Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாசிசத்துக்கான பாதை எப்போதும் இராணுவமயப்படுத்தலே-ஹிட்லரின் பாசிசதேசம் போன்ற ஒன்று உருவாகும்- விக்கிரமபாகு கருணாரட்ண August 1, 2020 பாசிசத்துக்கான பாதை எப்போதும் இராணுவமயப்படுத்தலே என தெரிவித்திருக்கும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தற்போது அவர்கள் இராணுவம் சுகாதாரத்துக்கு சிறந்தது,அபிவிருத்திக்கு சிறந்தது.கல்விக்கும் நல்லது அனைத்துக்கும் இராணுவத்தை பயன்படுத்தவேண்டும் என தெரிவிக்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுஇராணுவமயப்படுத்துவதின் மீது தீவிர விருப்பம் கொண்டமனோநிலை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இயல்பாகவே ஹிட்லரின் காலத்தை போன்ற பாசிசகாலம் உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார். அனைத்து மனிதர்களும் சமமானவர்கள் என்பதே எனது கொள்கை …

  2. சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு! ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (01) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு, சுடரேற்றப்பட்டது. யாழ்.பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும், சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும், யாழ்,மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி அவரது வீட்டில் இருந்த வேளை, அவரது வீட்டிற்கு சென்ற ஆயுதாரிகள் நிலக்சனை வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது…

  3. யாழ்ப்பாணத்தில் போட்டிபோடும் சுமந்திரன் மற்றும் சிறிதரன் போன்றோர் கருணா பிள்ளையானுக்கு நிகரானவர்கள் என்றும் அவர்களுக்கு வாக்களிக்கவேண்டாம் என்றும் கிழக்கு போராளிகள் சார்பான பகிரங்க வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. 'யாழ் மக்கள் சுமந்திரனுக்கும், சிறிதரனுக்கும் வாக்களித்து அவர்களை நாடாளுமன்றம் அனுப்பினால், அதன் பின்னர் கருணாவையும், பிள்ளையானையும் துரோகி என்று கூறத் தகுதியற்றவர்களாகிவிடுவீர்கள்' என்றும் கிழக்கு போராளிகள் சார்பாக அந்தப் போராளி தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும் அந்த வீடியோ இதோ: https://www.tamilwin.com/election/01/252444?ref=imp-news

  4. இந்த நாட்டில் இருக்கின்ற சில பௌத்த பீடங்கள் இனவாதத்தினையே வெளிப்படுத்துகின்றது – சீ.யோகேஸ்வரன் மிகவும் இனவாதம்கொண்ட ஜனாதிபதி தமிழ் மக்களின் எதிர்ப்புக்கும் மத்தியிலும் உருவாக்கப்பட்டுள்ளார். தமிழர்களுக்கு எதிரான பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.2015ஆம் ஆண்டுக்கு பின்னர் அரசாங்கத்திற்கு சில ஆதரவுகளை வழங்கியதன் காரணமாக முன்னெடுக்கப்பட்டுவந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு செயற்பாடு புதிய ஜனாதிபதியின் வரவின் பின்னர் தடைசெய்யப்பட்டுள்ளது.தேசிய கீதமும் தமிழில் பாடும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு தனிச்சிங்களத்தில் பாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.மத பீடங்கள் நல்ல போதனை மக்களுக்கு வழங்கவேண்டும்.ஆனால் இந்த நாட்டில் இருக்கின்ற சில பௌத்த பீடங்கள் இ…

  5. போர்க் குற்றங்கள் – தமிழர்கள் பெருமளவில் படுகொலை- வன்னியில் போட்டியிடும் முன்னாள் இராணுவஅதிகாரியின் கருத்து என்ன? August 1, 2020 இலங்கை இராணுவம் மனிதாபிமான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டது என தெரிவித்துள்ள வன்னிமாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் கீழ் போட்டியிடும் முன்னாள் இராணுவ அதிகாரி ரத்னப்பிரிய பந்து தமிழர்கள் பாரிய அளவில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதையும் நிராகரித்துள்ளார். ஆங்கில நாளிதழிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். யுத்த குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் குற்றவாளிகளை நாட்டின் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யவேண்டும் என தெரிவித்துள்ள ரத்தினப்பிரிய பந்து நாங்கள் மனிதாபிமான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். …

  6. திருமலையை நேசித்தால் போட்டியில் இருந்து ஒதுங்கி ரூபனுக்கு வழிவிடுங்கள்: சம்பந்தனிடம் விக்கி வேண்டுகோள் August 1, 2020 தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் திருகோணமலையை நேசிப்பவராக இருந்து அதனை பாதுகாக்க விரும்பினால் தேர்தல் போட்டியில் இருந்து ஒதுங்கி துடிப்பும், ஆற்றலும், அறிவும் கொண்ட தனது தம்பி ரூபனுக்கு வழிவிட வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். “ரூபன் ஒரு வீரத் தமிழன். தன்மானத் தமிழன். ஆகையினால், ரூபனுக்கு நீங்கள் விட்டுக்கொடுப்பதன் மூலம் நீங்கள் தோற்க மாட்டீர்கள். மாறாக நீங்கள் வெல்வீர்கள். திருகோணமலை மக்கள் வெல்வார்கள். ஆகவே, நீங்கள் அவ்வாறு செய…

  7. யாழ் மாவட்ட வாக்காளர்களுக்கான வழிகாட்டல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் வாக்களிக்கும் முறைகள் தொடர்பில் யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்தால் வழிகாட்டல் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை வருமாறு, https://newuthayan.com/யாழ்-மாவட்ட-வாக்காளர்களு/

  8. சிந்தித்து வாக்களியுங்கள் – தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்கள் வரலாறு கற்றுத்தந்த அரசியல் முதிர்ச்சியைக் கருத்திற் கொண்டு சிந்தித்து வாக்களிக்குமாறு தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. நேற்று (31) விடுத்த ஊடக அறிக்கையிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அறிக்கை வருமாறு, https://newuthayan.com/சிந்தித்து-வாக்களியுங்க/

  9. இனத்துக்குள் பிளவுகள் வரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட திட்டமே இரணைமடு குடிநீர்; சிறிதரன்.! "இனத்துக்குள் பிளவுகள் வரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட திட்டம்தான் இரணைமடு குடிநீர்த் திட்டம்." - இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சி.சிறிதரன் தெரிவித்தார். பூநகரி, முக்கொம்பன் பகுதியில் இன்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தாவது:- "யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து யார் எங்கு குடியேறினார்கள் என்று அனைவருக்கும் தெரியும். 1901ஆம் ஆண்டு இரண்டு மடுக்களாக இருந்ததை இணைத்து இ…

  10. யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள தேர்தல் அறிவிப்பு! நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (31 நான்கு வேண்டுகோள்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கை வருமாறு, https://newuthayan.com/யாழ்-பல்கலை-மாணவர்-ஒன்றி/

  11. சொத்து மதிப்பு விபரத்தை வெளியிட்ட விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தனது சொத்து மதிப்பு விபரத்தை இன்று (31) வெளியிட்டுள்ளார். “இதன்படி, விக்னேஸ்வரனின் உள்ளூர் வங்கிக் கணக்குகளில் மொத்தமாக 44 இலட்சத்து 24 ஆயிரத்து 724.24 ரூபாய் பணமும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் 9,618.98 பவுண்டுகள் (இலங்கை பெறுமதியில் 44 இலட்சத்திற்கு மேல்) பணமும் 1,210.33 டொலர்கள் (இலங்கை பெறுமதியில் 2 இலட்சத்திற்கு மேல்) பணமும் இருக்கின்றன. இவைதவிர, யாழ்ப்பாணத்திலுள்ள சண்டிலிப்பாய் இரட்டையபுலத்தில் ஒரு துண்டு காணியும் கொழும்பு 7ல் அவர் வசிக்கும் வீட்டின் மீது சீவிய உரித்தும் அவருக்கு இருக்கின்றன.” …

    • 30 replies
    • 2.8k views
  12. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், முன்னாள் போராளிகள் என்ற சொல்லைக் கூட உச்சரிக்க அருகதையற்றவர் என முன்னாள் தமிழீழ அரசியல் துறை நிர்வாகப் பொறுப்பாளாரும் கேடயச் சின்னத்தில் பாராளுமன்ற தோ்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளருமான மணியண்ணன் காட்டமாக தெரிவித்துள்ளார். உதயநகர் கிராமத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், போராட்டத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் மிக்க வாழ்வை நாம் பெற வேண்டும். கிளிநொச்சியில் அதற்கான அடித்தளத்தை இட்டு மாற்றத்தை ஏற்படுத்துவோம். அதற்காக நுற்றுக்கணக்கான முன்னாள் போராளிகள் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். …

  13. பிந்திய செய்தி.... குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 07ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று இரவு கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்டு மணி நேர விசாரணைகளின் பின்னர் ஷானி அபேசேகர நீதிமன்றில் ஆஜர்! கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கம்பஹா நீதவான் முன்னிலையில் சற்றுமுன்னர் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். இன்று காலை கொழும்பு குற்றவியல் பிரிவினரால், குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டிருந்தரார். இந்நிலையில் அவர் 8 மணித்திய…

  14. முழுக்கறுப்பு சீருடை அணிந்த இராணுவத்தினர் தனது பிரசாரத்தை குழப்பும் வகையிலும் தன்னை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்ட சம்பவம் ஒன்று குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன், இத்தகைய செயற்பாடுகளினால் தன்னை அச்சப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் காலத்தில் இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும் அவர் இந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இந்த கடிதத்தின் நகல்கள் பிரதமருக்கும், தேர்தல் ஆஆணையாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இதுதொடர்பில் விக்னேஸ்வரன் எழுதியுள்ள கடித்தல் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, …

  15. 40வருடம் போராடியதற்காக வருத்தப்படுகிறேன். எமது இளமைகாலத்தை தொலைத்து விட்டோம். ஜனாதிபதி ராஜபக்ச எங்கள் தாய்நாட்டுக்குக் கிடைத்த பரிசு. இதர அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடும்போது இவர் ஒருவரால்தான் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். இந்த நாட்டுக்காகவும், எமது இளைய சந்ததியினருக்காகவும் அவர் நீண்டகாலப் பார்வையுடன் செயற்படுகிறார். பிரபாகரன், பொட்டு அம்மான் தலைமை தாங்கிய காலங்கள் முடிந்து விட்டன. இந்த நாட்டில் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்தை இனி ஆரம்பிக்க முடியாது. அப்படியானதொரு சித்தாந்தத்தை நோக்கிப் போவது நேரத்தை விரயம் செய்யும் செயல் என தெரிவித்துள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு விவகாரங்களிற்கான பொறுப்பாளராக செயற்பட்டு, தற்போது இராணுவப்பிடியில் உள்ள கே.பி என அழைக்கப…

  16. ‘தம்பிக்கும் பாப்பாவுக்கும் இளைஞர்களின் ஆதரவு இல்லை’ மலையக இளைஞர்கள் தங்களது பக்கம் இருப்பதாக பிரசாரம் செய்துவரும் தம்பிக்கும் (ஜீவன் தொண்டமான்), பாப்பாவுக்கும் (அனுஷா சந்திரசேகரன்) இளைஞர் ஆதரவு இல்லை எனத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் இராதாகிருஷ்ணன், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கே தற்போது இளைஞர்கள் பாரியளவில் ஆதரவை தெரிவித்து வருவதாகவும் கூறினார். கொழும்பு வாழ் மலையக இளைஞர்களுடனான சந்திப்பு ஒன்றை தமிழ் முற்போக்குக் கூட்டணி நேற்று(31) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் கல…

  17. அரசியல் பழிவாங்களுக்கு உள்ளானவர்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் – சஜித்! நாங்கள் வெற்றிப் பெற்று முதல் ஆறுமாத காலத்திற்குள் அரசியல் பழிவாங்களுக்கு உள்ளானவர்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மஹரகம பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று தொலைபேசியை சுற்றி பெருந்தொகையான மக்கள் ஒன்றுக்கூடியுள்ளனர். எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சிறந்த வெற்றியை பெற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளது. எமது ஆட்சியில் கிராம இராச்சியம்…

    • 0 replies
    • 385 views
  18. போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிப்பேன் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழித்து வரலாற்று சிறப்புமிக்க உரிமைகளையும் பெருமைகளையும் பாதுகாக்கக்கூடிய வகையில் களனி நகரத்தை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் நேற்று (30) கம்பஹா மாவட்டத்திற்கு இரண்டாம் தடவையாகவும் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, களனி ரஜமகா விகாரை பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார். வேட்பாளர் சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். பிரதேசத்தின் அபிவிருத்தியை நோக்கமாகக்…

    • 0 replies
    • 454 views
  19. ‘40 வருடங்களாக அமைச்சரவையில் வெறும் கனவையே கண்டார்கள்’ 40 வருடங்கள் அமைச்சரவையில் இருந்த மலையக அரசியல்வாதிகள் செய்திராத பல மடங்கு சேவைகளை, தமிழ் முற்போக்குக் கூட்டணி வெறும் நான்கரை வருடங்களில் செய்திருப்பதாக அக்கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு வாழ் மலையக இளைஞர்களுடனான சந்திப்பு ஒன்றை தமிழ் முற்போக்குக் கூட்டணி நேற்று(31) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது …

    • 0 replies
    • 540 views
  20. பொதுத் தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா? – அமைச்சர் விமல் தகவல் 2020 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தேர்தலுக்குப் பின்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை நிராகரிப்பதாக கூறினார். மேலும் நாட்டில் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டிய நேரத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்தோடு வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை ந…

    • 0 replies
    • 429 views
  21. முதல் நான்கு மாதங்களில் நாட்டின் கடன் சுமை 1 டிரில்லியனாக அதிகரித்துள்ளது – ஹர்ஷ தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் முதல் நான்கு மாதங்களில் நாட்டின் கடன் சுமை கிட்டத்தட்ட ஒரு டிரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இவ்வளவு குறுகிய காலத்தில் நாட்டின் கடன் ஏன் வானத்தை தொட்டது என்பதை அரசின் தலைவர்கள் விளக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கத்தின் கடன் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் கடன் சுமைக்கு இடையிலான விகிதத்தை சுட்டிக்காட்டிய அவர், ராஜபக்ஷ ஆட்சியில் மொத்த கடன் சுமை நான்கு மாதங்களுக…

    • 0 replies
    • 451 views
  22. அரசியல் கைதிகளின் விடுதலைக்கு துரித நடவடிக்கை மேற்கொள்வேன் - டக்ளஸ் உறுதி அரசியல் கைதிகளின் அவலங்களையும் உணர்வுகளையும் அனுபவ ரீதியாக உணர்ந்தவன் என்ற வகையில் தற்போதைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதிர்காலத்தில் ஆரோக்கியமான நடவடிக்கை மேற்கொள்வேன் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயங்களை இலகுவாக கையாள்வதற்கு அரசியல் அதிகாரம் வலுவானதாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மன்னார், அடம்பன் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பரப்புரைக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் அரச…

  23. வடக்கில் தமிழர்களை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஏமாற்றும் மாற்று அணிகளை புறக்கணிக்க வேண்டும் - சுமந்திரன் (ஆர்.யசி) தமிழர்களின் நீண்டகால இலக்கை நோக்கி ஒரு அணியாக தமிழர்களை கொண்டு செல்ல வேண்டும் என நாம் முயற்சித்துக்கொண்டுள்ள நேரத்தில் மாற்று அணியென கூறிக்கொண்டு தமிழர்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை ஒரு சிலர் முன்னெடுத்து வருகின்றனர். தமிழர்களின் வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பதுவும் தமிழர்களை பலவீனப்படுத்துவதும் மட்டுமே இவர்களின் நோக்கமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.எ சுமந்திரன் கூறினார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசார செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு செல்கின்ற நிலையில் அவர் இவற்றைக் கூறினார். அவர் …

    • 2 replies
    • 474 views
  24. உதயன் மீது வெறியாட்டம் நடத்தியது ஈ.பி.டி.பி – முன்னாள் உறுப்பினர் சாட்சி! உதயன் மீதான படுகொலைத் தாக்குதலை ஈ.பி.டி.பியினரே மேற்கொண்டனர். கொலைகள், கடத்தல்கள் போன்றவற்றை செய்தவர்கள் ஈ.பி.டி.பியினர்தான். இவர்கள் தாக்குதலை நடத்திவிட்டு பழியை விடுதலைப் புலிகள் மேலும் இராணுவத்தினர் மீதும் போட்டனர். தினமுரசு பத்திரிகையின் ஆசிரியரை ஈ.பி.டி.பியினரே கொன்றனர்” இவ்வாறு ஈ.பி.டி.பியின் அப்பாேதைய உறுப்பினர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பொன்னையா(சதா) என்பவர் நேற்று (29) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த அதிர்ச்சித் தகவலைக் குறிப்பிட்டார். அவர் மேலும் இது பற்றிக் குறிப்பிட்டதாவது: “ஈ.பி.டி.பியின் அலெக்சாண்டர் சார்ள்ஸ் தலைமையிலான குழுவே இந்தத்…

    • 2 replies
    • 558 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.