Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பில் சிக்கிய இராட்சத திருக்கை மட்டக்களப்பு – பூநொச்சிமுனை மீனவர்களினால் 500 கிலோ எடை கொண்ட பாரிய இராட்சத திருக்கை மீன் ஒன்று நேற்று (27) மாலை பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள பாரிய கடல் கொந்தளிப்பு காரணமாக குறித்த பாரிய திருக்கை மீன் கடல் அலைகளினால் கரைக்கு அடித்து வரப்பட்ட நிலையில் அப்பகுதி மீனவர்கள் இம்மீனைப் பிடித்துள்ளனர். குறித்த மீன் கரைக்கு பெருமளவு மீனவர்களால் இழுத்து வரப்பட்டு வெட்டப்பட்டு சுமார் ஒரு இலட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் குறித்த மீனின் பூ மாத்திரம் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். https://newuthayan.com/மட்டக்களப்பில்-சிக்கிய-இ/

  2. யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறப்பு by : Dhackshala எதிர்வரும் திங்கட்கிழமை முதல் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். தற்போதைய நிலைமைகள் தொடர்பாக யாழில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “யாழ். மாவட்டத்தில் தற்பொழுது இயல்பு நிலை படிப்படியாக திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், பொதுச்சந்தைகளையும் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என பலராலும் கோரப்பட்டது. இது தொடர்…

    • 0 replies
    • 560 views
  3. கிளிநொச்சி விபத்தில் தாய் பலி; மகள் படுகாயம்! கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (28) காலை 10.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது. பூநகரியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கிளிநொச்சியில் இருந்து யாழ் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தல் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி செய்திநகர் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியம் அன்னலட்சுமி (64-வயது) என்ற வயோதிபப் பெண் உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளை செலுத்திய உயிரிழந்தவரின் மகள் படுகாயமடைந்த நிலையில், கிள…

  4. யாழ்.மாவட்டத்தில் விடுதிகள்,திருமண மண்டபங்களில் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை -மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (எம்.நியூட்டன்) யாழ்ப்பாண மாவட்டத்தில் உணவகங்கள் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனினும் சுகாதார நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரட்ன தெரிவித்தார். நாட்டில் கொவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் முகமாக நாட்டில் இரண்டு மாதங்களாக ஊரடங்குச் சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு மீண்டும் நாடு படிப்படியாக வழமைக்குத் திரும்பிவந்தது. தற்போது நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் வழமைக்குத் திரும்பியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டமும் வழம…

  5. ள்யாழ்ப்பாணம் மரக்காலைக்கு தீ வைப்பு யாழ்ப்பாணம் – அச்சுவேலி, பத்தமேனி பகுதியில் மரம் அரியும் நிலையத்துக்கு விசமிகள் சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (27) இரவு 9 மணியளவில் நடந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு மோட்டார் சைக்கிலில் வந்த 4 பேர் கொண்ட குழுவினராலேயே மேற்படிச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் மரம் அரிவு நிலைய உரிமையாளர் இனால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் தடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://newuthayan.com/மரக்காலைக்கு-தீ-வைபபு/

  6. 38 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் நாடு திரும்ப முயற்சி by : Dhackshala கொராேனா வைரஸ் பரவலின் காரணமாக 143 நாடுகளில் இருக்கும் 38 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்குவர முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சு அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு அமைச்சரவைக்கு அறிவித்துள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கொராேனா வைரஸ் தாெற்று காரணமாக 143 நாடுகளில் இருக்கும் 38 ஆயிரத்தி 983 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்குவர முயற்சிக்கின்றனர். இவர்களில் 27ஆயிரத்தி 84 5பேர் அந்த நாடுகளில் இருக்கும…

  7. வெடிச் சம்பவத்தில் இரு சிறுவர்கள் படுகாயம் வவுனியா – செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவு, ஆண்டியார் புளியங்குளத்தை அண்டிய புதுக்குளம் கிராமத்தில் இன்று (27) மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காட்டுப் பகுதியில் வீதியோரமாக கிடந்த வெடிபொருளை 14 வயது சிறுவன் ஒருவன் வீட்டுக்கு எடுத்துச் சென்று அவரின் சக நண்பனுடன் அப் பொருளை சுத்தியலினால் உடைத்துள்ளார். இதன்போது அது வெடித்ததில் இரு சிறுவர்களும் படுகாயமடைந்துள்ளனர். கால்கள் மற்றும் கைகளில் படுகாயமடைந்த நிலையில் சிறுவர்கள் இருவரும் அயலவர்களின் உதவியுடன் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://newuthayan.com/வெடி…

  8. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் இன்று (புதன்கிழமை) தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு குறிப்பிட்டார். இந்த சந்திப்பின் போது, முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஷ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், சக்திவேல், பிலிப்குமார், இ.தொ.கா முக்கியஸ்தர்கள் என பலரு…

  9. அரிசிக்கான உச்சப்பட்ச சில்லறை விலையை அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (27) நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நாட்டரிசி 96 ரூபாய்க்கும் சம்பா கிலோ ஒன்றின் விலை 8 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 98 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. எனினும், 125 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கீரி சம்பா விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை. http://www.tamilmirror.lk/செய்திகள்/அரிசி-விலை-உயர்வு/175-250982

    • 1 reply
    • 778 views
  10. யாழில் வெடிப்புச் சம்பவம் – பொலிஸ் உத்தியோகத்தர் காயம் யாழ். வடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆலயத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பொலிஸார் ஒருவர் காயமடைந்துள்ளார். வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் உள்ள முச்சந்தியிலையே இன்று (புதன்கிழமை) குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத மண் அகழ்வுகள், மண் கடத்தல்களை தடுக்கும் நோக்குடன் குறித்த பகுதியில் பொலிஸார் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருவதுடன், குறித்த சந்தி பகுதியில் நின்று வீதி சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது வழமையாகும். இந்நிலையில் இன்றைய தினமும் வழமையான வீதி சோதனை நடவடிக்கைக்காக குறித்த சந்திப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பொலிஸ் வந்திறங்கியபோது, நிலத்தில் இருந…

  11. தேன் எடுக்க காட்டுக்குச் சென்ற மாணவன் உயிரிழப்பு திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மதவாச்சி காட்டுப் பகுதிக்கு, தேன் எடுக்கச் சென்ற சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த நடராசா ஆதவன் (19 வயது) என்ற மாணவன், நேற்று (26) உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர். நிலாவெளி, கைலேஸ்வரன் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்று வந்த இவர், குடும்ப கஷ்டநிலை காரணமாக, விடுமுறை காலத்தில் கூலித் தொழில் செய்து வந்த நிலையில், மூன்று பேருடன் தேன் எடுப்பதற்காக காட்டுக்குச் சென்றுள்ளார். 16 அடி உயரமான மரத்தில் ஏறி மரத்தை வெட்டியபோது, மரத்தின் கிளை இவர் மீது விழுந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்த…

  12. ராஜிதவின் விளக்கமறியல் நீட்டிப்பு முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, வெள்ளைவான் தொடர்பான ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். முன்னதாக, ராஜித சேனாரத்னவின் பிணை மனுவை பரிசீலிப்பதற்காக, வேறொரு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான், இன்று(27) உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.…

    • 0 replies
    • 386 views
  13. பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்குற்படுத்திய மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு by : Dhackshala ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் இன்று ஏழாவது நாளாகவும் இடம்பெற்ற நிலையில், குறித்த விசாரணைகள் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்குற்படுத்திய மனுக்கள் மீதான 7ஆவது நாள் விசாரணை இன்று 20…

    • 0 replies
    • 368 views
  14. சாக்கடைகளே உங்கள் அரசியலை மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் செய்யாதீர்கள்..! துயிலும் இல்லத்திற்குள் சுவரொட்டிகள், கிழித்தெறிந்து மக்கள் ஆவேசம்.. முல்லைத்தீவு- தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்திற்குள் ஒட்டப்பட்ட தேர்தல் சுவரொட்டிகளை கிழித்தெறிந்த மக்கள், சாக்கடை அரசியலை மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் செய்யவேண்டாம் என கூறியிருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான டக்ளஸ் தேவானந்தா மற்றும் சரவணபவன் ஆகியோரின் சுவரொட்டிகள் துயிலும் இல்லத்திற்குள் உள்ள இளைப்பாறு மண்டபத்தில் ஒட்டப்பட்டிருக்கின்றது. குறித்த விடயத்தை அறிந்த மக்கள் உடனடியாக அந்த சுவரொட்டிகளை அகற்றவேண்டும் என கூறியபோதும் அகற்றாத நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் அவற்றை கிழித்தெறிந்துள்ளதுடன்,…

  15. நந்திக்கடலும் வட்டுவாகல் கிராமமும் நான்கு முனைகளிலும் அபகரிக்கப்படுகின்றன- ரவிகரன் Rajeevan Arasaratnam May 27, 2020நந்திக்கடலும் வட்டுவாகல் கிராமமும் நான்கு முனைகளிலும் அபகரிக்கப்படுகின்றன- ரவிகரன்2020-05-27T07:29:07+00:00 நந்திக்கடலும் வட்டுவாகல் கிராமமும் நான்குமுனைகளாலும் ஆக்கிரமிக்கப்படுவதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துiராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். மகாவலி எல்வலயத்தின் ஊடாக எவ்வாறு முல்லைத்தீவில் உள்ள காணிகளும் அதனுடன் சேர்ந்த நிலங்களும் அபகரிக்கப்படுகின்றனவோ அதேபோன்று ஒரு சத்தமும் இன்றி வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும் பறிபோகின்றது என அவர் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் கிழக்கு என சொல்லக்கூடிய இடத்தில் …

  16. (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இம் மாதம் இரு முக்கிய தொலைப்பேசி உரையாடல்களில் கலந்துக்கொண்டிருந்தார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபட் ஓ பிறைன் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோரது தொலைபேசி அழைப்புகள் இலங்கையில் மாத்திரமல்லாது பிராந்திய அரசியலில்  முக்கியத்தும் மிக்கதாக அமைந்துள்ளது இந்த கலந்துரையாடலின் போது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபட் ஓ பிறைன் இலங்கைக்கான அமெரிக்காவின் ஆதரவு குறித்து தெளிவுபடுத்துவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை தொலைபேசியல் தொடர்புக்கொண்டார். மேலும் அமெரிக்கா - இலங்கைக்கிடையிலான நட்புறவும் ஒத்துழைப்புமானது நீண்ட வரலாற்றைக் கொண்டமைந்தது என்றும் அவர் இதன்போது உறுதிப்பட…

    • 10 replies
    • 1k views
  17. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கைது செய்யப்படும்வேளை அவருடன் இருந்த மனோ கணேசன் அப்போது நடந்த சம்பவம் தொடர்பில் தற்போது வெளிப்படையாக முகநூலில் பதிவிட்டுள்ளார். "இதுவரை மனோ" என்னும் நூலை எழுதிவரும் மனோ கணேசன், கடந்த காலத்தில் இடம்பெற்று, வெளிவராத பல சம்பவங்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுவருகின்றார். அந்தவகையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரிடம் கூறுமாறு சந்திரிக்கா கூறிய விடயம் தொடர்பில் கடந்த 23 ஆம் திகதி தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது, சர்பொன்சேகா கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், புலிகளின் தலைவர் பிரபாகரனை தோல்வியடைய செய்து, கொன்று, விடுதலை புலிகளை நிர்மூலமாக்கி, நேற்…

    • 1 reply
    • 640 views
  18. சாவகச்சேரி இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் மையம்; எதிர்த்து மக்கள் போராட்டம் Bharati May 26, 2020சாவகச்சேரி இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் மையம்; எதிர்த்து மக்கள் போராட்டம்2020-05-26T14:19:59+00:00 சாவகச்சேரியில் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் மையம் அமைப்பதற்கு எதிராக அந்த பகுதி மக்கள் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். கச்சாய் வீதியில் அல்லாரை பகுதியில் அமைந்துள்ள 523வது படையணி முகாமில் தனிமைப்படுத்தல் மையம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அந்த பகுதி குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று ஒன்றுகூடிய மக்கள் இராணுவ முகாமின் எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாவகச்சேரி பிரதேசசெயலாளர், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறு…

    • 1 reply
    • 598 views
  19. மருத்துவபீட மாணவர்களுக்கு மாத்திரம் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவர்களின் பரீட்சை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் பல்கலைக்கழகங்களை ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவருவது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். http://tamil.adaderana.lk/news.php?nid=129098

    • 1 reply
    • 444 views
  20. போர் வெற்றி விழா என்ற பெயரில் அரசு நடத்திய நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய அருவருப்பான உரைக்கு நான் பொறுத்திருந்து உரிய பதிலை வழங்குவேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். படையினரைக் கெளரவிக்கும் அரசின் போர் வெற்றி விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய ஜனாதிபதி, 'எம்மைப்போன்ற ஒரு சிறிய நாட்டில் அர்ப்பணிப்புகளைச் செய்துள்ள படைவீரர்கள் தேவையற்றஅழுத்தங்களுக்கு உள்ளாக நான் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. எமது நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து …

    • 18 replies
    • 2k views
  21. கொரோனாவினால் இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பது தவிர்க்க முடியாத விடயம் – பேராசிரியர் சிறிமால் அபயரட்ண கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பது தவிர்க்க முடியாத விடயம் என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் சிறிமால் அபயரட்ண தெரிவித்துள்ளார். வறுமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நகரப்பகுதிகளில் வாழும் வறிய மக்களே இவ்வாறு வறுமையினால் அதிகளவு பாதிக்கப்படப்போகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் நாளாந்தம் உழைப்பவர்கள், முறைசார தொழில்துறைகளில் உள்ளவர்கள் மேலும் கிராமங்களில் உள்ள வறியவர்கள் போல இவர்கள் விவசாயத்திலும் ஈடுபடுவதில்லை எனவும் பேராசிரியர் சுட்ட…

    • 7 replies
    • 870 views
  22. யாழ் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியம்..! நாட்டில் கொரோனா தொற்று முற்றாக நீங்கிவிடவில்லை யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் தம்மை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாட்டின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் நாடு பூராகவும் இன்றையதினம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணக் குடாநாடு வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் பொதுமக்களுக்கு நோய்த்த…

  23. இலங்கை அரசின் தொலைத்தொடர்பு நிறுவனம் மீது சைபர் தாக்குதல் - நடந்தது என்ன? Getty Images இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனத்தின் தரவு கட்டமைப்பு மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சைபர் தாக்குதல் சில தினங்களுக்கு முன்னர் நடத்தப்பட்டுள்ளதை ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார். சைபர் தாக்குதல் காரணமாக டெலிகாம் நிறுவனத்தின் சில நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, தாக்குதல் நடத்த முயற்சித்தவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.…

  24. கல்முனை- அக்கரைப்பற்று- யாழ்ப்பாணம் பேருந்துச் சேவை மீண்டும் ஆரம்பம்… May 26, 2020 ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் மீண்டும் சுகாதார நடைமுறையுடன் கல்முனையில் இருந்து மாகாணங்களிற்கிடையிலான பேருந்துச் சேவைகள் ஆரம்பமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை(26) கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவை இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது காலை கல்முனையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் காலை 10 மணியளவில் பஸ் சேவை ஒன்று ஆரம்பமானதுடன் அதே சமயம் அக்கரைப்பற்றில் இருந்து காங்கேசந்துறை நோக்கி மற்றுமொரு பஸ் சேவையும் ஆரம்பமாகின. குறித்த சேவை கல்முனை பஸ் நிலைய நேரமுகாமையாளரின் வழிநடத்தல…

  25. சிறுமிகள் இருவரைத் துன்புறுத்தியவர் கைது… May 26, 2020 குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூன்று பேர் தேடப்பட்டு வந்த நிலையில் ஒருவர் நேற்று பருத்தித்துறை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு, குடத்தனை- பொற்பதியில் கடந்த மே 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பொது இடம் ஒன்றில் 16 மற்றும் 17 வயதுச் சிறுமிகள் இருவர் தமது ஆண் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்துள்ளனர். அங்கு வந்த மூவர், இளைஞர்கள் இருவரையும் அச்சுறுத்தி அவர்களை துரத்திவிட்டு, சிறுமிகள் இருவரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருந்தனர். அதன் பின்னர் சிறுமிகள் இருவரையும் கட்டிவைத்துவிட்டு ஊரவர்களை அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.