ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
விபத்தில் மூவர் பலி – ஐவர் காயம் July 29, 2019 அநுராதபுரம்- மதவாச்சி வீதியின் வஹமலுகொல்லேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தொன்றும் தம்புள்ளை நோக்கி பயணித்த பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதியதால், இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது உயிரிழந்த மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 53, 30, 12 வயதுடையவர்கள் எனவும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #யாழ்ப்பாணம் #விபத்தில் #பலி #காயம் http://globaltamilnews.net/2019/12751…
-
- 1 reply
- 584 views
-
-
செப்டெம்பர் 07 ஆம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் எழுச்சிப் பேரணிக்கு கட்சி பேதங்களை மறந்து அனைவரும் அணிதிரளுங்கள் தமிழ் மக்கள் பேரவை அறைகூவல் விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் மையக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தமிழ் மக்கள் பேரவையினால் உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிரகாரம் தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கின்ற சிங்கள, முஸ்லிம் முற்போக்கு அமைப்புக்களும் மக்கள் எழுச்சிப் பேரணிக்குத் ஆதரவை வழங்கி குறித்த பேரணியில் கலந்துகொள்ள வேண்டுமெனவும் தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு தமிழர் தாயகத்திற்குள் ஊடுருவி விட்டது. ஏற்கனவே படைத்தரப்பால் ஆக…
-
- 0 replies
- 469 views
-
-
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரும் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம்! அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த ஒன்பது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் எஞ்சியுள்ள 7பேரும் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இவர்கள், சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது, ஏற்கனவே வகித்த பதவிகளையே இவர்களுக்கு மீண்டும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதியுதீன் உள்ளிட்டோரும் அமைச்சுக்களை ஏற்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://ath…
-
- 7 replies
- 1.1k views
-
-
சிறிசேனவிற்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம் இலங்கையுடனான உத்தேச மில்லேனியம் சலஞ் ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கைக்கான அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்காக உடனடியாக தலையிடுமாறு அவர் இலங்கை ஜனாதிபதியை கோரியுள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கையில் காணப்பபடும் சில விடயங்கள் குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி உடன்படிக்கையை ஏற்க மறுத்துள்ள நிலையிலேயே தூதுவர் இந்த அவசர கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கையில் காணப்படும் சில சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் கு…
-
- 4 replies
- 1k views
-
-
யாழ்ப்பாண மாநகர சபையால், 5ஜி வலையமைப்பு அமைப்பது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாதென, யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாண மாவடடத்தில், ஸ்மாட் கோபுரங்கள், பல இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்ற போதிலும், யாழ். மாநகர சபையின் எல்லைக்குள் மட்டும் நடப்படுவதாகவும் அதில் 5 ஜி அலைக்கற்றை பொருத்தப்படவுள்ளதாக சில நபர்கள் அரசியல் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு ஸ்மார்ட் கோபுர விடயத்தில் அரசியல் இலாபம் தேட முனைகின்றவர்களை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென, வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.க…
-
- 1 reply
- 1k views
-
-
வெளிநாடுகளிலுள்ள மருத்துவர்கள் வடக்கிற்கு வர 6 மாத இலவச வீசா : சுரேன் ராகவன் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மருத்துவர்கள் வடக்கு மாகாணத்திற்கு வந்து மருத்துவச் சேவை செய்ய விரும்பினால் 6 மாத இலவச வீசா மற்றும் தங்குமிடம் போன்ற ஒழுங்குகளைச் செய்து தருவதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் சற்ரன் நகரசபை உறுப்பினர் பரம் நந்தாவுக்கும் இடையிலான சந்திப்பின்போதே இந்த விடயத்தை வடமாகாண ஆளுநர் தெரியப்படுத்தியுள்ளார். இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகியுள்ளபோதிலும் வடக்கில் மருத்துவத்துறை பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. எனவே நலிந்துபோயுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் தாம் இந்தத் திட்டத்தினை முன்னெடு…
-
- 15 replies
- 1.8k views
-
-
நுண்நிதி நிறுவனங்களின் அடாவடி தொடர்கின்றது; மக்கள் விசனம் வவுனியா சாந்தசோலைக்கு நேற்று மாலையில் நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் இருவர் நுண்நிதி நிறுவனங்களில் கடன் பணம் பெற்றுக்கொண்டவர்களின் வீடுகளுக்குச் சென்று பெற்றுக்கொண்ட கடன் பணத்தையும் தண்டப்பணத்துடன் செலுத்துமாறும் தவறினால் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து அடாவடி செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். நுண்நிதி நிறுவனப்பணியாளர்களிடம் மாலை நேரங்களில் வீடுகளுக்குச் சென்று பணம் அறவிடுவது பிரதேச செயலகத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்த குடும்பப்பெண்களிடம் அவ்வாறான ஆவணங்கள் ஏதும் உங்களிடம் இருந்தால் காண்பிக்குமாறு கோரி தகாதவார்த்தைப்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளதாகவும் குற…
-
- 4 replies
- 908 views
-
-
ஹஸ்பர் ஏ ஹலீம்- வெளிவாரி பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்கக்கோரிய கவனயீர்ப்பு போராட்டம் கிண்ணியாவில் இடம் பெற்றது திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினால் இன்று (29) திங்கட் கிழமை கிண்ணியா திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் கிண்ணியா பீச்சுக்கு முன்னால் இடம் பெற்ற இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல நூற்றுக்கும் அதிகமான வெளிவாரி பட்டதாரிகள் கலந்து கொண்டு தங்களுக்கும் நியமனங்களை வழங்குமாறும் கோசங்களை எழுப்பியிருந்தார்கள். அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனம் வழங்குதலில் அரசாங்கம் வெளிவாரி பட்டதாரிகளை புறக்கணித்தால் எதிர்வரும் தேர்தல்களை நாங்கள் புறக்கணிப்போம், அரச நியமனங்களின் போது எங்களையும் உள்வாங்கு, பட்டதாரிகள் நாட்டின் சொத்து, பத்து இலட்சம்…
-
- 0 replies
- 486 views
-
-
மக்கள் ஆதரவு இல்லை எனில் ஓய்வு – கிழட்டு அரசியல் செய்ய விரும்பவில்லை…. July 29, 2019 அடுத்துவரும் தோ்தல்களின் மக்கள் தமக்கு ஆணை வழங்க தவறினால் அரசியலில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறலாம் என நினைப்பதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளா் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மக்கள் ஆணை வழங்காமல் வலிந்து கிழட்டு அரசியல் செய்யும் விருப்பம் அல்லது தேவை தனக்கில்லை எனவும் அவர் கூட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சிய அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா 13 ஆவது திருத்தச் சட்டத்தை மட்டும் முழுமையாக நடைமுறைப்படுத்தினால் …
-
- 1 reply
- 662 views
-
-
44 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ள ஐ.நா. விசேட நிபுணர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமைதியான ஒன்றுகூடலை உறுதிப்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் கிளமன்ட் தனது பரந்துபட்ட அறிக்கையை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்க இருக்கின்றார். 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 44 ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா. விசேட அறிக்கையாளர் இந்த பரந்துபட்ட விபர அறிக்கையை சமர்ப்பிக்கவிருக்கிறார். அமைதியான ஒன்றுகூடல் நிலைமை தொடர்பில் இலங்கை எந்த மட்டத்தில் உள்ளது என்பது குறித்தே அவர் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவிருக்கிறார். கடந்தவாரம…
-
- 1 reply
- 489 views
-
-
உலகில் காய்கறி வகை உற்பத்தியில் ஆக கூடுதலான நச்சுத் தன்மை கொண்ட காய்கறி உற்பத்தி இலங்கையிலேயே இடம்பொறுவதாக விவசாய நீர்பாசன கிராமிய பொருளாதாரம் மற்றும் கடற்தொழில் மற்லும் நீரியல்வள அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தொற்றா நோயினால் பெரும் எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கெக்கிராவ கல்வி பிரிவில் இரும்புச் சத்து, புரோட்டின் மற்றும் விற்றமின் குறைபாடுகளைக் கொண்ட பாடசாலை மாணவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்காக உலக உணவு திட்டத்தின் கீழ் ஊக்குவிப்பதற்காக அரிசியை இலவசமாக பாடசாலை மாணவர்களின் உணவுக்காக வழங்கும் வேலைத்திட்ட நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார். உலக உணவு வேலைத்திட்டத்திற்கு அமைவாக விவசாய திணைக்கழம் அநுராதப…
-
- 0 replies
- 687 views
-
-
7 இந்திய மீனவர்கள் கைது (எம்.மனோசித்ரா) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து மீன்பிடிப்படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் 18 - 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த இந்திய மீனவர்கள் ஏழு பேரும் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடல்வள பாதுகாப்பு திணைக்களத்தில் ஒப்படைக்கப்…
-
- 0 replies
- 288 views
-
-
தனது சொந்த மகளைச் சீரழித்த தந்தை தலைமறைவு ; தேடுதல் வேட்டையில் பொலிஸார் 13 வயதுச் சிறுமியான தனது மகளை வன்புணர்வுக்குட்படுத்திய தந்தை தலைமறைவாகியுள்ளதாக கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். சிறுமி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சிப் பொலிஸாரால் இந்த அறிக்கை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பரந்தன் சிவபுரத்தைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதாக கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் முறைப்பாடு வழங்கப்பட்டது. சிறுமியும் அவரது தாயாருமே இந்த முறைப்பாட்டை வழங்கினர். சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது தந்தையே தன்னை மூன்று தடவைகள் வன்புணர்வுக்குட்படுத்தினார் எ…
-
- 0 replies
- 233 views
-
-
சோபா உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேங்காய் உடைத்து வழிபாடு! உத்தேச சோபா உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிழக்கு மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. திருகோணமலை நகரிலிருந்து ஆரம்பான பேரணி, திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலை சென்றடைந்தது. இதன்போது திருகோணமலை நகர மத்தியில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டதுடன், சோபா உடன்படிக்கை தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. http://athavannews.com/சோபா-உடன்படிக்கைக்கு-எதி/ ############ ############## ############### ########…
-
- 0 replies
- 518 views
-
-
காணாமலாக்கப்பட்டவர்களை தேடிப் போராட்டம் – 30 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு! காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி போராடியவர்களில் 30 இற்கும் அதிகமானவர்கள் எவ்வித தீர்வுகளும் கிடைக்காமலே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது உறவுகளை மீட்பதற்காகப் போராடி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வடைந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கமோ, சர்வதேச சமூகமோ நீதியை விரைவில் பெற்றுத்தருவதற்கு முயலாமையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. …
-
- 0 replies
- 321 views
-
-
முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலையிலான கூட்டணி மிகக் குழப்பமான கூட்டணி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசிய மக்கள் முன்னனி அதன் செயலாளர் கஜேந்திரன் அடிக்கடி பத்திரிகைகளில் விக்கினேஸ்வரன் ஐயா றோ என்று சொல்கின்றார். அதன் பின் தலைவர் பேசுகிறார். இந்த நிலையில் இது எப்படியான கூட்டணியாக அமையப் போகிறது. கஜேந்திரகுமார் அதற்குள் செல்ல மாட்டேன் எனக் ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இதனால் அது பலமான கூட்டணியாக வர வாய்ப்பில்லை. தற்போது விக்கினேஸ்வரனும், சுரேஸ் பிறேமச்சந்திரனும் தான் அந்த கூட்டணி. வேறு எந்தக் கட்சியும் சேரும் என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மனக்கசப்பு இருந்தாலும் கூட, ஒரு மாற்றீடு இல்லை என்ற எண்ணப…
-
- 5 replies
- 1.3k views
- 1 follower
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சீகிரியாவிற்கு சுற்றுலா பயணத்தினை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை 70 வீதத்தினால் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீகிரிய திட்ட முகாமையாளர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஒரு நாளைக்கு வெளிநாட்டவர்கள் 900 பேர் வரையில் சீகிரியாவிற்கான சுற்றுலாப்பயணத்தினை மேற்கொள்வதாக மேலும் தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/221190/சுற்றுலா-பயணிகளின்-வருகை-அதிகரிப்பு இலங்கையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பிரிட்டிஸ் பெண்- பூதாகரமாகும் பிரச்சினை இலங்கையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பிரிட்டிஸ் பெண் தொடர்பான வழக்கு நீதிக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பிரிட்டனி…
-
- 0 replies
- 787 views
-
-
இயற்கை வளங்களை சூறையாடும் சுயநலமிகள்! அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அலட்சியப்படுத்துவது ஏன்? யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகளைத் தாண்டி விட்ட இன்றைய காலத்தில் இயற்கை வளங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரியளவில் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்த வரை கருங்கல் அகழ்வு, கிரவல் அகழ்வு, காடழிப்பு, மரவியாபாரம் என பல்வேறு வழிகளில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன. மணல் அகழ்வின் மூலமும் பாரிய அளவில் இயற்கை வளங்களும் வனப்பகுதிகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதினெட்டாம் போர், பனிக்கன்க…
-
- 0 replies
- 595 views
-
-
நாட்டு மக்கள் இன்று பாதுகாப்புடன் இல்லை என நியாங்கத்தா விஜிதசிறி தேரர் தெரிவித்துள்ளார். பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல் பீரிஸை இன்று சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். http://www.hirunews.lk/tamil/221214/நாட்டு-மக்கள்-பாதுகாப்புடன்-இல்லை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இன்னமும் முடிவடையவில்லை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முடிவடைந்து விட்டதாக பலர் கூறினாலும் அது இன்னமும் முடிவடையவில்லை என மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். குருநாகளையில் இன்று இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கருத்து தெரிவிக்கும் பொழுது அவர் இதனை தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/221212/உயிர்த்த-ஞாயிறு-தாக்குதல்-இன்னமும்-முடிவடையவில்லை
-
- 1 reply
- 963 views
-
-
தந்தையின் வழியிலேயே தானும் பயணிக்கவுள்ளதாக சஜித் பிரேமதாச கூறி வருகின்றார். அவ்வாறானால் அவருக்கு அதோ கதிதான். தயவு செய்து அவரது தந்தையின் வழியில் செல்ல வேண்டாம் என்று அந்த அரசியல் இளைஞனுக்கு கூறிக்கொள்ள விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான கூட்டணியை தோல்வியடைய செய்யவும் தற்போது அரசியல் சதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இச் சதிகளை அனைவரும் ஒன்றினைந்து தோற்கடித்தால் உத்தேச தேர்தல்களில் அமோக வெற்றிப் பெறலாம். ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை ஏற்படுத்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச நாடுகள் பாரிய ஒத்துழைப்பினை வழங்கியது…
-
- 0 replies
- 401 views
-
-
இலங்கை – ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்தானது In இலங்கை July 26, 2019 3:58 pm GMT 0 Comments 1028 by : Litharsan இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன மற்றும் ஜப்பான் நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கேஹன்ஜி ஹரதா ஆகியோர் இந்த பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்கள். பாதுகாப்பு ஒத்துழைப்பினை பலப்படுத்தும் நோக்கில் இரு நாட்டு பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த ஒப்பந்தம் கைத்தாத்திடப்பட்டது. இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் காணப்படும் பாதுகாப்பு தொடர்பான…
-
- 6 replies
- 1.2k views
-
-
கடந்த வரவுசெலவு திட்டத்தில் வடகிழக்கில் 1000 விகாரைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காது 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கி அந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் – இன்று வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் தனியார் காணியில் பாரிய பௌத்த விகாரை அமைக்கப்படுகின்றது. இதையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கண்டுகொள்ளாது மௌனம் சாதித்து …
-
- 2 replies
- 790 views
- 1 follower
-
-
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் எல்லா முஸ்லிம்களுக்கும் சமத்துவத்தையும், நீதியையும் உறுதிப்படுத்தக்கூடிய வகையில் திருத்தப்பட வேண்டும் என முஸ்லிம் பெண்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுக்கின்றனர். முஸ்லிம் பெண்கள் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய முஸ்லிம் பெண்கள் இந்த கோரிக்கையை விடுத்திருந்தனர். 9 அம்ச கோரிக்கைகள் என்ன? அனைத்து முஸ்லிம்களின் திருமண வயதெல்லை 18ஆக அமைய வேண்டும். பெண்கள் காதிகளாகவோ, ஜுரிகளாகவோ, திருமணப் பதிவாளர்களாகவோ, காதிகள் சபை அங்கத்தவராகவோ நியமிக்கப்பட தகுதியுடையவர்களாக்கப்படல் வேண்டும். முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம், அனைத்த…
-
- 2 replies
- 609 views
-
-
சிங்கள இராச்சியமொன்று உருவாகுமானால் தமிழ் இராச்சியமும் உருவாகும் – ஸ்ரீகாந்தா சிங்கள இராச்சியமொன்று உருவாகுமானால், நிச்சயமாக தனி தமிழ் இராச்சியமொன்றும் நாட்டில் உருவாகும் என டெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா தெரிவித்தார். முல்லைத்தீவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், “இது ஒரு பெளத்த நாடென்றும் இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் அண்மைமையில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார். அதற்கு முன்னர் ஒரு தேரர் கருத்துரைத்தபோது சிங்கள இராச்சியத்தை உருவாக்குவேன் என தெரிவித்திருந்தார். அதற்கு நான் கூறினேன் சிங்கள இராச்சியமொன்று உருவாகுமானால், நிச்சய…
-
- 2 replies
- 907 views
-
-
இலங்கையில் ராணுவ ஆட்சியைக் கோரும் போர்க்குற்றவாளி ஜகத் டயஸ் 2009 இனவழிப்புப் போரில் வன்னிப்பகுதியில் நடந்த பாரியளவிலான போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிங்கள மிருகங்களுக்குக் கட்டளைத் தளபதியாகவிருந்த ஜெனரல் ஜகத் டயஸ், போரின் பின்னர் தென்னமெரிக்க நாடுகளுக்கு சிங்களத்தின் தூதுவனாகப் போயிருந்தது நினைவிருக்கலாம். அங்கே அவனுக்கெதிராகத் தொடரப்பட்ட போர்க்குற்ற வழக்கினையடுத்து பின்கதவால் வெளியேறி நாட்டிற்குள் ஓடி ஒளிந்துகொண்டிருக்கும் அவனும், இனக்கொலையைத் திட்டமிட்டு நடத்திமுடிக்க ஆணை வழங்கிய அந்நாள் பாதுகாப்புச் செயலாளனுமான கோத்தாவும் இன்னும் ராணுவ அதிகாரிகளும் சகல விசாரணைகளிலிருந்தும் நாட்டைக் காத்த ராணுவத்திற்கு விலக்களிக்கப்படவேண்டும் என்று சிங்கள சனாதிபதி மைத்திரியிடம் வேண்ட…
-
- 3 replies
- 695 views
-