ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
கொரோனா தொற்றாளருடன் இருந்த வெளிநாட்டவர் மாயம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவருடன் இருந்த வெளிநாட்டர் ஒருவர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு 7 உணவகம் ஒன்றில் ஒன்றாக இருந்த பிரான்ஸ் பிரஜை ஒருவரே இவ்வாறு மாயமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்யவும் அவரை தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் வகையில் பொலிஸார் அவரை தேடி வருவதாகவும் பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த வெளிநாட்டவரின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு பொது மக்களின் உதவியினை நாடியுள்ளார். குறித்த நபரை அடையாள…
-
- 1 reply
- 310 views
-
-
பாதுகாப்பு அமைச்சின் கீழ் மீண்டும் கொண்டுவரப்பட்டது குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்! குடிவரவு குடியகல்வுத் திணைக்களமானது மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்பட்ட போதிலும், பின்னர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில், சமல் ராஜபக்ஸ தலைமையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் காணப்பட்ட குடிவரவு குடியல்வுத் திணைக்களம் மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் மே…
-
- 1 reply
- 322 views
-
-
கொரோனா அச்சுறுத்தல் – புத்தளம் முடக்கப்படும் சாத்தியம் : சுகாதார அமைச்சர்! கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்த அதிக ஆபத்தை எதிர்நோக்கியுள்ள புத்தளம் மாவட்டத்தை முழுமையாக அல்லது பகுதியளவில் முடக்கும் நிலைமை ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நாம் இது குறித்து தீவிரமாக கலந்துரையாடினோம். உண்மையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், குறிப்பாக கொரோனா வைரஸ் வேகமாக பரவிய நாடுகளில் இருந்து மார்ச் முதலாம் திகதி முதல் 10 ஆம் …
-
- 1 reply
- 348 views
-
-
கொரோனா அச்சம் – வவுனியாவிலிருந்து ஒருவர் யாழ் வைத்தியசாலைக்கு மாற்றம்! கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் காரணமாக ஒருவர் வவுனியாவிருந்து யாழ்.வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்றிரவு(செவ்வாய்கிழமை) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரே இவ்வாறு யாழ்.வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த நபர் கொரோனா குறித்த விசேட பரிசோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 43 பேர், விசேட வைத்தியக்குழுவின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் சுமார் 220 பேர் வைத்திய…
-
- 0 replies
- 244 views
-
-
கொரோனா தொற்றுக்குள்ளான எந்தவொரு நோயாளியும் கவலைக்கிடமாக இல்லை! கொரோனா தொற்றுக்குள்ளான எந்தவொரு நோயாளியும் கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. பொதுசுகாதார பிரிவு தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான 43 பேர், விசேட வைத்தியக்குழுவின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் சுமார் 220 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்கள் 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு நிலையங்களில் 2 ஆயிரத்…
-
- 0 replies
- 211 views
-
-
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை இன்று முதல் பார்வையிட முடியாது! யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை இன்று(புதன்கிழமை) முதல் இரண்டு வாரங்களுக்கு பார்வையிட முடியாது என சிறைச்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை இருவாரங்களுக்கு பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என சிறைச்சாலை திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இலங்கை அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 43 பேர், விசேட வைத்தியக்குழுவ…
-
- 0 replies
- 217 views
-
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த 2ஆம் திகதி தாயார் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளும் நலமாக உள்ளனர் என்று வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி. ஜமுனானந்தா தெரிவித்தார். தெல்லிப்பளை கட்டுவன் பகுதியைச் கிருஷ்ணபவன் கீர்த்திகா தம்பதிகளுக்கு நான்கு குழந்தைகள் கிடைக்கப்பெற்றனர். இரண்டு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர்.கடந்த வருடம் கருவுற்றிருந்த கீர்த்திகா, கடந்த 2 ஆம் திகதி பிரசவ வலி காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு அன்றைய தினம் இரவு சுகப்பிரசவம் மூலம் நான்கு குழந்தைகள் கிடைக்கப்பெற்றனர். அதில் மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் அடங்குகின்றனர். தற்போது குழந்தைகள் வ…
-
- 9 replies
- 712 views
-
-
முகக் கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை. சுகாதார அமைச்சினால் மீண்டும் முகக் கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, மீள பயன்படுத்த முடியாத சாதாரண முகக் கவசத்திற்கு 50 ரூபா எனவும் N95 வகை முகக் கவசத்திற்கு 325 ரூபா எனவும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சு நேற்று இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. கடந்த ஜனவரி 29 ஆம் திகதி, சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட இரு மடங்கிற்கும் அதிகமாக தற்போதைய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அதிக விலைக்கு முகக் கவசங்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் தொடர்பில் 1977 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் நுகர்வோர் வி…
-
- 9 replies
- 1k views
-
-
நாட்டை முடக்கலாம் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு கூறுவீா்களா..? கடுப்பானாராம் ஜனாதிபதி..! நாட்டை முடக்கவேண்டும் என கேட்பவா்கள் பொருளாதார பிரச்சினைகள் எழும்போது பொறுப்பு கூறப்போவதில்லை. மேலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்ப ட்டிருக்கின்றது. எனவே நாட்டை முடக்கமாட்டேன். மேற்கண்டவாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கூறியிருக்கின்றாா். கொரோனா வைரஸ் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில். கொரோனா வைரஸ் பரலை கட்டுப்படுத்துவதற்கு 14 நாட்களுக்கு விமான நிலையத்தை மூடுவதற்கு தீர்மானம் எடுக்க…
-
- 5 replies
- 1k views
-
-
-எம்.றொசாந்த் யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், பொதுத் தேர்தலில், இலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்) சார்பில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேட்பாளராகக் களமிறக்கப்படுகின்றார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கான வேட்பு மனு தயாரிக்கும் பணி, யாழ்ப்பாணம் - மார்டீன் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையக பணிமனையில், இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறுகிறது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெறும் இந்த நடவடிக்கையில், யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் வேட்பாளராக இணைக்கப்பட்டார். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்…
-
- 3 replies
- 637 views
-
-
நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில், அடுத்துவரும் மாதத்தில் புதுவருடம் மற்றும் ஈஸ்ரர் பண்டிகைகள் வருவதனால் ஆடைகள் கொள்வனவு செய்வோருக்கு சுகாதார திணைக்களம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் சுகாதார திணைக்களம் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் ஆடைகள் வாங்குவதை மக்கள் தவிர்க்குமாறு சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டுக்குள் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றானது, ஆடைகள் வழியாகவும் பொதுமக்களிடம் பரவுவதற்கு வாய்ப்பு உள்ள…
-
- 1 reply
- 428 views
-
-
சஜித்துடன் இணைந்தார் சுமித் அத்தபத்து இலங்கை இராணுவத்தின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து இன்று (17) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று (17) அவர் இணைந்துகொள்வதை உத்தியோகபூர்வமாக அறிவித்ததுடன், இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரும் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/சஜததடன-இணநதர-சமத-அததபதத/175-247078
-
- 0 replies
- 348 views
-
-
கொரோனா தொடர்பாக விழிப்பூட்டிய மருத்துவர் மற்றும் பல்கலைகழக ஊழியர் மீது தாக்குதல்..! றியோ ஐஸ் கிறீம் கடை ஊழியர்கள் சண்டித்தனம்.. கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வில் ஈடுபட்ட ஊர்காவற்றுறை ச ுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பரா.நந்தகுமார் தாக்கப்பட்டுள்ளார். அவருடன் சென்ற அவரது நண்பர் மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நேற்று திங்கட்கிழமை பிற்பகல் நல்லூர் றியோ ஐஸ்கிறீம் விற்பனை நிலையத்திற்கு முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றது. றியோ பணியாளர்களும் மேலும் சிலரும் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய றியோ பணியாளர்கள் இருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தப்பியோடிவிட்டனர் என …
-
- 4 replies
- 516 views
-
-
வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வந்த 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கண்காணிப்பில் by : Dhackshala இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு பிரவேசித்த ஆறாயிரத்துக்கும் அதிகமானவர்கள் தமது அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் வீடுகளில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்தாம் திகதிக்கு முன்னர் நாட்டிற்கு பிரவேசித்த 2 ஆயிரத்து 572 பேர் மற்றும் மார்ச் 5 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வமாக நாட்டிற்குள் நுழைந்த மூவாயிரத்து 460 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார். இதேவேளை, புத்தளம் மாவட்டத்தின் ப…
-
- 0 replies
- 262 views
-
-
வடக்கில் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்! by : Jeyachandran Vithushan வடமாகாணத்தின் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுதும் முகமாக ஆளுநரின் பணிப்பின் பேரில் விசேட கலந்துரையாடல் ஒன்று மாகண சுகாதார அமைச்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. வடபகுதியின் சுகாதாரத்துறை மற்றும் நிர்வாகத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டதுடன் முக்கியமான தீர்மானங்கள் சில மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில், அடுத்துவரும் இரண்டு வாரங்கள் கொரோனா வைரஸ் அவதானத்துக்குரிய வாரங்களாக பிரகடனபடுத்தபட்டு பாரியளவில் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லல். பொது மக்கள் ஒன்று கூடும் வைபவங்கள்,…
-
- 0 replies
- 460 views
-
-
தேர்தலை பிற்போடுமாறு வேண்டுகோள் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்வரும் பொதுத் தேர்தலை பிற்போடுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகம் முழுதும் பரவும் கொரோனா வைரஸால் மக்கள் பாரிய அச்சத்திற்குள்ளாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=126919 தேர்தலை பின் போட்டு, ஆபத்திலிருந்து நாட்டை காக்க அரசு முன்வர வேண்டும் அரசாங்கம் கொரோனா கொடுமையை பயன்படுத்தி, எதிர்கட்சிகளை வீட்டுக்குள் முடக்கி வைத்து விட்டு, தேர்தலை நடத்தி அரசியல் இலாபம் பெற முயல்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக…
-
- 0 replies
- 721 views
-
-
கட்டார், பஹ்ரைன் மற்றும் கனடாவில் இருந்து இலங்கை வர தடை கட்டார், பஹ்ரைன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு இலங்கை நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது. இன்று நள்ளிரவு முதல் இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும் என சிவில் விமான சேவைகள் திணைக்களத்தின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=126926
-
- 0 replies
- 234 views
-
-
கட்டுநாயக்கா விமான நிலையத்தினை மூடுவது குறித்து ஆலோசனை March 17, 2020 கட்டுநாயக்கா விமான நிலையத்தினை மூடுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவுடன் கலந்துரையாடிய பின்னர் நாளை புதன்கிழமை முதல் விமான நிலையத்தை மூடிவிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்கும் முகமாகவே இவ்வாறு விமான நிலையத்தினை மூடுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. #கட்டுநாயக்கா #விமானநிலையம் #மூடுவது #ஆலோசனை http://globaltamilnews.net/2020/138449/
-
- 1 reply
- 402 views
-
-
இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதும் இந்துத் தெய்வங்களின் பெயரில் உள்ள வீதிகளை கிறிஸ்தவ மற்றும் பொதுப் பெயர்களாக மாற்றுவதை நிறுத்தக்கோரி இந்து சமய அதியுயர் குருபீடங்கள் அது உயர் நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி, பிரதமர் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு கடிதம் மூலம் கோரிக்கைவிடுத்துள்ளது. குறித்த கடிதத்தில், இலங்கைத் தீவின் வடபகுதியில் குறிப்பாக கரையோரப் பிரதேசங்களில் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யும் செயற்பாடுகளும் இந்துப் பிரதேசங்களில் கிறிஸ்தவ சிலைகளை நிறுவும் செயற்பாடுகளும் இந்துக்களின் பூர்வீகப் பிரதேசங்களை இந்துக்கள் அல்லாத பிரதேசங்களாக பெயர் மாற்றம் செய்யும் செயற்பாடுகளும் இந்து ஆலயங்களுக்கும் திருவுருவங்களுக்கும் சேதம் விளைவிக்கும் செயற்பாடுகளுக்கும் …
-
- 134 replies
- 10.6k views
-
-
யாழில் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் இன்று கையெழுத்திட்டுள்ளனர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் இன்று கையெழுத்திட்டுள்ளனர்.இந்நிலையில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், கஜதீபன், கு.சுரேன், சசிகலா ரவிராஜ், இம்மானுவேல் ஆனோல்ட் மற்றும் தபேந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சேனாதிராசா, சரவணபவன், கஜதீபன், தபேந்திரன் ஆகியோர் இன்று கையொப்பமிட்டனர். ஏனைய ஆறு பேரும் நாளை கையொப்பமிடுகின்றனர்.அத்துடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பு ம…
-
- 0 replies
- 354 views
-
-
கொரோனா அச்சுறுத்தல் – பொதுத்தேர்தலினை ஒத்திவைக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை! நாட்டில் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இவ் அறிக்கையானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி தலைவர்களின் கலந்துரையாடலின் பின்னர் விடுக்கப்படுகின்றது. நாட்டிலே தற்போது நிலவுகின்ற COVID 19 வைரஸ் பரவுகின்ற அபாயம் சம்பந்தமாக அரசாங்கம் தகுந்த உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக எடுக்க வேண்டும். மக்களின் பா…
-
- 1 reply
- 363 views
-
-
கொரோனா பீதி: நாட்டு மக்களுக்கு தமிழில் ருவிட்டர் பதிவிட்டுள்ள ஜனாதிபதி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இதன் காரணமாக இன்றைய தினம் அரசவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) ருவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் கணக்கிலேயே இவ்வாறு அவர் தமிழில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், “இன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள். பொது போக்குவரத்தை பயன்படுத்தவோ,பொது இடங்களில் கூடவோ வேண்டாம். கட்டாய தேவ…
-
- 9 replies
- 830 views
-
-
ரயில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானம் ரயில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் 88 ரயில் சேவைகளை இரத்து செய்வதாக ரயில்வே திணைக்ளம் அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் முன்னெடுக்கப்படும் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் இன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. மாகாணங்களுக்கு இடையிலான பேருந்துகளில் ஒரு வார காலத்திற்கு 24 மணித்தியாலங்களுக்கும் கிருமி ஒழிப்பு செயற்பாடுகள்…
-
- 0 replies
- 360 views
-
-
இன்று முதல் மூன்று தினங்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானம் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காக மூன்று தினங்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் விசேட விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வங்கிகள், சுகாதாரம், உணவு விநியோகம், போக்குவரத்து, மாவட்ட செயலாளர் காரியாலயங்கள், பிரதேச காரியாலயங்கள், அத்தியாவசிய சேவை தவிர்த்த அரச கூட்டுதாபன திணைக்களங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்த பொது விடுமுறை அமுலாகும் என்பதோடு தனியார் நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள …
-
- 0 replies
- 211 views
-
-
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டது பாதுகாப்பு அமைச்சு ஐரோப்பா, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் 119 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து தங்களை பதிவு செய்துகொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக விஷேட அறிக்கையொன்றை விடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சு, மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 15ஆம் திகதி வரை குறித்த நாடுகளில் இருந்து வந்தவர்களே இவ்வாறு தங்களை பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. நேற்றைய தினம் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 119 என்ற அவசர இலக்கத்தின் ஊடாகவும் குறித்த நாடுகளிலிருந்து இலங்கை வந்…
-
- 0 replies
- 251 views
-