Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மின் காற்றாலை அமைக்கும் பணிகளுக்கு எதிரான போராட்டத்தில் மோதல்! யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் மின் காற்றாலை அமைக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டமைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம் மோதலில் நிறைவடைந்துள்ளது. மறவன்புலவில் மக்கள் குடியிருப்புப் பகுதிக்கருகில் மின் காற்றாலை அமைக்கப்படுவதாக மக்கள் போராட்டங்கள் பலவற்றை மேற்கொண்டதையடுத்து அதனை ஆராய்வதற்காக பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. இதற்கிடையில், மின் காற்றாலை அமைக்கும் பணிக்கான உபகரணங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனரக வாகனங்களில் கொண்டுவரப்பட்டிருந்ததோடு, மின் காற்றாலைக்கான அலுவலகம் அமைக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கு எதிராக மக்கள் நேற்று(வியாழக்…

  2. தமிழ் மக்களின் காதில் பூ சுத்துவதற்கு ஜனாதிபதி, பிரதமர் முயற்சி..! இத்துப்போன பழைய LLRC அறிக்கை குறித்து பேச்சு.! கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஐ.நா வதிவிடப்பிரதிநிதி ஹனாசிங்கருடனான சந்திப்பின்போது கூறியுள்ளார். ஐக்கியநாடுகளின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியுடனான சந்திப்பின்போது கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது என பிரதமர் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியாக பதவிவகித்தவேளை மே 2010 மகிந்த ராஜபக்ச கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு நியமித்தார் 2002 பெப்ரவரி…

  3. இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அஷோக் ராவோ , பாதுகாப்பு செயலாளர் மேஜர்ஜெனரல்(ஓய்வு) கமல்குணரத்னவை இன்று சந்தித்தார். பாதுகாப்புஅமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அவர்களிடையே சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்றுஇடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வினை நினைவுகூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டமைகுறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/71025

    • 0 replies
    • 518 views
  4. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை பொலிஸ் விசாரணைக்கு வருமாறு ஏறாவூர் பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர். செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்திற்கு எதிராக மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டமை குறித்து பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தனை ஏறாவூர் பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் ஊழல் தொடர்பாக செய்திகளை வெளியிட்டு வரும் சுதந்திர ஊடகவியலாளர் நிலாந்தன் மீது கடந்த காலங்களில் பல தடவைகள் இதுபோன்ற பொலிஸ் விசாரணைகள் நான்கு தடவைக்கு மேல் நடைப…

  5. (செ.தேன்மொழி) கறுப்பு நிற ஆடையில் சிலாபம் பிரேதச சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதியில்லை என்று சிலாபம் பிரதேச சபை உறுப்பினர் ஜே. கோகிலநாத் சிங்கிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் ஜே.என். ஜனித்த தேவப்பிரிய எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சிலாபம் பிரதேச சபையின் 21 ஆவது அமர்வு நேற்று இடம்பெற்றது. இத் கூட்டத்தொடரில் கலந்துக் கொள்வதற்காக சென்ற பிரதேச சபை உறுப்பினருக்கே இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கூட்டத்தெடரில் கலந்துக் கொள்ளாமல் வெளியேறியுள்ள குறித்த உறுப்பினர் புத்தளத்திலுள்ள சர்வமத குழுவின் தலைவர் சுந்தரம் குருக்களிடம் முறைபாடொன்றையும் அளித்துள்ளார். …

  6. மத்தள விமான நிலையத்தினை விற்பனை செய்ய தயார் இல்லை – அரசாங்கம்! மத்தள விமான நிலையத்தினை விற்பனை செய்ய தயார் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உடுகம்பொலவில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். மத்தள விமான நிலையத்தை முறைப்படி முகாமைத்துவம் செய்வது தொடர்பாக தான் வெளியிட்ட கருத்தினை அடிப்படையாகக் கொண்டு சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் எந்தவித அடிப்படையுமற்றவை எனவும் அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மத்தள விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அது மூடப்பட்டு, நெல் களஞ்சிய சாலையாக பயன்ப…

  7. (இராஜதுரை ஹஷான்) இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகிய இரண்டும் பாரிய சவால்களுக்கு உட்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை பொறுப்பேற்றுள்ளோம். தாக்கம் செலுத்தியுள்ள புதிய இஸ்லாமிய தீவிரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு இராணுவத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும். நாட்டு மக்கள் என்றும் இராணுவத்தினரை கௌரமளிப்பார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் இராணுவ கல்லூரி பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை தாமரை தடாக கலையரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். விடுதலை புலிகள் அமைப்பினை மு…

    • 0 replies
    • 319 views
  8. (எம்.எப்.எம்.பஸீர்) சட்ட விரோத கருத் தடை விவகாரம் தொடர்பில் குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் இன்று குருணாகல் பிரதான நீதிவான் சம்பத் ஹேவாவசம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது பிணையில் உள்ள வைத்தியர் ஷாபி மன்றில் ஆஜரகியிருந்தார். அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டாரவின் கீழ், சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், சைனாஸ் அஹமட், பசன் வீரசிங்க, ஹரித்த நவரத்ன பண்டார உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவொன்று ஆஜரானது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் த…

    • 2 replies
    • 460 views
  9. ( ஆர்.விதுஷா) ஜனாதிபதி கோத்தாபயராஜபக்ஷ,அவரதுமூத்த சகோதரர்களான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோரின் கீழ் 154 அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இந்நிலையில் பல அரச நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வந்துள்ள நிலையில் இதுவரையில் பாதுகாப்பு அமைச்சராக எவரும் இல்லை. ஆகவே யார் பாதுகாப்பு அமைச்சர் என்பது தொடர்பில் அரசாங்கம் நாட்டுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகோதாவில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது…

    • 5 replies
    • 1.1k views
  10. அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – மேலதிக கொடுப்பனவினை வழங்க அனுமதி! தகுதி வாய்ந்த அரச நிறுவனங்களுக்கு மேலதிக கொடுப்பனவு ஒன்றை வழங்க திரைசேறி அனுமதி வழங்கியுள்ளது. திரைசேறியினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து சட்ட ரீதியான நிறுவனங்களின் தலைவர்களுக்கு இதுகுறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து ஊழியர்களுக்கும் 2019ஆம் ஆண்டிற்கான கொடுப்பனவை செலுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கொடுப்பனவு செலுத்த தகுதியுள்ள நிறுவனங்களுக்கு, கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட கொடுக்கப்பட்ட கொடுப்பனவுகளுக்கமைய, அவர்களின் 2018 …

    • 3 replies
    • 572 views
  11. ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌த்தில் முஸ்லிம்க‌ளும், த‌மிழ‌ர்க‌ளும் இணைந்து போட்டியிட்டால் ஒருவ‌ர்வெற்றிய‌டைய‌க்கூடிய‌ சாத்திய‌ம் உள்ள‌து என உல‌மா க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.கட்சி ஆதரவாளர்களுடன் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறுக் கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும்,க‌ட‌ந்த‌ ஜ‌னாதிப‌தி தேர்த‌லில் மொட்டுக் க‌ட்சிக்கு ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌த்தில் கிடைத்த‌ வாக்குக‌ள் சுமார் 38 ஆயிர‌ம். அதேவேளை த‌னித்து போட்டியிட்ட‌ ஹிஸ்புல்லா பெற்ற‌ மொத்த வாக்குகள் 12 ஆயிர‌ம்.இவ்வாறு பார்க்கும் போது ஆளும் க‌ட்சியாக‌ இருந்த‌ ஐ.தே.க‌ கூட்டுக்கெதிராக‌ ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌த்தில் கிடைக்க‌ப்பெற்ற‌ வாக்குக‌ள் சுமார் ஐம்ப‌தினாயிர‌ம்.த‌ற்போது ப…

    • 1 reply
    • 862 views
  12. தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கல் போட்டியில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார். 13 வது தெற்காசிய விழா நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற 64KG பளுதூக்கல் போட்டியின் போதே, யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார். இதேவேளை, தெற்காசிய விளையாட்டு விழா போட்டி வரலாற்றில் இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்கேற்ற முதல் தமிழ் வீராங்கணையாக விஜயபாஸ்கர் ஆர்ஷிகா வரலாறு படைத்துள்ளார். தனது 13 ஆவது வயதில் பளுதூக்கல் விளையாட்டை ஆரம்பித்தார். இவருக்கு தந்தையே பயிற்றுநராக செயற்பட்டு வருகின்றார். …

    • 13 replies
    • 1.6k views
  13. மன்னார் இரணைஇலுப்பைக்குளம் பூசாரிக்குளம் பகுதியில் சட்டவிரோத 75 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் காடழிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்த சம்பவமானது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன்க்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து நேரடியாக சென்ற சிவமோகன் எம்பி குறித்த பகுதியில் சட்டவிரோதமாக காடழிப்பு செய்வதை தடுத்து நிறுத்தியுள்ளார் பின்னர் மடுப்பிரதேச செயலாளர் மடுப்பிரதேச காணி அதிகாரி வரவழைக்கப்பட்டு அப்பகுதி மக்களுடனும் தொடர்ந்தும் கலந்துரையாடப்பட்டு சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட பூசாரி குளம் காணிகள் அனைத்தும் அப்பகுதி மக்களுக்கே வழங்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் எதிர்தரப்பின் மதஸ்தலம் ஒன்றுக்கு வழங்க்கபடுவதாக இருந்த காணிக்கான வேண்டுகோள் இரத்து ச…

  14. இலங்கையில் தென்படும் சூரிய கிரகணம்: எங்கே, எப்போது பார்க்கலாம்...? இலங்கையில் இம்மாதம் 26ஆம் திகதி நெருப்பு வளையச் சூரிய கிரகணத்தை யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் முழுமையாகவும் கிளிநொச்சிக்கு தெற்குப் பக்கமாக வாழ்பவர்கள் அதன் ஒரு பகுதியைப் பார்வையிடலாம் என வானியலாளர் அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார். இம்மாதம் 26ஆம் திகதி சவூதி அரேபியாவின் தம்மத்தில் முதலில் தென்படும். காலை 8 மணியளவில் தோன்றி, இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்னிந்தியா முழுவதும் பயணித்து வடக்கு இலங்கை வழியாகக் கடந்து செல்கிறது. இந்தக் கிரகணம் நிகழும்போது, சந்திரன் பூமியிலிருந்து சுமார் 400,000 கி.மீ தூரத்தில் இருக்கும். மணிக்கு 3,600 கி.மீ வேகத்தில் நகரும். குறித்த கிரகணத்தின் மையக் கோடு ம…

  15. மூன்றுமாத காலப்பகுதிக்குத் தட்டுப்பாடின்றி சந்தைக்கு அரிசியை விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதுடன், ஒரு கிலோகிராம் அரிசியின் ஆகக்கூடிய சில்லறை விலையை 98 ரூபாவாக வரையறுப்பதற்கும் தீர்மானித்திருக்கிறது. அத்தோடு இறக்குமதி செய்யப்படும் கோதுமைமாவிற்கான வரியைக் குறைப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வப் ஊடக பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார் https://www.virakesari.lk/article/70938 ஜனாதிபதி தலைமையில் வாழ்க்கை செலவு அமைச்சரவை உப குழு வாழ்க்கைச்செலவு தொடர்பான …

    • 2 replies
    • 654 views
  16. பாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசி, இனிப்புக்கள் வாங்கி கொடுத்து, அவரை மயக்கி கோயில் மடப்பள்ளியில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஆலய பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நடந்தது. தந்தையற்ற தரம் 4ல் கல்வி கற்கும் மாணவியே சீரழிக்கப்பட்டுள்ளார். மாணவி பாடசாலைக்கு கைத்தொலைபேசி கொண்டு சென்றபோது, அவருக்கு எவ்வாறு கைத்தொலைபேசி கிடைத்தது என சந்தேகமடைந்த பாடசாலை ஆசிரியர்கள் விசாரணை செய்ததில் விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாடசாலை நிர்வாகம் உடனடியாக சம்பவத்தை பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவுக்கு அறிவித்துள்ளனர். பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவு …

    • 39 replies
    • 4.1k views
  17. தமிழ் இனத்தில் பிறந்ததை எண்ணி வெட்கி தலைகுனிகிறேன் என்று லண்டன் வாழ் ஈழத்தமிழரான சுதன் என்பவர் மிகுந்த வேதனையுடன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வடபகுதியிலுள்ள எனது பதினைந்து ஏக்கர் நிலத்தை சிங்கள இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்க தயாராகிவிட்டேன் என கண்ணீருடன் கூறுகின்றார்.

    • 3 replies
    • 1.1k views
  18. சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் அரசியல் அமைப்பு சபை இன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது. ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் பதவியேற்றதை அடுத்து இவ்வாறு அரசியல் அமைப்புச் சபை கூடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்நிலையில் இன்றைய அரசியல் அமைப்பு சபை பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் இல்லாதே கூடியுள்ளது. அரசியல் அமைப்பு சபையில் 10 உறுப்பினர்களை கொண்டுள்ள நிலையில் சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் உத்தியோகப்பூர்வ அதிகாரத்திற்கு அமைய தெரிவுச் செய்யப்படுவர். அவர்களில் இடைக்கால அரசாங்கதின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவில்லை. அதேபோல் எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை பெயரிடப்பட்டுள்ள போதிலு…

  19. வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் பாதுகாப்பு செயலாளர் இன்று யாழ் சென்றமையை கண்டித்து ஆர்பாட்டம் ஒன்று இன்று மாலை முன்னெடுக்கபட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போர் குற்றவாளி கமல் குணரத்ன பாதுகாப்பு செயலாளராக மீண்டும் அதிகாரத்துக்கு வந்துள்ளார். இது அவர்களின் தமிழ் இனப்படுகொலையை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்ற வாசகம் பொறிக்கபட்ட பதாகையை ஏந்தியிருந்ததுடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க நாட்டினது கொடிகளையும் கையில் ஏந்தியிருந்தனர். இவர்களது போராட்டம்…

  20. கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் சொல்வதைச் செய்கின்ற அரசாங்கமாக இருக்கும் என நம்புவதாக தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் வேழமாலிதன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இராணுவத்தின் பிடியில் உள்ள கிளிநொச்சி நூலகம் தொடர்பாக தமிழ்க் குரலுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே வேழமாலிதன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இராணுவத்தினர்வசம் உள்ள நூலகக் காணியானது விடுவிக்கப்படும் சாத்தியம் தொடர்பாக தமிழ்க் குரலின் முதன்மை அறிவிப்பாளர் கொற்றவை அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வேழமாலிதன், “புதிய அரசியல் சூழ்நிலையானது மாற்றம் ஏற்படுத்தும் என நம்புகிறேன். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சகல வாழ்வியல் பிரச்சினைகளையும், தமிழ் பேசும் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளை…

  21. யாழில் எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது அண்டு நிறைவு விழா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது அண்டு நிறைவு விழா எதிர்வரும் 18ஆம் திகதி நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நல்லூர் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகிலுள்ள நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்” என மேலும் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “தமிழரசுக் கட்சியின் 70ஆவது அ…

  22. வெற்றுச் சுவர்களை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் புத்தளம் -கொழும்பு பிரதான வீதியில் தில்லையடிரயில்வேகடவைக்கு அருகில் உள்ள சிறிய கட்டடமொன்றின் சுவரில் புத்தளம் தம்பபண்ணி வரலாற்றைக்குறிக்கும் ஓவியமொன்று வரையப்பட்டுள்ளது.புத்தளம்,தில்லையடிப் பகுதிகளைச் சேர்ந்த பெரும்பான்மை இன இளைஞர்களின் ஏற்பாட்டில் குறித்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.புத்தளம்பிரதேசத்தில் தம்பபண்ணி எனும் இடத்தில் விஜயன் குவேனியை சந்தித்த வரலாற்றை பிரதிபலிக்கின்ற வகையில் குறித்த படம் வரையப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு வரையப்பட்டகுறித்த ஓவியம் செவ்வாயக்கிழமை (10) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.இதன்போது இவற்றை வரைந்த பெரும்பான்மை இன இளைஞர்கள் இதனை திறந்து வைத்த தினம் பாதைகளில் கவனிப…

  23. வவுனியா நகரசபை பூங்காவில் "வவுனியா கெத்து" tiktok நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் நேற்று tiktok செயலி நண்பர்கள் ஒன்று கூடியிருந்தனர். இவ்வொன்றுகூடலை சிறகுகள் இளைஞர் அமைப்பின் அனுசரணையில் தமது விசேட டெங்கு ஒழிப்பு நாளாக மாற்றியுள்ளார்கள். வவுனியா நகர பகுதிகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன் டெங்கு அற்ற வவுனியவை உருவாக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் அதன் முக்கியத்தவத்தையும் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுடன் பகிர்ந்து கொண்டனர். இவ் நிகழ்வில் இலங்கையில் பல பாகங்களில் இருந்தும் பல இளைஞர் ,யுவதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/70899

  24. பால் மாவின், விலையில் மாற்றம். இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று (திங்கட்கிழமை) அமுலுக்கு வரும் வகையில் பால்மாவுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 1 கிலோ கிராம் பால்மாவின் விலை 40 ரூபாயினாலும் 400 கிராம் பால்மாவின் விலை 15 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை கடந்த 24ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 50 ரூபாயினாலும் 400 கிராம் பால்மாவின் விலை 20 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/பால்மா…

    • 4 replies
    • 1.1k views
  25. 354 ரயில் நிலையங்கள் பசுமை ரயில் நிலையங்களாக மாற்றம்! நாட்டிலுள்ள 354 ரயில் நிலையங்கள் பசுமை ரயில் நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக ரயில் சேவை இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார். மேலும் இந்த வேலைத்திட்டம் நேற்று (புதன்கிழமை) வட்டவல ரயில் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பசுமை ரயில் நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படும் சகல ரயில் நிலையங்களையும் தான் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ரயில் நிலையங்கள் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டதாக அபிவிருத்திச் செய்யப்படவிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார். இதேபோன்ற ரயில் சேவைகளை விரிவுபடுத்தும் திட்டங்களை மீளாய்வு செய்ய குழுவொன்…

    • 2 replies
    • 477 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.