ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143171 topics in this forum
-
முஸ்லிம் அமைச்சர்கள் அரசுக்குக் கொடுத்த ஒருமாத காலக்கெடு நாளை மூன்றாம் திகதியுடன் நிறைவடையும் நிலையில் தமது அடுத்த கட்டநகர்வு குறித்து எதிர்வரும் 10ஆம் திகதி புதன்கிழமை கூடி ஆராயவிருப்பதாக சிரேஷ்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார். முஸ்லிம் சமூகம் சமீபகாலமாக எதிர்கொண்டுவரும் நெருக்கடிகள், சவால்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி கடந்த மாதம் மூன்றாம் திகதி அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் அரசுக்கு காலக்கெடு விதித்து தமது பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தனர். இதற்கிடையில், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்க முன்வர வேண்ட…
-
- 0 replies
- 410 views
-
-
கிழக்கில் மாற்று சமூகத்தால் திட்டமிட்டு நடைபெறும் அடக்குறைகள் பறி போகும் நிலையில் கிழக்கு ஏரூர் தில்லை கிழக்கு மாகாணத்தில் மாற்று சமூகத்தால் திட்டமிட்டு நடைபெறும் அடக்குறைகள் பறி போகும் நிலையில் கிழக்குமாகாணம் இருப்பதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தற்போதைய நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளர் தவராசா கலையரசன் அச்சம் தெரிவித்தார். இன்று( 29) காலை நாவிதன்வெளி பிரதேச விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பிரதேச மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கோடு படிப்பகம் ஒன்றினை திறந்து வைக்கும் நிகழ்வு தலைவர் வ. யதுர்ஷன் தலைமையில் இடம்பெற்து. மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய தவிசாளர் அவர்கள்.. கிழக்கு மாகாணத்தை எடுத்துப்பார்க்க…
-
- 0 replies
- 520 views
-
-
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் ஆரப்பாட்டம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும், சிறைச்சாலையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான சகாதேவனின் மரணத்திற்கு விசாரணை வேண்டும் எனக் கோரியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை உடனடியாக நீக்கக் கோரியும் யாழ். பிரதான பஸ் நிலையம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இப் போராட்டத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ், மாநகர சபை உறுப்பினர்கள், பொதும்மக்கள் உடப்படப் பலரும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசியல் …
-
- 0 replies
- 402 views
-
-
இந்தியா மீது எங்களுக்கு முழு நம்பிக்கை- தமிழரசுக் கட்சியின் மத்திய கூட்டத்தில் தீர்மானம் தமிழரசுக் கட்சியின் மாநாடு யாழ். மார்ட்டின் வீதியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று இரவு பரபரப்பான நிலையில் இடமபெற்றது. சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிறிதரன் எம்.பி. தவிர்ந்த மற்றயவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.இந்தக் கூட்டத்தில் சர்வதேசம் மற்றும் இந்தியாவின் ஆதரவுடன் இனப்பிரச்சினைக்குத் தீர்வு” என்ற வாசகம் அடங்கிய பிரேரணை ஒன்றின் நகல் வடிவத்தை மாவை சேனாதிராசா சமர்ப்பித்தார். அப்போது,“ இந்தியாவின் ஆதரவுடன் தீர்வு முயற்சி என்கிறீர்கள். இங்கு எமது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தியாவைக் காட்டமாகத் தாக்கி பகிரங்கப் பேட்டி அளிக்கின்றார். அப்படியா னால் கட…
-
- 15 replies
- 1.3k views
- 1 follower
-
-
அடுத்த தேர்தலில் கூட்டமைப்புக்கு இன்று உள்ள அளவில் எத்தனை வீதமான பாராளுமன்ற அங்கத்துவம் மீண்டும் கிடைக்கும்?
-
- 2 replies
- 3.8k views
-
-
யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி ஓர் வெளிநாட்டவர் நடந்து செல்கிறார், வீடியோ பதிவு செய்து கொண்டு. வீதியின் இரு புறமும், முளைத்திருக்கும், மருத்துவ ஆய்வு கூடங்களும். பார்மசிகளும் குடாநாட்டு, மக்களின் நலத்தினை கட்டியம் கூறுகின்றனவே.
-
- 44 replies
- 5.7k views
-
-
அதன் பிரகாரம் 11இலட்சம் அரச சேவையாளர்களுக்கு 2,500ரூபா இடைக்கால கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளது. காப்புறுதி, விசேட கொடுப்பனவு, ஓய்வூதிய கொடுப்பனவுக்கான பிணக்குகளை தீர்த்தல், விசேட தேவையுடையவர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பிலான யோசனையும் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தக் கொடுப்பனவுகளுக்காக 40ஆயிரம் மில்லியனை வரவு- செலவுத் திட்டத்தில் அரசாங்கம் ஒதுகீடு செய்துள்ளது. 11இலட்சம் அரச சேவையாளர்களுக்கும் 2,500ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற்காக 20ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது. இக்கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டாலும் வாழ்க்கைச் செலவுக்காக வழங்கப்பட்டுவரும் 7,800ரூபா அவ்வாறே தொடர்ந்தும் வழங்கப்படும். சேவையாளர்களுக்கும் 2,500ரூபா இடைக்கால …
-
- 0 replies
- 402 views
-
-
12 ஏக்கர் காட்டை அழித்து, பாண்டியன்குளத்தில் விவசாயம் செய்கிறாரா சாந்தி சிறிஸ்கந்தராசா? June 28, 2019 காடழிப்பு, சுற்றுசூழல் தொடர்பில் தேர்தல் மேடைகளில் மாத்திரம் பேசி செல்லும் மக்கள் பிரதிநிதிகளால் அதிகளவு காடழிப்பு இடம்பெறுகின்றது என்பதற்கு இந்த பகுதி சான்றாக அமைவதாக சுட்டிக்காட்டப்பட்டள்ளது. சொந்த மண்ணிலேயே இவ்வாறு காட்டினை அழித்து சொத்தாக்கிக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசாவின் செயற்பாடு தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் பாண்டியன்குளம் பிரதேசத்தில் இவ்வாறு 12 ஏக்கர் வரையான காடு அழிக்கப்பட்டு நெற்செய்கை மெற்கொள…
-
- 15 replies
- 1.8k views
- 1 follower
-
-
ஏரூர் தில்லை வீட்டில் அணியும் சாரன் நைட்டியுடன் அரச வேலைக்கு வந்த சிங்கள அரச உத்தியோகத்தர் முஸ்லிம் உத்தியோகத்தர் ஹபாயாவை கழட்டி தடைசெய்யாவிடின் தொடரும் சமிக்கை !!? இன்று உடுநுவர பிரதேச சபையில் கடமைபுரியும் சிங்கள அரச உத்தியோகத்தர்கள் இன்று காலைக்கடமைக்கு வீட்டில் இருந்த மாதிரி அணியும் இரவு ஆடைகள் சகிதம் சாரன் ,நைட்டி,பாவடை ,சட்டையுடன் அரச அலுவலகத்தில் பிரவேசித்த போது இதன் திணைக்கள தலைவரான பிரதேச சபை செயலாளர் ஒரு சிங்கள பெண்ணை கூப்பிட்டு விசாரணை செய்த போது அவர் கூறிய கருத்தையும் காரணத்தையும் கேட்டு செயலாளர் அதிர்ச்சியடைந்தார் . அதாவது எல்லா அரச ஊழியருக்கும் பொதுவான ஆடை உள்ள போது முஸ்லிம்களுக்கு மாத்திரம் சிவப்பு ,பச்சை என கலர்புல்லான ஹபாயா உடன் அரச …
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கைக்கு எதிராக செயற்படும் புலம்பெயர் தமிழர்களுடன் அதுரலியே ரத்ன தேரர் கூட்டணி அமைத்து விட்டார். அதன் காரணமாகவே வைத்தியர் சாபி மீதான குற்றப்புலனாய்வு உள்ளிட்ட உள்நாட்டு விசாரணைகள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கவேண்டும் என்றும் அதுரலிய தேரர் கூறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹூமான் குற்றஞ்சாட்டினார். அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, குருணாகலை போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் மொஹமட் சாபி மீதான குற்றசாட்டுக்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஒருக்கட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. …
-
- 1 reply
- 622 views
-
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் , சிறு போக நெற்செய்கைக்கான நீர் விநியோகமும் தொடரும் தவறுகளும்… July 1, 2019 கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான சிறு போக நெற்செய்கைக்கான நீர் விநியோகம் உரிய முறையில் வழங்கப்படாத நிலையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் நெற்செய்கை அழிவடைந்து காணப்படுவதுடன் இது தொடர்பான தகவல்களை சம்பத்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விவசாயிகள் திட்டமிட்டு பழிவாங்கப்படும் சம்பவங்கள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளத்திலிருந்து நீர் உரிய முறைகளில் வழங்கப்படுகின்ற போதும் முரசு மோட்டை மருதங்குளம் உடுப்பாற்றுக் கண்டல் சேற்றுக்கண்டி பொக்கன் குளம் போன்ற பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கான நீரைஉரிய முறையி…
-
- 1 reply
- 677 views
-
-
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக மீண்டும் மாவை தெரிவு Jun 29, 20190 இலங்கை தமிழரசு கட்சியின் பொதுக்குழு தெரிவின் போதே, தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பொதுக்குழு தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.அதையடுத்து, பொதுச் செயலாளர் தெரிவு தொடர்பான விடயத்தை தலைவர் சபையில் முன்வைத்தார். அப்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் செயலாளர் குலநாயகம், இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் ஆகியோரது பெயர்கள் பொதுச் செயலாளர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டன. எனினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனின் ப…
-
- 4 replies
- 1.1k views
-
-
இலங்கை இராணுவ முகாம்களில் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்ட தமிழ் பெண்கள்..! கருத்தடை மாத்திரைகள் கொடுக்கப்பட்டு இராணுவ முகாமில் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த பெண்கள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளா் கோட்டாபாய ராஜபக்ஸவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளனா். யஸ்மின் சூக்காவை தலைமையாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் 3 வருடமாக பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் இளம்பெண் ஒருவரும் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கருத்தடை மருந்துகள் ஏற்றப்பட்டு, இராணுவ முகாமில் பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் சர்வதேச உண்மை ம…
-
- 4 replies
- 1.5k views
-
-
ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனாவின் வழிகாட்டலில் ”போதையிலிருந்து விடுதலையான தேசம் ”எனும் தொனிப்பொருளிலான நிகழ்ச்சித் திட் டத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்று [ 01.07.2019 வடக்கில் பல்வேறு பிரதேச செயலங்களில் இடம்பெற்றது. அந்தவகையில் அரசாங்க அதிபர் தலைமையில் யாழ் பேருந்து நிலையத்திலிருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை இடம்பெற்ற விழிப்புணர்வு பவனியில் அரச அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு போதைக்கு எதிரான பல்வேறு கோஷங்களையும் எழுப்பினார்கள் . அத்துடன் பறை மேளங்கள் அதிர கூண்டில் அடைக்கப் பட்ட போதை அரக்கனுடனான ஊர்தியினை யாழ் பிரதேச செயலாளர் எஸ் .சுதர்சன் தலைமையிலான குழுவினர் ஆற்றுகைக்கான காண்பியமாக தயாரித்திருந்தார். கோஷங்களும் ஊர்தியும் இணைந்த பவனி மாவட்ட செயலகத்தை …
-
- 1 reply
- 748 views
-
-
சுதந்திர, அமைதியான நாட்டிற்காக சமூகங்கள் மத்தியில் மொழி அறிவை மேம்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரச கரும மொழிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரச கரும மொழிகள் கொள்கையில், இலங்கை நிர்வாக சேவையின் சிரேஸ்ட அதிகாரிகள் இன்னும் சரியான அவதானம் செலுத்தவில்லை என்பதால் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெளிவுப்படுத்தினார். hirunews
-
- 1 reply
- 619 views
-
-
தமிழரசுக் கட்சி செயலாளர் செயல்திறனான செயலாளர் அல்ல.அவரது பதவிக்காலத்தில் கிழக்கில் கட்சி வீழ்ச்சியை சந்தித்துள்ளதென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஷ்வரன் தமிழரசுக்கட்சி பொதுச்சபை மாநாட்டில் பகிரங்கமாகவே சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மட்டக்களப்பிற்கான செயலாளராக மட்டுமே இருக்கிறார். யோகேஸ்வரன் எம்.பி பகிரங்க சாடல் கிழக்கின் ஏனைய பகுதிகளை கவனிக்கிறாரில்லை. எம்மையும் சுதந்திரமாக இயங்கவிடாமல் தடை போடுகிறார்.உள்ளூராட்சித் தேர்தலில் அவரது தொகுதியிலேயே கோட்டை விட்டார். தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், துரைராசசிங்கத்தை மீண்டும் ஒரு தடவை செயலாளராக நியமிக்க அனைவரும் விட்டுக் கொடுங்கள் என கேட்டமைய…
-
- 0 replies
- 385 views
-
-
வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் இன்று (01) காலை முதல் நகரில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடைபாதை வியாபாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், நடைபாதை வியாபாரிகளுக்கு இறுதி எச்சரிக்கை வழங்கும் நடவடிக்கையிலும் இன்று ஈடுபட்டிருந்தனர். நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த மரக்கறிகளை அகற்றியுள்ளதுடன் இனிவரும் காலங்களில் நடைபாதையில் வியாபார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை முதல் ஹொறவப்பொத்தான வீதி, இலுப்பையடி, சந்தை சுற்றுவட்ட வீதியில் மக்களின் போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்படுத்தி நடைபாதையில் சுகாதாரத்திற்கு தீங்கான முறையில் மரக்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை …
-
- 0 replies
- 405 views
-
-
சோபா மற்றும் எக்சா உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டால், வெகுவிரைவிலேயே சிரியாவின் நிலைமைக்கு இலங்கை தள்ளப்படும் என எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்தார். மேலும், இலங்கையை அமெரிக்கா கையகப்படுத்திக் கொள்ளும் திட்டத்தின் ஓர் அங்கமாகவே ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அமெரிக்காவுடன் இலங்கை செய்துக்கொள்ளவுள்ள எக்ஸா மற்றும் சோபா உடன்படிக்கையினால், எதிர்க்காலத்தில் அமெரிக்காவின் காலணித்துவத்தின் கீழ் இலங்கை வருவதற்கான அபாயம் ஏற்படும் …
-
- 0 replies
- 455 views
-
-
மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கெதிராக 10 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நல்லிணக்க பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணி, பேராசிரியர் சீ. குணரத்ன, கலாநிதி கே சேனரத்ன மற்றும் வெலிகட சிறைச்சாலையிலுள்ள் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள குற்றவாளிகள் சிலர் சட்டத்தரணிகள் ஊடாக குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், நீதி அமைச்சர், நீதிமன்ற அமைச்சின் செயலாளர், சிறைச்சாலை ஆணையாளர், வெலிகட சிறைச்சாலை கண்காணிப்பாளர் உட்பட பல தரப்பினரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் போதைப்பொருள் வியாபாரத்து…
-
- 0 replies
- 370 views
-
-
நாட்டில் இனங்களுக்கிடையே நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுவதற்கு மொழியறிவு முக்கியமானதாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (01) முற்பகல் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற அரசகரும மொழிகள் தின விழாவில் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அரசகரும மொழி கொள்கையை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசகரும மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தும் வாரம் இன்று முதல் ஜூலை 05ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது. தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் இந்த…
-
- 0 replies
- 348 views
-
-
சோபா உடன்பாட்டினால் சிறிலங்காவின் இறைமைக்கு பாதிப்பு வராது – அமெரிக்கா முன்மொழியப்பட்டுள்ள ‘சோபா’ எனப்படும் படைகளின் நிலை உடன்பாட்டினால் சிறிலங்காவின் இறைமைக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். “சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள சோபா உடன்பாடு, இராணுவப் பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்களுடனேயே தொடர்புடையது. இதனால் சிறிலங்காவின் இறைமைக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. இந்த உடன்பாடு இன்னமும் கையெழுத்திடப்படவில்லை. இரண்டு நாடுகளும் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன. இரு நாடுகளும் உடன்பாட்டுக்கு வந்தால், அது…
-
- 1 reply
- 759 views
-
-
நாட்டை சீர்குலைக்கின்றார் ஞானசார தேரர்: அப்துல்லா மஹ்ரூப் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் நாட்டை சீர்குழைக்கும் விதமாக போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார். கந்தலாயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அப்துல்லா மஹ்ரூப் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளை இராஜினாமா செய்திருக்காவிட்டால் பாரிய இனக்கலவரம் நாட்டில் ஏற்பட்டிருக்கும். மேலும் நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமே சிந்தித்து செயலாற்ற வேண்டும். அந்…
-
- 0 replies
- 375 views
-
-
சர்வதேச ரீதியில் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியவர்களும், நாட்டை நாசமாக்கியவர்களும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினால் படுதோல்வியடைந்தே தீருவார்கள். அவர்களை நாட்டு மக்களும் விரும்பமாட்டார்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தேர்தலாகும். எனவே, இந்தத் தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சி தனித்து நின்றே எதிர்கொள்ளும். கடந்த இரு தடவைகள் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் பொது வேட்பாளர்களையே ஐக்கிய…
-
- 1 reply
- 356 views
-
-
முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளுக்கு தீர்வு வழங்காமல், கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது,கல்முனையில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்துவதுடன், அவர்களின் பொருளாதாரத்தையும் கேள்விக் குறியாக்குமென திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார். கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பாக, விளக்கமளிக்கும் கூட்டம் சம்மாந்துறை பத்ர் ஜும்ஆப் பள்ளிவாசலில் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவர் கே.எம்.முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்: - இந்நடவடிக்கையானது இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல், பொரு…
-
- 0 replies
- 315 views
-
-
நான்கு பேருக்கு மரணதண்டனை வழங்க கையொப்பமிட்டுள்ளேன் – ஜனாதிபதி போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு வெகு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே நான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்காக தான் கையொப்பம் இட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.dailyceylon.com/185235/
-
- 9 replies
- 1.5k views
-