ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142925 topics in this forum
-
(செ.தேன்மொழி) 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகூடிய அதிகாரம், இராணுவ பின்னணியை கொண்ட ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ போன்ற ஒருவர் கையில் கிடைக்கப் பெற்றால் அது பாரிய நெருக்கடிகளை தோற்றுவிக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கத்தை ஏற்படுத்தும் செயற்திட்டமொன்று இடம்பெற்றது. இதன்போது கருத்துரைக்கும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது , இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பொறுத்தமட்டில் அவர் பல போராட்டங்களுக்கு மத்தியில் அரசியலில் முன்னேறி வந்தவர். நீண்டகால அரசி…
-
- 4 replies
- 608 views
-
-
(இராஜதுரை ஹஷான்) மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் மக்களின் நலன் கருதி தேவைக்கேற்ப வழங்கப்படுமே தவிர ஒருபோதும் வேறுப்படுத்திக் கொடுக்க முடியாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சில் இன்று அரச அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மாகாணசபை முறைமையை இரத்து செய்ய வேண்டும் என நான் குறிப்பிட்ட தனிப்பிட்ட கருத்தை அரசியல்வாதிகள் அரசியல் மட்டத்தில் பிரதான பேசுபொருளாக மாற்றியமைத்து விட்டார. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்ட போது நான் கடுமையாக எதிர்த்தேன். அன்றிலிருந்து இன்று வரை அதற்கு எதிராகவே க…
-
- 3 replies
- 843 views
-
-
கண்ணீர்விட்டு அழுவதற்கு கூட சந்தர்ப்பம் அற்ற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது- மாவை எங்களுக்கு கண்ணீர்விட்டு அழுவதற்கு கூட சந்தர்ப்பம் அற்ற நிலைமை தற்போது, நாட்டில் ஏற்பட்டுள்ளதென இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ‘கோப்பாய் கோமகன்’ என்று அழைக்கபடுபவருமான அமரர் வன்னியசிங்கத்தின் 61ஆவது நினைவுதினம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமையகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. தமிழ் அரசுக் கட்சியின் கோப்பாய் தொகுதி தலைவர் அ.பரஞ்சோதி தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவுதின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில…
-
- 2 replies
- 443 views
-
-
யாழ் போதனா வைத்தியசாலையில் காணப்படும் ஆளணி மற்றும் பெளதீக வள பற்றாக்குறை தொடர்பில் சுகாதார அமைச்சருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டு தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையிலான பிரதிநிதிகளிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்திற்கு இன்றையதினம் வருகைதந்திருந்த யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தலைமையிலான பிரதிநிதிகள் அமைச்சரை சந்தித்து வைத்தியசாலையின் ஆளணி மற்றும் பௌதிக வள பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்பு தேவைப்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தனர். குறிப்பாக யாழ் போதனா வைத்தியசாலை தற்போது பல வைத்தி…
-
- 30 replies
- 2.7k views
-
-
தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி வேறு பிரிவினரிடம் ஒப்படைப்பு போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டிற்கு தப்பிச் சென்ற கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரியை மேலதிக விசாரணைகளுக்காக கோயம்புத்தூர் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதீப் குமார பண்டார எனும் குறித்த பொலிஸ் அதிகாரி அண்மையில் இராமநாதபுரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்தியாவில் உயிரிழந்ததாக கூறப்படும் கொஸ்கொட தாராக தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரியே இந்த சம்பவம் தொடர்பிலிம் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. அண்மையில் சபுகஸ்கந்த பகுதியில் கண்…
-
- 1 reply
- 613 views
-
-
இலங்கை சிங்கள பௌத்த நாடில்லை; மங்கள சொன்ன கருத்து குறித்து பொலிஸார் விசாரணை இலங்கை சிங்கள பௌத்த நாடில்லை எனத் தெரிவித்தமை குறித்து முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைப் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். மாத்தறையில் சுமார் இரண்டு மணிநேரம் மங்கள சமரவீரவை அவரது கருத்துக் குறித்து பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். இதை மங்கள உறுதிப்படுத்தினார். மங்கள சமரவீர வாக்கு மூலம் வழங்குவதற்காகச் சென்றவேளை அவருடன் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் சிலரும் சென்றனர். ஒரு நோக்கத்துக்காக இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களும் இணைந்துகொண்டமை இதுவே தல்தடவை என மாத்தறை அரசியல்வாதியொருவர் தெரிவித்துள்ளார். மாத்தறையில் மங்க…
-
- 12 replies
- 956 views
-
-
அனைவருக்கும் வீடு – வேலைத்திட்டம் யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. September 6, 2020 அனைவருக்கும் வீடு என்ற செயற்றிட்டத்திற்கு கீழ் யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடமைப்புக்கான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 113 குடும்பங்களுக்கு, 0.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடுளை நிர்மாணிப்பதற்கான முதலாம் தவணை கொடுப்பனவு பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இதற்கான நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலகத்தில் (06) காலை இடம்பெற்றது. இதன்போது, 113 குடும்பங்களுக்குமான முதலா…
-
- 17 replies
- 2.7k views
-
-
பெரும்பான்மையினரின் இனவாதம் தேசியவாத போர்வையை போர்த்திக்கொண்டு வந்துள்ளது இது மிகவும் ஆபத்தானது-ரவூப் ஹக்கீம் முகப்பு இருபதாம் ஆண்டு நிறைவு தொகுதி வெளியீட்டிற்கான கட்டணம் எம்மைப்பற்றி தொடர்புகளுக்கு விளம்பரம் Thinakkural Friday ,18 Sep 2020,12:33:21pm Today's E-Paper உலகம் உள்ளூர் கட்டுரை சினிமா தொழில்நுட்பம் விளையாட்டு வீடியோ பெரும்பான்மையினரின் இனவாதம் தேசியவாத போர்வையை போர்த்திக்கொண்ட…
-
- 1 reply
- 704 views
-
-
காணி ஆவணம் இல்லாதவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்க கோரிக்கை! நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள போதிலும் அக் காணிக்கான ஆவணம் இல்லாதவர்கள் விரைவாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தமது பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார், முல்லைத் தீவுக்கான ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எமது பகுதிகளில் பாரியளவு காணிப் பிரச்சினை காணப்படுகிறது. வன இலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள காணிப் பிரச்சினைகளே அதிகமா…
-
- 0 replies
- 467 views
-
-
பொதுமக்கள் முறைப்பாட்டு பெட்டிகள் வழங்கிவைப்பு by : Yuganthini பொதுமக்கள் முறைப்பாடு மற்றும் ஆலோசனைப் பெட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல், இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயத்தின் அனுசரணையில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவிடம் கையளிக்கப்பட்டுள்ளது . வன்னிப்பிராந்தியத்தில் பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதிகளான பேருந்து நிலையம், பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்ற இடங்களில் பொதுமக்கள் ஆலோசனை மற்றும் முறைப்பாட்டு பெட்டிகள் பொருத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . இப்பெட்டிகளில் பொதுமக்கள்…
-
- 0 replies
- 296 views
-
-
கிரிக்கெட்டா, கொரோனாவா என நாமல் தீர்மானிக்க வேண்டும் – மனோ! by : Benitlas http://athavannews.com/wp-content/uploads/2020/09/mano-ganesan-1.jpg கிரிக்கெட்டா, கொரோனாவா என நாமல் தீர்மானிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். “நாட்டில் கொரோனா நோயாளரில் பெரும்பாலோர் வெளிநாடு சென்று வந்தோர். இந்நிலையில், இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, நமது சுகாதார துறையின் 14 நாள் தனிமைபடுத்தல் பரிந்துரையை ஏற்க மறுக்கிறார்கள். ஆகவே விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச, கிரிக்கெட்டா, கொரோன…
-
- 0 replies
- 411 views
-
-
வடக்கில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு! கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையில் மஞ்சளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டது. எனினும் இன்னமும் வடக்கிற்கு மஞ்சள் கிடைப்பதில்லை என கூறப்படுகின்றது. அரசாங்கத்தினால் மஞ்சள் விற்பனை செய்வதற்கு நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் வடக்கில் 4000 ரூபாவுக்கும் மஞ்சள் கொள்வனவு செய்ய முடியவில்லை என வடக்கு மாகாண நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர். வட மாகாணத்தில் உணவுக்கு மாத்திரமின்றி ஆலய செயற்பாடுகள், வர்த்தக நிலையங்கள், வீடுகளில் கிருமி நீக்கம் செய்வதற்கு மஞ்சள் பயன்படுத்துகின்றனர். மஞ்சள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் கடை உரிமையாளர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. https://newuthayan.com/வடக்கில்-…
-
- 24 replies
- 3k views
- 1 follower
-
-
பேரவையின் இணைத் தலைமைப் பதவியிலிருந்து விலகுவது எதற்காக? விக்கினேஸ்வரன் கருத்து தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதற்கு நிதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் தீர்மானித்திருக்கின்றார். தேசிய ரீதியான நெருக்கடிகள் தமிழ் மக்களுக்கு உருவாகும் போது, கட்சி சார்பற்ற வகையில் அதனை தமிழ் மக்கள் பேரவை கையாள்வதற்கான ஏதுநிலையை ஏற்படுத்துவதற்காகவே அதன் இணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதற்கு தான் தீர்மானித்ததாக நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் சற்று நேரத்துக்கு முன்னர் தினக்குரல் இணையத்துக்குத் தெரிவித்தார். இது தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்த்தர்களுடன் இது தொடர்பாக தான் இன்று காலையில் பேசியதாகவும், தமிழ் மக்கள் …
-
- 0 replies
- 359 views
-
-
முன்மொழியப்பட்ட 20வது திருத்தம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் கருத்துக்கள் தேவையற்றவை மற்றும் அனுமானத்தின் அடிப்படையிலானவை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45வது அமர்வில் நிகழ்ச்சி நிரல் இரண்டின் கீழான பொது விவாதத்தின்போது ஜெனீவாவில் ஐ.நா.வின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி தயானி மென்டிஸ் அளித்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20வது திருத்தம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை எதிர்மறையாக பாதிக்கும் என உயர்ஸ்தானிகர் மைக்கேல் பச்லெட்டின் கடந்த திங்களன்று தெரிவித்திருந்தார். நாட…
-
- 2 replies
- 575 views
-
-
அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயாராகின்றது ஹக்கீம், ரிஷாட், திகாம்பரம் தரப்பு? அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோரின் கட்சிகள் ஆதரவளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கள இணைய ஊடகமொன்று இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசாங்கத்தின் உயர்மட்டத்துடன் இவர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியிலுள்ள ஏதேனும்மொரு தரப்பு 20 இற்கு ஆதரவு வழங்க மறுக்கும்பட்சத்தில் இவர்களின் ஒத்துழைப்பை பெறும் நோக்கிலேயே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய ச…
-
- 0 replies
- 546 views
-
-
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்திலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலோ தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது என கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. திலீபனின் நினைவு நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்த நிகழ்வுகளை நேற்று முன் தினம் (15) யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்றே கிளிநொச்சியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட அலுவலகமான அறிவகத்திற்கு நேற்று (16) சென்ற கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிறிதரன் எம்பியிடம் கட்டளையை வழங்கியுள்ளார். ஏ.ஆர். 1304 /20 என்ற வழக்கின் பிரகாரம் 15-9-2020 தொடக்கம் 28-09…
-
- 2 replies
- 461 views
-
-
முகமாலையில் எலும்புக்கூடுகள், புலிகளின் சீருடைகள், துப்பாக்கிகள் மீட்பு; கண்ணிவெடி அகற்றும் போது அதிர்ச்சி Bharati May 22, 2020 முகமாலையில் எலும்புக்கூடுகள், புலிகளின் சீருடைகள், துப்பாக்கிகள் மீட்பு; கண்ணிவெடி அகற்றும் போது அதிர்ச்சி2020-05-22T19:08:48+00:00உள்ளூர் கிளிநொச்சி – முகமாலையில் பெருந்தொகை எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் துப்பாக்கிகளும் காணப்பட்டதாகவும் யாழ்ப்பாண ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்று வரும் பகுதியில் இன்று இந்த எலும்புக்கூடுகள் அட…
-
- 8 replies
- 1.4k views
-
-
ஒக்டோபரில் வருகிறது பட்ஜெட் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் முதலாவது வரவு - செலவுத் திட்டம் ஒக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான இந்த வரவு -செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு, நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. . நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை தயாரித்தல் கீழ் கண்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கி 2021 ஆம் ஆ…
-
- 0 replies
- 285 views
-
-
யாழில்.. கடலில் நடப்பட்ட, பனங்குற்றிகள் அகற்றப்பட்டன யாழ்ப்பாணம் அரியாலை தொடக்கம் கோவிலாக்கண்டி வரையான கடற்பரப்பில் நாட்டப்பட்டிருந்த பனை குற்றிகள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் நேற்று(புதன்கிழமை) அகற்றப்பட்டுள்ளன. யுத்த காலத்தில் இராணுவத்தினரால் பாதுகாப்புக் காரணங்களுக்காக குறித்த கடற் பிரதேசத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான பனைக் குற்றிகள் நாட்டப்பட்டன. அவை இதுவரை அகற்றப்படாத நிலையில் மீனவர்களின் தொழில் நடவடிக்கைளுக்கு இடையூறாக காணப்பட்டன. இந்நிலையில், அண்மையில் ஆய்வுப்பணிகளுக்காக குறித்த பிரதேசத்திற்கு சென்ற களப்பு அபிவிருத்தி திட்ட அதிகாரிகளின் ஆலோசைனைக்கு அமைய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சிகளையடுத்து இராணுவத்தினரா…
-
- 3 replies
- 996 views
-
-
இலங்கையின் பாதாள உலகக்குழு தலைவரும் அரசாங்கத்தினால் தேடப்பட்டவருமான மத்துமகே லசந்த சமிந்த பெரேரா என அறியப்படும் அங்கொட லொக்கா மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளதாகவும், அவரது மரணத்தில் வேறு எந்த காரணமும் இல்லை எனவும் இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார். அங்கொட லொக்காவின் மரணத்தையடுத்து அதில் ஏதேனும் மர்மங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையிலும் இரசாயனவியல் பரிசோதனையிலும் அவர் இயற்கையான முறையில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அவருடன் கோயம்புத்தூரில் உள்ள பாலாஜீநபகரில் இருந்த இலங்கை பெண்ணான 27 வ…
-
- 0 replies
- 429 views
-
-
ஹட்டன் நகரத்தை மலையகத்தின் தலைநகராக்குவதே எமது இலக்கு. அதற்கேற்ற வகையில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும். சுற்றுலாத்துறை மேம்படுத்தப்பட்டு அதன் ஊடாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே எமது திட்டங்கள் அமையும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். ஹட்டன் நகரிலுள்ள வர்த்தகர்களுக்கும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு இடையிலான சந்திப்பு இன்று (17.09.2020) ஹட்டன் நகரசபையில் நடைபெற்றது. நகரசபை தவிசாளரும் இதில் பங்கேற்றிருந்தார். ஹட்டன்- டிக்கோயா நகரத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள், பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சின…
-
- 0 replies
- 427 views
-
-
நல்லூர் பிரதேச சபைக்குள் உட்புகுந்து சபையின் செயலாளர் எஸ்.சுதர்சன் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று நடைபெற்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் நல்லூர் அரசடியைச் சேர்ந்த ஒருவர், திருநெல்வேலி சந்தை தொகுதியில் உள்ள கடை தொடர்பில் பிரதேச சபைச் செயலாளரால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாகத் தெரிவித்து பிரதேச சபைக்குள் சென்று முரண்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் திடீரென பிரதேச சபைச் செயலாளரை தாக்கியுள்ளார். தாக்கிவிட்டுத் தப்பிச் செல்ல முற்பட்ட போதும், அவரை தடுத்துவைத்த பிரதேச சபை ஊழியர்கள் கோப்பாய் பொலிஸாரிடம்ஒப்படைத்தனர். சந்தேக நபரின் தாக்குதலுக்கு உள்ளன நல்லூ…
-
- 0 replies
- 499 views
-
-
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் தனுஸ்கோடி அடுத்த கம்பி பாடு கடற்கரையில் கடந்த 5 ஆம் திகதி மெரைன் பொலிஸாரினால் இலங்கை மொனராகலை பகுதியைச் சேர்ந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் பிரதீப் குமார் பண்டார என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். போதை பொருள் விற்பனை செய்வதில் இவருக்கும் தமிழகத்தில் உயிரிழந்த இலங்கை நிழலுலக தாதா அங்கொட லொக்காவுக்கும் இடையில் தொடர்பு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து 5 நாட்கள் சி.பி.சி.ஐ.டி காவலில் எடுத்து விசாரிக்க இராமநாதபுரம் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (17) அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் கொழும்பு புறநகர் பகுதியான சபுகஸ் கந்த பகுதியிலுள்ள மர கடையிலிருந்து…
-
- 0 replies
- 351 views
-
-
( எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், வெளிநாட்டு உளவுச் சேவை ஒன்றிலிருந்து கடந்த 2019 ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் தகவல் கிடைக்கப்பெற்றது முதல் பல தடவைகள் அப்போதைய ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட போதும், தாக்குதல்கள் நடாத்தப்பட இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அவருக்கு ஒரு போதும் தான் கூறவில்லை என, அரச உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தன தெரிவித்தார். எவ்வாறாயினும் 2019 ஏப்ரல் 4 ஆம் திகதி வெளிநாட்டு உளவுச் சேவை ஒன்றிலிருந்து கிடைத்த தகவல், உளவுத் தகவல் அல்ல எனவும் அது ஒரு தகவலாக மட்டுமே இருந்ததாக சிரேஷ்ட பிரதிப் பொல…
-
- 3 replies
- 638 views
-
-
9 மாகாண சபைகளை 3 ஆக குறைக்க யோசனை! புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் போது மாகாண சபை முறை தொடர்பாகவும் ஆராய வேண்டுமென அரசாங்கத்திற்கு சில தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் தற்போது காணப்படும் 9 மாகாண சபைகளையும் 3 ஆக குறைப்பதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்திரத்துள்ள குழுவொன்று மன்னர் காலத்தில் ருகுனு ரட்ட , மாயா ரட்ட மற்றும் பிகிடி ரட்ட என்று மூன்று பிரிவுகளே இருந்தன இதன்படி அந்த மூன்று பிரிவுகளையும் உள்ளடக்கியதாக அந்த மாகாண சபைகளை அமைக்க வேண்டுமென்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய மாகாண சபைகள் முறைமையால் வீண் செலவுகளே அதிகமெனவும் இதனால் இந்த முறைமையில் மாற்றம் ச…
-
- 9 replies
- 1.6k views
-