Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதிய அமைச்சர்களுக்கு, ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு தற்போது அரசு நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் உட்பட, இயக்குநர்கள் குழுவின் உறுப்பினர்கள், தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் மாற்றப்படக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதற்கு உரித்தான நியமனங்கள் அந்த நோக்கத்திற்காக நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவால் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான உத்தரவை அனைத்து அமைச்சர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர அனுப்பியுள்ளார். அமைச்சுகளுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நேற்று காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி முன்னிலையி…

  2. கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருமலையில் தேசியப் பட்டியல் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்ட விவகாரத்தில் கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது. கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்தக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், அரசியல் குழுவின் உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம் மற்றும் எஸ்.எக்…

  3. மக்கள் எமக்கு நல்ல பாடத்தை தந்துள்ளார்கள் – செல்வம் அடைக்கலநாதன் மக்களின் சிந்தனை கூட்டமைப்பிற்கு உணர்தப்பட்டிருக்கின்றதுடன், எமக்கு நல்லபாடத்தை தந்திருக்கின்றார்கள் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியா – கற்குழிபகுதியில் இன்று (12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், “இந்த தேர்தலில் எமது இருப்பை கேள்விக்குறியாக்கியவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெற்றிருக்கின்றார்கள். தமிழர்கள் பூர்விகமானவர்கள் இல்லை என்று சொல்லும் அவர்கள். அந்த சிந்தனையை எப்படியும் நிலைநாட்டுவார்கள். எமது மக்களின் வாக்களிப்பை பார்க்கும்போது தேசியத்தை விட அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்திருப்பதை பார்க்கமுடிகின்றது. போரினால…

  4. முன்னாள் அமைச்சர் ரிஷாத்திடம் 7 மணி நேரம் சி.ஐ.டி. விசாரணை! (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் இன்று சுமார் 7 மணி நேரம் சிறப்பு விசாரணைகள் நடாத்தப்பட்டன. சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு 3 ஆம் இலக்க விசாரணை அறையில் முற்பகல் 9.30 மணியளவில் ஆஜரான முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனிடம் மாலை 4.30 மணி வரை விசாரணை நடாத்தப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். உயிர்த்த ஞாயிறு தினமான 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி இடம்பெறும் பிரிதொரு விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஏற்கனவே இரு தடவைகள் சி.ஐ…

  5. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பெருமையடைகிறேன் – நாமல் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பெருமையடைவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவர் ஆகியோருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமைச்சு பதவி பெற்றமை தொடர்பாக ருவிட்டரில் பதிவு செய்துள்ள அவர், “அந்தஸ்து உள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டதில் நான் பெருமையடைகிறேன். என்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு, ஜனாதிபதி…

  6. இரா.சம்பந்தன், ரணில் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக அழைப்பு! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன், மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, அனுரகுமார திசாநாயக்க, ரவுப் ஹக்கீம் உள்ளிட்ட மேலும் பலருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/இரா-சம்பந்தன்-ரணில்-உள்ள/

    • 3 replies
    • 951 views
  7. சிங்கள பௌத்த பேரினவாதத்தினை கொள்கை அடிப்படையில் எதிர்கொள்வதற்கு ஒன்றிணைந்த செயற்பாடுகள் அவசியம்; – விக்னேஸ்வரன் August 12, 2020 எமது இனத்தின் நன்மை கருதி தெரிவு செய்யபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் மத்தியில் சிங்கள பௌத்த பேரினவாதத்தினை கொள்கை அடிப்படையில் எதிர்கொள்வதற்கு ஒன்றிணைந்த செயற்பாடுகள் அவசியமாகவுள்ளன என தமிழ்மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதற்கு ஒத்துழைப்பு வழங்க நானும் தமிழ்மக்கள் தேசிய கூட்டணியும் தயாராகவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இணைந்த வடக்குகிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான சமஸ்டி தீர்வு தரபபடவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றேல் இறுதிதீர்வு தொடர்பாக சர்வதேசமேற்பார்வையின…

  8. தாயகநிலப்பரப்பில் பல மாவட்டங்கள் பறிபோய்கொண்டிருக்கின்றன – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாயகநிலப்பரப்பிலே பல மாவட்டங்கள் பறிபோய்கொண்டிருக்கின்றன.வன்னிமாவட்டத்தையும் அந்தநிலைக்கு கொண்டுசெல்கின்றார்கள். எனவே இந்த தேர்தலுக்குபின்னர் வரக்கூடியநிலைமையை தொடர்பாக நாம் ஆராயவேண்டும்.இன்று புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்படவிருக்கின்றது.அது ஒரு ஒற்றையாட்சியாக இருக்கப்போகின்றது.அதனை ஆதரிக்கபோவதாக கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருக்கின்றது என தமிழ்தேசியமக்கள் முண்ணயின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். காணாமல் போனவர்கள் தொடர்பாகவும். இன அழிப்பிற்கு நீதிகோரியும் இறுக்கமான செயற்பாடுகளை நாம் முன்னெடுப்போம்.பெரும்பாண்மை கிடைத்துள்ள புதிய அரசாங்கம் எங்களை திரும்பி…

  9. இடியன் துவக்கால் தனக்குத்தானே வெடி வைத்து தற்கொலை செய்துள்ள சம்பவமொன்று மாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாங்குளம் துணுக்காய் வீதியை சேர்ந்த ரகுநாதன் கௌரிதரன் வயது 37 என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார். குறித்த இளைஞர் கால் முறிந்து முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியவர் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் இடியன் எனப்படும் ஒருவகை கட்டு துப்பாக்கியினால் தனக்குத்தானே வெடி வைத்து மரணித்துள்ளார். மரணம் தொடர்பிலான முதற்கட்ட விசாரணையில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டில் விரக்தியுற்ற குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்து…

  10. பருத்தித்துறை கடற்பரப்பில் மிதந்துவந்த நிலையில் 294 கிலோ கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று (12) அதிகாலை கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மர்மமான பொதிகள் கடலில் மிதந்து வந்ததை அவதானித்துள்ளனர். இதன்போது பொதிகளை கடற்படையினர் சோதனையிட்டபோது அதற்குள் கஞ்சா போதைப்பொருள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. https://newuthayan.com/பருத்தித்துறையில்-294-கிலோ/

  11. அம்பாறை – கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்காக கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்ததாக அம்பாறை மாவட்ட தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வர்த்தமானி செய்யப்பட்டுள்ள தவராசா கலையரசன் குறிப்பிட்டார். அவரது அலுவலகத்தில் இன்று (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார். மேலும், “கல்முனை பிராந்தியத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒத்திசைவுடன் தான் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த முடியும். கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்காக கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்திருந்தது. எல்லை விடயங்களில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவைகள் பேசித் தீர்க்கப்பட வேண்டும். எங்கள் கட்சிக்கு ஜனநாய…

  12. (நா.தனுஜா) பௌத்த பிக்குகளின் எதிர்ப்பையும் மீறி நீதியமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்பட்டமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைப் பாராட்டியிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, பாதுகாப்பு அமைச்சின் கீழ் 'உள்நாட்டு அலுவல்கள்' என்ற விடயதானம் கொண்டுவரப்பட்டமை சீனப்பாணியிலான 'கண்காணிப்பு மிகுந்த' அரசாங்கமொன்றை அமைப்பதற்கு அடித்தளமிடப்படுவதையே காண்பிக்கின்றது என்றும் எச்சரித்திருக்கிறார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று புதன்கிழமை கண்டியிலுள்ள தலதா மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. அதன்படி நீதியமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நியமிக்கப்பட்டிருப்பதுடன், இராஜாங்க அமைச்சுக்…

  13. (எம்.மனோசித்ரா) 1977 ஆம் ஆண்டு முதல் நுவரெலியா மாவட்டத்திற்கு காணப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள தமிழ் பிரதிநித்துவ அமைச்சு இம்முறை இல்லாமலாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதிய அரசாங்கத்தில் நுவரெலியா மாவட்டத்திற்கென அமைச்சரவையொன்று ஒதுக்கப்படாமை கவலையளிக்கிறது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் வேலுசாமி இராதா கிருஷ்ணன் தெரிவித்தார். கொழும்பு - ரமடா ஹோட்டலில் இன்று புதன்கிழமை தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் , இலங்கை வரலாற்றில் 43 வருடங்களாகக் காணப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு இம்முறை இல்லாமலாக்கப்பட்டுள்ளது…

  14. நா.தனுஜா) புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு இன்றைய தினம் கண்டி மாநகரத்தில் பல பகுதிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சிறுபான்மையினத்தவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறங்கள் நீக்கப்பட்ட கொடிகளை உடனடியாக அகற்றுவதற்கு கண்டி மாநகரசபை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வரலாற்று வெற்றியைப்பெற்று அரசாங்கம் அமைத்திருக்கும் நிலையில், அதன் புதிய அமைச்சரவை நேற்று புதன்கிழமை தலதா மாளிகையின் பார்வையாளர் அரங்கான மகுல் மடுவவில் வைத்துப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. இந்நிகழ்வை முன்னிட்டு கண்டி மாநகரத்தின் பல பகுதிகளிலும் மாநகரசபை ஊழியர்கள் தேசியக்கொடியில் சிறுபான்மையினரைப் பிரதிபலிக்கும் நிறங்கள் நீக…

  15. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பெருமையடைகிறேன் – நாமல் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பெருமையடைவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவர் ஆகியோருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமைச்சு பதவி பெற்றமை தொடர்பாக ருவிட்டரில் பதிவு செய்துள்ள அவர், “அந்தஸ்து உள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டதில் நான் பெருமையடைகிறேன். என்மீது கொ…

  16. துணைவேந்தர் பதவிக்காக 5 பேர் பேரவைக்கு முன்மொழிவு -என்.ராஜ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையிலும் மதிப்பீட்டின் அடிப்படையிலும், 5 பேர் பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையிலும் மதிப்பீட்டின் அடிப்படையிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்கென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைப்பதற்கான, பல்…

  17. மைத்திரிக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாமைக்கான காரணம் வெளியானது! முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்குவதற்காக முன்மொழியப்பட்டிருந்த அமைச்சுப் பதவியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மற்றுமொரு உறுப்பினருக்கு வழங்குமாறு அவர் தெரிவித்திருந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கமைய சுற்றுச்சூழல் அமைச்சுப் பதவியானது மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னர் அந்த அமைச்சுப் பதவி மஹிந்த அமரவீரவுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும் கண்டியில் இன்று இடம்பெற்றிருந்த அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழாவில் மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டிருந்தார் என்பது…

  18. அமைச்சுக்களின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் - முழு விபரம் இணைப்பு! அமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, இராஜாங்க அமைச்சு மற்றும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுக்களுக்கு கீழ் இயங்கும் திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள் பின்வருமாறு,1.0 பாதுகாப்பு அமைச்சு (திணைக்களங்களும் அரச கூட்டுத்தாபனங்களும் நியதிச் சட்ட நிறுவனங்களும்) 1. பாதுகாப்புப் பதவிநிலைத் தலைவரின் அலுவலகம் 2. இலங்கைத் தரைப்படை 3. இலங்கைக் கடற்படை 4. இலங்கை வான்படை 5. ரக்னா ஆரக்சன லங்கா லிமிட்டெட் 6. இரசாயன ஆயுதங்கள் சமவாயத்தைச் செயற்படுத்தும் தேசி…

    • 0 replies
    • 674 views
  19. டக்ளஸ் தேவானந்தா மற்றும் அலி சப்ரிக்கு அமைச்சுப் பதவி! புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டனர். கண்டி மகுல்மடுவ மண்டபத்தில் இன்று இடம்பெற்ற புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர்கள் இருவரும் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டனர். அதன்படி, டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார். டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு 32,146 வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றிருந்தார். இவ…

    • 0 replies
    • 569 views
  20. ஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி! தோட்ட உட்கட்டமைப்பு, சமூக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமானும் மற்றும் தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரனும் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டனர். கண்டி மகுல்மடுவவில் இன்று (12) நடைபெற்று புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இராஜாங்க அமைச்சர்களாக இவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். தோட்ட உட்கட்டமைப்பு, சமூக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமான் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வாரன ஜீவன் தொண்டமான் மலையகத்தைப…

    • 4 replies
    • 679 views
  21. தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் நியமனம் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஆசனத்திற்காக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர், கலாநிதி ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தலைமைச் சபையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். இவர், பல்கலைக்கழக கலாநிதிகளின் சங்கத்தின் செயலாளராக செயற்பட்டுள்ளார். அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் குழுவில் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். இது தொடர்பான தீர்மானம் இன்று (12) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸா…

    • 0 replies
    • 193 views
  22. நாடாளுமன்றம் வருவதற்கு அனுமதி கோரியுள்ள “சொக்கா மல்லி“ மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு, வெலிக்கட சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொக்கா மல்லி எனப்படும் பிரேமலால் ஜயசேகர, 20 திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற முதல் அமர்வில் கலந்துகொள்வதற்கான அனுமதியைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலைகள் அதிகாரிகளிடம் விடுக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கை, சிறைச்சாலைகள் தலைமையகத்தால், நீதிமன்ற அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற அமைச்சின் அனுமதிக்கு அமைய, பிரேமலால் 20ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு வருகைத் தரலா…

    • 0 replies
    • 273 views
  23. கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரவிராஜ் சசிகலாவையே பிரேரிக்க இருந்தேன் – மாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரவிராஜ் சசிகலாவையே பிரேரிக்க இருந்ததாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மேலும் தேசியப் பட்டியல் உறுப்பினர் நியமனம் தொடர்பாக சம்மந்தமில்லாத தரப்பினர் தலையிட்டதும், அது தொடர்பாக அவர்கள் நடந்துகொண்ட விதமுவே அதிருப்தியளிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமான தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சர்ச்சை எழ…

  24. ஞானசார தேரருக்கு ஆதரவாக கொழும்பில் சாய்ந்தமருதுாா் பிறப்பிடம் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் Air craft Mechanical Eng. அமீர் இஸ்ஸடீன் நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் இவா் கொரோனவுக்கு முன் இலங்கை வந்தவா் மீண்டும் அவுஸ்திரேலியா செல்லவில்லை. பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரருக்கு தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றம் செல்ல இடமளிக்க வேண்டும் எனத் தெரிவித்தே இவா் சிலருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா். இந்த ஆர்ப்பாட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை பகல் கொழும்பு - இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக அமைதியான முறையில் நடந்தது. இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பிஸ்னுலாபி அமீர் இஸ்ஸதீன், எங்கள் மக்கள் கட்சி ஊடாக கம்பஹா மாவட்டத்தில…

    • 2 replies
    • 1.3k views
  25. பாறுக் நஜீ- Eliana Apicella எனும் அமெரிக்க பிரஜை அண்மையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் விடுதி இலக்கம் 6 இல் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குடல்வளரி அழற்சி (Appendicitis) இருப்பது கண்டறியப்பட்டு குடல் வளரியை அகற்றும் அறுவைசிகிச்சை (Appendicectomy) சத்திர சிகிச்சை நிபுணர் Dr. P. K. Ravindran தலைமையில் வெற்றிகரமா மேற்கொள்ளப்பட்டது. இன்று 11.08. 2020 பூரண சுகத்துடன் அவர் சத்திர சிகிச்சை விடுதியை விட்டு வெளியேறும் போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தனக்கு வழங்கப்பட்ட மேம்பட்ட சேவையை பாராட்டி நன்றி தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் அமெரிக்காவில் உள்ள வைத்திய சேவையை விட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வழங்கப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.