ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
“ஐநாவின் உதவி தேவையில்லை”- ஜனாதிபதி சிறிசேன ஐநா செயலாளரிடம் கூறினாரா? கடந்த ஒக்டோபர் 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவிநீக்கம் செய்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்து எடுத்த நடவடிக்கையை சிங்கள வாராந்தப் பத்திரிகைகள் வரவேற்றுள்ளன. இலங்கையிலுள்ள சிங்கள வாராந்தப் பத்திரிகைகள் சனிக்கிழமையே வெளியாகிவிடுவது வழமை . அந்த வகையில் பெரும்பாலான பத்திரிகைகள் ஜனாதிபதியின் நடவடிக்கைகளை ஆதரித்து கருத்துவெளியிட்டுள்ளன. இதனைத்தவிர வெளிநாட்டு சக்திகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளன. சிங்கள பௌத்த இனவாதப் பத்திரிகையாக பார்க்கப்படும் திவயின பத்திரிகையின் வார இறுதி தலைப…
-
- 0 replies
- 421 views
-
-
ஜனாதிபதியின் செயற்பாடு சட்டவிரோதமானது – சுமந்திரன்! நீதியை காக்கும் பொறுப்பு கருவுக்கு – ஹக்கீம்… November 2, 2018 சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட பிரதமர் நியமனத்தை சட்டபூர்வமாக்குவதற்காக பாராளுமன்றினை கூட்டாமல் காலம் கடத்துவதனூடாகத்தான் இன்றும் சட்டபூர்வமற்ற ஒரு பிரதமர் தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கின்றார் என்பது தான் யதார்த்தம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்றையதினம் நடைபெற்ற அனைத்தக் கட்சித் தலைவர்களுக்கும் சபாநாயகருக்குமிடையிலான கலந்துரையாடலின் பின்னர் பிபிசிக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள அராஜக நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் …
-
- 3 replies
- 586 views
-
-
அடுத்த நகர்வுகள் தொடர்பாக மஹிந்தவுக்கு ஆலோசனை: பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய ஐந்து ஆலோசனைகளை அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரிவித்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் இடையில் நேற்று (வியாழக்கிழமை) விசேட சந்திப்பொன்ற நடைபெற்றுள்ளது. இதன்போதே அவர்கள் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அந்தவகையில் அவர்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளாவது, “அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது கைவிடப்பட வேண்டும். மேலும் மத்திய வங்கி நிதி மோசடி தொடர்பில் மக்களுக்கு தெரியப்படுத்தி, அதனுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். …
-
- 2 replies
- 716 views
-
-
பலம்பெறுகின்றனவா மஹிந்த – மைத்திரி கரங்கள்….! புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வெள்ளிக்கிழமை நியமித்ததில் இருந்து நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பல்வேறு பட்ட சர்ச்சைகளும் நிலவிவருகின்றது. இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) நியமிக்கப்பட்ட 3 ஆவது புதிய அமைச்சரவையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பிராந்திய அபிவிருத்தி (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அதேவேளை கலாசார அலுவல்கள், உள்நாட்டலுவல்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக S.B. நாவீன்ன பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சி ஒரு…
-
- 3 replies
- 769 views
-
-
மஹிந்தவின் பிரதமர் பதவியை அகற்ற அமெரிக்கா சதித்திட்டம்: தயான் ஜயதிலக்க இலங்கையின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவியிலிருந்து அகற்றவதற்கு அமெரிக்க பல சதித்திட்டங்களை மேற்கொண்டு வருவதாக இலங்கையின் ரஷ்யாவிற்கான தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. ரஷ்யா- மொஸ்கோவில் இருந்து மின்னஞ்சல் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஊடாக மஹிந்தவிடம் குறித்த மின்னஞ்சலை ஒப்படைக்கும் விதமாக அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்தவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதித்திட்டத்தை அமெரிக்கா, கொழும்பிலுள்ள தனது தூதுவரத்தின் ஊடாக மேற்கொண்டு வருவதாக அவர் அந்த மின்னஞ்சலில் சுட்டிக…
-
- 3 replies
- 998 views
-
-
மஹிந்தவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை சபாநாயகரிடம் கையளித்துள்ளது. குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியல்ல கையெழுத்திட்டு சபாநாயகரிடம் இன்று(வெள்ளிக்கிழமை) கையளித்துள்ளார். நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் போது குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமென சபாநாயகர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் மீண்டும் கூடும் தினம் குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்து…
-
- 1 reply
- 396 views
-
-
சட்டத்திற்கு அமைவாகவே பிரதமர் நியமிக்கப்பட வேண்டும் – சம்பந்தன் சட்டத்திற்கு அமைவாகவே பிரதமர் நியமிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கட்சி தலைவர்களுடனான கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடாளுமன்றத்தின் அதியுயர்தன்மையை உறுதிபடுத்த வேண்டியது கட்டாயமாகும். பழைய பிரதமரை பதவியில் இருந்து நீக்கியமை அரசியல் அமைப்புக்கு முரணான செயல். சட்டத்திற்கு அமைவாகவே பிரதமர் நியமிக்கப்பட வேண்டும். அரசியல் அமைப்பு முறையாக பேணபடவேண்டியது அவசியமாகும். ஆகவே நாடாளுமன்றத்தை வ…
-
- 0 replies
- 317 views
-
-
புதிய பிரதமர் நியமனத்திற்கு இந்தியா எதிர்ப்புத்தெரிவிக்காது : நாமல்! மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கு இந்தியா எதிர்ப்புத்தெரிவிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு உள்ள அதிகாரத்தின் மூலமே புதிய பிரதமர் நியமிக்கப்பட்டகாகவும் இதில் ஆட்சிக்கவிழ்ப்பு எதுவும் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டார். இன்று வெள்ளிக்கிழமை NDTV க்கு வழங்கிய விசேடசெவ்வியில் மேற்கண்டவாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கூறியுள்ளார். இதன் போது குறித்த ஊடகவியலாளர், புதிய பிரதமர் நியமனத்தில் சீனா செயற்படுவதாக கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு பதிலித்த அவர்; வ…
-
- 0 replies
- 394 views
-
-
மைத்திரியுடன் ஐ.நா.செயலாளர் தொலைபேசியில் உரையாடியதாக ஐ.தே.க. உறுப்பினர் ஹர்சா டி சில்வா கூறுகின்றார் நாடாளுமன்றம் எதிர்வரும் 7 ஆம் திகதி கூடும் என சபாநாயகர் கருஜயசூரிய அறிவிப்பு இலங்கையின் அரசியல் நெருக்கடி உச்சத்தை அடைந்திருக்கின்ற நிலையில் நாடாளுமன்றத்தை எதிர்வரும் 7ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவெடுத்திருப்பதை தனக்கு அறிவித்ததாக இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் மாநாட்டில் உiயாற்றிய போதே சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த வெள்ளிக…
-
- 0 replies
- 378 views
-
-
இன்றும் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு புதிய அமைச்சரவைக்கான புதிய அமைச்சர்கள் பதவியேற்று வரும் நிலையில் இன்றும் சில புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இன்று 02 அமைச்சரவை அமைச்சர்கள், 05 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 06 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :- அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 01. துமிந்த திசாநாயக்க - நீர்ப்பாசனம், நீர் வளங்கல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் 02. தயாசிறி ஜயசேகர - திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சர் இராஜாங்க அமைச்சர்கள் …
-
- 3 replies
- 623 views
-
-
இலங்கை தனது துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது- அமெரிக்கா இலங்கை தனது சொந்த துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது என அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் தெரிவித்துள்ளார். சீனாவுடான உடன்படிக்கை காரணமாகவே இலங்கை தனது துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இலங்கை சீனாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கை குறித்தே ஜேம்ஸ் மட்டிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் சமாதானத்திற்கான நிலையத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். சீனா கடனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றது என்ற கரிசனை நாடுகள் மத்தியில் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.சில நாடுகளால்…
-
- 11 replies
- 1.7k views
-
-
"அபிவிருத்தியே பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் சுபிட்சத்தை ஏற்படுத்தும்" - ரெஜினோல்ட் குரே கடந்த ஐந்து வருடங்களாக வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக, அமைச்சர்களாக இருந்தவர்கள் அடையாளம் வேண்டும் அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே பேசி வந்தார்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபிவிருத்தியை கொண்டு வருவதில் அக்கறை கொள்ளவில்லை எனத் தெரிவித்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபிவிருத்தி கொண்டுவர முயலவேண்டும் அப்போது மக்களின் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் எனவும் குறிப்பிட்டார். கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தா வித்தியாலயத்தில் இன்று காலை நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார…
-
- 9 replies
- 766 views
-
-
கட்சி மாற 48 கோடி ரூபாய் ! – சபாநாயகரிடம் முறைப்பாடு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்க தரப்பிற்கு மாறுவதற்காக 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (48 கோடி இலங்கை ரூபாய்) பேரம் பேசப்பட்டதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளதாக ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த பேரம் பேசும் நடவடிக்கை தொடர்பில் தான் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளார். பிரதமர் மாற்றம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படு…
-
- 2 replies
- 1k views
-
-
ஜிஎஸ்பி பிளஸ் பறிபோகலாம் ஐரோப்பிய ஓன்றியம் எச்சரிக்கை இலங்கை மனித உரிமைகள் தனது வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கினால் ஜிஎஸ்டி பிளஸ் வரிச்சலுகை நிறுத்துவது குறித்து சிந்திக்கவேண்டி வரும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் சில வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே ஜிஎஸ்பி வரிச்சலுகையை பெற்றது என தெரிவித்துள்ள இலங்கைக்;கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டுங் லாய் மார்கியு இந்த அர்ப்பணிப்புகளை நிறைவேற்றாவிட்டால் நாங்கள் வரிச்சலுகையை நிறுத்துவது குறித்து சிந்திக்கவேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார் என ரொய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது. மகிந்த ராஜபக்சவின் மீள் …
-
- 0 replies
- 328 views
-
-
பொது நூலகக்காணியை இராணுவத்தினர் பிரதேச சபை நிர்வாகத்திடம் கையளிப்பு கிளிநொச்சியில் நீண்டகாலமாக இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த கரைச்சிப்பிரதேச சபையினுடைய பொதுநூலகக்காணி இன்று இராணுவத்தினரால் பிரதேச சபை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபைக்குச்சொந்தமான பொதுநூலகக்காணி கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது. இதனால் கரைச்சிப்பிரதேச சபையின் பொதுநூலகம் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பல்வேறு இடநெருக்கடிகளுக்கு மத்தியில் மாற்றிடத்தில் இயங்கி வருகின்றது. மேற்படி பொதுநூலகக்காணியை விடுவிக்க வேண்டுமென கரைச்சிப்பிரதேச சபையின் அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது தொடர்பான தீர்மானத்தின் பிரதிகள் …
-
- 0 replies
- 169 views
-
-
கூட்டு ஒப்பந்தம் – பேச்சுவார்த்தையிலிருந்து ஆறுமுகன் தொண்டமான் வெளிநடப்பு பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் அவர்களுக்கான சலுகைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையிலிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் வெளிநடப்புச் செய்துள்ளார். கூட்டு ஒப்பந்தத்தை மீறி முதலாளிமார் சம்மேளனம் செயற்படுவதாக குறிப்பிட்ட அவர், அதிலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளதாக ஆறுமுகன் தொண்டமான் குறிப்பிட்டார். பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கூட்டு ஒப்பந்தம் தொடர்பான 3ஆம் கட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், புதிய…
-
- 4 replies
- 910 views
-
-
வடமராச்சியில்... வாள்வெட்டு தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு. யாழ்ப்பாணம்- குடத்தனை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த சந்தேகநபர் அவ்வீட்டில் உறக்கத்தில் இருந்தவர்கள் மீது நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். வடமராட்சி கிழக்கு, குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குடத்தனை பகுதியிலுள்ள வீடொன்றினுள் அதிகாலை 12 மணியளவில் புகுந்த தாக்குதலாளி, வீட்டில் உறக்கத்தில் இருந்த பரம்சோதி ஜெயஸ்ரீ (வயது 66) மற்றும் அவரது மனைவி ப.நிர்மலாதேவி (வயது 53) ஆகியோர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதில் பரம்சோதி உயிரிழ…
-
- 2 replies
- 1.3k views
-
-
மக்கள் சக்திக்கு வியூகம் வகுக்கிறது ஐ.ம.சு.மு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் கொழும்பில் மக்களை ஒன்று கூட்டி பேரணியொன்றையும் கூட்டமொன்றை எதிர்வரும் 5 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். 'மக்கள் சக்தி' என்னும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டம் கடந்த காலங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வந்ததாகும். அத்தகைய கூட்டத்தினையே மஹிந்த தரப்பினருடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி …
-
- 0 replies
- 255 views
-
-
நாடாளுமன்றம் எப்போது மீண்டும் கூடும்? வெளிவரும் முரண்பட்ட தகவல்கள். இலங்கையின் நாடாளுமன்றம் எப்போது கூடும் என்பது தொடர்பில் தெளிவற்ற நிலை காணப்படுகின்றது. இதற்கு நேற்றைய தினம் வெளியாகிய ஒன்றுக்கொன்று முரணான தகவல்களே காரணமாகும். கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாக பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்த மறுநாள் நாடாளுமன்ற அமர்வை நவம்பர் மாதம் 16ம் திகதிக்கு ஒத்திவைத்திருந்தார். நாடாளுமன்றத்தை உடனே கூட்டவேண்டுமென்ற கோரிக்கைகள் உள்நாட்டிலும் சர்வதேசத்தரப்பிலிருந்தும் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டுவந்த நிலையில் நாடாளுமன்றம் நவம்பர் 5ம்திகதி கூட்டப்படும் என புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ நேற்…
-
- 2 replies
- 323 views
-
-
ரணிலைச் சந்தித்தார் கோத்தா ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும் இடையில் நேற்றுமாலை சந்திப்பு இடம்பெற்றிருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போதைய முட்டுக்கட்டைகளைச் சமாளிப்பது தொடர்பாகவே, இந்தச் சந்திப்பின் போது பேச்சுக்கள் நடத்தப்பட்டதாக, விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போதைய முட்டுக்கட்டைகளை நீக்கி நாட்டுக்கு உதவுதல் தொடர்பான வழிமுறைகள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. ஐதேகவின் முக்கிய பிரமுகர் ஒருவர் நேற்றிரவு இதனை உறுதி செய்திருக்கிறார். எனினும், கலந்துரையாடப்பட்ட மேலதிக விபரங்கள் எதையும் அவர…
-
- 0 replies
- 303 views
-
-
அரசியலமைப்பு வரைவை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் – எல்லே குணவன்ச முன்னைய அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவை, மைத்திரி- மகிந்த அரசாங்கம் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அரசியலமைப்பு வரைவு மற்றும் தேசிய சொத்துக்களின் விற்பனை ஆகியன விக்ரமசிங்க நிர்வாகத்தால் செய்யப்பட்ட மிகப்பெரிய குற்றங்களாகும். மேற்கத்திய நாடுகளின் உத்தரவுக்கமைய எழுதப்பட்ட அந்த அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால், நாடு பிளவுபடும். வெளிநாட்டு சக்திகள் எமது இயற்கை வளங்களை சுரண்டிக் கொள்ள முடியும். சிறிலங்காவில் தமது நிகழ்ச்சி நிரலை இனிச் செயற்படுத்…
-
- 0 replies
- 364 views
-
-
அரசியல் குழப்பங்களில் சீனாவின் தலையீடு இருப்பதாக தெரியவில்லை என்கிறார் சரத் பொன்சேகா சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடியில் சீனாவின் தலையீடு இருப்பதாகத் தெரியவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முன்னைய அரசாங்கமும் சரி, தற்போதைய அரசாங்கமும் சரி, சீனாவுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தன. பல்வேறு திட்டங்களில் கூட்டு அரசாங்கம் சீனாவுடன் இணைந்து பணியாற்றியது. சீனாவுடன் பொருளாதார உடன்பாடுகளிலும் கையெழுத்திட்டது. எனினும், சில அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள் சிலருடன் தனிப்பட்ட உறவுகளை வைத்திருக்கக் கூடும். …
-
- 0 replies
- 518 views
-
-
கதிர்காமர் கொலை வழக்கில் 13 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி விடுதலை சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில், 13 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் நேற்று விடுதலை செய்யப்பட்டார். கடந்த 2015 ஆம் ஆண்டு லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆரோக்கியநாதன் கடந்த 13 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கின் இரண்டாவது சந்தேக நபராக சேர்க்கப்பட்டிருந்த அவர், மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில் நேற்று கொழும்பு மேல்நீதிமன்றத்தினால், விடுதலை செய்யப்பட்டார். http://www.puthinappalakai.net/2018/11/02/news/34030
-
- 0 replies
- 498 views
-
-
முன்னாள் விடுதலை புலிகளை புனர்வாழ்வளித்து மகிந்த – மைத்திரி அரசு விடுவிக்கும்! November 1, 2018 தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை புனர்வாழ்வளித்து மகிந்த – மைத்திரி தலைமைமயிலான புதிய அரசாங்கம் விடுதலை செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தன்னுடைய ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் பதிவிட்ட அவர், கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் 12 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலிகளின் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டதாகவும் மூவாயிரத்திற்கும் அதிகமான முன்னாள் புலிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்…
-
- 3 replies
- 700 views
-
-
இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்றவர், அவர் பிரபாகரனுக்குச் சமமானவர் என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. அதனால்தான் பிரபாகரனுக்கு ஆதரவளித்தது போல், உள்நாட்டு மக்கள் மற்றும் உள்நாடடு ஊடகங்களைவிட சர்வதேச சமூகம், சர்வதேச ஊடகங்கள் அவருக்கு ஆதரவு வெளியிடுகின்றன என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவிக்க பொதுபலசேனா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் இவ்வாறு கூறினார். நாட்டில் தேசிய அரசாங்கத்தை அ…
-
- 2 replies
- 700 views
-