Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2009 மே மாதத்தின் பின்னராக கேட்பாரற்ற சமூகமாக எங்கள் பெண்கள் சமூகம் தள்ளப்பட்டுவிட்டது.சிவில் பாதுகாப்பு படைகளில் எங்கள் பெண்கள் இணைத்துக்கொள்ளப்பட்டு அவர்கள் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளார்கள். அன்றாட வாழ்வினிலும் கூட இதே நிலை தான் தொடர்கின்றது.குடும்ப வன்முறைகள் கூட கட்டுக்கடங்காது செல்கின்றதென தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் விவகார குழு தலைவியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பத்மினி சிதம்பரநாதன். யாழ்.ஊடக அமையத்தினில் அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பினில் மேலும் தெரிவிக்கையினில் வட-கிழக்கினில் 97 ஆயிரம் பெண்களை குடும்ப தலைவர்களாக கொண்ட குடும்பங்கள் இருக்கின்றன.ஆனால் அவர்களது அரசியல் அங்கீகாரம் என்னவென்பது கேள்விக்குறியே. நாங்கள் தொடர்ந…

    • 3 replies
    • 646 views
  2. வல்லிபுர ஆழ்வார் கோவிலின் சம்புப்புல் பரம்பல் தீப்பற்றி எரிந்துள்ளது. April 18, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமராட்சி – ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவிலின் தென்கிழக்கு மூலையில் கற்கோவளம் வங்கக்கடல் தீர்த்த சமுத்திரத்துக்கு செல்லும் வீதியின் வலது புறத்தில் அமைந்துள்ள சம்புப்புல் பரம்பல் இன்று வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்துள்ளது. சுமார் 10 பரப்பு நிலத்தில் நெருக்கமாக வளர்ந்திருந்த சம்புப் புல் பரம்பல் தீப்பற்றி எரிவதைக்கண்ட அதற்கு அண்மையில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் உடனடியாக வல்லிபுரம் கிராமசேவையாளர் ஸ்ரீ சங்கருக்கு தகவல் வழங்கினர். கிராம சேவையாளர் பருத்தித்துறை பிரதேசசெயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி…

  3. போதியளவு கையொப்பங்கள் திரட்டப்பட்டால் சரத் பொன்சேகா விவகாரத்தில் தலையீடு செய்யத் தயார் – அமெரிக்கா : 13 டிசம்பர் 2011 போதியளவு கையொப்பங்கள் திரட்டப்பட்டால் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பில் தலையீடு செய்யத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பில் இணையத்தின் ஊடாக, அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட உள்ளது. சரத் பொன்சேகாவின் குடும்ப அங்கத்தினர்கள் இந்த மகஜருக்கான கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். 25000 கையொப்பங்கள் திரட்டப்பட்டால் சரத் பொன்சேகா விவகாரத்திலை தலையீடு செய்ய முடியும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. உல…

    • 12 replies
    • 1.2k views
  4. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் பழைய இரும்புகள் , பிளாஸ்ரிக் பொருட்களை சேகரித்து வந்தவர்களும் நடைபாதை வியாபாரங்களில் ஈடுபட்டவர்களும் தமது தொழில்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். குடா நாட்டு வீதிகளில் காலை வேளைகளில் வாகனங்களில் ஒலிபெருக்கிகளை பொருத்தி ‘ பழைய இரும்புகள் , உடைந்த பிளாஸ்ரிக் பொருட்கள் வாங்கப்படும்’ என தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் கடந்த நான்கு நாட்களாக தமது தொழில் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். அதேவேளை வீதியோரங்களில் நடைபாதை வியாபாரங்களில் ஈடுபடுவோர்களும் , வாகனங்களில் வந்து அவற்றை வீதியோரங்களில் நிறுத்தி வைத்து , ‘கம்பளம்…

  5. Published By: RAJEEBAN 28 MAY, 2024 | 10:18 AM பிரிட்டனின் உள்துறை அமைச்சினால் இலங்கைக்கு தவறுதலாக நாடு கடத்தப்பட்ட தமிழர் இலங்கையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர் தனது மீண்டும் குடும்பத்துடன் இணைவதற்கு உள்துறை அமைச்சின் திணைக்களங்களின் தாமதமே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்;டியுள்ளனர். சுதர்சன் இதயசந்திரன் என்பவர் 2019 டிசம்பர் மாதம் 24ம் திகதிஅவரது திருமணநாள் அன்று பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். போலியான ஆவணங்களை பயன்படுத்தியதையும் டெஸ்கோவில் பணியாற்றியமையையும் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அவர் நாடு கடத்தப்பட்டார். செவிப்புல திறன் அற்ற தனது மனைவி சுபத்திரா தனது 9 மற்றும் 8 வயது ஆ…

  6. திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர் ஒருவரும் அவரது மனைவியும் சிறைக்கூண்டுக்குள் தற்கொலை செய்ய முயன்று ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு திருச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈழத்தைச் சேர்ந்த தங்கவேலு மகேஸ்வரன் அவரது மனைவியான திருசாந்தி ஆகியோரே தற்கொலைக்கு முயன்றவர்களாவர். தங்கவேலு மகேஸ்வரன் கடந்த மூன்று வருடங்களாக திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரை விடுதலை செய்யுமாறு இந்திய உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தபோதும் தொடர்ந்து அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால் மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை அவரது மனைவி அவரைப் பார்ப்பதற்காக சிறைக்குச் சென்றார். அங்கு இருவரும் அதிக மருந்து வில்லை…

  7. மக்களின் அபிலாசைகளை மதிக்காத தமிழ் அரசியல்வாதிகளை நீக்கம் செய்வோம் – யாழில் மே தின நிகழ்வு தமிழ் தேசியத்தையும் சமூக மாற்றத்தையும் முன்னிருத்தி மக்கள் சக்தியை உருவாக்குவோம், மக்களின் அபிலாசைகளை மதிக்காத தமிழ் அரசியல்வாதிகளை நீக்கம் செய்வோம் என வலியுறுத்தி 2019ஆம் ஆண்டுக்கான மே தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. இலங்கை ஆசிரியர் சங்கம், வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், புதிய அதிபர் சங்கம், வடமராட்சி கிழக்கு பிரதேச குழு ஆகியன இணைந்து இந்த நிகழ்வை நடத்தியிருந்தன. இதன்போது இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செ…

  8. Published By: VISHNU 05 JUN, 2024 | 08:50 AM யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிழந்தவர் புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துயா என்பவராவார். சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185338

  9. தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் சிந்திய இரத்ததிலிருந்து ஏராளமான இளைஞர்கள் தோன்றி தமிழீழ விடுதலைப் போரை தொடர்ந்து நடத்துவார்கள் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 20 replies
    • 7.4k views
  10. படிப்பினைகள் ஆணைக்குழுவின் நல்லிணக்கத்துக்கான அறிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக இலங்கை அரசுடன் இராஜதந்திர ரீதியிலான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓபிளேக், இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இது விடயம் தொடர்பாக தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றார் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. அதே சமயம் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீஸியா புற்ரெனிஸும் இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறைபா…

    • 2 replies
    • 1.8k views
  11. தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த நபர் 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டதன் பின்னர் கடந்த 02ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டநிலையில் இன்று கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் முன்னிலப்படுத்தப்பட்ட போதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். . குறித்த நபர் தேசிய தௌஹீத…

  12. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கத்தை இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான பிரித்தானியா நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிக் குழு வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  13. தமிழ், சிங்கள மக்களை பிரித்தாளும் தீர்வையே கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது அமைச்சர் வாசு தமிழ், சிங்கள இனங்களை தனித்தனியாகப் பிரித்து ஆளும் தீர்வையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது. இது இனங்களிடையே கசப்புணர்வையே ஏற்படுத்தும் என்று அரசாங்கத்தின் பங்களாகிக் கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சிங்கள மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறான தீர்வை வழங்குவதை எதிர்க்கும் அமைச்சர்களான விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க ஆகியோர் எதிர்காலத்தில் குற்றவாளிக் கூண்டில் ஏறும் நிலைமை உருவாகும். ஒரே நாடு மற்றும் நாங்கள் அனைவரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் சம உரிமைகள…

    • 0 replies
    • 750 views
  14. ’உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், எல்டிடிஈ கூட பயன்படுத்தவில்லை’ உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் அனைத்துமே, மிகவும் திறமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் இவற்றை, இதற்கு முன்னர் இலங்கை இராணுவமோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ பயன்படுத்தியிருக்கவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறான இரசாயனப் பதார்த்தங்களை உருக்கியே, இந்தக் குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் இந்தக் குண்டுகளை வெடிக்க வைப்பதற்காக, மின்குமிழ்களில் பயன்படுத்தும் நுண்ணிழைகளையே பயன்படுத்தியுள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. குண்டுதாரிகளின் முதுகுப் பொதியில்,…

  15. சனி 17-11-2007 21:43 மணி தமிழீழம் [முகிலன்] போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலக வேண்டாம் - யப்பான் எச்சரிக்கை போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதற்கு எத்தனிக்க வேண்டாம் என, சிறீலங்கா அரசாங்கதை யப்பான் எச்சரித்துள்ளது. இது குறித்து இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக, அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு செய்தியொன்றை அனுப்பி வைத்திருக்கும் ஜப்பானிய அரசாங்கம், போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து சிறீலங்கா அரசாங்கம் விலகும் பட்சத்தில், அரசாங்கத்திற்கான நிதியுதவிகளை தாம் நிறுத்த நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பதாக சிறீலங்கா அரசாங்கம் தடை செய்வது, சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு இடையூறாக அமையும் என, …

  16. மூன்று தலைமைகளில் தங்கியுள்ள தீர்வு! மக்கள் நிச்சயம் ஏற்பர்: இனவாதிகள், சர்வதேசம், உதிரிகள் தீய சக்திகளை அடக்க இதுவே வழி விடாப்பிடி, விட்டுக்கொடுக்காமை தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியே? முழுநாட்டு மக்களினாலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமும், தமிழர்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதேபோன்று முஸ்லிம் மக்களின் பெரும்பான் மையான ஆதரவைப் பெற்ற ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ¤ம் இணைந்து நாட்டில் முப்பது வருட காலமாக புரை யோடிப்போயுள்ள இனப்பிரச் சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதுடன் இது அவர்கள் முன்பாக வுள்ள பாரிய பொ…

  17. 2011 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் மாவட்ட தரநிலைகளில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை குழுவின் அறிக்கையின் படி மாவட்ட தரநிலைகளை சரிப்பார்க்கும் போது பிழைகள் ஏற்படவில்லை என்றும், இறுதியில் பரீட்சை பெறுபேறுகளை சீட்டுக்களுக்கு இறுதி செய்யும் போதே தவறு நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த தவறு பரீட்சை திணைக்களத்தினாலேயே சிறிது காலத்தில் தீர்க்கப்பட்டதாகவும் அந்த விசாரணை குழு குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், பரீட்சை திணைக்களத்தினால் அவ்வாறு சரி செய்யப்பட்டதன் பின்னர் வெளியிட்ட உத்தேச பெறுபேறுகளில் எந்த தவறும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக…

  18. பயங்கரவாதத் தடைச்சட்டம் ரத்து செய்யப்படமாட்டாது : நீதியமைச்சர் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசரமாக ரத்து செய்யப்பட மாட்டாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென தேர்தல்களைக் கண்காணிக்கும் கபே அமைப்பு அரசாங்கத்திடம் கோரியிருந்தது. எனினும், அதனை விடவும் முக்கியமான விடயங்கள் காணப்படுவதாகவும் அவசர அவசரமாக பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்தல் குறித்து கவனம் செலுத்தப்பட மாட்டாது எனவும் நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகளை அடக்குமுறைக்கு உட்படுத்தும் நோக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் உடனடியாக சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமெனவும் கபே அமைப்பினால் கோரிக்கை விடு…

  19. (நா.தனுஜா) இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசியல்வாதிகள் தலையிடத் தேவையில்லை. மதத் தலைவர்களால் தீர்த்து வைக்க முடியும் என்று கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். அத்துடன் பாதுகாப்புப் பிரிவினருக்குக் கட்டளை பிறப்பித்தல், அவை நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்தல் போன்ற விடயங்களில் மாத்திரம் அவர்கள் தலையீடு செய்தால் போதுமானதாகும். விடுதலைப் புலிகளின் போராட்டம் தொடங்கிய போதே இந்நாட்டின் அரசியல்வாதிகள் அதற்கான காரணம், பின்னணி குறித்து ஆராய்ந்திருந்தால் அந்தப் போராட்டத் முப்பது வருடகால யுத்தமாக நீண்டிருக்காது. …

  20. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்! adminJuly 13, 2024 முன்னாள் எதிர்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்றலில் அமைக்கப்பட்டுள்ள அமிர்தலிங்கத்தின் திருவுருவ சிலையின் முன்றலில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இதன் பொழுது ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு திருவுருவசிலைக்கு மலர் மாலையும் அணிவிக்கப்பட்டது. நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் https://globaltamilnews.net/2024/205050/

  21. சிறிலங்கா இராணுவத்தில் 12 வருட கால சேவையைப் பூர்த்தி செய்த பின்னர் ஓய்வுபெற்ற இராணுவத்தினரை மீண்டும் இராணுவத்தில் சேருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.1k views
  22. பெப்ரவரி 4 சிறி லங்காவின் சுதந்திர தினம், தமிழர்களின் சுதந்திரத்தை அழித்துவிட்டு, பாரிய இன அழிப்புகளுக்கு பின் இன்று தமிழர் சுதந்திரத்தை விலை பேசுகிறார்கள். மாகாண சபையாம், 13ஆவது திருத்த சட்டம் இன்று 13+ ஆம்! அன்பார்ந்த தமிழ் உறவுகளே! எமது இனம் சுதந்திரமாக வாழ செய்த தியாகங்கள், 21ஆம் நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலைக்கு பிறகு தமிழர்களின் உரிமையென்று ஏதோ கொடுத்து விட்டு சர்வதேசத்தை சிறீலங்கா அரசு திருப்தி படுத்த போகிறது. இந்த நேரத்தில் நியாயத்தை நாம் தட்டிக்கேட்கவேண்டும். சிறி லங்காவில் நடைபெறும் அரசியல் நாடகத்தை பார்த்துகொண்டு நாம் இருக்க முடியாது........... சிறீலங்கா சுதந்திர தினத்தன்று நாம் சர்வதேசத்திடமும் தமிழர்களின் சுதந்திரத்தை வலியுறுத்துவோம்.......…

  23. அண்மையில் அரச படையினர் வன்னிப்பிரதேசத்தில் மேற்கொண்ட தீவிர தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்த இது வரையில் வன்னி ஓமந்தைப் பகுதியிலிருந்து மன்னார்வரை இலுப்பைக்குளம், தம்பனை, கள்ளிக்குளம், முள்ளிக்குளம், யோதவௌ, அடம்பன் ஆகிய பல்வேறு பிரதேசங்களில் இராணுவத்தினர் தமது மேற்படி பிரதேச முகாம்களிலிருந்தும் பாதுகாப்பு அரண்களிலிருந்தும் நிண்ட தூரம் முன்னேறி புலிகள் இயக்கத்தினருக்கு பெரும் உயிhச்சேதத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த மாதம ஆரம்பிக்பப்பட்ட இந்த வன்னி பிரதேசத் தாக்குதல்களின் போது மொத்தம் 2100 புலிகள் இயக்கத்தினர் கொல்லப்படடிருப்பதாகவும் இதற்கு மேல் பல எண்ணிக்கையளவான புலிகள் இயக்கத்தினர் காயங்களுக்குள்ளாகி விட்டதாகவும் மேலும் பாதுகா…

    • 6 replies
    • 2.2k views
  24. இலங்கை விவகாரத்தில் மற்றயை நாடுகள் அனைத்திற்கும் முன்மாதிரியாக நடந்த கனடியப் பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சருக்கும் கனடியத் தமிழர்கள் சார்பிலான நன்றியறிதலை இந்த வார ஆரம்பத்தில் இடம்பெற்ற பொங்கல்விழாவில் வைத்துத் கனடியத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் உமாசுதன் தெரிவித்தார். மேற்படி விழாவில் கலந்து கொண்ட கண்சவேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர்களின் மூலமாகவும் இச் செய்தி நேரடியாகவே கனடியத் தமிழ்க் காங்கிரஸால் தெரிவிக்கப்பட்டதோடு இவ் உறவைப் பலப்படுத்துமுகமான அமைச்சரவை சகாக்களுடனான சந்திப்புக்கான அழைப்பை தமிழ்க்காங்கிரஸ் கடித மூலம் விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. கனடியப் பிரதமரின் தலைமைத்துவப் பண்பை வெளிப்படுத்திய சிறீலங்கா மீதான கண்டன நடவடிக்கையைச் சுட்டிக் காட…

    • 2 replies
    • 582 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.