Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அம்பாறையில் அரசியல் தொடரும்; தமிழ் மக்களைக் காப்பாற்றுவேன்; கருணா.! நாடாளுமன்றத் தேர்தலில் நான் தோல்வி அடைந்திருந்தாலும் எதிர்வரும் நாட்களில ் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றுவேன்." - இவ்வாறு கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தேர்தல் தோல்வி மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து சமூக வலைத்தளத்தில் கருணா அம்மான் இன்று விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் கருத்துக் கூறிய அவர், "எதிர்வரும் காலங்களில் தொடர்ந்தும் அம்பாறை மாவட்டத்தில் இருந்தே அரசியல் செய்யப் போகின்றேன்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://aruvi.com/arti…

  2. வட.மாகாணத்துக்கு விசேட பொலிஸ் அதிகாரங்களை வழங்கமாட்டேன்- சரத் வீரசேகர வடக்கு மாகாணத்துக்கு என விசேட பொலிஸ் அதிகாரங்களை ஒருபோதும் வழங்கப்போவதில்லையென இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தனது கடமைகளை பொறுப்பேற்றப்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதாவது வட.மாகாணத்துக்கென விசேட பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் பொலிஸ்துறை பிளவுண்டுபோகும் எனவும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே வடக்கு மாகாணத்துக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/வட-மாகாணத்துக்கு-விசேட-ப/

  3. புலம்பெயர் உறவுகள் தாயக பிரதேசங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் – டக்ளஸ் அழைப்பு! நாட்டில் நிலையான அரசாங்கம் உருவாகியுள்ள நிலையில் புலம்பெயர் மக்கள் தங்களுடைய தாயக பிரதேசங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அதற்காக உத்தரவாத்தினை தான் வழங்குவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று( வியாழக்கிழமை) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ”பொருத்தமான சூழலை உருவாக்குவதல் மற்றும் உருவாகின்ற சூழலை பயன்படுத்துதல் என்ற தன்னுடைய…

    • 14 replies
    • 2k views
  4. சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிப்பதற்கு கணினி மென்பொருள் நாட்டின் விமான நிலையங்கள் திறக்கப்பட்ட பின்னர் உள்வரும் சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிப்பதற்கு கணினி மென்பொருள் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அத்துடன், சுற்றுலாப் பயணிகள் வீசா பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் முதல் பார்வையிடும் இடங்கள் வரை இந்த மென்பொருள் மூலம் அவதானிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் மற்றும் அதன் பின்னர் 5 அல்லது 7 நாட்களுக்குப் பின்னரும் இரண்டு தடவைகள் சந்தர்ப்பங்களிலும் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்துடன், க…

  5. ஊழல் செய்தவர்களுக்காக வாதாடிய அலி சப்ரிக்கு நீதியமைச்சு – ஜனாதிபதி மீது கண்டனம் சிறீலங்க பொதுஜன பெரமுன கட்சியின் சட்ட ஆலோசகர் அலி சப்ரியை நீதி அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்தது குறித்து சமாகி ஜன பலவேகய கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஊழல் செய்தவர்களுக்காக நீதிமன்றங்களில் வாதாடிய சட்டத்தரணியான அலி சப்ரிக்கு எப்படி நீதியமைச்சு பதவியை வழங்கலாம் என அக் கட்சியின் பேச்சாளர் ஹரின் பெர்ணாண்டோ கேட்டுள்ளார். “இது உண்மையில் அச்சம் தருவது” என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணியான அலி சப்ரி, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சட்ட ஆலோசகருமாவார். நேற்று நடைபெற்ற அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வில் அவருக்கு நீதியமைச்சு வழங்கப்பட்டிருந்தது. அலி சப்ரி த…

  6. பொதுமக்கள் அரசியல்வாதிகளை நெறிப்படுத்தும் பொறிமுறை நோக்கி… தமிழ் மக்கள் பேரவை August 13, 2020 நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலிலே மக்கள் தமது தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். அந்த மக்கள் தீர்ப்பு மதிக்கப்படவேண்டிய ஒன்றாகும். இந்தத் தேர்தலில் எந்தவொரு அணியினருக்கும் அவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அத்துடன் இந்தத் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கிடையேயும் கட்சிக்குள்ளேயும் பல முரண்பாடுகளும் ஜனநாயக விரோதப்போக்குகளும் தலைதூக்கியிருப்பது வேதனையானது. இதனால் மக்கள் குழப்பமும் கவலையும் அடைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தரப்பும் மறுதரப்பை விமர்சனம் செய்வதிலும் பார்க்க சுயவிமர்சனம் செய்து தத்தமது நடவடிக்கைகளை நெறிப்படுத்திக் கொள்வது ஆரோக்கிய…

  7. சுமந்திரனை கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற பதவியில் இருந்து எடுத்திருந்தால் இப்படி ஒரு வீழ்ச்சி ஏற்பட்டிருக்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், என்னைப் பொறுத்த வரையில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதே தவிர அவர்களால் சாதிக்க முடியாது என்று ஒன்று இல்லை. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையில் இந்த சுமைகள் சுமத்தப்பட்டன. கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படும்போது நான் இருந்தேன். எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய சவால்…

  8. பிரதமர் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி ,ருவன்வெலி மஹா சாய புனித தளங்களில் வழிபாடு! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி இ ருவன்வெலி மஹா சாய வழிபாட்டு தலங்களில் வழிபாடு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது கடமைகளை பொறுப்பேற்றதை தொடர்ந்து அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி, ருவன்வேலி சாய உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் செய்து வழிபட்டு நல்லாசி பெற்றுக் கொண்டார். இதன்போது விசேட அனுசாசனம் நிகழ்த்திய அநுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க லங்காராம விகாராதிபதி சங்கைக்குரிய ரலபனாவே தம்மஜோதி தேரர், 2015ஆம் ஆண்டு மக்கள் இழைத்த தவறை பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொடுத்து இம்முறை தேர்தலில் அப்பிழையை சரிசெய்வதற்கு மக்களே நடவடிக்கை எடுத்துள்ளனர் எனத் தெரிவித்தார். மக்கள் தமது…

  9. அமைச்சரவை செயலாளர் மற்றும் 25 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் இன்று (13) நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நான்கு அமைச்சின் செயலாளர்களாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விபரம், மேஜர் கமால் குணரத்ன – பாதுகாப்பு செயலாளர். அட்மிரல் ஜயநாத் கொலம்பகே – வெளிவிவகார செயலாளர். மேஜர் சஞ்சீவ முனசிங்க – சுகாதார செயலாளர். மேஜர் சுமேத பெரேரா – விவசாய செயலாளர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்க – சுற்றுச்சூழல் செயலாளர். W. M. D. J.பெர்னாண்டோ – அமைச்சரவை செயலாளர். R. W. R.ரத்னசிறி – நிதி செயலாளர். எஸ்.ஆர்.ஆட்டிகல – பொது சேவைகள் செயலாளர். ஜகத் விஜேவீர – வெகுஜன ஊடக செயலாளர். ரவீந்திர ஹேவவித்தாரண –…

  10. பல பயணிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஷாங்காய்க்கான பல விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. அதன்படி எடிஹாட் ஏர்வேஸின் அபுதாபி-ஷாங்காய் விமானம், சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸின் மணிலா-ஷாங்காய் விமானம் மற்றும் இலங்கை ஏர்லைன்ஸின் கொழும்பு-ஷாங்காய் விமானம் ஆகியவை இடைநிறுத்தப்பட்டுள்ளன. சீனாவின் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, எட்டிஹாட் ஏயர்வேஸின் EY862 என்ற விமானத்தின் ஆறு பயணிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை ஆகஸ்ட் 03 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனா ஈஸ்டர்ன் ஏயர்லைன்ஸின் MU212 என்ற விமானத்தில்…

  11. (நா.தனுஜா) புதிதாக ஏற்பட்டிருக்கின்ற ஆட்சி மாற்றத்தினால் நாம் அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர், எம்மோடு இருக்கின்ற பிள்ளைகளுக்கு என்ன நடக்கும் என்ற பயம் மேலோங்கியிருக்கிறது. மீண்டும் ஒரு இன அழிப்பு ஏற்படுமா என்ற அச்சமும் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோன்று நாட்டில் போர்க்குற்றங்கள் நடக்கவேயில்லை என்றும் காணாமல்போனோர் எவருமில்லை என்று கூறியவர்களுமே இப்போது ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கின்றார்கள். இவ்வாறானதொரு சூழ்நிலையில் எமக்கு எப்படி நீதி கிடைக்கும் என்ற சந்தேகம் வலுத்திருக்கிறது என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தலைவி கனரஞ்சனி யோகதாஸன் தெரிவித்தார். …

  12. செஞ்சோலை படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் அந்த நிகழ்வுகளை நடாத்த முடியாது என புதுக்குடியிருப்பு பொலிஸார் தடை விதித்துள்ளனர். முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது 2006 ஆவணி 14 அன்று இலங்கை விமான படையினர் நடாத்திய தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் படுகொலை செய்யபட்டதின் நினைவேந்தல் நிகழ்வுகள் வருடந்தோறும் வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் நினைவேந்தல் குழுவால் நாடாத்தபடும் நிலையில் இவ்வருடம் நாளை காலை நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கபட்டு வந்த நிலையில் ஏற்பாட்டாளர்களை நேற்று (12.08.2020)பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த புதுக்குடியிருப்பு பொலிஸார் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத…

  13. மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிப் பீடத்தைக் கைப்பற்றியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கியே ஆக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். இனியும் சாக்குப்போக்குச் சொல்லாமல் நிரந்தர அரசியல் தீர்வை அரசு வழங்க வேண்டும். இந்த பொறுப்பிலிருந்து அரசு தப்பவே முடியாது என குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், "வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகளைத் திட்டமிட்டு சிதறடித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனங்களை ஆளும் கட்சியினர் குறைத்துள்ளனர். எனினும், நாம் பலம் குறையவில்லை. இனிவரும் காலங்களில் இழந்த ஆசனங்களை நாம் கைப்பற்றியே தீருவோம். மீண்…

  14. சர்வதேசத்தில் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதே நோக்கம் – தினேஸ் வலுவான வெளிநாட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்தி, சர்வதேசத்தில் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதே தனது இலக்கு என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற சமய வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு நாட்டின் நற்பெயரை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்வது அவசியமாகும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட நிலையில், அமைச்சர்கள் பலரும் இன்று உத்…

    • 0 replies
    • 637 views
  15. பதவியேற்பில் பறக்கவிடப்பட்ட கொடிகள் அரசாங்கத்தின் உண்மை முகத்தைக் காட்டியது- சுமந்திரன் அமைச்சரவைப் பதவியேற்பில் பறக்கவிடப்பட்ட கொடிகள் இந்த அரசாங்கத்தின் உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், மத விவகாரங்களில் அரசியல் தலையீடு இல்லாமல் இருப்பது நல்ல விடயம் எனத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு வைபவத்தில் பயன்படுத்தப்பட்ட கொடி இந்த அரசாங்கத்தினுடைய உண்மையான முகத்தை வெளிக்காட்டியிருக்கிறது. எனவே, இந்த அரசாங்கத்துக்கும் அரசாங்க…

    • 3 replies
    • 951 views
  16. இன்னும் 10 ஆண்டுகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவை மலரும் யார் எதை சொன்னாலும் எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு இந்த புதிய அரசாங்கத்துடன் ஊடாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்கள் பணியை முன்னெடுத்து செல்லும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். தனது 26 வது இளம் வயதில் பாராளுமன்றத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு தெரிவாகி நுவரெலியா மாவட்டத்தில் இலட்சத்திற்கு அதிகமான விருப்பு வாக்குகளை பெற்ற ஜீவன் தொண்டமான் கண்டியில் நேற்று (12) இராஜாங்க அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டார். இதனையட…

    • 0 replies
    • 316 views
  17. முள்ளிவாய்க்காலில் இருந்து பயணத்தை ஆரம்பித்த சி.வி -செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன், எஸ்.நிதர்ஷன் நாடாளுமன்றத் தேர்தலில், யாழ். தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவான முன்னால் முதலமைச்சரும் நீதியரசரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன், தனது அரசியல் பயணத்தை, 2009ஆம் ஆண்டு இறுதி போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தவர்கள் நினைவாக, முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தி தனது அரசியல் பயணத்தினை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நிக…

  18. தமிழ் தேசியத்தை அழிக்கும் திட்டம் கச்சிதமாக முன்னெடுப்பு: இலட்சிய பயணம் தொடரும்- சிவசக்தி தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் இலட்சியப் பயணத்தில், உரிமையுடன் உண்மையாய் தொடர்ந்தும் பக்கபலமாக செயற்படுவோம் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அதேவேளை, நடைபெற்று நிறைவடைந்த பொதுத் தேர்தலில் தமக்கு ஆதரவளித்த, வாக்களித்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “நடைபெற்று நிறைவடைந்த 9ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களுக்கான …

  19. மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் பணி தொடரும் அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சு அலுவலகத்தில் இன்று (13) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், அமைச்சர் என்கின்ற வகையில் நாடளாவிய ரீதியில் சுமார் 15 மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற கடற்றொழிலாளர்கள் தொடர்பான விவகாரங்களில…

  20. மாகாண சபை தேர்தல் வரை ரணிலே தலைவர்? மாகாணசபை தேர்தல் நடைபெறும்வரை ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ், கட்சியை மறுசீரமைக்க வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமைத்துவத்தின்கீழ், கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது, கருத்து வெளியிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் பெறுபேறுகளை ஆராய்ந்த பின்னர் உடனடியாக கட்சியை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கருத்துகள் முன்வைக…

  21. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் நாட்டு மக்கள் மத்தியில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்பும் எமது முயற்சியை சிலர் விரும்பவில்லை. இதற்கு காரணம் என்னவெனில் அவ்வாறானவர்கள் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி தீவிரவாதத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே நோக்கமாக கொண்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் அலிஸ் சப்ரி தெரிவித்தார். கண்டியில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் அந்த விடயங்களைக் குறிப்பிட்டார். தாம் அமைச்சு பொறுப்பை ஏற்றுள்ளமை ஒரு பிரிவை சார்ந்த மக்களுக்காக மாத்திரம் அல்ல என்றும் அனைத்து நாட்டு மக்களுக்குமே ஆகும் என்றும் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ தீவிரவாதம் தொடர்பி…

  22. 19 ஆவது திருத்தத்தை முழுமையாக ஒழிப்பேன்; யாருக்கும் அடிபணியப்போவதில்லை: அலி சப்ரி August 13, 2020 19 ஆவது சட்ட திருத்தினை முழுமையாக ஒழிப்பேன்; யாருக்கும் நான் அஞ்ச மாட்டேன் என்று நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்து உள்ளார். கண்டி தலதா மாளிகையில் நேற்று புதன்கிழமை ஏற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: அனைத்து மக்களின் நம்பிக்கையையும் நிறைவேற்ற நான் தயாராக உள்ளேன். 19 ஆவது திருத்தச் சட்டம் முற்றாக ஒழித்து அந்தக் குழப்பத்தில் இருந்து நாட்டை காப்பாற்றுவேன். இதற்கு தேவையான சட்ட வரைபுகள் விரைவில் தயாரிக்கப்படும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளை தண்டிப்பதற்…

  23. திருகோணமலை தளத்தில் சித்திரவதைகள் இடம்பெறவில்லை- அதிகாரி வாக்குமூலம் August 13, 2020 திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள கன்சைட் என்ற இடம் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டது சித்திரவதைகளுக்கு அந்த பகுதியை பயன்படுத்தவில்லை என அந்த முகாமின் தளபதி சுமித் ரணசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள கன்சட் பகுதியை நல்லாட்சி அரசாங்கத்தில் கோத்தா முகாம் என அழைத்தனர் என சுமித் ரணசிங்க அரசியல் பழிவாங்கல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட பகுதியில் 700 விடுதலைப்புலிகள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர் என நல்லாட்சி அரசாங்கத்தில் தெரிவிக்கப்பட்டது எனவும் அவர் தெரி…

    • 1 reply
    • 498 views
  24. கள்ள வாக்கு என்று சொன்னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.! - சுமந்திரன் நான் கள்ள வாக்கினால்தான் வென்றேன் என நாளை முதல் யாராவது சொன்னால் கடும் நடவடிக்கை எடுப்பேன் . யாராவது துணிவிருந்தால் ஊடகங்கள் முன் அதை சொல்லட்டும். அதன் பின்னர் என்ன நடக்கிறதென பார்ப்போம் என எச்சரித்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இனி நான் கள்ளவாக்கால்தான் வென்றேன் என சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளேன். நாளை முதல் யாராவது துணிவிருந்தால் இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக சொல்லட்டும். அவர்கள் அதற்குரிய விளைவை சந்திப்பார்கள். நான் கள்ளவாக்கினால் வென்றேன் என்பவர்கள் தாராளமாக வழக்கு தாக்கல் செய்யலாம். நான் அரச உத்தியோகத்தர்களின் நேர்மையை…

  25. முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ள முன்னணி எம்.பிக்கள்.! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களது உறுதிப்பிரமாணம் முள்ளிவாய்க்காலில் 15 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9 மணியளவில் இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தேசியப் பட்டியலில் தெரிவான செல்வராஜா கஜேந்திரன் ஆகிய இருவருமே முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். இந்த உறுதிப்பிரமாண நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளா்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளா் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். http://aruvi.com/art…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.