ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143690 topics in this forum
-
சான்றிதழ் வழங்க வந்த மைத்திரியை திருப்பி அனுப்பிய தேர்தல் அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (15) முற்பகல் பொலன்னறுவையில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த வைபவம் ஒன்று தேர்தல் ஆணைக்குழுவால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு தேர்தல்கள் சட்டத்தை மீறி இடம்பெறுவதாக குறித்த இடத்திற்கு வருகை தந்த தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். மைத்திரிபால சிறிசேன இம்முறை இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் பொதுஜன முன்னணி சார்பாக பொலனறுவை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்னர் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “இந்நிகழ்வு தேர்தல் சட்டத்தை மீறி இடம்பெறுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு …
-
- 1 reply
- 434 views
-
-
இலங்கையில் 263,412 பேர் தொழிலை இழந்துள்ளனர் — ஹர்ஷ சுட்டிக்காட்டினார் இலங்கையில் கொரோனா நெருக்கடிச் சூழலால், 263,412 பேர் தொழிலை இழந்துள்ளனர் என்று முன்னாள் எம்பி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். தொழில் திணைக்களம், 2,700 தொழில் நிறுவனங்களில் முன்னெடுத்த ஆய்வுகளுக்கு அமைய, அந்நிறுவனங்களில் கொரோனாவுக்கு முன்னர் 3,76 388 பேர் பணிபுரிந்துள்ள நிலையில், மே மாதமளவில் 263,412 பேருக்கு பணிகளையும் கொடுப்பனவுகளையும் வழங்க முடியாது போயுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில், நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், ‘தொழில் திணைக்களத்தின் இந்த அறிக்கை, அமைச்சரவைக்கும் …
-
- 0 replies
- 389 views
-
-
மருந்துகளின் விலையை அதிகரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை அனுமதியின்றி மருந்துகளின் விலைகளை அதிகரிக்கும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை வெளியிட்டுள்ள ஊ்டக அறிக்கையிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மருந்துகளின் விலைகளை, அனுமதியின்றி அதிகரிக்கும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் அனுமதியின்றி மருந்துகளின் விலைகளில் திருத்தங்கள் ம…
-
- 0 replies
- 365 views
-
-
ரயில் நிலையத்தில் குழப்பம்; இருவர் கைது! வவுனியா புகையிரத நிலையத்தில் நேற்று (14) மாலை குழப்பம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்தில் இருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா புகையிரத நிலையத்திற்கு வருகை தந்த இருவர் குறித்த நிலைய அதிபருடன் தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி தகராறில் ஈடுபட்டதுடன், அச்சுறுத்தலும் விடுத்து அங்கிருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறு. இந்நிலையில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். https://newuthayan.com/ரயில்-நிலையத்தில்-குழப்ப/
-
- 0 replies
- 438 views
-
-
வீதியோர வியாபாரத்திற்கு நல்லூர் பிரதேச சபை தடை! யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் இன்று (15) முதல் பொது இடங்களில் மரக்கறிகள் மற்றும் மீன் வியாபாரத்திற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்தள்ளார். நல்லூர் பிரதேசசபை நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 2 மாதங்களாக எமது சபையின் எல்லைக்குள் இருக்கும் பொதுச் சந்தைகள் பூட்டப்பட்டன. அதற்கு மாற்றீடாக பொது இடங்களில் …
-
- 0 replies
- 363 views
-
-
கருணா யார் என்பது விஷேடமாக கிழக்கு மக்களுக்கு நன்றாக தெரியும்- எம்.ஏ.சுமந்திரன் Sunday, June 14, 2020 | 7:50:00 PM | 0 comments . பாறுக் ஷிஹான்- கருணாவின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை . கருணா என்பவர் யார் என்று விஷேடமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு நன்றாக தெரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை(14) மதியம் இடம்பெற்ற போது அண்மைக்காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சமந்திர்ன ஒரு அரசியல் வியாபாரி என கருணா விமர்சிப்பது தொடர்பில் ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்வ…
-
- 1 reply
- 368 views
-
-
மரண தண்டனை கைதியை இலஞ்சம் பெற்று விடுவிக்கவில்லை கொழும்பு – ரோயல்பார்க் கொலையாளியான மரண தண்டனை கைதி அன்ரனி ஜயமஹாவை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய தான் இலஞ்சம் பெறவில்லை, கல்வி சாதனையின் அடிப்படையிலேயே அவர் விடுவிக்கப்பட்டார் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார். சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது கடந்த ஆண்டின் இறுதியில் இலங்கையை சேர்ந்த சுவிடன் பெண்ணை கொடூரமாக கொலை செய்த மரண தண்டனை கைதி அன்ரனியை தன்னிச்சையாக தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொது மன்னில் விடுதலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/மரண-தண்டனை-கைதியை-இலஞ்சம/
-
- 0 replies
- 297 views
-
-
நாவற்குழியில் சிறுமி மீது கத்திக்குத்து! யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் நேற்று (14) இரவு உறவினர்களுக்கு இடையிலான தகராறு, கத்தி குத்தாக மாறியதில் கத்திக்குத்துக்கு இலக்காகி சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார். நாவற்குழி 300 வீட்டு திட்டம் பகுதியை சேர்ந்த துவாரகா (வயது 12) எனும் சிறுமியே குறித்த சம்பவத்தில் காயமடைந்துள்ளார். குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட உறவினர்களுக்கு இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டு பின்னர் அது கைக்கலப்பாக மாறியது. இதன்போது ஒருவர், பிறிதொருவரை கத்தியால் குத்த முனைந்தபோது, அங்கிருந்த சிறுமியின் கழுத்து பகுதியில் கத்தி குத்தியுள்ளது. அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு, சா…
-
- 0 replies
- 334 views
-
-
ஷஹ்ரானுடன் எமது கட்சிக்கு தொடர்பில்லை – ஹக்கீம் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி ஷஹ்ரான் ஹஷிம் மற்றும் குழுவுடன் தமது அரசியல் கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டி – பிலிமந்தலாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகாெண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும் பயங்கரவாத தாக்குதலின் பின்னர், முஸ்லிம்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் இவ்வாறு தங்களது கட்சியின் மேல் குற்றம் சுமத்துவதாக தெரிவித்துள்ள அவர், இவ்வாறான குழுவொன்று தங்களுடன் இருப்பதை யாரும் அ…
-
- 1 reply
- 593 views
-
-
கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் 12 ஆம் ஆண்டு நினைவு! ஈழத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு வாழும் தெய்வமாக இருந்த சிவத்தமிழ் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 12 வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். ஈழத்தமிழர்களால் வாழும் தெய்வமாக கணிக்கப்பட்டு எல்லோராலும் அன்புடன் அம்மா என்று அழைக்கப்பட்ட பொதுச்சேவைக்கு இலக்கணமாக திகழ்ந்து தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து காட்டியவர். தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றுவதுதான் தன் பணி என்று நின்று விடாது, அதற்கு அப்பால் தான் வாழும் சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்தார். அதுதான் இறைவனுக்கு செய்யும் பணி என்று எடுத்துக்காட்டினார். 1925 ஆம் ஆண்டு பிறந்த அவர் அக்காலத்தில் அமெரிக்க மிசனறிமார் நடத்தி வந்த மல்லாகம் அ…
-
- 0 replies
- 275 views
-
-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்க நடவடிக்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை எதிர்வரும் ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்னர் திறப்பதற்கு அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வத்தளை, நீர்கொழும்பு உள்ளூராட்சிசபை பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியுள்ளதாவது, “வௌிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் அழைத்து வரப்படுவது எதிர்வரும் ஓகஸ்ட் 1ஆம் திகதிக்குள் நிறைவுக்கு கொண்டு வரப்படும். நாட்டுக்கு இன்னும் 20,000 பேர் வருகை தரவுள்ளனர். ஏற்கனவே 10,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த செயல்முறையை …
-
- 2 replies
- 656 views
-
-
காற்றில் தூக்கி வீசப்பட்ட முதியவர் பலி! யாழ்ப்பாணம் – கோப்பாய் பாலத்திற்கு அருகே மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கடுமையான காற்றின் காரணமாக தூக்கி வீசப்பட்ட முதியவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (14) உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு பகுதியினை சேர்ந்த சந்திரசேகர் சரவணமுத்து வயது 80 என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 12ம் திகதி மேற்படி முதியவரும் அவரது மகனும் எழுதுமட்டுவாழுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டு இருந்துள்ளனர். இதன்போது இவர்கள் கோப்பாய் பாலத்திற்கு அருகில் கடும் காற்றில் தூக்கி வீசப்பட்ட முதியவர் இரும்பு கேடறுடன் அடியுண்டு தலையில் காயமடைந்துள்ளார். இந்நிலையிலேயே சிகிச்சை பெற்…
-
- 0 replies
- 355 views
-
-
“மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள்” ஆய்வு நூல் வெளியீடு! “மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள்” எனும் பெயரில் காத்தான்குடி – ஆய்விற்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தினால் மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் அங்கத்துவம் பெறும் பெண்கள் தொடர்பான ஆய்வறிக்கை நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (13) காத்தான்குடி பீச்வே ஹோட்டலில் நடைபெற்றது. ஆய்விற்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றிய பணிப்பாளர் திருமதி அனீஷா பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் திருமதி ஜெம்குத் நிசா மசூத், காத்தான்குடி மத்திய கல்லூரி அதிபர் எஸ்.எச்.பிர்தௌஸ், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிர…
-
- 1 reply
- 386 views
-
-
ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை சட்ட நடவடிக்கை இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சால்லே சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் இயக்குநர் ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளளது. மேஜர் ஜெனரல் சுரேஸ் சால்லே, தனது சட்டத்தரணி ஊடாக இவ்விடயம் தொடர்பாக ஜஸ்மின் சூக்காவிற்கும் அவரது அமைப்பிற்கும் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். குறிப்பிட்ட கடிதம் தொடர்பாக புலனாய்வு அதிகாரியின் சட்டத்தரணி பசன் வீரசிங்க தெரிவித்துள்ளதாவது, “மேஜர் ஜெனரல் சால்லேயிற்கு எதிராக பல்வேறு அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அறிக்கையொன்று வெளியிட்டுள்ளீர்கள். இவ்வாறு முன்வைக்கப்ப…
-
- 0 replies
- 327 views
-
-
அரச ஊடகம் பிரதமருக்கு ஆதரவாக பிரச்சாரம்- கபே குற்றச்சாட்டு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அரச ஊடகமொன்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றதென தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே குற்றம் சுமத்தியுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கபே இதனை குறிப்பிட்டுள்ளது. குறித்த கடிதத்தில் கபே தெரிவித்துள்ளதாவது, ‘பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 50 வருடகால அரசியல் வாழ்க்கை பற்றிய தொடர் நிகழ்ச்சிகளின் மூலம் குறித்த அரச ஊடகம் அவரை ஊக்குவிக்கின்றது. இது அரச வளங்களை தவறாக பயன்படுத்தும் நடவடிக்கை ஆகும். எனவே இவ்விடயத்தில் தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளது. http://athavannews.com/அ…
-
- 0 replies
- 195 views
-
-
கேகாலையில் பாரிய தீ விபத்து – 200 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை கேகாலை மத்திய வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக 200 வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன. கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேகாலை வர்த்தக மத்திய நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 4 மணியளவில் இவ்வாறு திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கேகாலை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விரைந்து செயற்பட்ட பொலிஸார் தீயணைக்கும் பணிகளை முன்னெடுத்தனர். இதன்போது கண்டி மற்றும் மாவனெல்ல தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த நிலையில், சுமார் 4 மணித்தியால போராட்டங்களுக்குப் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீப்பரவலி…
-
- 0 replies
- 213 views
-
-
கருணா யாரென்பது கிழக்கு மக்களுக்கு நன்றாகத் தெரியும் - அம்பாறையில் சுமந்திரன் கருணாவின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை . கருணா என்பவர் யார் என்று விஷேடமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு நன்றாக தெரியும்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற போது அண்மைக்காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சமந்திர்ன ஒரு அரசியல் வியாபாரி என கருணா விமர்சிப்பது தொடர்பில் ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். “கருணாவின்…
-
- 1 reply
- 500 views
-
-
வவுனியாவில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை வவுனியா, செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபுரம் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 10 வயது சிறுமி தினமும் காட்டுப்பகுதிக்கு அருகாமையில் உள்ள வீதியினூடாக செல்வதை தொடர்ந்து அவதானித்த நபர் ஒருவர் வீரபுரம் காட்டுப்பகுதியில் வைத்து சிறுமியை மறித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் வீரபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்து இன்று நீதிமன்றில் முற்படுத்தியதன் …
-
- 0 replies
- 344 views
-
-
இலங்கையில் 43 முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கள் உள்ளன இலங்கையில் 43 முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கள் செயற்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். உயிர்த்த பயங்கரவாள ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (13) சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘இலங்கையில் அடிப்படைவாத இஸ்லாமிய கொள்கைகளை கொண்ட தப்லிக் ஜமாஅத் வாதம், வகாப் வாதம், சலஃபி வாதம், ஜமாஅத்தே இஸ்லாம் ஆகிய பிரதான 4 குழுக்கள் காணப்படுகின்றது. அதாவது பல்வேறு பெயர்களில் பொருட்கள் தயாரிக்கப்பட்டாலும் அதற்கு கோதுமை மாவே பயன்படுத்தப்படும். அதேபோன்று இந்த குழுக்களும் வெவ்வேறு …
-
- 1 reply
- 408 views
-
-
கலட்டியில் பெண்களுடன் சேட்டைவிட்ட நால்வர் நையப்புடைப்பு யாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் வீதியால் செல்லும் பெண் பிள்ளைகளுடன் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் நால்வர் நையப்புடைக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (14) மாலை இடம்பெற்றுள்ளளது. கலட்டி வீதியால் செல்லும் பெண்களுடன் தொடர்ச்சியாக சேட்டையில் ஈடுபட்டுவந்த இளைஞர்களின் தொல்லை தாங்காமல், குறித்த பெண்கள் தமது உறவினர்களிடம் விடயத்தை தெரிவித்ததை அடுத்து குறித்த பெண்களின் உறவுக்காரர்களால் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் நையப்புடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் காயமடைந்த நால்வரும் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் த…
-
- 4 replies
- 666 views
-
-
வாள்வெட்டுத் தாக்குதல்கள் தொடர்பில் நாவற்குழியில் ஏழு பேர் கைது! யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏழு பேர் இன்று (14) மாலை நாவற்குழி பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். டிலு என்ற பெயருடைய வாள் வெட்டுக்கு குழுவின் தலைவர் எனக் கருதப்படும் நபர் ஒருவர் உடபட ஏழு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நாளை (15) சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். https://newuthayan.com/வாள்வெட்டுத்-தாக்குதல்/
-
- 0 replies
- 286 views
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய முயற்சி செய்த குற்றச்சாட்டில் இதுவரையில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் 2020 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராலும் பிரதமரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையில் 91 அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போதுவரையில் மொத்தமாக 106 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட…
-
- 5 replies
- 895 views
-
-
யாழில் கொரோனாவின் தாக்கத்தையடுத்து வேகமாகப் பரவும் காசநோய் யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், காச நோய் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நோய்த் தொற்றுடையவர்கள் 90 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதுடன், மேலும் 20 நோயாளர்கள் சமூகத்துடன் இணைந்துள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் பரவல் என்பது இலங்கையில் குறைந்தளவே காணப்படுகின்றது. இருப்பினும் பல்வேறு நாடுகளில் இவ்வைரஸின் தாக்கம் பெரிதளவில் காணப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் 3 தொற்று நோ…
-
- 1 reply
- 490 views
-
-
வாக்குச் சீட்டு அச்சிடும் பணி 50 சதவீதம் நிறைவு பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள், அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் நாட்களில் அச்சிடப்படும் என அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே கூறியுள்ளார். இம்முறை பொதுத் தேர்தலுக்காக ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படவுள்ளன. http://www.tamilmirror.lk/செய்திகள்/வககச-சடட-அசசடம-பண-50-சதவதம-நறவ/175-251878
-
- 14 replies
- 1.8k views
-
-
சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை…! திர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பில் சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தடுக்க காவல்துறையினர் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இதன்படி துண்டு பிரசுரங்கள், பிரசார சுவரொட்டிகள், வேட்பாளர் படங்கள், சின்னங்கள் மற்றும் கட்சியின் கொடிகளை காட்சிபடுத்துவது தொடர்பிலான விசேட செயற்பாடு ஒன்று இன்று (14) ஆரம்பிக்கவுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பதில் காவல்துறைமா அதிபரின் உத்தரவின் கீழ், இந்த நடவடிக்கையானது நாட்டிலுள்ள அனைத்து காவற்துறை பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்படவுள்ளது. வீதித் தடைகள், நடமாடும் சேவைகள் மற்றும் மோட்டார்சைக்கிள் போக்குவரத்தின் ஊடாக …
-
- 0 replies
- 385 views
-