Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சாவகச்சேரி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கொடிகாமம் நகர்ப்பகுதி சந்தை சுவர்களில், கடைகளின் சுவர்களில் தமிழர் பண்பாட்டு பாரம்பரிய கலாசாரங்களையும் தொழில்நுட்பங்களையும் பிரதி பலிக்கக்கூடிய வகையிலான வர்ணப்படங்களை பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களது நிதிப்பங்களிப்பில் வரைந்து அழகுபடுத்துவதற்கான அனுமதியினை கோரி சாவகச்சேரி பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வில் உபதவிசாளர் செ.மயூரன் பிரேரணையாக சமர்ப்பித்திருந்தார். கலை பண்பாடு மற்றும் கலாசாரங்களை வெளிப்படுத்தக் கூடியதும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தக்கூடியதுமான ஓவியங்களை கொடிகாமம் பிரதேச ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வரைவதற்கு சபையின் ஒருமித்த தீர்மானத்தின் பிரகாரம் கொடிகாமம் பிரதேச இளைஞர்கள் வர்த்தகர்கள் பொது மக்கள் ஒன்றிணைந்து இ…

  2. -எஸ்.றொசேரியன் லெம்பேட் ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் இளைஞர், யுவதிகளை நவீன யுகத்தினுள் உள்ளீர்கும் முகமாக உருவாக்கப்பட்ட 'ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா' நிகழ்ச்சித் திட்டம், இன்று (7) காலை 10 மணிக்கு, மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில், அதன் மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.மஜித் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிராம ரீதியாக உள்ள இளைஞர்களை 'ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா' நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக உள்வாங்கி, எதிர்கால தொழில் வாய்ப்பை ஊக்குவிக்கும் முகமாக குறித்த நிகழ்ச்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. குறித்த நிகழ்வில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி பூலோக ராஜா, தேசிய இளைஞர் சேவைகள…

  3. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்ச ஷானி அபேசேகர சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் இவ்வாறு சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணைக்குழு இன்று (07) அறிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாக தெரியவந்த தகவலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரி…

  4. பாறுக் ஷிஹான்-2009ம் ஆண்டிற்கு முன்பு தமிழ் இளைஞர்களின் கைகளில் பேனை இருக்கவில்லை துப்பாக்கிதான்இருந்தது. தமிழ் மக்களுக்கு ,தமிழ் இளைஞர்களுக்கு பிரச்சனை இருக்கிறது அது எமக்கு தெரியும் வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸ்ஸாநாயக்க தெரிவித்தார். வன ஜீவராசிகள் இராஜங்க அமைச்சராக பதவியேற்ற விமல வீர திஸ்ஸநாயக்க அவர்களை வரவேற்கும் நிகழ்வு திங்கட்கிழமை (6) மாலை கல்முனை பிரதேசத்தில் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமிழ் பிரதேசங்களின் அமைப்பாளர் சி. சாந்தலிங்கம் மற்றும் கல்முனை பிராந்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞரணி அமைப்பாளர் ஜெ.கிஷாந்தன்,ரஜீவன் ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.மேலும் அவர் உரையாற்றுகையில் தமிழ் ,முஸ்லிம் மக்கள் தங்கள் தல…

  5. (செ.தேன்மொழி) மெகசின் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. வெலிக்கடைச் சிறைசாலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த செல்லபிள்ளை மகேந்திரன் எனப்படும் கைதியொருவரே நேற்று முன்தினம் வியாழக்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்துடன் தொடர்பு கொண்டபோது அவர்கள் கூறியதாவது, மட்டகளப்பு பகுதியைச் சேர்ந்த செல்லபிள்ளை மகேந்திரன் என்பவர் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்காம் திகதியே கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலை புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தமை காரணமாக கைது செய்யப்பட்ட இவர் 50 வருட சிறைதண்டனையும் , ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்ட நிலையிலே மெகசின்…

  6. (ரொபட் அன்டனி) தேசிய இனப்பிரச்சினை க்கு அரசியல் தீர்வு வேண்டுமாயின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையின் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே தமிழ் கூட்டமைப்பு கடந்த காலங்களைப் போன்று சண்டித்தனம் காட்டா மல் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதே பொருத்தமானதாக அமையும் என்று ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். அரசாங்கத்தை தீர்மானிக்க முடியும் என்ற கூட்டமைப்பின் எண்ணம் இம்முறை பிழைத்துவிட்டது. எனவே அந்த யதார்த்தைப் புரிந்துகொண்டு கூட்டமைப்பு செயற்பட வேண்டும். மாறாக கடந்த காலங்களைப் போன்று சண்டித்தனம் காட்ட முற்படுவது சானக்கியமாக அமையாது என்றும் அவர் குறிப்பிட்டார். தேசிய…

  7. கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் காந்திக்கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பை ஒழிக்காது விட்டால், தான் குழந்தையுடன் உயிரை மாய்த்துக்கொள்ளவுள்ளதாக பெண் ஒருவர் வீதியில் தனிநபராக போராட்டத்தில் இன்று (02) ஈடுப்பட்டுள்ளார். காந்தி கிராமத்தில் கசிப்பு பாவனை அதிகரித்துள்ளது எனவும் இதனால் தன்னைப் போன்ற பெண்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். அங்கு பெண்களுக்கான பாதுகாப்பான சூழல் காணப்படவில்லை என, தெரிவிக்கும் அவர், கசிப்பு பாவனையாளர்களால் அச்சமான நிலைமையே ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். குடும்பத்தில் நிம்மதியில்லை, பாடசாலை பிள்ளைகள் நிம்மதியாக படிக்க முடியாதுள்ளதுடன், பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகிய…

    • 4 replies
    • 621 views
  8. மலையக தியாகிகள் தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு மஸ்கெலியாவில் இடம்பெறும் என மலையக சிவில் அமைப்புகள் அறிவித்துள்ளன. மஸ்கெலியா பஸ்தரிப்பிடத்துக்கு அருகாமையில் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வுகள் பிற்பகல் 2 மணிவரை நடைபெறவுள்ளன. மலையகத் தமிழர்களுக்கான தொழில்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமைப்போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் நிகழ்வின் ஏனைய அம்சங்கள் ஆரம்பமாகும். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்து, மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்த முல்லோயா கோவிந்தன் …

    • 0 replies
    • 334 views
  9. குருணாகலில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயம்! Published by J Anojan on 2020-01-07 16:18:10 குருணாகல், மல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர். பஸ் ஒன்றும் பவுசர் ஒன்றும் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/72733

    • 0 replies
    • 268 views
  10. டெலிகொம் தலைவர் இராஜினாமா ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பீ.ஜீ குமாரசிங்க சிறிசேன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதேவேளை கிராமிய அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவர் நிமல் பெரேரா ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பீ.ஜீ குமாரசிங்க சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.dailyceylon.com/195002/

    • 0 replies
    • 424 views
  11. பதுளையில் காட்டுத் தீ – 10 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரை பதுளை பெரகல – கீழ் விகாரகல பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக பத்து ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக அப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப்புத்தளை பொலிஸாரும் அல்துமுள்ளை பிரதேச மக்களும் ஒன்றிணைந்து பாரிய சிரமத்துக்கு மத்தியில் காட்டுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பாக அப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com/பதுளையில்-காட்டுத்-தீ-10-ஏக/

  12. 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள சில ஏற்பாடுகள் நடைமுறைச் சாத்தியமற்றன… January 6, 2020 அரசியல் தீர்வுகள் மக்களுக்கான பொருளாதார அபிவிருத்தியுடன் இணைந்து செல்ல வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (06.01.20) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது, அபிவிருத்தி மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து அறிந்துகொள்வதில் தூதுக்குழுவினர் ஆர்வமாக இருந்த நிலையில் அவர்களுக்கு மேலும் விளக்கமளித்த ஜனாதிபதி, உதாரணமாக 13வது அரசியலமைப்பு திருத்தத்தை எடுத்துக் கொண்டால், அதில் உள்ள சில ஏற்பாடுகள் நடைமுறை சாத்தியமற்றன என்றும் க…

  13. யாழ்ப்பாணம் - சங்கிலியன் மந்திரிமனை எவ்வித பராமரிப்பும் கண்காணிப்புமின்றி, காதலர்களின் ஓய்வுகூடமாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது. இரண்டாம் சங்கிலியன், யாழ்ப்பாணத்தின் அடையாளமாக வராலாற்று பதிவுகள் கூறுகின்ற நிலையில், அதற்கான அடையாளச் சின்னங்களாக யாழ்ப்பாணம் - முத்திரைச் சந்தியில் சங்கிலியன் சிலை, அதன் அருகில் யமுனா ஏரி, சங்கிலியன் தோப்பு, மந்திரிமனை என்பன காணப்படுகின்றன. இதில், மந்திரிமனை தவிர்த்த ஏனைய சின்னங்கள் தொல்பொருள் திணைக்களத்தாலும் யாழ்ப்பாணம் மாநகர சபையாலும் அடையாளப்படுத்தப்பட்டு, பெயர்ப் பலகை நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையில், மந்திரிமனை எந்தவோர் அடையாளப்படுத்தலும் பராமரிப்பும் இன்றி காணப்படுகிறது. ஏற்கெனவே, தொல்பொருள் சின்னம் என அடையாளப்…

  14. யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட கனடா பிரஜைகள் இருவர் கைது யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட கனடா பிரஜைகள் இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இருவரும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் கனடாவில் தஞ்சம் புகுந்து கனடா பிரஜாவுரிமையை தற்போது பெற்றுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு வந்த அவர்கள், இலங்கையில் தங்கி நிற்பதற்கான கால அவகாசம் முடிவடைந்தபோதும் மீண்டும் கனடாவிற்கு செல்லாத நிலையில், இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com/யாழ்ப்பாணத்தை-பூர்வீகமா/

  15. தேசிய கொள்ளை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் வழங்கப்பட்ட நியமனங்கள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்து அந்த நியமனங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை கொழும்பு - காலி முகத்திடலில் அகில இலங்கை திட்ட உதவியாளர்களுக்கான பயிற்சி நியமனதாரிகளின் சங்கத்தினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் தமது கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜர் ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/72653 வேலையற்ற பட்டதாரிகள் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள்,…

    • 1 reply
    • 355 views
  16. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (06) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. நெதர்லாந்தின் தூதுவர் தஞ்சா கோங்க்ரிஜ்ப், இத்தாலி தூதரகத்தின் பிரதித் தலைவர் அலெக்ரா பைஸ்ட்ரோச்சி, ருமேனியாவின் தூதுவர் கலாநிதி விக்டர் சியுஜ்தியா, பிரான்சின் தூதுவர் எரிக் லாவெர்டு மற்றும் ஜெர்மனியின் தூதுவர் ஜோன் ரோட் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். தூதுவர்கள் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக முதலில் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர். நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தைப் பற்றியும் சாதகமாக கருத்துக்களை முன்வைத்த …

    • 1 reply
    • 589 views
  17. என்னை நம்பியவர்களை நான் கைவிடுவதில்லை: அமைச்சர் டக்ளஸ். ‘என்னை நம்பியவர்களை குறிப்பாக என்னை நம்பி வந்த மக்களை நான் ஒரு போதும் கை விடுவதில்லை’ என கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் நேற்று (05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார். இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். பேசாலை பகுதியில் யுத்த காலத்தின் போது அழிக்கப்பட்ட படகுகளுக்கான நட்ட ஈடுகள் எவையும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை என்ற கருத்தை மீனவ சங்க பிரதிநிதிகள் அமைச்சரிடம் முன் வைத்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ‘என்னை நம்பியவர்களை குறிப்பாக என்ன…

  18. குடும்பமாக அரசியலில் ஈடுபடுவது என்பது அரசியலுக்கும் புதிதல்ல, நம் நாட்டுக்கும் புதிதல்ல. இப்போது நாட்டில் நடப்பதுகூட ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சிதான். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னரும் இதுதான் நடந்தது. ஆனால், தமிழில் குடும்ப அரசியல் என்பது சற்றுக் குறைவுதான். அப்படியே நடந்தாலும் தந்தைக்குப் பின் தனயன் என்ற நிலைதான் நீடித்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் அவரின் மகன் கலையமுதனும் இப்போது ஒரே நேரத்தில் அரசியலில் இருக்கிறார்கள் என்றாலும் அவர்களின் பதவிகள் வேறுவேறுதான். தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைந்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வியூகம் அமைத்து வருகின்றது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சி. பேரம் பேசி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்…

  19. நாட்டிலுள்ள தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டெனத் தெரிவித்த நவ சமசமாஜக் கட்சி, தமிழ் மக்களுக்கு சுயாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. நவ சமசமாஜக் கட்சியின் 42ஆவது ஆண்டு விழா, இம்முறை "வலிமையான ஜனநாயகத்துக்கான மாற்றம்" என்ற தொனிப்பொருளில், கொழும்பு புதிய நகர மண்டபத்தில், நாளை(01) நடைபெறவுள்ளது. இது குறித்து கட்சி வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை வரலாற்றில், தேசிய இனங்களின் உரிமைகளுக்காகவும், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட பிரிவினரின் உரிமைகளுக்காகவும் நவ சமசமாஜக் கட்சி அயராது உழைத்து வருகிறது. ‘2009ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத…

    • 2 replies
    • 677 views
  20. தமிழ்த் தலைமைகளால், கிழக்குத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுவதை இனியும் அனுமதிக்கமுடியாதென, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் த.கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார். கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கூட்டு சனநாயகப் பணிக்குழுவின் அங்குரார்ப்பண நிகழ்வு, அதன் தலைவர் தலைமையில், மட்டக்களப்பில் இன்று (06) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழர் மகா சபையின் தலைவர் கலாநிதி விக்னேஸ்வரன், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது தற்போதைய அரசியல் நிலைமைகள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அரசியல் செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டன. அத்துடன், எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற, மாகாண சபை …

    • 0 replies
    • 408 views
  21. குட்டையைக் குழப்பிய தேசியகீதம் Published by Loga Dharshini on 2020-01-06 16:06:05 தமிழில் தேசிய கீதம் இசைக்கும் விவகாரம் இப்போது, பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கின்ற நிலையில், அரசாங்கத் தலைமை தமக்குரிய பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்திருக்கிறது. வரும் பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள சுதந்திர தினத்தில் சிங்களத்தில் மட்டும் தான், தேசிய கீதம் பாடப்படும், தமிழில் பாடப்படாது, இந்தியாவில் கூட ஹிந்தியில் மட்டும் தான் தேசிய கீதம் பாடப்படுகிறது என்று கூறி, இந்த சர்ச்சைக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன். சுதந்திர தின நிகழ்வுக்கான ஏற்பாட்டுக் குழுவி…

    • 1 reply
    • 487 views
  22. (ஆர்.யசி) போர் குற்றங்களில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை ஏற்றுவிட்டு இப்போது அதிலிருந்து விலகி நிற்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். அத்துடன் இம்முறை ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் என்ன சொல்லப்போகின்றனர் என்பதை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும். கடந்த ஆட்சிக் காலத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தை ஆதரித்ததன மூலம் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காணி விடுவிப்பு, அரசியல் கட்சிகளின் விடுதலை என பல நல்ல விடயங்கள் இடம்பெற்றது. எனினும் அரசியல் அமைப்பு உருவாக்க விடயத்தில் ஆரோக்கியமான …

    • 1 reply
    • 545 views
  23. அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (31) காலை அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார். வெள்ளை வேன் சம்பந்தமாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான விசாரணையில் ரூமி மொஹமட் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.thinakaran.lk/2019/12/31/உள்நாடு/46164/வெள்ளை-வேன்-ஊடகவியலாளர்-சந்திப்பு-ரூமி-மொஹமட்-கைது Former State Pharmaceutical Corporation (SPC) Chairman Dr.Rumy Mohamed, who was absconding over white Van press conference case, has been ar…

    • 4 replies
    • 1.1k views
  24. (இரா­ஜ­துரை ஹஷான்) நாட்டில் வாழும் அனைத்து இன மக்­களின் மத சுதந்­தி­ரத்­தையும் சிங்­கள பௌத்­தர்­களே பாது­காத்­துள்­ளார்கள். 'சிங்­க­ளயா மோடயா கெவும் கன்ன யோதயா’ (சிங்­க­ள­வர்கள் முட்­டாள்கள் பல­காரம் உண்­ப­தற்கே சூரர்கள்) என்று குறிப்­பிட்ட பழ­மொழி கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திக­தி­யுடன் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டது. நாட்­டுக்கு எதி­ரான சூழ்ச்­சிகள் வெற்றிப் பெற்­றி­ருந்தால் சிங்­கள இனத்தின் இருப்பு கேள்­விக்­கு­றி­யாக்­கப்­பட்­டி­ருக்கும் என பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார். பாலி திரி­பி­டக துறையில் தேர்ச்சிப் பெற்ற 5000ஆம் பௌத்த மத பிக்­கு­க­ளுக்கு டெப் ரக கணனி வழங்கும் நிகழ்வு நேற்று முன்­தினம் சுஹ­த­தாஸ உள்­ளக அரங்கில் இடம் பெற்­றது. இ…

    • 0 replies
    • 224 views
  25. தற்­போது சம்­பந்தன் தேர்­தலில் போட்­டி­யி­ட­மாட்டேன் என்று கூறிய நிலையில், மாவை சேனா­தி­ராசா கையறு நிலையில் உள்­ள­போது, தமிழ் மக்­களை தலைமை தாங்­கப்­போ­வது சுமந்­தி­ரனா என்­பதைத் தமிழ் மக்கள் தீர்­மா­னிக்­க­வேண்டும். முன்னாள் முல்வர் விக்­கி­னேஸ்­வ­ரனின் தமிழ் மக்கள் கூட்­டணி, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி, இன்னும் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யே­றிய பலர் இணைந்து "தமிழர் ஐக்­கிய முன்­னணி" என்ற அமைப்­பினை உரு­வாக்­கி­யி­ருக்­கி­யி­ருக்­கின்றோம். இது குறித்து விரைவில் அறி­விக்­கப்­படும். இந்த மாற்று அணி­யுடன் தமிழ் மக்கள் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண­டு­மென ஈ.பி.ஆர்.எல் எப் கட்­சியின் தலைவர் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் அழைப்பு விடுத்­துள்ளார். முல்­லைத்­தீவு - தண்­ண…

    • 0 replies
    • 378 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.