ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142956 topics in this forum
-
இலங்கை படையினரிடம் ஐ.நா வின் எதிர்பார்ப்பு இதுவா.? ஐ.நா அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பும் போது, அவர்கள் எந்த பாலியல் துஷ்பிரயோகத்திலும் தொடர்புபடவில்லை என்பதை உறுப்பு நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும் என ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பாலியல் துஷ்பிரயோகங்களில் தொடர்புபடவில்லை என்பதை ஒவ்வொருவரையும் ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், இலங்கையிடம் இதனையே ஐ.நா எதிர்பார்க்கிறது என்றும் குறிப்பிட்டார். ஹெய்டியில் சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டு இலங்கை படையினர் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஐ.நா அமைதிகாப…
-
- 0 replies
- 214 views
-
-
யாழ். மாநகரில் பொலித்தீனுக்குத் தடா : பூமி தினமான நாளை முதல் நடைமுறைக்கு பூமி தினமான நாளை சனிக்கிழமை முதல் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில், பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களின் பாவனையை முற்றாகத் தடை செய்யவேண்டும். உணவுச்சாலைகளிலும், திருமண மண்டபங்களிலும் இவற்றின் பாவனையை இல்லாதொழிக்கவேண்டும். இவ்வாறு யாழ்ப்பாண மாநகர சபையினால் அனுப்பப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாண சபை எடுத்துக் கொண்ட தீர்மானத்துக்கு அமையவும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் சூழல்நேய நடவடிக்கைகளுக்கு வலுச் சேர்க்கவும் இந்த நடவடிக்கையில் சகலரும் இணைந்து கொள்ளவேண்டும். நாளாந்த பாவனையி…
-
- 4 replies
- 916 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி. June 23, 2021 செவ்வாய்க்கிழமை (22-06-2021) நாடாளுமன்றில் தமிழர் தரப்பின் குரலாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் நாமல் ராஜபக்ச 22-06-2021 பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையில், ‘பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி. அதை விடுத்து இந்த விடயத்தை உங்கள் அரசியல் லாபங்களுக்கு பாவிக்காதீர்கள் எனத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 232 views
-
-
போரினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுடைய நிலைமைகளை மேம்படுத்துவதற்காகவே அனைத்துலக நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ள நிதியை சிறிலங்கா அரசு பயன்படுத்த வேண்டும் என பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இடம்பெயர்ந்துள்ள மக்கள் அவர்களுடைய சொந்தக் குடிமனைகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதுடன், மனிதாபிமான அமைப்புக்கள் அவர்களுக்கான பணிகளை மேற்கொள்வதற்குத் தடைவிதிக்கக்கூடாது எனவும் பிரான்ஸ் மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றது. சிறிலங்காவுக்கு 2.6 பில்லியன் டாலர்களைக் கடனாக வழங்குவதற்கான அங்கீகாரத்தை அனைத்துலக நாயண நிதியம் கடந்த வெள்ளிக்கிழமை வழைங்கியது. மனித உரிமை அமைப்புக்கள் பல உட்பட, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் எதி…
-
- 0 replies
- 325 views
-
-
வெளிநாடுகளின் தலையீடின்றியே தமிழருக்குத் தீர்வு - அமைச்சர் மங்கள விடாப்பிடி தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் விடயத்தில் வௌிநாட்டுத் தலையீட் டைத் தமிழ் கடும்போக்குவாதிகள் கோரிவருகின்றபோதும் அவ்வாறான தேவை இல்லாமல் உள்ளக ரீதியிலேயே தீர்வை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று அயலுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பன்னாட்டு நீதிபதிகளை அனுமதிக்கின்றோமா இல்லையா என்பது அல்ல இப்போதுள்ள பிரச்சினை. தமிழர்களுக்கு விரைவில் நீதியைப் பெற்றுக் கொடுக்கின்றோமா என்பதுவே இப்போதுள்ள முக்கிய பிரச்சினை என்றும் அவர் கூறினார்.கொழும்பில்…
-
- 4 replies
- 532 views
-
-
சபையை இழந்தது யானை: மொட்டு மலர்ந்தது ஒலுமுதீன் கியாஸ் திருகோணமலை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழிருந்த சேருவில பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றிக் கொண்டது. கடந்த 7 மாதங்களாக இயங்காத நிலையிலிருந்த இந்த சபைக்கு, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, புதிய தவிசாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான பிரேரணை இன்று (2) முன்வைக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதன் போது சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் உறுப்பினர் டப்ளியு.ஏ.ஜயசிரி, மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார். இதனூடாக, இந்த சபையின் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி இழந்தது. மொத்தம் 15 உறுப்பினர்களைத் கொண்ட இந்த சபையில் ஐ.தே.கட்சி 6 உறுப்பினர்க…
-
- 0 replies
- 393 views
-
-
ஆட்சியைக் கவிழ்க்கலாம் என கனவு காண வேண்டாம் – பசில் ராஜபக்ஷ ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஆட்சியைக் கவிழ்க்கலாம் என கனவு காண வேண்டாம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, எதிரணிக்கு பதிலுரை வழங்கியுள்ளார். நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், தான் அமைச்சராக பதவி ஏற்றவுடனேயே இந்த ஆர்ப்பாட்டங்களை எதிரணியினர் தீவிரப்படுத்தியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார். குறிப்பிட்ட ஒரு சிலரைக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என்றும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டா…
-
- 3 replies
- 588 views
-
-
இலங்கையில் சிறுபான்மையினரின் அடையாளங்களுடன் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உள்ள கட்சிகளை அழித்தொழித்து, அவற்றை தேசிய நீரோட்டத்தில் உள்ள பிரதான கட்சிகளுடன் கலந்துவிடுவதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு தொடங்கியுள்ளது. புதிய தேர்தல் சீர்திருத்தம் மூலம் இதனை மேற்கொள்வதற்கான முயற்சிகள் ஏற்கனவே பூர்த்தியாகும் நிலையை அடைந்துள்ளன. அரசியல் கட்சிகள் தமது மத அல்லது இன அடையாளங்கள் தொடர்பில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கூறும் சட்ட விதிமுறைகள் இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் அறிமுகமாகும் என அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் பிரதம கொறடாவுமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். தேர்தல் சீர்திருத்தத்திற்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும் தினேஷ் குணவர்த…
-
- 0 replies
- 504 views
-
-
கொழும்பு – ஷாங்காய் விமான சேவைகள் இரு வாரங்களுக்கு இடைநிறுத்தம் கொழும்பில் இருந்து ஷாங்காய் செல்லும் சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸின் விமான சேவைகள் ஜூலை 26 முதல் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஜூலை 6 ஆம் திகதி கொழும்பிலிருந்து தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்திற்கு சென்ற MU714 என்ற விமானத்தில் சென்ற ஆறு பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கொழும்பு-ஷாங்காய் விமான சேவைகள் இடைநிறுத்தப்படும் அதே நேரத்தில் கொழும்பு-குன்மிங் விமான சேவைகளும் அடுத்த வாரம் முதல் இரத்து செய்யப்படும் என அந்நாட்டு சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2021/1229574 கொரோனாவை தந்தவனுக்கே.... திருப்பி கொடுப்பப…
-
- 0 replies
- 221 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சிறிலங்கா கடற்படையின் சிறிய போர்ப் படகு அணிகளின் செயற்பாடு குறித்து அறிந்துகொள்வதில் வெளிநாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகள் இதில் அதிக ஈடுபாடு காட்டுவதாக படை வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 387 views
-
-
பல வருடங்களாக ஞானசாரவை அடக்க முடியாத ஒரு சமூகமாக இலங்கையின் முஸ்லிம் இருந்து வருவது ஒரு கோழைத்தனமான வெட்கக்கேடான விடயமாகும். இந்த விடயத்தில் நாம் ஒருவரையொருவர் விமர்சித்துக்கொண.டிருப்பதை தவிர்த்து இதற்கான நேரடி நகர்த்தல்களை நாம் மேற்கொள்ளா விட்டால் நாம் ஒரு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.அன்று ஹலால் என்ற ஒரு மமதையை சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி விட்டு திட்டமிட்டு அலுத்கமையை அன்று எரித்தாலும் அந்தப் பிரச்சனை நாடு பூராவும் பரவாமல் அல்லாஹ் அன்று பாதுகாத்தான். ஆனால் இன்றிருக்கும் நிலை இப்படியே தொடருமானால் மியன்மார் முஸ்லிம்களை விடவும் அன்று 83 ஜூலை கலவரத்தின் போது எங்கள் கண் முன்னாள் எரிக்கப்பட்ட இலங்கையின் தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்…
-
- 0 replies
- 477 views
-
-
தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்குழு உறுப்பினராக எம்மோடிணைந்து செயலாற்றிவந்த கவிஞருங் கட்டுரையாசிரியரும் விமர்சகரும் நாடகாசிரியரும் ஆர்வலருமான ஈழத்தின் முக்கிய இலக்கியவாதிகளுள் ஒருவருமான மாவை வரோதயன் எனும் பேரால் இலக்கிய உலகம் அறிந்த சி. சத்தியகுமாரன் அவர்களது பிரிவுச் செய்தி தேசிய கலை இலக்கியப் பேரவையை மிகுந்த துயரில் ஆழ்த்தியுள்ளது. செயலூக்கமிக்க ஒரு உறுப்பினராகத் தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் நீண்ட காலம் இணைந்து அதற்கு ஆதரவாயிருந்து அதன் நிகழ்ச்சிகட்கு உறுதுணையாய்ச் செயற்பட்டு ஊக்குவித்ததில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானது. தேசிய கலை இலக்கியப் பேரவையின் சஞ்சிகையான தாயகத்தின் ஆசிரியர் குழுவில் ஊறுப்பினராக அயராது செயற்பட்டு வந்ததுடன் தனக்கேயுரிய பண்பான நகைச்சு…
-
- 0 replies
- 657 views
-
-
-எஸ்.கே.பிரசாத் வட மாகாணத்தில் ஐ.ஓ.சியின் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தின் ள நூணவில் பகுதியிலேயே இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா உட்பட பலர் கலந்துகொண்டனர். http://tamil.dailymirror.lk/--main/81839-2013-09-09-08-44-10.html
-
- 2 replies
- 446 views
-
-
நினைவேந்தல் செய்ததால் பணிநீக்கம்! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தவர்களை வவுனியாவில் இயங்கும் தென்பகுதியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று வேலையில் இருந்து இடைநிறுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. பணிநீக்கியதற்கான காரணம் தற்போது கூற முடியாது என்று அந்த நிறுவனம் தெரிவித்தது. அந்த நிறுவனத்தில் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 7 பேர் பணிபுரிகின்றனர். அவர்கள் கடந்த வியாழக்கிழமை தாம் பணிபுரியும் அலுவலகத்தில் பணிநேரம் நிறைவடைந்த பி்ன்னர் மாலை 5.30 அளவில் மே 18 நினைவேந்தல் நிகழ்வை நினைவு கூர்ந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றத…
-
- 0 replies
- 192 views
-
-
இயற்கையின் சீற்றத்தால் பலியானோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது : மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் நாட்டில் நிலவி வரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதுடன் 99 பேர் வரையில் காணாமல்போயுள்ளதாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையலாமெனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மண்சரிவுகளில் சிக்கி காணாமல்போனவர்களளை…
-
- 1 reply
- 541 views
-
-
மேற்கு உலக நாடுகள் பிழைகளை சுட்டிக்காட்டுவது தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவ்வாறு செய்வதை விட்டுவிட்டு தமது அரசு கூறும் பொய்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துள்ள மகிந்த மீண்டும் சர்வதேச நாடுகளை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை நிறுத்தி விட்டு இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் தமது நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்குலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் இலங்கை விடயத்தில் மேற்குலக நாடுகள் இரட்டை வேடம் பூண்டுள்ளன என்றும் அவர்களைக் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை கடந்த மே மாதம் வெற்றிகொண்ட பிற்பாடு, ஐர…
-
- 0 replies
- 770 views
-
-
இந்துக் கோவிலுக்கு ஒரு சட்டம் விகாரைக்கு வேறொரு சட்டமா? வடக்கு எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி “பிள்ளையார் ஆலயத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் பிரதேச சபை சட்டவிரோதமாக அமைக்கப்படும் விகாரைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யத் தயங்குவது ஏன்? பிள்ளையார் கோவிலுக்கு ஒரு சட்டம் பௌத்த விகாரைக்கு ஒரு சட்டமா? ” இவ்வாறு வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா கேள்வி எழுப்பினார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் யாழ். செயலகத்தில் நேற்று நடைபெற்றது.இதன் போது நாவற்குழியில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களின் தெரிவுமுறை மற்றும் நாவற்குழி வ…
-
- 2 replies
- 436 views
-
-
இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று இலங்கையில் நடைபெற்ற காணாமல் போனவர்கள் தொடர்பான மக்கள் கண்காணிப்பு குழுவின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது, ’’விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பணியாற்றிய தயா மாஸ்டர் மற்றும் ஜார்ஜ் மாஸ்டர் ஆகியோர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அவ்வியக்கத்துடன் தொடர்பில்லாதவர்கள் இன்று வன்னி அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு பிரபாகரனையே தெரியாது. பிரபாகரனுடன் நெருங்கிப் பழகிய இருவரும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையென்றால் இந்த மக்கள் மட்டும் எவ்வாறு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்? விடுதலைப் புலிகளுடனான…
-
- 0 replies
- 823 views
-
-
கட்டாரில் இருந்து வந்தவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிரமம் கட்டாரில் இருந்து நாட்டிற்கு வந்த இலங்கையர்கள் அங்கு பாரிய சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர். கட்டாரில் இருந்து வந்த இலங்கைப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள வங்கிகளில் கட்டார் ரியாலை இலங்கை ரூபாவுக்கு மாற்ற முற்றபட்டநிலையில் வங்கிகளில் அதனை மாற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்ததையடுத்து பயணிகள் பலர் பாரிய சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இதேவேளை, கட்டுநாயக்க விமானநிலையத்தில் இயங்கும் அனைத்து வங்கிகளுக்கும் கட்டார் ரியாலை மறு அறிவித்தல் வரும் வரை மாற்றவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலையத்தில் கடமையில் இருந்த அதிகாரியொருவர் தெரிவி…
-
- 2 replies
- 431 views
-
-
(நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் மீளாய்வு செய்வதுடன் அவர்களில் குற்றச்சாட்டுக்கள் எவையுமின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதத்தடைச்சட்டத்தை உடனடியாக மீளாய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்வேறு சர்வதேசக் கட்டமைப்புக்களினாலும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்க…
-
- 0 replies
- 213 views
-
-
தமிழீழ மக்களது ஆணையினை அடகு வைக்கும் உரிமை யாருக்கும் கிடையாது 11 செப்ரம்பருக்குப் பின்னரான ‘பயங்கரவாதம்’ குறித்த அமெரிக்கக் கோட்பாடு தமிழீழ மக்களின் தலைவிதியை மாற்றி அமைத்துள்ளது. விடுதலைப் புலிகள்மீது பல்வேறு அழுத்தங்களையும், தடைகளையும் ஏற்படுத்தி, சிறிலங்கா அரசின் யுத்தகள வெற்றிக்குத் துணை நின்றதால், தமிழீழ மக்களுக்கு இருந்த ஒரே ஒரு பாதுகாப்புக் கவசமும் தகர்த்து எறியப்பட்டுள்ளது. சிங்கள தேசத்தின் இறையாண்மை பற்றிய கவலையுடன், விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்கு முண்டு கொடுத்த அத்தனை சக்திகளும் தொடரும் சிங்கள இனவெறிப் பழிவாங்கல் நடவடிக்கைகளினால் விரக்தி அடைந்துள்ளன. சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பு யுத்தத்திற்கு இறுதிவரை துணைநின்ற இந்தியா, தற்போது வெளிவந்து கொ…
-
- 0 replies
- 598 views
-
-
தற்காலிகமாக கேப்பாபுலவு வீதி திறப்பு, ஏமாற்றத்துடன் 103 வது நாளாக போராடும் மக்கள்.! இராணுவ வசமுள்ள கேப்பாபுலவு கிராமத்தின் பிரதான வீதி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கலை முன்னிட்டு தற்காலிகமாக மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்றுகாலை தொடக்கம் இந்த வீதி மக்களின் பாவனைக்காக திறந்து விட பட்டுள்ளதோடு மக்களும் அந்த வீதியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தோடு தமது சொந்த கிராமமான கேப்பாபுலவில் தம்மை வாழ இராணுவம் அனுமதிக்க வேண்டும் என கோரி போராடிவரும் மக்கள் வீதியில் இருமருங்கிலுமுள்ள தமது காணிகளையும் பெரும் ஏம்பலிப்புடனும் ஏமாற்றத்துடனும் பார்த்து வருவதனையும் அவதானிக்க முடிகின்றது. இந்த நிலையில் இன்று 103வது நாளாகவும்…
-
- 1 reply
- 309 views
-
-
சிறிலங்காப் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வந்த ஏற்றுமதி வரிச் சலுகை, நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை அடுத்து நீக்கப்பட்டு விட்டதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் எல்.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 649 views
-
-
வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவாக சுவரொட்டிகள் IMAGE வடக்கு முதமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வவுனியா நகர்ப் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வடக்கு முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன. வன்னி மக்கள் என்ற அடிக்குறிப்புடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதேவேளை, வர்த்தகர்கள் தமது கடைகளை அடைத்து வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. http://uthayandaily.com/story/6953.html
-
- 1 reply
- 194 views
-
-
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்... முதலாம் திகதி தளர்வு நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், புதிய சுகாதார வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1241935
-
- 0 replies
- 139 views
-