Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக புறகோட்டை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு துறைமுகத்திற்கு அத்தியாவசியமான பொருட்களுடன் வந்த மிகப்பெரிய கப்பலில் பொருட்களை இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக துறைமுக சேவைகள் ஊழியர்கள் தொழிலுக்கு செல்ல தாமதமாகியுள்ளது. இதன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக கப்பல்கள் அருகில் உள்ள துறைமுகங்களை நோக்கி சென்றுள்ளது. அதனை இலங்கைக்கு மீண்டும் கொண்டு வர தாமதம் ஏற்படுவதுடன் மேலதிக செலவுகளையும் ஏற்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.tamilwin.com/community/01/261260?ref=imp-news

  2. மாவீரர் நாள் நினைவேந்தலுக்கும் தடையா..? வெறும் அரசியல் இலாபத்திற்காக மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் நுழைந்த தமிழ் தேசியவாதிகள் - குதுகலிக்க போகும் தென்னிலங்கை.! தமிழீழ மாவீரர் நாள் நவம்பர் 27ம் திகதி நினைவு கூரப்படவுள ்ள நிலையில் மாவீரர் நாள் நினைவு கூரலுக்காக துயிலும் இல்லங்களை துப்புரவு செய்ய சென்றிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், அவர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கும் முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. குறிப்பாக யாழ்.கோப்பாய் மற்றும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இதே வேளை துப்பரவு பணிகள…

  3. வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரின் வாகனத்தினையும் சேதப்படுத்தியுள்ளனர். இன்று இரவு 7.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் வாகனத்தில் வருகை தந்துள்ளார். இதன் போது கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் இளைஞர் குழுவோன்று அவரின் வாகனத்தினை வழிமறித்துள்ளனர். அதனையடுத்து வாகனத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கீழே இறங்கி அவ் இளைஞர்களுடன் கலந்துரையாட முற்பட்ட சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்த அந்த இளைஞர் குழு முயன்றுள்ளது. அவரின் வாகனத்திற்கும் சேதம் விளைவித்துள்ளனர். இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக பாத…

  4. தீபாவளி பண்டிகை நாளில் இறைச்சி வாங்க சென்றவர் மீது கத்திக்குத்து..! யாழ்.கோப்பாயில் சம்பவம். தீபாவளி பண்டிகை நாளில் கோப்பாய் சந்தியில் மாட்டிறைச்சி கடைக்காரனின் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் கோப்பாய் சந்தியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்பவத்துடன் தொடர்புடைய புத்தளத்தைச் சேர்ந்த சுன்னாகத்தில் வசிக்கும் இறைச்சிக்கடை உரிமையாளர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இறைச்சி வாங்கச் சென்றவர் பசு மாட்டு இறைச்சிபோல் உள்ளது என்று தெரிவித்ததால் உரிமையாளர் கோபமடைந்து கத்தியால் க…

  5. உதயமாகிறது தமிழர் தேசிய சபை.! தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஒன்றுபட்டு உழைப்பதற்காகவும், துறைசார் ஆலோசனைகள், நிபுணத்துவ உதவிகளை வினைத்திறன் மிக்கதாகப் பெற்றுக் கொள்வதற்காகவும் தேசிய சபை ஒன்றை அமைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- "தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஒன்றுபட்டு செயற்படுவதற்காக இப்போது தமிழ்த் தேசியம் சார்ந்து செயற்படும் கட்சிகளை ஒன்றிணைத்துப் பயணிக்க ஆரம்பித்துள்ளோம். இது தொடர்பில் நான் விடுத்த கோரிக்கைக்கு அனைத்து தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சி…

  6. இங்கிலாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிக்கப்படவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்காக இந்தியா இங்கிலாந்துடன் தகவல்ப் பரிமாற்றங்களில் ஈடுபட்டிருக்கிறது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் தடைநீக்க வேண்டுகோள்களினைப் பரிசீலிக்கும் தீர்ப்பாயம் அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளை பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலிலிருந்து நீக்குவதற்காக எடுத்த முடிவிவினையடுத்தே இந்தியா அத்தடை நீட்டிக்கப்படவேண்டும் என்கிற அழுத்தத்தினை இங்கிலாந்து மீது திணித்திருக்கிறது. இந்திய ஒன்றியம் இத்தீர்ப்பாயம் வெளியிட்ட தீர்மானம்பற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, பயங்கரவாதிகள் எனும் பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தொடரப்படுவதை தமது நாடு விரும்புகிறதென்று அறிவித்தி…

    • 6 replies
    • 823 views
  7. இலங்கைப் பயணிகளுக்கு வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை 42 Views இலங்கை அல்லது எந்தவொரு மூன்றாம் நாட்டுக்கு நுழைவு அனுமதி வழங்குவதற்காக பணம் அல்லது எந்தவொரு நிதிக் கட்டணத்தையும் கோரும் நபர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. உள்வரும், வெளிச்செல்லும் அனைத்து இலங்கைப் பயணிகளுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்திருக்கும் அறிவித்தலில், சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்களைத் தவிர இலங்கைக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமும் இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் மேலதிக மற்றும் உண்மைத் தகவல்களுக்கு தமக்கு அருகிலுள…

  8. கொரனாவால் இறந்த உடல்களை மன்னாரில் புதைக்கும் போது மக்கள் தொடர்பிலும் கரிசனை தேவை : செல்வம் கொரோனாவால் மரணிக்கும் இஸ்லாமியர்களின் உடல்களை புதைப்பதற்காக மன்னார் முசலியில் இடம் ஒதுக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தொடர்பிலும் கரிசனை கொள்ள வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மன்னார், முசலிப்பகுதியில் கொரனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை புதைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல்வேறான வாதபிரதிவாதத்திற்கு பின்னர் கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின்…

  9. மட்டு. மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முக்கிய விடயங்கள் ஆராய்வு November 14, 2020 மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தலைமையில் நேற்று (13) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரனின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரான மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவனேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற…

  10. சமூகத்தில் காணப்படும் தீமை எனும் இருளை விரட்டி நன்மை எனும் வெளிச்சத்தை ஏற்படுத்துவதாக இத் தீபாவளிப் பண்டிகை அமைய வேண்டும் – அங்கஜன் இராமநாதன் சமூகத்தில் காணப்படும் தீமை எனும் இருளை விரட்டி நன்மை எனும் வெளிச்சத்தை ஏற்படுத்துவதாக இத் தீபாவளிப் பண்டிகை அமைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும்,யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமாகிய அங்கஜன் இராமநாதன் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தீபாவளி இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. அரக்கனான நரகாசுரனை வதம் செய்த தினத்தையே தீபாவளியாக இந்துக்களாகிய நாம் கொண்டாடுகிறோம். இருளில் இருந்து வெளிச்சத்திற்கும்,தீமையில் இருந்து நன்மைக்கும் மீண்டு, அடிமைத் தனத்தில் இருந்து விடுதலை ப…

  11. (நா.தனுஜா) அமெரிக்காவில் தற்போது டொனால்ட் ட்ரம்பினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் ஒரு 'சதிமுயற்சியை' போன்று இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, ஆசியாவில் அல்லது ஆபிரிக்காவில் தேர்தலில் தோல்வியுற்ற தலைவர் ஒருவர் அதனை ஏற்க மறுத்திருந்தால் ஜனநாயக நாடுகளின் மத்தியிலிருந்து பாரிய கண்டனங்கள் வெளிப்பட்டிருக்கும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மங்கள சமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஆசியாவிலோ அல்லது ஆபிரிக்காவிலோ தேர்தலின் பின்னர் ஒரு தலைவர் தனது தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கு மறுப்பாராக இருந்தால், அதற்கு…

  12. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் அமைப்பாளருமான இ.ஸ்ரீஞானேஸ்வரனை விசேட புலனாய்வுப்பிரிவினர் விசாரணை செய்துள்ளனர். அதனை உறுதிப்படுத்திய அவர் அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக கந்தளாய் காவல்துறைக்கு வருமாறு தொலைபேசி ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டது எனவும் அவ்வழைப்பை எழுத்துமூலமாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். அதனையடுத்து கடந்த 09.11.2020 அன்று கடித மூல அழைப்பின் பேரில் 10.11.2020 அன்று விசாரணைகளுக்கு கந்தளாய் விசேட புலனாய்வுப் பிரிவில் தான் சமுகமளித்திருந்தாகவும் தெரிவித்துள்ளார். இந்தவருட மாவீரர் தின நினைவேந்தல் நடவடிக்கைகள் தடுக்கப்பட்டிருப்பதாக விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரி…

  13. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் இன்றிக் காணப்படுவதுடன், தற்பொழுது காணப்படும் கொரோனா சூழ்நிலையில் அவர்கள் அச்சுறுத்தல்களின் கீழ் உள்ளதாக தமிழ் தேசிய மக்கள் காங்கிரஸ்ஸின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சபையில் தெரிவித்தார். பாரளுமன்றத்தில் இன்று நாட்டின் கொவிட் -19 நிலைமைகள் குறித்து எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் இன்றிக் காணப்படுவதுடன், தற்பொழுது காணப்படும் கொர…

  14. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டின் கொவிட் -19 நிலைமைகளை காரணம் காட்டி வடக்கு கிழக்கில் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை தடுக்க சூழ்சிகள் இடம்பெற்று வருகின்றது. எனினும் எமது மக்கள் யுத்தத்தில் உயிரிழந்த மாவீர்களை நினைவுகூர அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக பாராளுமன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று நாட்டின் கொவிட் -19 நிலைமைகள் குறித்து பிரதான எதிர்க்கட்சி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போதே அவர் இந்த காரணிகளை கூறினார். அவர் மேலும் கூறுகையில், பொது சுகாதார அவசர நிலைமைகளை கையாளக்கூடிய போதுமான சட்டங்கள் இல்லை, நாம் இன்னமும் காலாவதியான தனிமைப்படுத்தல் சட்டங்களை …

  15. வடக்கு கடல் பிரதேசத்தில் எதிர்வரும் திங்கட் கிழமை (16.11.2020) தொடக்கம் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதிக்குமாறு வடக்கு மாகாணத்தினை சேர்ந்த கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார். எனினும் குறித்த அனுமதியானது ஸ்கின் டைவிங் எனப்படும் சாதாரண சுழியோடி முறையின் ஊடாக மாத்திரமே மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் ஸ்கியூபா எனப்படும் சிலிண்டர் பயன்படுத்தி கடலட்டை பிடிக்க அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதிக்கள் வழங்கப்பட்டிருந்தன. எனினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளில் ஒன்றாக வட…

  16. யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் கோழி இறைச்சி விற்க தடை! யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து வீடுகளில் கோழி இறைச்சி விற்பது தடை செய்யப்பட்டுள்ளது எனவும், தடையை மீறி விற்பனையில் ஈடுபடுவோருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதாக எடுக்கப்படும் என யாழ் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று (வியாழக்கிழமை) மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது குறித்த விடயம் தொடர்பில் பரிசீலிக்க பட்டதோடு இறுதியில் முதல்வரினால் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யாழ்ப்பாணம் மாநகர சபையில் சாரதிகள் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் ப…

  17. சிறைச்சாலைகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்வில் கலந்து கொள்ள முடியாது! வெலிக்கடை மற்றும் மகசீன் சிறைச்சாலைகளில் இருந்து நாடாளுமன்றம் செல்லும் உறுப்பினர்களை சபை அமர்வுகளில் கலந்து கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையால், இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன், பிரேமலால் ஜயசேகர மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் ஆகிய மூவரையும் சபைக்குள் அழைத்து வராமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது, http://athavannews.com/சிறைச்சாலைகளில்-உள்ள-நாட/

    • 1 reply
    • 463 views
  18. ஆலயங்களில் ஐந்து பேருக்கு மேல் ஒன்று கூட வேண்டாம்! தீபாவளி தினமாகிய நாளைய தினம் பொது மக்கள் ஆலயங்களில் ஒன்று கூட வேண்டாம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க, மகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தீபாவளி பண்டிகை தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் தற்போது இந்து கோவில்களில் விரத பூசைகளும் இடம்பெற்று வருவதனால் பொதுமக்கள் கோயிலுக்கு சென்று ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் இந்து கலாச்சார திணைக்களத்தினரால் ஆலயங்களுக்குள் 5 பேருக்கு மேல் செல்ல அனுமதிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே யாழ்ப்பாணத்தில் மக்கள் வீடுகளில் இருந்த…

  19. அஞ்ஞான இருளகற்ற தீபங்கள் ஏற்றி அறிவொளி பரப்புவதே தீபாவளி வழிபாடு; வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி நாளைய தினம் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் தீபாவளித் தினத்தை கொண்டாடவுள்ளனர். இந் நிலையில் அதனை முன்னிட்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, உலகெங்கிலும் வாழும் இந்துக்கள், தீபாவளி பண்டிகை தினமான நாளை, அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபடுவர். தீபத் திருநாள் தீபாவளி பண்டிகையானது அனைத்து உள்ளங்களிலும் இருள் நீங்குவதுடன், தாம் ஒளிபெற்று நல்வாழ்வு வாழ்வதற்கான பிரார்த்தனையுடன், பரஸ்பரம் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறி - அன்பை…

  20. “இலங்கையில் ஜனநாயகம் இல்லை“ – கொளத்தூர் மணி 23 Views தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்டு வந்த நில ஆக்கிரமிப்புப் போர், 2009 ஆண்டு பெரும் தமிழின அழிப்புடன் முடிவுக்கு வந்தது. பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம், தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுவிட்டோம் என அறிவித்த இலங்கை அரசாங்கம், அதன் பின் இன்று வரையிலும் அதே பயங்கரவாத பூச்சாண்டி காட்டி தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதுடன் இன சுத்திகரிப்பு வேலைகளிலும் சத்தங்களின்றி செயற்பட்டு வருகின்றது. அதே நேரம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்குப் பதிலாக குறுகிய கால சலுகைகளை வழங்கி, தான் ஒரு நல்லரசாக உலகின் கவனத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முனைகிறது. அவ்வாறான…

  21. யாழ். பல்கலையில் கலைப் பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்த விரிவான அறிக்கை கையளிப்பு Bharati November 13, 2020யாழ். பல்கலையில் கலைப் பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்த விரிவான அறிக்கை கையளிப்பு2020-11-13T05:17:31+05:30 LinkedInFacebookMore யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்குமிடையில் கடந்த மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைககளை மேற்கொண்ட தனிநபர் ஆயத்தினால் 130 பக்கங்களைக் கொண்ட விரிவான விசாரணை அறிக்கை பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற…

  22. உயிரிழந்த உடல்களின் தகனம் என்பது அவரவர் கலாச்சார தேர்வுகளை அடிப்படியாக கொண்டவை என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளரும், ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதியுமான ஹனா சிங்கர், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிப்பது தொடர்பில் இலங்கையில் தற்போது பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ஹனா சிங்கர் இக்கடிதத்தை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில், தொற்று நோயால் இறந்தவர்கள் மூலம் வைரஸ் பவவுவதைத் தடுக்க, அந்த உடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என்ற பொதுவான அனுமானம் ஆதாரங்களால் நிருபணமாகவில்லை. அதற்கு பதிலாக தகனம் என்பது அவரவர் கலாச்சார தேர்வுகள…

  23. கிளிநொச்சியில் தற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக குறித்த பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக தற்காலிக வீட்டின் சுவர் ஈரமடைந்து இன்று காலை விழுந்ததில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொண்டமான்நகர் பகுதியில் குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் பதிவாகியுள்ளது. தாயார் உணவு தயாரித்துக்கொண்டிருந்தபோது உயிரிழந்த சிறுவன் உணவருந்திக்கொண்டிருந்துள்ளான் இதன்போது திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாட்டுக்குள் சிக்கிய சிறுவன் அயலவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழ…

  24. (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையிலான வேறுபாடு 9 பில்லியன் டொலர்களாகும், இந்த ஆண்டில் 4.2 பில்லியன் டொலர் கடன்களை மீளச்செலுத்த வேண்டியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சபையில் தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/89520/susil.jpg பாராளுமன்றத்தில் இன்று , 2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இம்முறை முன்வைக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு வழக்கமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் முழுமையான வரவுசெலவுத்திட்டம் அல்ல. முன்னைய அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதால் இவ்வாறானதொரு நில…

    • 5 replies
    • 1.1k views
  25. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) அரசாங்கம் சர்வதேச கடன்களை சமாளிக்க அமெரிக்காவிடம் இருந்து 1 பில்லியன் டொலர்களையும், சீனாவிடம் இருந்து 1 பில்லியன் டொலர்களையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக சபையில் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இவ்வாறான குறுகிய கால கடன்களினால் வெகு விரைவில் நாடே கடன் பொறிக்குள் சிக்கவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, 2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் சகல துறைகளும் இன்று வீழ்ச்சி கண்டுள்ளது, சுற்றுலாத்துறை முழுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது, ஆனால் நாடு மீட்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.