ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143183 topics in this forum
-
“ முகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம் ” Published by T. Saranya on 2019-06-26 09:37:04 முகத்தை மாத்திரம் மூடாமல் மத ரீதியிலான ஆடைகளை அணிந்து அரச அலுவலகங்களுக்கு செல்ல முடியும் என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அரச அலுவலகங்களுக்கு அண்மையில் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் பெண்கள் சேலையும் ஆண்கள் முழுமையான உடையும் அணிந்து செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பியிருந்தனர். இதனையடுத்தே பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று புதிய அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். …
-
- 0 replies
- 621 views
-
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய கண்டிக்கு வரவும் – ஞானசாரர் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட அனைத்துத் தரப்பினரும் ஜுலை, 7ஆம் திகதி கண்டிக்கு வருகைத் தருமாறு பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “அரசியல் பிரிவினை என்பது தீவிரவாதத்தைவிட பயங்கரமான ஒன்றாகும். தேசியம் தொடர்பில் கருத்து வெளியிட்டால் எம்மையும் சந்தேகத்துடன்தான் பார்க்கிறார்கள். உண்மையில் தற்போது நாடு எங்கு சென்றுக்கொண்டிருக்கிறது என்று எமக்குத…
-
- 0 replies
- 328 views
-
-
கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த வலியுறுத்தி நடந்து வரும் போராட்டத்தில் அரச தரப்பு பிரதிநிதியாக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. அதேபோன்றதொரு சம்பவம் அங்கு சென்ற முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கும் (கருணா) இடம்பெற்றுள்ளது. எனினும், போராட்ட ஏற்பாட்டாளர்கள், விநாயகமூர்த்தி முரளிதரனின் பாதுகாவலர் அணி அந்த விடயத்தை, வெளியில் கசிய விடாமல் அமுக்கி விட்டது. கடந்த 19ம் திகதி கல்முனை போராட்டக்களத்திற்கு விநாயகமூர்த்தி முரளிதரன் சென்றிருந்தார். போராட்ட ஏற்பாட்டு தரப்பில் முரளிதரன் தரப்பும் இருந்ததால், முரளிதரன் அங்கு சென்றிருந்தார். …
-
- 13 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா மீதான பயண எச்சரிக்கை: நீக்கியது சீனா – தளர்த்தியது அமெரிக்கா சிறிலங்கா தொடர்பான பயண எச்சரிக்கையை சீனா நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. ஜூன் 22 ஆம் நாள் தொடக்கம் இந்த பயண எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக, சீன அரசின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஏப்ரல் 21ஆம் நாள், சிறிலங்காவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து, சிறிலங்காவுக்குப் பயணம் செய்யும் தமது நாட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பயண எச்சரிக்கையை சீனா வெளியிட்டிருந்தது. பின்னர் இந்தப் பயண எச்சரிக்கையில் திருத்தம் செய்யப்பட்ட நிலையில், ஜூன் 22 ஆம் நாளில் இருந்து அந்தப் பயண எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. பயண எச்சரிக்கையை முழுமையாக முதல் நாடாக சீனா இருக்கிறது எ…
-
- 1 reply
- 435 views
-
-
அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதிய உடன்பாடு – சிறிலங்கா அதிபர் முட்டுக்கட்டை அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடனான உடன்பாடு, நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர், அதன் ஒவ்வொரு பிரிவும் கவனமாக ஆராயப்பட வேண்டும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று நடந்த சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்காவின் சுதந்திரமான உதவி முகவர் நிறுவனமான மிலேனியம் சவால் நிறுவனம், பூகோள வறுமைக்கு எதிராகப் போராடுவதற்கு உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம், ஐந்து ஆண்டு காலப்பகுதியில், நகர போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, பொது போக்குவரத்து முறைகளை நவீனமயப்படுத்துவது, காணி முகாமைத்துவத்தை மே…
-
- 0 replies
- 779 views
-
-
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து, 10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சனை இன்றும் தொடர்ந்து கொண்டே வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் இன்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். சிலர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், பலர் மீது இன்றும் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரான கொழும்பைச் சேர்ந்த முத்தையா சகாதேவன் சுகயீனமுற்ற நிலையில், கடந்த 22ஆம் தேதி சிறைச்சாலையிலேயே உயிரிழந்திருந்தார். …
-
- 1 reply
- 545 views
-
-
கிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 3 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இவ்விபத்து இன்று மத்திய 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மதிய நேர கடுகதி புகையிரதத்தில் ஏ9 வீதியிலிருந்து பாரதிபுரம் நோக்கி பயணித்து இராணுவத்தின் மருத்துவப் பிரிவின் ஹன்ரர் ரக வாகனம் மோதியிதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. புகையிரத அருகில் வருவதனை அவதானிக்காத இராணுவ சாரதி புகையிரத பாதையினை கடக்க முற்பட்ட போதே புகையிரதத்துடன் மோதுண்டு விபத்து ஏற்பட்;டுள்ளது. குறித்த புகையிரத கடவையானது பாதுகாப்பற்ற புகையிர…
-
- 4 replies
- 1.1k views
-
-
சீனாவிடம் 1 பில்லியன் டொலர் கடன் பெறுகிறது சிறிலங்கா மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின், ஒரு பகுதியை நிறைவேற்றுவதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு 1 பில்லியன் டொலர் கடனை வழங்க சீனா முன்வந்துள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் கடவத்த தொடக்கம் மீரிகம வரையான, பகுதியை அமைக்கவே, சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியே (எக்சிம் வங்கி) இந்தக் கடனுதவியை வழங்கவுள்ளது. இந்த திட்டத்துக்கு 1.1 பில்லியன் டொலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில், 85 வீதத்தை, சீனாவிடம் கடனாகப் பெறவும், 15 வீதத்தை, உள்நாட்டு வங்கிகளிடம் அரசாங்கம் திரட்டவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதலாவது கட்டமாக, 37.09 கி.மீ தூரமுள்ள …
-
- 15 replies
- 1.8k views
-
-
“போதையிலிருந்து விடுப்பட்ட நாடு, நான் போதையை எதிர்க்கிறேன்“ ஆகிய தொனிப்பொருளில் வடக்கு மாகாணத்தின் போதை ஒழிப்பு வார நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றன. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் 23 திகதி தொடக்கம் முதலாம் திகதி வரை நாடாளவிய ரீதியில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதற்கமைவாக வடக்கு மாகாண நிகழ்வு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து வருகை தந்த வாகன ஊர்வலத்துடன் கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் …
-
- 1 reply
- 390 views
-
-
விக்கினேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களுக்கு கூட்டமைப்பு செவி கொடுக்காது - சுமந்திரன் (ஆர்.யசி) அரசாங்கத்தின் வாக்குறுதிகளை எமது மக்கள் முன்னிலையில் சென்று கூறுவது மாமா வேலை அல்ல. விக்கினேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களுக்கு கூட்டமைப்பு செவி கொடுக்காது. அதேபோல் விக்கினேஸ்வரன் தனது அரசியல் சுயலாபங்களுக்காக எந்தளவு கீழ் மட்டத்தில் வீழ்ந்துள்ளார் என்பது நன்றாக வெளிப்பட்டுவிட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச சபை விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு மாமா வேலை ச…
-
- 0 replies
- 475 views
-
-
ஜனாதிபதி நினைத்தாலும் மாற்ற முடியாது - ரியர் அட்மிரல் சரத் வீரசேகர (நா.தனுஜா) அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது நான் மாத்திரமே அதற்கு எதிர்ப்பை வெளியிட்டேன். எனினும் அப்போது என்னை அறிவில்லாதவன் என்றும், இனவாதி என்றும் தூற்றினார்கள். ஆனால் இப்போது ஜனாதிபதியே 19ஆவது திருத்தம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார். இருப்பினும் இனிமேல் அதனை நீக்குவதென்பது கடிமானதொரு காரியம். இது நாட்டிற்குப் பாதகமானது என்ற விடயத்தை ஜனாதிபதி 4 வருடங்களுக்கு முன்னரேயே சிந்தித்திருக்க வேண்டும் என்று ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருக்கிறார். அரசியலமை…
-
- 0 replies
- 1.1k views
-
-
கல்முனை விவகாரம் போன்று ஏனைய பிரச்சினைகளுக்கும் பிக்குகள் குரல்கொடுக்க வேண்டும் – ஸ்ரீநேசன் கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலய பிரச்சினைக்கு குரல்கொடுத்ததுபோல, தமிழர்களின் ஏனையப் பிரச்சினைகளையும் தீர்க்க பௌத்த மதகுருமார் முன்வர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “ கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலயக பிரச்சினைக்கு அனைவரும் குரல் கொடுத்தனர். சிறுபான்மை மக்களுக்கு உதவிபுரியும் நோக்கில் பெளத்த மதகுருமாரும் அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். சிறுபா…
-
- 0 replies
- 299 views
-
-
தெஹிவளையில் வர்த்தகர் கொலை! தெஹிவளையில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். காலி வீதி தெஹிவளையில் வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்து மிரட்டிய நபருக்கு கப்பம் கொடுக்க வர்த்தகர் மறுத்தமையினால் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இதனை அடுத்து அப்பகுதி மக்களால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://athavannews.com/தெஹிவளையில்-முஸ்லிம்-வர்/
-
- 1 reply
- 1.1k views
-
-
நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், அரசமைப்பின் 18, 19 ஆவது திருத்தங்களை முற்றாக நீக்குவது சிறந்ததென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 40ஆவது வருட நிறைவுக் கொண்டாட்டம், கொழும்பிலுள்ள பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (23) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/18-19ஆவது-திருத்தங்களை-நீக்குவது-நல்லது/175-234492
-
- 2 replies
- 564 views
-
-
எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக கட்சியின் தேசிய மாநாட்டின் போது நியமிக்க உள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாடு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற உள்ளதாகவும், தனது கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கும் இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்து ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது அறிவிப்பார் எனவும் அவரிற்கு தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=115325
-
- 1 reply
- 435 views
-
-
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமாயின் தமிழ், சிங்கள மக்கள் அரசியல் வேறுப்பாடுகளை துறந்து ஒன்றுப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், முஸ்லிம் மக்களும் இலங்கையர் என்ற நிலையில் இருந்து செயற்பட வேண்டும் என்பதே பிரதான எதிர்பார்ப்பு. ஆனால் நடைமுறையில் இவர்கள் அந்நிய நாட்டு கலாச்சாரங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் மத்ரஸா பாடசாலைகளில் முழுமையாக பிற மதங்களின் மீதான வெறுப்புணர்வும் அடிப்படைவாதமுமே போதிக்கப்படுகின்றன. தற்போது இவ்வாறான பாடசாலைகளில் கல்வி கற்கும் 35 ஆயிரம் மாணவர்கள் ஒரு காலத்தில் அடிப்படைவாதிகளாக தோற்றம் பெற வாய்ப்புண்டு இதற்கு…
-
- 0 replies
- 433 views
-
-
கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று (23.06.19) ஞாயிற்றுக்கிழமை கவனவீர்ப்பு போராட்டம் நடைபெற்றது அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் , யாழ் மத்திய பேருந்து நிலையத்திற் முன்பாக மதியம் 2 மணிக்கு இப்போராட்டம் நடைபெற்றது. #கல்முனை #தமிழ்ப்பிரதேசசெயலகம் http://globaltamilnews.net/2019/125087/
-
- 3 replies
- 1k views
-
-
திருகோணமலை மாவட்டத்தின், தோப்பூர் உப பிரதேச செயலகத்தையும் தரமுயர்த்த வேண்டுமென கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆர்.எம். அன்வர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக திங்கட்கிழமை 24.அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தோப்பூர் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி அப்பிரதேச மக்கள் பலமுறை அரசியல் ரீதியாக மட்டுமன்றி அஹிம்சை போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். முஸ்லிம்கள் வாழும் தோப்பூர் பிரதேசத்தின் செல்வநகர் பகுதி, சேருவில பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்ட பகுதியாகும். இதன் காரணமாக கடந்த காலங்களில் அப்பகுதிக்குள் இருக்கும் நீநாகேணி முஸ்லிம்களின் காணி பிரச்சினை தொடர்பில் இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையிலும், காணி உ…
-
- 1 reply
- 383 views
-
-
'நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 தமிழர்களை ஆறு மாதங்களாக காணவில்லை' கேரள மாநில கொச்சின் துறைமுகத்திலிருந்து நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 பேரை கடந்த ஆறு மாதங்களாக காணவில்லை. இவர்களில் 164 பேர் டெல்லியில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் என்கிறது ஏஎன்ஐ செய்தி முகமை. இந்தாண்டு ஜனவரி மாதம் இவர்கள் புறப்பட்டு இருக்கிறார்கள், நியூசிலாந்து சென்ற பின் அழைக்கிறோம் என்று சொன்னவர்களை கடந்த ஆறு மாதங்களாக தொடர்புக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள் இவர்களது உறவினர்கள் இவர்களின் நிலை குறித்து அறிய மத்திய அரசும், மாநில அரசும் உதவி செய்ய வேண்டும் என்கிறார்கள். இது குறித்து விசாரித்துவரும் கேரள போலீஸ், இவர்களை நியூசிலாந்துக்கு அனுப்ப உதவிய 10 பேரை கைது செய்துள்ளோம் …
-
- 0 replies
- 547 views
-
-
தமிழ்நாட்டின் ஏதிலிகள் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள், தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பலர், 1990ஆம் ஆண்டு, இராமேஸ்வரத்துக்கு சென்றனர். அவர்கள் அனைவரும் இராமேஸ்வரத்திலுள்ள ஏதிலிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். விருதுநகர் மாவட்டம் குல்லூர்சந்தை, ஆனைக்குட்டம், செவலூர், அனுப்பங்குளம், வெம்பக்கோட்டை, மல்லாங்கிணறு மற்றும் மேட்டமலை உள்ளிட்ட ஏதிலிகள் முகாம்களில், சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் 'தாங்கள் மீண்டும் இலங்கை செல்ல விரும்பவில்லை எனவும், இந்தியக் குடியுரிமை வழங்கி இந்தியர்களைப்போல அனைத்…
-
- 0 replies
- 351 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 41வது அமர்வு ஜெனிவாவில் நடைபெறும் நிலையில் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மிச்சலி பெச்சலட் கரிசனை வெளியிட்டுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அவர் கவலை வெளியிட்டுள்ளார். முக்கிய மனித உரிமை விடயங்களில் அரசாங்கத்தின் ஒருமித்த செயற்பாடு இல்லாததன் விளைவாக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் படைத்தரப்பின் வினைத்திறன் அபாயத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் சில மதவாத குழுக்களின் சிறுபான்மை மத குழுக்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்படுவதை அவர் வன்மையாக கண்டித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/219028/இலங்கை-தொடர்பில்-ஐக்கிய-நாட…
-
- 0 replies
- 400 views
-
-
மகாசங்கத்தினருக்கு சாசன சுரக்சன காப்புறுதி நடைமுறையில்: உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார் ரணில் அரசாங்கங்கத்தினால் மகாசங்கத்தினருக்காக அறிமுகப்படுத்தியுள்ள சாசன சுரக்சன காப்புறுதி எதிர்வரும் புதன்கிழமையில் இருந்து நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. மேலும் இக்காப்புறுதி தொடர்பான மேலதிக விடயங்களும் கலந்துரையாடப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/58962
-
- 1 reply
- 462 views
-
-
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் அரசியல் பணியில் இருந்து ஓய்வுபெறுவதே அவர் தமிழ் இனத்துக்குச் செய்யக்கூடிய மிகப்பெரும் உதவியாக இருக்கும். இவ்வாறு நாம் கூறுவது அவருக்கு எதிராகவோ அன்றி அவரை வஞ்சிப்பதற்காகவோ அல்ல. மாறாக சமகாலத்தில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அத்தனை துன்பங்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையே காரணம் என்ற அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கின்ற இரா. சம்பந்தர் தனது அரசியல் பணியில் இருந்து ஓய்வுபெறுவது அவருக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மையாக அமையும். நீண்டகால அரசியல் அனுபவம் இரா.சம்பந்தர் அவர்களுக்கு உண்டாயினும் அவரின் முதுமை காரணமாகவும் தனது அரசியல் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு ஒரு சிலரில் முழுமைய…
-
- 0 replies
- 333 views
-
-
இராணுவம் தொடர்பாக அமெரிக்கா இலங்கையுடன் செய்து கொள்ளவிருந்த ஒப்பந்த்திற்கு கடும் எதிர்ப்புக்கள் வெளியாகியமையினாலேயே அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கைக்கான விஜயத்தை இரத்து செய்தார் என்று தெரிவித்த பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில, அமெரிக்கா மாத்திரமின்றி சீனா இந்தியா ஆகிய நாடுகளும் இலங்கையை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டன என்றும் தெரிவித்தார். இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது : 2,500 வருட நீண்ட கால வரலாற்றைக் கொண்ட இலங்கை இதற்கு முன்னர் இது போன்றதொரு பாரிய நெருக்கடிக்கு ஒருபோதும் முகங்கொ…
-
- 0 replies
- 729 views
-
-
June 24, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹரான் ஹாஷிமின் சகாக்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. காலி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒ…
-
- 1 reply
- 500 views
-