Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சி.வி.யின் தலைமையில் புதிய கூட்டணி உதயம் வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரில்கோ விருந்தினர் விடுதியிலேயே குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வடக்கு முன்னாள் முதலமைச்சருமான விக்கினேஸ்வரன் தலைமையில் புதிய அணியொன்று உருவாக்கும் முயற்சிகள் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்தன. விக்கினேஸ்வரன் எனினும் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட இழுபறி நிலைமைகளால் அது குறித்தான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தக் கூட்டணிக…

    • 10 replies
    • 1.5k views
  2. எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையில் ஒரு கூட்டணி தேர்தலில் கட்சியாக போட்டியிடுவதற்கு தேவையான ஆவணங்களை தேர்தல்கள் ஆணையகத்தில் சமர்ப்பித்துள்ளது. அதன்படி சஜித் தலைமையிலான புதிய கூட்டணி 'தேசிய அமைதி கூட்டணி' என பெயரிடப்பட்டுள்ளதுடன், அதன் சின்னமாக இதயமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கூட்டணியின் பொதுச் செயலாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/75310

  3. அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எஃப்.ரகுமானின் நடத்தை கோலங்கள் மற்றும் அவரின் அதிகார துஷ்பிரயோகங்கள் அண்மைக்காலங்களாக சட்டரீதியாக அல்லாமல் பசுதோல் போர்த்திய புலியாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையில் கடமையாற்றும் விசேட தர தாதிய உத்தியோகத்தர் ஆர்.தேவாமிர்ததேவி குறிப்பிட்டுள்ளார். கல்முனை பெண்களின் உரிமை செயற்பாட்டாளரும், கல்முனை மாநகர உறுப்பினருமான பஸீரா றியாஸ் தலைமையில் இன்று கல்முனை பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வைத்திய அத்தியட்சகரின் நடத்தை கோலங்களும், அதிகார துஷ்பிரயோகங்களும் அண்மைக்காலங்களாக தன்னை தாக்குகின்றது. சட்டரீதியாக அல்லாமல் …

  4. யாழில் வாள்வெட்டு – 3 பேர் காயம்: மூவர் கைது யாழ். இளவாலை- சாந்தை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் மூவர் காயமடைந்த நிலையில், தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து, சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸாா் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் வசித்து வரும் நபரின் வளர்ப்பு நாயை அயலவர்கள் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து கேட்கச் சென்ற நாயின் உாிமையாளருக்கும் அயல் வீட்டினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாய்த்தா்க்கம் முற்றிய நிலையில், அயல் வீட்டிலிருந்தவா்கள் நாயின் உ…

  5. ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை 103 முறைப்பாடுகள் பதிவு ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 103 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்நிலையில், முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் நேற்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, அட்மிரல் D.K.P. தசநாயக்க உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் குழுவால் 4 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்நிஷாந்த டி சில்வா ஆகியோரால் பொய்யான சாட்சிகள் வழங்கப்பட்டு கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்காக சதி முயற்சி முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்து இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டத…

  6. காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை நாடளாவிய ரீதியில் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கைகளை விரைவில் நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காணி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அடையாளம் காணப்பட்ட மொத்த நில அலகுகளின் எண்ணிக்கை 14 மில்லியன் என்பதுடன், அவற்றில் 10 வீத காணிகளின் அளவீட்டு நடவடிக்கைகள் கடந்த வருடம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எனவே, மீதமுள்ள 90 வீதமான காணிகளின் அளவீட்டுப் பணிகளை விரைவில் நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதற்கு தேவையான வசதிகள் உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். …

  7. காணாமல் போனவர்கள் தொடர்பாக மதிப்பாய்வு செய்யவுள்ள ஐ.நா நிபுணர் குழு! by : Jeyachandran Vithushan இலங்கை உட்பட 32 நாடுகளில் உள்ள வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பான 530 க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக ஐ.நா.சபையின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான செயற்குழு இம்மாதம் 10 முதல் 14 வரை ஜெனீவாவில் தனது 120 ஆவது அமர்வை நடத்துகின்றது. வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்களின் உறவினர்கள், அரச அதிகாரிகள், சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து தனிப்பட்ட மற்றும் வலிந்து காணாமல் போனவர்களின் தொடர்ச்சியான நடைமுறை பற்றிய தகவல்களை இந்த குழுவில் உள்ள 5 நிபுணர்கள் கேட்டறிந்து கொள்ளவுள்ளனர். மேலும் வலுக்கட்டாயமாக காணாமல் போவதிலிருந்து அனைத்து …

  8. -சுப்பிரமணியம் பாஸ்கரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கிளிநொச்சி வளாகத்தில், பகடிவதையில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில், எட்டு மாணவர்களுக்கு, இன்று (10) முதல், பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/வன்னி/பகடிவதை-எண்மருக்கு-இடைக்காலத்-தடை/72-245246 ‘சம்பந்தப்பட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்’ -எஸ்.நிதர்ஷன் யாழ்ப்பாணப் பல்கலைகழகக் கிளிநொச்சி வளாகத்தில், பகடிவதையில் ஈடுபட்டவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணப் பல்கலைகழகக் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகடிவதை தொடர்பில் தாம் கவனமா…

    • 4 replies
    • 1.1k views
  9. யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது பகிடிவதை அல்ல பாலியல் சித்திரவதை -வரதராஜப்பெருமாள் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது பகிடிவதை அல்ல. அது பாலியல் சித்திரவதை என வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.அத்துடன் பல்கலைக்கழகங்களில் பகிடி வதை நடப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என மேலும் தெரிவித்துள்ளார். இதுவொரு பாலியல் சித்திரவதை என்றே கூறவேண்டும். இதன் காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினை அவமானத்தின் சின்னமாக சித்தரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயலை பகிடிவதை என்று சொல்லவே முடியாது. அது பாலி…

  10. யாழ் பல்கலைக்கழக காவாலிகள் மாணவிகள் மீது காம வெறி!! தற்கொலைக்கு முயன்ற மாணவி!! யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளனர். குறித்த மாணவர்கள் க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு சேரவுள்ள மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களை வாங்கி மிகக் கேவலமான முறையில் உரையாடி வருகின்றனர். இரண்டாம் இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள இணைப்பை அழுத்தி வாசியுங்கள்…. https://vampan.net/?p=12584 இவர்களின் தொல்லை தாங்காது மாணவி ஒருவர் பயத்தின் காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த …

  11. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் அவருடைய குழுவினரும் வட மாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸூடன் கலந்துரையாடியுள்ளனர். இன்று நண்பகல் ஆளுனர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது வடக்கில் மேம்படுத்தப்படவேண்டிய ஏற்றுமதித்துறை, சுற்றுலாத்துறை, விருந்தோம்பல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான கற்கைநெறிகள். தாதியர்களுக்கான சர்வதேச தரத்திலான கற்கைநெறி, என்பன தொடர்பில் பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டன. அடுத்த 5 வருடத்திற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆர்வத்தை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆவலுடன் வெளிப்படுத்தினார். குறிப்பிட்ட துறைகளில் முன்னெடுக்கக்கூடிய திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து சாத்தியப்படக் கூடியவற்றை விரைந்து செ…

    • 0 replies
    • 372 views
  12. பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்கள், மீண்டும் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. பகிடிவதை குறித்து ஆராய்வதற்காக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நியமித்த குழு இதற்கான நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளது. இந்த குழு தமது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான மாணவர்கள், பகிடிவதை காரணமாக தமது பல்கலைக்கழக கல்வியை இடையிலேயே நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையிலேயே குறித்த மாணவர்கள் அனைவரும் மீண்டும் தங்களது கல்வியை தொடருவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/sri…

    • 0 replies
    • 436 views
  13. -எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி - தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணிக்குப் பின்புறமாக உள்ள காணியில் வசித்து வரும் மக்களை, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் துணையுடன் இராணுவத்தினர், இன்று (10) வௌியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இதனால், அப்பகுதி மக்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவத்தைக் கேள்வியுற்று ஸ்தலத்துக்கு வருகைந்த கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா, அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார். இதன்போது கருத்துரைத்த அப்பகுதி மக்கள், இந்தக் காணியில், தாங்கள் 1996ஆம் ஆண்டில் குடியேறி வாழ்ந்து வந்த போது, மாவீரர் துயிலுமில்ல பாதுகாப்பு காரணங்களுக்காக, தாம் அப்பகுதியில் இருந்து தற்காலிகமாக வௌியேறிதாகத் தெரி…

  14. -சுப்பிரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன், நடராசா கிருஸ்ணகுமார் கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில், புதையல் தோண்ட முற்பட்ட இராணுவ உயரதிகாரி உட்பட்ட 21 பேரை, விசேட அதிரடிப்படையினர், இன்று (09) கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்படவர்களிடம் இருந்து புதையல் தோண்டுவதற்கான பூஜை பொருள்கள், ஸ்கானர் இயந்திரம் உள்ளிட்ட பல பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைதுசெய்யப்படவர்களில் 5 இராணுவ அதிகாரிகளும் 5 இராணுவ வீரர்களும், 13 சிங்களவர்களும் 3 தமிழர்களும் உள்ளடங்குகின்றனரென, தர்மபுரம் பொலிஸார் கூறினர். http://www.tamilmirror.lk/வன்னி/இராணுவ-அதிகாரிகள்-உட்பட-21-பேர்-கைது/72-245178

    • 0 replies
    • 340 views
  15. நல்ல அரசியல் தலைமைத்துவமே நாட்டுக்குத் தேவை.! “சிங்களவரோ, தமிழரோ, முஸ்லிமோ எவராயிருந்தாலும் பாகுபாடு காட்டாத நல்ல அரசியல் தலைவனே நாட்டுக்குத் தேவை” என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் போக்கு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்களின் மனப்பாங்குகளும் அதன் மூலமாக அவர்களது செயற்பாடுகளுமே நாட்டை பாகுபாட்டின் மூலம் சீரழித்துள்ளதென சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த அரசியல் தலைவர்களின் வழிநடத்தல்களை புறந்தள்ளிவிட்டு, எதிர்கால இளம் அரசியல் தலைவர்கள் இனவாதம், மதவாதம், மொழி பேதம் கடந்து நாட்டை ஒருமைப்பாட்டின் தளமாகக் கட்டியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மதிப்ப…

  16. தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பை சீர்குலைக்க சதி தேசிய பல்கலைக்கழக கல்வி கட்டமைப்பை சீர்குலைப்பதற்கு சதி நடவடிக்கைகள் இடம்பெறுவதை தன்னால் உணரக்கூடியதாக இருப்பதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு இலங்கை மாணவர்களை உள்வாங்குவதற்காக பல்வேறு மூலோபாயங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். இதற்காக செயற்படும் சிலர் எவ்வாறாயினும் திறந்த பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்களில் ஆற்பாட்டங்களை முன்னெடுக்கின்றனர். அதனூடாக பல்கலைக்கழகங்கள் தனியார் மயப்படுத்தப்படுவதாக தெரிவித்து மாணவர்களை தவறான வளியில் இட்டுச் செல்ல முயற்சிக்கின்றனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். பல்கலைக்கழகங்களுக்கு வரும் ம…

    • 1 reply
    • 396 views
  17. இந்த மாதத்திற்குள் பாராளுமன்றம் கலைக்கப்படும்? பாராளுமன்றத்தை இந்த மாதத்திற்குள்ளே கலைப்பதற்கு ஆராயப்பட்டு வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதிக்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கக் கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும் நிலையில் அதற்கு முன்னர் இந்த மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் யோசனையொன்றை கொண்டு வந்து அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றி பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வதற்கு ஆராயப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மார்ச் மாதத்தில் கலைத்தால் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் ஏப்ரல் இறுதியிலேயே தேர்தலை நடத்த முடியுமாக இருக்கும் ஆனால் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னரே தேர்த…

  18. ஆட்கடத்தலை தடுக்க இலங்கைக்கு அமெரிக்கா நிதியுதவி by : Dhackshala இலங்கையில் ஆட்கடத்தலை தடுக்க அமெரிக்க அரசாங்கமானது 4 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. ஆட்கடத்தலுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகளின் ஆரம்ப நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரதானி அந்தோனி ரென்சுலீ இதனை தெரிவித்தார். ஆட்கடத்தலுக்கு எதிராக தாங்கள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனவும் அவர் தெரிவித்தார். மனித விற்பனை என்பது நாட்டினுள்ளும் நாடுகளின் எல்லைகளூடாகவும் நிகழும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு குற்றச்செயலாகும் என்றும் …

  19. கல்வியில் முன்னேற்றம் அடைவதன் மூலமே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் – அங்கஜன் by : Dhackshala கல்வியில் முன்னேற்றம் அடைவதன் மூலமே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பூநகரி முழங்காவில் ஆகிய பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் மக்கள் தொடர்பு அலுவலகங்கள் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “பொருளாதார ரீதியில் இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு இந்த புதிய அரசு தீர்மானித்துள்ளது. அந்த அடிப்படையில் பட்டதாரிகளுக்கும் வற…

  20. இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை விவகாரம் : மேலாண்மை ஆணையம் அமைக்க டக்லஸ் கோரிக்கை பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் கூட்டு கடல்சார் மீன்வள மேலாண்மை ஆணையகத்தை அமைக்கவேண்டும் எனவும் இந்த ஆணையத்தில் 2 நாடுகளை சேர்ந்த மீன்வளத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள், இலங்கை வடக்கு மாகாணம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் உட்பட 2 நாடுகளில் இருந்தும் தலா 7 உறுப்பினர்கள் இடம்பெறவேண்டும் எனவும் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட தூதுக்குழுவினர் கடந்த சனிக்கிழமை (08) பாராத பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்திய உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங…

  21. பிரதமர் மஹிந்த திருப்பதிக்கு விஜயம் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புத்தகாய மற்றும் திருப்பதி உள்ளிட்ட இடங்களில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். அதற்கமைய அவர் இன்று (திங்கட்கிழமை) இந்த விஜயங்களை மேற்கொள்ளவுள்ளதுடன், நாளை நாடு திரும்பவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கு அமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கடந்த 7ஆம் திகதி இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட அரச தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடினார். …

  22. விமல் வீரவன்ச அங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்- ரவிகரன் விமல் வீரவன்ச அங்கோடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டியவர் எனவும் காணாமல் ஆக்கப்பட்டோர்கள் குறித்த அரசாங்கம் தக்க பதிலை வழங்கவே வேண்டும் என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். “காணாமல் ஆக்கப்பட்டோர்களை மண்ணுக்குள்ளிருந்துதான் தோண்டி எடுக்கவேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் விடுதலைப் புலிகளே” என்பதான கருத்தை அண்மையில் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டிருந்தார். அவரின் இக்கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடுசெய்து கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் இவ்வாறு கூறியுள்ளார். அ…

  23. வவுனியாவில் வீதியில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் மாயம் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீதியில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வவுனியா சாந்தசோலை உபவீதி பூந்தோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபமே விசமிகளால் இன்று (திங்கட்கிழமை) உடைக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நிலையில், இச்செயற்பாடானது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடளித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். htt…

  24. இந்தியாவின் இராணுவ உதவியில்லாமல் யுத்தம் முடிந்திருக்காது – மஹிந்த இந்தியாவின் உதவியில்லாமல் 2009 ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்திருக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்துஸ்தான் ரைம்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த செவ்வியில் “இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கையின் 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவி உள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் எங்களுக்கு ஆயுதங்களையும் விமானங்களையும் பாகிஸ்தான் அளித்தது. இந்தியாவும் கூட இலங்கைக்கு உதவி செய்தது. ஆனால் அதை நாங்கள் பகிரங்கப்படுத்தவில்லை. இந்தியாவின் உதவி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் விடுதலைப் புலிகளுடனான யுத…

    • 6 replies
    • 1.2k views
  25. பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ 4 நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு அடுத்த மாதம் 7ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார். மஹிந்த பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர், செல்லும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவென்றும் தெரிவிக்கப்படுகின்றது. பிரதமரின் இந்த விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/பரதமர-மஹநத-அடதத-வரம-இநதய-பயணம/175-244863

    • 13 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.