ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142943 topics in this forum
-
-எஸ்.நிதர்ஷன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரனை விலக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டால், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, டெலோ முன்னின்று அழுத்தங்களைப் பிரயோகிக்குமென்று, டெலோவின் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில், இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், சுமந்திரனுக்கு அடிப்படையிலேயே போராட்டம், அதன் வலி, அதன் சுமை, தாக்கம், பெறுமதி பற்றித் தெரியாதெனவும் ஆயுதப் போராட்டம் ஏன், எதற்கு, யாரால் உருவானது என்றும் அவருக்குத் தெரியாதெனவும் கூறினார். இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்த சுமந்திரனைப் பத…
-
- 4 replies
- 872 views
-
-
யாழில் நேற்று இரவு இரண்டு வயது பெண் குழந்தை மாயம்! கதறும் தாய் யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாய் பகுதியில் நேற்று இரவு 2 வயது குழந்தை ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இதில் ஆர்கலி என்ற 2 வயது குழந்தையே கடத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் கடத்தப்பட்ட குழந்தையின் தாயார் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நேற்று இரவு குழந்தை உணவருந்திக்கொண்டு இருந்ததாகவும், அப்போது மின்சாரம் தடைப்பட்ட நிலையில் குழந்தையின் அழுகுரல் கேட்டு தாய் ஓடி வந்துள்ளார். இதன்போது குழந்தையை காணவில்லை எனவும், சிலர் மதிலால் கடந்து சென்றதை பார்த்ததாகவும் தாயார் முறைப்பாடு செய்துள்ளார். குழந்தையின் தாயும், தந்தையும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார…
-
- 1 reply
- 450 views
-
-
விவசாயிகளிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்…! உடலில் மஞ்சள் புள்ளிகள் உள்ள வெட்டுக்கிளிகளின் பரவல் எதிர்பாராத விதமாக அதிகரித்து வருவதை அவதானித்தால் உடனடியாக விவசாய திணைக்களத்திடம் அறிவிக்குமாறு விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது https://newuthayan.com/விவசாயிகளிடம்-விடுக்கப்/
-
- 1 reply
- 417 views
-
-
அவுஸ்திரேலியாவின் பால் தரும் பசுக்களை இலங்கையின் பல பிரதேசங்களில் வளர்க்க முடியாது எனவும் தரகுப் பணத்தை பெற்றுக்கொள்ளும் சுய நலத்திற்காகவே பல கோடி ரூபாயை செலவிட்டு, அரசாங்கம் 2 ஆயிரத்து 500 பசுக்களை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். ஜேர்சி ரக இனமான பசுக்களே இறக்குமதி செய்யப்பட உள்ளன. இந்த பசுக்களை எமது நாட்டின் பல பிரதேசங்களில் வளர்க்க முடியாது. நாம் பிரேசில், ஆபிரிக்க, இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் உள்ள பசு இனங்களையே இறக்குமதி செய்ய வேண்டும். அந்த பசுக்களே நாட்டின் சூழ்நிலைக்கு பொருத்தமானதாக இருக்கும். இப்படியும் முட்டாள்தனமான அரசாங்கம். இது கொள்ளையிடும் நோக்கில் மேற்கொள்ளப்ப…
-
- 6 replies
- 817 views
-
-
யாழ். பாசையூர் கடலில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுப்பு யாழ்ப்பாணம் பாசையூர் கடலில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாசையூர் பகுதியைச் சேர்ந்த சில்வெஸ்ரர் சஜித் (27) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கடற்றொழிலாளர்கள் நான்கு பேர் இன்று (புதன்கிழமை) பூம்புகார் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து மீனவர்கள் ஒன்றுகூடி அவரைத் தேடிய போது, பூம்புகார் கடற்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மீனவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய பின்னர், யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் ஆகியோர் சடலத்தை பார்வையிட்டனர். இந்…
-
- 0 replies
- 803 views
-
-
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி இன்று அவசரக் கூட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அவசரக் கூட்டம் ஒன்று இன்று மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. இதில் இந்தக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றார்கள். விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப்., சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசியக் கட்சி, அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம், மற்றும் கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதி அமைச்சர் சோமசுந்திரம் கணேசமூர்த்…
-
- 0 replies
- 446 views
-
-
(இரா.செல்வராஜா) கொழும்பிலுள்ள ஹோட்டல்களை திறப்பதற்கு அனுமதி வழங்காவிட்டால் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடப்போவதாக ஹோட்டல் உரிமையாளர் சங்கம் எச்சரித்துள்ள நிலையில் சுகாதார அமைச்சு அனுமதியளிக்கும் பட்சத்தில் ஹோட்டல்களை திறப்பதற்கான அனுமதியை வழங்க தயார் என கொழும்பு மாநகர சபை பிரதம வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். கொழும்பு நகரம் உட்பட நாடளாவிய ரீதியில் சுமார் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன. கடந்த 2 மாதங்களுக்கு மேல் இவை மூடப்பட்டு இருப்பதால் ஹோட்டல் உரிமையாளர்கள் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றனர். இதுகுறித்து கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனியிடம் கேட்டபோது ,…
-
- 0 replies
- 408 views
-
-
யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபம் இனந்தெரியாத நபரால் உடைக்கப்பட்டுள்ளது. கோவிலின் மூலையில் அமைக்கப்பட்டிருந்த குறித்த சொரூபம் மக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலையில் உடைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாட்டிலிருந்து வருகை தந்த ஒருவராலேயே சிலை உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. தற்போது மாதாவின் சொரூபம் பாதுகாப்பு நலன் கருதி அடைக்கல மாதா ஆலயத்தின் உட்பகுதிக்குள் கொண்டுசென்று வைக்கப்பட்டுள்ளது. குறித்த நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.ibctamil.com…
-
- 8 replies
- 869 views
-
-
யாழில் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது! யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பால்பண்ணை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் அதே இடத்தைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயது உடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களி…
-
- 0 replies
- 438 views
-
-
நீதியின் தீர்ப்பை போலவே மக்கள் தீர்ப்பும் வெல்லும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றை கலைத்தமை மற்றும் ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “அடிப்படையில் ஒன்றை ஒழித்து வைத்துக்கொண்டு வெளிப்படையில் இன்னொன்றை பேசுவதை போலத்தான் இந்த வழக்கும் தாக்கல் செய்யப்படிருக்கிறது. தேர்தலுக்கு முகம் கொடுக்க சிலர்…
-
- 3 replies
- 517 views
-
-
2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ளனர். இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். மேலும் வேட்பாளர்களுக்கான விருப்ப எண் வழங்குவது குறித்தும் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதேவேளை பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக சுகாதார வழிகாட்டுதல்களைப் பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது என சுகா…
-
- 0 replies
- 344 views
-
-
(இராஜதுரை ஹஷான் ) தமிழ் மக்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையில் பலமான அரசாங்கம் தோற்றம் பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமிழ் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை தொடர்ந்து நம்புவதால் எவ்வித பயனும் கிடைக்கப்பெறாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். வியத்தக அமைப்பின் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் முறையான திட்டமிடல் ஊடாகவே இந்த வெற்றியை பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று இதுவரையில் சமூக தொற்றாக பரவலடையவில்லை. நாடு பாதுக…
-
- 0 replies
- 509 views
-
-
மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிச்சடங்களில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையகத்தை பிரதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர், அவரது வீட்டில் இருந்தவரும் சாரதி ஒருவரும் நேற்றைய தினம் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை 14 நாட்கள் சுயதனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர் ராகவன் தெரிவித்துள்ளார். குறித்த ஊடகவியலாளர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் வைக்கப்பட்ட பத்தரமுல்லையிலுள்ள அவரது வீட்டிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகத்திற்கும் சென்றுள்ளார். செய்தி சேகரிப்பதற்காக அந்த பிரதேசத்திற்கு சென்று அவர் திரும்பியுள்ளார். அவரின் இறுதிக் கிரியை…
-
- 0 replies
- 348 views
-
-
“நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றத்தின் முடிவு எப்படி அமைந்தாலும் ஜனநாயகத்தை நிலைநாட்டு வதற்கான போராட்டம் தொடரும்” இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறினார். நேற்றுப் பிற்பகல் தேர்தல் தொடர்பான தாக்கல் செயள்யப்பட்டமனுக்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் தனது முடிவை அறிவித்த பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:- “இந்த வழக்கில் நாம் இரண்டு பிரதான கோரிக்கைகளை முன்வைத்தோம். ஒன்று – ஜூன் 20 ஆம் திகதி தேர்தல் நடத்தும் அறிவிப்பு தவறானது என்பது. அடுத்தது – நாடாளுமன்றம் கலைத்து மூன்று மாதங்களாகியும் புதிய நாடாளுமன்றம் கூட முடியாத கார…
-
- 3 replies
- 602 views
-
-
கல்முனை வடக்கு உப பிரதேச செயலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயம் தொடர்பான வழக்கினை கல்முனை நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை விஷேடமாக பொறுப்பளிக்கப்பட்ட நீதிபதி தர்மலிங்கம் கருணாகரன் வழக்கை விசாரித்து மனுவில் உள்ள குறைபாடு காரணமாக இன்று வழக்கை தள்ளுபடி செய்துள்ளார். இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலயம் சார்பாக பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் மன்றில் ஆஜராகியிருந்ததுடன் சட்டத்தரணிகளான ந.சிவரஞ்சித், மதிவதனன், ஆகியோர் ஆதரவாக ஆஜராகியிருந்தனர். கடந்த 2018ம் ஆண்டு கல்முனை மாநகர சபை முதல்வர் சார்பில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தில் நீண்டகாலமாக ஊழியர்களால் வழிபட்டு வந்த இவ்வாலயம் சட்ட ரீதியற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக வ…
-
- 1 reply
- 497 views
-
-
மன்னார் திருக்கேதீஸ்வரர் கோயில் கும்பாபிசேகம் பிற்போடப்பட்டது by : Dhackshala மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் கும்பாபிசேக திருவிழா எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறாது என திருக்கேதீஸ்வர திருத்தல திருப்பணிச் சபையின் இணைச் செயலாளர் எஸ்.எஸ்.இராமகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தால் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மஹா கும்பாபிசேக திருவிழா அன்றைய தினம் நடை பெறாது. மீண்டும் கும்பாபிசேகம் நடாத்துவது தொடர்பான விபரங்க…
-
- 1 reply
- 439 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராம அலுவலர் பிரிவில் கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி கடந்த 31 ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் கடந்த முதலாம் திகதி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த யுவதியின் சடலம் இன்று (03) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட குறித்த யுவதி அதே கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய இராமலிங்கம் நிறோஜினி என்பது கண்டறியப்பட்ட நிலையில் கொலையா? தற்கொலையா? என விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. சம்பவம் குறித்த விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் முன்னெடுத்து வருகின்றன…
-
- 1 reply
- 455 views
-
-
சாவகச்சேரி ஏஎஸ்பிக்கு பிடியாணை வழங்க மறுப்பு; பிணை வழங்கப்பட்டது! போலி சாட்சிகளை தயாரித்தமை தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரியும் இப்பாேது யாழ்ப்பாணம் – சாவகச்சேரி உதவி பாெலிஸ் அத்தியட்சகராகவும் உள்ள சுதத் அஸ்மடலவை கைது செய்ய மறுத்து, பிணை வழங்கி கொழும்பு மஜிஸ்திரேட் இன்று (03) சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார். இவரை பிடியாணை பெற்று கைது செய்யுமாறு சட்டமா அதிபரால் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு நேற்று முன் தினம் (01) அறிவுறுத்தப்பட்டிருந்தது. முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்புப்பட்டதாக கூறப்படும் விபத்து சம்பவத்தில் போலியான சாட்சியங்களை தயாரிப்பதற்காகவே அவரை கைது செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2016ல் ராஜகிரியவில் இட…
-
- 0 replies
- 548 views
-
-
நாடு இயல்பு நிலைக்கு திரும்பவில்லை - ஜேவிபி நாடு தற்போது, சாதாரண நிலைக்கு வரவில்லை என, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. தினமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நிலையில் அது தெளிவாக தெரிவதாக, அந்தக் கட்சி கூறியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாளை மற்றும் நாளை மறுதினம் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதுடன், தினந்தோறும் இரவு 10 மணிமுதல் அதிகாலை 04 மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்ப…
-
- 0 replies
- 362 views
-
-
ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க முற்பட்டோருக்கு நீதிமன்ற தீர்ப்பு தகுந்த பாடத்தை புகட்டியுள்ளது – அங்கஜன் by : Dhackshala மக்களின் ஜனநாயக பண்பியலுக்கு எடுத்துகாட்டாக விளங்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை பிற்போட முயற்சித்தவர்களுக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தகுந்த பாடத்தை புகட்டி இருக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றை கலைத்தமை மற்றும் ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசார…
-
- 0 replies
- 310 views
-
-
ஜனநாயகத்துக்கான எமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – எம்.ஏ.சுமந்திரன் by : Benitlas நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கின்றோம் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “ஒன்றை மட்டும் இவ்வேளையில் கூறிக்கொள்ள முடியும். ஜனநாயகத்துக்கான எமது போராட்டம் தொடர்ந்தும் முன…
-
- 0 replies
- 253 views
-
-
பூட்டிய வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய இளைஞனின் சடலம் வவுனியா – காத்தார்சின்னகுளம் நான்காம் ஒழுங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (03) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து இன்றையதினம் காலை துர்நாற்றம் வீசியுள்ளது. இதனைடுத்து வீட்டிற்கு முன்பாக ஒன்று கூடிய கிராம மக்கள் சந்தேகமடைந்த நிலையில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டின் யன்னல் வழியாக பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சடலமாக இருப்பதை அவதானித்தனர். சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர் என்றும் குறித்…
-
- 0 replies
- 358 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது தமக்கு மரியாதை உண்டு என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றின் நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் மூன்று தசாப்தங்களாக நீடித்த போரின் இறுதிப் போருக்கு தலைமை தாங்கிய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா இதனைக் குறிப்பிட்டுள்ளார். தீவிரவாதி என்று நாங்கள் அவரை அடையாளப்படுத்தியிருந்த போதிலும் தலைவன் என்ற ரீதியில் இறுதி தோட்டா தீரும் வரையில் போராடிய காரணத்தினால் பிரபாகரன் மீது மரியாதை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி முற்பகல் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நா…
-
- 2 replies
- 979 views
-
-
விபத்தில் காவல்துறை உத்தியோகஸ்தர் உட்பட இருவர் உயிரிழப்பு June 3, 2020 வவுனியா கனகராயன் குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காவல்துறை உத்தியோகஸ்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பில் இருந்து யாழ்.நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் கனகராயன் குளம் பகுதியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் மட்டக்களப்பு காவல்நிலையத்தில் கடமையாற்றும், நல்லூர் அரசடி வீதியை சேர்ந்த ஜெயமூர்த்தி நிஷாந்த் மற்றும் அவரது நண்பரான யாழ்ப்பாணம் பலாலி வீதியை சேர்ந்த நிஷாந்த் ஜானுசன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். மட்ட…
-
- 0 replies
- 457 views
-
-
தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி – உயர்நீதிமன்றம் தீர்ப்பு by : Jeyachandran Vithushan ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இந்தத் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்ட வர்த்தமானி மற்றும் பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட வர்த்தமானி ஆகியவற்றை வலுவிழக்க செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்கள் தாக…
-
- 3 replies
- 661 views
-