ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
இலங்கையில் என்றும் இல்லாத அளவிற்கு வெங்காயத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. கொழும்பு மொத்த சந்தை நிலவரத்தின்படி, பெரிய வெங்காயம் ஒரு கிலோ 125 இலங்கை ரூபாய் முதல் 150 இலங்கை ரூபாய் வரை விற்கப்படுகின்ற அதேவேளை, சின்ன வெங்காயம் ஒரு கிலோ மொத்த விலை 550 இலங்கை ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 215 ரூபாய்) முதல் 650 இலங்கை ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 255 ரூபாய்) வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமின் சில்லறை விலை 200 இலங்கை ரூபாய் முதல் 300 இலங்கை ரூபாய் வரையும், சின்ன வெங்காயம் ஒரு கிலோகிராமின் சில்லறை விலை 700 இலங்கை ரூபாய் முதல் 750 இலங்கை ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் …
-
- 2 replies
- 517 views
-
-
நாடளாவிய ரீதியாக பல்வேறு மாவட்டங்களில் தங்கள் மாவட்டத்தை அழகுபடுத்தும் நோக்கோடு இளைஞர் குழுக்கள் இணைந்து வர்ணம் பூசும் வேலைகளைச் செய்து வருகின்றனர். அந்தவகையில் இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் சுயாதீன இளைஞர் குழுவொன்று வர்ணம் பூசும் பணிகளை ஆரம்பித்துள்ளனர் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள பஸ் தரிப்பிடத்தை சுத்தம் செய்து வர்ணம் பூசுவது ஆயத்த வேலைகளை முன்னெடுத்துள்ளனர். நாளை முதல் கிளிநொச்சியிலும் வர்ணம் தீட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற இருப்பதினால் மாவட்டத்தில் அக்கறை உள்ள இளைஞர்கள் யுவதிகள் காலை 9 மணி முதல் நடைபெறும் இது வர்ணம் பூசும் பணியில் இணைந்து கொள்ளுமாறு கிளிநொச்சியின் சுயாதீ…
-
- 2 replies
- 407 views
-
-
சுவிஸ் அறிக்கை சிறிலங்காவுக்கு அவமானம் – பாலித ரங்கே பண்டார Dec 18, 2019 | 4:29by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் தமது தூதரகப் பணியாளர் கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து, சிறிலங்கா நடத்திய விசாரணையில் திருப்தி அடையவில்லை என்ற சுவிஸ் அறிக்கை, சிறிலங்காவுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் . பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அரசியல் பழிவாங்கும் சம்பவங்கள் மற்றும் இது போன்ற நிகழ்வுகளால், உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் இலங்கையர்கள் ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வார்கள் என்றும் …
-
- 1 reply
- 715 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம்: கோட்டா ஓடி ஒழியமுடியாது என்கின்றார் சுமந்திரன் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சனை அரசியல் மயப்படுத்தப்பட்டது என கூறி தப்பிக்க முடியாது என்றும் அதற்கு தாங்கள் அனுமதிக்கபோவதில்லை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த விடயத்திற்கு நிச்சயம் ஜனாதிபதி பதில் சொல்லியே ஆக வேண்டும் என வலியுறுத்தினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்பு செயலாராக இருந்த போது, யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பொறுப்பு கூற வேண்டிய முழு பொறுப்பும் அவரையே சாரும். யுத்த …
-
- 3 replies
- 1.4k views
-
-
மேலும் பல சுவிஸ் தூதரக அதிகாரிகளை கைது செய்ய திட்டம்? Dec 18, 2019 | 4:48by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சம்பவத்துடன், சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் மேலும் பல அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்ற விசாரணைத் திணைக்களம் கண்டறிந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தார் என்று சுவிஸ் தூதரக பணியாளர் கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொய்யான குற்றச்சாட்டை சுமத்திய விடயத்தில், சுவிஸ் தூதரகத்தில் பணி…
-
- 2 replies
- 467 views
-
-
கடந்த ஆட்சியில் முன்னெடுத்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிறுத்தாது முன்னெடுக்க வேண்டும் ;இராதாகிருஸ்ணன் Published by T Yuwaraj on 2019-12-18 16:34:03 கடந்த ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிறுத்தாது அப்பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு தற்போதைய புதிய ஜகாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருகின்றமை வரவேட்கதக்க விடயம். என பாராளுமன்று உறுப்பினர் இராதாகிருஸ்ணன் மஸ்கெலியா கவரவில தோட்டத்தில் இடம் பெற்ற அடிக்கல் நிகழ்வின் போது தெரிவித்தார். இதன் போது மேலும் கூறுகையில், ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்னரும் இப்பாலத்திற்கான பணிகளை முன்னெடுக்க கிடைத்தமையையொட்டி மகிழ்ச்சியாகவுள்ளது. இப்பாலத…
-
- 0 replies
- 317 views
-
-
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களுக்கு தடை Dec 18, 2019by கி.தவசீலன் in செய்திகள் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களுக்குப் பதிலாக கண்ணாடிக் குவளைளகளில் குடிநீர் வழங்குமாறு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடக்கும் கலந்துரையாடல்கள், கூட்டங்களின் போது, குடிநீர் போத்தல் வழங்கப்படும் வழக்கம் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இது தொடராது, அதற்கு பதிலாக கண்ணாடிக் குவளைகளில் குடிநீர் வழங்குமாறு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது பெரும்பாலும் சுற்…
-
- 0 replies
- 628 views
-
-
சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு Dec 18, 2019by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை, அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு இயல்பான சூழலில் இடம்பெற்றதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தினால் பாதுகாப்புச் செயலராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்ட பின்னர், அமெரிக்க உயர்மட்டப் பிரதிநிதி ஒருவர் அவரைச் சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும். எ…
-
- 0 replies
- 289 views
-
-
நாட்டின் இறைமை, சட்டத்தை சுவிஸ் மதிக்க வேண்டும் – சிறிலங்கா அரசு Dec 18, 2019 | 4:53by கி.தவசீலன் in செய்திகள் சிறிலங்காவின் சட்டம் மற்றும் இறையாண்மையை மதிக்குமாறு சுவிஸ் அதிகாரிகளிடம் சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக பொய்யான முறைப்பாட்டைச் செய்தார் என்ற குற்றச்சாட்டில், சுவிஸ் தூதர பணியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து, கவலை வெளியிட்டும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் சுவிஸ் வெளிவிவகார திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஸ் பத்திரன, “சிறிலங்கா அரசாங்கம் இந்த விசார…
-
- 0 replies
- 296 views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 08 மாவட்டங்களிலும் கடந்த 10 வருடங்களாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி, வீதிகளில் போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில், உயிர்நீத்த தாய்மார்கள், உறவினர்கள் 58 பேருக்கான ஆத்த சாந்தி வேண்டி அஞ்சலிகள் செலுத்தப்பட்டன. இந்த அஞ்சலி நிகழ்வு, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில், திருக்கோவில், தம்பிலுவில் பொதுச் சந்தைக் கட்டத்துக்கு முன்பாக நேற்று (17) நடைபெற்றது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, தம்பிலுவில் சந்தைக் கட்டடத்தில் அமைந்துள்ள அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க அலுவலகத்திற்கு முன்பாக ப…
-
- 0 replies
- 355 views
-
-
அமெரிக்க பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை! இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நத்தார் பண்டிகைக் காலத்தில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் போது அவதானத்துடன் செயற்படுமாறு இதன்போது தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க பிரஜைகளுக்கு விடுக்கப்படும் இரண்டாம் நிலை முன்னெச்சரிக்கை இதுவென என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் ஆராதனையின் போது ஐ.எஸ் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் 300 இற்கும் மேற்பட்ட அப்பாவி பொதும…
-
- 1 reply
- 477 views
-
-
முன்னாள் அரசாங்கத்தின் இரு அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் பாட்டாளி சம்பிக்க ரணவக்க ஆகியோரையும், முன்னாள் அரசிற்கு ஆதரவான ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஜயம்பதி விக்கிரமரத்ன, வெலியாமுன, உபாலி ஜயசூரிய ஆகியோரையும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் மூலம் கைதுசெய்ய கோத்தாபயவின் அரசு கங்கனம் கட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில், ராஜித் சேனாரத்ன, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கோத்தாவின் வெள்ளைவான் கொலைக்குழுவில் சாரதிகளாக ஈடுபட்ட அதுல சன்ஞீவ மதனாயக்க மற்றும் அந்தனி டக்கிளஸ் ஆகியோரை பத்திரிக்கையாளர் முன்னிலையில் சாட்சியம் சொல்ல வைத்திருந்தது நினைவிருக்கலாம். தற்போது இவர்கள் கடத்தப்பட்டுள்ள நிலையில், ராஜித சேனாரத்னவின் அழுத்தங்களாலேயே தாம் அப்படிச் சாட்சி கூறியதாக பொய்யுரைக்கும்படி …
-
- 4 replies
- 610 views
-
-
இலங்கையின் வரலாறு தெரியாமல் வடமகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாட்டில் வாழ்கிறார் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கண்டனம் தெரிவித்துள்ளார். வடக்கின் முன்னாள் முதலமைச்சர் இலங்கை வரலாறு மட்டுமின்றி அவர் உலக வரலாற்றைக் கூட தெரியாமல் இருக்கின்றார், நாட்டின் சமூகம் மற்றும் கலாசார அறிவும் அவருக்கு இல்லை எனவும் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். இன்றைக்கு 3000ம் ஆண்டுகளுக்கு முன்னேறி இலங்கையில் சிங்களம் பேசும் மக்கள் வாழ்ந்து வந்தார்கள் எனவும் உலகத்தில் ஏனைய இனத்தவர் ஆடை அணிவதற்கு முன்னர் இலங்கை சிங்களவர் ஆடை அணிந்தனர் எனவும் முன்னாள் அமைச்சர் இதன்போது தெரிவித்தார். …
-
- 0 replies
- 519 views
-
-
சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்…. December 18, 2019 வடக்கில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. புதிதாகப் பதவியேற்றுள்ள ஐனாதிபதி கோத்தபாய ராஐபக்ஷ மணல் வழித்தட அனுமதியை இரத்துச் செய்துள்ளதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் தீவகம், அரியாலை, வடமராட்சி கிழக்கு உட்பட பல இடங்களிலும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் அதிகரித்துள்ளன. அதேபோன்று வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களிலும் இந்த சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. …
-
- 0 replies
- 297 views
-
-
கட்சி தலைவர் பதவி இன்றி பிரதமர் வேட்பாளராக மாட்டேன் : சஜித் ஐக்கிய தேசிய கட்சித் தலைமை பதவி இன்றி எதிர்வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட மாட்டேன் என சஜித் பிரோமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறும் வகையில் கோட்டை பகுதியில் நேற்று (17) நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னோக்கி பயணிக்குமாறு மக்கள் கேட்டுக்கொண்டால் அதற்கு செவிசாய்த்து அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றேன். எவ்வாறாயினும் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவமென்றால் கட்சி தலைமை பதவி இன்றி நான் அதில் இறங்க மாட்டேன். அதேபோல் அரசியலில் இருந்து ஓய்வுப் பெறுமாறு மக்கள் கூறினால் அதனையும் ஏற்றுக்கொள்…
-
- 0 replies
- 239 views
-
-
இரண்டு வாரங்களின் பின்னர் யாழில் தங்கத்தின் விலை அதிகரிப்பு யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு வாரங்களாகவே தங்கத்தின் விலை குறிப்பிடும்படியாகக் குறைக்கப்பட்டு வந்த நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (புதன்கிழமை) பவுணுக்கு 350 ரூபாயினால் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை ஒரே நாளில் 600 ரூபாயாக அதிகரித்தது. நேற்று மேலும் ஒரு பவுணுக்கு 150 ரூபாய் அதிகரிக்கப்பட்ட நிலையில் இன்றும் அதன் விலை 350 ரூபாவால் உயர்வடைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை, யாழ்ப்பாணத்தில் ஒரு பவுண் (22 கரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 66 ஆயிரத்து 900 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று 66 ஆயிரத்து 550 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. தூய தங்கத்தின் விலை, ஆபரணத் தங்கத்தைப் போலவே த…
-
- 0 replies
- 327 views
-
-
தமிழ் மக்கள் பிளவுபடாமல் ஒன்றுபட்டு தமது பலத்தினை வெளிக்காட்ட வேண்டும் – இரா.சம்பந்தன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் பிளவுபடாமல் ஒன்றுபட்டு தமது பலத்தினை வெளிக்காட்ட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழில் நடைபெற்றுள்ளது. தமிழ் மக்கள் தங்களுக்குள் முரண்படாமல் ஒற்றுமையாக இருப்பது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமானது எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஒரு அரசியல் தீர்வை பெறுவதற்கும் ஏனைய கருமங்களை கையாள்வதற்கு தமிழ் மக்கள் ஒருமித்து ஓற்றுமையாக இந்த தேர்வை பெற்ற…
-
- 0 replies
- 635 views
-
-
தேசிய ரீதியில் சாதித்த இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவர்கள்! தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற கர்நாடக சங்கீதப் போட்டியில் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் முதலிடத்தினைப் பிடித்துள்ளனர். இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவர்கள் இருவரே இவ்வாறு முதலிடத்தினைப் பிடித்துள்ளனர். ஆண்களுக்கான தனியிசை கனிஸ்ட பிரிவுப் போட்டியில் ஜோ.கிஷாந்த் என்ற மாணவனும், சிரேஷ்ட பிரிவில் ம.சனோஜிகன் என்ற மாணவனும் முதலிடம் பெற்றுச் சாதித்துள்ளதாகவும் கல்லூரிச் சமூகம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. http://athavannews.com/தேசிய-ரீதியில்-சாதித்த-இ/
-
- 0 replies
- 444 views
-
-
தற்போது இடம்பெற்று வருகின்ற மணலகழ்வினால் யாழ் குடா பகுதியில் அதிகளவில் காணப்படுகின்ற கடல்நீரேரிகள் தாழிறங்கி கடல் நீர் உட்புகுவதன் மூலமாக யாழ் குடா பகுதி நாட்டின் பிரதான பகுதியுடன் துண்டிக்கப்படும் நிலை காணப்படுவதாக வட மாகாண முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் அவர்கள் தமிழ்க் குரலின் அறிவாயுதம் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; மணலகழ்வு புவிச்சரிதவியல் அளவைகள், சுரங்கங்கள் பணிகத்தினூடாக இடம்பெற்று வருகிறது, மணலகழ்வின் போது மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரம், வழித்தட அனுமதி ஆகிய இரண்டும் அவசியமாகும். இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையயிலேயே சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரித்து காணப…
-
- 0 replies
- 374 views
-
-
காணாமல் போனோர் உயிரிழந்திருப்பார்கள் என்பது உறுதி – ஜனாதிபதி! தமிழீழ விடுதலைப்புலிகளைப் போன்றே இராணுவத்திலும், காணாமல் போனோர் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினையை சிலர் அரசியல் பிரச்சினையாக மாற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். யுத்த களத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை கண்டெடுக்க முடியாமல் போவதுடன், இராணுவத்திலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணமல் போயுள்ளதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். இதனை அரசியல் ரீதியான பிரச்சினையாக்கியுள்ளதே தற்போதைய பிரச்சினையாகவுள்ளதாகவ…
-
- 5 replies
- 930 views
-
-
விக்னேஸ்வரனைக் கைது செய்யக் கோரி முறைப்பாடு Dec 16, 2019 | 5:38by கி.தவசீலன் in செய்திகள் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரி, அவருக்கு எதிராக சிங்கள அமைப்பு ஒன்று சிறிலங்கா காவல்துறை தலைமையகத்திலும், குற்ற விசாரணைத் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்துள்ளது. டான் பிரியசாத் தலைமையிலான நவ சிங்ஹலே தேசிய இயக்கம் என்ற சிங்கள அடிப்படைவாத அமைப்பே இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளது. சி.வி.விக்னேஸ்வரன் சமூகங்களுக்கிடையில் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்துகிறார் என்றும் அவருக்கு எதிராக விசாரணைகளை நடத்துமாறும் அந்த அமைப்பு கோரியுள்ளது. சிறிலங்காவை பௌத்த நா…
-
- 6 replies
- 799 views
-
-
வடமாகாண ஆளுநராக திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அவர் விரும்பினால் அதற்கான நியமனம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்று சந்தித்து பேசிய அவர் ஆளுநர் விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; வடமாகாண ஆளுநராக பதவியேற்குமாறு முத்தையா முரளிதரனை கோரியிருந்தேன். ஆனால் அவர் அதனை ஏற்பதற்கு மறுத்துவிட்டார். ஆளுநராக பதவியேற்பதற்கு தகுதியானவர்கள் இன்னமும் கிடைக்கவில்லை. தற்போது திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. …
-
- 15 replies
- 1.8k views
-
-
தனது மகனின் திருமணத்தில் கலந்துகொள்ள நீதிமன்றத்தில் அனுமதி கோரல் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தனது மகனின் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு நீதிமன்றத்தைக் கோரியுள்ளார். இன்று (17) இவர் தொடர்பிலான வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட இந்த மனுவை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார். தனது மகனின் திருமணம…
-
- 0 replies
- 833 views
-
-
இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் அனைவரும் இந்த நாட்டில் இருந்து துரத்தப்பட்டவர்கள். அவர்கள் இங்கே மீண்டும் வந்து குடியேற வேண்டும். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழில்.இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இந்தியாவில் நிறைவேற்றும் சட்டம் எப்படி இருக்க வேண்டும் என நான் கருத்து கூற முடியாது. அது இந்தியா தனது நலன் கருதி கொண்டுவரப்படும் சட்டங்கள். இங்கிருந்து சென்றவர்கள் மீண்டும் இங்கே வர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இந்தியாவில் தொடர்ந்து அவர்கள் தங்கியிருக்க வேண்டும் எனும் நிலைப்பாடு அவர்களுக்கு இருந்தால் சர்வதேச சட்டத்தின் கீழ் அதனை சுயாதீ…
-
- 1 reply
- 715 views
-
-
எம்.மனோசித்ரா) ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தமையால் பொதுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.அந்த வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு பரந்துபட்ட கூட்டணிக்கு தலைமை தாங்க தயார் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச பதவிகளுக்காக ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் பிளவடையாது என்றும் குறிப்பிட்டார். தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுவதற்காக ஒவ்வொரு தொகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்புக்களில் முதலாவது மக்கள் சந்திப்பு இன்று கொலன்னாவையில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். இதன் போது உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறினார். இதன் போ…
-
- 0 replies
- 523 views
-