ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளதன் மூலம் நாட்டில் அராஜகம் தலை தூக்கியுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று(புதன்கிழமை) பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நாடாளுமன்றத்தை அரசியல் சேறு பூசும் செயற்பாடுகளில் இருந்து விடுவித்து அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் இடமாக மீண்டும் மாற்றுவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. மேலும் தற்போது வெளிவரும் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளின் மூலம் கடந்த அரசாங்கம் நீதிமன்ற செயற்பாடுகளில் எந்தளவிற்கு தலையீடு செய்துள்ளது என்பது புலப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளின் …
-
- 1 reply
- 309 views
-
-
நுவரெலியாவில் இரு பல்கலைக்கழகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மலையகத்தின் கல்வி செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நுவரெலியா – சந்ததேன்ன என்ற இடத்தில் அமைந்துள்ள இலங்கை வனவியல் நிறுவனம், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வியை வழங்க முழுமையான பல்கலைக்கழகமாக உருவாக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அதேபோன்று நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பகுதியில் மேலுமொரு தனி பல்கலைக்கழகம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார். http://athavannews.com/மலையகத்தில்-இரு-பல்கலைக்/
-
- 0 replies
- 431 views
-
-
அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்! (மட்டக்களப்பு, தமிழீழம்) தென் தமிழீழம் மட்டக்களப்பு நகரில் உள்ள ‘சிறீ மக்களராம ராஜமகா வித்தியாராஜா’ என்ற பௌத்த விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமணரத்தின தேரர் அருட் தந்தை ஒருவருக்கு கன்னத்தில் அறையும் காணொளி பெரும் அதிர்ச்சியை தமிழர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. . மேற்படி சம்பவம் பற்றி அறியப்படுவதாவது பெந்திகோஸ் மத அமைப்பின் அருட் தந்தை இறந்தவர்கள் கடைசியல் எங்கே போகிறார்கள் என கேட்க ‘நீ எனக்கு மதம் படிப்பிக்க முயல்கிறாயா?’ என அம்பிட்டிய சுமணரத்தின தேரர் அருட் தந்தைக்கு கன்னத்தில் அறைந்துள்ளார். மேற்படிக் காணொளியும் தமிழில் விளக்கமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது. …
-
- 232 replies
- 22.8k views
-
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் சிங்கள மாணவர்கள் தqங்கியிரு்கும் வீடொன்றிலிருந்து வாள் ஒன்று மீட்கப்ட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அருகில் உள்ள விடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது. யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் பலர் குறித்த வீட்டில் தங்கியுள்ளனர்.அந்த வீட்டின் மேல் தளத்தில் வா் ஒன்று இருப்பதாக வீட்டு உரிமையாளரால் தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து குறித்த வீட்டுக்குச் சென்ற பொலிஸார் அந்த வாளை மீட்டனர்.ஆனால் இந்த வாள் இருந்தமை தொடர்பாக தமக்குத் தெரியாது என அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் தெரிவித்தனர்.…
-
- 4 replies
- 946 views
-
-
சிங்கள பௌத்த இராஜ்சியத்தை ஸ்தாபிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை – டலஸ்! சிங்கள பௌத்த இராஜ்சியத்தை ஸ்தாபிப்பது எமது நோக்கமல்ல என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தமிழ் – முஸ்லிம் மக்களை புறக்கணித்து தனி பௌத்த இராஜ்ஜியத்தை தோற்றுவிக்கும் விதத்தில் தேர்தல் சட்டத்தினை திருத்தியமைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்தரப்பினர் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள். எந்த இன மக்களையும் ஓரங்கட்டி செயற்பட வேண்டும் என்பது ஜனாதிபதியின் நோக்கமல்ல’ எனக் …
-
- 3 replies
- 715 views
-
-
சிங்கள மக்கள் விரும்பும் தீர்வே தமிழ் மக்களுக்கு கிடைக்கும்.! நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அரசியல் தீர்வுக்கான எமது பணிகள் ஆரம்பமாகும். அந்தத் தீர்வு சிங்கள மக்கள் விரும்புகின்ற தீர்வாகத் தான் இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பதில் கொடுத்துள்ளார் பிரதமர் மகிந்த ராஜபக்ச. அதிகாரப் பகிர்வு குறித்து சிந்தித்தால் மட்டுமே அபிவிருத்தி சாத்தியமாகும். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்க வேண்டும். அப்போது தான் சர்வதேச முதலீடுகள், அபிவிருத்திகள் என அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜ…
-
- 3 replies
- 718 views
-
-
கடவுள் புண்ணியத்தில் நான் தப்பிவிட்டேன்- பிரதமர் மஹிந்த தான் ரஞ்ஜன் ராமநாயக்கவுடன் பேசியதில்லையெனவும், கடவுள் புண்ணியத்தில் நான் தப்பிவிட்டேன் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எனது அதிர்ஷ்டம் நான் பேசவில்லை. பிறந்த தினத்தன்று வாழ்த்து தெரிவிப்பது மட்டுமே என்னால் நடந்தது. தவறுதலாக நானும் பேசியிருந்தால் நிச்சயமாக அதனையும் வெளியே விட்டிருப்பார்கள். நேற்று (09) அலரி மாளிகையில் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம், பிரதமரே நீங்களும் ரஞ்சனுடன் பேசினீர்களா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற…
-
- 2 replies
- 905 views
-
-
முக்கிய பெண் பிரமுகர்கள் சிக்கும் அபாயம் – ரஞ்சனின் குரல்பதிவுகளை வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தம்! நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை வெளியிடுவது இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மாதிவெல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் வைத்து ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். இதன்போது அவரிடமிருந்து இறுவெட்டுக்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. இவ்வாறு கைப்பற்றப்பட்டிருந…
-
- 3 replies
- 493 views
-
-
முதலாவது அனைத்துலகத் தமிழியல் மாநாடு, யாழ்.பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்! முதலாவது அனைத்துலகத் தமிழியல் மாநாடு, யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. ‘வரலாற்றுப் போக்கில் தமிழியல் ஆய்வுகள்’ எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு ஆரம்பமாகியுள்ளது. குறித்த மாநாடு யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறை பிரிவின் ஏற்பாட்டில், தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ம.இரகுநாதன் தலைமையில் நடைபெற்று வருகின்றது. இன்றைய நிகழ்வின் போது ஆய்வரங்க கட்டுரை வெளியீட்டு தொகுதியை தமிழ்த்துறை தலைவர் இரகுநாதன் வெளியிட்டு வைக்க, தகுதி வாய்ந்த அதிகாரி கந்தசாமி பெற்றுக்கொண்டுள்ளார். இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழ…
-
- 2 replies
- 812 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் அலைபேசிக் கலந்துரையாடல்கள் அடங்கிய குரல் பதிவுகளை, பொலிஸாரே சமூக வலைத்தளங்களுக்கு வெ ளியிட்டனர் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், உண்மைக்குப் புறம்பானவை என்றும் அந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கும் குரல் பதிவுகள் தொடர்பான பொறுப்பு, இதுவரை காலமும் அவற்றைக் கூடவே வைத்திருந்தவர்களையே சாருமென்றும் இது விடயத்தில் பொலிஸார் மீது குற்றச்சாட்டு முன்வைப்பது, விசாரணைகளுக்குத் தடையாக இருக்குமென்றும் இது பற்றிய தவறான கண்ணோட்டமொன்று, பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் என்றும், பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்து குற…
-
- 1 reply
- 1.1k views
-
-
மரண தண்டனைக் கைதியான துமிந்த சில்வாவை, ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரைக் கடுமையாகத் திட்டியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் சிலரும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலருமே, நேற்று முன்தினம் (08) ஜனாதிபதியைச் சந்தித்து, இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அப்போது அவர்கள், ரஞ்சன் ராமநாயக்க எம்.பியின் அலைபேசிக் கலந்துரையாடல்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளால், சாதகமான சூழ்நிலையொன்று தோன்றியிருப்பதாகவும் இதைப் பயன்படுத்தி, து…
-
- 1 reply
- 404 views
-
-
யாழில் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் தாங்க முடியாமல் தாயும் தனக்கு தானே தீ மூட்டினார் யாழில் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் தாங்க முடியாமல் தாயும் தனக்கு தானே தீ மூட்டியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தற்கொலை செய்த மாணவி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவர், நீண்ட நேரமாக அழுது கொண்டு இருந்துள்ளார்.தொலைபேசி கதைத்துக் கொண்டு சென்ற பேரப் பிள்ளையை காணாத அம்மம்மா, வீட்டுக்குள் சென்று பார்த்தபோது குளியலறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த திடீர் மரண விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மற்றும் பொலிசார் விசாரணை மேற்கொ…
-
- 1 reply
- 431 views
-
-
இதுவரை 300 க்கும் அதிகமானவர்களிடம் வாக்குமூலம் பதிவு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு இதுவரை 300 க்கும் அதிகமானவர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளது. ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவு செய்த நபர்களிடம் இருந்தும் அதேபோல் முறைப்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களிடம் இருந்தும் இவ்வாறு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார். இதற்கமைய இதுவரை 345 பேரிடம் ஆணைக்குழு வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளது. ஆணைக்குழுவின் பதவி காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதுடன், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்னும் பலரிடம் வாக்குமூலங்கள் பதிவ…
-
- 0 replies
- 851 views
-
-
புகையிரத தண்டவாள பாதைகள் இன்னும் இருமாத காலத்திற்குள் நவீனமயப்படுத்தப்படுவதுடன், புகையிரத சாரதிகளாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான நடவடிக்கைகளும் துரிதமாக முன்னெடுக்கப்படும் என புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாநயக்க தெரிவித்தார். பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்ட புகையிரத தண்டவாள பாதைகளே இன்றும் காணப்படுகின்றன. பல வருட காலமாக இப்பாதைகள் சீர்திருத்தம் செய்யப்படவில்லை. இதன்காரணமாக புகையிரத சேவையில் பல நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளன. புகையிரத தண்டவாள பாதைகளை நவீனமயப்படுத்தி புகையிரத சேவையினை வினைத்திறனாக மாற்றியமைக்கும் யோசனை போக்குவரத்து அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஆரம்பகட்டமாக புக…
-
- 0 replies
- 553 views
-
-
(நா.தனுஜா) போர்க்கால மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவும், புதிதாக நியமனம் பெற்றுள்ள ஏனைய அதிகாரிகளும் அண்மைக்காலமாக மனித உரிமைகள் சார்ந்த விவகாரங்களில் பெற்ற நன்மைகளை விரைந்து சீர்குலைக்கின்றனர் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி சாடியிருக்கிறார். அத்தோடு மனித உரிமைகள் பாதுகாப்பு குறித்த உத்தரவாதத்தின் பேரில் ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக வாய்ப்புக்களை இலங்கைக்கு வழங்கும் நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறும் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். பயங்கரவாதத் தடைச்சட்டம் 1978 ஆம் ஆண்டு தற்காலிகமாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அது பின்னர் எண்ண…
-
- 0 replies
- 284 views
-
-
பதற்ற நிலை குறித்து சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்ட அறிவித்தலுக்கு விளக்கம் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை குறித்து சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகம் அந்நாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு விடுத்த விசேட அறிவித்தலுக்கு விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வெளியிட்ட அறிவித்தலில், அதிக சனநடமாட்டம் உள்ள இடங்களிலிருந்து ஒதுங்கியிருக்குமாறும், அவசியமற்ற வெளிப்பயணங்களை தவிர்ந்து கொள்ளுமாறும் தூதரகம் கேட்டுள்ளது. தனது கடவுச் சீட்டை எந்த நேரத்திலும் தயாராக வைத்திருக்குமாறும் சவுதி தூதரகம் அந்நாட்டிலுள்ள இலங்கையர்களைக் கேட்டுள்ளது. பின்னர், அந்த அறிவித்தல் குறித்து விளக்கமளிக்கும் மற்றுமொரு அறிவ…
-
- 0 replies
- 384 views
-
-
யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்கரைச் சந்தியில் அமைந்துள்ள லவ்லி கூல்பாரில் நேற்று இனந்தெரியாதகாடையர்களால் களவு நோக்கத்துடன் நடத்தப்பட்ட வெறித்தனத்தில் லவ்லி ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த ஊழியரைக் கொலைசெய்யும் நோக்கத்துடன் அவர்கள் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறைகுடிபோதை வெறித்தனத்துடன் நடந்துகொண்ட காட்டுமிராண்டி காடையர்களை இனங்காண்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும்.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-யாழ்மாநகரசபைக்குச் சொந்தமான பண்ணை கடந்கரைப் பூங்காவில் பகல் வேளைகளிலும் மாலை வேளைகளிலும் இரவு வேளைகளிலும் இளைஞர்கள் மது அருந்துவதும், பல ஜோடிகள் தகாத நடவடிக்கையில் ஈடுபடுகின்றமையும் கண்…
-
- 2 replies
- 571 views
-
-
நாட்டில் வாழும் 20 இலட்சம் முஸ்லிம்களில் கடந்தகாலத்தில் சுமார் 200 க்குட்பட்ட முஸ்லிம்களே தீவிரவாதிகளென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்கள். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா முழு முஸ்லிம் சமூகத்தையும் தீவிரவாதிகள் போன்று கருதுவதும், முஸ்லிம்கள் புலனாய்வுப் பிரிவின் உயர்பதவியில் இருக்கக்கூடாது என்பதும் கண்டிக்கத்தக்கதாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பிரதியமைச்சரும், அக்கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். புலனாய்வுப் பிரிவின் முக்கிய பதவியில் முஸ்லிம் ஒருவரை நியமித்துள்ளமைக்கு பாராளுமன்றத்தில் தனது உர…
-
- 3 replies
- 964 views
-
-
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்சவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் பேணப்பட்டமை அம்பலமாகியுள்ளது. அவ்விருவரும் மிக நெருக்கமாக, தொலைபேசியில் உரையாகும் ஒலிப்பதிவு, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ரஞ்சன் ராமநாயக்கவை விமல் வீரவன்ச பகிரங்கமாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், விமலின் மனைவி ஷசி வீரவன்ச. ரஞ்சனுடன் நெருக்கமாக உரையாடுவது எதற்கென பலரின் மத்தியிலும் சந்தேகம் எழுந்துள்ளது. முக்கிய நபர்களுடன், ரஞ்சன் ராமநாயக் தொலைபேசியில் உரையாடியமை தொடர்பிலான பதிவுகள் அடங்கிய சி.டீக்கள், பொலிஸாரினால் அண்மையில் கைப்பற்றப்பட்டது. அதில்,…
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கும், உலகத்திற்கும் முஸ்லிம் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கின்ற நிலையில் தேசிய புலனாய்வு அதிகாரியாக முஸ்லிம் ஒருவரை ஏன் நியமித்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன், தமிழ் பயங்கரவாத சூழல் ஒன்று இருந்த நேரத்தில் தமிழ் புலனாய்வு அதிகாரியை நியமித்திருந்தால் யுத்தத்தை முடித்திருக்க முடியுமா எனவும் அவர் கேட்டுள்ளார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான இரண்டு நாட்கள் விவாதம் நேற்று ஆரம்பமாகியது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தெரிவிக்கையில், “இன்று நாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இல்லாது இராஜாங்க அமைச்சர் ஒருவருடன் மட்டுமே அரசாங்கம் பயணிக்கின்றது. அம…
-
- 3 replies
- 647 views
- 1 follower
-
-
எதிர்த்துவிட்டு உரிமை கேட்பதை விட, ஆதரித்துவிட்டு தைரியமாக கேளுங்கள் – சாய்ந்தமருதில் ஹுதா உமர். அக்கரைப்பற்று எனும் ஒரு ஊரின் பாராளுமன்ற உறுப்பினர் அல்ல ஏ.எல்.அதாவுல்லா எனும் நபர். அவர் கிழக்கு மாகாணத்தின் ஒரு ராஜாவாக இருந்தவர். அவர் தனக்கு கிடைத்த அமைச்சர் பதவியை பயன்படுத்தி சகல பிரதேசங்களிலும் அபிவிருத்தி செய்தவர் என்பதையும் தாண்டி சில பிரதேச மக்களின் நீண்டநாள் உரிமை கனவுகளையும் நிஜமாக்கி கொடுத்த ஆளுமை மிக்க தலைவர். அவரை மீண்டும் அதிகார கதிரைக்கு கொண்டுவரவேண்டியது அம்பாறை வாழ் மக்களின் தேவையாகும் என தேசிய காங்கிரசின் தேசிய கொள்கைப்பரப்பு இணைப்பாளரும் தெற்காசிய சமூக அபிவிருத்தி ஸ்தாபன பணிப்பாளருமான அல்-ஹாஜ் யூ.எல்.நூருல் ஹுதா தெரிவித்தார். இன்று (09) மா…
-
- 0 replies
- 373 views
-
-
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக பேராசிரியர் சம்பத் அமரதுங்க கடந்த வாரம் நியமிக்கப்பட்ட நிலையில் மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் மற்றும் 5 உறுப்பினர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழ் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டு காலப்பகுதியில் பதவி வகித்த பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயிரியல் இராசயனத் துறையின் முதுநிலை விரிவுரையாளராக உள்ளார் நியமிக்கப்பட்ட…
-
- 0 replies
- 819 views
-
-
புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை அச்சுறுத்திய புலனாய்வு பிரிவு! யாழ்.வல்வெட்டித்துறையில் சுவரோவியமாக புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களும் காவல் துறையினரும் அச்சுறுத்தியதுடன் , கீறிய புலிப்படத்தையும் அழிக்க வைத்துள்ளனர். நாட்டின் பல பாகங்களிலும் சுவரோவியங்களை இளையோர் கீறி வருகின்றனர். அதற்கு பல தரப்பினரும் ஆதரவு நல்கி வருவதுடன் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்நிலையில் வல்வெட்டித்துறை வேம்படி பகுதியில் நேற்று புதன்கிழமை அப்பகுதி இளையோர் ஒன்றிணைந்து புலி ஒன்றின் படத்தினை சுவரோவியமாக வரைய முனைந்துள்ளனர். புலியின் படத்தினை வரைந்து கொண்டிருந்…
-
- 3 replies
- 919 views
-
-
வடக்கு மாகாணத்தில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மகாணத்தில்உள்ள வாகன சாரதிகள் இன்று காலை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது. மக்கள் வீண் வதந்திகளை கேள்வியுற்று இவ்வாறு தமது நேரங்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருந்ததை எம்மால் அவதானிக்க முடிந்தது. எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது என்ற செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை. போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. மக்கள் வீண…
-
- 0 replies
- 333 views
-
-
மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சி : அகிலவிராஜ் Published by R. Kalaichelvan on 2020-01-08 15:37:05 (நா.தனுஜா) நாட்டு மக்கள் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் நிலையில், ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி சம்பாஷணைகள் அடங்கிய குரல்பதிவுகளை வெளியிட்டு அதனையே மக்கள் மத்தியில் பேசுபொருளாக்கி, உண்மையான பிரச்சினைகளை மறக்கடிப்பதற்கே அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அகிலவிராஜ் காரியவசம் குற்றஞ்சாட்டினார். மேலும் எதிர்வரும் பொதுத்தேர்தல் வரை இத்தகைய சர்ச்சைகளைத் தோற்றுவித்து, மக்களின் அ…
-
- 1 reply
- 287 views
-