Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அந்தோனியார் தேவாலயம் இன்று மீண்டும் திறப்பு! உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று மாலை 5 மணிக்கு அடியார்களுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது. நாளை இடம்பெறவுள்ள புனித அந்தோனியாரின் வருடாந்த நிகழ்விற்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள திருப்பலி பூஜை நாளை வியாழக்கிழமை கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெறவுள்ளது. http://www.virakesari.lk/article/58056

  2. முஸ்லிம் தலைமைகளுக்கு எதிரான முறைப்பாடுகளுக்கு இறுதி சந்தர்ப்பம்! முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான இறுதித் தினம் இன்றாகும். அதன்படி இன்று (புதன்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 4 மணிக்கிடையில் எழுத்துமூலமான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இதுவரையில் சம்மந்தப்பட்ட மூவருக்கும் எதிராக 12 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்த விடயம் குறித்து நியமிக்கப்பட்ட பொலிஸ் குழு தெரிவித்துள்ளது. இவற்றில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக 6 முறைப்பாடுகளும் மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக 3 முறைப்பாட…

  3. யாழ் குடாநாட்டின் மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மீனவர்களின் 33 ஆவது நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தின் மண்டைதீவு கடற்பரப்பில் வைத்து ஸ்ரீலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 31 அப்பாவி தமிழ் மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 1986 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10 ஆம் திகதி குருநகர் இறங்குதுறையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை, ஸ்ரீலங்கா கடற்படையினர் அணுகிய போது தாம் பொதுமக்கள் என்பதை தெரிவிக்கும் பொருட்டு அவர்கள் கைகளை உயர்த்தினர். எனினும் மீனவர்களை தாக்க ஆரம்பித்த ஸ்ரீலங்கா கடற்படையினர், கூரிய…

  4. இலங்கையில் ஆட்சியில் இருக்கும் சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து சலுகைகளை மாத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முஸ்லிம் மக்கள் தொடர்ந்தும் இருப்பார்களாயின் ஒருபோதும் அவர்களால் உரிமைகளை வென்றெடுக்க முடியாது என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவித்திருக்கின்றார். இதனால் மொழியால் ஒன்றுபட்ட முஸ்லிம் சமூகம், தமிழ் மக்களுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என நாட்டில் தற்போது முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனவாத நடவடிக்கைகள் தொடர்பில் ஐ.பி.சி தமிழுக்கு கருத்து தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியிருக்கின்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாட்டில்வாழும் சிறுபான்மையினமான முஸ்லிம…

    • 0 replies
    • 523 views
  5. சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டம் ரத்து இன்று நடைபெறவிருந்த சிறிலங்கா அமைச்சரவையின் வாராந்தக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுகளை நிறுத்தாவிட்டால், அமைச்சரவைக் கூட்டங்களை புறக்கணிப்பேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வியாழக்கிழமை நடந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் எச்சரித்திருந்தார். வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் நிலையில், இன்றைய அமைச்சரவைக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. எனினும், நேற்று அலரி மாளிகையில் அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னதாக நடக்கும் தயார்படுத்தல் கூட்டம் சிறிலங்கா…

  6. முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் பொது மக்களின் நலன் கருதி கிளிநொச்சி மாவட்டத்தில் சேவையில் உள்ள முச்சக்கர வண்டிகளை அடையாளப்படுத்தும் வகையில் ஸ்ரிக்கர் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று(11) இடம்பெற்றது. இன்று காலை பத்து மணிக்கு பெண்கள் சிறுவர் காவல்துறைப் பிரிவின் கேட்போர் கூடத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் சேவையில் உள்ள 400 க்கு மேற்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கும் அவர்களின் காவல்துறைப் பிரிவின் அடிப்படையில் ஸ்ரி்க்கர்கள் வண்டியின் முன் புறமும் பின்புறமும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் காவல் நிலையத்தின் தொலைபுசி இலக்கம், மாவட்ட முச்சக்கர உரிமையாளர் சங்கததின் தொலைபேசி என்ப…

  7. June 11, 2019 இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் 18 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியொருவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். வரக்காபொல பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு, இவ்வாறு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் குற்றவாளியை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார். 1995 ஆம் ஆண்டு வரக்காபொல பிரதேசத்தில் 3 வீதிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக, ஒப்பந்தக்காரர் ஒருவரிடமிருந்து 25,000 ரூபாய் இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டின் கீழ், கைதுசெய்யப்பட்ட இவருக்…

  8. சுதந்திரபுரம் படுகொலை – 21ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு முல்லைத்தீவு, சுதந்திரபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையிலான 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 1998 ஆம் ஆண்டு இலங்கை விமான படையாலும், இராணுவத்தினராலும் மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதலில் 33 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த நிலையிலேயே 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) சுதந்திரபுரம் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த தாக்குதலின் போது தமது குடும்பத்தில் 4 பேரை இழந்த தயார் மற்றும் தந்தை இணைந்து ஈகைச் சுடரினை ஏற்றி வைத்துள்ளனர். இந்த நிகழ்வில் பொதுமக்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டு அஞ்சலி ச…

  9. (எம்.மனோசித்ரா) முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேவேளை மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தவும் முடியாது. ஆனால் பதவி விலகி பிரிந்து செல்வதால் தீர்வினைக்காண முடியாது என்பதால் முஸ்லிம் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்கள் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளனர். பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அஸ்கிரிய , மல்வத்து பீட மகாநாயக்க தேரர்கள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று கண்டியில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும்…

  10. June 11, 2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக, நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்காக முன்னிலையாகுமாறு மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அழைக்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 2 மணியளவில் விசாரணைக் குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர், அகில இலங்கை ஜமயத்துல் உலமா சபையின் பிரதிநிதி ஆகியோரும் இன்றையதினம் சாட்சிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை எவ்வித அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களுக்கு அடிபண…

    • 2 replies
    • 901 views
  11. யாழ்.மாவட்­டத்தில் புகை­யிலை பயிர்ச் செய்­கைக்கு பதி­லாக கற்­றாழை மற்றும் மிளகாய் செய்­கை அறி­முகம் யாழ்.மாவட்­டத்தில் புகை­யிலை பயிர்ச் செய்­கைக்கு பதி­லாக கற்­றாழை மற்றும் நீண்­ட­காலம் பயன் தரக்­கூ­டிய மிளகாய் செய்­கையும் என்­பன அறி­முகம் செய்­யப்­ப­ட­வுள்­ளன.இதன் முதற்­கட்­ட­மாக, கற்­றாழைப் பயிர்ச் செய்கை வேலணைப் பகு­தியில் மேற்­கொள்­ளப்­பட்டு நல்ல வளர்ச்சி நிலையை அடைந்­துள்­ள­தாக மாவட்ட விவ­சாய போத­னா­சி­ரியர் திரு­மதி சசி பிரபா கைலேஸ்­வரன் தெரி­வித்தார். மேலும், 2020 ஆண்­டுடன் புகை­யிலைப் பயிர்ச்­செய்­கையை நிறுத்­து­வ­தற்கு அரசு தீர்­மா­னித்­துள்­ளதால் அதற்கு பதி­லாக கற்­றாழை மற்றும் நீண்­ட­காலம் நின்று பயன்­தரும் மிளகாய…

  12. 1990.06.11 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்கள் விடுதலைப்புலிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது மேலிடத்து அரச உத்தரவின் பெயரில் ஆயுதங்கள் தம்வசம் இருந்தும் விடுதலைபுலிகளுக்கு தாக்குதல் நடத்தாமல் தம்மிடம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் விடுதலைப்புளிகளிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்த 800 பொலிஸ் அதிகாரிகளில் 600 பேர் முஸ்லிம்கள் ஆவார்கள். ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாச புதிய ஆயுதங்களை கிழக்கு பொலிஸ் நியங்களுக்கு வழங்கி ஒரு கிழமையில் கிழக்கில் LTTE யின் கட்டளை தலைமைகளான கருனா அம்மான் மற்றும் கரிகாளன் தலைமையிளான குழுவிடம் ஒப்படைக்க 800 பொலிஸ் பாதுகாப்பு படையினரின் உயிர் தாரைவார்க்கப்பட்டது. சரன் அடைந்தவர்கள் திருக்கோவில் பகு…

    • 2 replies
    • 1.4k views
  13. நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கு இன்று நேரடியாகச் சென்றிருந்தார். “குறித்த பல்கலைக்கழகம் தெற்காசியாவில் மிகப்பெரிய ஷரிஆ சட்டம் மற்றும் இஸ்லாம் பயங்கரவாதம் கற்பிக்கும் இடமாகும். வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையாக உள்ளது. அதற்கு சவுதி உட்பட இஸ்லாமிய நாடுகளில் இருந்து பெருமளவு பணம் கிடைப்பது எங்களுக்கு தெரியும். எனவே மட்டக்களப்பு ஷரிஅ பல்கலைக்கழம், இராணுவத்தினருக்கு தொழில்நுட்ப திறனை வழங்கும் பல்கலைக்கழமாக மாற்றப்பட வேண்டும் அதற்காக யோசனை, சட்ட வரைவு அனைத்தும் எதிர்வரும் 10 நாட்களுக்குள் முன்னெடுக்கப்படும்“ என்று ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். https://n…

  14. June 11, 2019 வில்பத்து தேசிய பூங்காவில் கடற்படை முகாமொன்று இருக்கவே இல்லை எனவும் அங்கிருந்த கடற்படை முகாம் அகற்றப்படுவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அப்பகுதியில் காணப்பட்டது கடற்படையின் நலன்புரி சேவைகளுக்காக பயன்படுத்திய 26 ஏக்கர் நிலப்பரப்பாகும் எனவும் இந்த நிலத்தில் தேசிய உணவு உற்பத்தி மற்றும் நஞ்சுத்தன்மையற்ற உணவு பொருட்களை உற்பத்தி செய்தல் போன்ற நடவடிக்கை…

  15. சிறிலங்கா அதிபரின் எதிர்ப்பை மீறி இன்று தெரிவுக்குழு விசாரணை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் எச்சரிக்கைக்கு மத்தியில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு இன்று கூடவுள்ளது. இந்த தெரிவுக்குழு முன்பாக தேசிய பாதுகாப்பு இரகசியங்கள் வெளியிடப்படுவதாக குற்றம்சாட்டியிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தெரிவுக்குழுவுக்கு முன்பாக, பாதுகாப்பு அதிகாரிகளை முன்னிலையாக கூடாது என உத்தரவிட்டிருப்பதாக கூறியிருந்தார். அத்துடன், தெரிவுக்குழு விசாரணைகளை நிறுத்துமாறு சபாநாயகருக்கும் அவர் அறிவித்திருந்தார். அந்தக் கோரிக்கையை நிராகரித்திருந்த சபாநாயகர், தெரிவுக்குழுவை நாடாளுமன்றமே அமைத்தது …

    • 1 reply
    • 360 views
  16. காலியில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் பெண் ஒருவர் கொள்வனவு செய்த உள்ளாடைக்குள் (மார்புக் கச்சை) காணப்பட்ட ஒரு வகை ஜெல் மற்றும் சிறியளவான மூன்று உருண்டைகள் கண்டுபிடிப்பக்கட்டுள்ளது. இந்நிலையில், குறித்த உள்ளாடையை (மார்புக் கச்சை) அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி அறிக்கை தருமாறு காலி பிரதம நீதிவான் ஹர்ஷன கெக்குனவல உத்தரவிட்டுள்ளார். மேற்படி பொருட்களை நீதிமன்றில் முன்வைத்து பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலி, கலேகான பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் காலி நகரிலுள்ள பிரபல ஆடையகத்தில் சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர் உள்ளாடையொன்று (மார்புக் கச்சை)…

    • 0 replies
    • 740 views
  17. பலாலி, மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்தி குறித்து மோடி- ரணில் பேச்சு பலாலி, மட்டக்களப்பு விமான நிலையங்களின் அபிவிருத்தி மற்றும் ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு பயிற்சி மற்றும் விநியோக ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுக்களை நடத்தியுள்ளார். நேற்று முன்தினம் குறுகிய நேரப் பயணமாக சிறிலங்கா வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்று, கொழும்புக்கு அழைத்து வந்தார். பின்னர் அவர், கொழும்பில் பேச்சுக்கள் மற்றும் சந்திப்புகளை முடித்துக் கொண்ட இந்தியப் பிரதமரை, கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் …

    • 0 replies
    • 649 views
  18. சிறிலங்கா வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குடை பிடித்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து பலரும் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பிரதமர் மோடி இன்று இலங்கை வந்தபோது கொழும்பில் மழை பெய்துகொண்டிருந்தது. இதனால் ஜனாதிபதி செயலகத்தில் மோடியை வரவேற்கும் வைபவம் கொட்டும் மழையிலும் இடம்பெற்றது. இதன்போதே சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோடியை குடை பிடித்து அழைத்துச் சென்றார். ஒரு இறைமையுள்ள நாட்டின் அதியுச்ச தலைமைப் பொறுப்பிலுள்ள ஜனாதிபதி இன்னோர் நாட்டின் பிரதமருக்கு குடை பிடிப்பதா என சிலர் கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும் சிலர், "மைத்திரி மீண்டும் தன் எளிமைப்…

  19. மடு அன்னையின் ஆடி மாத திருவிழா – பாதுகாப்பு சோதனைகளின் பின்பே ஆலயத்தினுள் பக்தர்களுக்கு அனுமதி : June 10, 2019 எமது நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற இந்த சங்கடமான நிலையிலே பாதுகாப்பு ஒரு பிரச்சினையாக இருந்து கொண்டு வருகின்றது. ஆகையினால் பாதுகாப்பின் அவசியத்தால் மடு திருத்தளத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் பாதுகாப்பின் அவசியமான சோதனைகளுக்கும் உற்படுவார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்தார். மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை மாலை 3.45 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்கள அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரைய…

  20. மோடியை வரவேற்றார் ரணில்! June 9, 2019 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். போயிங் 737 என்ற விமானத்தினூடாக இன்று காலை 11.00 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் உட்பட 59 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் சென்றடைந்தனர். அத்துடன் அவரது பாதுகாப்பு கருதி இந்தியாவிலிருந்து மற்றுமோர் விமானமும் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இதன் பின்னர் 11.15 மணியளவிலிலிருந்து விமானத்தை விட்டு தரையிறங்கிய இந்தியப் பிரதமர் மோடிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் வரவேற்பளித்ததுடன் இந் நிகழ்வில் ஏனைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர். #நரேந்திரமோடி #பண்டாரநாயக்கசர்வதேசவிமானநிலையம் #…

    • 16 replies
    • 1.7k views
  21. யாழ். பொது நூலக கல்வெட்டில் காணப்படும் பிழையை மாற்றியமைக்க நடவடிக்கை யாழ்ப்பாணம், பொது நூலகத்தின் கல்வெட்டில் காணப்படும் பிழையான வரலாற்றினை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ் பொது நூலகத்தின் வரலாறு தொடர்பாக நூலக வாயில் கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது. எனினும் அதில் பொறிக்கப்பட்டுள்ள வரலாற்று குறிப்பில் பிழைகள் இருப்பதாக எமது முன்னோர்களும் சபை உறுப்பினர்களும் சுட்டிக்காட்டினர். அதன்படி இந்த பிழையை திருத்தியமைக்க வேண்டுமென மாநகர சபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. குறித்த தீர்மானத்தின் பிரகாரம் நூலக வரலாற்றில் பிழையான தகவல்கள் திணிக்கப்பட்டுள்ளனவா என ஆராய குழுவொன்று அமைக்கப்பட்டு, அதன்பிரகாரம் அந்த கல்வெட்டில் பிழை உள்ளமையும் இனங்காணப்பட்டுள்…

    • 1 reply
    • 853 views
  22. (நா.தினுஷா) ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறக்கப்படுவாராக இருந்தால் நாட்டின் தலைமைத்துவத்தில் மாத்திரமின்றி கட்சியின் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என்று டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். பாராளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பிலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் தொடர்பில் வெளியாகும் கருத்துக்கள் தொடர்பிலும் வினவியப்போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, தொடர் குண்டுத்தாக்குத…

  23. ரிசாட்டின் அமைச்சை பொறுப்பேற்கின்றார் புத்திக்க பத்திரன கைத்தொழில், மீள்குடியேற்ற, வர்த்தக, கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பதில் அமைச்சராக புத்திக்க பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவி பிரமாணத்தை அவர், இன்று (திங்கட்கிழமை) செய்துக்கொண்டார். குறித்த அமைச்சு பதவியை வகித்து வந்த ரிசாட் பதியுதீன், அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் சிக்கல்கள் காரணமாக தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்திருந்தார். இந்நிலையிலேயே ஜனாதிபதியினால், புத்திக்க பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொறுப்பிலிருந்த நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சுக்களுக்கான பதில் அமைச்சராக ல…

  24. June 10, 2019 பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் போசாக்கு சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வைத்திய அத்தியட்சகர் த.குகதாசன் தலைமையில் குறித்த சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சிகிச்சைப் பிரிவு பிரதி வெள்ளிக்கிழமை தோறும் காலை 09 மணி 11 மணிவரையில் நடைபெறவுள்ளது. அதில் தாய் – சேய் போசாக்கு குறைபாடுகள் , நிறை போன்றவை தொடர்பில் பரிசோதிக்கப்பட்டு , அவர்களுக்கான சிகிச்சைகள் ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கபட்டது. #பருத்தித்துறைஆதாரவைத்தியசாலை #போசாக்குசிகிச்சைப்பிரிவு. http://globaltamilnews.net/2019/123922/

  25. June 10, 2019 யாழ்.காரைநகர் கடற்பகுதியில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் காணாமல் போய் ஒருவார காலம் கடந்தும் எந்தவிதமான தகவலும் கிடைக்காமையால் உறவினர்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. காரைநகர் மத்தியை சேர்ந்த 23 வயதான கோடீஸ்வரன் குகபிரியன் 26 வயதான தவராசா சத்தியராஜ் ஆகிய இருவரும் கடந்த 2ஆம் திகதி காரைநகரில் இருந்து தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளனர். அது தொடர்பில் கடந்த 4ஆம் திகதி உறவினர்களால் ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டை அடுத்து அது தொடர்பில் காவல்துறையினர் கடற்படையினருக்கு அறிவித்தனர்.அதனை தொடர்ந்து கடற்படையினர் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.