ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143183 topics in this forum
-
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு எனக்கு அழைப்பு விடுத்தால் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளமாட்டேன். அது அலரி மாளிகையில் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் மேடையேற்றப்படும் நாடகம் என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. அவசரகால சட்டம் இந்த முறை மட்டுமே நீட்டிக்கப்படும். அடுத்த தடவை அது நீடிக்கப்படமாட்டா து என்று தெரிவித்த ஜனாதிபதி, அண்மைய தற்கொலை தாக்குதல்கள் குறித்தான விசாரணை திருப்தியாக உள்ளது. பிரதான சந்தேகநபர்கள் இறந்துவிட்டனர். ஏனையோர் கைது செய்யப்பட்டுவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்ட தகவல்களை தெரிவித்துள்ளார். http://thinakkural.lk/article/30595 Pr…
-
- 0 replies
- 277 views
-
-
எங்களுக்காக எந்த அரசியல் பிரதிநிதிகளும் உண்ணாவிரதம் இருக்கவுமில்லை போராட்டத்தில் தொடர்ந்து அக்கறையுடன் கலந்துகொள்ளவுமில்லை என முல்லைத்தீவில் போராட்டம் நடத்திவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இன்றுடன் (27) 842 ஆவது நாளாக தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.இந்நிலையில் நேற்றையதினம் (26.06.19 ) முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்கள் . இதன்போது முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி ம.ஈஸ்வரி கருத்து தெரிவிக்கையில் , இன்னும் சில நாட்களில் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு நடைபெற்றவிர…
-
- 0 replies
- 484 views
-
-
வடக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்ற ஜனவரி ஏழாம் திகதி முதல் நான் குடியை விட்டுவிட்டேன். என வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்ற தேசிய போதை தடுப்பு வாரத்தின் வட மாகாண நிகழ்வில் கலந்துகொண்ட விழிப்புணர்வு வாகன பேரணியின் இறுதியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் முன்னர் நான் விருந்துபசாரங்களில் கலந்துகொண்டால் மட்டும் மது அருந்துவதுண்டு. அது எனது நண்பர்களுக்கு தெரியும் ஆனால் எப்பொழுது ஆளுநராக பொறுப்பேற்றேனோ அன்றிலிருந்து எந்தவொரு குடியையும் தனிப்பட்ட ரீதியாகவோ, பிரத்தியேகமாகவோ கையில் எடுத்தது கிடையாது. இதுவொர…
-
- 2 replies
- 814 views
-
-
சீனாவுடனான வர்த்தகப் போர் நிலவிவருகின்றமையால், இலங்கையில் இராணுவ முகாமொன்றை அமைக்கவே அமெரிக்கா தற்போது தீவிரம் காட்டி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்தார். மேலும், இதனை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “இலங்கை என்பது விசேடமான ஒரு நாடாகும். பல விடயங்களில் இலங்கை தனித்துவமாக திகழ்ந்து வருகிறது. எமது நாட்டைப் பொறுத்தவரை கடல்வளம் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்காகவே, வரலாற்றுக் காலம் முதல் திருகோணமலை துறைமுகம் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. …
-
- 3 replies
- 779 views
-
-
கல்முனையில் தனியாக தமிழ்ப் பிரதேச செயலகம் உருவாகுவதால் முஸ்லிம் சமூகத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனாலும் அவர்கள் அதற்குத் தடையை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களது செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கோ அல்லது முஸ்லிம் மக்களுக்கோ நல்லதல்ல. உண்மையில் தமிழ் முஸ்லிம் மக்களிடைய பரஸ்பர புரிந்துணர்வு வேண்டும். அந்தப் புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை நாங்கள் மாத்திரம் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்க முடியாது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன். யாழ்.சுன்னாகம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரி…
-
- 3 replies
- 685 views
-
-
முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தி அஸ்கிரிய மக நாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் அண்மையில் வெளியிட்டதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் இரு முறைப்பாடுகள் பொலிஸ் தலைமையகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அஸ்கிரிய மக நாயக்க தேரரின் கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியே இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந் நிலையில் அவ்விரு முறைப்பாடுகளும் பொலிஸ் தலைமையகத்தால் பொலிஸ் சட்டப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/59160
-
- 0 replies
- 439 views
-
-
தமிழ்ப் பத்திரிகைத்துறையின் மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் மறைந்தார். பத்திரிகைத்துறையில் கடமையாற்றி பின்னாளில் இலத்திரனியல் ஊடகத்தில் பிரபலமாகி பின்னர் மீண்டும் அச்சுத் துறைக்கு வந்து கோலோச்சியவர். சிரேஷ்ட ஊடகவியலாளரான சிவம் பாக்கியம் தில்லைநாதன் தனது 75 ஆவது வயதில் இன்று மாலை காலமானார். இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான தில்லைநாதன் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். 1944 ஆம் ஆண்டு பிறந்த தில்லைநாதன் வீரகேசரி பத்திரிகையின் ஊடாக தனது ஊடக பயணத்தை ஆரம்பித்தவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்திப் பிரிவில் பல வருட காலங்களாக பணியாற்றினார். பல்வேறு ஊடகங்களிலும் பணியாற்றிய காலம் சென்ற தில்லைநாதன் இலங்கை பத்திரிகை பேரவையின் தன…
-
- 0 replies
- 409 views
-
-
மொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ (எம்.மனோசித்ரா) நாட்டில் தேசிய மொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தப்பட்டால் தேசிய பிரச்சினை பாரியதொரு பிரச்சினையாக உருவெடுக்காது. இதனை நோக்காகக் கொண்டு எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் ஐந்து நாட்களுக்கு அரச கரும மொழிகள் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்தார். அரச கரும மொழிகள் அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசியலமைப்பின் 4 ஆம் அத்தியாயத்தில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகள் தேசிய மொழிகளாகவும், ஆ…
-
- 3 replies
- 453 views
-
-
விசேட அதிரடி படையினரின் சுற்றிவளைப்பில் வெளிநாட்டு பெண்ணொருவரின் இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் புறநகர் பகுதியான கடுவெலயில் பிலிப்பைன்ஸ் பெண்ணொருவர் இரகசியமாக நடத்திவந்த தொலைத்தொடர்பு நிலையம் இன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இன்று காலை 11.30 மணியளவில் முல்லேரியா பொலிஸ் பிரிவின் கல்ஹேன வீதி பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். அங்கு அனுமதியற்ற தொலைத் தொடர்பு நிலையம் ஒன்றை நடத்தி செல்வது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் மற்றும் அவரது இலங்கை கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவெல பிரதேசத்தை சேர்ந்தவரும் 36 வயதான இந்திரா குமார என்பவரும் அவரது மனைவியான 36 வயதான அம்ரு…
-
- 0 replies
- 555 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டதாகவும் இதையிட்டு தான் வெட்கமடைவதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால், இந்த அரசாங்கத்தை தொடர்ந்து நல்லெண்ண நோக்கில் பாதுகாத்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்களை இந்த அரசாங்கம் ஏமாற்றி அந்தரத்தில் போட்டுள்ளதாகவும் விசனம் வெளியிட்டுள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் கலந்துகொண்டபோது, இவ்விவகாரம் தொடர்பில் பிரதமருடனும், துறைசார் அமைச்சருடனும், கடுமையாக வாக்குவாதப்பட்ட அம…
-
- 3 replies
- 537 views
-
-
ஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை ஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சதக்கத்துல்லாஹ் ஹில்மி என்பவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (25) 10 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி ஜெயச்சந்திரா ஜெயந்தா என்பவருக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 2018ஆம் ஆண்டு ஆறாம் மாதம் 11ஆம் திகதி குற்றப் பத்திரமொன்று மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சதக்கத்துல்லாஹ் ஹில்மிக்கு எதிராக வழங்கப்பட்ட சாட்சியங்களின் பிரகாரம் கொ…
-
- 1 reply
- 492 views
-
-
பிரதமர் ரணில் விக்ரமசிங்க எங்களை நம்புவதை விட முஸ்லீம் அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பிர்களையுமே நம்புகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியா பாலமோட்டையில் அவரது விசேட நிதியில் அமைக்கப்பட்ட சனசமூக நிலைய கட்டிடத்தினை திறந்துவைத்ததன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கல்முனை பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தும் செயற்பாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக செயற்பட்டிருந்தது. ஆனால் இந்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எல்லோரையும் ஏமாற்றுகின்ற செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார். …
-
- 1 reply
- 685 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு மாமா வேலை செய்யும் தமது வழக்கத்தை கைவிட வேண்டும். கல்முனை விடயத்தில் பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்து காலஅவகாசத்தை எடுத்துக் கொடுக்கப் பார்க்கிறார்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன். கனடா “வாணிபம்” வியாபார தகவல் கையேட்டு நிறுவனத்தினரின் நிதி அனுசரணையில் மக்கள் நலன் காப்பகத்தின் அன்பகம் என்ற மூதாளர் மாதாந்த உதவித்திட்டம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. 35 பேருக்கு இன்று உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, இப்படி காட்டமாக தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது மக்களை உள்நாட்டு யுத்தம் என…
-
- 14 replies
- 2.3k views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று பல கோரிக்கைகளை முன்வைத்து ஆயுதமேந்திப் போராடியதை போன்று இன்று நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் கருணா ஆகியோர் உண்ணாவிரத போராட்டம் என்ற ரீதியில் போராடி பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றார்கள். இதற்கு ஒரு தலைப்பட்சமாக ஆதரவு வழங்கும் பௌத்த பிக்குகள் எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் தூரநோக்குடன் ஆராய்ந்து பொறுப்புடன் செயற்படுதல் அவசியமாகும் என முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் மொஹமட் மில்ஹான் தெரிவித்தார். ஏப்ரல் குண்டுத்தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உள்ளடக்கிய 10 கோரிக்கைகளை முன்வைத்து முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர…
-
- 4 replies
- 870 views
-
-
அமெரிக்கா முன்மொழிந்துள்ள ‘சோபா’ ஒப்பந்தத்தை முழுமையாக எதிர்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் ஊடகப்பிரதானிகள் உடனான சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதனை தவிர அமெரிக்க படைகள் நாட்டுக்குள் வரும் வகையிலான எந்தவொரு ஒப்பந்தத்தினையும் தான் ஆதரிக்க போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, அமெரிக்காவுடன் ‘சோபா’ உடன்பாட்டைச் செய்துகொள்வதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. மேலும் ‘சோபா’ உடன்பாடு குறித்து முதன் முதலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடனேயே அமெரிக்கா பேச்சு நடத்தியதென அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார். அத்தோடு அன்று அமெரிக்காவுடன் பேச்சுவார…
-
- 1 reply
- 424 views
-
-
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், தனக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கவில்லை என இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று முன்னிலையாகி சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரிஷாத் தன்னுடன் மிகவும் சிறந்த முறையில் உரையாடியதாகவும், அது ஒரு போதும் தனக்கு அழுத்தம் கொடுப்பதாக அமையவில்லை எனவும் பொதுவாக பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தன்னுடன் தொலைபேசியில் உரையாடுவது போன்ற ஒரு உரையாடலே இடம்பெற்றதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார் ht…
-
- 2 replies
- 360 views
-
-
Image caption இரண்டாவது குழந்தைக்காக 12 ஆண்டுகளாக பல மருத்துவர்களை அணுகியதாக கூறுகிறார் இந்தப் பெண் இலங்கையின் குருநாகல் பகுதியில் பெண்களுக்கு பிரசவத்தின் பின்னர் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனைக் குறிப்பிட்டார். இலங்கையில் வைத்தியர் ஒருவரினால் 7,000 சிசேரியன் அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றில் …
-
- 0 replies
- 419 views
-
-
June 26, 2019 இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பெற்றோரை இழந்து 176 குழந்தைகள் அனாதைகளாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுவெடிப்புகளில் 258 பேர் உயிரிழந்திருந்ததுடன் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கிய பயங்கரவாதிகள் சிலர் காவற்துறையினரின் சுற்றிவளைப்பில் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் அதிககமானோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்தக் குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இந்த குழந்தைகள் இ…
-
- 0 replies
- 274 views
-
-
June 26, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர், சாய்ந்தமருதில் தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்த தகவல்களை , பிரதான தற்கொலைக் குண்டுதாரியான சஹ்ரான் ஹாசிமின் மனைவி இன்று வெளிப்படுத்தியுள்ளார். சஹ்ரானின் மனைவி இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இவ்வாறு தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். சஹ்ரானின் மனைவியுடன் அவரது மகளும் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/125294/
-
- 0 replies
- 308 views
-
-
அரசமைப்பின் 19ஆவது திருத்தமென்பது நாட்டின் சாபக்கேடு. 2020இல் சுபீட்சமான நாடொன்றைக் கட்டுயெழுப்ப வேண்டுமானால், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் 19ஐ இல்லாதொழிக்க வேண்டும்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதித்-தேர்தலுக்கு-முன்னர்-19ஐ-இல்லாதொழிக்க-வேண்டும்/175-234600
-
- 2 replies
- 435 views
-
-
இன்னும் 4 மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதென்றும் இதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கு அமைய, நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துயைராடலின் போதே, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் எந்தவொரு கட்சியும் இறுதித் தீர்மானத்துக்கு வரவில்லை. கட்சிகளுக்குள் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. கட்சிகளுக்குள் காணப்படும் உட்பூசல்களும் பிரச்சினைகளும் இப்போது போன்று முன்னெப்போதும் காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/கட்சியின்-தீர்மானத்துக்கு-அமைய-செயற்படுவேன்/175-23460…
-
- 1 reply
- 317 views
-
-
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துவது தொடர்பான பிரச்சினைகளை ஒரு மாத காலத்துக்குள் தீர்த்து வைக்க சிறிலங்கா அமைச்சரவை தீர்மானித்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது. 1989ஆம் ஆண்டில் இருந்து நீடித்து வருகின்ற ஒரு நீண்ட காலப் பிரச்சினையாக இது இருந்து வருகிறது என, அமைச்சரவைக் கூட்டத்தில், உள்நாட்டு மற்றும் உள்துறை விவகாரங்களுக்கான அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். இதையடுத்து, உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துவது தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக…
-
- 0 replies
- 333 views
-
-
Comments - 0 Views - 16 உள்நாட்டலுவல்கள் அமைச்சு, கடந்த மே மாதம் 29ஆம் திகதி வெளியிட்ட அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்று நிருபத்தை, மீண்டும் திருத்தி வெளியிடுவதில் காலம் தாழ்த்தப்படுவதால், முஸ்லிம் பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனரெனத் தெரிவித்து, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ளார். இந்தச் சிக்கலைத் தீர்த்து வைக்க, முஸ்லிம்களின் கலாசார உடையில் அபாயா அணிவதை அனுமதித்து, புதிய சுற்று நிருபத்தை விரைவில் வெளியிடுமாறு, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார். …
-
- 2 replies
- 1.3k views
-
-
வடக்கு மாகாணத்துக்கான சிறுவர் வைத்தியசாலையை இணுவில் மக்லியயாட் வைத் தியசாலை வளாகத்தின் ஒரு பகுதியில் அமைப்ப தெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தமை ஏலவே தெரிந்ததே. சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கான காணி தெரிவு செய்யப்பட்டு, அதற்கான எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு மதில் சுவர்கள் அமைக்கப்பட்ட நிலையில், குறித்த காணியின் உரிமம் தொடர்பில் சிக்கல்கள் எழுந்துள்ளது. இதனால் சிறுவர் வைத்தியசாலையை நிர்மாணிக்கின்ற பூர்வாங்க நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. வட பகுதி மக்களுக்குக் கிடைக்கக்கூடிய சிறுவர் வைத்தியசாலையை கைநழுவவிடுவ தென்பது எமது இனத்துக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய பாதகமாகும். அதேநேரம் இணுவில் மக்லியயாட் வைத்தியசாலை வளாகத்தில் வடபகுதிக்கான சிறுவர்…
-
- 2 replies
- 995 views
-
-
தேசிய கொள்கை பொருளாதார அபிவிருத்தி மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சு ஊடக புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் சமூக நலன்புரி இணைப்பு காரியாலயம் மாவட்ட செயலகம் இணைந்து முன்னாள் போராளிகள் 12 பேருக்கு தலா 4 ஆடுகள் வீதம் 48 ஆடுகள் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வு அரியாலைப் பகுதியில் இடம் பெற்றிருந்தது. நிகழ்வில் வன்னி மாவட்ட புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அசேல ஒபயசேகர பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/முன்னாள்-போராளிகளுக்கு-வாழ்வாதார-உதவி-வழங்கப்பட்டது/71-234578
-
- 2 replies
- 676 views
-