ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143304 topics in this forum
-
முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் 23 Views முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முறிப்புக் கிராமத்தில் மாபியாக்கள் போல செயற்படும் நான்கு பேர் கொண்ட வன்முறைக் குழு ஒன்று, ஊடகவியலாளர்கள் இருவரை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியதுடன் அவர்களிடம் இருந்த சொத்துக்களையும் அபகரித்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. இது குறித்து விரிவாக தெரியவருவதாவது, முறிப்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தலைமையிலான குறித்த குழு சட்டவிரோத மரக்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது. அந்தப் பகுதியில் காணப்படுகின்ற தேக்கு மற்றும் முதிரை மரங்களைக் கடத்தும் நடவடிக்கையை வழமையாகக் கொண்டு செயற்ப…
-
- 6 replies
- 881 views
-
-
இலங்கை – இந்திய உறவுகளை எந்தத் தரப்பும் பிரிக்க முடியாது.! “இலங்கையும் இந்தியாவும் சரித்திர ரீதியில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. இந்த இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவை எந்தத் தரப்பும் அல்லது எந்த நாடும் பிரிக்கவே முடியாது. அதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்கவும் மாட்டோம்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் காணொளி ஊடாக அண்மையில் கலந்துரையாடல் நடத்தியிருந்தார். அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார். 13ஆவது திருத்…
-
- 7 replies
- 873 views
- 1 follower
-
-
செல்வம் – டக்ளஸை சந்தித்தார்… October 13, 2020 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (12.10.20) இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும், இதன்போது பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் 20 ஆம் திருத்தம் தொடர்பிலோ அல்லது 13 ஆம் திருத்தம் தொடர்பிலோ கலந்துரையாடப்படவில்லையெனவும், வன்னியில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலேயே கலந்துரையாடியதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்…
-
- 1 reply
- 762 views
-
-
தரம் 5 புலமைப் பரீட்சை எழுதாத மாணவர்கள் வடக்கில் அதிகம் 74 Views சிறீலங்காவில் இம்மாதம் 11ம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 18 ஆயிரத்து 387 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையிலும் 488 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 897 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 4 ஆயிரத்து 818 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். இதேபோன்று வவுனியா மாவட்டத்தில் 3 ஆயிரத்து 46 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 3 ஆயிரத்து 14 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 570 மாணவர்கள் விண்ணப்பித்த ந…
-
- 0 replies
- 373 views
-
-
திருத்தத்துக்கு எதிராக பெளத்த மத பீடங்கள் போர்க்கொடி நெருக்கடியில் அரசு.! ஜனாதிபதி கோட்டாபய அரசு கொண்டு வரும் அரசமைப்புக்கான இருபதாவது திருத்தத்துக்கு எதிராக பெளத்த மத பீடங்கள் திடீரெனக் கிளர்ந்துள்ளன என்ற செய்தி கொழும்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. சர்வாதிகாரத்துக்கு வழி செய்யும் இந்த அரசமைப்புத் திருத்த முயற்சிகளைத் தோற்கடிக்குமாறு பெளத்தத்தின் நான்கு பிரதான மத பீடங்களில் இரண்டான அமரபுர பீடமும், ராமன்ய பீடமும் இன்று பகல் பகிரங்க செய்தியாளர் மாநாடு கூட்டி, அறிக்கை வெளியிட்டு அரசியல்தலைவர்களையும் பொதுமக்களையும் கோரியிருக்கின்றன. பெளத்தத்தின் மற்றைய இரு மதபீடங்களான அஸ்கிரிய பீடமும், மல்வத்தை பீடமும் கூட இந்த நிலைப்பாட்டைக் கைக்கொள்ளக் கூ…
-
- 3 replies
- 1k views
-
-
மீனவர்களுக்கு கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை..! மீறினால் எதிர்காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை சந்திக்க நோிடும்.. இலங்கை மீனவர்கள் வெளி நாட்டு மீனவர்கள் மற்றும் கப்பல் ஊழியர்களுடன் தொடர்புகளை பேண கூடாது. பேணினால் எதிர்காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை சந்திக்க நோிடும். என கடற்றொழில் அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடற்றோழில் அமைச்சு மேலும் கூறியுள்ளதாவது, நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாவிடின், எதிர்காலத்தில் மீன் பிடி நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் என கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://jaffnazone.com/news/20961
-
- 0 replies
- 348 views
-
-
உச்ச நீதிமன்றத்தினால் முன்மொழியப்பட்ட ஆலோசனைகளை 20 ஆவது திருத்தச் சட்டத்தினில் உள்ளடக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்றினை நடத்துவதென்பது அவசியமற்றது - கல்வியமைச்சர் ஜி எல் பீரீஸ் 20 ஆவது திருத்தச் சட்டவரைபில் உச்சநீதிமன்றத்தினால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளைச் சேர்ப்பதுபற்றி பொதுமக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துவதற்கான சட்டத் தேவை எதுவும் இல்லையென்று கல்வியமைச்சர் ஜி எல் பீரீஸ் இன்று தெரிவித்திருக்கிறார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வாராந்த பத்திரிக்கையாளர் மாநாட்டில் இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த பீரீஸ், இந்த சட்டவரைபிற்கான உச்சநீதிமன்றத் திருத்தங்களை அரசாங்கம் சபாநாயகர் ஊடாக இம்மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கும் என்று மேலும் தெரிவித்தா…
-
- 0 replies
- 274 views
-
-
எனது உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ரணில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்; மைத்திரி சாட்சியம் Bharati October 13, 2020எனது உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ரணில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்; மைத்திரி சாட்சியம்2020-10-13T06:05:38+05:30 FacebookTwitterMore நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் தன்னால் வழங்கப்படும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மத்திய வங்கி உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கினார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம் பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல…
-
- 0 replies
- 273 views
-
-
உலகளாவிய ரீதியில் காணாமல்போன ஊடகவியலாளர்கள் பட்டியலில் பிரகீத்தின் பெயர் முதலிடம் உலகளாவிய ரீதியில் இதுவரையில் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் பட்டியலில் இலங்கையில் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் பெயர் முதலிடத்தில் உள்ளது. சர்வதேச ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நினைவுகூரப்பட்ட நிலையில், அதனை முன்னிட்டு (10 Most Urgent) என்ற தலைப்பில் பத்திரிகைச் சுதந்திரம் முற்றிலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு அடக்குமுறையை அனுபவித்துவரும் 10 ஊடகவியலாளர்களை உள்ளடக்கி இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்…
-
- 1 reply
- 451 views
-
-
ஆராதனை நடத்திய சமய தளம் ஒன்றுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் எச்சரிக்கை ஹற்றன் பகுதியில் உள்ள பிரபல கத்தோலிக்க மதத்தலம் ஒன்றில் 50க்கு மேற்பட்ட நபர்களை கொண்டு ஆராதனை நடத்திய, அதன் பொறுப்பாளருக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் எச்சரிக்கை விடுத்தனர். குறித்த தேவ ஆராதனையில், 50இற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டிருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமையவே குறித்த சமயதலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சோதனைக்குட்படுத்தப்பட்டது. அதன்போது 145 பேர் இந்த ஆராதனையில் கலந்து கொண்டிருந்தனர். குறித்த நபர்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியிருந்த போதிலும் அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட 50 பேரை விட அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்ததனால் இவர்கள் எச்சரிக்கப்பட்டனர். இனிவரும் கால…
-
- 2 replies
- 604 views
-
-
இறுதி 2 வாரங்கள் போர் நகர்வுகளை சீனாவில் இருந்தே முன்னெடுத்தேன்! - சரத் பொன்சேகா! இலங்கையில் போர் முடிவுக்குவர இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் சீனா சென்றது உண்மையே என்றும், அங்கிருந்தபடியே போர் நகர்வுகளை முன்னெடுத்ததாகவும் முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று சர்வதேச உடன்படிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, போர் முடிவுக்கு வரும் வேளையில் சரத் பொன்சேகா சீனாவிலேயே இருந்தார் என்று தெரிவித்திருந்தார். இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய சரத் பொன்சேகா, போர் முடிவுக்கு வர இரண்டு வாரங்களே இருந்தபோத…
-
- 11 replies
- 1.3k views
-
-
துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலையில் நால்வர் கைது… October 12, 2020 அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் இயங்கி வந்த சட்ட விரோ துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று நேற்று (11.10.20) தேசிய புலனாய்வு பிரிவினரால் முற்றுகையிடப்பட்டது. இங்கு துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டதாக கருதப்படும் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளதாகவும், இதன்போது 10 துப்பாக்கிகள் மீட்கப்பட்டு, காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை திருக்கோவில் பிதான வீதியிலுள்ள அம்மன் கோவிலுக்கு முன்னாள் இயங்கிவரும் ஒரு கடையினை தேசி…
-
- 0 replies
- 563 views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர், முஸ்லிம்களுக்கு மறைமுக ஆதவு? 32 Views தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் முஸ்லிம்களுக்கும் மறைமுகமாக ஆதரவினை வழங்குகின்றார்கள்,சிங்கள மக்களுக்கும் மறைமுகமாக ஆதரவினை வழங்குகின்றார்கள் எனத் தெரிவித்த சீ.யோகேஸ்வரன், இவ்வாறு ஆதரவினை கொடுத்துவிட்டு எவ்வாறு கிழக்கின் தனித்துவம் பேணமுடியும்.கிழக்கினை பாதுகாக்கமுடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருந்தபோத…
-
- 0 replies
- 469 views
-
-
கொரோனா பரவலுக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்புடன் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பம் கொரோனா பரவலுக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்புடன் இன்று (திங்கட்கிழமை) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. இந்த பரீட்சைகள் இன்று முதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இம்முறை 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 பரீட்சாத்திகள் உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 3 இலட்சத்து 19 ஆயிரத்து 485 பேர் புதிய பாடத்திட்டத்திலும் 43 ஆயிரத்து 339 பேர் பழைய பாட திட்டத்திலும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். புதிய பாடத்திட்டத்தில் 2 இலட்சத்து 77 ஆயிரத்து 580 பேர் பாடசாலை மூல பரீட்சாத்திகளாவர். எஞ்சிய 41 ஆயிரத்து 905 பேர் தனியார் பரீட்சாத்திகளாவர். உயர்தர பரீட்…
-
- 0 replies
- 329 views
-
-
அதிகாரப் பரவலாக்கம் நாட்டை பிளக்கும் – வீரசேகர அதிகாரப் பரவலாக்கல் என்பது நாட்டை பிளவுப்படுத்த வழிவகை செய்யும் என்று இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், “அதிகாரப்பரவலாக்கல் என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். அதிகாரம் என்பது மத்திய அரசாங்கத்திடம் மட்டும்தான் இருக்க வேண்டும். இது பகிரப்படுவதால் பாரிய பிரச்சினைகளை ஏற்படும். இதுதான் நாட்டை பிளவு படுத்துவதற்கும் வழிவகுக்கும். ஆனால், அனைவருக்கும் அதிகாரங்கள் இருக்க வேண்டும். இதுதான் அரசாங்கத்தினதும் நோக்கமாகும். தற்போது மாகாணசபை முறைமை தொடர்பாக ஆராயவேண்டிய நிலைமையில் இருக்கிறோம். மாகாண சபை முறைமை …
-
- 2 replies
- 591 views
-
-
பாரளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரனின் ஊடக சந்திப்பு- யாழ்ப்பாணம்
-
- 0 replies
- 407 views
-
-
இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்கள் என விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை தொடர்பில், இன்று இரண்டாவது தடவையாக அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். பௌத்த பிக்கு ஒருவரால் குற்றப் புலனாய்ப் பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற சி.ஐ.டி. அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனிடம் இன்று மாலை விசாரணை நடத்தியுள்ளார்கள். சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது. 2019 நவம்பர் 14 ஆம் திகதி விக்னேஸ்வரன் வெளியிட்ட கேள்வி – பதில் அறிக்கையில், இலங்கையின் மூத்தகுடிகள் தமிழர்களே என குறிப்பிட்டிருந்தார். அந்த அறிக்கை இன நல்லுறவைக் கெடுப்பதாக இருக்கின்றது எனவும், சமாதானத்துக்குப் பங்கம் ஏற்படுத்துகின்றது எனவும் பௌத்த பிக்க…
-
- 16 replies
- 1.5k views
-
-
ஜெயபுரத்தில் 100 ஏக்கர் மக்கள் காணி விடுவிப்பு! கிளிநோச்சி – பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு, ஜெயபுரம் மக்களிற்கான 100 ஏக்கர் காணி இன்று (11) விடுவிக்கப்பட்டது. ஜெயபுரம் மக்களால் 520 ஏக்கர் காணி கோரப்பட்டு வந்த நிலையில், இன்று 100 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த காணியானது பூநகரி பிரதேச செயலகம் ஊடாக மக்களிற்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. 1980ம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த பகுதியில் மக்கள் குடியேற்றப்பட்டனர். இதன்போது அவர்களிற்கு தலா 1 ஏக்கர் வயற்காணி வழங்குவதாக கூறப்பட்டது. இவ்வாறான நிலையில் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக காணியை மக்களால் பராமரிக்க முடியவில்லை. இந்த நிலையில் காணிகள் பற்ற…
-
- 0 replies
- 365 views
-
-
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் பொம்பியோவின் எதிர்பாராத இலங்கை விஜயம் – சீன விஜயத்தின் எதிரொலியா? அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இன்னும் இரண்டு வாரங்களில் இலங்கை வரவிருப்பதாகத் தெரிகிறது. சீனாவுக்கு எதிரான அணி நாடுகளான ஜப்பான், அவுஸ்திரேலியா, இந்தியா இடையிலான இராணுவ ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடும் விடயமாக,இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் போது அவரது இலங்கைக்கான திடீர் விஜயம் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேரா.ஜயநாத் கொலம்பகேயிடம் கேட்கப்பட்டபோது, “அவரது வருகை எதிர்பார்க்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ராஜாங்கச் செயலாளர் பொம்பியோ, சென்ற வருடம் இலங்கைக்கு வரு…
-
- 0 replies
- 332 views
-
-
இரட்டை வேடம் போடும் இந்தியா – ராஜபக்ச அரசு தெரிவிப்பு.! இலங்கை அரசுடன் சீனா வெளிப்படைத்தன்மையுடன் பேச்சு நடத்துகின்றது. இந்தியாவைப் போல் இரட்டை வேடம் போடவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் சபை உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் இலங்கையைச் சீனா தொடர்ந்து காப்பாற்றி வருகின்றது. அந்த நட்புறவுக் கடமையிலிருந்து சீனா ஒருபோதும் விலகாது. அது தொடர்பில் இலங்கைக்கு சீனா வாக்குறுதியும் வழங்கியுள்ளது. ஆனால், இந்த விடயத்தில் இந்தியாவை நாம் ஒருபோதும் நம்பவே மாட்டோம்.” இவ்வாறு ராஜபக்ச அரசு தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் காணொளி ஊடாக அண்மையில் கலந்துரையாடல் நடத்தியிருந்தார். அதன்போது அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை…
-
- 0 replies
- 608 views
-
-
சீன தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாவுக்கு வழங்கிய உறுதி மொழி.! ஐ.நா. மனித உரிமைகள் சபை உள்ளிட்ட சர்வதேச அரங்கில் இலங்கை எதிர்நோக்கக்கூடிய நெருக்கடி நிலைமைகளின்போது சீனா இலங்கைக்குத் தொடர்ந்தும் கைகொடுத்து உதவும் என்று கொழும்பு வந்துள்ள சீன தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன கம்யூனிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் யாங் ஜியேச்சி தலைமையிலான சீனத் தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினர். இரு நாட்டு நட்புறவு, இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள், தேசிய அரசியல் விவகாரங்கள் மற்றும் சர்வதேச…
-
- 2 replies
- 656 views
-
-
மட்டக்களப்பு – தங்கம் தேடும் பணியில் பொலிஸார்! மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தங்கத்தினை தேடும் பணிகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு தேற்றாத்தீவு மயான வீதியில் கடற்கரையினை அண்டியுள்ள சவுக்கு மர காட்டிற்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய ஒருவரை கைதுசெய்து மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த பகுதியில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டதற்கான தகவல்கள் கிடைத்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். கடந்த யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளினால் குறித்த பகுதியில் தங்கம் உட்பட பல பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளது என தகவல்கள் …
-
- 2 replies
- 554 views
-
-
வடக்கு மாகாணத்தில் நன்னீர் மீன்வளர்ப்புக்கு எதிரான சவால்கள்? ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கெடுப்பின்மை இன்றி அந் நாடுகளின் பொருளாதாரத்தை நாம் பேசிவிட முடியாது. இதில் இலங்கை முற்றுமுழுதாக விவசாயத்தை முதன்மைப்படுத்தியதாக காணப்படுகின்றது. 9 மாகாணங்களில் வட மாகாணம் விவசாயத்தை அடிப்படையாக கொண்டது. அவ்வாறான விவசாயத்தில் பயிரிடல், கால்நடை வளர்ப்பு என்பதற்கு அப்பால் நன்னீர் மீன் வளர்ப்பு என்பது வடபகுதி விவசாய மக்களால் அதிகம் கவனத்தில் கொள்ளப்படாத விடயமாகும். குறைவான மாதங்களுக்குள் (3 தொடக்கம் 6 மாதங்கள்) குறைந்த முதலீட்டுடன் அதிக லாபத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய நன்னீர் மீன் வளர்ப்பானது, மக்களால் மேற்கொள்ளப்படுவதில்லை. சீனா, ஜப்பான் பங்களாதேஷ் ஆகி…
-
- 3 replies
- 1.1k views
-
-
சூடுபிடிக்கும் றியாஜ் விடுதலை விவகாரம்: இரு சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு சட்டமா அதிபர் அழைப்பு Bharati October 11, 2020சூடுபிடிக்கும் றியாஜ் விடுதலை விவகாரம்: இரு சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு சட்டமா அதிபர் அழைப்பு2020-10-11T14:21:11+05:30 FacebookTwitterMore உயர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட றியாஜ் பதியூதீன் திடீரென விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு சட்டமா அதிபர் டப்புலா டி லிவேரா அழைப்பு விடுத்துள்ளார். சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ் மா அதிபர், சி.ஐ.டி.யின் பிரதம விசாரணை அதிகாரி ஆகியோருக்கே சட்டமா நாளை திங்கட்கிழமை, றியாஜ் பதியூதீனை விடுதலை செய்தமைக்கான…
-
- 0 replies
- 413 views
-
-
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை - கிழக்கு மாகாணத்தில் மாவட்டம் தோறும் தலா ஒரு வைத்தியசாலை கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிப்பதற்கான வசதிகளுடன் கூடியதாக கிழக்கு மாகாணத்தில் மாவட்டம் தோறும் ஒரு வைத்தியசாலையைத் தயார்படுத்துமாறு சுகாதார அமைச்சு பணித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. லதாகரன் தெரித்துள்ளார். மாவட்டம் தோறும் ஒரு வைத்தியசாலையை கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக பயன்படுத்தும் திட்டத்திற்கு அமையவே இந்நடவடிக்கை இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை சுகாதார பிராந்தியங்களில் உள்ள வைத்தியசாலைகள் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை நிலையங்களாக தெ…
-
- 0 replies
- 363 views
-