Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சம்பவத் வங்கியில் முதலீடு செய்ய வேண்டாமென உலமா சபை மக்களை வலியுறுத்துகிறது- ரத்தன தேரர் by : Yuganthini சம்பத் வங்கியில் முதலீடு செய்துள்ள பணத்தை எடுத்து அமானா வங்கியில் முதலீடு செய்யுமாறு முஸ்லிம் மக்களிடம் ஜமியதுல் உலமா சபை கோருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அதுரலிய ரத்தன தேரர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஸ்ரீபாத மலையை சுற்றி காணப்படுகின்ற பெரும்பாலான நிலங்களை, முஸ்லிம் மதத்தினர் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை சஹ்ரான் தலைமையிலான கு…

    • 0 replies
    • 277 views
  2. சாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும் – ஜீவன் by : Vithushagan மலையகத்தில் குறைகூறும் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டும். சாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பூண்டுலோயா பேர்லேன்ட்ஸ் தோட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ” கடந்த நான்கு வருடங்களாக ஆயிரம் ரூபா பற்றி மட்டுமே கதைத்தார்கள். இவ்வாறு கதைத்து ஏனைய பிரச்சினைகளை ம…

    • 0 replies
    • 259 views
  3. வடக்கு மக்கள் எமக்கு வாக்களிக்காவிட்டாலும் அப்பகுதிகளுக்கும் அபிவிருத்திகளை தொடருவோம்- மஹிந்த by : Yuganthini வடக்கு மாகாண மக்கள் தாமரை மொட்டுக்கு வாக்களிக்காவிட்டாலும் கூட, அரசாங்கம் அந்த மாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவடைந்துள்ளது. இனிமேல் அந்தக்கட்சி ஒன்று சேர்வதற்கான வாய்ப்பே கிடையாது. யாராவது இந்தக் கட்சி இணையும் என்று நினைத்தால், அது நிச்சயமாக பகல் கனவாகத்…

    • 0 replies
    • 204 views
  4. யாழ் பெரிய கோவிலில் நடமாடிய மர்ம நபர் கைது; மன்னார் ஆலயத்திலும் நடமாடியவராம்!. யாழ்ப்பாணம் – பெரிய கோவில் வளாகத்துக்குள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நபர் ஒருவர் பொலிஸாரால் இன்று (06) கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மன்னார் பேசாலை தேவாலயத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிய அதே நபரே இன்று யாழ் பெரிய கோவிலிலும் நடமாடித்திரிந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஆலயத்திற்கு இன்று நண்பகல் 12.30 மணியளவில் வந்த குறித்த நபர் அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் மிக நீண்ட நேரம் தனது உடமைகளுடன் நடமாடித்திரிந்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அவரை கைது செய்து தற்போது வி…

  5. வடக்கு – கிழக்கு மக்களின் வாக்குகள் எங்களுக்கே :மகிந்த ராஜபக்ஷ. வடக்கு – கிழக்கு மக்களின் வாக்குகள் இன்றி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி முடியாதென எதிர்க்கட்சியினால் பல்வேறு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.அது போன்றே இம்முறை பொதுத் தேர்தலிலும் அந்த கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு எதிர் கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் இதன் போது குறிப்பிட்டுள்ளார். தெற்கு மக்களின் வாக்குளில் அதிகளவாக வெற்றி பெற்ற போதிலும் வடக்கு – கிழக்கு மக்கள் எம்மை கைவிடப்பட மாட்டார்கள், அந்த மக்களை வெற்றிக் கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்று தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு – கிழக்கு மக்களை வெற்றிக் கொள்ளும் போது, தெற்கு இளைஞர்களின் ஆதரவை …

  6. தமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது. தமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது எனத் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.இன்று புன்னை நீராவி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்அக்கராயன் மண்ணிலே அக்கிராச மன்னனுக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அந்த மன்னனிற்கு ஒவ்வொரு வருடமும் நாங்கள் பொங்கல் பொங்கி மாலை அணிவித்து வணக்கம் செலுத்துவது பழக்கம் இன்று கரைச்சி பிரதேச சபையினால் அந்த மன்னனின் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்த சென்ற போது …

  7. எம் பின்னால் மோடி நிக்கிறார் – சம்பந்தன் எமக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு உள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகாேணமலையில் இன்று (04) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும், “சர்வதேச சமூகம் எம் பின்னால் நிற்கின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் முழுமையாக பின்னால் நிற்கின்றார். கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு நாட்களில் இந்திய வௌிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நீதியான, சமத்துவமான, கௌரவத்துடன் கூடிய தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும் என கலந்துரையாடினார். அதன் பின்னர் …

  8. இலங்கை அரசால் 13ஐ தன்னிச்சையாக ஒழிக்கவே முடியாது (ஆர்.ராம்) இலங்கை - இந்திய சர்வதேச ஒப்பந்தத்தின் மூலம் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தினையும் அதன் மூலமாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையையும் இலங்கை அரசாங்கத்தினால் தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது என்று வடக்கு, கிழக்கின் முன்னாள் முதலமைச்சர்களான நீதியரசர்.சி.வி.விக்கினேஸ்வரன், ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 13ஆவது திருத்தச்சட்டத்தினை நீக்க வேண்டுமென்ற தொனிப்பட்ட பரிந்துரையை முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட பகிரங்கமாக வைத்துள்ளார். அதேநேரம், மாகாண சபைகளினால் நிதிவிரயமாகுவது தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கரிசனை கொண்டிருப்பதாக ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் லலி…

    • 1 reply
    • 452 views
  9. சிறைக் கதவுகளை உடைத்து பிள்ளையான் வெளியே வருவாராம்! – இப்படிச் சாெல்கிறார் ஸோபா நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் ஊடாக சிறைக் கதவுகள் உடைக்கப்பட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் வெளியில் வருவார் என வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனும் சி.சந்திரகாந்தனை ஆதரித்து பேத்தாழையில் இன்று (06) காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். மேலும், “கடந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எங்களுடைய தமிழ் மக்களை குறிப்பாக கிழக்கு மக்களை போலி தேசியம், போலி உணர்வினை ஊட்டி ஏமாற்றிக் கொண்…

  10. நிதி மோசடிகள் குறித்த அறிக்கை மத்திய வங்கி ஆளுநரிடம்…! நிதி மற்றும் குத்தகை நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராயும் குழுவின் இறுதி அறிக்கை நாளைய தினம் (07) மத்திய வங்கி ஆளுநரிடம் கையளிக்கப்படவுள்ளது. முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான காலஎல்லை நிறைவடைந்த பின்னரும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் இறுதி அறிக்கையினை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கமைய சுமார் 250 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் மூவரடங்கிய குழு தெரிவித்துள்ளது. தனிநபர் முறைப்பாடுகள் அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://newuthayan.c…

  11. மகிந்த அடிக்கடி தீர்வைப்பற்றி பேசுவது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினாலேயே; சுரேந்திரன் July 6, 2020 அண்மைக் காலமாக பிரதமரும் பாராளுமன்ற வேட்பாளருமான மகிந்த ராஜபக்ஸ அரசியல் தீர்வுபற்றியும் மனிதவுரிமை பற்றியும் அடிக்கடி பேசுவதற்கு கடந்த அரசாங்கத்தில் கூட்டமைப்பு முன்னெடுத்த இராஜதந்திர நடவடிக்கைகளே காரணமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான சுரேந்திரன் குருசுவாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் :- பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ்மக்கள் மீது பேரழிவை ஏற்படுத்திய இறுதி யுத்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளை பலமிழக்க செய்ததற்கு வெளி…

  12. அரசியல் கட்சிகள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன -கபே குற்றச்சாட்டு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளில் ஒன்றான ஒரு சென்டிமீற்றர் சமூக இடைவெளியை, பெரும்பாலான அரசியல் கட்சிகள் பின்பற்றாமல் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் பொதுமக்களின் கவனமின்மை காரணமாக மீண்டும் பரவக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.இந்நிலையில் அரசியல் கட்சிகள், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றதென கபே அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் மக்களின் பாதுகாப்பை கவன…

  13. இனவாத சிந்தனையுடைய வேட்பாளர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்- சுமனரட்ன தேரர் இனவாத சிந்தனையுடன் களமிறங்கியுள்ள வேட்பாளர்களை இனங்கண்டு, மக்கள் புறக்கணிக்க வேண்டும் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரட்ன தேரர் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அம்பிட்டிய சுமனரட்ன தேரர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ்தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிக்க நீர் கூட இல்லாமல் சில குடும்பங்கள்…

    • 1 reply
    • 310 views
  14. கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்! கொரோனா நிலைமை காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளினதும் கல்வி செயற்பாடுகள் இன்று (06) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 29ம் திகதி முதற் கட்டமாக அதிபர், ஆசிரியர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டு கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக தரம் 5, தரம் 11 – 13ம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. https://newuthayan.com/கல்வி-நடவடிக்கைகள்-ஆரம்ப/ …

  15. தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல் நாடாளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தபால் மூல வாக்குகள் பதிவு செய்யப்படும் சகல இடங்களிலும் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை மேற்பார்வை செய்வதற்கு ஜூலை 14, 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் சுகாதார வைத்திய அதிகாரிகள் கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக, அவர்கள் மட்டும் ஜூலை மாதம் 13ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 4.00 மணி வரை தபால் மூல வாக்கை செலுத்த முடியும். சகல பொலிஸ் நிலையங்கள், பாதுகாப்பு படையினர் , சிவில் பாதுகாப்பு திணைக்களம் , சுகாதார பிரிவினர் ஆகியோருக்கு மாவட்ட செயலகங்கள் மற்றும் தேர்தல் காரியாலயங்களில் ஜூலை 16ஆம் திகதி காலை …

  16. ஆட்சி ஏற்றதும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது விசாரணை “அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில், ஆட்சி ஏற்றதும் விசேட விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். அம்பாந்தோட்டை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “கடந்த அரசில் அரசியல் பழிவாங்களுக்காகவே எப்.சி.ஐ.டி. அமைக்கப்பட்டது. அரசியல் பழிவாங்களுக்கான திட்டமிடல்களை மக்கள் விடுதலை முன்னணியினர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் முன்னின்று முன்னெடுத்தார்கள். இதன் பலனை தற்போது அனுபவிக்கின்றார்கள். பெரும்பாலான அரசசார்பற்ற அமைப்புக்கள் கடந்த காலங்களில்…

  17. விடுதலைப்புலிகளின் அமைப்பில் சிறுவர் வீரர்கள் இருக்கவில்லை- கருணா தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பில் சிறுவர்களை வீரர்களாக பயன்படுத்தவில்லையென முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 18 வயதுக்கு கீழ்ப்பட்ட எவரையும் ஆட்சேர்ப்பு செய்வதற்கு தடை விதித்திருந்தார். மேலும் சிறுவர் படையினர் என்று கூறி விளம்பரப்படுத்தப்படும் ஒளிப்படங்கள் உண்மையான சிறுவர் வீரர்கள் அல்ல. விடுதலைப் புலிகள் அமைப்பு சிறுவர்களை ஒருபோதும் வீரர்களாக பயன்படுத்தவில்ல…

  18. கிணற்றில் தவறி விழுந்த இளைஞன் சாவு – யாழில் சம்பவம்! யாழ்ப்பாணம் – ஆவரங்கால் கண்ணாரை அம்மன் கோவில் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றில் இருந்து இன்று (05) காலை இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவ்விளைஞன், தோட்டத்துக்கு நீர் இறைப்பதற்குக் கிணற்றடிக்கு வந்த போதே, கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. https://newuthayan.com/கிணற்றில்-தவறி-விழுந்த-இ/

  19. டிப்பர் பெட்டி விழுந்து சாரதி பலி யாழ்ப்பாணம் – கோப்பாய் சந்திப் பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தும் கராச்சில் டிப்பர் ஒன்றை பழுது பாா்த்துக் கொண்டிருந்த போது டிப்பரின் சுமை பெட்டி விழுந்ததில் அதன் சாரதி உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். திருத்துனர்கள் டிப்பர் பெட்டியினை யக் (தூக்கி) மூலம் உயர்த்தி திருத்திக் கொண்டிருந்த சமயம் டிப்பர் சாரதி அதனை சரிபார்க்க முயன்றபோது யக் விலகியதில் உயர்ந்து நின்ற பெட்டி திடீரென்று விழுந்ததில் பெட்டிக்கு அடியில் சிக்கிய சாரதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மானிப்பாயை சேர்ந்த லிகிந்தன் என்பவரே என தெரியவருகிறது. https://newuthayan.com/டிப்பர்-பெட்டி-விழு…

  20. பெண்கள் விடுதியில் தூக்கிட்ட நிலையில் சிறுமியின் சடலம் வவுனியா – கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அருளக பெண்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் நாளையதினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான ஆயத்தபணிகள் இல்லத்தினால் இன்று (05) மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த மாணவியை நீண்ட நேரம் காணாத நிலையில் இல்லத்தில் இருந்தவர்கள் அவரை தேடியுள்ளனர். இந்நிலையில், விடுதியின் முதலாவது மாடியில் அமைந்துள்ள கழிவறையில் குறித்த சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா த…

  21. தமது நாட்டுக்கு வரும் சுற்றுலாத்துறையினரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாத நாடுகளின் பட்டியலில் இலங்கையை, பிரித்தானியா இணைத்துக்கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிரித்தானியா கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையை பாதுகாப்பற்ற நாடாக பட்டியல்படுத்தியுள்ளது. நேற்றையதினம் பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் என்பன தனது நாட்டு பிரஜைகளுக்கா புதுப்பித்து வெளியிட்டுள்ள உலகளாவிய சுற்றுலா அறிவுறுத்தலிலே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி அவுஸ்திரேலியா, தென் கொரியா, மலேசியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகியவை பிரித்தானியர்களுக்கு பயணிக்க பாதுகாப்பான நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் கொரோனவைர…

  22. யாழில் வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் விபத்து: இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழப்பு! யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகனம் பழுது பார்த்துக்கொண்டிருந்த குறித்த இளைஞன் மீது டிப்பர் வாகனத்தின் சுமைப்பெட்டி விழுந்ததில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற நிலையில், இச்சம்பவத்தில் சுமைப்பெட்டியை ‘ஜக்’ மூலம் தூக்கிவிட்டு அதன் கீழிருந்து பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது ‘ஜக்’ நழுவி சுமைப்பெட்டி இளைஞன் மீது விழுந்துள்ளது. இச்சம்பவத்தில் மானிப்பாய் பகுதியைச் சோ்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளார். https://athavannews.com/ய…

    • 2 replies
    • 936 views
  23. சிவாஜிலிங்கம் கைது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (05) முற்பகல் 9.30 மணியளவில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்பதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/சவஜலஙகம-கத/175-252763

    • 2 replies
    • 852 views
  24. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பொதுத் தேர்தலின் பின்னர் உறுதியாக இந்தியாவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாக இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே கொழும்பு துறைமுகத்தின் ஜய கொள்கலன் முனையத்திற்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ள மூன்று புதிய கிரேன்களை அதற்கு பயன்படுத்தாமல், அவற்றை கிழக்கு முனையத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்து வருவதாக சங்கத்தின் பிரதான செயலாளர் சந்திரசிறி மஹகமகே குற்றம் சுமத்தியுள்ளார். இதற்கு எதிராக துறைமுக பொது ஊழியர் சங்கம், வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் அந்த வழக்கு இந்த மாதம் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தம…

    • 4 replies
    • 1k views
  25. கிளிநொச்சியில் 400 வீடுகளை சுற்றிவளைத்து தேடுதல் கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் சுமார் 400 வீடுகள் வரை சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை அதிகாலை நான்கு மணி முதல் காலை எட்டு மணி வரை இத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவிரோத செயற்பாடுகள், குற்றச் செயல்களில் ஈடுப்பட்டவர்கள், போன்ற பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளின் பொருட்டு இத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் போது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் போது 280 க்கும் மேற்பட்ட பொலிஸார் இராணுவத்தினர் இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்த…

    • 1 reply
    • 914 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.