ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142636 topics in this forum
-
ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை நேற்று முன்தினம் (29) மேற்கொண்டார். இதன்போது, தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், குறித்த தொழிற்சாலையில் நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பில் முகாமையாளரிடம் கேட்டறிந்ததோடு, அதனை உடனடியாக தீர்க்கும் வகையிலும், தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியுடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும், அங்கு பணிபுரியும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்க…
-
- 0 replies
- 192 views
-
-
முதலீட்டாளர்களை அலைக்கழிக்கும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள் adminMay 30, 2025 முதலீட்டாளர்கள் எங்கள் மாகாணத்துக்குத் தேவை. ஆனால் சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் அவர்களை அலைக்கழிக்கின்றனர். ஒரே தடவையில் தேவையான ஆவணங்களைக் கொண்டுவரச் சொல்வதில்லை. இப்போதுகூட ஒரு சபையின் செயலாளர் இவ்வாறு முதலீட்டாளர் ஒருவரை அலையவிட்டிருக்கின்றார். என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வேலணை பிரதேசசபையின் ஏற்பாட்டில் ‘உள்ளூராட்சி விழா – 2024’ சபையின் செயலாளர் தி.தியாகச்சந்திரன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வேலணை மத்திய கல்லூரியின் துரைச்சாமி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆளுநர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மக்களுட…
-
- 0 replies
- 147 views
-
-
Published By: DIGITAL DESK 3 30 MAY, 2025 | 04:51 PM ஆலய சிலை பீடத்தில் பாதணியுடன் காலை தூக்கி வைக்க வேண்டாம் என்று சொன்ன, கமலநாதன் இமேஷ்நாதன் என்ற தமிழ் இளைஞரை, “நீ கும்பிடுவது, சிலையின் தலையா? காலையா? உங்கட சாமி தலையிலயாடா காலை வைத்தோம்” என, கொச்சை தமிழில் திட்டி, அனுர, சந்துன் என்ற இரண்டு, தோட்ட வெளிக்கள அலுவலர்கள் தாக்கி உள்ளனர் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இந்த தகவலை எமது அவிசாவளை புவக்பிட்டிய அமைப்பாளர் சசிகுமார் என் கவனத்துக்கு கொண்டு வந்த நிலையில் இதுபற்றி உறுதியான மேலதிக நடவடிக்கை எடுக்குமாறு அவிசாவளை பொலிசுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் மகிந்த குணரத்ன, நிலைய பொறுப்பதிகாரி ஜெயலத், இளநிலை அதிகாரி ராஜரத்ன ஆகியோரிடம் வ…
-
-
- 2 replies
- 241 views
- 1 follower
-
-
திரும்பிய அகதியை கைது செய்தது சரியா?- மனோ கணேசன் கே http://seithy.com/siteadmin/upload/mano-ganesan-190525-seithy.jpg தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, வயோதிபம் அடைந்து, உங்களை நம்பி, நாடு திரும்பிய, 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில், எதற்காக கைது செய்தீர்கள்? கைது செய்து, இன்று பிணையில் வெளியே விடாமல், சிறையில் அடைக்கிறீர்கள்? வெளிநாடு சென்ற தமிழர்களை திரும்பி “வாங்கோ, வாங்கோ” என நீங்கள் தானே வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறீர்கள்? உங்களை நம்பி வந்தால், திரும்பி வந்தால் விமான நிலையத்தில் கைது செய்வதா? என தமுகூ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். சிவலோகநாதனுக்கு நாடு திரும்ப சென்னை இலங்கை த…
-
- 1 reply
- 199 views
-
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம் யாழ்ப்பாணம் - நல்லூரில், யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு அமைக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூடுமாறு வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாவது:- யாழ்ப்பாணம் நல்லூர் என்பது இந்துக்களின் புனித பூமியாகும். ஆனால், ஒட்டுமொத்த இந்துக்களின் மனங்களை நோகடிக்கும்படியாக, இங்கு அசைவ உணவகமொன்றைத் திறந்துள்ளனர். மிக இரகசியமான வகையில் இந்தப் ணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மொருத்தமில்லாத இடத்தில், பொருத்தலாத சூழலில் இந்த அசைவ உணகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனடியாக அகற்றவேண்டும் என்று வலியுறுத்தி நாங்கள் போராட்டத்தில் ஈடுட்டுள்ளோம். எமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்று யாழ்ப்பாணம் ஆ…
-
-
- 218 replies
- 9.7k views
- 2 followers
-
-
30 MAY, 2025 | 05:29 PM மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்திலிருந்து திருக்கேதீச்சரம் ஆலயத்துக்கு இன்று (30) எடுத்துச்செல்லப்பட்டது. கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி வீதியைச் சேர்ந்த சண்முகநாதன் கபிலன் என்பவரின் வீட்டிலிருந்து கொடிச்சீலை எடுத்துச் செல்லப்பட்டு, திருநெல்வேலி வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டு, அங்கு சிறப்புப் பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, கொடிச்சீலை திருக்கேதீச்சர ஆலயத்துக்கு வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. திருக்கேதீச்சர ஆலயத்தின் வருடாந்த திருவிழா நாளை சனிக்கிழமை (31) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 1982ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்தே செங்குந்த மரபினரால் தி…
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
பிள்ளையானின் கட்சி காரியாலயம், விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிஐடியினரால் முற்றுகை! மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்த சிஐடி யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் இன்று காலை முற்றுகையிடப்பட்டு தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது காரியாலயத்தின் நிலம் உடைக்கப்பட்டு தோண்டி எடுக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார…
-
- 1 reply
- 238 views
-
-
30 MAY, 2025 | 11:57 AM இலங்கை - கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மிகப்பிரமாண்டமான முறையில் கனடா கல்விக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (30) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமானது. கனடா - இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் குலா.செல்லத்துரை, மற்றும் குறித்த சம்மேளனத்தின் இலங்கைக்கான தலைவர் பியந்த சந்திரசேகர மற்றும் பலதரப்பட்ட துறைசார் அதிகாரிகள் பங்கேற்கபுடன் இந்த கண்காட்சியானது சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கனடா கல்விக் கண்காட்சி மற்றும் யாழ்ப்பாணம் முதலீட்டு வர்த்தக மன்றம் 2025 என்ற குறித்த கண்காட்சி வடக்கு கிழக்கின் இளைஞர்களை மேம்படுத்தல் - எதிர்காலத்தை கட்டியெழுப்பல் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகின்றது. வெள்ளிக்கிழமை (3…
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
30 MAY, 2025 | 12:24 PM யாழ்.மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதலாம் காலாண்டில் இறப்புகளை விட பிறப்புகளின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்குப் பிரதி பதிவாளர் நாயகம் பிரபாகர் தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கோரப்பட்ட தகவலுக்கமைவாக இந்தத் தகவல் வழங்கப்பட்டுள்ளது . இதன்படி, 2025 ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை யாழ்.மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு எண்ணிக்கை ஆயிரத்து 572 ஆகவும் பதிவு செய்யப்பட்ட இறப்புகளாக ஆயிரத்து 373 ஆகவும் பதிவாகியுள்ளன. இறப்புகளை விட 199 பிறப்புகள் அதிகமாக பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/216068
-
- 2 replies
- 201 views
- 1 follower
-
-
30 MAY, 2025 | 11:50 AM ஆரோக்கியமற்ற நிலைமைகள் காரணமாக சிறுநீரக நோய்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நமது மாணவர்கள் ஆரோக்கியமான சூழலை நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படல் காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக பிராந்தியத்திலுள்ள பாடசாலைகளை கண்காணிக்க சென்ற வேளை மாணவர்கள் பாடசாலையிலுள்ள கழிவறைக்குச் செல்ல ஆர்வம் காட்டாமல் இருப்பதை அறியக்கிடைத்தது. அசுத்தமான மற்றும் துர்நாற்றம் வீசும் கழிவறைகளே இதற்கு முக்கிய காரணம். மலசல கூடங்களை சுத்தப்படுத்த ஆளனிப்பற்றாக்குறை மற்றும் அதற்கான போதிய நிதி உதவியின்மை போன்ற குறைகள் உள்ளன. இதனால் மாணவ…
-
- 0 replies
- 149 views
- 1 follower
-
-
30 MAY, 2025 | 02:32 PM ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை வியாழக்கிழமை (29) மேற்கொண்டார். இதன்போது, தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், குறித்த தொழிற்சாலையில் நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பில் முகாமையாளரிடம் கேட்டறிந்ததோடு, அதனை உடனடியாக தீர்க்கும் வகையிலும், தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியுடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும், அங்கு பணிபுரியும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் முகமாக தேவை…
-
-
- 1 reply
- 148 views
- 1 follower
-
-
சட்டவிரோத மணல் அகழ்வு – நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் சந்திரசேகர் May 30, 2025 11:47 am கிளிநொச்சி மாவட்டத்தின் குஞ்சுப்பரந்தன் முதல் குடமுருட்டி வரையான கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடங்களை கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சென்று பார்வையிட்டார். கிளிநொச்சி, கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பகுதிக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களிலும் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகளால் அமைச்சருக்கு முறைபாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் பெருமளவான வயல் நிலங்கள், நீர்ப்பாசன கட்டுமானங்கள் என்பன சேதமடைந்து வருகின்றன எனவும் அவர்கள் …
-
- 0 replies
- 221 views
-
-
Published By: DIGITAL DESK 3 30 MAY, 2025 | 09:30 AM வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் (TINs) பதிவு செய்யும் முறையை இலகுவாக்குவதற்ககாக கியூஆர் குறியீடு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.பி.ஜி.எச். பெர்னாண்டோ தெரிவித்தார். இந்த கியூஆர் குறியீட்டை பயன்படுத்தி ஏற்கனவே TIN இலக்கத்தை பதிவு செய்தவர்களும் தங்கள் பதிவை சரிபார்த்துக் கொள்ள முடியும். எவ்வாறு இல்லை எனில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை தொடர்பு கொள்வதன் மூலம் அதை எவ்வாறு பெறுவது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். வரி நிர்வாகம் மற்றும் இணக்கத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, 1 கோடிக்கும் அதிகமான TIN இலக்கங்கள் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
உயிர்நீத்த கடற்படை வீரர்களை நினைவு கூர்ந்து மரக்கன்றுகள் நடுகை யாழ்ப்பாணம் - மண்டைதீவில் கடற்படையினரால் மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளன. இந்நிகழ்வு வேலுசுமன கடற்படை முகாம் கட்டளை அதிகாரியின் ஏற்பாட்டில் இன்று (29) காலை இடம்பெற்றது. மே 18 ஆம் திகதி உயிர் நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து கௌரவிக்கும் முதன்மை நோக்கத்துடன் இவ்வாறு மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. இதன்போது முந்திரி செடிகள் மற்றும் தென்னங்கன்றுகள் என்பன நாட்டப்பட்டன. குறித்த நிகழ்வில் மண்டைதீவு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருமார் மற்றும் கடற்படையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். https://adaderanatamil.lk/news/cmb99dzvp014iqpbs9xde6d2x
-
- 0 replies
- 176 views
-
-
சீன, போலந்து அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்! adminMay 30, 2025 இலங்கைக்கு சென்றுள்ள சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வங் வென்டாவோ(Wang Wentao) , இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். தற்போது இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் செயல்படுத்தும் வெளிப்படையான வேலைத்திட்டம் காரணமாக சீன முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவித்த அமைச்சர், 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுடனான இந்த விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மேலும் உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். சவாலா…
-
- 0 replies
- 153 views
-
-
வி.ரி.சகாதேவராஜா மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித் தமிழ் மக்கள் முழுமையாக வாழ்கின்ற கல்லாற்றில் புத்தர் சிலை தொடர்ந்து நிலை கொண்டிருப்பது முறையாகுமா? தேவையா? அது இன சௌஜன்யத்தை, நல்லிணக்கத்தை பாதிக்கும். எனவே அச்சிலை அகற்றப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மா.நடராஜா தெரிவித்தார். கல்லாற்றில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்... பெரிய கல்லாறு பாலத்தின் அருகே பிரதான வீதியில் இராணுவ சூழல் இருந்த காலகட்டத்தில் இந்த புத்தர் சிலை ஒரு தனியார் காணியில் வைக்கப்பட்டிருக்கின்றது . சின்னவத்தை பிரதேச பிக்கு ஒருவரினால் இந்த சிலை அடாத்தாக அந்த காணியிலேயே வைக்கப்பட்டதாக அறிகிறேன். அந்த காலகட்டத்திலே…
-
- 1 reply
- 239 views
-
-
Published By: DIGITAL DESK 2 29 MAY, 2025 | 04:33 PM எமக்கு உடனடியாக உதவிகளைச் செய்யும், எமக்கு மிகவேண்டப்பட்ட நாடாக இந்தியா இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். மனிதாபிமான உதவிகளை வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (28) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: "முல்லைத்தீவில் நான் மாவட்டச் செயலராக பணியாற்றிய அனுபவம் எனக்குள்ளது. இங்கு உள்ள கடற்றொழில் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எனக்கு நன்றாக தெரியும். போருக்குப் பிறகு சட்டவிரோத மீன்பிடி உங்கள் வாழ்வை பாதித்தது. இன்று இந்திய அரசு மற்றும் மக்களிடமிருந்து பெறுமதியான வலைகளும், குளிர்சாதன பெட்டிகளும் கிடைக…
-
-
- 1 reply
- 281 views
- 1 follower
-
-
29 MAY, 2025 | 04:31 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் இணைந்த முகாமைத்துவ குழுக் கூட்டம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தலைமையில் கலாசார மண்டபத்தில் புதன்கிழமை (28) நடைபெற்றது. 2023.08.23ஆம் திகதி இணைந்த முகாமைத்துவக் கூட்டம் இறுதியாக நடைபெற்றிருந்த நிலையில், இந்தக் கூட்டத்தை மீண்டும் கூட்டுவதற்கான கோரிக்கையை வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்வைத்திருந்தார். அதற்கு அமைய, நேற்று இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தியத் தூதுவர் தலைமையிலான குழுவினர், வட மாகாண ஆளுநர் நா.வேதநாயன், யாழ். மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன், கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.டிலானி, கலாசார ஊக்குவிப்பு பணிப்பாளர் பிரசாட் ரணசிங்க ஆகியோர் இந்தக…
-
-
- 3 replies
- 288 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 29 MAY, 2025 | 04:52 PM (எம்.மனோசித்ரா) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டுப் பெற்றுக்கொள்வதற்கு வருகைத்தரும் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய பொதுமக்களுக்கு கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் சேவையை 24 மணி நேரமும் மேற்கொள்ளும் பணி 2025.02.18 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு அது இன்றுடன் (30) நிறைவடைகிறது. எனவே ஜூன் 2ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் காலை 7 மணி முதல் பி.ப 2.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். அன்றைய தினம் முதல் ஒருநாள் சேவையின் கீழ் முன்கூட்டி…
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
’எம்.ஏ. சுமந்திரன் - கஜேந்திரகுமார் நாளை பேச்சு’ உள்ளூராட்சி சபைகளை அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது என்று தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்தார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைகள் அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை வெள்ளி…
-
- 1 reply
- 213 views
-
-
29 May, 2025 | 04:57 PM கதிர்காமத்தை நோக்கிய பாதயாத்திரையினை மேற்கொண்டுள்ள குழுவினர், மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்துக்கு நேற்று வருகைதந்து, அங்கு தங்கியிருந்து, இன்று (29) காலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டு, பின்னர், பாதயாத்திரையினை தொடர்ந்தனர். வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல் விழாவினை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி ஆரம்பமான இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரையானது மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரத்தினை நேற்று (28) மாலை சென்றடைந்தது. மே மாதம் 1ஆம் திகதி தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து சிங்கராஜா ஜெயராஜா வேல்சாமி தலைமையில் இந்த பாதயாத்திரை ஆரம்பமானது. வடக்கு, கிழக்க…
-
- 0 replies
- 180 views
-
-
29 May, 2025 | 02:28 PM பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் ஆனால் வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மற்றுமொரு சட்டம் அவசியம் என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் புதிய சட்டம் அவசியமில்லை என சிவில் சமூக பிரதிநிதிகள் அவரிடம் விடுத்த வேண்டுகோளிற்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் இன்று நீதியமைச்சரை சந்தித்தனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆராயும் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட சமர்ப்பிப்பில் கையொப்பமிட்ட பிரதிநிதிகள் குழுஇ இன்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவைச் சந்தித்துஇ பயங்கரவாதத்…
-
- 0 replies
- 144 views
-
-
வடக்கு ரயில் சேவைகள் ஒரு மாதம் இடைநிறுத்தம்! 00] http://seithy.com/siteadmin/upload/train-021124-seithy.jpg மாகோவிலிருந்து அநுராதபுரம் வரையிலான பிரதான புகையிரத மார்க்கத்தில் ஐந்து பாலங்களில் புனரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளதால், மீண்டும் ஒரு மாத காலத்திற்கு வடக்கு ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலங்கள் அகற்றப்பட்டு புதிய பாலங்கள் அமைக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐந்து பாலங்கள் ஏற்கனவே நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்திய கடன் உதவியுடன் ஐந்து பாலங்கள் அமைக்கப்படவுள்ளதோடு, சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும். பொசன் பௌர்ணமி தினத்துக்கு பின்ன…
-
- 1 reply
- 232 views
-
-
29 May, 2025 | 03:08 PM முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 'சந்திரன் கிராமம்' வீடுகள் கையளிப்பு நிகழ்வானது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் புதன்கிழமை (28) கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பில் நடைபெற்றது. குறித்த சந்திரன் கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 24 வீடுகள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவினால் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த கையளிப்பு நிகழ்வில் இந்நிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக மற்றும் வட…
-
- 0 replies
- 154 views
-
-
29 May, 2025 | 04:32 PM நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக புதன்கிழமை (28) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன் பல்வேறு அபிவிருத்தித் திட்ட வேலைகளை திறந்து வைத்தார். இதில் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் கொக்குத்தொடுவாயில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் விநியோக நிலையத்தினை திறந்துவைத்ததுடன் மக்களுக்கான குடிநீர் விநியோகத்தினை சம்பிரதாயபூர்வமாக மக்களிடம் வழங்கி வைத்தார். குறித்த குடிநீர் திட்ட வேலைத்திட்டமானது 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் தற்போது அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தது. இந்தக் குடிநீர்த் திட்டமானது கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்…
-
- 0 replies
- 153 views
-