ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142726 topics in this forum
-
"ஈழத்தமிழருக்கு இந்தியா துரோகம்-தமிழகம் பொறுத்துக்கொள்ளாது" திருப்பூர் மாநாட்டில் வைகோ முழக்கம் உலகில் முதலில் தோன்றிய மொழி எது என்று கேட்டால் அது தமிழ்தான் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும். என்று பிறந்தது என்று அறிய முடியாத தமிழ் மிகுந்த பாரம்பரியத்தைப் பெற்றிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கான வரலாற்றைப் பெற்றிருக்கிறது என்பது மட்டுமல்ல அந்த மொழி சார்ந்த இன மக்களின் நாகரிகம் உலகிலுள்ள அத்தனை நாகரிகங்களையும் விஞ்சியது. காலத்தாலும் விஞ்சியது இதுதான். இதற்கு அடிப்படை. -நாகரிகம் உயர்ந்திருக்கிறது என்று சொன்னால் அவன் வாழும் இடம், அவன் வசிக்கும் இடம், அவன் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, உறைந்திடும் உறையுள், அவன் சார்ந்திருக்கக் கூடிய சுற்றுப்புறத்தில்…
-
- 1 reply
- 2.3k views
-
-
[size=4]தமிழ்நாட்டு மக்களாலும், இந்த மக்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்தாலும் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் இந்திய மத்திய அரசாங்கமானது தவறிழைத்துள்ளது. இந்தியாவானது இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தனது நாட்டில் பிரிவினை என்கின்ற விதையை தானாகவே விதைத்து வருகின்றது. இவ்வாறு எழுத்தாளரும் கவிஞருமான மீனா கந்தசாமி Tehelka ஊடகத்திற்கு எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் முழுவிபரமாவது: இந்தியாவுக்கு வருகை தந்திருந்த சிறிலங்காவின் உதைபந்தாட்ட அணியானது 'சிறிலங்காவில் எல்லாம் நன்றாக உள்ளது' என்ற மேலெந்தவாரியான செய்தியை தெரிவித்திருந்தனர். …
-
- 1 reply
- 1.1k views
-
-
உலக அளவில் இலக்கியத்துக்காக அளிக்கப்படும் முக்கிய விருதுகளில் ‘புக்கர் பரிசு’ம் ஒன்று. சில வருடங்களுக்கு முன்பு ‘தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ என்ற தன்னுடைய நாவலுக்காக இந்த விருதை வாங்கியவர் இந்தியாவின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ரோய். இன்று, இலக்கியப் பணிகளுக்கிடையே சமூகத்தின் தீவிரப் பிரச்னைகள் குறித்து பேசுவதுடன் அவற்றுக்கெதிராக களமிறங்கி சமூக சேவை யிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் அருந்ததி ரோய். இலங்கைப் பிரச்னை குறித்து மேடைகளில் முழங்கத் தொடங்கியிருக்கும் அருந்ததிரோயை எழுத்தாளரும் எம்.எல்.ஏ-வுமான ரவிக்குமார் அவரை ஜூனியர் விகடனுக்காக சந்தித்துப் பேசினார்: ”இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைஉலகின் வேறு எந்த கொடூரத்தோடு நீங்கள் ஒப்பிடுவீர்கள்?” …
-
- 0 replies
- 674 views
-
-
"ஈழத்தமிழர்களின் முழு விடுதலையே நம் கோரிக்கை" கம்யூனிஸ்டுத் தலைவர் சி.மகேந்திரன் திட்டவட்ட அறிவிப்பு வாழ்த்தரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக சி.மகேந்திரன் ஆற்றிய உரை. ஓர் மாற்றத்திற்கான போர்க் குணத்தை நாம் எங்கிருந்து பெறுவது என்ற உணர்வோடு இருக்கிறோம். தமிழர் களாய் உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் ஒரு தொன் மையான பண்பாட்டைக் கொண்டவர்கள்; ஆங்கிலேயர் காலத்திலும் அதற்குப் பின்னரும் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவை விட்டுச் சென்றவர்கள் - இலங்கையில் அந்த காலம் முதல் ஆதி குடிகளாய் வாழ்ந்து கொண்டு இருப்பவர் கள் - பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஐயா நெடுமாறன் அவர்கள் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு கால தமிழக வரலாற்…
-
- 3 replies
- 1.1k views
-
-
http://www.tubetamil.com/view_video.php?vi...30870060538746e ஈழப் போராட்டத்த பற்றி ஒரு மானங்கெட்ட ஈழத்தமிழன் என்ன சொல்லுறான் எண்டு பாருங்கோ.... பார்த்து சந்தோசத்த படுங்கோ
-
- 4 replies
- 1.5k views
-
-
"ஈழமுரசு லீக்ஸ்" - ஈழப்போரின் கடைசிக்கட்டம் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள்: ஜூனியர் விகடன் Posted by: on Apr 13, 2011 பிரிட்டன், ஃபிரான்ஸ் நாடுகளில் வெளியாகும் ‘ஈழமுரசு’ பத்திரிகையில், ஈழப்போரின் கடைசிக்கட்டம் பற்றி அதிர்ச்சித் தகவல்கள் இந்த வாரம் வெளியாகியுள்ளன! ஈழமுரசு லீக்ஸ் என்ற பெயரில் ‘தந்திரிகளின் மறுமுகம்’ என்று ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியையும் அவரது மகள் கனிமொழியையும் கடுமையாக விமர்சிக்கிறது அந்தக் கட்டுரை. »ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில், நூற்றுக்கணக்கில் அப்பாவி மக்கள் செத்துக்கொண்டு இருக்க, அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என கடைசியில் போர்நிறுத்த முயற்சியில் புலிகள் இறங்கினர். இதற்காக, மத்திய அரசை வலியுறுத்துவதற்காக, தங்க…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஈழப்போர் இதுவரை கண்டிராத உக்கிர யுத்தமுனை ஒன்றை வட போரரங்கில் காணப்போகின்றதாம். இத்தகவலை கொழும்பு பத்திரிகையொன்றில் சிறிலங்கா படைத்தளபதி தெரிவித்துள்ளார். கொழும்பு குண்டு வெடிப்பில் அமைச்சர் ஜெயராஜ் கொல்லப்பட்டதன் பின்னர் சர்வதேச நாடுகள் பேச்சு மூலமான தீர்விற்கு வலியுறுத்தினர். ஆனால் ஜனாதிபதி மகந்தாவும் பிரதமர் விக்கிரமநாயக்கவும் முன்னரைவிட உறுதியாக போரை முன்னெடுப்போம் என சூளுரைத்துள்ளனர். தற்போது மன்னார், மணலாறு முனைகளில் ......................... தொடர்ந்து வாசிக்க...................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_8480.html
-
- 0 replies
- 1.8k views
-
-
"ஈழம்பற்றிப் பேசுவது பயனளிக்காது வடக்கின் முழுப் பொறுப்பு விக்கியிடமே" 24 அக்டோபர் 2013 "தேவையற்ற பேச்சை சம்பந்தன் நிறுத்த வேண்டும்" - கோத்தாபய 'வடக்கில் சட்டம், ஒழுங்கை முதலமைச்சர்தான் நிலைநாட்ட வேண்டும். அதற்கான பொறுப்பு முதலமைச்சருக்குத் தான் உண்டு. விழிப்புக்குழுக்கள், சிவில் பாதுகாப்புக் குழுக்களை அமைத்துப் பொலிஸாருக்கு உதவுவதன் மூலம் வடக்கில் இடம்பெறும் களவு மற்றும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கமுடியும்' என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச நேற்று (23.10.13) நடைபெற்ற தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார். 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும் பழைய விடயங்களையே கூறி வீண் குழப்பங்களை ஏற்படுத்தாது வடக்கில் தற்பொழுது கிடைத்துள்ள சந்தர்…
-
- 1 reply
- 718 views
-
-
நாடு கடந்த அரசாங்கத்தை அமைத்தது என்பது சுதந்திரமான ஒரு தமிழீழத்தை அமைப்பதற்கான துணிச்சலான தீர்க்க தரிசனமிக்க ஒரு முயற்சி என ஐக்கிய அமெரிக்காவின் சட்டமா அதிபரும். வியட்னாம் போருக்கு எதிரான இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும்இ நாடுகடந்த அரசாங்கத்திற்கான தேர்தல் ஆணையாளராகச் செயற்பட்டவருமான ராம்ஸே கிளார்க் (82) தெரிவித்துள்ளார். நாடு கடந்த அரசாங்கத்;தின் ஆரம்ப அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கும் போது "உங்களுடைய சவால் மிகப் பெரியது. சுதந்திரம் என்பது சாத்தியம் தான். ஆனால் நீங்கள் அதற்கு மிகக் கடுமையாக உழைக்க வேண்டும். அத்தோடு நீங்கள் மிகச் சரியாக இருத்தல் வேண்டும். அது மட்டுமல்லாமல் நீங்கள் சரியாகத் தான்…
-
- 4 replies
- 769 views
-
-
17 Nov, 2025 | 07:13 PM திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அகற்றிய போது, சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை. என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திங்கட்கிழமை (17) தனது பாராளுமன்ற உரையில் கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில்... திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை ஞாயிற்றுக்கிழமை (16) அகற்றிய போது, சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை. ஏனெனில், இனவாதத்தையும் மதவாதத்தையும் நீக்குவதாக நீங்கள் சொன்னதை நம்பி அவர்கள் உங்களுக்கே வாக்களித்திருந்தார்கள். இங்கிருக்கும் திருமலைக்கான தமிழ் பாராளுமன்ற உறுப்பினரையும் அவர்கள் தெரிவு செய்திருந்தார்கள். நீங்கள் 16ஆம் த…
-
- 0 replies
- 110 views
-
-
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவுடன் இந்திய மத்திய அரசு அமையும் நாளையும், எங்கள் அன்னை பூமியில், எங்கள் உரிமை பூமியில் நாம் 'தனி ஈழம்' காணும் நாளையும் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் என்று பிரான்ஸ் தமிழ் இளையோர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 562 views
-
-
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவுடன் இந்திய மத்திய அரசு அமையும் நாளையும், எங்கள் அன்னை பூமியில், எங்கள் உரிமை பூமியில் நாம் 'தனி ஈழம்' காணும் நாளையும் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் என்று பிரான்ஸ் தமிழ் இளையோர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக பிரான்ஸ் தமிழ் இளையோர் அமைப்பு அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொடிய சிங்கள இனவெறி அரசின் கொலைக்கரங்களில் இருந்து எங்கள் சொந்தங்களைக் காப்பாற்றுங்கள் என்று உலகத்தின் வீதிகளில் நாளும் பொழுதும் கண்ணீரோடு போராட்டங்களை நடத்திவரும் எங்களுக்கு அண்மையில் தாங்கள் ஆற்றிய உரை புதுத்தென்பையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது. தாயகத்தில் இருந்து அன்றாடம் கிடைக…
-
- 0 replies
- 481 views
-
-
"உங்கள் பிள்ளைகளை அனுப்பிய இடத்திற்கே உங்களையும் அனுப்புவதா"
-
- 0 replies
- 491 views
-
-
ஜே.வி.பியின் உள்விவகாரங்களை தீர்ப்பதற்கு தன்னால் அனுசரணையாளராக செயற்பட முடியும் என்று தொலைபேசி உடாக ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவிடம் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்ததையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கொழும்பு வார ஏடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 887 views
-
-
இலங்கையின் வடக்கே வன்னிப் பிரதேசத்தில் யுத்த மோதல்களின் போது படுகாயமடைந்து, உடலில் உலோகத் துண்டுகளான குண்டுச் சிதறல்ளுடன் வாழ்கின்ற மாணவர்களுக்கு விசேட வைத்திய வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. யுத்த மோதல்களில் சிக்கி படுகாயமடைந்த பலர் குண்டுச் சிதறல்கள் உடலில் பாய்ந்ததனால், உலோகத் துண்டுகளுடன் கடந்த மூன்று வருடங்களாகப் பெரும் அவஸ்தைகளுடன் வாழ்ந்து வருகின்றார்கள். யுத்தத்தின் எச்சங்களான இவற்றை அகற்றுவதற்கு குறிப்பாக மாணவர்களுடைய உடலில் இருந்து அகற்றுவதற்கு கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் அடிப்படைத் தேவைகள், பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகக் கூடிய மாவட்ட ஒருங்கிணைப்புக்…
-
- 2 replies
- 549 views
-
-
"உண்ணாவிரதம் இருக்கும் கைதி தொடர்பில் அமைச்சர் மனோவை தலையிடுமாறும் கோரிக்கை" மகசீன் சிறைச்சாலையில் உள்ள கைதியொருவர் கடந்த 16 ஆம் திகதி முதல் நீரின்றி உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். இவரது உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனத் தெரிவிக்கப்படுகினறது. முன்னாள் திரைப்படக் கூட்டுத்தாபனத் தலைவரான 62 வயதுடைய கனகசபை தேவதாசன் எனபரே இவ்வாறு நீர் கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். கோட்டை புகையிரத நிலையம் குண்டுவெடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு வழக்கில் ஆயுள் தண்டனையும், மற்றொரு வழக்கில் 20 வருடங்கள் கடுழீய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. குறித்த இரு வழக…
-
- 3 replies
- 1k views
-
-
வலி.வடக்கு மீள் குடியமர்வினை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வரும் ஏற்பாட்டாளர்களிற்கு இன்று அதிகாலை மாட்டுத்தலைகள் அன்பளிப்பாக அனுப்பப்பட்டுள்ளது. வலி.வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ச.சஜீவன் ஆகிய இருவரதும் தொலைபேசிக்கு அழைப்பினை எடுத்து மிரட்டல்களை விடுத்த நபர்கள் அவர்களது வீடுகளிற்கு முன்னாலும் இன்று காலை மாட்டின் தலையினையும் வைத்துவிட்டு சென்றுமுள்ளனர். சம்பவம் குறித்து தவிசாளர் சோ.சுகிர்தன் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிவிக்கையில்;, நேற்று இரவு தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்ட நபர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்த கூடாது என்றும் அவ்வாறு நடத்தப்பட்டால் தலையற்ற முண்டமே வீட்டுக்கு வரும் என்று…
-
- 0 replies
- 420 views
-
-
"வடமாகாணத்தைக் சிங்களமயம் ஆக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் படையினர் நிலை நிறுத்தப்பட்டு உள்ளனர்" 'எமது பெண்கள்; பாலியல் பலாத்பாரங்களுக்கு உட்படுத்தப்படகின்றனர் இவற்றை காவற்துறையினர் தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தொடர்கிறது' என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் C.V விக்னேஸ்வரன், 'அவுஸ்திரேலியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை சட்ட விரோதமாக எங்கள் மக்கள் அங்கு செல்வதேயாகும். அதற்குப் பல காரணங்கள் உண்டு. அதனை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 1) முதலில் எங்கள் வடமாகாணம் இராணுவக் கட்டுப்பாட்ட…
-
- 11 replies
- 872 views
-
-
"உண்மைகளை எவராவது வெளிப்படுத்தா விட்டாலும் கூட இயல்பாகவே அவை தாமாகவே வெளிப்பட்டு விடும் தன்மை கொண்டவை. அதேவேளை, உண்மைகளை மறைத்து விடுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு செயற்பாடும் உண்மை வெளிப்படுவதை விரைவுபடுத்துவதாகவே ஆகிவிடுவதைப் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கின்றோம்" என்று சுவிசில் இருந்து வெளிவரும் 'நிலவரம்' வாரமிருமுறை ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.8k views
-
-
"உண்மையான தமிழ் உணர்வாளர்களை ஊனப்படுத்த வேண்டாம்;' தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு பாரதிராஜா கடும் கண்டனம் என்னை வைத்து அரசியல் நடத்த முயற்சிக்க வேண்டாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து உருக்கமான பேட்டியையும் பாரதிராஜா அளித்துள்ளார். பாரதிராஜாவின் இலங்கை பயணம் குறித்தும் பிரபாகரனை சந்தித்தது குறித்தும் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சித்திருந்தார். ஜெயலலிதாவுக்கு நெருக்கமான பாரதிராஜா பிரபாகரனை சந்தித்ததன் பின்னணி என்னஇ வைகோ…
-
- 2 replies
- 1.6k views
-
-
"உண்மையைக் கண்டறியும், ஆணைக்குழு"வை உருவாக்க திட்டம் – பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக... புதிய சட்டம்! இளைஞர்கள் முன்னெடுத்த முதலாவது போராட்டம் முடிந்துவிட்டதாகவும் நாட்டை கட்டியெழுப்புவதற்கான இரண்டாவது போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம் எனTk; ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்க புதிதாக சட்டம் தயாரிக்க உத்தேசித்திருப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். இந்தப் பணியில் அனைத்து தரப்பினரையும் பேதமின்றி இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, சக்தி வாய்ந்த நாட்டைக் கட்டிய…
-
- 0 replies
- 115 views
-
-
Posted on : Sun Mar 30 21:45:00 2008 "உதய சூரியன்' சின்னத்தை தமதாக்கி தேர்தலில் போட்டியிட ஆனந்தசங்கரி முயற்சி தமிழர் விடுதலைக் கூட்டணியின் "உதயசூரியன்' சின்னத்தை பயன்படுத்தும் முழு உரிமையையும் கைப்பற்றி அந்தச் சின்னத்தில் அந்தப் பெயரில் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டி இடுவதற்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி எத்தனித்து வருகின்றார். "உதயசூரியன்' சின்னத்தை பயன்படுத்துவதற்கான முழு உரிமை தமக்கு இருப்பதை அங்கீகரிக்கும் படி தேர்தல் ஆணையாளர் நாயகத்தை எழுத்து மூலம் அவர் கோரி இருக்கிறார் என அறியவந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பான சிக்கல் நீதிமன்றம் வரை சென்றிருப்பது தெரிந்ததே. கட்சியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஒரு…
-
- 1 reply
- 1.1k views
-
-
Posted on : Fri Jun 22 7:51:05 EEST 2007 "உதயன்', "சுடர் ஒளி' ஆசிரியரைத் தேடிய வெள்ளை வான் அரச உயர்மட்டக் குழுவினர் நேரில் விரைந்து விசாரணை "உதயன்', "சுடர் ஒளி' பத்திரிகைகளின் ஆசிரியர் என்.வித் தியாதரனின் கொழும்பு வெள்ளவத்தை, ஹம்டன் லேன் இல்லத் திற்கு வெள்ளை வான் குழு சென்று அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை குறித்து உயர் மட்ட விசாரணைக்கு அரசு உத்தர விட்டிருக்கின்றது. கடத்தல், காணாமற்போனோர் போன்ற சர்ச்சைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர்களை உள்ளடக்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ள உயர் மட்டக் குழு இந்த அச் சுறுத்தல் விவகாரத்தை தனது முதல் விசாரணை நடவடிக்கை யாக எடுத்துக்கொண்டு செயற்பாட்டைத் தொடங்கியிருக்கிறது. இக்குழு நேற்று பத்திரிகை ஆசிரியர் வித்தியாத…
-
- 2 replies
- 1.2k views
-
-
"உதயன்", "சுடர் ஒளி' ஆகிய இரு பத்திரிகைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றன..எம்.கே.சிவாஜிலிங்கம்2009-12-25 21:04:40 "உதயன்", "சுடர் ஒளி' ஆகிய இரு பத்திரிகைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றன என்ற தமது புதிய கண்டுபிடிப்பை லண்டனில் போய் வெளியிட்டிருக்கின்றார் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் "உதயன்", "சுடர் ஒளி" ஆகிய இரு பத்திரிகைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றன என்ற தமது புதிய கண்டுபிடிப்பை லண்டனில் போய் வெளியிட்டிருக்கின்றார் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் எம்.பி. இந்…
-
- 3 replies
- 1.6k views
-
-
"வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களுக்கு உதவி அமைப்புக்கள் தடையின்றிச் சென்றுவருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்" என சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இந்த வருட இறுதிக்குள் இவர்கள் அனைவரையும் மீளக்குடியமர்த்துவதற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்திருப்பதையும் வரவேற்றிருக்கின்றார். "இந்த உறுதிமொழியை யதார்த்தமாக்குவதற்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க முற்பட வேண்டும்" எனவும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின் பின்னர் நேற்று சனிக்கிழமை இரவு கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றியபோது ஐ.நா.செயலாளர் நாயகம் தெரிவித்தார். ஒர…
-
- 0 replies
- 418 views
-