Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உறுதிப்படுத்தப்பட்டார் சியோன் தேவாலய தற்கொலைதாரி மரபணு பரிசோதனையின் அடிப்படையில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் தற்கொலை குண்டுதாக்குதலில் சிதறுண்ட தலை மற்றும் உடற்பாகங்கள் தற்கொலைதாரியான முகமது ஆசாத்தினுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. குறித்த உடற்பாகங்களின் மாதிரிகள் தற்கொலைதாரியான முகமது நாசர் முகமது ஆசாத் என்பவரின் தாயாரின் மரபணு மாதிரிகளுடன் ஒப்பிட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதனையடுத்து தற்கொலைதாரி அடையாளம் காணப்பட்டதையடுத்து அந்த உடலை அரச செலவில் அடக்கம் செய்யுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை கட்டளையிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 21 ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் அயல் வீட்டின் கூரையின் மேலிருந்து மீட்கப்பட்…

  2. ஆயுத குழுவினால் கொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்திரின் சடலம் அகழப்படுகின்றது கடந்த 2008 ஆம் ஆண்டு ஆயுத குழுவொன்றினால் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம், உடற்கூற்று பரிசோதனைக்காக நாளை (செவ்வாய்க்கிழமை) தோண்டி எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கருணா ஆயுத குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் 3 பேர் கைது செய்யபபட்டுள்ளனர். அதேவேளை மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை நாளைய தினம், தோண்டி எடுத்து இரசாயண பகுப்ப…

  3. முல்லைத்தீவு முறிகண்டி பிள்ளையார் ஆலய வளாகத்தில் ஆணின் சடலம் கண்டெடுப்பு முல்லைத்தீவு- மாங்குளம், முறிகண்டி பிள்ளையார் ஆலய வளாகத்திலுள்ள கடையொன்றின் உரிமையாளர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மாங்குளம் பொலிஸாருக்கு, அப்பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமையவே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆண் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளனர். மேலும் சம்பவத்தில் உயிரிழந்த ஆணின் சடலத்தை நீதவான் இன்னும் வருகை தந்து பார்வையிடாதமையால் அவ்விடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். http://athavannews…

  4. மன்னார் சமுர்த்தி பயனாளிகளில் புத்தளத்தினைச் சேர்ந்தவர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு! மன்னார் சமுர்த்தி பயனாளிகளில் புத்தளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் புதிய சமுர்த்தி பயனாளிகளிற்கான உரித்து படிவம் வழங்கும் நிகழ்வு மன்னார் நகரசபை மைதானத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது, மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலர் பிரிவுகளையும் சேர்ந்த 10,113 பேருக்கு உரித்து படிவங்கள் வழங்கப்பட்டன. இந்தநிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு க…

  5. கண்டியில் வெடிபொருட்கள் மீட்பு! கண்டி – தவுலகல – பங்கலாவத்த பகுதியில் கற்பாறை மீதிருந்து வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவை மீட்கப்பட்டுள்ளன. இதன்போது 127 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட சில வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்து இதுவரையில் எந்தவொரு சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com/கண்டியில்-வெடிபொருட்கள்/

  6. அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு ; காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சமூர்த்திப் பயனாளிகளுக்கு நிவாரண உரித்துப்படிவங்கள் வழங்கும் நிகழ்விற்கு வருகை தந்த ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகேயின் வருகைக்கு வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இன்று பிற்பகல் மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வுகளை நிறைவு செய்து கொண்டு 4.40மணியளவில் வன்னி விமானப்படைத்தளத்திற்கு சொப்பர் விமானத்தில் வந்திறங்கிய அமைச்சர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் காரணமாக கண்டி வீதி வழியாக செல்லாமல் பிரதான மணிக்கூட்டு வீதி வழியாக பசார் வீதி சென்று இலுப்பையடி, வைத…

  7. மன்னார் மாவட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு சமூர்த்தி நிவாரண உரித்துப்படிவம் மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகங்களுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 10,113 சமூர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு இன்று (08) மன்னார் நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக செயற்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டத்தின் இன்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகே கலந்து கொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்…

  8. அரேபியனாக்கத்தை நிறுத்துங்கள் | மஹிந்த ராஜபக்ச வேண்டுகோள் ‘சிறீலங்கா முஸ்லிம்கள் தமது கலாச்சாரத்தை அரேபியனாக்கம் செய்வதை நிறுத்திவிட்டு சாதாரண இலங்கை முஸ்லிம் கலாச்சாரத்துக்குத் திரும்ப வேண்டும்’ என எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டார். ஆப்ரல் 21 குண்டுவெடிப்புச் சம்பவங்களின் தொடர்பில் பதவி விலகிய 9 முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்தபோது ராஜபக்ச அவர்களிடம் இந்த வேண்டுகோளை முன்வைத்தார். “சிறீசேன-விக்கிரமசிங்க அரசு அப்பாவி முஸ்லிம்களைப் பாதுகாக்கத் தவறியுள்ள போதும் முஸ்லிம் மக்கள் ஒரு சமூகமாகத் தம் மேல் ஏனிந்தப் பழி சுமத்தப்படுகிறது என உள்ளார்ந்த பரிசோதனைகளையும் செய்ய வேண்டும்” என அவர் அச் சந்திப்பின்போது கேட்டுக்…

    • 3 replies
    • 1.3k views
  9. தமிழரின் பூர்வீக குளத்திற்கு சிங்கள பெயர் சூட்டப்பட்டு ஜனாதிபதியால் திறந்துவைப்பு தமிழ் மக்களின் பூர்வீக கிராமமும் குளமுமான ஆமையன் குளம் என்ற குளத்திற்கு சிங்கள பெயர் சூட்டப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த ஆமையன் குளத்திற்கு ‘கிரி இப்ப வெவ’ என சிங்கள பெயர் சூட்டப்பட்டுள்ளது. மகாவலி அபிவிருத்தி ‘L’ வலையத்திற்குள் அபகரிக்கப்பட்டு பெரும்பான்மையின மக்களுக்காக அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு ஜனாதிபதியால் நேற்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பூர்வீக நிலமான மணலாறு பகுதி வெலிஒயா என பெயர் சூட்டப்பட்டு தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு பெரும்பான்மையி…

    • 3 replies
    • 853 views
  10. ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகமும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பயங்கரவாத ஒழிப்பு நிறைவேற்று சபையின் நிறைவேற்று அதிகாரியுமான மிஷேல் கோனின்சஸ் அவர்கள் நேற்று தமிழ் தேசியகூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்பேரவையின் பிரேரணையின் அமுலாக்கதின் முக்கியத்துவம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் அவர்கள் "இந்த பிரேரணைகளின் கூட்டு பங்காளிகள் என்பதனை மறந்தவர்களாக அரசாங்கம் செயற்படுகின்றது என்றும் பிரேரணைகளின் முன் மொழிவுகளை அமுலாக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்பதனையும்" சுட்டிக்காட்டினார். இந்த நிலைமை தொடர்பில் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம் எனவும் இந்த நிலைமை நாட்டிற்க…

    • 0 replies
    • 828 views
  11. தமிழர் பிரச்சனைக்கு தீர்வு... மோடியிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் வலியுறுத்தல். ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் நேரில் வலியுறுத்தினர். இலங்கை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் இன்று சந்தித்தனர், இரா. சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் மோடியை சந்தித்து பேசினர்.இச்சந்திப்பின் போது வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பு, தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.…

    • 17 replies
    • 1.1k views
  12. தேசிய புலனாய்வு பணிப்பாளர் சிசிர மென்டிஸ் பதவி நீக்கம் சிறிலங்காவின் தேசிய புலனாய்வு பணிப்பாளர் சிசிர மென்டிஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர் சிறிலங்கா அதிபரின் அழுத்தங்களை அடுத்தே தனது பதவியை விட்டு விலகினார் என்று கூறப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக, தேசிய புலனாய்வு பணிப்பாளர் சிசிர மென்டிஸ் சாட்சியம் அளித்திருந்தார். அதில், தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள் ஒழுங்காக நடத்தப்படுவதில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது http://www.puthinappalakai.n…

    • 1 reply
    • 440 views
  13. வடக்கு கிழக்கு இணைப்பை தடுக்கவே மத்தியில் சிங்களக் குடியேற்றம் -சி.வி. வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்கக்கூடாது என்ற நோக்கில், இரண்டு மாகாணங்களையும் இணைக்கும் மத்திய பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், “18 வருடங்களாக இணைந்திருந்த வடக்கு கிழக்கு இணைப்பு அரசியல் காரணங்களுக்காக பிரிக்கப்பட்டிருந்தது. எனினும், மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அதைவிடுத்து இரண்டு மாகாணங்களையும் இணைக்கும் மத்திய பிரதேசத்தில் இருக…

    • 2 replies
    • 1.1k views
  14. கட்டுநாயக்கவில் இந்தியப் பிரதமரை வரவேற்கப் போவது யார்? – குழப்பும் தகவல்கள் மூன்று மணிநேர குறும்பயணம் ஒன்றை மேற்கொண்டு சிறிலங்கா வரவுள்ள இந்தியப் பிரதமரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்கப் போவது யார் என்பது தொடர்பான குழப்பமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இருதரப்பு பயணமாக இன்று முற்பகல் 11 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வந்தடையவுள்ளார். அவரை அமைச்சரவையின் சார்பில் வரவேற்பதற்கான பொறுப்பை அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் சிறிலங்கா அதிபர் வழங்கியிருந்தார். பின்னர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே இந்தியப் பிரதமரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பார் என்றும், அதிபர் செயலகத்தில் நடைபெறும் நிகழ்வில் சிற…

  15. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனவாதி கிடையாது. ஆகையினாலேயே அவருடன் இணைந்துபயணிக்கின்றேன்.” என்று வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முல்லைத்தீவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,“இரத்தமும், கண்ணீரும் ஓடிய மண்ணிலிருந்துதான் உரையாற்றிக் கொண்டிருக்கின்றேன். மீண்டுமொரு முறை அவ்வாறானதொருநிலை இங்கு ஏற்படக்கூடாது. இதில் நாம் அனைவரும் உறுதியாக இருக்கவேண்டும்.இந்த ஆட்சிமாறி, அடுத்த ஆட்சிவந்துவிட்டால் எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்துவிடும் என யாராவது கருதுவீர்களானால் அது தவறான எண்ணமாகவே இருக்கும். காரணம் ‘ஜனநாயகம்’ என்ற ஒன்றே அனைத்துக்கும் …

  16. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருதய சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனைக்கு சென்றிருந்த போது, இருதயத்திற்கு குருதியை கொண்டு செல்லும் இரண்டு வல்வுகளில் அடைப்பு இருந்ததாகவும் சத்திர சிகிச்சையில் மூலம் அவை அகற்றப்பட வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாகவும் கோத்தபாயவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். இதற்கு அமைய கோத்தபாயவுக்கு இந்த இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சையின் பின்னர் சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ள, அவர் இரண்டு வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதன் பின்னர், மூன்று மாத காலத்திற்கு சிறிய …

    • 4 replies
    • 670 views
  17. முஸ்லீம்களின் மார்க்க விடயம் பற்றி பேசும் உரிமை ரணிலோ ,மைத்திரியோ, மஹிந்தவோ வேறு யாருமோ தீர்மானிக்க முடியாது! அதை முஸ்லீம்களே தீர்மானிக்க வேண்டும் என்றார் ஹிஸ்புல்லாஹ்! இன்றிரவு -08- காத்தான்குடி பள்ளிவாசலில் மக்களை சந்தித்து உரையாற்றும் போது அவர் மேலும் கூறிய விடயங்கள் #உலகில் எந்த ஒரு நாட்டிற்கும் இல்லாத சலுகையை, ஈரான் இலங்கைக்கு வழங்குகிறது 6மாத கால கடனுக்கு கோடான கோடி எண்ணொய்யை கொடுக்கிறது! #இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளில் இரண்டாவது நாடு முஸ்லீம் நாடுகள்! #பதுளை செங்கலடி நெடுஞ்சாலைக்கு 2000கோடி வழங்கும் நாடு சவூதி! #கிழக்கு பல்கலைக்கழக அபிவிருத்திக்கு 200கோடி பணஉதவி செய்வது குவைத் அரசு! #ஒபேக் அமைப்பின் அற…

    • 5 replies
    • 1.4k views
  18. கிழக்கிலங்கையின் சில பகுதிகள் முழுமையாக அரேபிய தேசமாக மாறியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை அரியலமைப்புக்கு அமைய தேசிய மொழியான சிங்களம், தமிழ் மொழிகளை தவிர்த்து அரேபிய மொழிக்கு முதன்மை இடம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியலமைப்பை மீறி அரேபிய மொழிக்கு முதன்மையிடம் வழங்கியுள்ளமை விபரீத விளைவுகளை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடியின நுழைவிடத்தில் உள்ள வரவேற்பு பலகையில் ஆங்கிலம், தமிழ், சிங்களம் மொழிக்கு மேலதிகமாக அரேபிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. அரபு நாடுகளை போன்று நிர்மாணிக்கப்பட்டுள்ள காத்தான்குடியில், தேசிய மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் மொழி தவிர்க்கப்பட்டுள்ளது. அரேபிய மொழிக்கு முதலிடம…

    • 13 replies
    • 2.2k views
  19. இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, வாழ்வியல் குறித்து ஆய்வு செய்த கலாநிதி அனஸ் அவர்கள், இலங்கையில் முஸ்லிம்கள 1300 வருடங்களுக்கு முன்பிருந்தே வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதற்கு சான்றாக,, காலியில் உள்ள “கச்சு வத்த” என்ற இடத்தின் உண்மையான பெயர் “ஹஜ்ஜு வத்தை” என்றும் ஹஜ்ஜுக்கு செல்லும் முஸ்லிம்கள் 1300 வருடங்களுக்கு முன்னர் இங்கிருந்துதான் தனது பயணத்தை மேற்கொண்டார்கள் எனக் குறிப்பிடுகின்றார். நிற்க, பராக்கிரமபாகு மன்னனின் ஆட்சிக் காலத்தில் (1505) இலங்கையின் கடல் வர்த்தகம் முழுக்கவும் ‘சோனகர்கள்’ என்று நாட்டில் அறியப்பட்டிருந்த பூர்வீகக் குடிகளிடமேயிருந்ததாகவும் அவர்களது தயவில் அரேபியரின் செல்வாக்கும் அங்கு பரவலாகக் காணப்பட்டதாகவும் வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர…

    • 24 replies
    • 2.1k views
  20. சிறிலங்காவில் மீண்டும் இன வன்முறைகள் இடம்பெறுமானால் நாடு பாரிய அழிவை சந்திக்க நேரிடும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்திருக்கின்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து பாதுகாப்பு தொடர்பில் எழுந்திருந்த அச்சுறுத்தல்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இன வன்முறைகள் வெடிக்கலாம் என்று வெளிநாடுகள் பல சந்தேகம் கொண்டுள்ளதாகவும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்திருக்கின்றார். இதற்கான அலங்காரப் பந்தல்களை அமைக்கவும், தானங்களை வழங்கவும் தேவையான நிதிணை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் இன்றை தினம் அலரி மாளிகையில் நடைபெற்ற பொசோன் பௌரணமி தின ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடலில் சிறிலங்கா பிரதமர் தெரிவித்திருக்கின்றார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்…

    • 4 replies
    • 1.2k views
  21. ரத்தன தேரர் உண்ணாவிரத விவகாரம் | பின்னணியில் ஜனாதிபதியா? -சிவதாசன் ரத்தன தேரர் ஏன் உண்ணாவிரதம் இருந்தார்? முஸ்லிம் ஆளுனர்கள், அமைச்சர்கள் ஏன் தமது பதவிகளைத் துறந்தார்கள்? சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். மர்மம் கொஞ்சம் கொஞ்சமாக விலகுவது போலிருக்கிறது. அத்துரலிய ரத்தன தேரர் ஒரு புத்த பிக்கு, அரசியல்வாதி, பாராளுமன்ற அங்கத்தவர், ஜாதிக ஹெல உறுமய என்ற ஒரு சிங்கள தேசிய கட்சியின் முன்னணி உறுப்பினர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை வீழ்த்தி மைத்திரிபால சிறீசேனவை ஜனாதிபதியாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர். 2015 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப் பட்டியலில் பா.உ. ஆகத் தெரியப்பட்டவர். ஹிஸ்புல்லா, அசாத் சாலி, றி…

  22. ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு – மோடியின் சிறிலங்கா பயணத்தில் முக்கிய கவனம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான, இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கூடுதல் கவனம் செலுத்துவார் என்று புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்ற பின்னர், நரேந்திர மோடி நாளை, முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை, மாலைதீவுக்கு மேற்கொள்ளவுள்ளார். அங்கிருந்து நாடு திரும்பும் வழியில், நாளை மறுநாள் சிறிலங்கா வரவுள்ள, இந்தியப் பிரதமர், சிறிலங்கா அதிபர் மற்றும் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார். இதன்போதே, ஏனைய விவகாரங்களுடன், ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான இருதரப்…

    • 9 replies
    • 1.3k views
  23. முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை பொருத்தமற்றது - மஹிந்த (இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள் கூட்டாக பதவி விலக பல்வேறு ஏதுவான காரணிகள் காணப்பட்டாலும் நெருக்கடி நிலையில் பதவி விலகியமை பொருத்தமற்ற செயற்பாடாகும். இச்செயற்பாடு முஸ்லிம் அல்லாத சமூகத்தின் மத்தியில் மாறுப்பட்ட கருத்துக்களை தோற்றுவிக்கும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஏப்ரல் 21ம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியினால் பல காரணங்களை முன்னிலைப்படுத்தி தமது அமைச்சு பதவிகளை துறந்த அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷhத் பதியுதீன், மற்றும் எ. எச்.எம். பவ்சீக் ஆகியோர் இன்று எதிர்க்கட்சி தலைவர்…

  24. தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும்; இந்திய பிரதமரிடம் எடுத்துரைக்கவுள்ளோம் - மாவை.சேனாதிராசா இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் இந்திய பிரதமரிடம் எடுத்துரைக்கவுள்ளோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சோ.மாவை சேனாதிராசா தெரிவித்தார். இலங்கைக்கு வருகை தருகின்ற இந்தியப் பிரதமர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சந்திக்கின்றார். இந்தச் சந்திப்பில் எத்தகைய விடையத்தை கலந்துரையாடவுள்ளீர்கள் எனக்கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிணை மேற்கொண்டு குறுகிய நேரப் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நாளை இலங்கை வருகின்றார். மூன்று மணித்தியாலங்கள் தங்கியிருக்கும் இந…

  25. வடக்கில் பிரபாகரன் உருவானதை போன்று முஸ்லீம் பிரபாகரன் ஒருவரையும் உருவாக்க வேண்டாம் -ஜனாதிபதி வடக்கில் பிரபாகரன் ஒருவர் உருவாகி நாட்டை நாசமாக்கினார். அதைப்போல முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை உருவாக்கி விடாதீர்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நடைபெற்ற நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் 4ஆம் கட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றிய அவர், கடந்த ஜனாதிபதி தேர்தலில் நூற்றுக்கு 80 வீதமான முல்லைத்தீவு மக்கள் எனக்கு வாக்களித்தனர்.நாட்டை ஆண்ட ஆறு ஜனாதிபதிமாரில் நான் தான் கூடுதலாக முல்லைத்தீவு வந்துள்ளேன். முல்லைத்தீவில் வறுமை நிலைமை உள…

    • 3 replies
    • 684 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.