Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு தற்போது நிலவும் கடுமையான வரட்சியினால், வடக்கு மாகாணத்தில் 3 இலட்சம் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக, இடர் முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 46 ஆயிரம் மக்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 56 ஆயிரம் பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 ஆயிரம் பேர் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். வடக்கில் ஏனைய மாவட்டங்களான கிளிநொச்சி மற்றும் வவுனியாவிலும் வரட்சியினால் பொதுமக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். http://www.puthinappalakai.net/2019/05/27/news/38178

    • 11 replies
    • 1.1k views
  2. காத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதத்துடன் தொடர்புகொண்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 63 பேரைக் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலை மேற்கொண்டது காத்தான்குடியைச் சேர்ந்த பிரதான சூத்திரதாரி ஸஹ்ரான் என பொலிஸார் அடையாளம் கண்டு பிடித்ததையடுத்து. குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினர், பொலிஸார், மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் கடந்த ஒரு மாத காலத்தில் 63 பேரைப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைத…

    • 1 reply
    • 625 views
  3. நாட்டைப் பொறுப்பேற்பது தொடர்பில் வெளியான செய்திக்கு இராணுவத் தளபதி கருத்து இலங்கை இராணுவம் தொழில் ரீதியில் ஒழுங்குகளை பேணிவருகின்ற ஒழுக்கமுள்ள ஒரு பிரிவினர் எனவும், இதனால் எக்காரணம் கொண்டும் சட்ட முரணான நடவடிக்கைகளில் இராணுவம் சம்பந்தப்படாது எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். குறுகிய காலத்துக்காவது நாட்டின் அரசாங்கத்தை ஏற்குமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து இராணுவத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு தான் பதிலளித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தியை இராணுவத் தளபதி முற்றாக நிராகரித்துள்ளார். …

    • 1 reply
    • 482 views
  4. (எம்.எப்.எம்.பஸீர்) நான் இப்போது மிகவும் களைப்புற்றுள்ளேன். நான் நாடு தொடர்பில் சிந்தித்து கூறியவை அனைத்தும் உண்மையாகிவிட்டது. அது தொடர்பில் கவலையடைகின்றேன். எதிர்வரும் நாட்களில் பிரித், தியானம் உள்ளிட்ட ஆன்மீகத்திலேயே என் வாழ்க்கையை கழிக்கலாம் எனத் தீர்மானித்துள்ளேன் என பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். விடுதலை பெற்ற பின்னர் ருக்மல்கம விகாரைக்கு சென்றிந்தபோது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். http://www.virakesari.lk/article/56622

  5. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கட்டுநாயக்க நெடுஞ்சாலையுடன் இணைப்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கட்டுநாயக்க நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படவுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் நவம்பர் மாதம் கட்டுநாயக்க வரை நீடிக்கப்படவுள்ளது. வெளிச்சுற்று வீதி அமைக்கப்பட்வுடன் கடவத்தையில் இருந்து கெரவெலப்பிட்டி ஊடாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையுடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது. http://www.dailyceylon.com/183507/

    • 0 replies
    • 477 views
  6. இரணைதீவில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படவில்லை May 27, 2019 கிளிநொச்சி இரணைதீவில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பூநகரிப்பிரதே செயலர் பிரிவின் கீழ் உள்ள இரணைதீவு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் 26 வருடங்களின் பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் மீள்குடியேறினர். கடற்தொழிலை வாழ்வாதாரமாகக்கொண்டு மீள்குடியேறியுள்ள மக்கள் தமக்கு ஆரம்பத்தில் கொட்டில்களை அமைப்பதற்கு கிடுகுகள் மாத்திரமே வழங்கப்பட்டன. அவற்றை வைத்து தற்காலிக கொட்டகைகளை அமைத்ததாகவும் தற்போது இந்தக்கொட்டில்கள் சேதமடைந்;துள்ளன எனவும் தெரிவித்துள்ளனர். தமது சொந்த நிலத…

  7. வவுனிக்குளத்தில் முதலைகளை விடுவதற்கு எதிர்ப்பு May 27, 2019 முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிடிக்கப்படுகின்ற முதலைகளை வவுனிக்;குளத்தில் விடுவதற்கு மீனவர்களும் பிரதேச மக்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு பகுதியில் இராணுவமுகாமிற்குள் புகுந்;த முதலை வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பிடிக்கப்பட்டு அவை வவுனிக்குளத்தில் விடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று முன்னரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பிடிக்கப்பட்ட முதலைகள் வவுனிக்குளத்தில் விடப்பட்டிருந்தன. அதாவது, முல்லைத்துPவு மாவட்டத்தில் மாந்தை கிழக்குதுணுக்காய் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் வாழும் விவசாயிகளுக்கான நீர் …

  8. மன்னாரில் சிறுபோக நெற்செய்கைக்கான காணிகள் வழங்கப்படுவதில் அநீதி May 27, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைக்கான காணிகள் வழங்கப்படுவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். மன்னார் – கட்டுக்கரை குளத்து நீரினைப் பயன்படுத்தி இம்முறை சுமார் 1,710 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அரச நெற்செய்கைக் காணிகள் மன்னார் மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தினரால் சிறுபோக செய்கைக்காக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.2009ஆம் ஆண்டிற்கு முன்னர் கட்டுக்கரைக் குளத்தின் நீர் மட்டத்திற்கேற்ப, மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் சிறுபோக நெற்செய்கைக்க…

  9. இலங்கையிலிருந்து வெளியேறியுள்ள 15 ஐ.எஸ் தீவிரவாதிகள் ; தீவிர கண்காணிப்பில் கடற்படை இலங்கையிலிருந்து 15 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் படகு ஒன்றின் மூலம் இலட்சத்தீவை நோக்கிச் சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக, கேரளாவின் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து கடந்த 23 ஆம் திகதி கிடைத்த புலனாய்வு அறிக்கையையடுத்து, இந்தியாவில் இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில கரையோர காவல் நிலையங்கள் மற்றும் கரையோர மாவட்டங்களில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இது குறித்த முன்னெச்சரிக்கைகள் வழங்கப…

  10. பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளரின் கைதின் பின்னணியில் உள்ள தற்போதைய நிலை என்ன ? (எம்.எப்.எம்.பஸீர்) குருணாகல் - அலகொலதெனிய பகுதியில் தென்னத்தோப்பு ஒன்றுக்குள் முன்னெடுத்து செல்லப்பட்டதாக கூறப்படும் பயிற்சி முகாம் தொடர்பில், 21/4 தொடர் தற்கொலை தககுதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் முக்கியஸ்தர் என கூறப்பட்ட பாராளுமன்ற ஹன்சார்ட் பிரிவின் சிரேஷ்ட மொழி பெயர்ப்பாளரின் கைது தொடர்பில் பல்வேறு உண்மை நிலை தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது. கண்டி - அலவத்துகொட, மாவத்துபொல இலக்கம் 60 எனும் முகவரியைக் கொண்ட 42 வயதான மொஹம்மட் நெளசாட் ஜமால்தீன் எனும் குறித்த மொழி பெயர்…

  11. ரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம் கிளிநொச்சி இரணைமடுசந்தியில் இன்றிரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரணைமடு பகுதியை சேர்ந்த இராசேந்திரம் எனும் 62 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தவராவர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த இரவு நேர தபால் ரயிலேயே இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடலின் மேற்பகுதி வேறாகவும், இடுப்புக்கு கீழ் பகுதி வேறாகவும் காணப்பட்டது. இந்நிலையில் இரயில் பயணம் தாமதமடைந்த்துடன் சடலத்தை மீட்ட இரயில்வே அதிகாரிக்கள் சடலத்தை அடுத்த ரயில் நிலையத்தில் ஒப்படைத்து சென்றனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். …

  12. சிறிலங்கா இன்று 100 வீதம் வழமைக்குத் திரும்பும் – இராணுவத் தளபதி நம்பிக்கை சிறிலங்கா இன்று முற்றிலும் வழமையான நிலைமைக்குத் திரும்பும் என்று சிறிலங்கா இராணுவத்தின் மேற்குப் பகுதி கட்டளைத் தளபதியும், கொழும்பு கூட்டு நடவடிக்கை கட்டளையகத்தின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே தெரிவித்துள்ளார். ”ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், ஏற்பட்டிருந்த பதற்ற நிலை தணிந்து, நாட்டின் இயல்பு நிலையில், நாளுக்குள் நாள் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இன்று நிலைமைகள் முற்றிலுமாக வழமைக்குத் திரும்பி விடும். இன்று தொடக்கம் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களில் முழுமையான வருகைகள் இருக்கும். நாள் முழுவதும், படையினர் நடத்தி வருகின்ற தேடுதல்களில…

    • 1 reply
    • 526 views
  13. பதற்றமான சூழ்நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது: ஞானசார தேரர் எம்மால் வெளியிடப்படும் சில முக்கியமான தகவல்களினால் பதற்றமான சூழ்நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஞானசார தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நாளையும், நாளை மறுதினம் சில முக்கியமான தகவல்களை வெளியிடவுள்ளோம். இவ்விடயங்கள் அனைவர் இடத்திலும் பதற்றத்தை தோற்றுவிப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆனாலும் அனைவரும் அமைதியான முறையில் சிந்தித்து செயலாற்ற வேண்டும். இதேவேளை இளைஞர்கள் அனைவரும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு தூரநோக்குடன் செய…

  14. நாரஹேன்பிட்டி சுற்றிவளைப்பில் 23 பேர் கைது – தொடர்கிறது இராணுவ வேட்டை கொழும்பு- நாரஹேன்பிட்டிய பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து நேற்று நடத்திய தேடுதலில் – பெண் ஒருவர் உள்ளிட்ட 23 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை 7 மணி தொடக்கம், பிற்பகல் 3 மணிவரை இந்த தேடுதல்கள் நடத்தப்பட்டன. இந்த தேடுதல்களின் போது, 15 கிலோ வெடிமருந்துகள், ஆறு காட்டுக் கத்திகள், இராணுவ தொப்பிகள், 14 துப்பாக்கி ரவைகள், 29 அலைபேசிகள், பல தொடர்பாடல் கருவிகள், மற்றும் போதைப் பொருட்கள் உள்ளிட்டவை ஐந்து வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. அனுராதபுரவில் சி-4 வெடிமருந்துடன் இருவர் கைது அனுராதபுரவில் நேற…

    • 0 replies
    • 777 views
  15. வடக்கு கடலில் சிறிலங்கா கடற்படையின் பலம் இரண்டு மடங்காக அதிகரிப்பு சிறிலங்காவில் இருந்து 15 ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதாக வெளியாகிய தகவல்களை அடுத்து, சிறிலங்கா கடற்படை வடக்கு கடற்பரப்பில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. 15 ஐஎஸ் தீவிரவாதிகள் சிறிலங்காவில இருந்து படகு ஒன்றில் இலட்சதீவு நோக்கி பயணிப்பதாக கிடைத்த புலனாய்வுத் தகவல்களை அடுத்து, இந்தியாவின் கேரள மாநில கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் இந்திய ஊடகங்களில் வெளியானதை அடுத்து சிறிலங்கா கடற்படை மேலதிக போர்க்கப்பல்களை அனுப்பி வைத்திருக்கிறது. “இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல. இது…

    • 0 replies
    • 288 views
  16. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரிஷாட்டை தூக்கிலிட வேண்டுமென வலியுறுத்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தூக்கிலிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார். அத்துடன், பயங்கரவாதிகளுக்கு நாடாளுமன்றத்தில் அடைக்கலம் கொடுக்க முடியாது எனத் தெரிவித்த அவர், குற்றவாளிகள் தொடர்பாக விசாரணை செய்யும் அதிகாரமும் பாராளுமன்றத்துக்கு கிடையாது என கூறினார். காலியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “ரிஷாட் பதியுதீன் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதை நிரூபித்துக்கொள்ள பொலிஸார் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். அவ…

  17. யாழ்ப்பாணத்தில் 27 ஆயிரத்து 261 குடும்பங்கள் வீடின்றி நிர்க்கதி - 52 குடும்பங்கள் சிறுவர்களை தலைமைத்துவமாக கொண்டுள்ளன ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் 1 இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் சர்வதேச நாடுகளின் துணையுடன் தமிழ் மக்கள் மீது இன அழிப்புப் போர் ஒன்றை கட்டவிழ்த்து விட்டிருந்தது. முப்பது ஆண்டுகால போரில், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இன அழிப்புத் தீவிரமடைந்தது. அதன் பின்னர் பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களில் பல்லாயிரம் போ் தொடர்ந்தும் அகதி வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2009 ஆம் ஆண்டு…

    • 0 replies
    • 315 views
  18. அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடு – சிறிலங்கா அதிபர் தடை அமெரிக்காவுடன் எந்தவொரு பாதுகாப்பு அல்லது பாதுகாப்புடன் தொடர்புடைய உடன்பாடுகளிலும் கையெழுத்திடக் கூடாது என்று ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சராக தான் பதவியில் இருக்கும் நிலையில், பாதுகாப்புடன் தொடர்புடைய எந்தவொரு உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கும், தனது அனுமதி தேவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சீனாவில் இருந்து கொழும்பு திரும்பிய பின்னர், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம், இது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வொசிங்டனில் தங்கியிருந்த திலக் மாரப்பன, அமெரிக்கா…

    • 1 reply
    • 790 views
  19. யாழ்ப்பாணத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள் சிறிலங்காவில் அடைக்கலம் கோரியுள்ள ஒரு தொகுதி வெளிநாட்டு அகதிகள் யாழ்ப்பாணத்தில் நேற்று குடியமர்த்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளின் 1600இற்கும் அதிகமான அகதிகள் சிறிலங்காவில் புகலிடம் கோரியிருந்தனர். இவர்கள் நீர்கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அண்மைய குண்டுத் தாக்குதல்களை அடுத்து இவர்களுக்கு உள்ளூர்வாசிகளால் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, வெளிநாட்டு அகதிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். எனினும் பல இடங்களில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.…

  20. இல‌ங்கை முஸ்லிம்க‌ள் அர‌பு மொழி பேசுவோராக‌ மாற‌ வேண்டும் என்ற‌ முய‌ற்சி முஸ்லிம் ச‌மூக‌த்தில் துப்ப‌ர‌வாக‌ இல்லை. இஸ்லாம் மார்க்க‌த்தின் ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ளை அறிய‌வே அர‌பு மொழியை ப‌டிக்க‌ வேண்டியுள்ள‌து. வைத்திய‌ துறையை க‌ற்கும் மாண‌வ‌னுக்கு ஆங்கில‌ அறிவு இல்லாவிட்டால் அவ‌னால் ஒரு வைத்திய‌னாக‌ வ‌ர‌ முடிய‌ முடியாது. ஆங்கில‌ அறிவு இல்லாத‌ ஒரு டொக்ட‌ரை சிங்க‌ள‌, த‌மிழ் ச‌மூக‌த்தில் காட்ட‌ முடியுமா? அப்ப‌டியிருந்தால் அது ந‌கைப்புக்கிட‌மான‌தாக‌ இருக்கும். கார‌ண‌ம் அதிக‌மான‌ வைத்திய‌ அடிப்ப‌டைக‌ள் ஆங்கில‌த்திலேயே உள்ள‌ன‌. அது போல் அர‌பு மொழி என்ப‌து குர்ஆனின் மொழி. குர் ஆனை புரிய‌ வேண்டுமாயின் அர‌பு மொழி அறிவு அவ‌சிய‌மாகும். …

    • 7 replies
    • 2.2k views
  21. புராதன மயானம் திருகோணமலையில் கண்டுபிடிப்பு! திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் புராதன மயானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குச்சவெளி பிரதேசத்தின் கன்னியா-நிலாவெளி வீதியில் வள்ளுவர்கோட்டம் பிரதேசத்திலேயே இந்த புராதன மயானம் கண்டுபிடிக்கப்பட்டதாக திருகோணமலை தொல்பொருள் திணைக்கள அதிகாரி சுமனதாச தெரிவித்தார். கண்டுபடிக்கப்பட்ட மயானமானது சுமார் 2000 தொடக்கம் 2500 வருடகால பழமையானது என்று கணிக்க கூடியவாறு காணப்படுவதாக அவர் தெரிவித்தார். தற்போது ஐந்து கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல கல்லறைகள் காட்டுப்பகுதியில் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்தார். குறித்த மயானத்தில் இரண்டு கல்லறைகள் தோண்டிய நிலையில் இருந்தன. இவை பு…

    • 3 replies
    • 885 views
  22. சீனா விதித்திருந்த தடையில் தளர்வு May 26, 2019 உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து சீனப்பிரஜைகள் சுற்றுலாவுக்கென இலங்கைக்கு பயணம் செய்வதற்கு சீன அரசாங்கம் விதித்திருந்த தடையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத அலவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கும் இலங்கைக்கான சீன தூவருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்தையின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை தவிர்க்குமாறு சீனா முன்னர் அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது இவ்வாறு தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் சீனப் பிரஜைகளை அவதானத்துடன் செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது #சீனா …

  23. 3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல் ஆயிரக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து கொழும்பு, கம்பகா, களுத்துறை, குருணாகல, புத்தளம் மாவட்டங்களில் நேற்று பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஈடுபட்டனர். சிறிலங்கா காவல்துறையினருடன், 3000 இற்கும் அதிகமான சிறிலங்கா இராணுவத்தினர் இந்த தேடுதல்களில் ஈடுபடுத்தப்பட்டனர். கொழும்பு கூட்டு நடவடிக்கை பணியகத்தின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும், இது போன்ற தேடுதல்கள், பிராந்திய பாதுகாப்பு படை தலைமையகங்கள் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்று சிறிலங்கா இராணுவ பதில் பேச்சாளர் மேஜர் ஜெனரல் றொஷான் செனிவிரத்ன தெரிவித்தார். …

  24. பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது சிறிலங்காவுக்குப் பயணம் செய்யும் தமது நாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயண முன்னெச்சரிக்கையை தளர்த்துவதற்கு, இன்னும் காலம் தேவைப்படுவதாக, கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பில் உள்ள ஐ.நா மற்றும் வெளிநாடுகளின் 43 தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுமுன்தினம் சந்தித்து பேச்சு நடத்தினார். இரண்டு மணிநேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. திட்டமிட்ட தாக்குதல்களை தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவர் இந்தச் சந்திப்பின் போது விளக்கமளித்துள்ளார். இதன்போது, ஈஸ்டர் ஞாய…

    • 0 replies
    • 275 views
  25. சிறிலங்காவில் இருந்து புறப்பட்ட15 ஐஎஸ் தீவிரவாதிகள் – பாதுகாப்பை தீவிப்படுத்தியது இந்தியா சிறிலங்காவில் இருந்து 15 ஐஎஸ் தீவிரவாதிகள் படகு ஒன்றில் இலட்சதீவு நோக்கிப் புறப்பட்டுள்ளதாக, கிடைத்த புலனாய்வு அறிக்கைகளை அடுத்து, இந்தியா பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இதற்கமைய கேரள மாநில கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, மாநில காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேரள மாநில கரையோர காவல் நிலையங்கள் மற்றும் கரையோர மாவட்டங்களில் காவல்துறை தலைவர்களுக்கே, இதுபற்றிய முன்னெச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற எச்சரிக்கைகள் வழக்கமானதே என்ற போதும், இம்முறை தீவிரவாதிகளின் எண்ணிக்கை தொடர்பான தகவலும் இடம்பெற்றுள்ளதால், சந்தேகத்துக்க…

    • 0 replies
    • 247 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.