ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
மன்னாரில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் நிர்வாக கூட்டம் October 15, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மன்னார் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இடம் பெற்றது. குறித்த கூட்டத்தில் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்த இந்தக் கூட்டத்தில் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது. குறிப்பாக எதிர் வரும் 25 ஆம் திகதி வடமாகாண சபையின் ஆட்சிக் காலம் நிறைவடைகின்ற நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நல்லாட்சி அரசிற்கு நிபந்தனையுடன் ஆதரவு வழங்கியது. ஆனால் வட மாகாண சபை முழுமையாக இயங்க முடியாத நிலை காணப்பட…
-
- 0 replies
- 363 views
-
-
ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் பூகோள பொருளாதார நெருக்கடி மோசமடைந்து வருவதாகவும், இதனை எதிர்கொள்வதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கல்கமுவவில் நேற்று பாடசாலை ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றிய அவர், சீனா, இந்தியா போன்ற நாடுகளின் அதிக தேவை காரணமாக, எண்ணெய் விலை ஆரம்பத்தில் உயர்ந்தது. அவர்கள் தமது உற்பத்தியை அதிகரித்ததால் இன்னும் எண்ணெயை அவர்கள் கோரினர். ஈரான் மீது அமெரிக்காவும், பொருளாதார தடைகளை விதித்தது. குளிர்காலத்தில் அதிகரிக்கும் எண்ணெயின் தேவையும், இந்த நெருக்கடியில் பங்களித்தது. நாளொன்றுக்கு 1.5 மில்லியன் பீப்பா…
-
- 0 replies
- 313 views
-
-
சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 6 ஆக குறைக்க உத்தேசம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பாடவிதானத்தைப் புதுப்பிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தற்போதுள்ள 9 பாடங்களை 6 பாடங்கள் வரை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கலாநிதி சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கரவின் 134 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஹேவாஹெட்ட தலாத்துஓயா மகாவித்தியாலயத்தை இலங்கையின் முதலாவது பசுமை கல்லூரியாக மாற்றியமைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். http://tamil.adaderana.lk/news.php?nid=107380
-
- 0 replies
- 991 views
-
-
எஸ்.பி திஸாநாயக்க என்பவர் ஒரு பொய்க்காரர் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் 1000 ரூபாவை அடிப்படை சம்பளமாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்களால் பெற்றுகொடுக்க முடியாவிட்டால் அரசாங்கத்தோடு தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தை பேசுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தயாராக இருப்பதாக தேசிய ஒருமைபாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகனேசன் தெரிவித்தார். நேற்று (14) பொகவந்தலாவ சென்.மேரீஸ் மத்திய கல்லூரியில் அமைச்சின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இலவச நடமாடும் சேவையில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். நோர்வூட் பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சியி…
-
- 0 replies
- 939 views
-
-
யாழில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில் 40 பேர் கைது யாழ்ப்பாணத்தில் 4 பொலிஸ் பிரிவுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் நடவடிக்கையில் 40 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களளுள் 151 பேருக்கு எதிராக வீதிப் போக்குவரத்து விதி மீறல்களுக்காக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய யாழ்ப்பாணம், மானிப்பாய், சுன்னாகம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் நேற்று மாலை தொடக்கம் இந்த பொலிஸ் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கடந்த 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம், மானி்ப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக…
-
- 0 replies
- 337 views
-
-
பொலிஸ்மா அதிபர் நாளை இராஜினாமா? பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று (திங்கட்கிழமை) அல்லது நாளை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோர் மீது கொலை சதித்திட்டம் தீட்டியமை தொடர்பாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்தே அவர் பதவியை இராஜினாமா செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் புதிய பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதியின் பாதுகாப்பு துறையின் தலைவராகவுள்ள எஸ்.எம்.விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் எனவும் கூறப்படுகின்றது. மேலும் ஜனாதிபதிக்கு எதிரான கொலை சதித்திட்டம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஜனாதிபதி அவரை பதவி விலக்குவதற்கு முன்னர் தாமாகவே பதவியை இராஜி…
-
- 0 replies
- 417 views
-
-
‘ஒருமித்த நாடு’ என்ற தமிழ்ப் பதம், ‘ஏகிய ராஜ்ய’ என்ற சிங்களப் பதத்துக்கு இணையானதா? இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான வரைவில், ‘ஏகிய ராஜ்ய’ மற்றும் ‘ஒருமித்த நாடு’ என்ற பதங்கள் தொடர்பாக புதிய அரசியலமைப்பை வரைவதற்கான வழிநடத்தல் குழுவின் நேற்றைய கூட்டத்திலும், இறுதி முடிவு எட்ட முடியாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசியலமைப்பை வரைவதற்கான வழிநடத்தல் குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போது, புதிய அரசியலமைப்பு வரைவை உள்ளடக்கிய நிபுணர் குழு அறிக்கையை, எதிர்வரும் நொவம்பர் 9ஆம் திகதி அரசியலமைப்பு பேரவையில் ( நாடாளுமன்றம்) சமர்ப்பிப்பதென முடிவு செய்யப்பட்டது. நேற்றைய கூட்டத்தில், இந்த அறிக்கையின் தமிழ் மற்றும் ஆங்கில மொழியாக்கங்கள் தொடர்பாக வ…
-
- 7 replies
- 1.1k views
-
-
சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற வாகனங்களை துரத்திச் சென்ற காவல்துறையினர் மீது கல் வீச்சு October 14, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அனுமதி பத்திரங்கள் இன்றி மணல் ஏற்றி சென்ற வாகனங்களை காவல்துறையினர் துரத்திய போது , காவல்துறையினர் மீது சரமாரியாக கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் கோவிலை அண்மித்த பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்று உள்ளது. சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வுகள் இடம்பெறுவதாக பருத்தித்துறை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் குறித்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றுள்ளனர்.அதன் போது மணல் அகழ்வில் ஈடுபட்டு இருந்த வாகனங்கள் காவல்துறையினரைக் கண்டதும்…
-
- 3 replies
- 1.1k views
-
-
அமைச்சரவைக்கு வாருங்கள் – த.தே.கூ வை அழைக்கும் விஜயகலா ”அரசாங்கத்தை குறை கூறி எந்த விதத்திலும் நாங்கள் சாதிக்க முடியாது. எனவே, அவர்களுடன் நாங்கள் பயணிக்க வேண்டும்” எனவும்அதற்கென பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள வேண்டும் எனவும் இல்லாவிடின் அமைச்சு பதவியை கையில் எடுக்குமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரியுள்ளார். இன்று யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் நடைபெற்ற ஜனாதிபதி மக்கள் சேவையின் உத்தியோகபூர்வ பணி நடமாடும் சேவையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கலந்து கொண்டிருந்தத…
-
- 1 reply
- 626 views
-
-
யாழில் இன்றிரவு விசேட சோதனை நடவடிக்கை! யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய குழுக்களை இலக்கு வைத்து வீதிச் சோதனை மற்றும் திடீர் சுற்றிவளைப்புக்களை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். யாழ்.குடாநாட்டின் நகர பகுதி மற்றும் நகரை அண்டிய கொக்குவில், திருநெல்வேலி பகுதிகளிலேயே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. வாள்வெட்டு குழுக்களுடன் தொடர்புடைய முக்கிய வன்முறையாளர்களை இலக்குவைத்து கடந்த வாரம் திடீர் சுற்றிவளைப்பினை கொக்குவில் பகுதியில் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். இதனை அடுத்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) திடீர் சோதனை இடம்பெறுகிறது. நகர் பகுதியில் இருந்து செல்லும் காங்கேசந்துறை வீதி, பலாலி வீதி, மற்றும் மானிப்பாய் வீதி ஆகியவற்றில் 500 மீற்ற…
-
- 0 replies
- 455 views
-
-
ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார்மயப்படுத்துவது தொடர்பில் அமைச்சரவை பத்திரம்! ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார்மயப்படுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்படவுள்ளது. அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார். விமான சேவையின் 49 சதவீத முகாமைத்துவ பங்குகளை தனியார் மயப்படுத்தப்படுத்துவதற்கான, திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய எதிர்காலத்தில், கேள்விப்பத்திர கோரல் ஊடாக அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவை நட்டத்தை எதிர்நோக்கியுள்ளமை காரணமாகவே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://athavan…
-
- 0 replies
- 273 views
-
-
அடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன: சி.வி அடக்கி ஆளும் சிந்தனையே குடும்பங்களிலும் நாட்டிலும் பல பிரச்சினைகளை உருவாக்கி வந்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற கலாலயா இசை நடனப் பள்ளியின் வருடாந்த நவராத்திரித் திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உரிமைகளும் கடமைகளும் ஒரு சல்லிக் காசின் இருபக்கங்கள். ஒன்றை மட்டும் நாம் வலியுறுத்தி மற்றதை மறந்து நடக்கும் போது குடும்பங்களில் பிரச்சினைகள் உண்டாகின்றன. கணவன் மனைவிமாரிடையே உரிமைகளுடன் கடமைகளும் வலியுறுத்தப்பட்டால் அங்கு அன…
-
- 2 replies
- 420 views
- 1 follower
-
-
ஜனாதிபதி வேட்பாளரை மகிந்தவே தீர்மானிப்பார்- கோத்தபாய பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்த இறுதிமுடிவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே எடுப்பார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொடகமவில் இடம்பெற்ற எலிய அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பொது எதிரணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து அறிந்துகொள்வதற்கு ஐக்கியதேசிய கட்சியே அதிக ஆர்வத்துடன் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கியதேசிய கட்சி இரண்டு ஜனாதிபதி தேர்தல்களில் தனது தலைவர் போட்டிபோடுவதற்கு அனுமதிக்காத கட்சி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து கவலைப…
-
- 1 reply
- 288 views
-
-
நீதிபதி இளம்செழியனின் பெயரில் மலையகத்தில் புதிய கிராமம்…..!! மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் 20 கோடி ரூபா செலவில் பண்டாரவளை பூணாகலை அம்பிட்டிகந்த தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 157 தனி வீடுகளைக் கொண்ட ‘இளஞ்செழியன் புரம்’ கிராமம் இன்று திறந்து வைக்கப்பட்டது.அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ஹரிண் பெர்னாண்டோ, ரவீந்திர சமரவீர, பி. திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், பிரதி அமைச்சர் பைசால் காசீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், அ.அரவிந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்தனர். வீட்டு உரி…
-
- 1 reply
- 1.1k views
-
-
சுதந்திரக் கட்சியின் சில சிரேஸ்ட உறுப்பினர்கள் ஐ.தே.கவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில சிரேஸ்ட உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இதுதொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகினால் உடனடியாக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கு இவர்கள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்து வரும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களே இவ்வாறு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
இளைஞர்களை அச்சுறுத்திய நபருக்கு விளக்கமறியல் October 14, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் விளையாட்டின் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்திய நபரை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.அளவெட்டி பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை விளையாட்டில் ஈடுபட்டு இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபட்டு இருந்த வேளை விளையாட்டு தொடர்பில் இளைஞர் ஒருவருடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு உள்ளது. அதனை அடுத்து அங்கிருந்து சென்ற இளைஞன் பின்னர் வாளுடன் மைதானத்திற்குள் நுழைந்து தன்னுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட இளைஞர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதை அடுத்து அங்கிருந்…
-
- 0 replies
- 1k views
-
-
புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் – கிளிநொச்சி கல்வி வலயம் முன்னேற்றம் October 14, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தற்போது வெளியான தரம் ஐந்து புலமை பிரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி கல்வி வலயம் முன்னேற்றகரமான நிலையினை அடைந்துள்ளது. இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கிளிநொச்சி கல்வி வலயத்தின் நிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கிளிநொச்சி கல்வி வலயத்தில் இவ்வருடம் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 2723 மாணவர்களில் 1998 மாணவர்கள் 70 புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். அதனடிப்படையில் சித்தி வீதம் 73.37 ஆக காணப்படுகிறது. கடந்த வருடம் 55.77 வீதமாக காணப்பட்ட கிளிநொச்சிய…
-
- 0 replies
- 460 views
-
-
சிறிலங்காவின் தலைமை நீதியரசராகப் பொறுப்பேற்றார் நளின் பெரேரா சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் 46 ஆவது தலைமை நீதியரசராக, நளின் பெரேரா நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக, தலைமை நீதியரசர் பதவிக்கு நளின் பெரேராவின் பெயரை சிறிலங்கா அதிபர் அரசியலமைப்பு சபைக்குப் பரிந்துரை செய்திருந்தார். நேற்று நண்பகல் கூடிய அரசியலமைப்பு சபை ஒருமனதாக அதனை அங்கீகரித்திருந்தது. பத்தரமுல்லவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், சிறிலங்காவின் நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக மிகவும் மூத்த, அனுபவம்மிக்க உச்சநீதிமன்ற நீதியரசர் ஒருவர் தலைமை நீதியசர் பதவிக்கு தாம் முன்மொழிந்திருப…
-
- 2 replies
- 423 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கொடுத்த வாக்குறுதி மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் வாக்குறுதியை அடுத்து அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளை இன்றைய தினம் சனிக்கிழமை சிவில் சமூக பிரதிநிதிகள் சந்தித்தனர். குறித்த சந்திப்பின் பின்னர் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா. சக்திவேல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்தோம். அதன் போது அவர்கள் காலையில் தம்மை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்…
-
- 4 replies
- 566 views
-
-
இலங்கைக்கு ஆயுதம் விற்பனை செய்வதை தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கும் வகையிலான முன்பிரேரணை ஒன்று பிரித்தானிய பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பிரேரணையில் 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே கையொப்பமிட்டுள்ள நிலையில் மேலதிக கையொப்பங்களை பெறும் நடவடிக்கையில் புலம்பெயர் தமிழ் இளையோர் குழுவொன்று செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த இளையோர் குழுவினர் பிரித்தானியா ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான கிறிஸ் பிலிப்பை நேற்று வெள்ளிக்கிழமை (12.10.18) சந்தித்துள்ளனர். இதன்போது இனவழிப்பிற்கு காரணமான இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆயுதங்கள் விற்பனை செய்வதால், அவர்களின் கை மேலும் ஓங்கும் என்பதனால் இலங்கைக்கு ஆயுதம் வி…
-
- 0 replies
- 226 views
-
-
மறவன்புலவு சச்சிதானந்தன் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு வாக்கு மூலம்! சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார். சிவசேனை அமைப்பின் தலைவரை விசாரணைக்காக கடந்த மாதம் 05ஆம் திகதி கொழும்புக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தான் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக கொழும்புக்கு வர முடியாது எனவும் கடிதம் மூலம் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு மறவன்புலவு சச்சிதானந்தன் அறிவித்திருந்தார். இந்நிலையில் யாழ். நான்காம் குறுக்கு தெருவிலுள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவினரின் அலுவலகத்திற்கு இன்று(வியாழக்கிழமை) மறவன்புலவு சச்சிதானந்தன் அழ…
-
- 8 replies
- 1.1k views
-
-
“சிறுவர் துஸ்பிரயோகம் அற்ற தேசத்தை உருவாக்குவோம்” October 13, 2018 கிளிநொச்சியில் இன்று (13.10.18) காலை, சிறுவர் துஸ்பிரயோகம் அற்ற தேசத்தை உருவாக்குவோம் என்ற தொணிப்பொருளிலும், சிறுவர் பெண்களுக்கான, பரிபூரணமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்ற வகையிலும் சமாதான நடைப்பயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் ஊர்வலமானது இன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சி காக்கா கடைச் சந்தியிலிருந்து கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானம வரை ஊர்வலமாக சுமார் ஜயாயிரம் வரையான சிறுவர்கள் கலந்துகொண்ட சமாதான ஊர்வலம் இடம்பெற்றது. சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு எதிரான பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலம் இடம்…
-
- 0 replies
- 426 views
-
-
ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன் 1997ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சியை வென்றிருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் நினைவுகூரல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “மகாத்மா காந்தி ஆரம்பித்த உண்மை மற்றும் ஒத்துழையாமையை அடிப்படையாகக் கொண்ட சத்தியாக்கிரக போராட்டத்தை பாடமாக எடுத்துக் கொண்ட…
-
- 10 replies
- 932 views
-
-
வலுவான கடவுச்சீட்டு தரவரிசை – எதியோப்பியா, வடகொரியாவுடன் இணைந்த சிறிலங்கா எதியோப்பியா, வடகொரியா ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகளுடன், சிறிலங்காவின் கடவுச்சீட்டை 99 ஆவது இடத்தில் நிலைப்படுத்திப் பட்டியலிட்டுள்ளது ஹென்லி கடவுச்சீட்டு சுட்டி. ஹென்லி கடவுச்சீட்டு சுட்டி (Henley Passport Index) தொடர்பான 2018ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்புடன் இணைந்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. நுழைவிசைவு இன்றி பயணம் செய்யக் கூடிய நாடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலும், இதனைச் சார்ந்த பிற தரவுகளின் அடிப்படையிலும், நாடுகளின் கடவுச்சீட்டுகளை ஹென்லி கடவுச்சீட்டு சுட்டி தரவரிசைப்படு…
-
- 1 reply
- 483 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது பேராசிரியர்களால் பாலியல் துன்புறுத்தல் Report us Suthanthiran 32 minutes ago யாழ். பல்கலைக்கழக மாணவிகள் மீது இடம்பெறும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறிவருகின்றது என மாணவர் ஒன்றியம் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று நடாத்திய ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தள்ளனர். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்கள், “யாழ். பல்கலைக்கழக மாணவர்களாலும் ஒட்டுமொத்த சமூகத்தாலும் வெறுக்கப்படும் வகையில் மாணவிகள் மீது பாலியல் ரீதியான துன்புற…
-
- 11 replies
- 1.9k views
-