Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எனது கருத்தை பூதாகாரமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை -கருணா தேர்தல் பிரசாரத்திற்காக நான் தெரிவித்த கருத்துக்களை பூதாகாரமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை என கருணா அம்மான் எனப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அண்மையில் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை முன்னிலையாகிய அவர் 7 மணிநேர நீண்ட வாக்குமூலம் அளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ நான் நடந்த உண்மையைக் கூறியிருக்கின்றேன். எதுவித தவறான கண்ணோட்டத்திலும் எதுவும் நான் கொடுக்கவில்லை. எவரையும் …

    • 3 replies
    • 579 views
  2. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் கூட்டமைப்புடன் இணைந்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் வரதன் லக்ஸ்மன் இன்று வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டார்.திருகோணமலை மாவட்ட மக்களின் வாக்குகளை சிதறடித்து பெரும்பான்மையை குறைத்துக்கொள்ளாது தலை சிறந்த தலைமையின் கீழ் பயணித்து தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை காத்துக்கொள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.தற்போது திருகோணமலையில் உள்ள கள நிலவரங்களின் அடிப்படையில் தமிழ் பிரதிநிதித்துவத்தினை காக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தாம் இருப்பதாக வரதன் லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.முன்னாள் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற…

  3. 7 மணிநேர வாக்குமூலத்தின் பின்னர் CIDயில் இருந்து வெளியேறினார் கருணா! கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை முன்னிலையாகிய அவர் 7 மணிநேர நீண்ட வாக்குமூலம் அளித்ததன் பின்னர் CIDயில் இருந்து வெளியேறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். 2000 தொடக்கம் 3000 வரையிலான இலங்கை படையினரை, ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் கொன்றதாக கருணா தெரிவித்ததையடுத…

  4. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இம்முறை 20 ஆசனங்களை பெறும் - சம்பந்தர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்முறை 20 ஆசனங்களைப் பெறுமென, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த தேர்தலை விடவும் வடக்கு, கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் இம்முறை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்களை பெறும் எனவும் தமிழ் பேசும் மக்கள் வாக்குகளைப் பிரிக்காமல் ஒரு குடையின் கீழ் தங்களது வாக்குகளை அளித்து சர்வதேசத்துக்கு ஒரு நல்ல செய்தியை காட்ட வேண்டும் எனவும் அவர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார். “தமிழ் மக்களுக்கான சரியான ஒரு அரசியல் தீர்வை பெற வேண்டிய சந்தர்ப்ப…

  5. இந்திய மீனவர்களின் எல்லை மீறிய செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக உள்நுழைகின்ற இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கான இணைந்த பொறிமுறை ஒன்றை உருவாக்கி முன்னகர்த்துவது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் நேற்று (24) நடைபெற்ற சந்திப்பின்போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்கள் விவகாரத்தினை சுமூக…

    • 1 reply
    • 676 views
  6. கருணாவுக்கு வக்காலத்து வாங்கும் அரசு அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – சுரேஷ் விடுதலைப் புலிகளின் தளபதிகளை பாதுகாத்து அவர்களுக்காக வக்காலத்து வாங்கக் கூடிய அரசு, மரண தண்டணை நிறைவேற்றப்பட்ட இராணுவத்துக்கு பொது மன்னிப்பளித்த அரசு 15 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் கால இழுத்தடிப்பு செய்யாமல் விடுதலை செய்ய வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ‘சில நாட்களுக்கு முன்பு கருணா, ஓர் கூட்டத்தில் பேசுகின்ற பொழுது தான் கொரோனா வைரைஸிலும் விட பயங்கரமானவன் என்றும் ஆனையிறவு போன்ற தாக்குதல்களில் 3000 ற்கும் மேற்பட்ட இராணுவத்தினரை கொலை …

  7. தமிழர்களிடம் வாக்கு கேட்க தேசிய கட்சிகளுக்கு அருகதை இல்லை! – சிவஞானம் “யாழ்ப்பாணம் – மிருசுவிலில் தமிழர்களை படுகொலை செய்த குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனிலுக்கு பொது மன்னிப்பை வழங்கும் தென்னிலங்கை கட்சிகள் துப்பாக்கிகளைக் கூட கையில் ஏந்தாத ஆனந்த சுதாகரன் போன்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்துவருகின்றது. எனவே தேசியக் கட்சிகள் வடக்கு கிழக்கில் தமிழர்களிடம் வாக்குக் கேட்பதற்கு அருகதை இல்லை” இவ்வாறு வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்று (25) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார். மேலும், ‘மிசுருவில் பகுதியில் தமிழர்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றொழித்த இராணுவ அதிகாரி கைது செய்யப்பட…

  8. மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடி மீது மன்னார் நகர சபைக்கு சொந்தமான கழிவு அகற்றும் பௌசர் இன்று (வியாழக்கிழமை) மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. மன்னார் நகர சபைக்கு சொந்தமான கழிவு அகற்றும் பௌசர் மன்னார் நகரில் கழிவுகளை சேகரித்து பாப்பாமோட்டை பகுதியில் உள்ள மீள் சுழற்சி நிலையத்திற்கு கொண்டு செல்லும் போது மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள பிரதான இராணுவ சோதனை சாவடி மீது குறித்த பௌசர் வாகனம் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது சோதனை சாவடிக்கு என வீதியில் அமைக்கப்பட்ட இராணுவ வீதித் தடைகள் தூக்கி வீசப்பட்டதுடன், சோதனை சாவடியில் வாகனங்கள் பதிவு செய்யப்படும் பகுதி முழு…

    • 0 replies
    • 435 views
  9. காத்திருந்தோரைக் கடந்து சென்ற ஆளுநர் -சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு கல்விக் கோட்டத்துக்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடமொன்று, இன்று (25) பிற்பகல் 1 மணிக்கு திறந்து வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிற்பகல் 12.30 மணிக்கு முன்னதாகவே செய்து முடித்துவிட்டு, ஆசிரியர்களும் மாணவர்களும் பாடசாலை …

    • 0 replies
    • 502 views
  10. கூட்டமைப்புடன் இணைந்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்! by : Benitlas தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் வரதன் லக்ஸ்மன் இன்று(வியாழக்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திருகோணமலையில் உள்ள கள நிலவரங்களின் அடிப்படையில் தமிழ் பிரதிநிதித்துவத்தினை காக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தாம் இருப்பதாக வரதன் லக்ஸ்மன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட மக்களின் வாக்குகளை சிதறடித்து பெரும்பான்மையை குறைத்துக்கொள்…

    • 0 replies
    • 517 views
  11. வாக்குச் சீட்டு அச்சிடும் பணி 50 சதவீதம் நிறைவு பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள், அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் நாட்களில் அச்சிடப்படும் என அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே கூறியுள்ளார். இம்முறை பொதுத் தேர்தலுக்காக ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படவுள்ளன. http://www.tamilmirror.lk/செய்திகள்/வககச-சடட-அசசடம-பண-50-சதவதம-நறவ/175-251878

  12. சுகாதார அமைச்சின் விசாரணை குழு அதிகாரிகள் யாழிற்கு விஜயம்! மத்திய சுகாதார அமைச்சிலிருந்து 12 பேர் கொண்ட குழு யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் வைத்தியசாலைகளுக்கு சென்று ஆய்வுகளை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. யாழ்.மாவட்டத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் காணப்படும் முறைகேடுகள், குறைபாடுகள் தொடர்பான முறைப்பாடுகள் மத்திய சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்ட நிலையில் அது குறித்து ஆராய்வதற்காகவே இந்த குழு வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக அண்மையில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இடமாற்றம் மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோரின் இடமாற்றம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழ விடுத்த அறிவுறுத்தல் தொடர்பிலும் இந்த குழு கவனத…

  13. வவுனியாவில் திடீர் சோதனை! வவுனியாவில் பொதுப்போக்குவரத்து சேவைகளில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சுகாதார வழிமுறைகள் தொடர்பாக இன்று (25) திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக பொதுப்போக்குவரத்து சேவைகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் மற்றும் பேருந்து சாரதி நடத்துனர்கள் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் இணைந்து திடீர் சேதனையில் ஈடுபட்டனர். இதன்போது பேருந்துகள் மற்றும் புகையிரதங்கள் என்பன சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. https://newuthayan.c…

  14. தன்னை தானே சுட்டு இராணுவ சிப்பாய் தற்கொலை! கொழும்பு – பொல்ஹென்கொட இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 22 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். https://newuthayan.com/தன்னை-தானே-சுட்டு-இராணுவ/

  15. விடுதலை புலிகள் சம்பந்தமான செல்போன் செயலி குறித்து கவனம் செலுத்திய இராணுவம்! விடுதலைப் புலிகள் சம்பந்தமான செல்போன் செயலி குறித்து பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கொள்கைகள் இந்த செயலிகள் மூலம் பிரசாரப்படுத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மாவீரர்கள் என பெயரிடப்பட்டுள்ள இந்த செல்போன் செயலி ஊடாக விடுதலைப் புலிகள் அமைப்பின் புகைப்படங்கள், காணொளிகள் பிரபலப்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள், குரல் பதிவுகளும் இந்த செயலியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள இந்த செயலிகளை நீக்க அந்த நிறு…

  16. Nimirvu தமிழ்மக்களை தமிழ் அரசியல்வாதிகளில் பலர் கூட சிறுபான்மை இனம் என்றே விழிக்கும் நிலை காணப்படுகின்றது. சம்பந்தன் ஐயா கூட பல இடங்களில் சிறுபான்மை இனம் என சொல்லிக் கொண்டு வந்தார். உண்மையிலே தமிழ் மக்களை ஒரு சிறுபான்மை இனமாக கொள்வதா அல்லது தேசிய இனமாக கொள்வதா என்கிற விவகாரம் 70 களிலேயே தீர்க்கப்பட்ட விவகாரம். என நிமிவுக்கு கருத்து தெரிவித்தார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம். அவர் மேலும் முக்கியமாக தெரிவித்த விடயங்கள் வருமாறு, யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடந்த அரசியல் கூட்டமொன்றில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராஜதுரை அவர்கள் பேசும் போது "தமிழ் மக்கள் ஒரு சிறுபான்மை இனம். அவர்கள் உரிமைக்காக போராடுகின்றார்கள்" என்று குறிப்பிட்டார். அதற்கடுத்து பேசி…

  17. மாமனிதர் ரவிராஜின் 58வது ஜனன தினம் சாவகச்சேரியில் அனுஷ்டிப்பு! சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 58வது ஜனன தினம் இன்று (25) அனுஷ்டிக்கப்பட்டது. தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள அவரது சிலை முன்னால் இந்த ஜனனதினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் கலந்து கொண்டு கணவரின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். htt…

  18. ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு In இலங்கை November 19, 2019 4:56 am GMT 0 Comments 1082 by : Dhackshala சீன நாட்டின் ஜனாதிபதி ஷி – ஜின்பிங் இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியுடன் இணைந்து இரண்டு நாடுகளுக்கிடையேயான நடைமுறையான உடன்படிக்கைகள் மூலம் சிறந்த பெறுபேற்றை பெற்றுகொள்ள எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சீனாவின் ஒரே நோக்கம், ஒரே பாதை என்ற உயர்ரக செயற்திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். http://athavannews.com/ஒரே-நோக்கம்-ஒரே-பாதை-என்ற/

  19. சுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய வர்த்தமானி இன்று வெளியீடு? பொதுத் தேர்தலுக்கான சுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (25) வெளியிடப்படவுள்ளது. சுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் சட்டமா அதிபரின் அங்கீகாரம் பெற்றதன் பின்னர், இன்று வெளியிடப்படுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று அறிவித்திருந்தார். அதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படாமை தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று அதிருப்தி வெளியிட்டிருந்தார். அத்தோடு, குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாமை…

  20. சட்ட ஆலோசகர் பதவி நீக்கம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஸ்ரனிஸ்லாஸ் செலஸ்ரின், அப்பதவியில் இருந்து, இன்று (24) நீக்கப்பட்டுள்ளார். அவர், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் யாழ்மாவட்டத் தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள நிலையில், தனது தேர்தல் பிரசாரங்கள், பேஸ்புக் ஊடாக, மாநகர சபை தொடர்பிலும் அதன் உறுப்பினர்கள் தொடர்பிலும் கடுமையான விமர்சனங்களையும் அவதூறுகளையும் முன்வைப்பதாக, சபையில், அண்மையில் பிரஸ்தாபிக்கப்பட்டது. அவரை மாநகர சபை சட்ட ஆலோசகர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென, கோரிக்கை முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம…

  21. பௌத்த தேசியவாதத்தை பரப்ப முற்படுவது நல்லிணக்கத்தை முடக்கும்’ நாட்டுக்குள் சிங்கள பௌத்த தேசியவாதத்தை ஜனாதிபதி பரப்ப முற்படுவது, நல்லிணக்கத்தை ஏற்படுத்த மாட்டாதென, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார். நாட்டின் ஜனநாயகத்தைப் பேணுவது தொடர்பிலும் நிர்வாகத் துறைகள், இராணுவ மயமாக்கல் தொடர்பில் மறுபரிசீலனைகளைச் செய்ய வேண்டுமென்றும், அவர் அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். மட்டக்களப்பு - நல்லையா வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு தொடர்ந்துரைத்த அவர், “நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலி…

  22. யாழ்ப்பாணம் மாவட்ட மீன்பிடி: ’தற்போதே வழமைக்குத் திரும்பியுள்ளது’ என்.ராஜ் யாழ்ப்பாணம் மாவட்ட மீன்பிடியானது, தற்போதே வழமை நிலைமைக்குத் திரும்புவதாக, மாவட்ட நீரியல் வளத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு முன்னர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நாளொன்றுக்கு ச் சுமார் 1 இலட்சத்து 30 ஆயிரம் கிலோகிராமுக்குக் குறையாத அளவில் கடல் உற்பத்திகள் கிடைக்கப்பெற்றன. இருப்பினும், ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஏப்ரல், மே மாதங்களில், 60 ஆயிரம் தொடக்கம் 70 ஆயிரம் கிலோகிராம் உற்பத்தியைக் கூட எட்டமுடியாத நிலைமை காணப்பட்டது. தற்போது, நாடு வழமைக்கும் திரும்பியதைத் தொடர்ந்து, நாளொன்றுக்கு 1 இலட்சத்து 30 ஆயிரம் கிலோகிராமைத் தாண்டிய உற்…

  23. நாட்டில் இராணுவ ஆட்சியொன்று நிறுவப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை- மாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்நாட்டில் இராணுவ ஆட்சியொன்று நிறுவப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “கோட்டாபய ராஜபக்ஷவினுடைய இயல்பு மற்றும் இராணுவத்தில் கடமையாற்றிய அனுபவங்களைக் கொண்டு அவர் ஜனநாயக ரீதியாக ஒரு அரச தலைவராக வந்துள்ளார். அவரை மக்கள் ஆதரித்து இருக்கின்றார்கள். ஆனால், தமிழர் தாயகப் பிரதேசத்தில் 20 ஆயிரம் உளவாளிகளையும் நடமாட விட்டிருப்பதாக ச…

  24. கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்களுக்கு மாவை அழைப்பு! by : Vithushagan துரதிஸ்ரவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியிருப்பது தனக்கு மிகுந்த கவலை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்தோடு தேர்தல் முடிந்ததற்கு பிறகு அவர்களை இணைத்து இந்த நெருக்கடியான காலகட்டத்தில், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லவேண்டும் எனும் ஆதங்கத்தோடு தான் இருப்பதாகவும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட மாவை சேனாதிராஜாவிடம் ஊடகவியலாளர்கள் மாற்றுத் தலைமை பற்றிய கேள்வியினை எழுப்பினர். அவ்வாறு எழுப்பப்…

    • 5 replies
    • 710 views
  25. புலிகள் அமைப்பில் இருந்து 150 பேருடன் கருணா வெளியேறினார். அவர்களில் 80 பேர் 13 வயதுக்குட்பட்டவர்கள். எனவே அவர்களுக்கு இராணுவ வலிமை இல்லை என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார். அண்மையில் நிகழ்வு ஒன்றில் பேசுகையில் ‘புலிகளுடன் இருந்து ஆணையிறவு போரின் போது 2000 – 3000 இராணுவ வீரர்களை கொன்றேன்’ என்று கருணா எனும் வி.முரளிதரன் தெரிவித்திருந்தார். இதற்கு எதிராக எதிர்ப்புக்கள் கிளம்பி விசாரணை வரை குறித்த விவகாரம் சென்றுள்ள நிலையிலேயே இன்று (24) சரத் பொன்சேகா மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், ‘புலிகளிடம் இருந்து விலகிய பின்னர், கருணா தமக்கு தகவலையோ அல்லது தமது இராணுவத்துக்கு இராணுவ வலிமையையோ தரவில்லை என்றும், அவரது கருத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.