ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142931 topics in this forum
-
யாழில் விபத்து! ஒருவர் மரணம்! யாழ்.ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யாழ்.பல்கலைகழக பேருந்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார். https://newuthayan.com/யாழில்-விபத்து-ஒருவர்-மர/
-
- 0 replies
- 441 views
-
-
மல்கம் ரஞ்சித் அரசியலில் ஈடுபடுகிறார் – ஹரின் குற்றச்சாட்டு! பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசியலில் ஈடுபடுகின்றார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றம்சாட்டியுள்ளார். மெதிரிகிரியவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குற்றம்சாட்டினார். மேலும், ‘வரலாற்று ரீதியில் கத்தோலிக்கர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்த போதும் பயங்கரவாத தாக்குதலின் பின்னர் அந்த நிலைமை மாறியது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை கோட்டாபய ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக முன்வைப்பதற்கு பயன்படுத்தினார்கள். குறிப்பாக தாக்குதல்கள் இடம்பெற்று சில நாட்களிற்குள் தனியார் தொலைக்காட்சியொன்று அதற்கான பிரசாரத்தை ஆரம்பித்தத…
-
- 3 replies
- 717 views
-
-
பிரமதாஸவே ஆயுதம் கொடுத்தார்; ‘நானே சாட்சி’ - கருணா அம்மான் பா.நிரோஸ் தான் அம்பாறையில் கூறியிருந்த கருத்தை வைத்துக்கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர், தனக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருவதாக, முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். “தன்னைக் கைது செய்யுமாறு சஜித் கூறிவருகிறார். என்னை எப்படி கைதுசெய்ய முடியும்? நாட்டில் நிலவிய கொடிய யுத்தத்தை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நிறைவுக்கு கொண்டுவந்தவர்கள் நாங்கள்தான்” எனவும் தெரிவித்தார். அம்பாறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டிருந்த கருணா அம்மான் த…
-
- 3 replies
- 676 views
-
-
ஜனாதிபதியின் செயற்பாடு சிறுவர்களுக்கு ஒரு துரதிஸ்டமான முன்னுதாரணமாகும்- மங்கள by : Yuganthini ஜனாதிபதி, மத்திய வங்கியின் அதிகாரிகளை மோசமாக கண்டித்தமை, இலங்கையின் எதிர்கால சிறுவர்களுக்கு ஒரு துரதிஸ்டமான முன்னுதாரணமாகும் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,“ கடந்த 70 வருட இலங்கை வரலாற்றில் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அதிகாரிகளின் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் இதுவாகும் மத்திய வங்கியின் அதிகாரிகளை ஜனாதிபதி இழிவான முறையில் ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
மட்டு ரோட்டரிக் கழகத்தின் வைர விழா! மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் 60ம் ஆண்டு நிறைவின் வைரவிழா நேற்று (21) மாலை பயனியர் வீதியில் அமைந்துள்ள ரோட்டரி நிலையத்தில் ரோட்டரிக் கழகத்தின் நடப்பாண்டு தலைவர் வைத்திய கலாநிதி கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி. கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். (150) https://newuthayan.com/மட்டு-ரோட்டரிக்-கழகத்தின/
-
- 0 replies
- 339 views
-
-
அதிக விலைக்கு இறைச்சி விற்பனை சொய்தால் முறையிடவும்! மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் தோல் நீக்கப்பட்ட புரோயிலர் கோழி இறைச்சிகளை விற்பனை செய்த எட்டு வியாபாரிகளுக்கு எதிராக இன்று (22) சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண நுகர்வோர் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார். ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் மீராவோடை போன்ற பகுதிகளில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் தோல் நீக்கப்பட்ட புரோயிலர் கோழி இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்களால் நுகர்வோர் அதிகார சபைக்கு வழங்கப்பட்ட பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவா…
-
- 0 replies
- 277 views
-
-
ரயில்முன் பாய்ந்து குடும்பஸ்தர் தற்கொலை! வவுனியா – பெரியகட்டு 41வது மைல் கல்லுக்கு அண்மையில் இன்று (22) காலை ரயிலுக்கு முன்பாக பாய்ந்து குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் மன்னார் – எழுத்தூரில் வசிக்கும் ஆ.ரகுசங்கர் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இன்று காலை தனது காரை, ரயில் பாதையின் அருகில் நிறுத்திவிட்டு, மன்னார் சென்ற புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சடலம், மடு ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பறையநாளங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://newuthayan.com/புகையிரதத்தின…
-
- 2 replies
- 596 views
-
-
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு ஆலய வருடாந்த உற்சவம் நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் யாழின் பல பிரதேசங்களிலிருந்தும் பக்தர்கள் ஆலயத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழலில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆலய வளாகத்திற்குள் குவியும் பக்தர்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரும் முப்படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் சிலரும் முப்படையினரும் பாதணிகளை கழற்றாது ஆலயத்திற்குள் பிரவேசித்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இவர்களின் இந்த செயற்பாட்டை அவதானித்த பக்கதர்கள் ஆலயத்தின் தொன்மையையும் மதிப்பையும் சீர்குலைக்கும் வகையில் செயற்பட…
-
- 1 reply
- 612 views
-
-
ஸ்ரீசுகவில் இருந்து விலகுகிறார் நிஷாந்த கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடு காரணமாக தாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார். காலியில் இன்று (22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் பாேதே அவர் இதனை தெரிவித்தார். https://newuthayan.com/ஸ்ரீசுகவில்-இருந்து-வில/
-
- 0 replies
- 484 views
-
-
சந்தர்ப்பங்கள் கிடைத்தபோது பயன்படுத்தாது இன்று மாயகண்ணீர் வடிப்பதில் அர்த்தம் இல்லை – தவராசா குற்றச்சாட்டு by : Jeyachandran Vithushan சந்தர்ப்பங்கள் கிடைத்தபோது பயன்படுத்தாது அசமந்தப் போக்காக இருந்துவிட்டு இன்று மாயகண்ணீர் வடிப்பதில் அர்த்தம் இல்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார். வடக்கின் தொல்பொருள் மற்றும் புராதன சின்னங்களை காப்பாற்றத் தவறியது வடக்கு மாகாணசபையே என்றும் அவர் சாடியுள்ளார். அண்மையில் வடக்கிலும் தொல்பொருள் மற்றும் புராதன சின்னங்களை அடையாளம் காண்பதற்கு செயலணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபஷவினால் கிழக்கு மாகாணத்திலுள்…
-
- 0 replies
- 401 views
-
-
எனக்கும் பிள்ளையானுக்கும்தான் போட்டி- ஹிஸ்புல்லாஹ் by : Yuganthini எதிர்வரும் பொதுத்தேர்தலில் எனக்கும் பிள்ளையானுக்கும்தான் (சிவனேசத்துரை சந்திரகாந்தன்) போட்டி நிலவுகின்றதென கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். பொதுத்தேரதல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ஹிஸ்புல்லாஹ் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மூன்று ஆசனங்களைப் பெறுவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் எஞ்சியுள்ள இர…
-
- 0 replies
- 422 views
-
-
பொதுத்தேர்தலில் கூட்டமைப்பு கடந்த காலங்களைவிட பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றும் – மாவை ஒகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களைவிட பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (சனிக்கனிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தேர்தலில் எந்த அரசாங்கம் அமையப்போகின்றது என்று தெரியாது. எனினும் எந்த அரசாங்கம் ஆட்சியமைகின்றது என்று பார்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த சந்தர்ப்பத்தில் தீர்மானிக்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறை பெரும்பான்மை பலத்துடன் வெற்ற…
-
- 3 replies
- 599 views
-
-
இளைஞனை கொன்ற இராணுவத்துக்கு எதிராக வீதி மறியல்! கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று (20) மாலை மணல் ஏற்றச் சென்ற கெற்பேலியை சேர்ந்த இளைஞன் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ-9 வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட இளைஞனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். https://newuthayan.com/இளைஞனை-கொன்ற-இராணுவத்துக/ முகமாலையில் இராணுவத்தால் இளைஞன் சுட்டுக்கொலை! கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று (20) மாலை 6.15 மணியளவில் மணல் ஏற்றிச் சென்ற வாகனம் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிாசூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த…
-
- 6 replies
- 1k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய பெருமை எனக்கே - விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது நானே. போர் நடைபெறுகையில் நாடாளுமன்றில் தமிழர்களின் குரல் ஒலிக்க வேண்டும் என சிவராம் கூறியதற்கிணங்கதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரிடம் கூறி நானே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினேன் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். பொத்துவில் – ஊறணியில் தேர்தல் பரப்புரையில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-“வடக்கு, கிழக்கில் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வியைச் சந்திக்கும். கொழும்பை மையமாக வைத்தியங்கும் சுமந்திரன் ரணிலின் முகவர். தமிழர…
-
- 5 replies
- 635 views
-
-
எலிக்காய்ச்சலினால் 12 பேர் உயிரிழப்பு! இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் எலிக்காய்ச்சலால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 2,800 பேர் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, அநுராதபுரம், இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை,பொலன்னறுவை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலேயே எலிக்காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. https://newuthayan.com/எலிக்காய்ச்சலினால்-12பேர/
-
- 0 replies
- 346 views
-
-
நவீன் திஸாநாயக்க போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் June 22, 2020 (க.கிஷாந்தன்) ஐக்கிய தேசியக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்திய நவீன் திஸாநாயக்கவே, அமரர் ஆறுமுகன் தொண்டமான், பழனி திகாம்பரம் ஆகியோர் மீது போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான முன்னாள் அமைச்சர் கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கொட்டகலையில் 21.06.2020 அன்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கிடைப்பதற்கு தொண்டமான் முட்ட…
-
- 0 replies
- 390 views
-
-
-எஸ்.எம்.எம்.முர்ஷித்- எங்களை நாங்களே பாதுகாத்துக் கொண்டு எங்களுடைய இளைஞர்களுக்கு வழிகாட்டிக் கொண்டு பிரச்சனைகளை மிக நாசூக்காக அனுக வேண்டிய காலம் வந்துள்ளது என கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.ரக்கீப் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில்பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபானை ஆதரித்து ஓட்டமாவடியிலுள்ள தலைமைக் காரியாலயத்தில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- தமிழ், சிங்களம், முஸ்லிம் சகோதரர்கள் பயணித்தால்முஸ்லிம் சகோதரனை இறங்கி விசாரணை செய்கின்ற காலம் சஹ்ரானுக்கு பிற்பட்ட காலம். இலங்கையிலுள்ளஒவ்வொரு முஸ்லிம் சகோதரனைய…
-
- 0 replies
- 435 views
-
-
நாட்டில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி: பணவீக்கம் ஏற்பட வாய்ப்பு-ஹர்ஷ டி சில்வா நாட்டில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து பணவீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியால் கடந்த செவ்வாய்க்கிழமை 115 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர், இதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். குறித்த பணம் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்குக் குறைந்த வட்டி அடிப்படையில் கடன்களை வழங்குவதற்காக அச்சிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். மக்கள் வங்கி அல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தப் பொருளாளரால் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். ht…
-
- 0 replies
- 234 views
-
-
அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் கோமாரி வாடியடி கடற்கரைப் பகுதியில் சுமார் 15 அடி நீளமான இராட்சத மீன் ஒன்று கரையொதிங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை வேளையில் கோமாரி கடற்கரையில் கரையொதியுள்ளதுடன் இதனை பார்வையிடுவதற்காக கிராம மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு சென்ற கோமாரிப்பகுதி இராணுவம் மீனை பார்வையிட்டுள்ளதுடன் இது தொடர்பாக பொலிசாருக்கும் மீன் பிடி திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவ் இராட்சத மீனை துறைசார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டதனை அடுத்து பொத்துவில் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் புதைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அப்பகுதி பிரதேச சபை உறுப்பினர…
-
- 2 replies
- 783 views
-
-
குமார் பொன்னம்பலத்தை சுட்டுக் கொன்றது யார்? வெளிவந்தது பகீர் தகவல் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை சர்வதேச அரங்கிற்கு நியாயப்படுத்தியவேளை குமார் பொன்னம்பலம் சந்திரிகாவால் சுட்டுக் கொல்லப்பட்டார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் கட்சியின் இணைப்பாளருமான தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் இல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த நாடு ஒற்றையாட்சி எனவும் பௌத்த சிங்கள நாடு என சம்பந்தன் ஐயா ஏற்றுக் கொண்டிருக்கின்றார். விடுதலைப்புலிகளால் நல்ல நோக்கத்துக்காக…
-
- 0 replies
- 462 views
-
-
கருணா அம்மான் பயங்கரவாதியாகயிருந்தவேளை அநீதிகளில் ஈடுபட்டவர் எனினும் விடுதலைப்புலிகளிற்கு எதிரான போரில் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ.பி. திசநாயக்க தெரிவித்துள்ளார். கருணா அம்மான் விடுதலைப்புலிகளை பிளவுபடுத்தினார்,என தெரிவித்துள்ள எஸ்.பி.திசநாயக்க இதன் காரணமாகவே அந்த அமைப்பிற்கு எதிரான போரில் அரசாங்கம் வெற்றிபெற முடிந்தது என தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளை ஒழிப்பதில் கருணா அம்மான் தீர்க்ககரமான சக்தியாக விளங்கினார் என அவர் தெரிவித்துள்ளார். கருணா அம்மானிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் இந்த விடயம் கவனத்திற்கு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்…
-
- 1 reply
- 520 views
-
-
மீண்டும் ஐந்து அம்ச கோரிக்கை முன்வைப்பு! முல்லைத்தீவு மாவட்ட ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஐந்து கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (20) 1200வது நாளில் முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து குறித்த மகஜர் அனுப்பப்பட்டது. அவ் மகஜரில் உள்ள கோரிக்கைகள் வருமாறு, 1. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும், இறுதி யுத்தம் முடிவிற்கு வந்த (2008-2009) தருணத்தில் சரணடைந்தவர்கள் உள்ளடங்கலாக கைது செய்யப்பட்டவர்கள், சகலரினதும் பெயர்ப் பட்டியலை உடனடியாக வெளியிட ஸ்ரீலங்கா அரசுக்கு சர்வதேசம…
-
- 2 replies
- 533 views
-
-
இரண்டாவது தவணைக்காக மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி இன்னும் தீர்மானிக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜுன் மாதம் 16ஆம் திகதி வரை பாடசாலை ஆரம்பிக்கும் திகதி பிற்போடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. எனினும் அந்த தகவல்களில் உண்மையில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மே மாதம் 11ஆம் திகதி இரண்டாம் கல்வி தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் இதற்கு முன்னர் அறிவித்தது. எனினும் நேற்றைய தினம் பாடசாலை ஆரம்பிக்க முடியாதென சிறுவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் இடம்பெறவிருந்த உயர்தர பரீட்சை தொடர்பில் சிறுவர்கள் பிரதமரிடம் வி…
-
- 30 replies
- 2.7k views
-
-
லெமூறியா கண்டத்தில் ஆதிக்குடிகளான தமிழர்களின் நாடே ஈழம் ; தமிழரசு கட்சியின் செயலாளர் துரைராசசிங்கம் Post Views: 18 June 21, 2020 கனகராசா சரவணன் லெமூறியா கண்டத்தின் ஆதிக்குடிகள் தமிழர்கள் அந்த கண்டத்தின் நாடுகளிலே ஈழம் என்கின்ற ஒரு நாடு இருந்தது. அந்த கண்டம் வெடித்து சிதறிய போது அதில் உருவாகிய ஒரு தீவு தான் இலங்கை எனவே சிங்கள மக்களாக இருந்தாலும் சரி பௌத்த மதமாக இருந்தாலும் சரி இந்த நாட்டிற்கு வந்தேறு குடிகள் என தமிழரசு கட்சியின் செயலாளரும் நாடாளமன்ற வேட்பாளருமான கி. துரைராசசிங்கம் தெரிவித்தார் . இந்த நாட்டில் தமிழர்களுக்கு ஒரு அடி நிலம் கூட சொந்தமில்லை என் ஞானசாரதேரர் தெரிவித்த கருத்தை கண்டித்து ஊடகங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழரசு கட்சிய…
-
- 1 reply
- 546 views
-
-
மீண்டும் மன்னாரில் மதஸ்தலங்கள் மீது தாக்குதல் மன்னார்- யாழ்.பிரதான வீதி, தள்ளாடி விமான ஓடுபாதை அருகில் காணப்பட்ட இந்துக்களின் சிற்றாலயம், இனம் தெரியாத சந்தேகநபர்களினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சிற்றாலயத்தில் காணப்பட்ட இந்துக் கடவுள்களின் புகைப்படங்கள், ஆலயத்தின் வாசல் பகுதியில் உடைக்கப்பட்டுள்ளதுடன் சில படங்கள் அருகிலுள்ள பற்றைகாடுகளுக்குள் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. அதேநேரத்தில் சிற்றாலயத்தின் வெளிப்பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் சிலையானது குப்பைகள் மற்றும் மரத்துண்டுகளினால் மூடப்பட்டு நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சிற்றாலயமானது தொடர்ச்சியாக இனம் தெரியாத சந்தேகநபர்களால் சேதப்படுத்தப்பட்டு…
-
- 4 replies
- 739 views
-