ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143688 topics in this forum
-
வில்பத்து காடழிப்பு வழக்கின் தீர்ப்பிற்கான திகதி அறிவிப்பு வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மறிச்சிகட்டு வனப்பகுதிக்கு சொந்தமான பிரதேசத்தில் காடழிப்பு மேற்கொண்டு அனுமதியற்ற கட்டுமானங்களை மேற்கொண்டமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் நீதி மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு இன்று (24) அழைக்கப்பட்ட போது ஜனக் டி சில்வா மற்றும் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன ஆகிய நீதிபதிகள் அடங்கிய மேன்முறையீட்டு நீதிபதிகள் குழாமினால் இந்த அறிவிப்பு மேற…
-
- 0 replies
- 317 views
-
-
காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடிய தந்தை மரணம்! காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான விக்னேஸ்வரன் என்பவரை தேடிவந்த வவுனியா – செட்டிகுளம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (69-வயது) என்ற தந்தை ஒருவர் சுகயீனம் காரணமாக நேற்று (23) உயிரிழந்துள்ளார். இவரது மகன் 2008ம் ஆண்டு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்றன. https://newuthayan.com/காணாமல்-ஆக்கப்பட்ட-மகனை-4/
-
- 0 replies
- 334 views
-
-
நயினாதீவு செல்ல பாஸ் ; தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு June 24, 2020 நயினாதீவுக்கு செல்வதற்கு சிங்களவர்களுக்கு ஒரு நடை முறையும் தமிழர்களுக்கு வேறொன்றும் பின்பற்றப்படுகின்றது. இதில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதுடன் அலைக் கழிக்கவும்படுகின்றனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தபெருந்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக திருவிழாவில் கலந்து கொள்ள மிகச்சொற்பமான பக்தர்களே அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கும் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் அனுமதி பெறவேண்டும். பொலிஸ் அனுமதி இல்லாதவர்கள…
-
- 0 replies
- 227 views
-
-
கருணாவை யுத்த குற்றங்களிற்காக விசாரணை செய்யவேண்டும்- மனித உரிமை கண்காணிப்பகம் June 24, 2020 கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறித்து யுத்த குற்ற விசாரணை அவசியம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மிகநீண்ட காலத்திற்கு முன்னரே அவரை யுத்த குற்ற விசாரணைகளிற்கு உட்படுத்தியிருக்கவேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது படையினரை பெருமளவில் கொலை செய்தேன் என அவர் தெரிவித்துள்ளதை தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் இது குறித்து விசாரணைகளிற்கு உத்தரவிட்டுள்ளனர் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார். எனி…
-
- 0 replies
- 295 views
-
-
யாழ் அரியாலை முள்ளி கடற்கரைப் பகுதியில் நட்சத்திர விடுதி ஒன்றை அமைக்க முற்பட்டவரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார். குறித்த இடத்தில் முற்காலத்து அநுராதபுர மன்னர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள் உள்ளதென தெரிவித்து தொல்பொருள் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு அமையவே இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தெரியவருகையில், புலம்பெயர் தமிழர் ஒருவர் அரியாலை முள்ளி பகுதியில் நட்சத்திர விடுதி ஒன்றை அமைக்க சட்டத்தரணி ஊடாக தனது அங்கிகாரம் பெற்றுள்ளார். உரிய திணைக்களங்களிடம் இருந்து அனுமதிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் தொல்பொருள் திணைக்களத்திடமிருந்து அனுமதி வழங்கப்படவில்லை. …
-
- 0 replies
- 254 views
-
-
இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் பெண்ணொருவருக்கு யாழ்ப்பாணத்தில், இராணுவத்தினரால் வீடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் வீடற்ற வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்கும் செயற்திட்டம், யாழ். மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய ஏழு வருடங்களாக இராணுவத்தில் கடமையாற்றும் தமிழ் பெண்மணிக்கு தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J252 பலாலி தெற்கு வசாவிளானில், இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு நேற்று யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியவினால் கையளிக்கப்பட்டது 2014ம் ஆண்டு இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழ் பெண்மணி கடந்த ஏழு வருடங்களாக யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தில…
-
- 0 replies
- 292 views
-
-
மாற்றுத்திறனாளிகளுக்கு அவயங்கள் வழங்கல் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பிறப்பில் அவயவங்களை இழந்தவர்களுக்கு இலவசமாக அவயவங்களை வழங்கும் விஷேட திட்டம் தற்போது ஜேர்மன் நாட்டு உதவியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் வேண்டுகோளில் கிழக்கு மாகாண சமூக சேவைத் திணைக்களத்தின் சிபாரிசில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பிறப்பில் அவயவங்களை இழந்தவர்களுக்கு இலவசமாக செயற்கை அவயங்கள் வழங்கும் நிகழ்வு செயலக சமூக சேவை அலுவலகத்தில் இன்று (24) இடம்பெற்றது. கோறளைப்பற்று மத்தி சமூக சேவை உத்தியோகத்தர் அசனார் நஜீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், உதவி பிரதேச …
-
- 0 replies
- 444 views
-
-
“தமிழர்கள் இஸ்ரேலியர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர். எம்மாலும் முடியும்”- ஊடக அமைய கேள்வி பதிலில் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கு தெளிவான ஒரு மாற்று திட்டத்தை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கொண்டிருக்கின்றது என்று தெரிவித்துள்ள அதன் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் தமிழ் கூட்டமைப்பு செயற்பட்டது போல தமிழ் மக்களின் எதிர்காலத்தை தனி ஒருவர் தீர்மானிக்கும் வகையில் தாம் செயற்படப்போவதில்லை என்றும் உலகம் முழுவதிலும் வாழும் தமிழ் மக்களை ஒன்றிணைத்து நிறுவன ரீதியான, அறிவின் அடிப்படையிலான, உபாயங்களின் அடிப்படையிலான, காத்திரமான பாராளுமன்ற செயற்பாடுகளின் ஊடாக மேற்கொள்வதே தமது திட்டம் என்று தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்…
-
- 0 replies
- 481 views
-
-
இராணுவமயப்படுத்தலால் ஏற்பட்ட விளைவு…! தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கில் இராணுவ மயப்படுத்தலால் ஐ.நாவின் பார்வைக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஐ.நா. விசேட அறிக்கையாளரின் வருடாந்த அறிக்கை அமைந்துள்ளது.” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர். இலங்கையில் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும்கூட வடக்கு, கிழக்கு பகுதிகள் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். இத்தகைய கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் அவநம்பிக்கை மற்றும் அச்சமான சூ…
-
- 5 replies
- 840 views
-
-
நட்சத்திர விடுதி அமைக்க முற்பட்டவருக்கு விளக்கமறியல் யாழ்ப்பாணம்- அரியாலை முள்ளி கடற்கரைப் பகுதியில் நட்சத்திர விடுதி அமைக்க தெரிவு செய்யப்பட்ட இடத்தில் முற்காலத்தில் அநுராதபுர மன்னர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள் உள்ளன என்று தெரிவித்து அனுமதி கோரியவருக்கு எதிராக தொல்பொருள் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மன்றில் இன்று சரணடைந்த விண்ணப்பதாரியை வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. புலம்பெயர் தமிழர் ஒருவர் அரியாலை முள்ளியில் நட்சத்திர விடுதி ஒன்றை அமைக்கவுள்ளார். அவர் யாழ்ப்பா…
-
- 0 replies
- 735 views
-
-
ஜனாதிபதி தொடர்பாக... மங்கள, மஹிந்தவுக்கு கடிதம். மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் உயர் மட்ட அரச அதிகாரிகளை ஜனாதிபதி கடுமையாக விமர்சித்து மக்கள் மத்தியில் ஏளனத்துக்குள்ளாக்கியுள்ளமை பொருளாதார ரீதியில் எவ்வித ஆக்கப்பூர்வமான நுட்பம் ஜனாதிபதிக்கு கிடையாது என்பதை எடுத்துக்காட்டியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தொடர்பாக அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக விசனம் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பிரதமருக்கு எழுதியுள்ள குறித்த கடிதத்தில், “உங்களுக்கு முன்னர் நிதியமைச்சர் பதவியினை வகித்தவன் என்கின்ற ரீதியில் இம்மட…
-
- 0 replies
- 235 views
-
-
சிறுவர்களின் வாசிப்பை மேம்படுத்த நூல்கள் வழங்கிவைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் மத்தியில் வாசிப்பு திறனை மேன்படுத்தும் வகையில் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையின் வழிகாட்டலில் இன்று (23) காலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மாவட்டத்தில் இயங்கிவருகின்ற சிறுவர் இல்லங்களுக்கு உலக அறிஞர்கள், ஞானிகள் மற்றும் புனிதர்கள் ஆகியோரின் நூல் தொகுதியினை வழங்கிவைத்தார். கொரோனா காலங்களில் பாடசாலை செல்லாமல் வீடுகளிலும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களிலும் உள்ள சிறார்களின் அறிவு திறனை மேம்படுத்தவே இந்த வேலைத் திட்டம் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போது அரசாங்க அத…
-
- 0 replies
- 316 views
-
-
காதலில் ஏமாற்றம்; தவறான முடிவால் தீமூட்டி பலியான யுவதி! காதல் தோல்வியால் மன விரக்தியடைந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து தனக்குத்தானே தீ மூட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் ஆவரங்கால் கிழக்கு புத்தூர் பகுதியை சேர்ந்த உலகேந்திரம் விதுஷிகா (வயது-23) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் வசித்து வரும் குறித்த யுவதி ஒரு வருடமாக தொலைபேசியில் இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தனது காதலனிடம் திருமணம் செய்யுமாறு கோரி வந்துள்ளார். அதற்கு குறித்த இளைஞன் பெற்றோரை கேட்டு சொல்கின்றேன் என்று கூறி தொடர்பை துண்டித்துள்ளார். அதன் பின்னர் ஒரு…
-
- 1 reply
- 426 views
-
-
அறக்கொட்டிகளை கட்டுப்படுத்துவது குறித்து கருத்தரங்கு மட்டக்களப்பு – வாழைச்சேனை கமநல சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கபிலநிற தாவர தத்திகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கருத்தரங்கு காவத்தமுனை மஸ்ஜுதுல் நிஹ்மா பள்ளிவாயலில் இன்று (23) இடம்பெற்றது. வாழைச்சேனை கமநல சேவைகள் திணைக்கள விவசாய போதனாசியர் எம்.ஜமால்டீன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் பள்ளிமடு மற்றும் அடம்படிவட்டுவான கண்டத்திலுள்ள விவசாயிகள் கலந்து கொண்டனர். இதன்போது நெற்செய்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் கபில நிற தாவர தத்திகள் (அறக்கொட்டி) கட்டுப்படுத்தும் நடைமுறைகள் தொடர்பில் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், இதனை கட்டுப்படுத்துவதற்கு எவ்வாறான களை நாசினிகள் தெளிக்க வேண்டும் என்பது தொடர்பிலு…
-
- 0 replies
- 349 views
-
-
போதை வெறியர்கள் போல் உளறுபவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும் – ஸ்ரீநேசன் நிதானம், நியாயம் இழந்து கொந்தளிப்பான கருத்துகளை கொட்டுவதனால் தம்மைத் தாமே முற்போக்காளர்கள் என்று விலாசப்படுத்தும் அரச கட்சிகளின் முகவர்கள் தாம் யாருக்காக அரசியல் செய்யப் போகிறோம் என்பதை தேர்தலுக்கு முன்பே மக்களுக்கு அறியப்படுத்தி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேஷன் கருத்து தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூலின் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு கருத்து தெரிவித்தார். மேலும், ‘இலங்கை மக்களாட்சி முறையுள்ள ஜனநாயக நாடாகும். இந்த மக்களாட்சி முறை சகல இன மக்களுக்கும் பொதுமையானதாகவும், முற்ப…
-
- 0 replies
- 543 views
-
-
நேற்றைய தினம் மாமனிதர் ரவிராஜ் இல்லத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் சாவகச்சேரி கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் இவர்களுக்கான அழைப்பு சசிகலா ரவிராஜினால் விடுக்கப்பட்டிருந்தது. ஆயினும் கூட்டத்திற்கு செல்லவிருந்த உறுப்பினர்களை முதலில் கட்சி அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்த சயந்தன், சசிகலா ரவிராஜை சுயமாக இயங்க விடமால் தடுப்பதற்கேதுவான அணுகுமுறைகளை கையாள்வதற்கு திட்டங்களை வகுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்பு அங்கிருந்து மாமனிதர் இல்லத்திற்கு கூட்டத்திற்காக புறப்பட்டு சென்றனர். இதில் ஒரு சிலர் சயந்தனின் திட்டத்திற்கு உடன்பட்டனர். குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு தென்மராட்சிப் பகுதியில் ஆதரவு வேண்டி சசிகலா ரவிராஜ் பிரச்சாரத்தில் …
-
- 0 replies
- 704 views
-
-
கோத்தாபய தீர்வு தர மாட்டார்; ஆனாலும் நாம் பேசுவோம் – சித்தார்த்தன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை எனக்கு தனிப்பட்டமுறையில் நன்கு தொியும். அவா் ஒரு சிறந்த சிங்கள தேசியவாதி. அவா் தமிழ் மக்களின் அரசியல் தீா்வு குறித்த அபிலாஷைகளை நிறைவேற்றுவாா் என நான் நினைக்கவில்லை. அவா் தரமாட்டாா் என்பதற்காக நாங்கள் பேசாமலும் இருக்க முடியாது. இருக்கமாட்டோம்” இவ்வாறு நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளரும், புளொட் தலைவருமான த.சித்தாா்த்தன் தெரிவித்தார். மேலும், ‘நாங்கள் சா்வதேச மட்டத்திலும் உள்ளூரிலும் பேச வேண்டும். அழுத்தங்களை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினையே இல்லை என்றாகிவிடும். கடந்த 70 வருடங்களாக அகிம்சை வழியிலும், ஆயுத…
-
- 5 replies
- 705 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள முக்கியஸ்தர் ஒருவருடைய அரசியல் நலனுக்காகத்தான் திருமதி சசிகலா ரவிராஜ் திட்டமிட்ட வகையில் களமிறக்கப்பட்டுள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் உப தலைவரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சண்முகராஜா அரவிந்தன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே சண்முகராஜா அரவிந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ரவிராஜ் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்ட காலத்தில் இருந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் அரசியலில் ஈடுபடுவதை அவருடைய மனைவி மற்றும் அவருடைய குடும்பம் விரும்பவில்லை. அவருடைய அரசிய…
-
- 0 replies
- 606 views
-
-
நாட்டுக்குரிய பணத்தினை தனது சொந்தத்துக்காக செலவு செய்யும் பழக்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இருக்கக் கூடும் என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்திருக்கும் விக்னேஸ்வரன், வடக்கிற்கு வந்த பணம் திருப்பி அனுப்பப்பட்டதா? அதன் பின்னணி என்ன? இதுபோன்ற பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார், இது தொடர்பாக தொடர்ந்தும் பேசிய அவர், https://www.ibctamil.com/srilanka/80/145710?ref=imp-news
-
- 1 reply
- 586 views
-
-
வீட்டுக்கான அடிக்கல் நாட்டல் யாழ்ப்பாணம் – புங்குடுதீவு, ஜே-27 கிராம சேவகர் பிரிவில் போரால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்திற்கான புதிய வீடு நிர்மானிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ருவான் வணிகசூரியவால் இதற்கான அடிக்கல் நேற்று (22) நாட்டப்பட்டது. https://newuthayan.com/வீட்டுக்கான-அடிக்கல்-நாட/
-
- 0 replies
- 610 views
-
-
சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரை இப்படி அவர்களுக்கு முன்னால் கிழிக்கின்றார்
-
- 3 replies
- 679 views
-
-
-
- 0 replies
- 587 views
-
-
கல்முனையில் திடீரென கொதி நிலையையடைந்த கிணற்று நீர்! கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள கிணறு ஒன்றில் வெந்நீர் ஆவியாக வெளி வந்ததை அடுத்து மக்கள் ஒன்று கூடினார்கள். இன்றையதினம் (23) கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து கொதிப்பாக நீர் காணப்படுவதாகவும் ஆவியாகி வெளியேறுவதாகவும் தகவல் ஒன்று பரவியது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மற்றும் புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் மின்சார சபை ஊழியர்கள் சென்று பார்வையிட்டனர். பின்னர் இறுதியாக மின்சார கம்பி ஒன்று கிணற்றில் காணப்பட்டதாகவும் அதனால் ஏற்பட்ட மின்சார…
-
- 1 reply
- 679 views
-
-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் எவன்காட் நிறுவனத்தை தன்னிச்சையான முறையில் கையகப்படுத்தியதன் காரணமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து அதன் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் 17 பேருக்கு அழைப்பாணை வெளியிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவரத்ன உள்ளிட்ட 17 பேர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித்த சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க மற்றும் அனுர குமார திஸாநாயக்க ஆகியவர்கள்…
-
- 0 replies
- 284 views
-
-
47,430 விண்ணப்பங்கள் நிராகரிப்பு பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான 47,430 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்புக்காக 753,037 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். நாடளாவிய ரீதியில் 7 இலட்சத்து ஐயாயிரத்து 85 பேர் இம்முறை தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். தபால் மூல வாக்காளர்களில் அதிகமானவர்கள் குருநாகல் மாவட்டத்திலேயே தகுதி பெற்றுள்ளனர். http://www.tamilmirror.lk/செய்…
-
- 0 replies
- 560 views
-