ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பிய ஓய்வுபெற்ற கடற்படை கொமாண்டர் கைது! அவன் கார்டின் கடல் பாதுகாப்பு பிரிவின் தலைவரும் அவன் கார்ட் மிதக்கும் ஆயுதக் வழக்கில் சந்தேக நபராகவும் காணப்படும் ஓய்வுபெற்ற கடற்படை கொமாண்டர் விஸ்வஜித் நந்தன லியபலனகே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) பணடரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார். சிங்கப்பூரில் இருந்து நாட்டுக்கு திரும்பும்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை அவன்ட் கார்ட் தலைவர் உட்பட 7 பேரை கைது செய்ய சட்ட மா அதிபர் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/சிங்கப்பூரிலிருந்து-நாட/
-
- 1 reply
- 437 views
-
-
உகண்டாவில் எதிரொலித்த நீராவியடிப் பிள்ளையார் விவகாரம்! நீராவியடிப் பிள்ளையார் முன்றலில் நடந்தேறிய நீதிக்குப் புறம்பான செயல் குறித்து பொது நலவாய கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள அனைத்து பிரதிநிதிகளின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். உகண்டாவில் இடம்பெற்று வரும் பொது நலவாய கூட்டத்தொடரில் முன்வைத்த விடயங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “பொது நலவாய நாடுகளின் கூட்டத்தொடர் இந்த முறை உகண்டா நாட்டில் நடைபெறுகிறது. இந்த பொது நலவாய நாடுகளின் கூட்டத்தொடரில் சபாநாயகருக்கு பதிலாக நான் தலைமை தாங்கி வருகிறேன். பல்வேறு நாட்டு சபா…
-
- 0 replies
- 671 views
-
-
September 26, 2019 வீரகேசரி பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் அப்பத்திரிக்கையின் யாழ்.பிராந்திய அலுவலக செய்தியாளர் தி,சோபிதன் கொழும்பு காவல்துறை தலைமையகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். கொழும்பு காவல்துறை தலைமையகத்திற்கு எதிர்வரும் 4ஆம் திகதி விசாரணைக்கு சமூகமளிக்குமாறு காவல்துறை தலைமையகத்தில் இருந்து ஊடகவியலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோத்தாபய ராஜபக்சவுடன் டக்ளஸ் , வரதர் …
-
- 1 reply
- 493 views
-
-
இலங்கை இறைமையுள்ள நாடு, எந்த வெளிநாடும் தலையீடு செய்ய முடியாது – கோட்டா! இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு, எந்த வெளிநாடும் தலையீடு செய்ய முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை படையினரின் குடும்பத்தினர் மத்தியில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கை படையினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று, மனித உரிமை மீறல்களை புரிந்ததாக குற்றம்சாட்ட முயற்சிகள் நடக்கின்றன. அது நடப்பதற்கு பொதுஜன பெரமுன அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. நாட்டைப் பிளவுபடுத்த எவரையும் அனுமதிக்கமாட்டேன். பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீ…
-
- 1 reply
- 892 views
-
-
நல்லூரைச் சென்றடைந்தது, திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தி! தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வவுனியாவில் ஆரம்பமான நடைபயணம் நல்லூரை சென்றடைந்தது குறித்த நடைபயணம் இன்று (வியாழக்கிழமை) காலை நாவற்குழி சந்தியிலிருந்து பயணித்த நிலையில், தற்போது நல்லூரில் உள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை சென்றடைந்தது. இதனையடுத்து அங்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், சிங்கள குடியேற்றங்களை நிறுத்துதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், இன அழிப்பு மற்றும் காணாமலாக்கபட்டவர்க…
-
- 1 reply
- 559 views
-
-
நிபந்தனைகளுக்கு இணங்கமாட்டேன்- அடம்பிடிக்கும் சஜித் கி.தவசீலன்Sep 26, 2019 | 1:35 by in செய்திகள் நிபந்தனைகளின் அடிப்படையில் ஐதேகவின் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக வெளியாகிய தகவல்களை கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார். நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிப்பது உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில், சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்த ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார் என்றும், ரணில்- சஜித் உள்ளிட்ட ஐதேக மூத்த உறுப்பினர்களின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் மத்துகமவில் நேற்று நடந்த பாரிய பேரணியில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, தாம் எந்த நிபந்தனைக…
-
- 0 replies
- 449 views
-
-
யாழில்.பாடசாலைகள் மூடப்பட்டன… September 26, 2019 அதிபர்கள், ஆசிரியர்களின் சுகவீன விடுப்பு போராட்டத்தினால் யாழில் உள்ள பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் முடக்கப்பட்டு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. நீண்டகாலமாக நிலவிவரும் அதிபர் , ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்த்து சம்பளத்தை அதிகரிக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் – போலியான வாக்குறுதிகளை வழங்கி அரசு தொடர்ச்சியாக தம்மை ஏமாற்றி வருவதாகவும், அரசியல் ரீதியாக நியமனங்களை வழங்கி கல்வித்துறையை சீரழித்து வருவதாகவும், ஆசிரியர் சங்கத்தினர் கூறியுள்ளதுடன், ஆசிரியர் அதிபர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்த முயற்சிக்கிறது. பிரிவெனா மற்றும் நன்கொடை பெறும் பாடசாலைகளில் கற்ப…
-
- 0 replies
- 518 views
-
-
கிணற்றில் விழுந்து உயிரிழப்பு – திருட சென்றவரே உயிரிழப்பா ? September 25, 2019 -மயூரப்பிரியன் யாழ்.நகர் பகுதியில் உள்ள வீட்டு கிணற்றுக்குள் இனம்தெரியாத நபர் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். யாழ். சிறிதர் திரையரங்குக்கு அண்மையாக உள்ள வீட்டிலையே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது , குறித்த வீட்டின் கிணற்றினுள் இன்று புதன்கிழமை அதிகாலை வேளை சத்தம் கேட்டுள்ளது. அதனை கேட்ட வீட்டு உரிமையாளர் கிணற்றினுள் பார்த்த போது நபர் ஒருவர் வீழ்ந்து இருப்பதனை அவதானித்துள்ளார். உடனடியாக அது குறித்து யாழ்ப்பாண காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார். காவல்துறையினர் வந்து பார்த்த போது குறித்த நபர் கிணற்றினுள் உயிரிழந்துள்…
-
- 1 reply
- 836 views
-
-
கடற்படையில் மீண்டும் இணைந்தார் யோஷித ராஜபக்ஷ! யோஷித ராஜபக்ஷ மீண்டும் கடற்படை சேவையில் இணைந்துள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய அவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா, அவரை இணைத்துக்கொள்ளும் அனுமதி கடிதத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கையொப்பமிட்டுள்ளார். கால்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் தொலைக்காட்சி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய, கடற்படையில் இருந்து 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் யோஷித ராஜபக்ஷ பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கடற்படையில்-மீண்டும்-இணை/
-
- 1 reply
- 570 views
-
-
புத்தளத்தில் கரையொதுங்கியது டொல்பின் – படையெடுக்கும் மக்கள் புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேசத்தின் பள்ளிவாசல்பாடு கிராமத்தில் இறந்த நிலையில் டொல்பினொன்று கரை ஒதுங்கியுள்ளது. பள்ளிவாசல்பாடு பகுதியில் உள்ள கடற்கரைக்கு நேற்று (செவ்வாய்கிழமை) சென்ற மீனவர் ஒருவர் டொல்பினொன்று கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளார். அதன் பின்னர் அதனை இழுத்து கரையில் சேர்த்துள்ளார். சுமார் 06 அடி நீளமுடைய டொல்பின் ஒன்றே பல காயங்களுடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. கரை ஒதுங்கியுள்ள டொல்பினை பார்வையிடுவதற்காக அதிகளவிலான மக்கள் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/புத்தளத்தில்-கரையொதுங்க/
-
- 3 replies
- 1.2k views
-
-
(நா.தினுஷா) எனது அரசியல் வாழ்க்கையில் எனக்கென தனியான அரசியல் அடையாளம் உள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு நிபந்தனைகளுக்கு அடி பணியவோ, கெளரவத்தை விட்டுக்கொடுக்கவோ முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நான் மற்றவர்களின் தேவைகளுக்கான செயற்படும் கைப்பொம்மையும் இல்லை. மக்களே எனது உறவினர்கள். அவர்களின் ஆணைக்கமையவே செயற்டுவேன். நான் இந்த ஜனாதிபதி தேர்தலில் நேர்மையாகவே களமிறக்குகிறேன். மக்களுக்கு ஏற்ற மக்களுக்கான ஆட்சியை ஏற்படுத்துவதற்கும் புதிய யுகத்துக்கான புரட்சியை ஏற்படுத்துவதற்கும…
-
- 0 replies
- 466 views
-
-
இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து 8 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. குறிப்பாக கடும் மழையுடனான வானிலையினால் 20,815 குடும்பங்களைச் சேர்ந்த 80007 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 488 views
-
-
வடக்கு மாகாண சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு – முடங்கியது நீதிச் சேவை! முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்கு துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தி வடக்கு மாகாண சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வடக்கு மாகாண நீதிமன்ற நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, சட்டத்தரணி கே.சுகாஷ் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் முல்லைத்தீவில் இன்று முற்பகல் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதற்காக யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் முல்லைத்தீவு நோக்கிப் பயணமாகியுள்ளனர். முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்கு துணை நி…
-
- 7 replies
- 843 views
-
-
திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஐக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு அமைச்சர் சஜித் பிரேமதாச விடுத்த வேண்டுகோளை சரியாக ஆராய்ந்து வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். 2015இல் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு வெற்றிபெறும் வாய்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில் அதற்கு முரணாக கட்சி மேற்கொண்ட தீர்மனத்தினாலேயே கட்சியிலிருந்து தூரமாக வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றின் மூலம் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கத…
-
- 0 replies
- 488 views
-
-
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை உருவாக்க தெரிவுக்குழு பரிந்துரை Sep 25, 2019 | 2:33by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு, தமது விசாரணை அறிக்கையை இறுதி செய்வதற்கான கூட்டத்தை நேற்று நடத்தியது. இதில் ஐந்து பிரதான விடயங்கள் குறித்து பரிந்துரைகளை முன்வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 2.15 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டனர். இதில் ராஜித சேனாரத்ன அஷூ மாரசிங்க, ரவூப் ஹக்கீம் ஆகியொர் தவிர ஏனைய உறுப்பினர்கள் பங்கேற்றனர். …
-
- 0 replies
- 296 views
-
-
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை இன்னும் இரு தினங்களுக்குள் முன்மொழிய பிரதமரும் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. உட்கட்சிப் பூசல் மேலோங்கியிருந்த நிலையில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக இருந்த ஐந்து உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலக்கப்பட்டனர். இதனையடுத்து ரணில் விக்ரமசிங்கவிற்கு அழுத்தம் அதிகரித்தது. சுய நலனுக்காக கட்சியை பிளவுபடுத்த இடமளிக்க முடியாது என்று முன்வைக்கட்ட கருத்துக்கள் மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் சஜித் பிரேமதாசவே பலமான நிலையில் இருக்கின்றார் என்று கிடைத்த தகவல…
-
- 3 replies
- 981 views
-
-
உயிரிழந்தது சர்ச்சைக்குரிய ‘டிகிரி’ யானை! கண்டி – தலதா பெரஹராவில் ஈடுபடுத்தப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த 70 வயதான டிக்கிரி என்ற யானை உயிரிழந்தது. கேகாலை – ரந்தெனிய பிரதேசத்தில் குறித்த யானை நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கண்டி தலதா மாளிகையின் விஸ்ணு ஆலயத்தின் ஊர்வலத்தில் டிகிரி எனப்படும் வயோதிப யானையை ஈடுபடுத்தியமை அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 70 வயதுடைய டிகிரி யானை பார்ப்பதற்கு நோயால் பாதிக்கப்பட்டது போலவும் உடல் மெலிந்த நிலையிலும் சோர்வுற்ற நிலையிலும் மிகவும் பரிதாபமான நிலையில் காணப்படுகின்றமையால் இந்த யானையை ஊர்வலத்தில் பயன்படுத்தியமை குறித்து பலரும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். விலங்கு ஆர்வலர்…
-
- 0 replies
- 607 views
-
-
15 நாட்களாக தொடரும் இராணுவத்தினரின் போராட்டம் – இருவர் உண்ணாவிரதம்! சத்தியாகிரக போராட்டத்தை மேற்கொண்டுவந்த விசேட தேவையுடைய இராணுவத்தினரில் 2 பேர், உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக கடந்த 15 நாட்களாக அவர்கள் சத்தியாகிரக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு உயிர்வாழும் வரையில் சம்பளக் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக, நேற்று நிதி அமைச்சு அறிவித்திருந்தது எனினும் இந்த அறிவிப்பின் பின்னரும் அவர்களது போராட்டம் தொடர்கிறது. அத்துடன் அவர்களில் இருவர் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். த…
-
- 0 replies
- 353 views
-
-
வேட்பாளர் விவகாரம்: தமிழர்களுக்காக சஜித்துடன் முரண்படும் ரணில் தமிழ் மக்களின் கேள்வியாகவுள்ள அதிகாரப் பகிர்வு கோரிக்கையினை நாடாளுமன்ற வழிநடத்தல் குழுவிற்கு எட்டப்பட்ட ஒருமித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு நிறைவேற்ற உழைக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கோரிக்கை சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவே களமிறங்குவார் என நம்பகத் தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பும் இன்று (புதன்கிழமை) வெளியாகவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக நேற்று மாலை நாடராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் க…
-
- 0 replies
- 363 views
-
-
ஹாபிசம், அரபு மயமாக்கல் போன்றவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தெரிவுக்குழு பரிந்துரை ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைகுண்டு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக் குழு உறுப்பினர்கள், அதிகரிக்கும் வஹாபிசம் மற்றும் அரபு மயமாக்கல் உள்ளிட்ட ஐந்து முக்கிய பகுதிகளை மையமாகக் கொண்டு அவர்களின் பரிந்துரைகளை வழங்க முடிவு செய்ததுள்ளனர். அக்குழுத் தலைவர் துணை சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.15 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தின் குழு அறை 3 இல் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த கூட்டம் மாலை 5 மணி வரை நீடித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறையில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவச…
-
- 0 replies
- 491 views
-
-
“இந்த நாட்டில் பிக்குகளுக்குத் தனி மரியாதை உண்டு. ஆனால், அவர்களை அவமதித்து தமிழ் அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் செயற்படும் சட்டத்தரணிகளின் நடவடிக்கையினால் தான் முல்லைத்தீவு – நீராவியடியில் பதற்றம் ஏற்பட்டது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இறந்த விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை அமைதியான ஓர் இடத்தில் தகனம் செய்யவே பிக்குகள் தீர்மானித்திருந்தார்கள். ஆனால், தமிழ் அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் செயற்படும் சட்டத்தரணிகள் பிக்குகளை அவமதிக்கும் வகையில் செயற்பட்டார்கள். …
-
- 0 replies
- 369 views
-
-
மட்டக்களப்பு – வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று (24) பணிப் பகிஸ்கரிப்பினை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவில் சட்டத்தரணிகளான சுகாஷ், கணேஷ்வரன் ஆகியோர் தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் அனைவரும் தங்களது பணிப் பகிஸ்கரிப்பினை மேற்கொண்டுள்ளனர். இப்பகிஸ்கரிப்புக் காரணமாக செவ்வாய்கிழமை நாட்களுக்குரிய வாழைச்சேனை திறந்த நீதிமன்றில் அழைக்கப்படவிருந்த வழக்குகள் அனைத்தும் எதிர்வரும் 2019.11.26ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளமை தொடர்பில் பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்…
-
- 0 replies
- 693 views
-
-
September 24, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கரியாளை நாகபடுவான் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மீள் குடியேறி 10 வருடங்கள் ஆகியும் இதுவரை தாங்கள் தொடர்ச்சியாக அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதியுறுவதாகவும் அரச அதிகாரிக…
-
- 0 replies
- 567 views
-
-
இன்னொரு இனமுறுகலுக்கான உச்ச கட்ட முஸ்தீபுகளை ஞானசார மேற்கொண்டு வருகிறார்.பேரினவாத சக்திகளின் அடக்கி ஆளுகின்ற மனோபாவத்தின் விளைவே இது. தமிழர்களையும், முஸ்லிம்களையும் அல்லது தமிழ் பேசுகின்ற சமூகத்தை நசுக்கி ஒரு அடிமைச்சமூகமாக வைத்துக்கொள்ள முனைகின்ற ஒரு போக்கு தொடர்ச்சியாக உணரப்பட்டு வருகின்றது.தமிழின் தொன்மைக்கு முன்னால் சிங்களம் அழிந்து போய்விடும் என்ற மனப்பயத்தில் சிங்கள மொழிபேசுகின்ற சமூகத்தை ஒரு இருண்மைக்குள் வைத்துக்கொள்ள முனைகின்றது பேரினவாத சக்திகள்.பௌத்த மதத்தின் நேர்மையான உபதேசங்களை மறந்து குரோதத்தையும், முரண்பாடுகளையும் தோற்றுவிப்பதில் ஞானசார, அத்துரலியத்த போன்ற பௌத்த தேரர்கள் முன்னின்று செயற்படுகின்றனர். அவர்களை பொருத்தமட்டில் தமிழ் பேசுகின்ற சமூகத்தை அடக்கி ஆள …
-
- 0 replies
- 978 views
-
-
நீதிமன்றத்தின் உத்தரவுகள் எங்களை கட்டுப்படுத்தாது : நீராவியடியில் தேரர்கள்! இது சிங்கள பௌத்த நாடு என்றும், நீதிமன்றத்தின் உத்தரவுகள் எங்களை கட்டுப்படுத்தாது என்றும் தேரர்கள் தெரிவித்ததாக சட்டதரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவையும் மீறி நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சசையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பௌத்த தேரர்கள் நீதிமன்ற உத்தரவு எதுவும் எங்களை கட்டுப்படுத்தாது எனக்கூறி தாக்க முற்பட்டதாக சுகாஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து மேலும் தெரிவித்த அவர், “பௌத்த தேரர்களின் செயற்பாடு குறித்து நீதிமன்றத்தில் முறையிடுவதற்காக நாங்கள் சென்ற சந்தர்ப்பத்தில் ஞானசார தேரர…
-
- 0 replies
- 412 views
-