ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகம் இன்றைய தினம் மின்குமிழ்கள் அணைக்கப்பட்ட நிலையில் எண்ணெய் விளக்கில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இது பற்றி தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவிக்கையில், இம் முறை இறந்தவர்களை பொது இடங்களில் நினைவில் கொள்வதை என்னையும் பிரதிவாதியாகக் கொள்ளப்பட்டு பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் வாயிலாக நீதிமன்றம் தடைசெய்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பினை நான் மதிக்கின்றேன். அதனை மீறமுடியாது. மீறுவது சட்டப்படியான குற்றமாகவுள்ளது. மேலும் தவிசாளரான எனக்கு எதிராக மாவீரர் தின பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளதாக புலனாய்வு அறிக்கையினைக் கொண்டு மல்லாகம் நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. …
-
- 1 reply
- 575 views
-
-
கொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியில் அண்மைக்காலமாக வழிப்பறிக் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகமாகியிருப்பது குறித்து அப்பகுதி மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக வெள்ளவத்தைப் பகுதியில் வழிப்பறிக் கொள்ளைகள் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் பெண்களே கொள்ளையர்களிடம் தங்கள் உடைமைகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்தஒரு சில தினங்களுக்குள் பெண்களின் தங்கச் சங்கிலிகள் அறுக்கப்பட்ட சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மோட்டார் சைக்கிளில் வருவோரே தனிமையில் செல்லும் பெண்களிடம் தங்கள் கைவரிசையைக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. பெண்கள் அணிந்து செல்லும் தங்கச் சங்கிலிகளை அறுக்கும் சம்பவங்களும் அவர்களது கைப்பைகளை அபகரித்து செல்லும் சம்பவங்களுமே அதிகமாக இடம்பெறுவதாகவும் தெர…
-
- 2 replies
- 881 views
-
-
ஆப்கானிஸ்தான் சிவில் சமூக தலைவா்கள் குழு கிளிநொச்சி பயணம் . ஆப்கானிஸ்தான் நாட்டைச் சோ்ந்த சிவில் சமூக தலைவா்கள் குழுவென்று இன்று திங்கள் கிளிநொச்சிக்கு வந்துள்ளனர். 35 போ் கொண்ட இந்த குழுவினா் கடந்த 28 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்து அநுராதபுரம்,கண்டி, கிளிநொச்சி என நாட்டின் பல மாவட்டங்களுக்கும் பயணம் செய்து வருகின்றனா். யுத்தத்திற்கு பின்னரான இலங்கையில் நிலைமைகள், சமாதான, நல்லிணக்க செயற்பாடுகள், அபிவிருத்தி நடவடிக்கைகள், மக்களின் கலாச்சார நிலைமைகள், பெண்களின் சமூக வகிபாகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை ஆராயும் வகையில் அவா்களது பயணம் அமைந்துள்ளது கிளிநொச்சிக்கு வந்த அவா்கள் பிற்பகல் மாவட்டச் செயலயத்திற்கு வருகை தந்து மாவட்…
-
- 0 replies
- 293 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலின் போது கவசப் போர் ஊர்தி (Tank) தாக்கியழிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 382 views
-
-
நிபுணத்துவமற்றவர்களை தொழில்நுட்பக் குழுவிலிருந்து நீக்கிவிடுங்கள் – நாடாளுமன்றத்தில் ஹக்கீம் சீற்றம் நிலைமை பாரதூரமானதாக இருப்பதால் எரிப்பது மட்டுமே ஒரே தீர்வு என்ற அரசாங்கத்தின் கொள்கையை மீளாய்வு செய்யுமாறும், அது சம்பந்தமான குழுவிலுள்ள நிபுணத்துவமற்றவர்களை நீக்கிவிடுமாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். வரவு – செலவுத் திட்டத்தின் நீதியமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு புதன்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது, கொவிட் – 19 வைரஸ் தொற்றினால் இறப்பதாக காரணம் காட்டி, மரணிப்பவர்களை எரிப்பது மட்டுமே ஒரே தீர்வு என்ற …
-
- 0 replies
- 574 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மகிந்த அரசாங்கம் ஒருபோதும் போர் நிறுத்தம் செய்யாது அவ்வாறான நோக்கம் எதுவும் இல்லை என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 381 views
-
-
யாழ் நகர்ப் பகுதியில் 4 வயதுச் சிறுமியை கடத்த முற்பட்ட இளைஞனை, நகர்ப்பகுதியில் கடமையிலிருந்த பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். இச்சம்பவம் யாழ்.மத்திய பஸ் நிலையத்தில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது; அச்சுவேலியில் இருக்கும் தங்கள் உறவினரைச் சந்திப்பதற்காக கொழும்பிலிருந்து இந்தச் சிறுமியும் அவரது பெற்றோரும் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் வந்திறங்கியுள்ளனர். பஸ்ஸிலிருந்து தமது இரு பெண் பிள்ளைகளையும் இறக்கிவிட்டு பஸ்ஸிற்குள் இருந்த பொருட்களை எடுக்கச் சென்ற வேளை பஸ்ஸிற்கு அருகில் நின்ற சிறுமியை இளைஞர் ஒருவர் தந்திரமாக பஸ் நிலையத்தின் பின்புறமாக உள்ள கடைத்தொகுதியூடாக கூட்டிச் செல்ல முற்பட்ட வேளை பஸ்ஸிலிருந்து பொருட்களு…
-
- 0 replies
- 592 views
-
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் இலங்கையைப் பொறுப்புக் கூற வலியுறுத்தல்: ITJP-JDS 58 Views இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சாவும் இராணுவத் தளபதி சர்வேந்திர சில்வாவும் காணாமற்போன நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் குறித்து சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டத்தின் படி பொறுப்பு கூற வேண்டியவர்கள் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் (ITJP) மற்றும் JDS அறிவித்துள்ளது. மேற் குறிப்பிட்ட இரு அமைப்புக்களும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “காணாமற்போனவர்கள் பற்றிய அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி இறுதிக் கட்டப் போரில் 330 தமிழர்களும் 1989 இன் இறுதிக் காலாண்டுப் பகுதியில் 154 சிங்களவர்கள் கா…
-
- 0 replies
- 400 views
-
-
உலகிலேயே மது அருந்துவோர் அதிகமாகவுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காம் இடத்தில்! By General 2013-04-12 10:30:28 உலகிலேயே மது அருந்துவோர் அதிகமாகவுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காம் இடத்தில் உள்ளது. எனவே நாட்டில் மதுவுக்கு 'முற்றுப்புள்ளி' என எப்படிக்கூறமுடியும் என தேசிய சங்க சமேளனத்தின் தலைவர் ரஜவத்தே வப்ப தேரர் கேள்வியெழுப்பியுள்ளார். பண்டிக்கைக்கு அன்று ஊருக்கு செல்லும்போது 'ஒரு கை வெற்றிலையுடனேயே செல்வார்கள். இன்று இரண்டு போத்தல் சாராயத்துடன் செல்லும் கலாசார சீரழிவு உருவாகியுள்ளதாகவும் தேரர் தெரிவித்துள்ளார். இது மதுவுக்கு 'முற்றுப்புள்ளி' என்பது இல்லை, இது மதுவுக்கு (கமா) என்றே கூறவேண்டும். அதாவாது, தொடர்கதையாகிவிட்டது என்று ரஜவத்தே வப்ப தேரர் குறிப்ப…
-
- 3 replies
- 938 views
-
-
குறிபார்த்து சுடுவதில் வல்லவரான சீனப்பிரஜை கொழும்பில் கைது. முக்கிய பிரமுகர்களை இலக்கு வைக்க திட்டமா? குறிபார்த்துச் சுடுவதில் தேர்ச்சி பெற்ற, பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய சீன பிரஜைஒருவர், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கையில் மிக முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்கு வைக்கத் திட்டமிட்டிருந்தாரா என்ற சந்தே கத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நி மா சி ரென் என்ற சீனரே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பிலுள்ள முன்னணி கசி னோ நிலையம் ஒன்றில் பணியாற்றியிருந்தார். முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றவே தாம் இலங்கை வந்ததாக குறிப்…
-
- 4 replies
- 358 views
-
-
சீனா மற்றும் ரஸ்யாவுக்கு சிறிலங்கா அரசாங்கம் நன்றி தெரிவிப்பு திகதி: 08.04.2009 // தமிழீழம் // [எல்லாளன்] ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு தொடர் கூட்டத்தில் சிறிலங்கா மனித உரிமைகள், இராணுவத்தினரின், அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்கள் என்பவை தொடர்பான சிறிலங்கா மனித உரிமை மீறல்களை சில நாடுகள் கொண்டுவர முற்பட்டபோது அதை தடுத்து, சிறிலங்காவுக்கு உதவி செய்தன ரஸ்யா மற்றும் சீனா அகிய நாடுகள். இந்த வகையில் சிறிலங்கா அரசாங்கம் நேற்று சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளுக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளது.நேற்று இதுதொடர்பாக பேசிய சிறிலங்கா பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க சீனாவும், ரஸ்யாவும், முழுமையாக தமது பயங்கரவாதத்திற்கு எதிரான படை நடவடிக்கைகளை ஆதரிப்பதாகவும், நட்பு நாடுகள் என்…
-
- 1 reply
- 877 views
-
-
அமெரிக்கத் தூதுவரின் செயற்பாடுகள் குறித்து இலங்கை அரசு அதிருப்தி! – விளக்கம் கோர தீர்மானம்!! இலங்கையின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஏ.சிஸன் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து இலங்கை அரசு அதிருப்தி அடைந்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரை கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து விளக்கம் கோருவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் வெளிநாட்டுச் செய்திச்சேவைகளின் செய்தியாளர்களைக் கடந்த வாரம் சந்தித்திருந்த கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் இலங்கையின் நிலவரங்கள் தொடர்பில் தனது கருத்துக்களைத் வெளிப்படுத்தியிருந்தார். அதேவேளை, மின் கட்டணங்கள் அதிக…
-
- 1 reply
- 646 views
-
-
தமிழர்களையோ முஸ்லிம்களையோ அடக்கி ஆள்வதற்கு நினைக்கவில்லை மட்டக்களப்பில் ஞானசார தேரர் தெரிவிப்பு (காங்கேயனோடை, வவுணதீவு, புதிய காத்தான்குடி நிருபர்கள்) தமிழர்களையோ முஸ்லிம்களையோ அடக்கி ஆள நாங்கள் நினைக்கவில்லை. நாட்டில் இன, மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பைச் சேர்ந்த ஞானசார தேரர் தெரிவித்தார். அரசாங்கம் இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பாடுபட்டு வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாடுபட்டு வருகின்றார். இந்த நல்லிணக்க முயற்சிக்கு நாம் ஆதரவு தெரிவிக்கின்றோம் என்றும் தேரர் சு…
-
- 0 replies
- 267 views
-
-
12/04/2009, 11:05 [ பதிவுச் செய்தியாளர் ] 48 மணிநேர போலி யுத்த நிறுத்தமும்: பெரும் தாக்குதல் திட்டங்களும்? மகிந்த அரசாங்கம் அனைத்துலக ரீதியாக தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை முறியடிக்கும் வகையில் போலியான 48 மணி நேர யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள முன்வந்துள்ளது. சிறீலங்காவின் உள்ளூர் ஊடகங்களை அழைத்து மனித அவலத்திற்கான யுத்தம் என்பதை வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் பரப்புரைகளை மேற்கொள்ளுமாறும் இதனால் அனைத்துலக ரீதியில் தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்களின் தாக்கங்கள் முறியடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 13-ஆம் நாளோ அல்லது 14-ஆம் நாளோ இந்த போர் நிறுத்தத்தை அரசாங்கம் அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ…
-
- 13 replies
- 2.6k views
-
-
அரசே விடுதலை செய்!! – அரசியல் கைதிகளுக்காய் கிளிநொச்சியிலும் போராட்டம் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி – பழைய கச்சேரிக்கு முன்பாக இன்று (5) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள். https://newuthayan.com/அரசே-விடுதலை-செய்/
-
- 0 replies
- 285 views
-
-
சுவிற்சர்லாந்தில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டுவந்த சுவிஸ் தமிழர் பேரவை இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணரின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு அந்நாட்டு காவல்துறையினர் அவரை வலுக்கட்டயமாக மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 520 views
-
-
பல்கலை மாணவர் விவகாரம் : சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் தை மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் பல்கலைக்கழக மாணவர் இருவர் யாழ் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பிலான வழக்கு இன்று யாழ் நீதவான நீதி மன்றில் பதில் நீதவான் வி.ரி. சிவலிஙகம் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பொலிஸார் தமது மேலதிக விசாரணை அறிக்கையை மன்றில் தாக்கல் செய்ததோடு, புலன் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் , அரச பகுப்ப…
-
- 0 replies
- 207 views
-
-
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொலை செய்யப்பட்டது குறித்த விசாரணையில் என்ன நடக்கக் கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் எதிர்பார்த்தார்களோ அது தான் நடந்திருக்கிறது. போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்த முடியாது என்று இலங்கை அறிவித்திருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. 2009-ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கைப் போரில் அனைத்துப் போர்க்குற்றங்களையும் கட்டவிழ்த்து விட்ட இராஜபக்சே அரசு, ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமாக தமிழர்களை கொடூரமாக கொன்றழித்தது. தமிழர்கள் படுகொலைக்கு நீதி விசாரணை கோரி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி …
-
- 0 replies
- 195 views
-
-
வன்னிப் பகுதிக்கான உணவு மற்றும் மருந்து விநியோகத்தை அரச தடுத்து வருவதனால் அங்கு பாரிய மனிதப் பேரவலம் ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனை அனைத்துலக சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 379 views
-
-
நோர்வே அகதிகள் கவுன்சிலும், ஐ.டி.எம்.சி எனப்படும் உள்நாட்டு இடம்பெயர்வைக் கண்காணிக்கும் மையம் என்ற அமைப்பும் சேர்ந்து வெளியிட்டுள்ள உலகளாவிய உள்நாட்டு இடப்பெயர்வு குறித்த அறிக்கையில் இலங்கையில் போரினால் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தோரின் நிலை இன்னும் முன்னேறவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. 2012 இறுதிவாக்கிலான , இலங்கை உள்நாட்டு இடம்பெயர்ந்தோர் நிலவரம் குறித்து சொல்கிறது நோர்வே அகதிகள் கவுன்சிலின் இந்த அறிக்கை. விடுதலைப்புலிகள் அரச படைகளால் தோற்கடிக்கப்பட்டு மூன்றாண்டுகளுக்கும் மேலான அந்த காலகட்டத்தில், இலங்கையில் சுமார் 93,000 பேர் அகதி முகாம்கள், உறவினர்கள் அல்லது நண்பர்களின் வீடுகள் மற்றும் இடம்விட்டு இடம் மாறிக்கொண்டிருக்கும் சூழ்நிலை ஆகிய நிலைகளில்தான் இருக்கி…
-
- 3 replies
- 520 views
-
-
வசமாக மாட்டிய சைக்கிள் திருடன் யாழ் நகரப் பகுதியில் சைக்கிள் திருடிய நபரொருவரை ஊர்காவற்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன் போது அவரால் களவாடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 30 சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த நபர் தொடர்பான இரகசியத் தகவல் பொலிஸாருக்குக் கிடைத்ததையடுத்து, சைக்கிள் ஒன்றினை பேருந்தின் மேல் பகுதியில் ஏற்றிக் கொண்டு வேலணையில் வந்திறங்கியவரை கடந்த சனிக்கிழமை ஊர்காவற்துறைப் பொலிஸார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வேலணைப் பகுதியில் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்ட துசைக்கிள்களை மீட்டனர். பல திருட்டுடன் தொடர்புடைய குறித்த சந…
-
- 0 replies
- 388 views
-
-
வடக்கு கிழக்கில், தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது January 30, 2021 வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொவிட் -19 நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர்கள் நால்வருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் போதனா வைத்தியசாலையில் வைத்…
-
- 0 replies
- 391 views
-
-
யாழில் விபத்து; மாநகர சபை பணியாளர்கள் 20பேர் படுகாயம்! யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான உழவு இயந்திரமொன்று விபத்திற்குள்ளானதில் 20 மாநகர சபை சுகாதாரப் பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். இன்று காலை நல்லூரிற்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தின் போதே உழவு இயந்திரத்தில் சென்ற 20 பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவ்விபத்துச் சம்பவத்திற்கான காரணம் உடனடியாக கண்டறியப்படவில்லை. எனினும் வேகக் கட்டுப்பாட்டை இழந்தே உழவு இயந்திரம் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர http://tamilleader.com/?p=12200
-
- 1 reply
- 495 views
-
-
கிழக்கு தொல்பொருள் ஜனாதிபதி செயலணியில் மேலும் 5 பெரும்பான்மையினர் நியமனம் கிழக்கு தொல்பொருள் ஜனாதிபதி செயலணிக்கு மேலும் 5 பேரை அரசாங்கம் நியமித்துள்ளது.புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மூத்த பேராசிரியர் அனுர மானதுங்க, காணி ஆணையர் நாயகம் கீர்த்தி கமகே, சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஆர்.டி.நந்தனா சேனதீர மற்றும் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அசின்சல சேனவிரத்ன ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் பெயர் பட்டியலொன்றினை சமர்ப்பித்திருந்தனர். அந்த பட்டியல் குறித்து அரசாங்கம் இதுவரை கவனம் செலுத்தவி…
-
- 0 replies
- 244 views
-
-
போரின் போது கனரக ஆயுதங்களைப் பாவிப்பதா இல்லையா என்பதை இராணுவத் தளபதியே தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி., இந்த விடயத்தில் அரசாங்கம் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது எனவும் கடுமையாகத் தெரிவித்திருக்கின்றது. கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திசநாயக்க இவ்வாறு தெரிவித்தார். அனைத்துலக அழுத்தங்களுக்கு தாம் அடிபணியப் போவதில்லை என அரசாங்கம் கூறுவதாகத் தெரிவித்த அநுரகுமார, ஆனால், போரின் போது கனரக ஆயுதங்களைப் பாவிக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்திருப்பதற்குக் காரணம் அனைத்துலக அழுத்தங்களே எனத் தெரிவித்தார். கனரக ஆயுதங்களைப் போர…
-
- 0 replies
- 363 views
-