ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
‘ரியாஜ் பதியுதீனின் கைது, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் புதிய பாய்ச்சல்’ AddThis Sharing Buttons அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனின் கைது மற்றும் அவர் மீது குற்றஞ்சுமத்தி, பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கை என்பன அரசியல் பழிவாங்கலுக்கான திட்டமிட்ட சதியென மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் கவலை தெரிவித்துள்ளார். இணக்கப்பாட்டு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் இன்றைய சூழல…
-
- 3 replies
- 1.1k views
-
-
கைவசம் போதுமானளவு பணம் இல்லை – குறைந்தளவு அத்தியாவசிய பொருட்களே கொள்வனவு April 16, 2020 (க.கிஷாந்தன்) காவல்துறை ஊரடங்குச்சட்டம் இன்று (16.04.2020) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு காலை வேளையிலேயே மக்கள் வருகைதந்து அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்தனர். ஏப்ரல் 9 ஆம் திகதிக்கு பிறகு இன்று காலையே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதால் அண்மைய நாட்களை விடவும் இன்று சனக்கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. ஆனால் கைவசம் போதுமானளவு பணம் இல்லாததால் குறைந்தளவிலேயே அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர். ச.தொ.ச விற்பனை நிலையங்கள், சுப்பர் மார்க்கெட்டுகள், சில்லறை மற்றும் மொத்த வியாபார நில…
-
- 0 replies
- 392 views
-
-
யாழில் ஊரடங்கு தளர்த்தும் சாத்தியமில்லை April 16, 2020 ”யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்த தற்போது சாத்தியமில்லை. வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த 4 மாவட்டங்களிலும் அடுத்த வாரம் முதல் ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க முடியும் என்று பரிந்துரைகளை வழங்கவுள்ளோம். அதுதொடர்பில் மாவட்டச் செயலாளர்களுடன் பேச்சு நடத்தப்படவுள்ளது” என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது; கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனி…
-
- 0 replies
- 303 views
-
-
புலம் பெயர்ந்த உறவுகளின் பலமே எம் தேசத்தின் பலமாக பார்க்கின்றோம். எனவே புலம் பெயர்ந்த உறவுகள் தனித்து இருந்து உங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று வியாழக்கிழமை (16) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தின் போது ஈழத்தமிழ் மக்களுக்கு பாரிய அளவில் பல்வேறு வகையிலும் உதவிகளையும், ஆதரவுகளையும் வழங்கிய புலம் பெயர்ந்த எம் உறவுகள் தற்போது உலகத்தையே ஆட்டிப்படைக்கின்ற கொரோனா வைரஸ் தாக்கத்தில் பாதீக்கப்பட்டும், உயிரிழந்தும் உள்ளனர். புலம் பெயர்ந்த எம் உறவுகள் …
-
- 2 replies
- 441 views
-
-
எம்மை விடவும் மிகவும் மோசமாக "கொவிட் -19" கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தியுள்ளது. மிகவும் வெற்றிகரமாக அவர்கள் தேர்தலை நடத்தியுள்ளனர். அவ்வாறு இருக்கையில் எம்மால் ஏன் தேர்தலை நடத்த முடியாது என கேள்வி எழுப்பும் இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால, தேர்தலை நடத்த 45 தினங்கள் அவகாசம் உள்ளது எனவே ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்தி நாட்டின் ஜனநாயக தன்மையை உருவாக்குவதே எமது நோக்கமாகும் என்றார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே தொழிநுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,தேர்தலை நடத்த முடியாத…
-
- 4 replies
- 571 views
-
-
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபா கூட இழுபறியிலேயே இருந்து வருகின்றது. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் ஏதேனும் ஒரு வழியில் உதவி வழங்கவேண்டும்." என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வீ.இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். அட்டனில் இன்று (16.04.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, "பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் என கொரோனா வருவதற்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கொரோனா தாக்கத்தால் அதனை வழங்க முடியாமல் இருப்பதாக தற்போது…
-
- 5 replies
- 783 views
-
-
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அனைவரும்,வெளிநாட்டுப் பணத்தை, இலங்கையில் வைப்பிலிட முடியும்… நாட்டினுள்ளும் நாட்டுக்கு வெளியேயும் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் தனிப்பட்ட வெளிநாட்டு பணத்தை சம்பாதிப்பதற்கும், சேமிப்பதற்கும் முதலிடுவதற்கும் தாம் விரும்பிய வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்கும் புதிய வங்கிக் கணக்கொன்று தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது விசேட வைப்புக் கணக்கு என பெயரிடப்பட்டுள்ளது. புதிய கணக்கு தற்காலிக அல்லது நிலையான வைப்புகளை செய்யக்கூடியதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. நாட்டினுள்ளும் நாட்டுக்கு வெளியேயும் வாழும் இலங்கையர்களுக்கும் இரட்டை பிராஜா உரிமையுள்ளவர்களுக்கும் ஏனைய நாடுகளில் வசிக்கும் இலங்கை பூர்வீகத்தை கொண்டவர்களுக்கும் இலங்கைக்கு வெளியே வேறு ந…
-
- 15 replies
- 1.6k views
-
-
இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது மட்டுநகர் எப்படியிருந்தது? மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளையில் மக்கள் தொடர்ச்சியாக முன்டியடித்துக்கொண்டு பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டதையும் நகரப்பகுதிகளில் சனநெரிசல் அதிகமாக கானப்பட்டது மருந்துக்கடைகளில் நீண்ட வரிசைகளில் மக்கள் நின்றதையும் சதொச நிலையங்களில் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் பொருட்கள் கொள்வனவில் அதிகளவான மக்கள் பங்கெடுத்திருந்தமை அவதானிக்க முடிந்தது. மரக்கறி வகைகளை கொள்வனவு செய்வதில் மக்கள் சமூக இடைவெளிகளை கடைப்பிடித்தமை அவதானிக்கமுடிந்தது. மட்டக்களப்பு நகரப்பகுதியில் மக்கள்நெரிசலை குறைப்பதற்காக நான்கு இடங்களில் மரக்கறிச் சந்தைகளை பிரித்து நான்கு பிரதேசங்களில் அமைக்கப்பட்டி…
-
- 0 replies
- 312 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மத்தி, வடக்கு பகுதிகளில் கொரோனா வைரஸ் அச்சம் அதிகரித்துள்ளது. கம்பஹா மாவட்டம், ஜா எல - சுதுவெல்ல பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான போதைப்பொருள் பாவனையாளர்கள் சிலரின் நடமாட்டம் மற்றும் தொடர்பாடல் வலையமைப்பை மையபப்டுத்தி கடற்படை உளவுப் பிரிவும் பொலிஸாரும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் இந்த விடயம் வெளிப்பட்டுள்ள நிலையில் முன் பாதுகாப்பு நடவடிக்கையாக இவ்விரு பகுதிகளிலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந் நிலையில் ஜா -எல தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, கொரோனா தொற்றாளர் ஒருவர் கொழும்பு வடக்கு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் நாகலகம் வீதி பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதால் நேற்று அப்பகுதி முற்றாக முடக்கப்பட்…
-
- 1 reply
- 502 views
-
-
பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று (16.04.2020) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு காலை வேளையிலேயே மக்கள் வருகைதந்து அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்தனர். ஏப்ரல் 9 ஆம் திகதிக்கு பிறகு இன்று காலையே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதால் அண்மைய நாட்களை விடவும் இன்று சனக்கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. ஆனால் கைவசம் போதுமானளவு பணம் இல்லாததால் குறைந்தளவிலேயே அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர். ச.தொ.ச விற்பனை நிலையங்கள், சுப்பர் மார்க்கெட்டுகள், சில்லறை மற்றும் மொத்த வியாபார நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருந்து, அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்தனர். மருந்தகங்களுக்கு முன்னாலும் நீ…
-
- 1 reply
- 444 views
-
-
தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி குறித்த கூட்டம் இடம்பெவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தொற்றால் பிற்போடப்பட்டுள்ள பொதுத் தேர்தல் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த கலந்துரையாடலின் பின்னர், சுகதார அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினருடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுத்தேர்தலினை நடாத்தும் தினம் குறித்த சர்ச்சை நீடித்து வரும் நிலையில் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/சர்ச்சைகளுக்கு-மத்தியி-8/
-
- 0 replies
- 278 views
-
-
கொரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்கொண்ட தலைவர்கள் பட்டியலில் நியுசிலாந்து பிரதமர் ஜெர்சிண்டா ஆர்டன் முதலிடம் பிடித்துள்ளார். சிங்கப்பூர் , ஐஸ்லாந்து ,ஒஸ்ரியா , பின்லாந்து ,நோர்வே கனடா ,தென்கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் முதல் ஏழு இடங்களை பிடித்துள்ள அதேவேளை எட்டாம் இடத்தை ஹொங்கொங் நாட்டின் தலைவரும் 9 வது இடத்தை இலங்கையின் தலைவரும் பிடித்துள்ளனர். அவுஸ்ரேலியாவை தளமாக கொண்டு இயங்கும் ஐ சி எம் ஏ நிறுவனம் வெளியிட்டுள்ள தரப்பட்டியலில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய பிரதமருக்கு 38 வது இடமும் அமெரிக்க அதிபருக்கு 70 வது இடமும் பிரிட்டன் பிரதமருக்கு 88 வது இடமும் இந்த பட்டியலில் கிடைத்துள்ளது. https://www.madawalaenews.com/2020/04/9…
-
- 1 reply
- 458 views
-
-
இந்தியாவிலிருந்து கடற்பரப்பு ஊடாக யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதைக் கண்காணிப்பதற்கு மேலதிக படையினரை தங்க வைப்பதற்கு கடற்படையினரால் கோரப்பட்டதற்கு அமைய மாதகல் நுணசை வித்தியாலயம் வழங்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மாதகல் நுணசை வித்தியாலயத்துக்கு இன்று புதன்கிழமை கடற்படையினர் அழைத்துவரப்பட்டனர். அதனால் பாடசாலையைச் சூழவுள்ள பகுதியில் வசிக்கும் மக்களிடையே பதற்ற நிலை ஏற்பட்டது. கொரோனா வைரஸ் தொடர்பான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படப்போவதாக அந்தப் பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டனர். மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள பாடசாலையில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படுவது தடுக்கப்படவேண்டும் என…
-
- 5 replies
- 970 views
-
-
(நா.தனுஜா) உலக சுகாதார ஸ்தாபனத்திற்கான நிதியுதவியை இடைநிறுத்துவது இலங்கை போன்ற நாடுகளை வெகுவாகப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எனவே மனிதாபிமான ரீதியில் இத்தீர்மானத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, உலக சுகாதார ஸ்தாபனத்திற்கான நிதியுதவி வழங்கலைத் தொடருமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதுகுறித்து முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு இன்றைய தினம் கடிதமொன்றை அனுப்பியிருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, உலக சுகாதார ஸ்தாபனத்தின் மீது ஐக்கிய அமெரிக்காவினால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள…
-
- 2 replies
- 423 views
-
-
ஐரோப்பாவில் குளிர் விலகியது. இரவும் இருளும் குறைந்து பகலும் வெளிச்சமும் நீளத் தொடங்கிவிட்டது. மரங்கள் துளிர்விடவும், அரும்புகள் மலரவும் வேனிற்காலம் ஆரம்பமாகிவிட்டது. கொண்டாட்டம் நிறைந்த பண்டிகைக் காலத்தில்மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தார்கள் என்பதில் அரசுகளும், அதிகாரிகளும் நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில், எல்லாவற்றையும் புரட்டிப் போட்டிருக்கிறது கோரோனா கோவிட் - 19 என்னும் நுன் உயிரி. கொரோனா வைரஸுக்கு எதிரான போர் என்ற வகையில்லேயே அதற்கான தடுப்பு முயற்சிகளை ஐரோப்பிய நாடுகள் எடுத்திருந்தன. இதில் வேடிக்கையும் வேதனையும் என்னவென்றால், நாடுகளுடனான சண்டையில், மனிதர்களைக் கொன்று குவிப்பதற்காக, ஆயுதத் தளவாடங்களைச் சேகரித்து வைத்த அத்தனை நாடுகளும், வைரசுக்கு எதிரா…
-
- 0 replies
- 595 views
-
-
இராஜதுரை ஹஷான் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாட்டுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயார் என ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் தெரிவித்தனர். அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று அலரிமாளிகையில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. இந்த சந்திப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்ரேலியா, கனடா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் ஆகியோரும் கலந்துக் கொண்டார்கள். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் முன்னெடுக்கும் செயல்பாடுகள் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு வழ…
-
- 0 replies
- 260 views
-
-
நாட்டில் நிலவும் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி சுகாதார அமைச்சின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதோடு இந்த தருணத்தில், நோய் தொற்றின் அபாயத்தை குறைப்பதற்காக வைத்தியர்கள் அருகில் செல்லாமல் தொலைவில் இருந்து அவதானிக்கக்கூடிய கெமராக்கள், WiFi ரவுட்டர்கள், சாதாரண தொலைபேசிகள், மற்றும் CDMAதொலைபேசிகள் உள்ளிட்ட உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த இணைப்புத் தீர்வுகள் தொற்றுநோய்க்கான அபாயத்தைக் குறைப்பதற்காக நன்கொடையாக வழங்கப்பட்டன, மேலும் கோவிட் -19 மேலும் பரவுவதை எதிர்ப்பதற்காக செயல்படுத்தப்பட்ட அரசாங்கத்தால் கட்டளையிடப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளுடன் மருத்துவ ஊழியர்களை மேலும் ஆதரிக்கின்றன. கொவிட் -19 நோயாளிகளு…
-
- 2 replies
- 579 views
-
-
கொரோனாவை விரைவாகக் கண்டுபிடிக்க உதவும் ரபிட் ரெஸ்ற் கிற் உற்பத்தி உள்நாட்டில் தொடங்கியது by : Litharsan கொரோனா வைரஸ் தொற்றை விரைவாகக் கண்டுபிடிக்க உதவும் ரபிட் ரெஸ்ற் கிற்றுகளைத் (Rapid Test Kit) தயாரிக்கும் பணியில் இரண்டு இந்திய நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் உரிமங்களைப் பெற்று டெல்லியில் உள்ள வன்கார்ட் டயக்னொஸ்ரிக்ஸ் (Vanguard Diagnostics) என்ற நிறுவனமும், கேரளாவில் உள்ள இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் லேற்றக்ஸ் நிறுவனமும் ரபிற் ரெஸ்ற் கிற்றுக்களின் உற்பத்தியை தொடங்கியுள்ளன. இந்துஸ்தான் லேற்றக்ஸ் நிறுவனம் இன்னும் 4 அல்லது 5 தினங்களில் ஒரு இலட்சம் கிற்றுக்களை வ…
-
- 4 replies
- 494 views
-
-
(ஆர்.யசி) கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த நாட்டில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சகலருக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது அவர் இவற்றை கூறினார். இது குறித்துஅவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் துறையினர் தமது பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு அரசாங்கத்திற்கு பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். தமக்கான நிவாரண கொடுபனவுகளை வழங்க வ…
-
- 3 replies
- 567 views
-
-
இறுதிசடங்குகள் குறித்த உரிமைகளை மதிக்குமாறு இலங்கை ஜனாதிபதிக்கு வேண்டுகோள்விடுத்துள்ள ஐநா முஸ்லீம்களிற்கு எதிரான குரோத பேச்சுக்களை கட்டுப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. ஐநாவின் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்திற்கான விசேட அறிக்கையாளர் அஹமட்சஹீட் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். மார்ச் 31 ம் திகதி இலங்கையின் சுகாதார அமைச்சு கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உடலை எந்த காரணத்திற்காகவும் கழுவக்கூடாது,மூடப்பட்ட பையினுள் வைத்து அதனை பிரேதப்பெட்டிக்குள் வைக்கவேண்டும்,உடல்களை எரிக்கவேண்டும்,என தெரிவிக்கப்படுவதை அவ…
-
- 18 replies
- 1k views
-
-
‘ஊரடங்கைத் தளர்த்தக் கூடாது’ கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளது என்பதை கருத்தில் கொண்டு, தற்போது நாடளாவிய ரீதியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமந்த ஆனந்த, கொரோனா வைரஸ் நோய், மற்றைய நாடுகளைப் போன்று, இலங்கையில் பரவவில்லை என்பது உண்மை என்றும் மற்றைய நாடுகளில் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தாலும் இலங்கையில் இப்போதைக்கு 7 நோயாளிக…
-
- 0 replies
- 266 views
-
-
பூஸா முகாமிலிருந்து 11 பேர் வெளியேறினர் பூஸா கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல மத்திய நிலையத்தில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 11 பேர், தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இன்று (16) வீடு திரும்பியுள்ளனர். குறித்த நபர்கள் அனைவரையும் பீ.சீ.ஆர் சோதனை மேற்கொண்டதன் பின்னரே, வீடுகளுக்குச் செல்ல அனுமதித்துள்ளனர். அத்துடன், தனிமைப்படுத்தலை நிறைவு செய்தமைக்காக அவர்களுக்கு கடற்படையினரால் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. பூஸா தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து இதுவரை 68 பேர் வெளியேறியுள்ளத…
-
- 0 replies
- 311 views
-
-
கொரோனா தொற்று காரணமாக, வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்கள் சிலர், தம்மை மீண்டும் இலைங்கைக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இலண்டன், இந்தியா, டுபாய், மாலைத்தீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த இலங்கையர்கள் சிலரே இவ்வாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்தியாவில்; 600க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் உயர் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், மே மாதம் 3ஆம் திகதி வரை இந்தியாவில் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதால் தாம் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இந்த மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளிகள் மூலம் பதிவிட்டுள்ளனர். அதேப்போல் விசேட வைத்திய பயிற்சிக்காக பிரித்தானியாவுக்குச் சென்றுள்ள 85 இலங்கையைச் சேர…
-
- 6 replies
- 601 views
-
-
5 ஆயிரம் ரூபா கிடைக்கவிருப்போர் இவர்கள்தான் Leftin April 16, 2020 5 ஆயிரம் ரூபா கிடைக்கவிருப்போர் இவர்கள்தான்2020-04-16T12:47:31+00:00Breaking news, உள்ளூர் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வருமானமின்றியிருப்போருக்காக அரசாங்கம் வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை முச்சக்கரவண்டி சாரதிகளுக்கும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேபோன்று பாடசாலை மாணவர் வாகன சாரதிகளுக்கும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதனிடையே, பாடசாலை விடுமுறை காலத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸ் அல்லது வேன் உரிமையாளர்கள், பெற்றோர்களிடம் மாதாந்தக் க…
-
- 0 replies
- 328 views
-
-
தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலைக்கு சிலரை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு 29 பேர் படுகாயம்! வரக்காபொலவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர். வரக்காபொலவில் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்குநேர் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து கொரோனா தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலைக்கு சிலரை ஏற்றிச் சென்ற கடற்படைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். http:…
-
- 0 replies
- 234 views
-