்கி விட்டார். இந்தப் படத்தின் பட்ஜெட் நூற்றைம்பது கோடி! ராஜ்குமார் சந்தோஷியின் இந்த அட்டாக்கால் சற்றும் மனம் தளராத விக்கிரமாத்தியன் உரு பட்டேல், 'அனுமான்' என்ற பெயரில் அதே ராமாயண கதையை தயாரிக்கிறார். இதுவொரு சர்வேதச புராஜெக்ட். பட்ஜெட் ராஜ்குமார் சந்தோஷியின் ராமாயணத்தைவிட அதிகம். இதனை புரிந்து கொள்ள ஒரு சின்ன சாம்…
-
- 0 replies
- 1k views
-
-
கே பாக்யராஜின் தூறல் நின்னு போச்சு படத்தோட ஒன் லைனை எடுத்துக்கிட்டு அதீத அன்பு எப்படி ஒரு மனுஷனோட வாழ்க்கையை பாதிக்குதுன்னு கொங்கு மண்டல மண்வாசனையோட நகைச்சுவையா சொல்லி இருக்காரு புது இயக்குநரு,பாராட்டப்பட வேண்டிய முயற்சி. படத்துல 90% புது முகங்களே..எல்லாரோட நடிப்பும் இயற்கையா இருக்கு.கத்தி,வெட்டு,குத்து,பஞ்ச் டயலாக் தலைவலி இல்லாம ஒரு அமைதியான கிராமத்துக்கதையைக்கொடுத்ததுக்காக புது இயக்குநரை வாழ்த்தலாம். தாழ்வு மனப்பான்மையும்,பொசசிவ்நெஸ்சும் உள்ள சாதாரண கிராமத்து ஆள் கேரக்டருக்கு புதுமுகம் ஸ்ரீ ஹரி நல்ல தேர்வு.மிக இயற்கையாக டைரக்டர் எதிர்பார்த்த நடிப்பை வெளிக்கொணர்கிறார். புதுமுகம் நிஷா மஞ்சள் நிற நந்தியாவட்டப்பூ போல கொள்ளை அழகு.அவரது பாடிலேங்குவேஜ்,அவுட்புட் …
-
- 1 reply
- 1k views
-
-
விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் சென்னை: விஸ்வரூபம் படம் மீது தமிழக அரசு விதித்த தடையை நீக்கி சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இன்று நடந்த இறுதிக்கட்ட விசாரணைக்கு பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் சுமார் இரவு 10 மணியளவில் கமல் தொடர்ந்த வழக்கில், படத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார். நடிகர் கமல் நடித்த, சர்ச்சைக்கு உள்ளான, விஸ்வரூபம் படத்தை, தமிழக தியேட்டர்களில் திரையிட, 15 நாட்களுக்கு, மாவட்ட கலெக்டர்கள், தடை விதித்தனர். இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், "ராஜ்கமல் பிலிம்ஸ்' சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை, நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்தார். படத்தை, 26ம் தேதி, திரையிட்டு காட்டும்படி உத்தரவிட்டு, விசாரணையை, 28ம் தேதிக்…
-
- 7 replies
- 999 views
-
-
இப்போதே உரிமையாக, காதலரின் வீட்டில் இருக்கிறார் கீதாஞ்சலி. தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனின் மகள். செல்வராகவனின் வருங்கால மனைவி. பேட்டியா... வெரிகுட்!'' - சிநேகிதியிடம் சிரிக்கிறார் செல்வா. கீதாஞ்சலி பேசியது எல்லாமே செல்வா மீதான காதல்... காதல்... காதல்! காதல் ஆரம்பமான கதை? ''நான் சென்னைப் பொண்ணுதான். பிரிட்டனில் புரொடெக்ஷன் மேனேஜ் மென்ட் படிச்சுட்டு வந்தேன். அந்தச் சமயம் செல்வா கம்பெனிக்கு இணைத் தயாரிப்பாளர் வேணும்னு கூப்பிட்டாங்க. செல்வாவைச் சந்திக்கிறதுக்கு முன்னாடி நிறையப் பயமுறுத்தினாங்க. 'அவர் ரொம்ப ரிசர்வ்டு டைப்’, 'அவர்கிட்டே வேலை செய்யுறது ரொம்பக் கஷ்டம்’னு சொன்னாங்க. ஆனால், முதல் சந்திப்பிலேயே அது எதுவும் நிஜம் இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன். …
-
- 0 replies
- 999 views
-
-
உடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா பதிந்தவர்: admin செவ்வாய், 24 மே, 2011 தியாகதீபம் திலீபன் அவர்களின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக வெளிவர இருக்கிறது. இதில் ஆணிவேர் மற்றும் பல தமிழ் படங்களில் நடித்த நடிகர் நந்தா அவர்கள் நடிக்கவிருக்கிறார். பட இயக்குனரிடம் இப் படம் குறித்தும், தான் ஏற்று நடிக்கவிருக்கும் திலீபனின் வேடம் குறித்தும் அறிந்துகொண்ட நடிகர் நந்தா அவர்கள், தன்னை வருத்தி இப்படத்தில் தத்துரூபமாக நடிகப்போவதாக சத்தியம் செய்துள்ளார். முதல் கட்டமாக தியாக தீபம் திலீபன் போல தனது உடலை மெல்லியதாக்க அவர் தனது உணவைக் குறைத்துள்ளார். அதுமட்டுமல்லாது, இறுதி 12 நாட்கள் படப்பிடிப்பின்போது, தான் உண்மையாகவே சாப்பிடாமல் நீரை மட்டும் அருந்தி படப்பிடிப்பில் கலந்…
-
- 0 replies
- 999 views
-
-
படங்கள் கமர்ஷியலாக வெற்றியும் பெற வேண்டும் கை நிறைய விருதும் கிடைக்க வேண்டும். அமீர் சேரன் போன்ற இயக்குனர்களின் ஆசை இது. அமீரின் 'ராம்' சைப்ரஸ் படவிழாவில் கலந்து கொண்டு இரண்டு விருதுகளை பெற்றது. 'பருத்தி வீரன்' இதனை மிஞ்சும் என்பது இவரது கணிப்பு. 2007 பொங்கலுக்கு 'பருத்திவீரன்' ரிலீஸாகிறது. ஆனால், போன வருடமே இப்படத்தின் சென்சார் முடிந்து விட்டது. 2007-ல் சென்ஸார் செய்தால் அடுத்த வருடமே அதாவது 2008-ல் தான் 'பருத்திவீரன்' தேசிய விருதுக்கான பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 2006-ல் சென்ஸார் செய்தால், அது 2006-க்கான படமாக கருதப்பட்டு 2007-தொடக்கத்திலேயே விருதுக்கு அனுப்பி வைக்கப்படும். அமீரைப் போல் மணிரத்னமும் தனது 'குரு'வை போன வருட கணக்கில் சேர்த்திருக்கிறார். மணி…
-
- 0 replies
- 998 views
-
-
கலாசார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்: கமலஹாசன் சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு எதிராக ஏவி விடப்பட்டிருக்கும் கலாசாரத் தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். என்று வலியுறுத்தி உள்ள நடிகர் கமலஹாசன், தடையை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து இன்று கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில், " எனக்கும் எனது திரைப்படத்திற்கும் ஆதரவாக எழுந்திருக்கும் குரல்களால் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில் எனது படம் எந்த வகையில் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பது தெரியவில்லை. அச்சமூகத்தினருக்கு ஆதரவான எனது அறிக்கைகள், பேச்சுக்கள் அனுதாபியாக என்னை முத்திரை குத்தியுள்ளன. அதேசமயம், ஒரு நடிகனாக, எது மனிதாபிமானமோ அதற்காக நான் பல படி மேலே போய் கு…
-
- 4 replies
- 998 views
-
-
சினிமா கனவுடன் அலைபவர்களுக்கு.. - அன்புடன் மகேந்திரன் [size=4]எ[/size]னக்கு அறிவுரைகளில் நம்பிக்கை இல்லை. சிநேகிதமாக எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் எனக்குப் பிடிக்கிறது. நீ கனவு கண்டுகொண்டு இருக்கிற துறையில் நுழைந்து, நான் பெற்ற அனுபவங்களும் சிந்தனைகளும்தான் இந்தப் பகிர்தலுக்கான எனது தகுதி. நான், உன் மீதுகொண்ட அன்பும் அக்கறையும்தான் எனது இந்தப் பகிர் தலுக்கான காரணம். நான் திட்டமிட்டு இங்கே வரவில்லை என்றாலும்கூட, எனக்கும் கனவு இருந்தது. அது சினிமா குறித்த கனவு. ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்கிற கனவு. இந்த சினிமா எனக்கானது இல்லை, என் சமூகத்துக்கானது இல்லை என்று, அன்றைய சினிமாக்கள் மீதான எனது அதிருப்தியில் இருந்து உருவான கனவு. எனது தி…
-
- 0 replies
- 998 views
-
-
ஐதராபாத்தில் புகழ்பெற்ற தொழிலதிபர் பிரகாஷ் ராஜ். பிளஸ் டூ படிக்கும் இவரது மகள் வேகாவை பணத்துக்காக ஒரு கும்பல் கடத்துகிறது. அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் போலீஸ் அதிகாரி ஜெயராம். இதற்கிடையே சென்னையிலிருந்து கிரிக்கெட் போட்டியை பார்க்க, ஐதராபாத்துக்கு கிளம்புகிறார்கள் நண்பர் பட்டாளமான எஸ்.பி.பி. சரண், பிரேம்ஜி, ஷிவா, வைபவ். நள்ளிரவில் வழி தவறி ஓரிடத்தில் இவர்களது வேன் சென்றடைகிறது. அங்கு இவர்களது வேனுக்கு இடையில் வந்துவிழுகிறார் போஸ் வெங்கட். குண்டு காயத்துடன் இருக¢கும் அவரை காப்பாற்ற நண்பர்கள் முயற்சிக்கிறார்கள். மேலும் வாசிக்க... http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=312
-
- 0 replies
- 997 views
-
-
2017 பொங்கல் ரிலீஸ் படங்களில் கவனிக்க வேண்டியவை..! பொங்கலுக்கு ரிலீஸாகும் படங்கள் என்று தினம் ஒரு படம் அப்பேட் ஆகிக்கொண்டே இருக்கிறது. இதுவரை எட்டு படங்கள் பொங்கல் ரிலீஸ் என்று அறிவித்திருக்கும் நிலையில், அந்த படங்கள் எது..? அந்த படங்களில் என்ன ஸ்பெஷல் என்று கொஞ்சம் தெரிந்து கொள்வோமா... ‘பைரவா’ பொங்கல் ரேஸில் முதலில் பெயர் கொடுத்தது, விஜய்யின் ‘பைரவா’ படம் தான். இந்த படத்தில் முதன் முதலாக விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் விஜய் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த இரண்டு செய்திகள் தான் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஏனென்றால், ‘ரஜினி முருகன்’ படத்தில் கீர்த்தியின் அழகும், ‘கபாலி’ படத்தில் …
-
- 0 replies
- 997 views
-
-
லாஸ் ஏஞ்செல்ஸ்: ஸ்லம்டாக் மில்லியனர் படம் சிறந்த படத்துக்கான ஆஸ்ரையும், அதன் இயக்குனர் டேனி போயலுக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும் கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்தப் படம் மொதமதம் 8 விருதுகளை வென்றுள்ளது. இதில் பணியாற்றிய இந்தியர்களான ரஹ்மான் 2 விருதுகளையும், சவுண்ட் மிக்சிங்குக்கு பூக்குட்டி ஒரு விருதையும் வென்றுள்ளனர். இந்தப் படத்துக்கான மற்ற ஆஸ்கர் மற்ற விருதுகளை வென்றவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சிறந்த திரைக்கதை தழுவல் (Bஎச்ட் ஆடப்டெட் ஸ்cரேன்ப்லய்) விருது இந்தப் படத்தின் கதாசிரியர் சிமேன் பியேபோய்க்கும், சிறந்த சினிமாட்டோகிராபிக்கான விருது ஆண்டனி டாட் மாண்டலுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படம் மொத்தம் 10 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுக…
-
- 0 replies
- 996 views
-
-
சென்னை: பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் சென்னையில் இன்று காலமானார். 45 வயதான இசைக் கலைஞர் ஸ்ரீநிவாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் இன்று காலை 9.30 மணிக்கு காலமானார். ஆந்திர மாநிலம் பாலகோலில் 1969 பிப்ரவரி 28 ஆம் தேதி பிறந்த ஸ்ரீநிவாஸ், பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். http://news.vikatan.com/article.php?module=news&aid=32536
-
- 16 replies
- 996 views
-
-
கலக்கல் ஹாலிவுட்: குயின் ஆஃப் காட்வே! பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமானால் மிகைப்படுத்தல்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இப்படி இடைச்செருகல்கள் இல்லாமல் ஒரு பிரபலத்தின் உண்மைக் கதையை ஊருக்கு உரைக்க வருகிறது ‘குயின் ஆஃப் காட்வே’ படம். வாழ்க்கையில் வறுமையும் துன்பமும் சோகமும் நோயும் ஒன்றாகச் சேர்ந்து மிரட்டும் உகாண்டா நாட்டுக் குடும்பத்தில் பிறந்து, இன்று செஸ் விளையாட்டில் கொடிக் கட்டிப் பறக்கும், பியோனா முட்டேசியின் வாழ்க்கை வரலாறுதான் படத்தின் கதை. உகாண்டாவின் தலைநகர் கபாலாவில் உள்ள காட்வே நகரில் குடிசைகள் நிறைந்த பகுதியில் வாழ்கிறார் படத்தின் நாயகி மடினா நல்வாங்கா (பியோனா முட்டேசி). 3 வயதில் தந்தையையும், இரண்…
-
- 1 reply
- 996 views
-
-
http://www.youtube.com/watch?v=7k3gSI1EKcE...feature=related
-
- 0 replies
- 996 views
-
-
பிரசாந்த் கதா நாயகனாக நடிக்கும் தென்னிந்திய தமிழ்த்திரைப்படம் அடைக்களம் தமிழகத்தில் வருகிற மாதம் திரையிடப்படவுள்ளது. இலங்கைத்தமிழர்களான பாலு மகேந்திரா, வி.சி.குகனாதன் வரிசையில் இப்படத்தின் இயக்குனர் யாழ்ப்பாணம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட புவனராஜா. இவர் கொழும்பு பம்பலப்பிட்டியின் பழைய மாணவர் ஆவார். கொழும்பில் சிறிகாந்தம் சகோதரிகளிடம் முறைப்படி பரதனாட்டியம் கற்று கொழும்பில் பரதனாட்டிய அரங்கேற்றம் செய்தார். கடந்த 18 வருடங்களாக தென்னிந்தியத்திரைப்படங்களா
-
- 0 replies
- 996 views
-
-
'பாகுபலி' ரிலீஸையொட்டி கல்லூரிக்கு விடுமுறை விடுங்கள், இல்லாவிட்டாலும் வரமாட்டோம்: பி.இ. மாணவர்கள். ஹைதராபாத்: பாகுபலி படம் ரிலீஸாவதையொட்டி ஜூலை 10ம் தேதி அன்று விடுமுறை விடக் கோரி தெலுங்கானாவைச் சேர்ந்த என்ஜினியரிங் மாணவர்கள் கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி படம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் மெட்சல், ஹைதராபாத்தில் உள்ள சிஎம்ஆர்ஐடி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் முதல்வருக்கு வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது, மதிப்பிற்குரிய ஐயா, சிஎம்ஆர்ஐடி கல்லூரியில் உள்ள சிஎஸ்இ டிபார்ட்மென்ட்டைச் சேர்ந்த மாணவர்கள…
-
- 0 replies
- 995 views
-
-
இனிது இனிது- திரைவிமர்சனம் விரலும் விரலும் உரசிக்கொள்வதையே ஒரு திருவிழாவாக்கி ஆயிரம் தாமரை மொட்டுகளை மலரச்செய்த அந்தகால காதல் போயே போச்! கட்டிப்பிடிச்சுப்போம்… இது நட்பு. விட்டு விலகிப்போம்… இது காதல்னு சொல்ற 2010 ன் ‘நொடி முள்’ லவ்தான் இனிது இனிது. ஒரு என்ஜினியரிங் கல்லு£ரியில் சேரும் முதலாண்டு மாணவ மாணவிகளுக்குள் முகிழ்க்கிற காதலும், அதற்கு மூன்றாமாண்டு மாணவர்கள் செய்கிற இடையூறும்தான் முழுநீள படம். அதை சொல்லியிருக்கிற விதம் இருக்கிறதே, அறுபதை தாண்டியவர்களை கூட ஃபுட் போட்டில் நின்றாவது ஒரு முறை பிளாஷ்பேக் அடிக்க வைக்கும்! ஆதித், ரேஷ்மி இருவருக்கும் நடுவே துளிர்க்கிற நட்பு அதையும் தாண்டி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிற நேரத்தில் ஆதித்துக்கு அவசரம். ‘…
-
- 2 replies
- 995 views
-
-
சஞ்ஜே லீலா பன்சாலியின் இயக்கத்தில் 2002 வெளிந்த தேவதாஸ் ஹிந்தி திரைப்படம் டைம் சஞ்சிகையின் சிறந்த 10 படங்களுக்குள் 8வது இடத்தைப் பிடித்திருக்கிறது. அத்தோடு இந்தப் படம் வெளிவந்து ஒரு தசாப்தம் ஆவதால் தேவதாஸ் திரைப்படத்தை 3டி தொழில்நுட்பத்தினூடாக வெளியிட திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் சஞ்ஜே லீலா பன்சாலி. வீடியோ செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும்
-
- 2 replies
- 995 views
-
-
கேரள அரசின் சிறந்த நடிகை விருது பெற்றுள்ள மீரா ஜாஸ்மின், தமிழில் பரத்துடன் நடித்துள்ள நேபாளியிலும், மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்துள்ள ஒரு படத்திலும் நெருக்கமான முத்தக் காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளாராம். இந்தக் கோடை காலம் நிச்சயம் மீராவுக்கு எப்படி இருக்குமோ, ஆனால் அவரது ரசிகர்களுக்கு ஜில் ஜில் கோடையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழில் பரத்துடன் இணைந்து நடித்த நேபாளி படமும், மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள இனதே சிந்தாவிஷ்யாயம் என்ற படமும் ஒரே நேரத்தில் திரைக்கு வருகின்றன. இதில் விசேஷம், இரு ஹீரோக்களுடன் மீரா படு நெருக்கமாக நடித்துள்ளதுதான். குறிப்பாக முத்தக் காட்சிகளில் படு நெருக்கம் காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார…
-
- 1 reply
- 994 views
-
-
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராம்குமார்- ஹேமா ராம்குமார் தம்பதிகளின் மகன் அஸ்வினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சவுந்தர்யா- அஸ்வின் திருமணம் இன்று காலை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் நடந்தது. காலை 6 மணிக்கு திருமண நிகழ்ச்சி தொடங்கியது. மணமக்கள் மேடையில் அமர்ந்து இருந்தனர். சவுந்தர்யா அரக்கு கலரில் பட்டு புடவையும் பச்சை நிற ஜாக்கெட்டும் அணிந்து இருந்தார். மணமகன் அஸ்வின் வேட்டி அங்கவஸ்திரம் அணிந்து இருந்தார். மண மேடையில் அக்னி வளர்த்து புரோகிதர்கள் வேதமந்திரங்கள் ஓதினர். அதன் அருகில் உள்ள இருக்கையில் ரஜினி அமர்ந்தார். தனது மடியில் சவுந்தர்யாவை உட்கார வைத்தார். சரியாக 8 மணிக்கு மண மகள் …
-
- 0 replies
- 993 views
-
-
நகைச்சுவை நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள் தமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவையே சாரும். அவர் உடை அணியும் அழகே தனி. புதிய நாகரிகத்தை தன்னை பார்த்து பிறர் தெரிந்துகொள்ளும்படி உடை அணிவார்.சந்திரபாபுவுக்கு மிகவும் பிடித்த உடை - வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட். சட்டையின் கையை மடித்துவிட்டிருப்பது அழகாக இருக்கும். பேண்ட் பாக்கெட்டுக்கு வெளியே கர்சிப் தெரிவதுபோல் ஸ்டைலாக வைத்திருப்பார்.Perfume மீது அதிக காதல் கொண்டிருந்தார் சந்திரபாபு. அவருக்கு மிகவும் பிடித்த Perfume - Channel 5. படபிடிப்புகளில், காட்சியில் நடித்துவிட்டு வந்ததும் - 'ரெவ்லான்' என்ற உய…
-
- 0 replies
- 992 views
-