ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142966 topics in this forum
-
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் உள்ள நினைவுத்தூபி ஒன்று இடிக்கப்படுகின்றது. புத்தூர் வாதரவத்தை வீதியில் புத்தூர் தகரம்பிள்ளையார் ஆலயத்திற்கு வடக்கு பக்கத்தில் வீதியின் அருகே அமைந்துள்ள நினைவுத்தூபி ஒன்று கடந்த சில நாட்களாக இடிக்கப்பட்டுள்ளது. இந்திய அமைதிப்படையினர் புத்தூர் கிழக்கு பகுதியில் மேற்கொண்ட படுகொலையில் 09 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். அம்மக்களின் நினைவாக நினைவுத்தூபி ஒன்று அப்பகுதி மக்களினால் அமைக்கப்பட்டிருந்தது. இத்தூபி கடந்த 2002ம் ஆண்டில் செம்மையாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அந்த மக்கள் தூபி இன்று இராணுவத்தினரால் இடிக்கப்பட்டு வருகின்றது. இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் கட்டிட நிர்மாண பணிகளுக்கு தேவையான கற்களை பெறுவதற்காக இத்தூபி இடிக…
-
- 1 reply
- 1.4k views
-
-
மைத்திரி ஆட்சியிலும் பயங்கரவாத தடைச்சட்டம் – பகீரதி மீது பாய்ந்தது MAR 06, 2015 | 5:04by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் பிரான்சில் இருந்து வந்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட, முருகேசு பகீரதி என்ற பெண்ணை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு தடுத்து வைத்திருப்பதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் தனது தாய், தந்தையரைப் பார்ப்பதற்காக வந்து திரும்பிய போது, 41 வயதான, பகீரதியும் அவரது 8 வயது மகளும் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பகீரதி, 1997ம் ஆண்டு தொடக்கம், 2000ம் ஆண்டு வரை கடற்புலிகளின் தளபதியாக இருந்தவர் என்று கூறியே சிறிலங்கா காவல்துறை அவரை கைது ச…
-
- 0 replies
- 462 views
-
-
பெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு… November 14, 2018 பாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆளும் தரப்பு உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்தினர். இதனையடுத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அரசாங்கம் இல்லை என்று அறிவித்த சபாநாயகர் பாராளுமன்றத்தை நாளை காலை 10.00 மணி வரை ஒத்தி வைத்தார். http://globaltamilnews.net/2018/103231/
-
- 1 reply
- 416 views
-
-
ஞாயிறு 20-05-2007 01:26 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] வெடிவிபத்தில் நான்கு போராளிகள் வீரச்சாவு கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை எதிர்பாராதமாக விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில், நான்கு போராளிகள் வீரச்சாவை தழுவியிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். லெப்.கேணல் மறவன், மேஜர் பிரியன் அல்லது காவியன், மேஜர் அன்பரசி, கப்டன் அருந்தா ஆகிய நான்கு போராளிகளே, வெடிவிபத்தில் வீரச்சாவை அணைத்துக் கொண்டுள்ளனர். இதனிடையே கடந்த மாதம் 23ஆம் நாளன்று, வடமராட்சி கடற்பரப்பில் நீரில் மூழ்கி, கப்டன் வதனன் என்றழைக்கப்படும், கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்த, தெய்வேந்திரன் ஞானரதன் என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார். மன்னார், வவுனியா பாலமோட்டை ஆகிய களமுனை…
-
- 2 replies
- 1.8k views
-
-
நாட்டை படுகுழியில் தள்ள கொடிய சூழ்ச்சி இடம்பெறுகிறது: ஐ.தே.க. தலைவர் நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்து பெற்றுக்கொண்ட ஜனநாயக, மனித உரிமைகள் மற்றும் கௌரவத்தை அழித்து படுகுழியில் தள்ள கொடியதோர் சூழ்ச்சி இடம்பெறுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இச்சந்தர்ப்பத்தில் நபிகளின் வாழ்க்கை முன்மாதிரியானது, ஆட்சியமைப்புக்கும் இன்றைய சூழ்நிலைக்கும் அவசியமாக உள்ளதென்றும், அதனை பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மீலாதுன் நபி பிறந்ததினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இச்சந்தர்ப்பத்தில் தமது பொறுப்பினை கைவிடாது அமைதியான, கண்ணியமான தேசத்திற்காக பாடுபடும் சக…
-
- 0 replies
- 564 views
-
-
28 SEP, 2023 | 05:19 PM நுவரெலியா கிரேண்ட் ஹோட்டலில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸுக்கும் மலையக மக்கள் முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (28) வியாழக்கிழமை இடம்பெற்றது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான இராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணியின் பதில் பொதுச் செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு இச்சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், நுவரெலியா கிரேண்ட் ஹோட்டலுக்கு வருகை தந்திருந…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-
-
சிங்கள அரசின் தமிழினப் படுகொலை – வைக்கோவின் விளக்கம்!(காணெளி) Published on July 28, 2011-10:24 am No Comments சிங்கள் பேரினவாத அரசின் தமிழினப் படுகொலை தொடர்பாக ஐ.நா நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கைக்கு பொருத்தமான காட்சிகள் இணைக்கப்பட்டு வைக்கோ அவர்கள் காணொளி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் முழு வடிவத்தை அப்படியே இங்கு தருகிறோம். http://www.saritham.com/?p=27967
-
- 1 reply
- 729 views
-
-
தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் எனும் செயற்திட்டத்தை முன்னெடுத்தலின் போது புலம்பெயர் சமூகத்தை புறக்கணித்துச் செயற்பட முடியாது. அவர்களும் இணைத்துக்கொள்ளப்படுதல் அவசியமாகும். எனினும் அரசியல் ரீதியிலான சில காரணங்களாலேயே சில அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டன. என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எஸ்.பீரிஸ் நேற்று சபையில் தெரிவித்தார். தென்னாபிரிக்க அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் அந்நாட்டுக்குள் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவ்வாணைக்குழுவின் செயற்பாடுகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை இலங்கைக்கு கிடையாது என்றும் குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 341 views
-
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நினைவு தூபி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் சங்கம் மட்டு காந்தி பூங்காவில் நினைவு தூபி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் சங்க தலைவர் கே. கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டு நகரசபை பிரதி மேஜர் எஸ்.சத்தியசீலன் மாநகரசபை ஆணையாளர் கே. சித்திரவேல் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு இந்து சமய சடங்குகளுடன் நினைவு தூபிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துனர். குறித்த நினைவு தூபி பேனா வடிவிலான தூபியாக அமைக்கப்படவுள்ளமை குறிப்பிப்படவுள்ளது http://www.virakesari.lk/article/45160
-
- 0 replies
- 312 views
-
-
தலைமைத்துவப் பயிற்சிக்கு சென்ற மாணவி உயிரிழப்பு சிறிலங்கா அரசினால் பல்கலைக்கழக புகுமுக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற தலைமைத்துவ பயிற்சியில் தியத்தலாவை இராணுவ முகாமில் தலைமைத்துவப் பயிற்சியில் பங்கேற்ற மாணவி ஒருவர் கடந்த 29ம் திகதி உயிரிழந்துள்ளார். இவர் குறித்த இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து பதுளை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பயனளிக்காத நிலையிலேயே மாணவி உயிர் இழந்து உள்ளார். உயிரிழந்தவர் நிசாந்தி மதுஷானி ( வயது - 24 ) என்பவராவார். இவர் மாசு நிறைந்த சூழலில் தங்கி இருந்தமையால் அசுத்தக்காற்றினை சுவாசித்ததன் காரணமாக சுவாசப் பையினுள் கி…
-
- 1 reply
- 551 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தை வௌியிட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று(19) விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, அப்போதைய மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் எழ வேண்டும் என கருத்து வௌியிட்டதாகக் கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த கூற்றானது, அரசியலமைப்பின் 06 ஆவது பிரிவின் திருத்தம், 1978 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் ச…
-
- 0 replies
- 376 views
- 1 follower
-
-
தமிழர் வாழ்நிலை எதை நோக்கிச் செல்லும் ? ஈழவாணி இலங்கையில் போர் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதும், தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான நகர்வு இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை இறுதிப்போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக. போர் முடிந்ததும் அரசியல் தீர்வு ஒன்று காணப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவாதம் அளித்திருந்த போதும், இதுவரை அது எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. போரினால் இடம்பெயர்ந்து துன்பப்படும் தமிழர்கள் அனைவரையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு துரித கதியில் மேற்கொள்ள வேண்டும், அவ்வாறு நடக்காத பட்சத்தில் அவர்களை நோக்கிய நிலை மிகப் பரிதாபகரமே. யுத்தம்நடந்து முடிந்…
-
- 1 reply
- 850 views
-
-
முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு, விநாயகர்புரம் கிராமத்துக்கான ஏற்றுநீர்ப்பாசனத் திட்ட புனரமைப்புப் பணிகள் முடிவடைந்துள்ளதாக விநாயகபுரம் கமக்கார அமைப்பு புதன்கிழமை (01) தெரிவித்தது. முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளத்தின் கீழ் சுமார் 6,000 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளக்;கூடியதாகவும் 10க்கும் மேற்பட்ட ஏற்று நீர்ப்பாசனத் திட்டங்களையும் கொண்ட ஓர் பாரிய குளமாக காணப்படுகின்றது. 1980ஆம் ஆண்டுக்கு பின்னர் யுத்தம் காரணமாக குளத்தின் ஏற்று நீர்ப்பாசனத்திட்டங்கள் செயலிழந்;த நிலையில் காணப்பட்டன. முரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் 600 மில்லியன் ரூபாய் நிதியில் வவுனிக்குளம் புனரமைக்கப்பட்டதுடன், அதன் கீழான ஏற்று நீர்ப்பாசனத்திட்டங்களும் அபிவிரு…
-
- 1 reply
- 517 views
-
-
வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூர் கைத் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் கண்காட்சி வடக்கு மாகாண இணைப்பாளர் கு,ரவிக்குமார் தலைமையில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சுமற்றும் தேசிய கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றமும் இணைந்து இந்தக் கண்காட்சியை நடாத்தவுள்ளன. இந்தக் கண்காட்சியில் இயற்கை முறை விவசாய பயிர்கள், மா வகைகள், எண்ணெய் வகைகள்,பனம் உற்பத்தி பொருட்கள் ,பால் உற்பத்தி பொருட்கள் ,துணி வேலைபாடுகள்,மர வேலை பாடுகள் ,மூலிகை குடிபானங்கள்,கடதாசி உற்பத்திகள்,உணவுகள், இயற்கையான மரக்கறிகள் போன்ற 7…
-
- 2 replies
- 1k views
-
-
உலகிற்கு சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்க வேண்டியவர்களின் தரங்கெட்ட செயற்பாடுகள் தொடர்பில் பௌத்த பீடங்கள் அக்கறை செலுத்த வேண்டும் : அமைச்சர் டக்ளஸ்! kugen தேசிய நல்லிணக்கத்தினை சிதைக்கும் வகையிலான எகதாளப் பேச்சுக்களும் சண்டித்தனங்களும் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தர்மத்தை போதிக்க வேண்டிய சிலரின் தரம் கெட்ட வார்த்தைகளும் செயற்பாடுகளும் வேதனையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தன தேரரின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பாக இன்று சனிக்கிழமை (28) கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், "துரதிஸ்டவசமாக இந்ந…
-
- 1 reply
- 266 views
-
-
21.08.11 கவர் ஸ்டோரி என் மகன் குற்றமற்றவன். அவனை விடுதலை செய்யுங்கள்’’ என்ற குரலோடு நீதி கேட்டு அற்புதம்மாள் நடக்கத் தொடங்கி, இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது. மகனின் தூக்குத்தண்டனை மீதான கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்னமும் வேகத்தோடும், நம்பிக்கையோடும் அதிகாரத்தின் கதவுகளை தட்டத் தொடங்கியிருக்கிறார் அற்புதம்மாள். அற்புதம்மாள்? முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் தாயார். பத்தொன்பது வயதில் இவர் மகன் அறிவை விசாரணைக்கென அழைத்துச் சென்றது சி.பி.ஐ.! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அவனுக்குத் தொடர்பு இ…
-
- 0 replies
- 1.2k views
-
-
December 14, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவும் நேற்றைய தினம் இரவு சந்தித்து உரையாடியுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்தமை தவறு என நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், நடைபெற்ற இந்த சந்திப்பின்போது சபாநாயகர் கருஜெய சூரியவை பிரதமராக நியமிக்க தான் விரும்புவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். எனினும் ரணில் விக்கிரமசிங்க இதற்கு இணங்கவில்லை என்று தெரிவிக்கப…
-
- 6 replies
- 638 views
-
-
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றி அவர்களின் சொந்த ஊர்களுக்கு சிறிலங்க காவல்துறை அனுப்பி வைத்ததற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பை சிறிலங்க அரசு சந்தித்து வருகிறது! வடகிழக்கு மாகாணங்களில் வசித்து வரும் தமிழர்கள் வாழ்வதற்கு வழியின்றி, அவர்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு துன்பத்திலும், துயரத்திலும் உழன்று கொண்டிருக்கும் நிலையில் அயல்நாடுகளுக்குச் சென்று வேலை தேடி பிழைப்பதற்காக கொழும்பு வந்து அங்குள்ள மிகக் குறைந்த கட்டண தங்கும் இடங்களில் தங்கியிருந்தபோதுதான் அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து சிறிலங்க காவல்துறை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வவுனியா, மட்டக்களப்பு உள்ளிட்ட அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத…
-
- 0 replies
- 1k views
-
-
கொழும்பு: இலங்கைக்கு வருமாறு அதிபர் மகிந்த ராஜபக்சே விடுத்த அழைப்புக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை என்று அந் நாட்டு வெளிவிவகார அமைச்சகம் கூறியுள்ளது. அந் நாட்டின் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாக அந் நாட்டின் சண்டே லீடர் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கையின் வன்னிப் பகுதியில் போருக்குப் பிந்தைய நிலைமைகள் குறித்து நேரில் அறிந்து கொள்ள இலங்கை கொழும்புக்கு வருமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிபர் ராஜபக்சே சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தார். டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி மூலம் இந்த அழைப்புக் கடிதம் நேரில் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அந்த அழைப்புக்கு இதுவரை தமிழக முதல்வர…
-
- 0 replies
- 386 views
-
-
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் தனது 4 வயது மகளை அடித்து துன்புறுத்திய நபருக்கு 2 வருடங்கள் சிறை தண்டணை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. குறித்த நபர் தனது மனைவியைப் பிரிந்து தனது மகளுடன் வாழ்ந்து வந்த நிலையிலேயே இவ்வாறு தனது மகளை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. அத்துடன் தனது மகளை துன்புறுத்தும் வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் குறித்த நபர் பகிர்ந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. இச்சம்பவம் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதேசமயம் அச்சிறுமியும் சிறுவர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் குறி…
-
- 0 replies
- 383 views
-
-
சனிக்கிழமை, 27, ஆகஸ்ட் 2011 (23:52 IST) முருகன், சாந்தன்,பேரறிவாளன் மூவரும் தனித்தனி அறைகளில் அடைப்பு; வெளியே வர அனுமதி இல்லை முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கு நிறைவேற்றுவதற்கான உத்தரவை வேலூர் ஜெயிலுக்கு சிறைதுறை டி.ஐ.ஜி. கோவிந்தராஜ் கொண்டு வந்தார். தூக்கு போடும் தேதி மற்றும் விவரங்களை ஜெயில் அதிகாரிகள் 3 பேரிடமும் தனிதனியாக கூறினர். இதனை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனையடுத்து 3 பேரும் தனி, தனி சிறைகளில் அடைக்கப்பட்டனர். அறையை விட்டு அவர்கள் வெளியே வர அனுமதி இல்லை. அவர்களை பார்ப்பவர்கள் வெளியில் இருந்து உணவு பண்டங்கள் கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 3 வேலையும் ஜெயில் உணவு மட்டுமே வழங்…
-
- 0 replies
- 1k views
-
-
ஐக்கிய சேதியக் கட்சியினால் மிகவும் திட்டமிட்ட முறையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தும் சூழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்ற சந்தேகம் இருப்பதாக மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, லஞ்ச, ஊழல் விசாரணைக் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறித்து கேட்டபோதே மகிந்த அமரவீர இதனை ஶ்ரீலங்க மிரர் இணையத்திற்குத் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனகூட இதனை அறிந்திருக்கவில்லையெனக் கூறுகின்ற அமைச்சர் மகிந்த அமரவீர, இந்த நடவடிக்கைக்கு எதிராக தான் உள்ளிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கையெழுத்திட்டுள்ளதாக மேலும் கூறினார். http://www.tamil.srilankamirror.com/news/…
-
- 0 replies
- 345 views
-
-
அமைச்சர்களின் எண்ணிக்கை 30இற்கும் அதிகமாக இருக்க வேண்டும்….. December 27, 2018 தற்போதைய அமைச்சரவையின் அமைச்சர்களின் எண்ணிக்கை 30இற்கும் அதிகமாக இருக்க வேண்டுமென அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இலங்கையில் 58 அமைச்சர்களைக் கொண்ட பெரிய அமைச்சரவையொன்று மஹிந்தவின் காலத்திலேயே காணப்பட்டது. இந்த அரசாங்கத்தை கொண்டு செல்ல இடமளிக்க வேண்டும் என கோரியுள்ள அவர், அமைச்சர்களின் எண்ணிக்கை 35,36 ஐத் கடந்தாலும் பிரச்சினையில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனியான அதிகாரம் இருக்குமாயின் 30 அமைச்சர்கள் என்பது சரியானதே, ஆனால் ஏனைய கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் போது 30 அமைச்சர்கள் என்ற மட்டுபாடு கடினமானது எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையி…
-
- 0 replies
- 332 views
-
-
புதன் 27-06-2007 18:28 மணி தமிழீழம் [முகிலன்] இந்தியப் படையினரால் கைப்பற்றமுடியாத தொப்பிக்கலையை எமது படையினர் இன்னும் சில தினங்களில் விடுவிப்பர் - ஹெகலிய ரப்புக்வெல இலங்கைக்கு வந்த இந்திய சமாதானப் படையினரால் கூட கைப்பற்ற முடியாமல் போன தொப்பிகலை (குடும்பி மலை) பிரதேசத்தை எமது பாதுகாப்புப் படையினர் இன்னும் சில தினங்களில் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விடுவர். இப்போது 99 வீதமான பிரதேசத்தை அவர்கள் விடுவித்துள்ளனர் என தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே …
-
- 4 replies
- 2.6k views
-
-
பதிந்தவர்: ஈழப்பிரியா வெள்ளி, 2 செப்டெம்ப்ர், 2011 தனுவின் நெற்றியில் இருந்த பொட்டு ராஜீவ் காந்தி படுகொலை மீண்டும் எழும் சந்தேகங்கள். மறைந்த பாராதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம் தொடர்பாக திருச்சி வேலுச்சாமி குமுதம் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியில் இதுவரை வெளிவராத இரகசியங்கள் பலதை வெளியிட்டுள்ளார். ராஜீவ்காந்தியைக் கொல்வதற்கு வெடிகுண்டு கட்டிச் சென்ற பெண் என்று கூறப்படும் தனுவின் நெற்றியில் உள்ள பொட்டை முக்கிய தடயமாக அவர் முன் வைத்தார். வெடிகுண்டு வெடிப்பதற்கு சுமார் 15 நிமிடங்கள் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சிவராசனுக்கு அருகில் மாலையுடன் நிற்கும் தனுவின் நெற்றியில் பொட்டு இல்லை. வெடிகுண்டு வெடித்து சிதறிக்கிடக்கும் தனுவின்…
-
- 0 replies
- 952 views
-