Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைத் தமிழர்கள் மீதான சிறிலங்கா இராணுவத் தாக்குதல்கள்: இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கவலை இலங்கைத் தமிழர்கள் மீதான சிறிலங்கா இராணுவத் தாக்குதல்களுக்கு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியைப் போல் தானும் சம அளவில் கவலை கொள்வதாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு வருவதற்கு கவலை தெரிவித்து இனியும் இந்திய அரசாங்கம் பொறுமை காக்க வேண்டுமா? என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான கருணாநிதி நேற்று வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் கருணாநிதி சார்பில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை இந்திய கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்துப் பேசினார். இலங்கை…

  2. கலைமகள் தமிழ்ப் பிரிவின் தலைவர் பணியில் சேர்ந்தது:1999 கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி அறிவிப்பாளர் வாணி தமிழ்ப் பிரிவின் துணைத் தலைவர் பணியில் சேர்ந்தது:1995 அறிவியல் மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி அறிவிப்பாளர் மீனா பணியில் சேர்ந்தது:2003 சீனப் பண்பாடு நிகழ்ச்சி தயாரிப்பாளர் வான்மதி பணியில் சேர்ந்தது:2003 சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சி அறிவிப்பாளர் மேலும் அறியhttp://tamil.cri.cn/301/2013/01/25/1s124840_3.htm

  3. உலகின் தலை சிறந்த ரயில் வழித்தடங்களில் யாழ்தேவி மற்றும் நீலகிரி மலை ரயில்கள் இடம் பிடித்துள்ளன. லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற `கார்டியன் ' பத்திரிகை உலகின் தலைசிறந்த 18 ரயில் வழித்தடங்களை வகைப்படுத்தியுள்ளது. அதில், யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புக்குச் செல்லும் யாழ்தேவி இடம் பெற்றுள்ளது. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தவுடன் யாழ்பாணத்திலிருந்து கொழும்புக்கு மீண்டும் இந்தச் சேவை 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இலங்கையின் வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களையும் இணைக்கும் இந்த பாதை 314 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. இலங்கையின் கலாசாரம் மற்றும் பண்பாட்டு அடையாளமாகவும் இது ரயில் பார்க்கப்படுகிறது. …

  4. வடக்குகிழக்கு பிரதேசங்களை அகதி முகாமாக்குகின்றது அரசு கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குற்றச்சாட்டு. ""வடக்கு கிழக்கில் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களைச் சிங் கள அரசு அகதி முகாம்களாக மாற்றி வரு கின்றது.'' இவ்வாறு குற்றஞ்சாட்டியி ருக்கிறார் இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணா ரட்ன. கொழும்பு "நிப்பொன் ஹோட் டலில்' நேற்றுக் காலை இடம்பெற்ற ஊடக வியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ""நாடு தற்போது மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. குறிப் பாக வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள். வடக்கு கிழக்கை இலங்கை அரசு அகதி முகாம்களாக மாற்றி வ…

  5. யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நடந்து கொண்ட விதம் தவறானது! யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நடந்து கொண்ட விதம் தவறானது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். கறுப்பு உடையை அணிந்து கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொண்டது மட்டுமே மாணவர்களின் சாதனை எனவும் அவர் சாடியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வடமாகாண சபை மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்டன. அந்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் வாதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படாது பாதிக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டன. இந்…

  6. அரசாங்கத்திற்கு 7 நாட்கள் காலக்கெடு – தமிழ் தேசியக் கட்சிகள் அதிரடி முடிவு! அரசியலமைப்பின் ஊடாகவும், சட்டங்களின் ஏற்பாடுகளாகவும் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாதுள்ள அதிகாரப் பரவலாக்க விடயங்கள் அனைத்தையும் 7 நாட்களுக்குள் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும். அவ்வாறு செய்யத் தவறின் அரசுடனான பேச்சிலிருந்து வெளியேறுவோம் என தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்றைய(செவ்வாய்கிழமை) சர்வகட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கவுள்ளன. அரசுடனான இன்றைய சர்வகட்சிப் பேச்சுக்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் எவ்வாறான நிலைப்பாடுகளை எடுப்பது என்பது தொடர்பில் நேற்று மாலை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் கூடிப் பேச்சு நடத்தின. இந்தச் சந்திப்பில் இலங்…

  7. முள்ளிவாய்க்கால் படுகொலை யுத்தம் நடந்து 21 மாதங்கள் கடந்த நிலையில், முந்நாள் விடுதலைப் புலிப்போராளிகள் 5,000 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தத்தின் மூலம் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் விசுவாசத்திற்குரிய உறுப்பினர்கள் இவர்கள் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறிலங்காவுக்கான பிரதிநிதி நீல் பூனே (Neil Buhne) இவ்வாறு நேற்றுத் தெரிவித்தார். இவர்கள் அனைவரும் செஞ்சிலவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகியவற்றின் கண்காணிப்பு அப்பாற்பட்ட விதத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் சொன்னார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறிலங்காவுக்கான தலைமைப் பதவியின் இறுதி ந…

  8. இராணுவத் தளபதிகளை இலக்கு வைத்ததை மறந்து விட்டார் மகிந்த – சரத் பொன்சேகா தனது ஆட்சிக்காலத்தில் இராணுவத் தளபதிகளை தாம் இலக்கு வைத்ததை, மகிந்த ராஜபக்ச மறந்து விட்டார் என்று, சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “போர் வீரர்களை இந்த அரசாங்கம் இலக்கு வைப்பதாக மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டுகிறார். ஆனால், தனது ஆட்சிக்காலத்தில் இராணுவத் தளபதிகளை தாம் இலக்கு வைத்ததை, மகிந்த ராஜபக்ச மறந்து விட்டார். மற்றவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு முன்னர், முதலில் அவர் அதனைப் பின்பற்றுபவராக இருக்க வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார். http://www.puthinappalakai.net/2018/05/28/news/31103

  9. வெளிநாடுகளிலிருந்து அண்மைக் காலத்தில் 293 இலங்கையர்கள் நாடு கடத்தல் - பண்டார வன்னியன் றுநனநௌனயலஇ 13 னுநஉநஅடிநச 2006 14:09 வெளிநாடுகளிலிருந்து அண்மைக் காலத்தில் 293 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அரசியல் தஞ்சம் கோரியவர்கள், போலி விசாக்கள் மூலம் நாடுகளுக்குள் ஊடுருவியவர்கள், சட்டவிரோத மார்க்கங்கள் ஊடாக சென்றவர்கள், குறிப்பிட்ட நாடுகளின் சட்ட திட்டங்களை மீறியவர்கள் ஆகியோரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலிருந்து 57 பேரும் ஜப்பானிலிருந்து 50 பேரும் சிங்கப்பூரிலிருந்து 42 பேரும் ஏனையோர் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்தும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத…

    • 0 replies
    • 1.2k views
  10. ரீயூனியன்தீவில் கைதுசெய்யப்பட்ட 38 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். By RAJEEBAN 26 JAN, 2023 | 03:17 PM ரீயூனியன்தீவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த 38 சட்டவிரோத குடியேற்றவாசிகள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடல்வழியாக ரீயூனியன் தீவிற்கு செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் 14ம் திகதி கைதுசெய்யப்பட்டனர். டிசம்பர் முதலாம் திகதி நீர்கொழும்பு துறைமுகத்திலிருந்து மீன்பிடி படகொன்று ஐந்து பேருடன் புறப்பட்டதாகவும் இதன் பின்னர் 13 -14ம் திகதிகளில் புத்தளத்திலிருந்து 64 குடியேற்றவாசிகள் படகில் ஏற்றப்பட்டனர் எனவும தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து குறிப்பிட்ட படகு டியோகார்சியாவை நோக்கி பு…

  11. மகிந்தவின் பெயரிலான விமான சேவைக்கு அமைச்சரவை ஒப்புதல். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சமஸ்கிருத பெயரிலான "மிகின்" ஏர் விமான சேவைக்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இப்புதிய விமான சேவைக்கான தொடக்க முதலீடாக ரூ. 500 மில்லியனும் ஒட்டுமொத்த முதலீடாக ரூ. 1550 மில்லியனும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்த நிலையிலும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. www.puthinam.com

  12. யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் பேரணி ஆரம்பம்! “தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை” என்னும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிலைநிறுத்தக்கோரி, யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) இலங்கையின் சுதந்திரதினத்தை தமிழர்களுக்கான கரிநாளாகப் பிரகடனம் செய்து பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியில், பல்கலைகழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகள் , சிவில் சமூக பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2023/1323072

  13. நகைப்பிற்கிடமான இலங்கையின் நீதித்துறை பற்றி வெளிக்கொண்டு வருவது கட்டாய பணியாக இதுவரை வெளியாகிய ஏழு பாகங்களிலும் தொடர்ச்சியாக பட்டவர்த்தனமாக சொல்லி வந்தோம். இந்த வாரம்,அரசியற்கைதிகள் விவகாரமும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் என்ற சாரத்தில் விடையங்களை உற்று நோக்குவோம். அரசியற்கைதிகள் விவகாரமும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும்:- 2011ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் மகசின் சிறைச்சாலைக்கு சென்று எமது அரசியற்கைதிகளை பார்வையிட்டு அவர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார்கள். அப்போது அரசியற்கைதிகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பினிடம் சில விடயங்களை நிறைவேற்றுமாறு அதிக சிரத்தையுடன் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அவையாவன ; · வழக்குகளிற்…

  14. காணாமல் ஆக்கப்பட்ட 500பேரின் பட்டியலை ஐ.நா வெளியிட்டது ! June 17, 2018 விசாரணையின்றி காத்திருக்கச் சொல்வது நியாயமற்றது! இலங்கை யுத்தத்தின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 500 பேர் பற்றிய பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குழு வெளியிட்டுள்ளது. இப் பட்டியலில் குறிப்பிட்ட காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் தொடர்பில் இலங்கை அரசு, விரைவான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், அவர்களைக் கண்டுபிடித்தல் மற்றும் பாதுகாத்தலை ஐநா வலியுறுத்துவதாக காணாமலாக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் குழுவின் தலைவர் சுயெலா ஜனினா கூறியுள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஒவ்வொரு நொடியும் கலக்கத்தில் இருப்பதாகவும் அவர்களது நிலமையை கரு…

  15. நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கைக்கு பாதகமானதாக அமையக் கூடும் : 20 மார்ச் 2011 ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை இலங்கைக்கு பாதகமானதாக அமையக் கூடுமென ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரியொருவர் தெரிவித்துள்ளார். நிபுணர் குழுவின் அறிக்கை அநேகமாக பூர்த்தியடைந்துள்ளதாகவும், இலங்கைக்கு எதிராக கடுமையான கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நான்காம் கட்ட ஈழ யுத்தம் தொடர்பில் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென நிபுணர்கள் குழு அநேகமாக வலியுறுத்தக் கூடுமென அறிவித்துள்ளார். இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். நிபுணர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையை பகிரங…

  16. மாங்குளத்தில் மூவர் கைது- முன்னாள் போராளிகள் எனத் தகவல்!! முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சற்றுமுன்னர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அறியமுடிகிறது. அவர்கள் முன்னாள் போராளிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://newuthayan.com/story/16/மாங்குளத்தில்-மூவர்-கைது-முன்னாள்-போராளிகள்-எனத்-தகவல்.html

  17. வெள்ளி 12-01-2007 16:45 மணி தமிழீழம் [மயூரன்]{பதிவ} பாலித கோகன்ன வெளிவிவகார அமைச்சின் செயலாளராக நியமனம். கலாநிதி பாலித கோகன்ன இன்று வெள்ளிகிழமை ஜனாதிபதி ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அரச சமாதான செயலகத்தின் பணிப்பாளரான கலாநிதி பாலித கோகன்ன தொடர்ந்து சமாதான செயலக பணிப்பாளராக கடமையாற்றுவதோடு அதெவேளை வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றுவாரேன ஜனாதிபதியின் பேச்சாளர் சந்திரப்பால லியனகே தெரிவித்தார்

  18. சிறிலங்கா கடற்படைத் தளம் அம்பாந்தோட்டைக்கு மாற்றம் சிறிலங்கா கடற்படையின் தென்பிராந்திய தலைமையகம், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு இடம் மாற்றப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலகம் அறிவித்துள்ளது. “அம்பாந்தோட்டை துறைமுகத்தை எந்தவொரு இராணுவத் தேவைக்கும் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று சீனத் தலைவர்களுடனான பேச்சுக்களின் போது, சிறிலங்கா பிரதமர் தெளிவாக கூறியுள்ளார். சிறிலங்கா கடற்படை, அதன் தென்பிராந்திய தலைமையகத்தை அம்பாந்தோட்டைக்கு மாற்றுகிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு சிறிலங்கா கடற்படையிடமே இருக்கும். துறைமுகத்தின் பாதுகாப்புக் குறித்து அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அம்பாந்தோட்டையை இராணுவத் தேவ…

  19. (நா.தனுஜா) பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு உதவும் நோக்கில் சர்வதேச நிதியியல் ஒத்துழைப்பானது நாட்டின் 3 முன்னணி வங்கிகளுக்கு மாற்று நாணய வசதியின் கீழ் 400 மில்லியன் டொலர்களைக் கடனாக வழங்கியுள்ளது. நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், இலங்கையில் 30 சதவீதத்துக்கும் அதிகமான வெளிநாட்டுப்பணவனுப்பல்கள் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளைக் கையாளும் கொமர்ஷல் வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகிய 3 முன்னணி வங்கிகளுக்கு இந்த கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வுதவியானது தனியார் துறையினருக்கான அவசர நிதியுதவிகளுக்கும், நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அத்தியாவசியத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்…

  20. வாகரை ஆஸ்பத்திரிப் பகுதி மீது தாக்குதல் நடத்தப்படுவதற்குக் கண்டனம் செஞ்சிலுவை சர்வதேசக் குழு தலைமையகம் அறிக்கை வாகரைப் பிரதேசத்தில் ஆயிரக் கணக் கான பொது மக்கள் தங்கியுள்ள ஆஸ்பத்தி ரிப் பகுதி மீது நடத்தப்படும் எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு கண்டனமும் அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளது. ஆஸ்பத்திரி பாதுகாப்புப் பிரதேசம் என்ற அந்தஸ்துக் கொண்டது என்பதையும் அதனை அண்டிய பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ள பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நிய தியையும் மீறக் கூடாது என்று இரண்டு தரப்புகளையும் செஞ்சிலுவைக்குழு கேட்டுள்ளது. * சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பிரகாரம் ஆஸ்பத்திரியும…

  21. சனிக்கிழமை , ஏப்ரல் 2, 2011 யாழ். சாவகச்சேரி வாரிவானேஸ்வரர் ஆலயக் திருக்குளத்திலிருந்து பன்னிரண்டு இந்து விக்கிரகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளதாவது, சாவகச்சேரி நீதிமன்ற வளவில் புராதன ஆலயத்திற்குரிய கட்டிட அழிபாடுகள் கிடைத்ததைத் தொடர்ந்து அவ் ஆலயம் பற்றிய பல தகவல்கள் அவ்ஊர் மக்களால் தினமும் வழங்கப்பட்டுவருகின்றன. அவற்றுள் தற்போதைய வாரிவானேஸ்வரர் ஆலய முகாமையாளரால் தரப்பட்ட தகவல்கள் எமது ஆய்வை மேலும் முன்னெடுத்துச் செல்ல தூண்டுதலாக உள்ளன. அவரது தகவல்களின்படி நகரத்திலுள்ள நீதிமன்றம், சந்தை மற்றும் அதன் சுற்றாடல்களில் கிடைத்த விக்கிரகங்களே ஆரம்ப காலங்களில் தற்போதைய வாரிவானேஸ்வரர் ஆல…

  22. ரஞ்சன் ராமநாயக்க துரோகம் இழைத்துள்ளார்- முன்னாள் அமைச்சா் விஜயகலா! ரஞ்சன் ராமநாயக்க எனக்கு செய்தது துரோகம் விஜயகலா மகேஸ்வரன் தனியார் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்சியில் தெரிவிப்பு ரஞ்சன் ராமநாயக்க ஊடக சந்திப்பை நடத்திக்கொண்டு உங்களுடன் (விஜயகலா) தொலைபேசியில் பேசும் போது ஊடகங்களுக்கு நேரடியாக செய்தி வழங்கிக்கொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா எனக் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது, பதில்-- அவர் ஊடகங்களுக்கு வழங்கவேண்டிய தேவையில்லை. நான் இன்று பிரச்சினைகள் முடிந்த பின் தொலைக்காட்சி க்கு நேரடியாக வந்துள்ளேன் ஊடகங்கள் ஊடாகவே எமது பிரச்சினையை வெளியில் கொண்டு வரமுடிந்திருக்கு அதற்கு ரஞ்சன் ராமநாயக்க ஊடகத்திற்கு கொண்டுவ…

    • 4 replies
    • 625 views
  23. கிழக்கு மாகாணத்தில் தொப்பிகல வரையிலான பகுதிகளைக் கைப்பற்றும் வரை இராணுவ நடவடிக்கை தொடரும் என்று கிழக்கு மாகாண இராணுவ கட்ட ளைத் தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புலிகளால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளில் 20 சதவீதமானவற்றைப் படை யினர் மீட்டுள்ளனர். மட்டக்களப்பு திருகோணமலை நெடுஞ்சாலை மீளத்திறக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்காளர் பதிவேடுகளின் அடிப்படை யிலேயே மக்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். வாகரைப் பகுதியில் புலிகளால் கைவிடப்பட்ட முகாம் ஒன்றில…

  24. No Fire Zone: The Killing Fields of Sri Lanka was one of 5 documentaries to win Britdoc Impact award on Friday. As a consequence of winning this award, No Fire Zone has been nominated for “Netflix High 5” award which would be worth $5000 for the campaign. You have to be on twitter to vote. Go to: http://www.britdocimpactaward.org/films/nofirezone and hit the Netflix Hi 5 button (half way down on the right hand side). You can also send a tweet containing these words: ‪#‎NetflixHi5‬ to @nofirezonemovie http://britdocimpactaward.org/ via @C4BRITDOC Please add a few words about why No Fire Zone should win. https://m.facebook.com/tamilrefugeecounciloz/ph…

  25. சம்பந்தனின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிப்போம் - ராஜித (எம்.எம்.மின்ஹாஜ்) மாகாண சபை தேர்­த­லுக்கு முன்னர் புதிய அர­சி­ய­ல­மைப்பு அவ­சியம் என்ற எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்­தனின் கோரிக்­கையை நிறை­வேற்ற அர­சாங்கம் முயற்­சிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு அவசியம் என எதிர்க்கட்சி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.