Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரி மொழிக்கொள்கையை மீறி செயற்பட்டுள்ளார். குறித்த அதிகாரி தனது வாகனத்தில் சிங்கள மொழியில் எழுதிய அறிவித்தல் பலகை ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளார் என்பது நோக்கத்தக்கது. http://globaltamilnews.net/2019/112812/

  2. மாலியில் பணியாற்ற மறுக்கும் சிறிலங்கா படையினர் – சமாதானப்படுத்த விரைந்த உயர் அதிகாரிகள் மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா படையினர், தாக்குதலுக்கு இலக்காகிய பின்னர், குழப்பமடைந்துள்ளனர் என்றும், இதனால் இராணுவத் தொடரணிக்குப் பாதுகாப்பு வழங்கும் பணி இரண்டு வாரங்களுக்கு மேலாக முடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் 25ஆம் நாள் மாலியின் மத்திய பகுதியில், ஐ.நா வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தின் துருப்புக்காவி கவசவாகனம் ஒன்று கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகியது. இந்த தாக்குதலில், துருப்புக்காவி பலத்த சேதமடைந்ததுடன், அதில் இருந்த ஒரு மேஜரும், ஒரு சார்ஜன்ட்டும் என இரண்டு …

  3. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த ஐ.நா மாநாட்டில் சிறிலங்கா விவகாரம் குறித்தும் ஆய்வு பலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் மாநாட்டில், சிறிலங்கா குறித்தும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் 117 ஆவது மெர்வு பொஸ்னியா -ஹெர்சகோவினாவில், நாளை ஆரம்பமாகி, வரும் 15ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் 37 நாடுகளின், 760 காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன. இந்த 37 நாடுகளில் சிறிலங்காவும் உள்ளடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து சுதந்திர மனித உரிமை நிபுணர்களைக் கொண்ட குழு, காணாமல…

  4. திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் வியாபார புறக்கணிப்பு போராட்டம் February 9, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நல்லூர் பிரதேசசபையின் அடாவடியை கண்டித்து இன்று திருநெல்வேலி சந்தையில் வியாபாரிகள் வியாபார புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை தொடக்கம் போராட்டம் நடாத்தி வருகின்றனர். திருநெல்வேலி பொது சந்தையில் நடைபாதைக்கு இடையூறாக ஒரு வியாபாரி நடந்து கொண்டார் என்பதற்காக அவருடைய வியாபார உரிமத்தை தற்காலிகமாக தடுத்துள்ள நல்லூர் பிரதேசபை, அவர் மீது விசாரணை ஒன்றிணையும் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் குறித்த வியாபாரி மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அநியாயமானது என்பதுடன், நல்லூர் பிரதேசசபை அடாவடியாக நடந்து கொள்வதாகவும் குற்றஞ்சாட்டி திருநெல்வேலி சந்தையில் …

    • 2 replies
    • 396 views
  5. தமிழர் பிரச்சினைகளை சர்வதேசத்திடம் எடுத்துச்சொல்ல ஐ.தே.க இருக்கின்றது: விஜயகலா தமிழர்களுடைய பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துச்செல்வதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்பதை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நாங்கள் வடக்கு- கிழக்கில் ஒற்றுமையாக வாழவேண்டும். மேலும் இம்மண்ணிற்காக போராடியவர்கள் பலர், தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் பொருட்டு ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்திற்கு பூரண ஆதரவினை வழங்கி வருகின்ற…

  6. MY3+MR = புதிய கூட்டணி! February 9, 2019 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரின் தலமையில் புதிய தேசிய கூட்டணி உருவாகும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். புதிய கூட்டணி அமைப்பது தொடர்பிலான முதற்கட்ட நடவடிக்கைகள் சிறப்பாக நிறைவுபெற்றுள்ளதாக தெரிவித்துள்ள வாசுதேவ, புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய விடயங்கள் குறித்து, அறிக்கை தயாரிப்பதற்கு குழுவொன்று அமைக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மைத்திரி-மகிந்த தலைமையிலான கூட்டணி தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென வாசுதேவ நாணயக்கார நம்பிக…

  7. சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் 15ம் திகதி இலங்கை வருகின்றனர் February 10, 2019 கடனுதவி தொடர்பிலான கலந்துரையாடலின் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளனர். கடந்த ஒக்டோபர் 26ம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை காரணமாக நாணய நிதியம் வழங்கவிருந்த ஆயிரத்து 500 மில்லியன் டொலர் நிதியின் ஐந்தாவது தவணை கைவிடப்பட்டிருந்தது. ஆறு தவணைகளாக வழங்கப்படவிருந்த கடன் தொகையில் நான்கு தவணைகளுக்கான 760 மில்லியன் டொலர் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. ஐந்தாவது தவணைக்குரிய நிதியை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் கடந்த ஒக்டோபர் மாதம் 29ம் திகதி இடம்பெறவிருந்தது. எனினும் நாட்டில் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசாங்கம் ஒன்று இல்லாமை காரணமாக…

  8. சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கைது February 10, 2019 இலங்கை கிழக்கு கடல் எல்லைப்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் ஏழு பேரை கடற்படையினரினால் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புல்மோட்டை, கோக்குதுடுவாய் பகுதிக்கு கிழக்கு கடலில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இவர்களை கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் மீன்பிடி படகொன்றும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படை கப்பல் பட்டறைக்கு கொண்டுசெல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படை…

  9. கோணாவில் மாணவன் விவகாரம்- பொலிஸார் தில்லு முல்லு!! பதிவேற்றிய காலம்: Feb 8, 2019 கிளி­நொச்சி மாவட்­டத்­தில் கஞ்சா மற்­றும் கசிப்­புக் கடத்­தல் தொடர்­பில் தக­வல் வழங்­கிய பாட­சாலை மாண­வன் மீதான தாக்­கு­தல் வழக்கை பொலி­ஸார் திசை திருப்­பி­யமை அம்­ப­ல­மா­கி­யுள்­ளது. வன்­னிப் பிராந்­தி­யப் பொலிஸ்மா அதி­பர் நேற்­று­முன்­தி­னம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­க­ளின் போதே இந்­தச் சம்­ப­வம் வெளிச்­சத்­துக்கு வந்­த­துள்­ளது. இத­னை­ய­டுத்து கிளி­நொச்­சிப் பொலிஸ் நிலை­யத்­தில் வன்­னிப் பிராந்­திய பிர­திப் பொலிஸ்மா அதி­ப­ரின் பணிப்­புக்கு அமை­வாக மாண­வ­னின் தந்­தை­யால் புதிய முறைப்­பாடு நேற்­று­முன்­தி­னம் இரவு பதி­யப்­பட்­டுள்­ளது. அரச தலை­வ­ரால் நடை­மு­றைப்­ப­டுத்­த…

  10. மகிந்தவுக்கு வாழ்த்துக் கூறி அதிர்ச்சி கொடுத்த சந்திரிகா இந்தியாவின் குடியரசு நாளை முன்னிட்டு கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில்- அரசியல் எதிரிகளாக இருக்கும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர்கள் சந்திரிகா குமாரதுங்கவும், மகிந்த ராஜபக்சவும் ஒரிரு வார்த்தைகள் பேசிக் கொண்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 26ஆம் நாள், கொழும்பில் கலை நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் சந்திரிகா குமாரதுங்கவும், மகிந்த ராஜபக்சவும் பங்கேற்றிருந்தனர். அவர்கள் இருவரையும், மங்கள விளக்கேற்றுவதற்கு இந்தியத் தூதுவர் அழைப்பு விடுத்தார். நீண்டநாட்களாகப் பேசிக் கொள்ளாத இருவரும், அந்த தருணத்தில் அருகருகே நின்றிருந்த…

  11. கோத்தாவை அமெரிக்கா தடுக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் சிறிசேன அமெரிக்க குடியுரிமையை கோத்தாபய ராஜபக்ச கைவிடும் முயற்சி வெற்றியளிக்காது என்ற நம்பிக்கையிலேயே, அதிபர் மைத்திரிபால சிறிசேன தாம் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிர்பார்ப்பில் உள்ளார் என்று கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையைத் துறக்கும் முயற்சி வெற்றியளிக்காது என்று அதிபர் சிறிசேன உள்ளிட்ட சிலர் நம்புகின்றனர். இது அதிபர் வேட்பாளராக மீண்டும் சிறிசேன போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும் என்றும் அவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஐதேகவின் காதுகளுக்கு எட்டிய வதந்திகளின் அடிப்படைய…

  12. முல்லைத்தீவு மாவட்டத்தின் 59 ஆவது இராணுவ படை கட்டளை தலைமையாக இராணுவ அச்சுறுத்தல் காரணமாக தமது போராட்ட இடத்தை தரப்பாள் கொண்டு மறைத்து கேப்பாபுலவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேப்பாபுலவு மக்களது பூர்விக வாழ்விடம் கோரிய போராட்டமானது இரண்டுவருடகாலமாக இடம்பெற்றுவருகிறது. கடந்த 2017 பங்குனி 1 ஆம் திகதி ஆரம்பித்த இந்த தொடர் போராட்டம் வருகிற பங்குனி 1 ஆம் திகதி இரண்டு வருடத்தை நிறைவு செய்து 3 ஆவது வருடத்தை எட்டுகிறது இதுவரை பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து தமது சொந்தநிலம் மீட்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்ற நிலைப்பாட்டுடன் போராடிவரும் மக்களை பொலிசார் இராணுவத்தினர் பல்வேறு வகையில் துன்புறுத்தி வருகின்றனர். இராணுவத்துக்…

  13. கொலைகார ராஜபக்ச கும்பல் தமிழருக்குத் தீர்வைத் தராது அடித்­துக் கூறு­கின்­றார் பொன்­சேகா பதிவேற்றிய காலம்: Feb 9, 2019 தமிழ் மக்­க­ளு­டன் நேர­டி­யா­கப் பேசி அர­சி­யல் தீர்­வுத் திட்­டத்தை வழங்­கு­வேன் என்று முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச கூறி­யி­ருப்­பதை நினைக்­கும்­போது சிரிப்­புத்­தான் வரு­கின்­றது. கொலை­கார ராஜ­பக்ச கும்­பல் தமிழ் மக்­க­ளுக்கு ஒரு­போ­தும் அர­சி­யல் தீர்வை வழங்க முன்­வ­ராது. கடந்­த­கால அனு­ப­வங்­க­ளில் இருந்து தமிழ் மக்­க­ளும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரும் இதை உணர்ந்­து விட்­டார்­கள். இவ்­வாறு முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பீல்ட் மார்­சல் சரத் பொன்­சேகா தெரி­…

  14. தண்டனையிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர்! பதிவேற்றிய காலம்: Feb 9, 2019 பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் கடூழியச் சிறைத்தண்டனை யிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டார். அருக்கு விதிக்கப்பட்டிருந்த 6 மாதங்கள் கடூழியச் சிறைத் தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார். நீதிமன்றை அவமதித்த குற்றத்துக்காக, ஹோமாகம நீதிவான் மன்று ஞானசார தேரருக்குக் கடந்த வருடம் விதித்த தண்டனையை நீக்குமாறுகோரி ஹோமாகம மேல் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அது மீதான விசாரணையின் பின்னர் மேற்குறித்த உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடவை ஹோமாகம…

  15. வட மாகாண கல்வித்துறையில் பெண்களுக்கெதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை விசாரிக்க குழு February 9, 2019 வட மாகாணத்தின் கல்வித்துறையில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது தொடர்பிலும் பால்நிலை சமத்துவம் இல்லாமை தொடர்பிலும் ஆளுநரின் கவனத்திற்கு அதிகளவான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருவதையடுத்து இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதற்கு குறைகேள் விசாரணைக் குழுவொன்றினை ஸ்தாபிக்க ஆளுநர் சுரேன் ராகவன் தீர்மானித்துள்ளார். மூன்று பேரடங்கிய இந்த விசாரணைக் குழுவில் இரு பெண்கள் உள்ளடக்க…

  16. February 9, 2019 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்தியாவின் பெங்களுரிற்கு சென்றுள்ள நிலையில் அவருக்கெதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களுரில் சென்னையை தலைமையிடமாக கொண்ட, ஆங்கில நாளிதழ் ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றபோதே கர்நாடகாவை சேர்ந்த தமிழ் அமைப்புக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கோ பக் ராஜபக்ச என்று கோசங்களை எழுப்பி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். இப் போராட்டத்தில் மே 17 இயக்கம், இளந்தமிழகம் இயக்கம் உள்ளிட்…

  17. (லியோ நிரோஷ தர்ஷன்) காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்திய நிதியுதவி கீழ் ஆரம்பிக்கப்பட உள்ள இந்த திட்டத்திற்கு 45.27 மில்லியன் அமெரிக்க டொலர்களை டெல்லி ஒதுக்கியுள்ளதுடன் மூன்று ஆண்டுகளுக்குள் திட்டம் பூர்த்தியடையும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க , இந்திய உயர்ஸ்தாணிகர் மற்றும் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வர். http://www.virakesari.lk/article/49669

  18. February 9, 2019 தமிழ் தேசிய எழுச்சி நாட்களில் யாழ்.மாநகர சபையின் எல்லைக்குள் களியாட்டம் உள்ளிட்ட கேளிக்கை விழாக்கள் நடத்துவதற்கு தடை விதிக்கும் பிரேரணை யாழ்ப்பாண மாநகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம் நடைபெற்றபோது மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ் தேசிய எழுச்சி நாட்கள் மற்றும் நினைவேந்தல் நாட்களில் களியாட்ட நிகழ்வுகள் மற்றும் கேளிக்கை விழாக்களை நடத்துவதை தடை செய்ய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணின் உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தார். …

  19. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாதிரி கிராம திட்டத்திற்கமைவாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தெரிவு செய்யப்பட்ட மூன்று கிராமங்களில் புதிய வீட்டுத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (9) காலை இடம் பெற்றது. தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மன்னார் மாவட்ட முகாமையாளர் ஜே.நோயல் ஜெயச்சந்திரன் தலைமையில் குறித்த வீட்டுத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வக்கு -எனினும் அழைக்கப்பட்ட அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேசச் செயலா…

  20. February 8, 2019 முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தீர்மானமெடுக்கும் முக்கிய கலந்துரையாடல் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தலைமையில் நேற்று வியாழக்கிழமை (07.02.19) பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது. ஷரீஆ சட்டத்துக்கு முரணாகாத வகையில், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டது. இதேவேளை, நாடு முழுவதிலும் காணப்படும் காதி நீதிமன்றங்களை ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டுவந்து, திருமணம் சம்பந்தமான பிரச்சினைகளை இலகுவாக கையாள்வதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவது…

  21. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சனைகள் , இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுத்து நடவடிக்கைகளுக்கு இனவாதிகளின் செயற்பாடுகள் பின்னடைவுகளை ஏற்படுத்தினாலும் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தீர்வை பெற்று தருவார் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.மானிப்பாய் பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , …

  22. பாதுகாப்பற்ற பாழடைந்த கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிருக்குப் போரடிக் கொண்டிருந்த பசுமாட்டை அந்தப் பகுதி இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்டனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதான சந்திக்கு அண்மையிலுள்ள பகுதியில் பாதுகாப்பற்ற பாழடைந்த கிணற்றுக்குள் பசுமாடு தவறி வீழ்ந்துள்ளது. வெளியே வருவதற்கு பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட போதும் பசுவால் வெளியே வரமுடியவில்லை இதையடுத்து அப்பகுதி மக்கள் பிரதேச சபையினருக்கு தகவல் வழங்கினர். எனினும் பிரதேச சபையினர் குறித்த நேரத்துக்கு சமூகமளிக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் சிலர் உரிய முறையில் செயற்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிர…

  23. தமிழ் மக்களின் செல்வாக்கை கூட்டமைப்பு இழக்கவில்லை – சரவணபவன் தமிழ் மக்களின் செல்வாக்கை கூட்டமைப்பு இழக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். அத்துடன் அரசியல் தெரியாத விக்னேஸ்வரனை முதல்வராக்கியமையே கூட்டமைப்பின் முதல் பிழை என அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த அவர், அந்நாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் 100 வீதம் எங்கள் முடிவுகளை சரியாகச் செய்துள்ளோம். ஆனால், அரசு வழங்க வேண்டியவற்றை வழங்காமல் காலத்தை இழுத்தடிக்கின்றது. 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் மாற்றுக் கட்சிகளை …

  24. (எம்.எப்.எம்.பஸீர்) நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் கடூழிய சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொது பல சேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர், காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்யா எக்னெலிகொடவை நீதிமன்றில் வைத்து அச்சுறுத்திய விவகாரத்தில் குற்றவாளியே என ஹோமாகம மேல் நீதிமன்றம் இன்று அரிவித்தது. இது தொடர்பில் ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் வழ்னக்கிய தீர்ப்பை உறுதி செய்த மேல் நீதிமன்றம், நீதிவான் நீதிமன்றம் வழ்னக்கிய 6 மாதா கால சிரைத் தண்டனையை மட்டும் 5 வருடங்களுக்கு ஒத்தி வைத்தது. ஞானசார தேரர், நீதிவான் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல்ச் எய்த மேன் முறையீட்டின் மீது இன…

    • 7 replies
    • 986 views
  25. February 8, 2019 கனடா நாட்டுக்கு அனுப்பிவைப்பதாக 35 லட்சம் ரூபா பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றினார் – நம்பிக்கை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிருஸ்தவ மத போதகரை விளக்கமறியில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் கோயில் வீதியில் அமைந்துள்ள கிருஸ்தவ ஆலயத்தில் (கத்தோலிக்கம் அல்லாத) போதகராக கடமையாற்றுபவர், குருநகரைச் சேர்ந்த நபர் ஒருவரை கனடாவுக்கு அனுப்பிவைப்பதாகக் கூறியுள்ளார். கனடாவுக்கு அனுப்பிவைப்பதற்கு அந்த நபரிடம் 45 லட்சம் ரூபா பணம் வேண்டும் என்றும் போதகர் தெரிவித்துள்ளார். அதன்படி முதல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.