Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 13வது திருத்தத்தை கைவிடுவது குறித்து அரசியல் கட்சிகள் ஆராயவேண்டும் – மிலிந்த மொராகொட June 28, 2020 அரசியல் கட்சிகள் 13 வது திருத்தத்தையும் மாகாணசபை முறையையும் கைவிடுவது குறித்து சிந்திக்கவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலிந்த மொராகொட வேண்டுகோள் விடுத்துள்ளார். மாகாணசபை முறையை நீக்கவேண்டும்,அதிகாரங்களை மறுசீரமைக்கப்பட்ட மாநாகர சபைகள்,நகரசபைகள் போன்ற உள்ளுராட்சி அமைப்புகளிற்கு வழங்கவேண்டும் என அவர் கருத்துவெளியிட்டுள்ளார். இந்த அமைப்புகள் மக்களிற்கு நெருக்கமாக உள்ளதன் காரணமாக சமூகமட்டத்தில் மக்களிற்கு எழும் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கான சிறந்த நிலையில் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வை காணும் ந…

  2. புதிய அரசுடன் நாம் பேச்சு நடத்துவதற்கு முன்னர் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவோம் – இரா.சம்பந்தன் நாம் பலமான அணியுடன் நாடாளுமன்றம் சென்றால்தான் அரசுடன் காத்திரமான பேச்சுக்களை மேற்கொள்ள முடியும் என்றும் எனவே, இம்முறை தேர்தலில் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவம் கடந்த முறையையும் விட அதிகரிக்கப்பட வேண்டும்.அந்தப் புனிதமான கடமையை எமது மக்கள் தங்கள் வாக்குகள் மூலமாகத் தவறாது செய்ய வேண்டும் என்றும் எமது மக்களின் ஒவ்வொரு வாக்கும் பெறுமதியானது.இதேவேளை புதிய அரசுடன் நாம் பேச்சு நடத்துவதற்கு முன்னர் அது தொடர்பில் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவோம் என தெரிவித்துள்ள இரா.சம்பந்தன் அனைவருடைய ஆலோசனைகளையும் பெற்று அதற்கமையவே பேச்சைத் தொடர்வோம் என்றும் கடந்தகால வரலாறுகளை நாம் மறக்க…

    • 2 replies
    • 454 views
  3. அதிகாலையில் அதிரடிப்படையல் நால்வர் கைது! மட்டக்களப்பு – வாகரை பிரதேச செயலாளர் பிரிவு, வெள்ளாமைச்சேனை பகுதியில் இருந்து ஓட்டமாவடி பிரதேசத்திற்கு கொண்டு செல்லத் தயாரான நிலையில் இருந்த ஒரு தொகை மரங்களுடன் நால்வரை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். வாகரை காட்டுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் மரங்கள் கடத்தல் இடம்பெறுவதாக வாழைச்சேனை விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தவகவலையடுத்து இன்று (28) அதிகாலை வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வெள்ளாமைச்சேனை பகுதியில் அதிரடிப்படையினர் சுற்றிவலைப்பினை மேற்கொண்டனர். இதன்போது முதுரை, தேக்கு, கல்ஓதிய, கட்டாக்காலை வகை அடங்கலாக 34 மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டதுடன், நான்கு சந்தேக நபர்களையும் கைது…

  4. ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கம்! நாட்டில் இதுவரை காலமும் அமுலாகி வந்த ஊடரங்கு சட்டம் இன்று (28) முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இதற்மு முன்னர் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊடரங்கு சட்டம் அமுலானமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/ஊரடங்கு-சட்ம்-முழுமையாக/

  5. தீயணைப்பு வாகனம் தருக; ஜனாதிபதியிடம் யாழ் மாநகர சபை கோரிக்கை! யாழ்ப்பாணம் மாநகர சபைத் தீயணைப்பு படையின் தீயணைப்பு வாகனம் விபத்துக்கு உள்ளாகி முற்றாக சேதமடைந்துள்ளதால் தமது சபைக்கு அவசர தேவையாகவுள்ள தீயணைப்பு வாகனத்தை பெற்றுத்தருமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு யாழ் மாநரக சபை பதில் முதல்வர் து.ஈசன் கடிதம் மூலம் கோரியுள்ளார். அக்கோரிக்கைக் கடிதத்தில், ‘கடந்த 16ம் திகதி கடமையின்நிமித்தம் அவசரகால சூழ்நிலைக்கு பதிலளிக்க முயன்றபோது விபத்துக்குள்ளாகி ஒரு தீயணைப்பு வீரர் பலியானதுடன் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது வருந்தத்தக்க விடயம். இதனால் எமது தீயணைப்பு வாகனம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. எனவே தீயணைப்பு சேவையை வழங்குவதற்கு எங…

  6. சிறிதரனுக்கு சரியான பாடம் புகட்டுவோம் – எச்சரித்தார் விமலேஸ்வரி முன்னாள் எம்பி சி.சிறிதரனின் சந்தர்ப்பவாத அரசியல் தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தையும் அவரின் உண்மை முகத்தையும் காண்பித்துள்ளது என்று தமிழரசு கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும், ‘சிறிதரன் ஆரம்பத்தில் தமிழரசுக்கட்சி சார்பில் அரசியலுக்குள் நுழைந்தபோது தமிழ் பெண்கள் அனைவரும் அவரை தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் வடிவமாகவே பார்த்தார்கள். ஆனால் இன்று அவரின் நிலை தலைகீழாக மாறியதையிட்டு அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். சிறிதரன் தற்போது தமிழ் மக்களின் விடுதலைப் ப…

  7. தேர்தலுக்குப்பின் யாழ்.பல்கலை துணைவேந்தரை ஜனாதிபதி தெரிவு செய்வார்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், எதிர்வரும் ஆகஸ்ட் 7ம் திகதி இடம்பெற இருப்பதாக தெரியவருகிறது. துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் மதிப்பீடு செய்து தெரிவான மூவரின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்காக முன்வைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுக்குப் பரிந்துரைப்பதற்கான யாழ் பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம் அன்றைய தினம் இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்படும் மூவரின் பெயர்களும், அங்கிருந்து உயர் கல்வி அமைச்சுக்கு அனுப்பப்படுவதுடன், குறித்த அமைச்சின்…

  8. சம்பள உயர்வுக்கு தான் தடையாக இருக்கவில்லையாம் – கூறுகிறார் நவீன் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுக்கு நான் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. இனியும் இருக்கப்போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். இன்று (27) நுவரெலியா – கொத்மலை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும், ‘கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாகவே பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப்படுகின்றது. எனவே இவ்விடயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் பெருந்தோட்ட அமைச்சுக்கு கிடையாது. ஆகவேதான் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பணிகள் இடம்பெற வேண்டுமென கூறினேன். தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கு நான் ஒருபோதும் தடைய…

  9. இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம்! நாட்டின் த பினான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கான இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 02 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 63 இலங்கை மத்திய வங்கி கிளைகளில் குறித்த இழப்பீட்டு பணம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://newuthayan.com/இழப்பீடு-வழங்கும்-வேலைத்/

  10. அரச வைத்திய சங்க தலைவராக மீண்டும் அனுருத்த பாதனிய இலங்கை அரச வைத்திய சங்கத்தின் தலைவராக மீண்டும் அனுருத்த பாதனிய தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்படி தொடர்ந்தும் 10வது ஆண்டாக அரச வைத்திய சங்கத் தலைவராக இவர் தேர்ந்தொடுக்கப்பட்டுள்ளார். இதற்கான தேர்தல் இன்று (27) இடம்பெற்றது. https://newuthayan.com/அரச-வைத்திய-சங்க-தலைவராக/

  11. கோண்டாவிலில் திடீர் சுற்றிவளைப்பு! யாழ்ப்பாணம் – கோண்டாவில், அன்னங்கை பகுதியில் இன்று (27) மாலை இராணுவத்தினரால் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி குறித்த பகுதி வீதிகள் முடக்கப்பட்டு இந்த சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://newuthayan.com/கோண்டாவிலில்-திடீர்/

    • 1 reply
    • 672 views
  12. தமிழ் மக்கள் தமிழ்தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் ஒரு சிலர் மீது அவர்கள் கருத்து தொடர்பில் மக்கள் கோபமாக இருக்கின்றார்கள். தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடக சந்திப்பு.

    • 0 replies
    • 372 views
  13. நுண்நிதிக் கடனால் இடம்பெறும் தற்கொலைகள் மற்றும் வறுமைக்குள் வாடும் பெண் தலைமை குடும்பங்களின் மேம்பாட்டுக்காக கனடாவில் பல அமைப்புக்கள், நலன்விரும்பிகளால் சேகரித்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக வழங்கப்பட்ட 20 கோடியே 20 இலட்சம் (212 மில்லியன்) ரூபாவுக்கு என்ன நடந்தது என தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்படி கேள்வியினை எழுப்பியிருந்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், ஈழத்தில் போரால் கடுமையாக பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கப்பால் வடக்கு கிழக்கில் நுண் நிதிக் கடன் பி…

  14. In இலங்கை June 27, 2020 1:19 pm GMT 0 Comments 1254 by : Litharsan தமிழ் தேசியம் பேசுபவர்கள் தொடர்பாக தம்மிடம் இருக்கும் ஆதாரங்கள் கையளிக்கப்பட்டால் அவர்களை நேரடியாக கைது செய்ய முடியும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அம்பாறையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “யுத்த காலத்தில் இருதரப்புக்கும் கூடுதலான இழப்புகள் இருந்தது என்பது உண்மையானது. இதுபோன்ற நிலைமைகளை மாற்றியமைத்து ஜனநாயக வழியில் செல்லவேண்டும் என்ற நோக்கில்தான் நான் கூறிய கருத்து அமைந்திருந்தது. அரசியல் மேடைகளில் பிரசார…

    • 5 replies
    • 1.4k views
  15. ஸ்ரீலங்காவின் எல்லை மற்றும் கடலோரா பாதுகாப்பு பலவீனமானதாக காணப்படுகின்றது என அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் எச்சரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் உலக நாடுகளில் காணப்பட்ட பயங்கரவாதநிலை குறித்த தனது வருடாந்த அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, ஸ்ரீலங்காவின் எல்லைக்காவல் மற்றும் கடலோர பாதுகாப்பு தொடர்ந்தும் பலவீனமானதாக காணப்படுகின்றது. ஸ்ரீலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகளுடனும் ஜப்பானுடனும் இணைந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் எல்லை முகாமைத்துவ நடவடிக்கைகளை விஸ்தரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா தனது கடல்சார் எல்லையை பாதுகாப்பதற்காக அமெரிக்காவுடனான தனது இணைப்பை வி…

    • 0 replies
    • 503 views
  16. நான் ஒருபோதும் புலிகளின் மேடையில் ஏறி தனிநாட்டு கோரிக்கையை வலியுறுத்தியோ அல்லது ஆயுத போராட்டத்தை ஆதரித்தோ பேசியதில்லையென முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சரும், பாராளுமன்ற வேட்பாளருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். உண்மையில் போர்நிறுத்த காலத்தில் சட்ட பூர்வமாக தென்னிலங்கையில் இருந்து பலர் கிளிநொச்சி சென்று நிகழ்வுகளில் கலந்துக்கொண்டார்கள். அப்படி ஒருமுறை பொங்கு தமிழ் விழாவில் நான் உரை நிகழ்த்தும் போது, “இலங்கையில் தமிழ் தேசியமும், சிங்கள தேசியமும் ஒன்றாய் வாழ இன்னமும் அவகாசம் இருக்கிறது. இரண்டு இனங்களுக்கும் இடையில் சமத்துவம் இருக்க வேண்டும். சமத்துவம் இல்லாவிட்டாலேயே பிரிந்து செல்லும் தேவை ஏற்படுகிறத…

    • 0 replies
    • 893 views
  17. யாழ் மறை மாவட்டத்தின் முதலாவது ஆயருக்கு சிலை திறப்பு! யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தின் முதலாவது ஆயரான இத்தாலியை சேர்ந்த ஒரசியோ பெத்தாசினியின் உருவச்சிலை இன்று (27) யாழ் ஆயர் இல்லத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த உருவச்சிலையினை யாழ் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது குறித்த சிலையை வடிவமைத்த சிற்பக் கலைஞர்கள் இருவர் ஆயரினால் கெளரவிக்கப்பட்டனர். சிலை திறப்பு நிகழ்வில் யாழ் மறைமாவட்ட குருக்கள் பலரும் கலந்து கொண்டனர். https://newuthayan.com/யாழ்-மறை-மாவட்டத்தின்-மு/

  18. இலங்கையின், ஹெர்மஸ் பெரு நிறுவன நிறைவேற்று அதிகாரியாக கஸ்தூரி செல்லராஜா வில்சன் நியமனமாகி உள்ளார். Hemas Holding plc என்னும் இலங்கையின் பெரு நிறுவன நிறைவேற்று அதிகாரியாக 2020, அக்டோபர் 1ம் திகதி முதல் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். விலகிச் செல்லும் Steven Enderby என்பவரின் இடத்துக்கு இவர் நியமனமாகியுள்ளார். ஜூலை 1ம் திகதி முதல், அவரின் கீழ், நிழல் நிறைவேற்று அதிகாரியாக கடமை தொடங்கவுள்ளார் கஸ்தூரி. 2002 ம் ஆண்டு முதல் நிறுவனத்துடன் செயல்படும் கஸ்தூரி, அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு ஆற்றியுள்ளார். 2016ல் நிறுவனத்தின், மருந்துகள் பிரிவுக்கு பொறுப்பாக இருந்து அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்கு ஆற்றியுள்ளார். இலங்கையின் வரலாறில் ஒரு தமிழ் ப…

    • 45 replies
    • 4.1k views
  19. இராணுவத்தினரை கொலை செய்ததாக கருணா வெளிட்ட கருத்து தொடர்பில் பேஸ்புக் பக்கங்கள் ஊடாக கருத்து வெளியிட்டால், குறித்த நபரின் பேஸ்புக் கணக்கு தடை செய்யப்படும் என அரசாங்கத்தினால் எச்சரிக்கப்படுவதாக, முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கருணாவின் கருத்து தொடர்பில் கருத்து வெளியிட்ட நெருக்கமான நபரின் பேஸ்புக் கணக்கிற்கு அவ்வாறு அரசாங்கத்தின் எச்சரிக்கை அடங்கிய தகவல் கிடைத்துதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தினால் ஊடகவியலாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் மத தலைவர்களுக்கு கருத்து வெளியிடும் முழுமையான சுதந்திர வழங்கப்பட்டது. எனினும் தற்போதைய அரசாங்கம் முழுமையாக அந்த சுதந்திரத்தை தடை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில்…

    • 1 reply
    • 573 views
  20. சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது பொதுமக்களின் பொறுப்பாகும்…! கொவிட்-19 தொற்று தற்போது இலங்கையில் வெற்றிகரமான முறையில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், அது தொடர்பான சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது பொதுமக்களின் பொறுப்பாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொவிட்-19 காரணமாக 46 வழிகாட்டல் கோவைகள் நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றும்போது, பொதுமக்கள் இது குறித்து கவனத்திற்கொள்ளாமல் செயற்படுவதை அவதானிக்க முடிவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வைரஸ் தாக்க நிலையை தவிர்க்கும் பொறுப்பு அனைத்து மக்கள…

  21. மீண்டும் ஐந்து வருடங்களை நாசமாக்கவா விக்னேஸ்வரன் வாக்கு கேட்கிறார் – தவராசா முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையில் ஐந்து வருடங்களை வீணடித்து விட்டு, இப்போது மீண்டும் ஐந்து வருடங்களை வீணடிக்கவா தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கின்றாரென முன்னாள் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே தவராசா இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், ‘வடக்கு மாகாண சபை தேர்தலின்போது, தாம் ஆட்சிக்கு வந்தால் வடக்கில் இருக்கும் இராணுவத்தினரை வெளியேற்றுவோம் என முழக்கமிட்டனர். ஆனால் ஒரு இராணுவ சிப்பாயை கூட அவரால் வெளியேற்ற முடியவில்லை. இவர்கள் இதனைத்தான் செய்யவில்லை என்…

    • 3 replies
    • 537 views
  22. தமிழரசுக்கட்சியின் வீட்டை விச நாகங்கள் சூழ்ந்துள்ளது – இப்படி சொல்கிறார் அருந்தவபாலன் தமிழரசுக் கட்சியின் வீடு இன்று புத்தெடுத்து விச நாகங்கள் சூழ்ந்து எல்லாமே அழிந்து போகின்ற நிலையில் இருக்கும் போது, பிரிந்து சென்றவர்களை வீட்டுக்குள் கூப்பிடுவதென்பது நகைச்சுவையானது என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் (27) திருநெல்வேலியில் உள்ள தனது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்களை மீள இணைப்பது’ தொடர்பாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வெளியிட்ட கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், …

    • 2 replies
    • 654 views
  23. மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை ! கொரோனா தொற்றுப்பரவலை கட்டுபடுத்தும் முகமாக பல சுகாதார நடைமுறைகளை சுகாதார அமைச்சினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்படும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் முகக்கவசம் அணிவது மிக அவசியமாகும் என்று பிரதி பொலிஸ் மா அதியர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சுகாதார விதி முறைகளுக்கு மாறாக செயல்படுவோருக்கு எதிராக சட்ட சடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாளைமுதல் முகக்கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடுபவர்களை தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறித்துள…

  24. இட்லிக்கு தொட்டுக் கொள்ளும் சட்ணியைப் போன்றதே சர்வதேசம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுகளை தென்னிலங்கையுடனான தேசிய நல்லிணக்கத்திற்கூடாகவே நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், சர்வதேசம் என்பது இட்லிக்கு தொட்டுக் கொள்ளும் சட்ணியாக பயன்டுத்திக் கொள்ள முடியுமே தவிர முழுமையாக நம்பி இருக்க முடியாது எனவும் தெரிவித்தார். கரம்பன் கிழக்கு ஸ்ரீ ஞான வைரவர் சனசமூக நிலைய முன்றலில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பின் ஊடாகவும், பூகோள அரசியல் நகர்வுகளை பயன்டுத்தியும் தமிழ் மக்களின் பிரச்…

    • 3 replies
    • 591 views
  25. விக்னேஸ்வரன் மற்றும் சம்பந்தன் போன்றோர் அரசியலிலிருந்து தாங்களாகவே ஒதுங்கிகொள்ளவேண்டும் – வினோநோகராதலிங்கம் விக்னேஸ்வரன் மற்றும் சம்பந்தன் போன்றோர் முதுமை காரணமாக அரசியலிலிருந்து தாங்களாகவே ஒதுங்கிகொள்ளவேண்டும். அவர்களாக ஒதுங்கவில்லை என்றால் அவர்களை ஒதுக்கவேண்டிய பொறுப்பு மற்றும் கடமை உங்களிடம் இருக்கின்றதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.எல்லோரும் ஐயாக்கள்தான். வயது முதிர்ந்தவர்கள். வீட்டிலே இருந்து ஓய்வு எடுக்க வேண்டியவர்கள். புதிதாக வந்து அரசியல் செய்கின்றார்கள். அவர்களை வீட்டுக்கு நிர்பந்தமாக அனுப்பவேண்டியது உங்களது கடமை.மேலும் சம்பந்தன் அரசியல் அரங்கில் இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகின்…

    • 4 replies
    • 597 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.