ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143183 topics in this forum
-
(இராஜதுரை ஹஷான்) பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவின் நலன் விசாரிக்க சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்கள் என பொதுஜன பெரமுன காரியாலயம் அறிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, தேனுக விதானகே, பியங்கர ஜயரத்ன, இந்திக அனுருத்த, மற்றும் கெஹலிய ரம்புக்வெல ஆகியோரே நேற்று இவ்வாறு சென்றுள்ளார்கள். தற்போது உடல்நிலை சீரடைந்து வருவதாகவும், விரைவில் நாடு திரும்பி நாட்டு மக்களின் அரசியல் எதிர்பார்ப…
-
- 1 reply
- 414 views
-
-
பாதுகாப்புக் கடவை அமைக்குமாறு கோரி, கிளிநொச்சி 155 ஆம் கட்டை சந்தியில் அமைந்துள்ள தொடருந்துக் கடவைக்கு முன்பாக பிரதேச மக்களால் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து சுமார் 1 மணிநேரம் தாமதித்தே பயணத்தைத் தொடர வேண்டி ஏற்பட்டது. போராட்டத்தை மேற்கொண்ட மக்களை கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றம் தொடருந்துத் திணைக்கள அதிகாரிகள் சந்தித்தனர். ஒலியுடன் கூடிய பாதுகாப்பு வெளிச்சத்தை அமைத்து பாதுகாப்பான போக்குவரத்தை மேற்கொண்டு தருவதாக கூறியதும் போரா…
-
- 3 replies
- 750 views
- 1 follower
-
-
மன்னர் காலத்தை போன்று நாட்டில் நல்லாட்சியை கொண்டு செல்வதற்கு மகாசங்கத்தினரின் அறிவுரை, ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய செயற்படுவது மிக முக்கியம் என்பதை உணர்ந்து அன்றும் இன்றும் தான் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (03) பிற்பகல் உடரட்ட அமரபுர சங்க சபைக்கு சொந்தமான மகாவலி நதிக்கரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதனை மண்டபத்தை மகாசங்கத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். உடரட்ட அமரபுர சாசன ஜோதிகா சங்க சபைக்கு சொந்தமான இந்த இடத்தில் மூன்று மாடி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக 2006ஆம் ஆண்டு ஜனாதிபதி மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. …
-
- 0 replies
- 289 views
-
-
21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தேசிய உளவுத் துறை ஒரு போதும் உறுதி செய்யப்பட்ட தெளிவான தகவல்களை முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கோ அல்லது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கோ அளித்திருக்கவில்லை என அவர்களது சட்டத்தரணியான அனுஜ பிரேமரத்ன இன்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு அறிவித்தார். 21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குன்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்புச் சாட்டப்பட்டு, கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவும் நேற்றுயை தினம் சி.ஐ.டி…
-
- 0 replies
- 504 views
-
-
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் இருவரும் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார். குறித்த இருவரும் விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று காலை 10 மணிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, உடல்நலக் குறைவு காரணமாக தேசிய மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். படத்தின் காப்புரிமை மருத்துவமனையில் அன…
-
- 3 replies
- 685 views
- 1 follower
-
-
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியும் என்றால், ஏன் இந்த அப்பாவிகளுக்கு வழங்க முடியாது ; சட்டத்தரணி சுகாஸ் நீண்டகாலமாக எந்தவித விசாரணைகளும் இன்றி சிறைகளிலே வாடிக்கொண்டிருக்கின்ற அரசியல் கைதிகளை இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக பொது மன்னிப்பின் அடிப்படையில் ஜனாதிபதியால் விடுவிக்க முடியும். என சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நேற்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் அங்குத் தெரிவிக்கையில், அரசியல் கைதி சகாதேவனின் மரணம் இயற்கை மரணமாக நாங்கள் கருதவில்லை. அவருக்கு உரிய முறையில…
-
- 2 replies
- 596 views
- 1 follower
-
-
கொக்குவில்-மானிப்பாய் – சுன்னாகம் பகுதிகளில் கைதான, வாள்வெட்டு சந்தேக நபர்கள் பிணையில்… July 3, 2019 July 3, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn கொக்குவில், மானிப்பாய் மற்றும் சுன்னாகம…
-
- 1 reply
- 603 views
- 1 follower
-
-
சஹ்ரான் குழுவினரால் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு பொலிஸாரால் மீட்கப்பட்ட டொல்பின் ரக வேன் இன்று (03) கல்முனை நீதிமன்ற நீதிவானால் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டது. சாய்ந்தமருது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த சஹ்ரான் குழுவினர் வாடகைக்குப் பெற்றுப் பயன்படுத்திய வேன் மூலம் மீரிகம பகுதிக்குச் சென்று ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் சிங்களப் பெண்கள் அணியும் 10 வெள்ளை நிற ஆடை உள்ளிட்ட பொருட்களைக் கொள்வனவு செய்திருந்தனர். இந்நிலையில் வாடகை மூலம் பெறப்பட்ட குறித்த வேன் அண்மையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் குறித்த வேன் தொடர்பான வழக்கு இன்…
-
- 0 replies
- 283 views
-
-
1 Min Read July 3, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn ஆனமடுவ- சிலாபம் வீதியின் பள்ளம சேருகெலே பிரதேசத்தில் இன்று (3.07.19) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்து, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன…
-
- 0 replies
- 308 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக பிரபலமடைந்துள்ளவர் அமைச்சர் சஜித் பிரேமதாச எனத் தெரிவித்துள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர, இவரை வெற்றியடையச் செய்வதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜயசூரியவும் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமென தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தனது அபிப்ராயத்துக்கமைய, அமைச்சர் சஜித் பிரேமதாசவே பிரபல்யமடைந்துள்ளார். அவருக்கு தான் ஜனாதிபதி வேட்பாளருக்குரிய தகுதிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார். மறு பக்கம் யார் வந்தாலும், எந்த ராஜபக்ஸ வந்தாலும் குடும்பத்துக்குள்ளே சங்கீத கதிரை போட்டியாக அது மாறும். எது எப்படியோ அமைச்சர் சஜித்தை வெற்றிப் பெறச் செய்…
-
- 0 replies
- 506 views
-
-
தமிழ் மொழிப் பரீட்சையில் சந்தர்ப்பம் கூறுக என்றொரு வினா முறைமை உண்டு. மகாபாரதம், இராமாயணம் போன்ற இதி காசங்களில் இருந்து கூற்று அல்லது பாடலைத் தந்து இஃது யாரால்? யாருக்கு? எச்சந்தர்ப்பத்தில்? கூறப்பட்டது என்பதாக அந்தக் கேள்வி அமையும். குறித்த பாடப்பரப்பில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக அப்படி யயாரு வினா கேட்கப்படுவது வழக்கம். நம் அரசியலிலும் இவ்வாறான வினாக்களைக் கேட்டால், அதற்குக் கிடைக்கின்ற விடை; மக்கள் மறந்துவிட்டார்கள் இனி நாம் புரட்டிக் கதைக்கலாம் என்று நினைக்கும் அரசியல்வாதிகளுக்குத்தக்க பாடம் புகட்டும். இருந்தும் யார் அந்தப் பணியைச் செய்யப் போகிறார்கள். வேண்டுமானால் பொறுப்புள்ள இணையங்கள் சந்தர்ப்பம் கூறுக…
-
- 0 replies
- 945 views
-
-
தமிழ் மக்களின் உரிமைக்காக ஆயுதமேந்தி போராடிய பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இறுதிவரை கொள்கையில் உறுதியாக நின்று மரணித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட விடுதலைப் புலிகளை போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபடுத்திக் கேவலப்படுத்த முயல்வது படுமுட்டாள்தனம் எனவும் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் விற்பனைதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வருமானமாக இருந்தது எனவும், உலகத்திலுள்ள போதைப்பொருள் வர்த்தகர்களுடன் பிரபாகரனுக்கு தொடர்பு இருந்தது எனவும், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம்தான் பிரபாகரன் ஆயுதங்களை வாங்கிப் போர் நடத்தினார் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இந்த விடயம…
-
- 1 reply
- 767 views
-
-
அமெரிக்காவானது படைகளின் நிலைப்பாடு தொடர்பான உடன்படிக்கையின் கீழ் இலங்கையிடமிருந்து பெருமளவு இராணுவ சலுகைகளை நாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்நாட்டுக்கும் இலங்கைக்குமிடையில் பேச்சுவார்த்தைகளின் கீழுள்ள படைகளின் நிலைப்பாடு தொடர்பான அந்த உடன்படிக்கை வரைபின் பிரதியொன்றின் மூலமே மேற்படி தகவல் அறியப்பட்டுள்ளதாக இலங்கையின் முன்னணி ஆங்கிலப் பத்திரிகையொன்று தெரிவிக்கிறது. அந்த உடன்படிக்கையில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் பல இலங்கையின் இறையாண்மையைப் பாதிப்பனவாக உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க விமானங்களும் கப்பல்களும் தரித்திருத்தல் மற்றும் பரிசோ…
-
- 10 replies
- 909 views
-
-
பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு… July 3, 2019 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன், தன்னைப் பதவியிலிருந்து நீக்கம் செய்தமையை எதிர்த்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை வரும் 26ஆம் திகதிவரை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான மூத்த அரச சட்டவாதி, மனுவின் அறிவித்தல் நீதிமன்றின் ஊடாகக் கிடைக்கப்பெறவில்லை என மன்றுரைத்ததையடுத்தே விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. தனது துணைவேந்தர் பதவியை நீக்கி ஜனாதிபதி வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தவும் தற்போது தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் கந்தசாமி…
-
- 0 replies
- 454 views
-
-
சீனாவின் நிதியில் அந்நாட்டை சுற்றிப்பார்க்க செல்லும் ஹக்கீம் தலைமையிலான தூதுக்குழு! முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இலங்கை நாடாளுமன்ற தூதுக்குழு ஜூலை 14 ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. இந்த தூதுக்குழுவில் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, காமினி லொக்குகே, கெஹலிய ரம்புக்வெல, மஹிந்தானந்த அழுத்தகமே, லக்ஷமன் யப்பா அபேவர்தன மற்றும் தமிழரசு கட்சியின் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் அடங்குகின்றனர். சீனா மற்றும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்தும் முகமாக இவர்களின் …
-
- 0 replies
- 443 views
-
-
தமிழரின் அரசியல் தீர்வு: சம்பந்தனின் கருத்திற்கு அமைச்சர் மனோ கருத்து ஆயுதத்தை கைவிட்டு தமது அடிப்படை உரிமைக்காக குரல்கொடுக்கும் தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க இந்த அரசாங்கம் தவறிவிட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பில் இருந்த தமிழ் தலைவர்களும் இதனால் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டால் பிரச்சினைகளை தீர்ப்போம் அரசியல் தீர்வை வழங்குவோம் என்ற வாக்குறுதியை கொடுத்தவர்கள் அதனை தற்போது மறந்துவிட்டீர்கள் என்றும் அதை நாங்கள் அனுமதிக்க முடியாது என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருந்தார். இந்நி…
-
- 0 replies
- 390 views
-
-
யாழ். கீரிமலையில் கடற்படை முகாம் மற்றும் சொகுசு மாளிகை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து காணி உரிமையாளர்களிடம் வழங்குவேன் என உத்தரவாதம் வழங்கியிருக்கும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், சொகுசு மாளிகை உள்ள காணி உரிமைகோரப்படும் பட்சத்தில் இழப்பீடு அல்லது காணிகை வழங்கவும் உத்தரவாதம் வழங்கியுள்ளார். கீரிமலை பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான சுமார் 62 ஏக்கர் காணியை கடற்படையினர் தமது ஆளுகைக்குள் வைத்திருக்கின்றனர். இந்த காணிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சொகுசு மாளிகை ஒன்றையும் அமைத்திருந்தனர். குறித்த மாளிகை அமைந்துள்ள காணியையும், அதனை சூழவுள்ள காணியையும் உள்ளடக்கி, சுமார் 62 ஏக்கர் காணியை சுற்றுலா அதிகாரசபைக்காக சுவீகரிப்பதற்கு அளவீடு செய்ய முயற்சிக்கப்பட்டது. …
-
- 1 reply
- 580 views
-
-
போதைப் பொருள் விற்பனை தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் வருமான வழி என்றும், உலகிலுள்ள போதைப் பொருள் வர்த்தகர்களுடன் கொண்டிருந்த தொடர்பினாலும், அதன் வழி வந்த வருமானத்தினாலுமே பிரபாகரன் ஆயுதங்களை வாங்கி போர் நடத்தினார் என்றும் இலங்கை நாட்டினுடைய அரச தலைவர் பகிரங்கமாக கூறியிருப்பது ஒட்டுமொத்த தமிழர்களையும் இழிவுபடுத்துகின்ற, கண்டனத்திற்குரிய கூற்றாகும். சத்தியத்தின் வழியிலும், நேர்மையின் வழியிலும் நின்று தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக இதய சுத்தியோடும், மானசீகமாகவும் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை உலகமே வியந்து பார்க்குமளவுக்கு கொள்கை ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் உயர்ந்த அமைப்பாக கொண்டு நடாத்திய தலைவர் பிரபாகரனுக்கு போதைப்பொருள் விற்று ஆயுதம் வாங்க வே…
-
- 3 replies
- 670 views
-
-
July 1, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn போதைப்பொருள் வியாபாரம் நடத்தியே தமிழர் ஆயுதப் போராட்டம் நடத்தியதாக ஜனாதிபதி கூறியிருப்பது தமிழர் போராட்டத்தையே கொச்சைப்படுத்தும் செயற்பாடு என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் . …
-
- 4 replies
- 679 views
-
-
சோபா மற்றும் எக்ஸா உடன்படிக்கைகள் தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் விளக்கமளிக்க வேண்டும் ஒன்றிணைந்த எதிரணி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கைகளின் கீழ் அமெரிக்க படையினர் வீசா இன்றி இலங்கைக்குள் பிரவேசிக்கவும் அவர்களுக்கான பயணக்கட்டணங்களை அறவிடாது இருக்கவும் சரத்துகள் உள்ளன. மேலும் இலங்கையில் அமெரிக்க படையினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்களை உள்நாட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது . இவ்வாறான சரத்துகள் உண்மையில் அந்த உடன்படிக்கைளில் உள்ளனவா, அவை நியாயமானவையா என்பது தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூததரகம் விளக்கமளிக்க வேண்டும…
-
- 0 replies
- 962 views
-
-
நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று மாலை 3 மணி முதல் 4 மணிவரையான ஒரு மணி நேரம் பேருந்து நிலையம் முன்பாக இப் போராட்டம் நடைபெற்றது. அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் தமிழர்களைக் கொல்லாதே, சகாதேவனின் மரணத்திற்கு நீதி வேண்டும், தமிழ் அரசியல் கைதிகளின் மருத்துவத்தில் சிறைச்சாலை நிர்வாகமே அசமந்தம் காட்டாதே போன்ற கோசங்களை எழுப்பியவாறும் மேற்படி கோசங்களை பதாகைகளில் தாங்கியவாறும் போராட்டத்…
-
- 1 reply
- 437 views
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16ஆவது பேராளர் மாநாடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உட்படப் பலரும் உரையாற்றியிருந்தனர். அதிலும் மாவை சேனாதிராசா மற்றும் இரா. சம்பந்தர் ஆகியோரின் உரைகள் அவர்கள் இன்னமும் 1972களிலேயே இருக்கிறார்கள் என்பதை உணரமுடிந்தது. தமிழ் மக்களின் சமகால மனநிலை எப்படியாக இருக்கிறது என்பதைக்கூட அவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை என்று நினைக்கும்போது, அவர்கள் பாவங்களா? அல்லது தமிழினம் பாவப்பட்டதா? என்ற எந்த முடிவுக்கு வருவதென்பது பற்றித் தெரியவில்லை. ஆயுதம்தான் பலம் என்று இலங்கை அரசு கருதுமாக இருந்தால், அதுபற்றியும் பரிசீலி…
-
- 0 replies
- 392 views
-
-
இலங்கையின் உள்விவகாரங்களில் ஐரோப்பிய ஒன்றியம், உள்ளிட்ட சர்வதேச சமூகம் தலையிடுவது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான செயல் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மரண தண்டனையினை அமுல்படுத்தினால் ஜி. எஸ்.பி வரிச்சலுகை உள்ளிட்ட சர்வதேச சலுகைகள் இரத்து செய்யப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச சமூகம் குறிப்பிடுவது எமது நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு விடுக்கும் அச்சுறுத்தல்களாகவே காணப்படும். மரண தண்டனையினை நிறைவேற்றுவதாக தீர்மானித்தமை நாட்டு மக்களின் தனிப்பட்ட நலன்களை மையப்படுததியே தவிர எவ்வித அரசியல் நோக்கங்களுக்கும் அல்ல என்பதை சர்வதேச அமைப்புக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். தேசிய சுயாதீனத்தன்மைக்கு சர…
-
- 6 replies
- 1.1k views
-
-
இறுதி யுத்தக்காலப் பகுதியில், தமிழீழ விடுதலை புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ், 2019.04.04 அன்று அனுப்பிவைக்கப்பட்ட விண்ணபத்துக்கு, 2019 ஜூன் 25ஆம் திகதி குறித்து அனுப்பிவைக்கப்பட்டுள்ள பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அதிகாரியான பிரிகேடியர் ஏ.எம்.எஸ். பீ அத்தபத்து என்பவரினால் கையொப்பமிடப்பட்டு அந்தக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தமிழ்மிரரின் சார்பில், இலங்கை இராணுவத்துக்கு அனுப்பட்டிருந்த விண்ணப்பத்துக்கு, மூன்று மாதங்களுக்குப் பின்னர் சிங்கள மொழியில் கிடைக்கப்பெற்றுள்ள பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இறுதி யுத்தக்காலத்தில் தமிழீழ வி…
-
- 1 reply
- 661 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரைக் கைதுசெய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாற, சட்டமா அதிபர் தப்புல டீ. லிவேரா உத்தரவிட்டுள்ளார். பதில் பொலிஸ்மா அதிபருக்கே, சட்டமா அதிபர் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஹேமசிறி-பூஜித்தவை-கைதுசெய்ய-உத்தரவு/150-234817
-
- 1 reply
- 366 views
-