Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (ஆர்.யசி) கொரோனா வைரஸ் பரவலை அடுத்து எதிர்வரும் காலங்களில் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் ஆகவே தேசிய உணவு உற்பத்தியை அதிகரித்து அடுத்து வரும் காலங்களில் உணவுத் தேவையை பூர்த்திசெய்ய வேண்டியுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது. அதற்கேற்ப தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதாவும் கூறுகின்றது. உலகளாவிய ரீதியில் "கொவிட்-19" என அடையாளப்படுத்தப்படும் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் இலங்கை உள்ளிட்ட சகல நாடுகளுக்கும் உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலைமை உருவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சுகாதார பணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சகல நாடுகளும் தமக்கான உணவு சேமிப்பில் அதி…

    • 1 reply
    • 240 views
  2. வட மாகாண மக்களுக்காக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார உள்ளிட்ட குழுவினர் 1.6 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளனர். வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இந்த நிதியுதவித் தொகையை வழங்கி வைத்தார். பத்தரமுல்லையிலுள்ள வட மாகாண ஆளுநர் உப காரியாலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, என குமார் சங்கக்கார குறிப்பிட்டார். http://www.vanakkamlondon.com/kumar-sangakkara-27-03-2020/

    • 7 replies
    • 786 views
  3. அம்பாறை - அக்கரைப்பற்று வீதியில் அமைந்துள்ள பதுர்நகர் பதுர் பள்ளிவாசலில் வைத்து கைதான 16 பேரில் 11 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு இஷா தொழுகை நேரம் குறித்த பள்ளியின் முன்னால் ஒன்று கூடி இருந்த சிலர் அவ்வழியால் வந்த இராணுவத்தினரைக் கண்டு பள்ளிவாசலினுள் நுழைந்துள்ளனர். இதன்போது பள்ளிவாசலுக்குள் சென்ற இராணுவத்தினர் மறைந்திருந்த 16 முஸ்லிம்களை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த நிலையில் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட16 பேரில் ஐவர் விடுதலை செய்யப்பட்டு தற்போது 11 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ…

    • 1 reply
    • 565 views
  4. (ஆர்.ராம்) 2020 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி 3.6 சதவீதம் குறைந்துp;">1,931 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. என்று ஏற்றுமதி அபிவிருத்தி சபைp;">தெரிவித்துள்ளது.</span></p> நாட்டில் கொரோனா வைரஸ் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பே இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகவும்p;">ஏற்றுமதி அபிவிருத்தி சபை சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், இலங்கை ஏற்றுமதியாளர்கள் 174 நாடுகளுக்கு 2,429 தயாரிப்புகளைp அனுப்புவதாகவும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை குறிப்பிட்டுள்ளது. மேலும், இலங்கைளின் ஏற்றுமதிகளை அமெரிக்கா 260 மில்லியன் டொலர்களுக்கும் இங்கிலாந்து, 95 மில்லியன் டொலர்களுக்கும், இந்தியா 73 மில்லியன் டொலர்களுக்கும், ஜெர்மனி 51 மில்லியன் டொல…

    • 1 reply
    • 357 views
  5. வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்தால் வறுமை கோட்டுக்குள் வாழும் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கும் மனிதாபிமான பணி முன்னெடுக்கபட்டுள்ளது . கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழுநாடும் ஊரடங்கு நிலையால் முடங்கி போயுள்ள நிலையில் தினக்கூலிகளாக நாளாந்தம் உழைத்து உண்ணும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்கள் மிகவும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அந்த வறுமை நிலையை போக்கும் நோக்கோடு முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்தால் இந்த மனிதாபிமான நிவாரண பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது . இதன் முதற்கட்டமாக இன்றைய தினம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 27 கிராம அலுவலர் ப…

    • 2 replies
    • 425 views
  6. Editorial / 2020 மார்ச் 27 , பி.ப. 05:07 - 0 - அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்துக்கு அமைய டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 191 http://www.tamilmirror.lk/செய்திகள்/இலஙக-ரபயன-பறமத-மலம-வழசச/175-247503 ஏப்ரல் 10 ஆம் திகதி முன் சம்பளம் Editorial / 2020 மார்ச் 26 , பி.ப. 10:57 - 0 - 24 ஏப்ரல் மாதம் பத்தாம் திகதிக்கு முன்னர் அரச துறையினருக்கான மாத சம்பளம் செலுத்தப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஏப்ரல்-10-ஆம்-திகதி-முன்-சம்பளம்/175-247493

    • 3 replies
    • 872 views
  7. -நிதர்ஷன் தன்னார்வலர்களை முடக்குவது, பட்டினிச்சாவு சூழலையே ஏற்படுத்தும் என, யாழ். ஊடக அமையம் அறிக்கையொன்று வெளியிட்டு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கை முழுவதும் கெரோனோ வைரஸ் தாக்கம் தொடர்பிலான எச்சரிக்கையும் விழிப்புணர்வும் முடுக்கிவிடப்பட்டுள்ள அதேவேளை அரசினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மக்களை முற்றாக வீடுகளுக்குள் முடக்கிவிட்டுள்ளது. அரசினது இத்தகைய அறிவிப்புக்கு வடக்கு மாகாணமும் விதிவிலக்கல்ல. ஆனாலும் மக்களை வீடுகளுள் இருக்குமாறு அரசு அறிவித்துவருகின்ற போதும் வீடுகளுள் அகப்பட்டிருக்கும் மக்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற அன்றாடங்காய்ச்சி குடும்பங்களது நிலை நாளுக்கு நாள் மோசமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்க…

    • 2 replies
    • 477 views
  8. கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் இடர் நிலைமைக்குள்ளான குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு மேலும் பல பண மற்றும் பொருள் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன. ஒரே தடவையில் வழங்கப்படும் கொடுப்பனவாக 5000 ரூபாவை வழங்குவதன் மூலம் அவர்கள் முகம்கொடுத்துள்ள பொருளாதார கஷ்டங்கள் தணியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அத்தியாவசிய சேவைகளை வழமையான ஒழுங்கில் பேணுவதற்காக தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிவாரணங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் விதம் குறித்து விளக்கும் சுற்றுநிருபமொன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர அவர்களின் கையொப்பத்துடன் இன்று வெளியிடப…

  9. உலகப் பிறழ்நிலையை சாதகமாக்கி அசட்டைத் துணிவுடன் தமிழர்கள் மீது தொடரும் தாக்குதல்- துரைராசசிங்கம் by : Litharsan சர்வதேசப் பொறிமுறையை இலங்கைக்கு எதிராக தாமதிக்காது செயற்படுத்த வேண்டும் என்ற செய்தியை மிருசுவில் படுகொலை குற்றவாளியின் விடுதலை வெளிப்படுத்துவதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனாவினால் உலகமே இயல்பான இயங்குநிலையில் இல்லாததைச் சாதமாக்கிக் கொண்டு அசட்டைத் துணிவுடன் தான் நினைத்ததையெல்லாம் ஜனாதிபதி செய்ய முடியும் என்று காட்டுகின்ற ஒரு அபாய விளக்கு இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார். மிருசுவில் படுகொலை தொடர்பாக தண்டனை வழங்கப்பட்டவரை ஜனாதிபதி ப…

    • 1 reply
    • 617 views
  10. (எம்.மனோசித்ரா) இத்தாலியில் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து இலங்கை பத்திரிகைகளில் வெளிவரும் சில செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான இத்தாலி தூதரகம் தெரிவித்துள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து இலங்கை பத்திரிகைகளில் வெளிவரும் சில செய்திகள் தொடர்பாக இத்தாலி தூதரகம் தெளிவுபடுத்த விரும்புவதாகத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனைத் தெரிவித்திருக்கும் தூதரகம் அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது : இத்தாலியின் ஒரு சில பகுதிகளில் மிகப் பெரிய எண்ணிக்கையிலான உடல்கள் அடக்கம் செய்யப்பட்டதாகவும் இத்தாலி மக்கள் நிர்வாணமாகவும் மத சடங்குகள் செய்யப்படாமலும் புதைக்கப்படுகின்றனர் என்று வெளியான செய்தி…

    • 1 reply
    • 823 views
  11. (எம்.எப்.எம்.பஸீர்) கண்டி, அக்குரணை பகுதியில் இந்தியா சென்று திரும்பிய கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அந்த தொற்றாளர்களின் நெருங்கிய தொடர்புகள், சென்றுவந்த இடங்களை ஆராய்ந்த சுகாதார தரப்பும் பாதுகாப்புத் தரப்பும், அக்குரணை நகரை முற்றாக இன்றுமுடக்கின. கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் பரவுவதை தடுப்பதை நோக்காக கொண்டு அந்த நகரம் முற்றாக வெளித் தொடர்புகளில் இருந்து முடக்கப்பட்டதாகவும், அங்கு உள் நுழையவோ வெளிச் செல்லவோ எவருக்கும் அனுமதியளிக்கப்படாது எனவும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்தனர். ஏற்கனவே டுபாய் சென்று திரும்பிய நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு அதன் பரவலை கருத்தில் கொண்டு களுத்துறை, பண்டாரகம பொலிஸ் பிரிவி…

  12. கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில், கொழும்பு - ஐடீஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்களில் ஒருவர், இன்று (30) மாலை, உயிரிழந்துள்ளார். அந்த வகையில், கொரோனா வைரஸ் தொற்றால், இலங்கையில் இரண்டாவது மரணம், இன்று -30- சம்பவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஐடீஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட, 65 வயதுடைய மொஹமட் ஜமால் என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று, சுகாதார அமைச்சு தெரிவித்தது. தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்ற நீர்கொழும்பு - போரதொட்ட பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மேற்படி நபர், நெஞ்சுவலி என்று கூறிக்கொண்டு, நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு, சிகிச்சைக்கா…

    • 0 replies
    • 385 views
  13. பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் இரத்து – பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படுவதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ‘கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையில் அதிகளவானவர்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடுவது பொருத்தமற்றதொரு செயற்பாடாகும். அதனடிப்படையிலேயே பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தினையும் இரத்துச் செய்யும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், பரிசுத்த வாரமாக கடைப்பிடிக்கப்படும் இந்த வாரத்தில் திங்கள், வியாழன், பெரிய வெள்ளி…

    • 2 replies
    • 491 views
  14. நாட்டின் சில பகுதிகளில் இன்று காலை தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலேயே இன்று(திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது. இந்தநிலையிலேயே இன்று நண்பகல் 2 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன், மீண்டும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நாள் குறித்த அறிவிப்பு இதுவரையில் வெளியிடப்படவில்லை. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்த காலப்பகுதியில் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இதன்போது மன்னார், வவுனியா, மட்டக்களப்பு ம…

  15. மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 15 வயது சிறுமியொருவர், சிறிய தந்தையினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 8 மாத கர்ப்பணியாக இருக்கும் குறித்த சிறுமி, சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த சிறுமியின் வீட்டை முற்றுகையிட்ட அதிகாரிகள் சிறுமியை மீட்டுள்ளனர். கொழும்பில் இருக்கும் சிறியதந்தையின் வீட்டுக்கு தனது தாயுடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் சிறுமி சென்ற நிலையில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, …

  16. கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு வறிய மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாக சமுர்த்திப் பயனாளிகளுக்கு முற்பணமாக 10 ஆயிரம் ரூபா நிதியை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து செல்வதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருப்பதால் நாளாந்தம் வருமானம் பெற்று தமது குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்து வந்த பல குடும்பங்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் அவர்கள் தமது அத்தியாவசிய தே…

  17. ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 10 இற்கும் மேற்பட்டோர் வவுனியா செட்டிகுளத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 20 இற்கும் மேற்பட்டவர்கள் ஒரு வீட்டில் கிறிஸ்தவ மத போதகர் ஒருவரின் தலைமையில் ஒன்று கூடி மத நடவடிக்கையில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்தப்பகுதி மக்களால் காவல் துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற காவல்துறையினர் மத போதகர் உள்ளிட்ட 10 இற்கும் மேற்பட்டோரை கைது செய்திருப்பதாக அறிய முடிகிறது. மேற்படி சம்பவம் வவுனியா செட்டிகுளம் முதலியார் குளம் ஐந்தாம் ஒழுங்கையில் இடம்பெற்றுள்ளது. http://www.newjaffna.com/2020/03/29/13246/

    • 9 replies
    • 1.5k views
  18. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில் மருத்துவ சுகாதார சேவையாளர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள், முகக்கவசங்கள், பரிசோதனைக் கருவிகள், சனிட்டைஸர்கள், பாதுகாப்புக் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை பெரும் எண்ணிக்கையில் சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் முன்வரிசையிலுள்ள மருத்துவ மற்றும் சுகாதார சேவையாளர்களுக்கான 1000 பாதுகாப்பு அங்கிகளை சீனா மேர்சன்ட்ஸ் போர்ட் குழுமம் நன்கொடையாக வழங்கியிருக்கிறது. அதுமாத்திரமன்றி ‘சவால் மிக்க தருணத்தில் இதயபூர்வமான உதவி’ என்ற அடிப்படையில் 50 ஆயிரம் முகக்கவசங்கள், 1000 பரிசோதனைக் கருவிகள் சுகாதார அமைச்சிடம் நன்கொடையாக சீனாவி கையளித்துள்ளது. …

    • 3 replies
    • 487 views
  19. (எம்.எப்.எம்.பஸீர்) 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலை முன்னெடுக்க தற்கொலை தாக்குதல்தாரியை அழைத்துச் சென்று வழிநடத்தியதாகக் கூறப்படும் முக்கிய சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சியோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்திருந்ததுடன், 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 21/4 - 2019 உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பிரதான குற்றவியல் விசாரணைகளில் பிரதான சந்தேக நபர் ஒருவர் இன்று சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி வீதி, கல்கிசை எனும் ம…

    • 2 replies
    • 405 views
  20. தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டுள்ள கொடிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழ்மக்களின் பழக்க வழக்கங்களை பின்பற்றவேண்டுமென சிங்கள பெள் த்த பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார். பொகவந்தலாவ பிரதேசத்திலுள்ள பௌத்த பிக்கு ஒருவரே இவ்வாறு தெரிவித்துள்ளதாக அவர் உரையாற்றும் வீடியோ சமுக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது. இதன்படி தமிழ் மக்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் கலாசாரங்களைப் பின்பற்றினால் கொரோனாவை தடுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். குறித்த பிக்கு தமிழ் மொழியை பூரணமாக கற்று தற்போது தமிழ் மொழியில் மக்களுக்கு ஆலோசனையை தெரிவித்துவருகின்றார். அவர்தான் தற்போது கொரோனா வைரஸ் பற்றிய தனது கருத்தை பதிவிட்டிருக்கின்றார். VIDEO: https://www.fac…

    • 3 replies
    • 584 views
  21. கோவில்கள் தொடர்பில் பரப்பப் பட்ட விடயங்கள் வதந்தி என பொலிஸார் தெரிவிப்பு. நல்லூர் கந்தசுவாமி கோவில் , திருகோணமலை கோணேஸ்வரம் – இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில்களில் கலசம் சரிந்து – சிலைகள் உடைந்ததாக பரப்பப்படும் தகவல்கள் வதந்தியென பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு சிலைகள் சரிந்ததால் ஆண்கள் மஞ்சள் நீராடவேண்டுமெனவும் , இவை நாட்டுக்கு நல்லதல்லவெனவும் திட்டமிட்டு வதந்திகளை யாரோ பரப்பியிருப்பதாக தெரிகிறது. இப்படியான போலி செய்திகளை – வதந்திகளை பரப்புவோர் கைது செய்யப்படுவார்களென பொலிஸார் தெரிவித்தனர். மக்களை குழப்பமடையச் செய்வோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவிக்…

    • 22 replies
    • 1.4k views
  22. கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி ஐ டி எச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தஒருவரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாரவில பகுதியை சேர்ந்த 60 வயதுடைய குறித்த நபர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மேலும் மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 7 பேர் கொரோனா வைரஸ் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கொரோனா-வைரஸ்-தாக்கம்-முத-2/

    • 1 reply
    • 562 views
  23. புத்தளம் கடையன் குளம் மற்றும் கண்டி அக்குரணை பகுதியில் உள்ள இரண்டு ஊர்களையும் முழுமையாக முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மனற-ஊரகள-மடககம/150-247573

    • 3 replies
    • 394 views
  24. பதுளையின் பிரதான 4 நகரங்களுக்கு நாளை பூட்டு Editorial / 2020 மார்ச் 29 , பி.ப. 10:18 - 0 - 26 பதுளை மாவட்டத்தில் நாளை (30) ஊடரங்கு உத்தரவை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதிலும், வெலிமடை, பண்டாரவளை, ஹப்புத்தளை, தியத்தலாவை ஆகிய நான்கு நகரங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு குறித்த பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, பண்டாரவளை பொலிஸ் அதிகாரி அதுல டீ சில்வா தெரிவித்துள்ளார். அதிகளவு மக்கள் கூடுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/பதளயன-பரதன-4-நகரஙகளகக-நள-படட/175-247617

    • 0 replies
    • 225 views
  25. (எம்.ஆர்.எம்.வஸீம்) ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்போதும் கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் தென்படும்பட்சத்திலும் முஸ்லிம்கள் சட்டத்தை மதித்து செயற்படவேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது. பொலிஸ் தலைமையகம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஊரடங்குச் சட்டம் அமுலிலிருக்கும் போது வீட்டைவிட்டு வெளியில் செல்வதை முற்றுமுழுதாகத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். அத்தியவசிய பொருட்களை வீட்டுக்கு விநியோகம் செய்யும் முறையினூடாகப் பெற்றுக் கொள்ளல் அரசு அனுமதித்துள்ள நிறுவனங்களின் பெயர்பட்டியல் ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஊரடங்குச் …

    • 0 replies
    • 418 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.