ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் செயற்பாடு படுதோல்வி கண்டு விட்டது. எனினும் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் சரி யானவை என்ற மனநிலையிலேயே இருக்கப் போகின்றனர். எதையும் அலசி ஆராய்ந்து எது சரி, எது பிழை என்ற முடிவுக்கு வராமல் எங்கள் நம்பிக் கைக்குரியவர்கள் செய்வதெல்லாம் நியாய மானவை, முழுக்க முழுக்கச் சரியானவை என்று நம்பி விடுகின்ற ஒரு பண்பாடு நம் இனத்தில் உண்டு. இந்தப் பண்பாடு பற்றி நம் அரசியல் தலை வர்களும் நன்கு உணர்ந்திருக்கின்றனர்.இதன் காரணமாக மக்களை எப்படியும் வாலாகப் பயன்படுத்த முடியும் என்பது அவர் களுக்கு நன்கு தெரியும். இதன்காரணமாக மக்கள் எங்களை ஒதுக்கி விடுவார்கள் அல்லது எங்களிடம் கேள்வி கேட்பார்கள் என்ற அச்சம் தமிழ் அரசியல் …
-
- 0 replies
- 541 views
-
-
(ஆர்.யசி) ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ளும் வகையில் சம்பந்தன் -விக்கினேஸ்வரன் போன்ற தமிழ் தலைவர்களுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் ஏனைய தமிழ் கட்சிகள் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் கூறுகின்றனர். இம்முறை தேர்தலில் தமிழ் -முஸ்லிம் மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தி எனவும் தெரிவித்தனர். கடந்த ஜனாதிபதி தேர்தல்களை போல் அல்லாது பல புதிய கட்சிகள் பிரதான கட்சிகள் என பலரது பெயர்கள் ஜனாதிபதி தேர்தலுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள ந…
-
- 7 replies
- 1.6k views
-
-
கோட்டாவின் குடியுரிமை தொடர்பான ஆவணங்கள் இல்லை – அரசாங்க திணைக்களங்கள் கைவிரிப்பு கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பான பதிவுகள் எவையும் தம்மிடம் இல்லை என அரசாங்க திணைக்களங்கள் தெரிவித்ததாக குற்ற விசாரணைப் பிரிவினர் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சும், குடிவரவு குடியகல்வு திணைக்களமும் குறித்த ஆவணங்கள் தம்மிடம் இல்லையென கைவிரித்துள்ளன. கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பாக சிவில் சமூக செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொட, சந்ரகுப்த தெனுவெர ஆகியோர் செய்த முறைப்பாடு குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பான ‘பி’ அறிக்கையிலேயே குற்ற விசாரணைத் திணைக்களம் இவ்வாறு கூறியுள்ளது. கோட்…
-
- 1 reply
- 540 views
-
-
-எஸ்.நிதர்ஷன் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்க தமது கட்சி தீமானித்துக்கதாகத் தெரிவித்துள்ள மக்கள் முன்னேற்ற கூட்டணியின் செயலாள நாயகம் கணேஷ் வேலாயுதம், தமது ஆதரவின் ஊடாக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார். யாழ். ஊடக அமையத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர், கடந்த காலங்களில் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியவர்கள், தங்களுடைய நலன்களையே பெற்றுக் கொண்டார்கனெனவும் மக்களுடைய நலன்கள் தொடர்பாக அவரகள் சிந்தித்ததே கிடையாதெனவும் குற்றஞ்சாட்டினார். இவ்வாறான ஒரு நிலையினை கருத்தில் கொண்டும் தற…
-
- 0 replies
- 347 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வித தீர்மானங்களையும் இதுவரை எடுக்கவில்லை என யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அனைத்து வேட்பாளர்களுடனும் பேசிய பின்பே அதுதொடர்பில் ஒரு தீர்மானத்தை எடுக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - குமுழமுனைப் பகுதியில், இன்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்தாய்வுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சுமந்திரனிடம், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்ளவிக்கே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாம் பங்கொடுக்கின்ற நிழ்வுகளில், அமைச்சர்க…
-
- 0 replies
- 225 views
-
-
(தி.சோபிதன்) நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் பொறுப்பை மக்கள் எமக்கு தந்துள்ளனர். அந்த பொறுப்பினை நாம் நிதானமாக கையாளுவோம் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், சரியான நேரத்தில் இராஜதந்திர ரீதியான முடிவினை எடுப்போம் என்றும் கூறினார். யாழ்ப்பாணம், சாவகச்சேரி இந்தக் கல்லூரியின் வகுப்பறை கட்டடத் தொகுதி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் முக்கிய திருப்பு முனை வருகின்ற போது அதில் பாதிப்புக்கள் கூட வரலாம். அல்லது பல புதிய சந்தர்ப்பங்கள் கூட எழலாம். ஆகையினாலே மிக அவதானமாக முதிர்ச்சியோடு இந்த சூழ்நிலைகளை கையாள வேண்டு…
-
- 13 replies
- 1.9k views
- 1 follower
-
-
ஞானசாரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பினை ஜனாதிபதி மீள் பரிசீலனை செய்ய வேண்டும் – ஜே.வி.பி! பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு தொடர்பாக, ஜனாதிபதி மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது. யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே ஜே.வி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அண்மையில் முல்லைத்தீவில் ஞானசார தேரரின் அடாவடித்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அந்த அடவடித்தனத்தின் ஊடாக எங்களுக்கு சொல்லப்படுகின்ற ஒரு செய்தி என்னவென்றால் முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளை தன்வசப்படுத்திக் கொள்வதற்கு ஏதுவான…
-
- 0 replies
- 663 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சம்மந்தன் மற்றும் சந்திரன் ஆகிய இருவரும் தமிழர்களுக்கான பிரதிநிதிகள் இல்லை அவர்கள் சிங்களவர்களுக்கான பிரதிநிதிகளே என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களின் பொதுப் பிரச்சினைகள் போராட்டங்கள் எதிலும் கலந்து கொள்வதில்லை குறிப்பாக நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போராட்டங்களில் திறமைவாய்ந்த சட்டத்தரணியாக இருக்கும் சு…
-
- 1 reply
- 586 views
-
-
மைத்திரி – மகிந்த தரப்பு சந்திப்பு இணக்கமின்றி நிறைவு September 29, 2019 எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்குமிடையில் நேற்றையதிம் இடம்பெற்ற சந்திப்பு இணக்கமின்றி நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவும் சுதந்திரக்கட்சியும் இணைவு குறித்து பேசப்பட்டது. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சுதந்திரக் கட்சயானது பாரம்பரியம் வாய்ந்ததாகும். ஆகவே அக்கட்சியின் தனித்துவங்களை விட்டுக் கொடுக்க முடியாது எனவும் ஜனாதிபதித் தேர்தலில் கை அல்லது வெற்றிலைச…
-
- 0 replies
- 262 views
-
-
மட்டக்களப்பில் துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு – நால்வர் கைது September 29, 2019 மட்டக்களப்பு கித்துள் காட்டுக்கு உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கியுடன் 4 பேர் வேட்டைக்கு சென்ற நிலையில் குறித்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த சிறிக்காந்தன் தனுஜன் என்ற 14 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் நேற்று (28) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் 3 பேரைக் கைது செய்துள்ளாதாகவும் கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வேட்டைக்கு சென்ற போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில்; படுகாயமடைந்த சிறுவன் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக …
-
- 0 replies
- 446 views
-
-
Share0 ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டதை அடுத்து கிளிநொச்சியில் கட்சியின் ஆதரவாளர்கள் பொங்கல் பொங்கி இனிப்பு பண்டங்கள் வழங்கி கொண்டாடியுள்ளனர். கிளிநொச்சி டிப்போச் சந்தியில் கட்சியின் ஆதரவாளர்கள் நேற்று (26) ஒன்று கூடி பொங்கல் பொங்கியதோடு, பொது மக்களுக்கு இனிப்பு பண்டங்களும் வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். https://newuthayan.com/?p=6821
-
- 7 replies
- 1k views
-
-
இலங்கை படையினரை ஐநாவின் அமைதிகாக்கும் படையணியின் நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தியதன் மூலம் ஐநா யுத்தகுற்றங்களை மூடி மறைப்பதற்கான முயற்சிகளை அலட்சியம் செய்யப்போவதில்லை என்ற செய்தியை தெரிவித்துள்ளது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஐநாவிற்கான இயக்குநர் லூயில் சர்பொனேயு இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும குறிப்பிட்டுள்ளதாவது: இலங்கை படையினரை ஐநாவின் அமைதிகாக்கும் படையணியின் நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தியதன் மூலம் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டவர்களை தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிப்பதற்கு எதிராக ஐநா உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இலங்கையின் இராணுவதளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சவ…
-
- 2 replies
- 883 views
-
-
அரசு நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கிறது - இந்துமாமன்றம். செம்மலை சம்பவம் தொடர்பாக அரசாங்கம் இதுவரை நடவடிக்கையினை எடுக்காததையிட்டு மிகவும் கவலையடைவதாக வவுனியா இந்துமாமன்றம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக இந்து மாமன்றத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த விகாரை அமைத்துத் தங்கியிருந்த நிலையில் புற்றுநோயால் உயிரிழந்த மேதாலங்க தேரரின் உடலை நீதிமன்றின் கட்டளையையும் மீறி இந்து தர்ம நெறிமுறைகளிற்கு அப்பால் முல்லைதீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்ததுடன், இனம் தெரியாத காடையர்கள் மூலம் சட்டத்தரணிகளையும், பொதுமக்களையும் தாக்கிய சம்பவத்தினை நாம் வ…
-
- 0 replies
- 572 views
-
-
ரணிலின் அரசியல் திட்டம் இம்முறை வெற்றிப்பெறாது : மஹிந்த (இராஜதுரை ஹஷான்) ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் யாராக இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையில் மாற்றமில்லை. நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சியமைத்த மைத்திரி- ரணில் ஆகியோரது நிர்வாகத்தையே மீண்டும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஊடாக செயறபடுத்திக் கொள்ள பிரதமர் ரணில் முயற்சிக்கின்றார். பிரதமரின் அரசியல் திட்டம் இம்முறை வெற்றிப்பெறாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் உள்ள கண்காட்சி காட்சிப்படுத்தல் அரங்கில் இன்று இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாரிய போராட்டத்திற்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சி ஜனாத…
-
- 0 replies
- 472 views
-
-
போதைப்பொருட்கள் மற்றும் வெடிப்பொருட்களை கண்டறியக்கூடிய 750 மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன உபகரணங்களை சீனா அரசு இலங்கைக்கு அன்பளிப்பு செய்துள்ளது. சீனத் தூதுவர் Chang Xueyuan நேற்று (27) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். ஜனாதிபதியின் கோரிக்கைக்கமைய இந்த அதிநவீன உபகரணம் சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இத்தகைய நவீன உபகரணங்களை போதைப்பொருள் தேடுதல்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக இலங்கை பாதுகாப்புத் துறையினர் உபயோகிக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 05 மீற்றர் தூரத்திற்குள் இருக்கும் நபர்கள் அல்லது பொர…
-
- 0 replies
- 468 views
-
-
சுமணன் கொலை வழக்கு எதிரி சிறையில் September 27, 2019 மயூரப்பிரியன் சுன்னாகம் காவல் நிலையத்தில் சந்தேகநபரான சுமணனை தடுப்புகாவலில் வைத்து சித்திரைவதை செய்த பின் கொலை செய்தனர் என்ற குற்றம்சுமத்தப்பட்ட முன்னாள் பொறுப்பதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 5 காவல்துறையினரில் 5ஆவது எதிரி சுகவீனம் காரணமாக அநுராதபுரம் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார். 5ஆவது எதிரியின் இறப்புத் தொடர்பில் உரிய சான்றிதழ்கள் கிடைக்கப்பெறவில்லை. அதனால் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து 5ஆவது எதிரியை நீக்கிய திருத்திய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய அரச சட்டவாதி அனுமதி கோரினார். அதற்கு அனுமதியளித்த மேல் நீதிமன்றம், வழக்கை வரும் ஒக்டோபர் 08ஆம் திகத…
-
- 0 replies
- 499 views
-
-
முல்லைத்தீவு நீராவியடி ஆலய விவகாரத்தில் பௌத்த பிக்குமார்கள் செய்ததை நியாயப்படுத்தியிருக்கும் பௌத்த மக்களின் பெருந்தலைமைத்துவங்களில் ஒன்றான மல்வத்துப்பீடம், தெற்கு சிங்கள பௌத்த மக்களை மீண்டும் கலவரத் திசைக்கு திருப்புகின்ற முயற்சியிலிருந்து வடக்கு மக்கள் விலகிக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆட்சியாளர்கள் இந்த விவகாரத்தில் தலையீடு செய்து நிலைமையை தணிக்க முயற்சிக்காவிட்டால் மீண்டும் ஸ்ரீலங்கா நாட்டில் இரத்தம் சிந்தப்படுவதையோ, மக்கள் சட்டத்தைக் கையில் எடுப்பதையோ தடுக்க முடியாது என்றும் மல்வத்துப்பீடம் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கின்றது. முல்லைத்தீவு நீராவியடி ஆலய விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவையும் மீறிச் செயற்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் …
-
- 7 replies
- 1.2k views
-
-
தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் காத்தான்குடி முஸ்லிம் மையவாடியில் புதைப்பு மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியான மொஹமட் ஆசாத்தின் உடற்பாகங்கள் புதிய காத்தான்குடி பெரிய ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் புதைக்கப்பட்டது. குறித்த உடற்பாகங்களை, காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர் பொறுப்பேற்று இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளிவாசல் மையவாடியில் புதைக்கப்பட்டது. காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த தற்கொலைக் குண்டுதாரியின் தலை மற்றும் உடற்பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த உடற்பாகங்களை அரச செலவில் புதைக்குமாறு அரசாங்க அ…
-
- 0 replies
- 446 views
-
-
மயூரப்பிரியன் “கோத்தாபய ராஜபக்ச, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாக பாதுகாப்பு இல்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றில் இடைக்காலக் கட்டளை பெற்றுள்ளார். அவர் இனி ஒரு சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தால் அதுதொடர்பில் கவனம் செலுத்துவதற்கான உரிமையைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதியளிக்கவேண்டும். அவரது சாட்சியம் லலித், குகன் வழக்கில் முக்கியமானது” இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனு மீதான விசாரணையில் மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி விண்ணப்பம் செய்தார். எனினும் அந்த விண்ணப்பத்தை நிராகர…
-
- 1 reply
- 402 views
-
-
“இறந்த விகாராதிபதியின் உடலை வைத்து பௌத்த பிக்குகள் சிலர் வடக்கில் அரசியல் நாடகம் நடத்தியுள்ளார்கள். நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறிய இவர்களின் அடாவடியால் நாம் வெட்கித் தலைகுனிகின்றோம்.” இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.'' முல்லைத்தீவு, செம்மலை - நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை ஆலயத்துக்கு அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்ய முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் தீர்த்தக்கேணி அருகில் விகாராதிபதியின் உடல் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் தகனம் செய்யப்பட்டது. தமிழ் மக்கள் மற்றும் ச…
-
- 16 replies
- 2.4k views
-
-
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் யாழ் மாநகர முதல்வர் மீது மக்கள் முன்னணி குற்றச்சாட்டு Sep 27, 20190 தியாக தீபம் திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்வை யாழ்ப்பாணம் மாநகர சபை நடத்தும் என்று முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், நினைவேந்தல் வாரம் ஆரம்பிப்பதற்கு முன்னரும் ஆரம்பமாகிய பின்னரும் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார். அத்துடன், கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்விலும் இதற்கான அறிவித்தலை அவர் விடுத்திருந்தார்.இந்நிலையில் தியாக தீபம் திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்வை யாழ்ப்பாணம் மாநகர சபை நடத்தும் என்று முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் அறிவித்த போதும் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அவர் முன்னெடுக்கவில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்ன…
-
- 1 reply
- 492 views
-
-
இலங்கை ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் இலங்கை ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீகொத்தவில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது, இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால், அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட சஜித் பிரேமதாஸவிற்கு, கட்சியின் செயற்குழு ஏகமனதாக அங்க…
-
- 16 replies
- 2.1k views
- 1 follower
-
-
யாழில் சோஷலிச முன்னிலை கட்சியின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி, சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று யாழ்ப்பாண நகரில் நடைபெறவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார், வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர். இவ்விடயம் தொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஆள்கொணர்வு மனு கடந்த 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.குறித்த மனு மீதான விசாணையின் போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்துக்கு…
-
- 0 replies
- 346 views
-
-
கோத்தாவுக்கு புதிய சிக்கல் Sep 27, 20190 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களித்தமை தொடர்பாகவும் அவர் அந்த காலப்பகுதியில் இலங்கையில் தங்கியிருந்தமை தொடர்பாகவும் தகவல்கள் மற்றும் அறிக்கையை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குமாறு அம்பாந்தோட்டை உதவி தேர்தல்கள் ஆணையாளருக்கும் மற்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு கொழும்பு பிரதான நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இந்த உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கோதாபய ராஜபக்ஷ இரட்டை பிரஜா உரிமையை கொண்டிருந்த நிலையில் 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது இந்த நாட்டில் தங்கியிருந்து அரசியல் செயற்பாட்ட…
-
- 0 replies
- 445 views
-
-
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த சட்ட ரீதியாக பல தடைகள் September 27, 2019 நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த சட்ட ரீதியாக பல தடைகள் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் சட்டத்தை பலப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என்பவை இவ்வாறு நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த தடையாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களை கட்டுப்படுத்த கடுமையான கொள்கைகளை கையாண்டாலும் அதில் பலன் எதுவும் இல்லை எனவும் அவர் கு…
-
- 0 replies
- 454 views
-